Thursday, August 30, 2018

அறியப்படாத ஆளுமை : எம்.ஜி.வல்லபன்



ஈரவிழி காவியங்கள் என்னும் திரைப்படத்தில்தென்றலிடை தோரணங்கள்என்னும் பாடல், இளையராஜாவின் இசை மேதமையை வெளிப்படுத்தும் அதே வேளையில் வல்லபனின் எழுத்துக்களையும் கவனிக்க வைக்கும். அப்பாடலில் வெளிப்படும் ஒரு கற்பனை, வானமுகில் வாகனத்தில் / நானவளை ஏற்றி வைத்து / வானுலக தேவதைகள் / நாணும்வரை / போய் வரவா என்று எழுதியிருப்பார். இதெல்லாம் ஒரு திரைப்பாடல் வரியென்றால் உங்களால் நம்ப முடியாது. நம்ப முடியாத பல சொற்சேர்க்கைகளை வல்லபன் செய்திருக்கிறார்.

கலாபூர்வ அணுகுமுறையுடைய ஒருவரால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும்ஏதோ மெட்டு ஏதோ சொற்கள் என்று இட்டு நிரப்பாமல் தமிழாய்ந்து பாடலெழுதும் பயற்சியை அவர் பெற்றிருக்கிறார். ஏனைய பாடலாசிரியர்களிடமிருந்து அவர் தன்னை ஏதோ ஒருவிதத்திலாவது மேம்படுத்திக் கொள்ள எண்ணியிருக்கிறார். வானமுகில் வாகனம் என்னும் பதம், கம்பராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம் போல் வந்து விழுந்திருக்கிறது.
ஆரம்பகால இளையராஜாவின் பரிசோதனை முயற்சிகளில் அமைந்த பல பாடல்களில் வல்லபனின் பங்களிப்பு இருந்திருக்கிறது. தென்றலிடை தோரணங்கள் பாடலைக் கேட்கையில், வாத்தியக் கருவிகள் அதிகமில்லாமல் மிக மெல்லிய குரலில்  “தென்றலிடை தோரணங்கள், தோளினிலே கூந்தல் அலைஎன்று ஆரம்பிக்கும் இளையராஜாவின் குரல், மாய உலகத்திற்கு நம்மை அழைத்துக் கொண்டு போகிறது. தாளலயம் நெஞ்சினிலேதாளவில்லை / தாங்கவில்லை என்று பல்லவி முடியுமிடத்தில் சொல்லமுடியாத சுகானுபவத்தை உணரலாம்வார்த்தைகளுக்கு அப்பால்தான் இசை உள்ளது என்பதை விளங்கிக்கொள்ள இப்பாடலில் இருந்து கிளைக்கும் உணர்வெழுச்சிகள் உதாரணம்.
தனக்கேயுரிய லாலாலாலா.. முனகலுடன் இளையராஜா பாடும்தென்றலிடை தோரணங்கள் தோலினிலே கூந்தலலைபாடல் கேட்கும்போது அற்புதமான உணர்வைத் தருகிறது. இரண்டு நிமிடப் பாடலுக்கும் முன்னிசை, இடையிசை என்று பிரமாதப்படுத்தியிருக்கிறார் ராஜா. இதனை எழுதியவர் எம்.ஜி.வல்லபன்
பாடல் வரிகள்

தென்றலிடை தோரணங்கள்
தோளினிலே கூந்தல் அலை
தாளலயம் ம்ம்ம்ம் நெஞ்சினிலே
தாளவில்லை தாங்கவில்லை
-
வானமுகில் வாகனத்தில்
நானவளை ஏற்றி வைத்து
வானுலகில் தேவதைகள்
நாணும்வரை ...போய் வரவா
போய் வரவா
போய் வரவா

*
அதே படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல்
படம்: ஈர விழி காவியங்கள்        
பாடல் வரிகள்: கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்கள்: இசைஞானி இளையராஜா & ஜென்சி

என் கானம் இன்று அரங்கேறும் 
என் சோகம் இன்று வெளியேறும்
ஏழை சொன்ன கீதம் கேட்கவில்லை யாரும்
இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும் 
என் கானம் இன்று அரங்கேறும்

நான் தனிமை பறவை சிறகொன்று நீதான்
ஒரு பூஞ்சரமே மலர்ந்திடுமே ஹோய்
பாலைவனத்தின் பனி மழையே வா
கோடைவெயிலில் குடை தரவா
இனி சங்கீத மாநாடு சந்தோஷம் என்பாட்டு பாடு
தாளம் போடு 
என் கானம் இன்று அரங்கேறும் 

பூ இதழில் நிறங்கள் வரைந்தது யாரோ
மனதில் உறவை விதைத்தது யாரோ
கனவின் கைகள் சுவை தருமோ ஓஹோ
நினைவின் நிழல்கள் சுகம் தருமோ
இரு கண் மூடி நின்றாலும்
இமை மீது சுடுகின்ற கனவு நெஞ்சில் கொஞ்சும்

என் கானம் இன்று அரங்கேறும் 
இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும் 
என் கானம்..







1 comment:

  1. ஏழை சொன்ன கீதம் கேட்கவில்லை யாரும்

    ReplyDelete