பிரபஞ்சன்
பிரபஞ்சன்
( பி. ஏப்ரல் 27, 1945) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
பொருளடக்கம்
• 1வாழ்க்கைக் குறிப்பு
• 2விருதுகள்
• 3எழுதிய நூல்கள்
o 3.1புதினங்கள்
o 3.2குறு நாவல்கள்
o 3.3சிறுகதைத் தொகுப்புகள்
o 3.4நாடகங்கள்
o 3.5கட்டுரைகள்
• 4மேற்கோள்கள்
வாழ்க்கைக்
குறிப்பு[தொகு]
பிரபஞ்சன்
பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை ஒரு கள்ளுக்கடை வைத்திருந்தார். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். தனது வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராகத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற பத்திரிக்கையில் 1961ல் வெளியானது. இவர்
சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.. இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப்
புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரது நாடகமான முட்டை டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப்
பட்டுள்ளது.இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர் சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வருகிறார்.[1][2][3][4][5][6][7][8]
விருதுகள்[தொகு]
• சாகித்திய அகாதமி விருது - வானம் வசப்படும் (1995)
• பாரதிய பாஷா பரிஷத் விருது
• கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி
• இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்
• சி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா
• நேற்று மனிதர்கள் -தமிழக அரசின் பரிசு
• ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு
எழுதிய
நூல்கள்[தொகு]
(முழுமையானதல்ல)
புதினங்கள்[தொகு]
• வானம் வசப்படும்
• மகாநதி
• மானுடம் வெல்லும்
• சந்தியா
• காகித மனிதர்கள்
• கண்ணீரால் காப்போம்
• பெண்மை வெல்க
• பதவி
• ஏரோடு தமிழர் உயிரோடு
குறு
நாவல்கள்[தொகு]
• ஆண்களும் பெண்களும்
சிறுகதைத்
தொகுப்புகள்[தொகு]
• நேற்று மனிதர்கள்
• விட்டு விடுதலையாகி
• இருட்டு வாசல்
• ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
நாடகங்கள்[தொகு]
• முட்டை
• அகல்யா
கட்டுரைகள்[தொகு]
• மயிலிறகு குட்டி போட்டது
No comments:
Post a Comment