Thursday, August 16, 2018

வண்ணதாசன்

வண்ணதாசன்
















வண்ணதாசன்

DOB:      22           8              1946


வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. . சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்[1]. நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.[2]
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.[3] 2016 விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.[4].
பொருளடக்கம்
  [மறை]
             1சிறுகதைத் தொகுப்புகள்
             2புதினங்கள்
             3கவிதைத் தொகுப்புகள்
             4கட்டுரைகள்
             5கடிதங்கள்
             6விருதுகள்
             7மேற்கோள்கள்
             8வெளி இணைப்புகள்
சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]
1.            கலைக்க முடியாத ஒப்பனைகள்
2.            தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
3.            சமவெளி
4.            பெயர் தெரியாமல் ஒரு பறவை
5.            மனுஷா மனுஷா
6.            கனிவு
7.            நடுகை
8.            உயரப் பறத்தல்
9.            கிருஷ்ணன் வைத்த வீடு
10.          ஒளியிலே தெரிவது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது)
11.          சில இறகுகள் சில பறவைகள்
12.          ஒரு சிறு இசை
புதினங்கள்[தொகு]
1.            சின்னு முதல் சின்னு வரை
கவிதைத் தொகுப்புகள்[தொகு]
1.            புலரி
2.            முன்பின்
3.            ஆதி
4.            அந்நியமற்ற நதி
5.            மணல் உள்ள ஆறு
கட்டுரைகள்[தொகு]
1.            அகம் புறம்
கடிதங்கள்[தொகு]
1.            வண்ணதாசன் கடிதங்கள்
விருதுகள்[தொகு]
             கலைமாமணி[5]
             சாகித்திய அகாதமி விருது[2]


அவரும் நானும்
சந்தடியற்ற
ரயில் நிலையத்தில்
பரிச்சயமற்ற அவரும் நானும்.
இந்த இடத்தில் ஒரு பெரிய
அரசமரம் உண்டு தெரியுமா?’ என்றார்.
ஏகப்பட்ட சிட்டுக் குருவிகள்
அடைகிற சத்தம் கேட்டிருக்கிறீர்களா?’
என்றேன்.
அவர் இறந்த காலத்தில் குனிந்து
பழுப்பு இலைகளைப் பொறுக்க,
நான் மூச்சிழுத்து
நுகர்ந்துகொண்டிருந்தேன்
பறந்து போன எச்சச் சொட்டுகளை,
தண்டவாளங்கள் விம்மிக்கொண்டிருக்க.



தரையில் விழுந்த பூ

வரவேற்பு வாசலில் எடுத்துக் கொள்ள
காம்புடன் ரோஜா பூ வைத்திருந்தார்கள்.
ஏற்கனவே அவை புத்தம் புதுப் பூ.
இவள் தேர்ந்துகொண்டதோ புதிதினும் புதிய பூ.
பேசிக்கொண்டே செருகினால் எப்படி?
சரியாய் அமராமல் கீழே விழுந்தது.
குனிந்து எடுத்துக் கொண்டு மறுபடி
சூடிக் கொண்டால் என்ன? இன்னொரு
பூவை எடுத்தாள், தலையில் வைத்தாள்.
போய்க்கொண்டிருந்தாள். தரையில் விழுந்த பூ
யார் குனிந்தெடுப்பார் என்ற யூகத்தில்
எல்லோர் முகத்தையும் பார்த்துச் சிரித்தது.
யார் நமை மிதிப்பார் என்ற கவலையும்
இல்லாமல் இல்லை. இருக்கும் தானே.

பரவச ஈக்கள்
நூறு இருக்கும், ஆயிரம் இருக்கும்
அதற்க்கு கூடுதலாகவும்
மீன்கூடையின் ஈயவிளிம்பில்
மரணத்தின் உப்பு வாசனை மொய்க்கும்
பரவச ஈக்கள்
பார்க்க பார்க்க மினுமினுத்தன
எத்தனை கோடியோ
இன்பம் வைத்த சிறகுகள்.
இத்தனையும் வண்ணத்துப் பூச்சிகளாக
இருந்துவிடும் எனில்,
அவை அமர
அத்தனை எண்ணிக்கைப் பூக்களுக்கு
எங்கே போவேன் நான்
என் சிவனே.

வரைபடம்


வாசலில் வந்துநின்று கெஞ்சிய
விற்பனைப் பெண்ணிடம்
வாங்கியது அந்த உலக வரைபடம்.
படுக்கையறைத் தலை மாட்டில்
தொங்கவிடப்பட்ட அதைப்பார்த்து
நம் ஊர் எங்கே என்றாள்.
நம் வீடு இருக்கும் இடம் எது
என்பதற்கும் வரைபடத்தில் புள்ளியில்லை.
அவள் பள்ளிக் கூடம்,
அவள் சினேகிதி சுலேகா வீடு பற்றி
மேற்கொண்டு என்னிடம் கேட்பதில்
பயனில்லை என்ற முகக் குறிப்புடன்
குதித்துக் கொண்டே விளையாடப் போனாள்.
இந்தக் கண்டம் அந்தக் கண்டம்
எதிலாவது
வாசலில் வந்து விற்ற பெண்ணின்
ஆதரவற்ற முகமோ, விடுதியோ
தெரிகிறதா என்று உற்றுப்பார்க்கத்
துவங்கினேன் அப்புறம்.

சாயல்
என் சின்ன வயதில்
சட்டையில்லாத அப்பா
எப்படியோ இருப்பார்.
அவருடைய தளர்ந்த இந்த வயதில்
சட்டை போட்டால் அப்பா
எப்படியோ இருக்கிறார்.
அப்படியே இல்லாமல் இருப்பதுதான்
அவருடைய சாயல் போல.
நகர்வு
ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்துவரும் பூவை.
அது தங்களுக்கு  என்று
நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்.
பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாது
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறு பெண் நோக்கி.
வெயில் முடிவு
ஒரு முடிவு செய்தது போல்
எல்லா இலைகளையும்
உதிர்த்துவிட்டிருந்தது செடி.
ஒரு முடிவும் செய்ய
முடியாதது போல்
செடியடியில் அசையாதிருக்கிறது
சாம்பல் பூனை.
ஒரு முடிவும் செய்ய
அவசியமின்றி
ஊர்ந்துகொண்டே இருக்கிறது
செடியின் மேல்
வெயில்.

==============
மீதியிருக்கும் விரல்கள்
மீதியிருக்கும் விரல்கள்

வீட்டுக்கு வந்திருந்த
குட்டிப் பெண்ணுக்கு
தரையில் இடது கை விரித்து
சாக்பீஸால்
விரல்கள் வரைந்தேன்
சுண்டு விரல், மோதிர விரல்
வரைந்த எனக்கு,
சாலை விபத்தில் இறந்த
யாரோ ஒருவரைச் சுற்றிய
தடயக் கோடுகளின்
வெள்ளை ஞாபகம் வந்தது.
அந்தக் குட்டிப் பெண்ணுக்கும்
அப்படித் தோன்றுமோ
என்ற பயத்தில்
எப்படி வரைய மீதியிருக்கும்
எல்லா விரலகளையும்?



No comments:

Post a Comment

Raagam Thaalam Pallavi - ராகம் தாளம் பல்லவி - Theerppugal Thiruththapadalaam

 Raagam Thaalam Pallavi  ராகம் தாளம் பல்லவி  Theerppugal Thiruththapadalaam Movie - Theerppugal Thiruththapadalaam Music - Shankar Ganesh S...