Friday, August 17, 2018

சுந்தர ராமசாமி


சுந்தர ராமசாமி



















சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.
இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டுசாந்திபத்திரிக்கையில் இவர் எழுதியதண்ணீர்கதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
பொருளடக்கம்

             1இலக்கியச் செல்வாக்குகள்
             2படைப்புகள்
o             2.1நாவல்
o             2.2சிறுகதைகள்
o             2.3விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை
o             2.4கவிதை
o             2.5மொழிபெயர்ப்பு
o             2.6நினைவோடைகள்
o             2.7சிறுகதைகள் பட்டியல்
             3சுந்தர ராமசாமி பெற்ற விருதுகள்
             4சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள்
o             4.1தமிழ்க் கணிமைக்கான விருது
o             4.2இளம் படைப்பாளர் விருது
             5வெளி இணைப்புகள்
             6மேற்கோள்
இலக்கியச் செல்வாக்குகள்[தொகு]
இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார். மேலும் மலையாள இலக்கியச் சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான . ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட சாந்தி இதழில் அவரது இலக்கியத் தொடர்பு உருவானது. மேலும் அவர் சரஸ்வதி இதழில் ஆசிரியக் குழு உறுப்பினராகியதும் எழுத்தாளராக வளர உதவியது.[1]
படைப்புகள்[தொகு]
நாவல்[தொகு]
             ஒரு புளியமரத்தின் கதை (1966)
             ஜே.ஜே. சில குறிப்புகள் (1981)
             குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)
சிறுகதைகள்[தொகு]
             சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)
விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை[தொகு]
             .பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)
             ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
             காற்றில் கரைந்த பேரோசை
             விரிவும் ஆழமும் தேடி
             தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
             இறந்த காலம் பெற்ற உயிர்
             இதம் தந்த வரிகள் (2002)
             இவை என் உரைகள் (2003)
             வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
             வாழ்க சந்தேகங்கள் (2004)
             புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)
             புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)
             மூன்று நாடகங்கள் (2006)
             வாழும் கணங்கள் (2005)
கவிதை[தொகு]
             சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)
மொழிபெயர்ப்பு[தொகு]
             செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962)
             தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000)
             தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)
நினைவோடைகள்[தொகு]
             .நா.சுப்ரமண்யம் (2003)
             சி.சு. செல்லப்பா (2003)
             கிருஷ்ணன் நம்பி (2003)
             ஜீவா (2003)
             பிரமிள் (2005)
             ஜி.நாகராஜன் (2006)
             தி.ஜானகிராமன் (2006)
             கு.அழகிரிசாமி.
சிறுகதைகள் பட்டியல்[தொகு]
சிறுகதைகள்             இதழ்  வருடம்
1.முதலும் முடிவும் புதுமைப்பித்தன் மலர்     1951
2.தண்ணீர்    சாந்தி               1953
3.அக்கரை சீமையில்         சாந்தி               1953
4.பொறுக்கி வர்க்கம்          சாந்தி               1953
5.உணவும் உணர்வும்                         1955
6.கோவில் காளையும் உழவு மாடும்    சாந்தி               1955
7.கைக்குழந்தை     சரஸ்வதி       1957
8.அகம்              சரஸ்வதி       1957
9.அடைக்கலம்          சரஸ்வதி       1958
10.செங்கமலமும் ஒரு சோப்பும்               சரஸ்வதி       1958
11.பிரசாதம் சரஸ்வதி       1958
12.சன்னல்     சரஸ்வதி       1958
13.லவ்வு          சரஸ்வதி       1958
14.ஸ்டாம்பு ஆல்பம்             சரஸ்வதி       1958
15.கிடாரி       சரஸ்வதி ஆண்டு மலர்    1959
16.சீதைமார்க் சீயக்காய்த்தூள்                தாமரை பொங்கல் மலர்               1959
17.ஒன்றும் புரியவில்லை               கல்கி தீபாவளி மலர்         1960
18.வாழ்வும் வசந்தமும்     நவசக்தி வார இதழ்            1960
19.ரயில் தண்டவாளத்தில் ஓடும்             கல்கி தீபாவளி மலர்         1961
20.மெய்க்காதல்       கல்கி 1961
21.மெய்+பொய்=மெய்       எழுத்து            1962
22.எங்கள் டீச்சர்     கல்கி தீபாவளி மலர்         1962
23.பக்த துளசி            இலக்கிய வட்டம்   1964
24.ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு                இலக்கிய வட்டம்   1964
25.தயக்கம்   சுதேசமித்திரன் தீபாவளி மலர்               1964
26.லீலை          கல்கி 1964
27.தற்கொலை          கதிர்   1965
28.முட்டைக்காரி    தீபம்   1965
29.திரைகள் ஆயிரம்           தீபம் ஆண்டுமலர்                1966
30.இல்லாத ஒன்று  கல்கி வெள்ளிவிழா ஆண்டுமலர்         1966
31.காலிப்பெட்டி      உமா 
32.அழைப்பு ஞானரதம்    1973
33.போதை    சதங்கை        1973
34.பல்லக்குத் தூக்கிகள்  ஞானரதம்    1973
35.வாசனை ஞானரதம்    1973
36.அலைகள்                கொல்லிப்பாவை  1976
37.ரத்னாபாயின் ஆங்கிலம்       அக்      1976
38.குரங்குகள்             யாத்ரா            1978
39.ஓவியம்     யாத்ரா            1979
40.பள்ளம்       சுவடு                1979
41.கொந்தளிப்பு      மீட்சி  1985
42.ஆத்மாராம் சோயித்ராம்                        1985
43.மீறல்            இனி   1986
44.இரண்டு முகங்கள்         வீடு     1986
45.வழி               கொல்லிப்பாவை  1986
46.கோலம்     கொல்லிப்பாவை  1987
47.பக்கத்தில் வந்த அப்பா             புதுயுகம்        1987
48.எதிர்கொள்ளல்  காலச்சுவடு                1988
49.காணாமல் போனது     காலச்சுவடு                1989
50.விகாசம்   இந்தியா டுடே          1990
51.காகங்கள்               காலச்சுவடு ஆண்டுமலர்             1991
52.மேல்பார்வை      இந்திய டுடே இலக்கிய ஆண்டுமலர் 1994-1995
53.பட்டுவாடா           காலச்சுவடு                1995
54.நாடார் சார்          தினமணி பொங்கல் மலர்            1996
55.நெருக்கடி               சதங்கை        1996
56.இருக்கைகள்       காலச்சுவடு                1997
57.டால்ஸ்டாய் தாத்தாவின் கதை         தினமணி தீபாவளி மலர்               1999
58.மயில்          ஆனந்த விகடன் பவழவிழா மலர்        2002
59.பையை வைத்துவிட்டு போன மாமி                             2003
60.தனுவும் நிஷாவும்           காலம்               2004
61.களிப்பு                      2004
62.நண்பர் ஜி.எம்    காலச்சுவடு                2004
63.ஒரு ஸ்டோரியின் கதை           காலச்சுவடு                2004
64.கூடி வந்த கணங்கள்                   2004
65.கதவுகளும் ஜன்னல்களும்     புதியபார்வை           2004
66.மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்                                2004
67.அந்த ஐந்து நிமிடங்கள்                              2004
68.ஈசல்கள்                   2004
69.கிட்னி                         2004
70.பிள்ளை கெடுத்தாள் விளை காலச்சுவடு                2005
71.கொசு, மூட்டை, பேன் புதியபார்வை           2005
72.ஜகதி            காலம்               2005
சுந்தர ராமசாமி பெற்ற விருதுகள்[தொகு]
இவர் கீழ்வரும் விருதுகளைப் பெற்றார்.[2]
             குமரன் ஆசான் நினைவு விருது
             இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001இல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார்.[3]
             கதா சூடாமணி விருது (2004)[1]
சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள்[தொகு]
தமிழ்க் கணிமைக்கான விருது[தொகு]
தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.
இளம் படைப்பாளர் விருது[தொகு]
சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்து வரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பது அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கும்.
புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர்
நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரும், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) பிறந்த தினம் இன்று (மே 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# நாகர்கோவில் அருகே உள்ள தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார் (1931). தந்தை கேரளத்தில் உள்ள கோட்டயத்தில் பர்மா எண்ணெய் நிறுவன முகவராக இருந்தார். இதனால் இவரது குழந்தைப் பருவமும் அங்குதான் கழிந்தது. தாய்மொழி தமிழாக இருந்தாலும் கேரளாவில் இருந்ததால் மலை யாளம் கற்றார். இவருக்கு 8 வயதாக இருந்தபோது குடும்பம் நாகர்கோவிலுக்குக் குடிபெயர்ந்தது.
# அப்போது கன்யாகுமரி மாவட்டமும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததால் இங்கும் இவரது கல்வி மலையாளத்திலேயே தொடர்ந்தது. சம்ஸ்கிருதமும் பயின்றார்.
# 18 வயதில்தான் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. தானே முயன்று எழுத்துக் கூட்டிப் படிக்கத் தொடங்கினார். இவரது அம்மா மணிக்கொடி இலக்கிய இதழையும், நா.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா போன்றோரின் கதைகளையும் இவருக்குப் படித்துக் காட்டினார். 21 வயதில் தமிழில் கதை எழுத ஆரம்பித்துவிட்டார்.
# இவரது ஆரம்பகாலக் கதைகள் தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராக இருந்தசாந்திஇதழில் வெளிவந்தன. தகழி சிவசங்கரப் பிள்ளையின்தோட்டியின் மகன்என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். பிறகு அவருடையசெம்மீன்நாவலையும் மொழிபெயர்த்தார்.
# எழுத்து என்ற சிறு பத்திரிகையில் இவரது முதல் கவிதை வெளி வந்தது. பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 1975-ல்நடுநிசி நாய்கள்மற்றும் 1987-ல்யாரோ ஒருவனுக்காகஆகிய கவிதைத் தொகுப்புகளும், 1995-ல் அனைத்துக் கவிதை களும் அடங்கிய ‘107 கவிதைகள்என்ற நூலும் வெளிவந்தன.
# முதலில் முற்போக்கு யதார்த்தவாத கதைகளையும் பின்னர் அதிலிருந்து மாறுபட்ட கதைகளையும் எழுதினார். 50களின் இறுதியில் எழுத ஆரம்பித்தஒரு புளிய மரத்தின் கதைநாவலை 1966-ல் எழுதி முடித்தார்.
# 1967 முதல் ஆறு ஆண்டு காலம் சொந்த வாழ்வின் நெருக்கடியால் எதையும் எழுதாமல் இருந்தார். அதன் பிறகு புதிய வேகத்துடனும் மேலும் புதிமையான நோக்குடனும் எழுத ஆரம்பித்தார்.1981-ல் இவர் எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் இன்றளவும் அதிகம் விவாதிக்கப்படும் நாவலாக இருக்கிறது.
# இவரது கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள், அஞ்சலிக் கட்டுரை கள், முன்னுரைகள், மதிப்புரைகள், பத்தி எழுத்து எனப் பலதரப்பட் டவை. இவரது கூர்மையான விமர்சனங்கள் தமிழ்ச் சூழலின் இலக்கிய அளவுகோல்களைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.
# 1988-ல்காலச்சுவடுஎன்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். உயர் தரமான படைப்புகளும், புதிய சிந்தனைகளும் இதில் வெளிவந்தன. தற்போது இது மாத இதழாக வெளிவருகிறது. 1998-ல் இவரது மூன்றாவது நாவல்குழந்தைகள் பெண்கள் ஆண்கள்வெளிவந்தது.
# குமரன் ஆசான் நினைவு விருது, இயல் விருது, கதா சூடாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழின் நவீனத்துவ இயக்கத்தை வலுப்படுத்தியவர்களுள் ஒருவர் என்று போற்றப்பட்ட சுந்தர ராமசாமி, 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 74-வது வயதில் காலமானார்.
சுந்தர ராமசாமி: சில குறிப்புகள்
என்னைத் தவிர அங்குக் கூடியிருந்த அனைவருக்குமே சுந்தர ராமசாமியைத் தெரியும். என்னைத் தவிர அங்குக் கூடியிருந்த யாருக்குமே என்னைத் தெரியாது. ஆனால் அவர் இனம் கண்டுகொண்டார். குற்றாலத்தில் நடைபெற்ற முதல் தமிழ்-மலையாளக் கவிதை முகாமில் நான் அப்போதுதான் வந்து ஏறினேன். நடந்து வந்த காலடிச்சூடுகூடத் தணியவில்லை. ‘கல்பற்ற நாராயணன்தானே? நான் சுந்தர ராமசாமிஎன்று கைகூப்பி அருகில் வந்து அறிமுகம் செய்துகொண்டார். தகவல் கொடுத்தால் ஐந்தோ, பத்தோ லட்சங்கள் சன்மானம் கிடைக்கும் தலைமறைவுக் குற்றவாளியின் ஒரே ஒரு புகைப்படத்தைப்போலுள்ள எனது படத்தை அவர் எங்கேயோ பார்த்திருக்க வேண்டும். ஜே.ஜே.யை முதன் முதலில் கண்டபோது பாலுவுக்குத் தோன்றியது போல் எனக்கும் தோன்றியது. “ஜே.ஜே. என்னைப் பார்த்தார். . . எனக்கு நின்ற நிலையிலேயே உடம்பில் ஒரு கோணல் இருப்பது போல் தோன்றியது. அதைச் சரி செய்துகொள்ள முயற்சி செய்தோன், முடியவில்லை.” ஹோட்டலில்கூட வெயிட்டர்கள் தண்ணீர் நிரம்பிய டிரேக்களை மேஜையில் நிரப்பி ஓசைப்படுத்தும்போது மட்டுமே பார்க்கும் என்னை, தெய்வமே, சுந்தர ராமசாமி எளிதாகக் கண்டுபிடித்திருக்கிறார். நான் பார்க்கச் சென்றவர்கள், என்னைப் பார்க்க அனுமதிக்கும் நேரத்திற்குள் நான் பல புத்தகங்களை வாசித்திருக்கிறேன். எங்கள் இருவரில் மற்றவருக்கு மட்டும் நேர்முகம் காட்டும்மேலேயுள்ளவர்கள்என்னுடைய மனோ பாவங்களை விரிவுபடுத்தினார்கள். பால்யகால நோய்க் கூறுகளின் தளர்ச்சி இப்போதும் கண்களில் தெரியும், படுக்கையறையின் சாளர வடிவிலான ஆகாயத்தைப் பார்த்த அளவுக்குக்கூட உண்மையான ஆகாயத்தைப் பார்த்திராத என்னை முழுமையாகப் புரிந்துகொண்ட புத்தகங்களிலொன்று, ‘ஜே.ஜே. சில குறிப்புகள்.’ சில புத்தகங்களை வாசிக்கத் தனிப்பட்ட முறையிலான ரசனைத்தன்மைகள் வேண்டும் என்று எனக்குச் சொல்லித்தந்த, எனது அக இருளை என்னைவிட அதிகமாக உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று என்னை ஆறுதல்படுத்திய புத்தகங்களிலொன்றுலம்போதர லகுமிகரஇவ்வளவு வருத்தங்களை நெருங்கி வழிவும் பாடலாக எனக்கு நினைவூட்டிய நூல். நோயால் நீண்ட நாட்கள் பிணைக்கப்பட்ட ஒரு மனிதனால் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்த சிறு சிறு விஷயங்கள் பல உண்டு. அந்நூலில், “கட்டிப் போடப்பட்ட நாய்க்குக் குவியலாகத் தெரிவதெல்லாம் சோறுதான்என்ற கிராமியப் பழமொழியில் நீங்காத வருத்தம் இழையோடுகிறதென்பதை சுந்தர ராமசாமியும் அறிந்திருக்கக் கூடும். பின்பு ஒருமுறை கோழிக்கோட்டில் சந்தித்தபோது நெடிதுயர்ந்த அவர் குனிந்து என்னைக் கட்டிக்கொண்டார். அவரது கைகளில் நிறைய இடம் மிச்சமாகக் கிடைப்பதைக் கண்டதும் எனக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. மிச்சமிருந்த இந்தக் கைகளின் நீளம் புத்தகங்களின் மூலம் என்னைத் தோல்வியடையச் செய்துகொண்டிருந்தது.
ஒருவன், கைமாற்றி வைத்த பொருளைத் தேட ஆரம்பிக்கும்போது என்னால் அந்த இடத்தில் அமர்ந்திருக்க முடியாது”, எனும் ஜே.ஜே.யின் வார்த்தைகள் என்னை இருந்த இடத்திலிருந்து எழுந்து போகத் தூண்டியதுண்டு. ஐம்பத்து மூன்று வருடங்களில் ஒரு ஐம்பது வருடங்களையாவது கைமாற்றி வைத்த பொருளைத் தேடுவதில் நான் செலவிட்டிருப்பேன். சுந்தர ராமசாமி திருச்சூரில் அகாதமி ஹாலில் சொற்பொழிவாற்ற வந்தபோது கொண்டுவந்த குறிப்பைத் தேடிக்கொண்டிருந்தார், சொற்பொழிவுக்கான முதல் பகுதி அது. குறிப்பு கிடைக்காத நிலையில் மற்றவர்களும் அமைதியை இழந்து அவர்களுக்கும் மேடைக்கு வந்து தேடுவதற்குத் தோன்றியிருக்க வேண்டும். சுந்தர ராமசாமி, இது வழக்கமான ஒன்றுதான் என்று சொல்லி ஐந்து நிமிடம் பேசினார். திரும்ப ஹோட்டல் அறைக்குப் புறப்படும்போது தன்னையறியாமல் பத்திரப்படுத்தி வைத்த அந்தக் குறிப்பைக் கண்டதும் தன்னைத்தானே கோபித்துக்கொண்டார். தன்னையறியாமல் வைத்ததை வைத்த இடத்திலிருந்து மாற்றுவதில் தனக்கிருக்கும் சாமர்த்தியம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அளவிலானது என்றும் சொன்னார். “நான்தான் ராஜா என்ற எண்ணத்தில் அவர்கள் என்னை அழிக்க நினைத்தால் நான் அழிந்து போவேன். ஆனால் நானேதான் என் கனவு என்ற எண்ணத்தில் என்னை அழிக்க முயன்றால் ஏமாந்து விடுவார்கள்”, என்றுஜே.ஜே: சில குறிப்புகளில் சம்பத். சுந்தர ராமசாமியை நான் உபச்சார வார்த்தைகளால் குறிப்பிடமாட்டேன். “தூரத்தின் இடைவெளியில், கரும்புள்ளிகள் என்னை நோக்கி மந்தமாய் நடந்து வந்து யானையாகக் காட்டிக் கடந்து போனதுஎன்ற வரிகளை மட்டும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
சுந்தர ராமசாமி எப்போதுமே கவிஞர்தான். நாவல் எழுதும்போதும், சிறுகதை எழுதும்போதும், சொற்பொழிவாற்றும்போதும், கவிதை எழுதும்போதும். வாசிக்கும்போதும் சில வார்த்தைகளைத் திருடி மறைத்து வைத்துவிடத் தோன்றும். இந்தக் காலமாடன் இதையெழுதித் தொலைத்துவிட்டாரே என்று கோபம் வரும். மொழி அமைப்பில் எவ்வளவு கச்சிதமான ஆள் இவர். “கோடித் துணியைப் பனைநார்ப் பெட்டியில் வைத்திருந்தால் உருவாகும் மணம்.” “ஒரு இளம் பெண்கூட வராத அந்தத் திசையில் தலை வைத்தும் படுக்க மாட்டேன்.” “வேட்டிக்குள் அவர் காலாட்டிக் கொண்டிருப்பது பசுவின் மடியை முட்டிக் குடிக்கும் கன்றுக் குட்டியின் வால் ஆடு வதைப் போல்.” “மரத்தை உற்றுப் பார்த்தால் பிறகு அதை வெட்டத் தோன்றாது.” “நீரில் கிடக்க வேண்டிய இந்தப் பிராணி படிகளில் ஏறி முதல் மாடிக்கு எப்படி வந்தது? என்பது போல் என்னைப் பார்த்துவிட்டு அவள் ஓடிப்போனாள்.” “பெண்கள் முங்கிக் குளிக்கும் நீரின் ஓசையும் பெண்ணுறுப்பிலிருந்துதானென்பது போல் எனக்குத் தோன்றும்.” “மலைச்சரிவின் மீதேறும் லாரிகளின் தாளக் கிரமத்தைக் கவனித்து கியர் மாற்றும் நிமிடத்தை நுட்பமாக என்னால் ஊகிக்க முடிந்தது; சத்தம் அதன் உச்சத்தை எட்டும் போது எனக்குள்மாற்றுஎன்று சொல்லும் அந்தக் கணத்திலேயே கியர்கள் மாறும். அப்போது நான் எனக்கு சபாஷ் சொல்வேன்.”
ஒவ்வொரு வாக்கிய அமைப்பும் உயிர்த் துடிப்புடனிருக்கும். அதனைப் பிரித்தெடுத்து வீட்டுக்குக் கொண்டுவந்து போற்றத் தோன்றும். ரமணி, ஆஸ்டின் காரைக் கண்டபோது ஒரு குழந்தையைப்போல் பக்கத்தில் கிடத்திப் படுத்திருக்க வேண்டும் போல் தோன்றுகிறது என்று ஆசைப்பட்டதுபோல். கவிதை, கவிதையாக இருப்பது காவியத்தைவிட நாவலில் தான் என்றுஜே.ஜே: சில குறிப்புகளும்ஒரு புளியமரத்தின் கதையும் காண்பித்தன. நகைச்சுவை, நகைச்சுவைப் படைப்புகளைவிடத் தூக்கலாகத் தெரிவது பிற படைப்புகளில் இருக்கும்போதுதானென்றும் கவிதையில் கவிதையை வைத்திருப்பது கவிஞனின் பொறுப்பு. நகைச்சுவைப் படைப்பின் நகைச்சுவை, அதை எழுதுபவனின் பொறுப்பு. பி. கே. என்., சுந்தர ராமாசாமியைவிட நகைச்சுவையுடன் எழுதுபவர். ஆனால் நகைச்சுவைக்கு அவர் பொறுப்பேற்றுக்கொண்டதால் ஆச்சரியத்தின் பரப்பு அதில் குறைவாகவே இருக்கும். மறுநாளும் அவர் அதே சாமக்கிரியைகளுடன் அதே தொழில் ஸ்தாபனத்தில். எழுதுவதைப் பொறுப்பாகக்கொள்ளாமலிருக்க மேற்கொள்ளும் பொறுப்பின்மை சுந்தர ராம சாமியின் படைப்புகளை நவீனப்படுத்துகிறது, சுதந்திரப்படுத்துகிறது. ‘காகங்கள்போன்ற ஒரு கதை நமது மொழியில் மிகக் குறைவு.
உண்மை கைப்பற்றிக் கொள்ளும் விவரணைகள் சுந்தர ராமசாமியின் மீதான என் பொறாமை. ‘உண்மையின் கூறுகள் இல்லையென்றால் மகிழ்ச்சி ஒருபோதுமில்லைஎன்று அவர் எழுதினார். ‘சட்டைக்கு அளவெடுக்கும்போது நம்முடலைத் தொட்டுச் செல்லும் தொழிலாளியின் மீது நமக்கு நெருக்கம் உருவாகிறதல்லாவா?’ என்று அவர் கேட்பார். அப்படியென்றால் உங்களது ஆத்மாவைத் தொட்டுச் செல்லும் எழுத்தாளர்களோடு எவ்வளவு நெருக்கம் ஏற்படும். ஆத்மா என்பது இருக்கிறதா, இல்லாமல் போனதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உன்னதமான படைப்பிலக்கியங்கள் மூலம் அதைத் தற்காலிகமாவது நம்மால் உணர முடியும். இத்தகையப் படைப்புகளின் ஒரு அலமாரி வீட்டிலிருக்கிறது. அதில் பலமுறை வாசித்ததால் நைந்த பக்கங்களுடன் கூடியஜே,ஜே: சில குறிப்புகளும்
    ================================================

No comments:

Post a Comment