Thursday, August 9, 2018

நகுலன்















தமிழ் எழுத்தாளர். டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது கேரளத்தின் திருவனந்தபுரத்தில்அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். 'எழுத்து' இதழில் எழுதத் துவங்கியவர். இவர் தொகுத்த 'குருஷேத்திரம்' இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன்.
நகுலனின் கவிதைகள் பெரும்பாலும் மனம் சார்ந்தவைகள் அவர் மனிதனின் இருப்பு சார்ந்தே கவிதைகளை வெளிபடித்தியுள்ளார்.
குறிப்பிடத்தக்க படைப்புகள்
·         நகுலன் கவிதைகள்
·         நாய்கள்
·         ரோகிகள்
·         வாக்குமூலம்
·         மஞ்சள்நிறப் பூனை.
இதுவரை வெளியாகிவுள்ள நகுலனின் கவிதை நூல்கள்:
1.கோட் ஸ்டான்ட் கவிதைகள் (1981)
2.
சுருதி (1987)
3.
மூன்று,ஐந்து (1987)
4.
இரு நீண்ட கவிதைகள் (1991) 5.நகுலன் கவிதைகள் (2001)
ஆங்கிலத்தில்:
1.Words to the listening air (1968)
2.Poems by nakulan (1981)
3.Non being (1986).

------------

        எனக்கு
        யாருமில்லை
        நான்
        கூட..

        வந்தவன் கேட்டான்
       ‘‘என்னைத் தெரியுமா?’’
       ‘‘தெரியவில்லையே’’
        என்றேன்.
      ‘‘உன்னைத் தெரியுமா?’’
      என்று கேட்டான்.
     ‘‘தெரியவில்லையே’’
      என்றேன்.
     ‘‘பின் என்னதான் தெரியும்’’
     என்றான்.
    ‘‘உன்னையும் என்னையும் தவிர
     வேறு எல்லாம் தெரியும்’’
   என்றேன்!


இருப்பதெற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்



ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை

No comments:

Post a Comment