சுஜாதா
சுஜாதா
(மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.
சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன்
முத்திரையினைப் பதித்தவர்
பொருளடக்கம்
• 1வாழ்க்கைக் குறிப்பு
• 2புனைபெயர்
• 3ஆக்கங்கள்
o 3.1புதினங்கள்
o 3.2குறும் புதினங்கள்
o 3.3சிறுவர் இலக்கியம்
o 3.4சிறுகதைத் தொகுப்புகள்
o 3.5சிறுகதை மற்றும் குறும் புதினத் தொகுப்புகள்
o 3.6கவிதைத் தொகுப்பு
o 3.7நாடகங்கள்
o 3.8கட்டுரைத் தொகுப்புகள்
• 4திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
• 5பணியாற்றிய திரைப்படங்கள்
• 6மறைவு
• 7மேற்கோள்கள்
• 8வெளி இணைப்புகள்
வாழ்க்கைக்
குறிப்பு[தொகு]
சீரங்கம்
ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார்.
திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன்
பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை
ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது
வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு
வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை
உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின்
எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
புனைபெயர்[தொகு]
இவருடைய,
"இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.
ஆக்கங்கள்[தொகு]
சுஜாதா
இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும்
எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள்
எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.
புதினங்கள்[தொகு]
• பதவிக்காக
• ஆதலினால் காதல் செய்வீர்
• பிரிவோம் சந்திப்போம் (நூல்)
• அனிதாவின் காதல்கள்
• எப்போதும் பெண்
• என் இனிய இயந்திரா
• மீண்டும் ஜீனோ
• நிலா நிழல்
• ஆ..!
• கரையெல்லாம் செண்பகப்பூ
• யவனிகா
• கொலையுதிர்காலம்
• வஸந்த்!வஸந்த்!
• ஆயிரத்தில் இருவர்
• ப்ரியா
• நைலான் கயிறு
• ஒரு நடுப்பகல் மரணம்
• மூன்று நிமிஷம் கணேஷ்
• காயத்ரி
• கணேஷ் x வஸந்த்
• அப்ஸரா
• மறுபடியும் கணேஷ்
• விபரீதக் கோட்பாடு
• அனிதா இளம் மனைவி
• பாதிராஜ்யம்
• 24 ரூபாய் தீவு
• வசந்தகாலக் குற்றங்கள்
• வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
• கனவுத்தொழிற்சாலை
• ரத்தம் ஒரே நிறம்
• மேகத்தைத் துரத்தினவன்
• நிர்வாண நகரம்
• வைரம் (புதினம்)
• ஜன்னல் மலர்
• மேற்கே ஒரு குற்றம்
• உன்னைக் கண்ட நேரமெல்லாம்
• நில்லுங்கள் ராஜாவே
• எதையும் ஒருமுறை
• செப்டம்பர் பலி
• ஹாஸ்டல் தினங்கள்
• ஒருத்தி நினைக்கையிலே
• ஏறக்குறைய சொர்க்கம்
• என்றாவது ஒரு நாள்
• நில் கவனி தாக்கு
• காந்தளூர் வசந்தகுமாரன் கதை
• பெண் இயந்திரம்
• சில்வியா
• பேசும் பொம்மைகள்
• வண்ணத்துப்பூச்சி வேட்டை
• கம்ப்யூட்டர் கிராமம்
• கொலை அரங்கம்
• ஓடாதே!
• திசை கண்டேன் வான் கண்டேன்
குறும்
புதினங்கள்[தொகு]
• தீண்டும் இன்பம்
• குரு பிரசாத்தின் கடைசி தினம்
• ஆகாயம்
• காகித சங்கிலிகள்
• மண்மகன்
• மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
சிறுவர்
இலக்கியம்[தொகு]
• "பூக்குட்டி"
சிறுகதைத்
தொகுப்புகள்[தொகு]
• ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
• நிஜத்தைத் தேடி
• தூண்டில் கதைகள்
சிறுகதை
மற்றும் குறும் புதினத் தொகுப்புகள்[தொகு]
• நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
கவிதைத்
தொகுப்பு[தொகு]
• நைலான் ரதங்கள்
நாடகங்கள்[தொகு]
• டாக்டர். நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
• கடவுள் வந்திருந்தார்
• பாரதி இருந்த வீடு
• ஆகாயம்
கட்டுரைத்
தொகுப்புகள்[தொகு]
• கணையாழியின் கடைசி பக்கங்கள்
• கற்றதும் பெற்றதும் [பாகம் 1,2,3,4]"
• கடவுள் இருக்கிறாரா
• தலைமை செயலகம்
• எழுத்தும் வாழ்க்கையும்
• ஏன் ? எதற்கு ? எப்படி ?[பாகம் 1,2]
• சுஜா'''தா'''ட்ஸ்
• இன்னும் சில சிந்தனைகள்
• தமிழ் அன்றும் இன்றும்
• உயிரின் ரகசியம்
• நானோ டெக்னாலஜி
• கடவுள்களின் பள்ளத்தாக்கு
• ஜீனோம்
• திரைக்கதை எழுதுவது எப்படி?
திரைப்படமாக்கப்பட்ட
இவரின் கதைகள்[தொகு]
• அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு - திரைப்படம்)
• காயத்ரி
• கரையெல்லாம் செண்பகப்பூ
• ப்ரியா
• விக்ரம்
• வானம் வசப்படும்
• ஆனந்த தாண்டவம்
• சைத்தான்(திரைப்படம்)
பணியாற்றிய
திரைப்படங்கள்[தொகு]
• ரோஜா
• இந்தியன்
• ஆய்த எழுத்து
• அந்நியன்
• பாய்ஸ்
• முதல்வன்
• கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
• ஜீன்ஸ்
• உயிரே
• விசில்
• கன்னத்தில் முத்தமிட்டால்
• சிவாஜி த பாஸ்
• எந்திரன்
• வரலாறு
• செல்லமே
மறைவு[தொகு]
உடல்
நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள்
உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29. பெப்ரவரி 2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.[1],[1]
பிப்ரவரி
27: சுஜாதா நினைவு தினம்: ஆங்கிலத்தில் சுஜாதா!
சிலரின்
எழுத்துகளை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம். உதாரணம், வைக்கம் முகம்மது பஷீர், தமிழில் லா.ச.ராமாமிர்தம்,
கி.ராஜநாராயணன் என்று பட்டியலிடலாம். அந்தப் பட்டியலில் விட்டுப்போகாத ஒரு பெயர்... சுஜாதா.
தமிழ்
எழுத்துலகில் சுஜாதா ஒரு ‘ஆல் ரவுண்டர்’. தள்ளுவண்டியில் கடலை விற்பவர், பொட்டலம் கட்ட வைத்திருக்கும் பத்திரிகைக் காகிதங்களைத் தொகுத்தால் கிடைக்கும் சுவாரஸ்யமான புத்தகம்போலத் தன் கதைகளில் சுவாரஸ்யமான மனிதர்களை நடமாட வைத்தவர்.
சூரியனுக்குக்
கீழும், சூரியனுக்கு மேலும் என எந்த விஷயத்தையும்
எழுத்தில் கொண்டு வந்துவிடும் மாயவித்தைக் காரராக அவர் இருந்தார். தன் இறுதிக் காலம் வரை புதுப்புது எழுத்துப் பாணியை முயன்று பார்க்கும் ஒருவராகத் திகழ்ந்தார். அவரின் துள்ளலான நடையைப் பின்பற்றி, அவர் வாழ்ந்த காலத்தில் பலர் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். இன்று வலைப் பூக்களில் எழுதுபவர்கள் பலரது நடைக்கு உத்வேகமும் சுஜாதாவின் நடைதான்.
ஆனால்,
இந்தப் பெருமைகள் எல்லாம் மீண்டும் மீண்டும் தமிழ் தெரிந்த, அவர் எழுத்துகளைப் படித்தவர்களிடையே மட்டுமேதான் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவர்களைத் தாண்டி, தமிழ் தெரியாத, ஆனால் தமிழ் இலக்கியங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமிருக்கிற வாசகர்களுக்கு சுஜாதாவை அறிமுகப்படுத்த மணிரத்னம், ஷங்கர் படங்களை விட்டால் வேறு வழியில்லை. ஏனென்றால், சுஜாதாவின் எழுத்துகள் ஆங்கிலத்துக்குச் செல்லவில்லை.
எந்த
ஒரு மொழியிலும், அதன் இலக்கிய வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு முயற்சிகள் அடிப்படைத் தேவை. பெளலோ கெய்லோ எனும் பிரேசில் எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதினால் அடுத்த சில மாதங்களில் அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு கிடைத்துவிடுகிறது.
ஆனால்,
ஆண்டாள் பாசுரத்தைக்கூடத் தனக்கே உரித்தான நடையில் ஸ்மார்ட் ஃபோன் தலைமுறைத் தமிழர்களுக்குக் கொண்டு சென்ற சுஜாதாவின் எழுத்துகள், ஆங்கில ஃபான்ட்டில் அச்சேறாதது ‘கிண்டில்’ காலத்தின் சாபம் என்பதைத் தாண்டி வேறென்ன?
மொழிபெயர்ப்பு
சற்றுச் சிக்கலான பணி. மூல மொழியும் இலக்கு மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. அதைவிட மிக அத்தியாவசியத் தேவை, மூல மொழியின் கலாச்சாரத்தையும் இலக்கு மொழியின் கலாச்சாரத்தையும் அறிந்திருப்பது. மூல மொழியின் கலாச்சாரத்தை நம்மால் சரியாகக் கையாள முடிந்தாலும், சிலரின் எழுத்துகளை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம். உதாரணம், வைக்கம் முகம்மது பஷீர், தமிழில் லா.ச.ராமாமிர்தம்,
கி.ராஜ நாராயணன் என்று பட்டியலிடலாம். அந்தப் பட்டியலில் விட்டுப்போகாத ஒரு பெயர்... சுஜாதா.
காரணம்,
அவர் கையாண்ட நெளிவு சுளிவுகள். குறிப்பாக ஒரு கதையில், ‘இறங் கினான்’ எனும் வார்த்தையை, ஒவ்வொரு எழுத்தாக மேலிருந்து கீழாக எழுதியிருப்பார். இதை ஆங்கிலத்தில் கொண்டு போவது சிரமம். அப்படியே எழுதினாலும் அது தட்டையாக அமைந்துவிடும். ‘மனைவி கிடைத்துவிட்டாள்’ என்ற கதையில் வரும் காட்சி இது:
முதலிரவின்போது,
நாயகி (வேணி)...
‘உங்களுக்குப்
பிடிச்ச புத்தகம் எது?’
‘வேணி’,
‘படிங்க!’
முதலில்
அட்டைப் படத்தைப் பார்த்தான். பிரித்தான். பொருள் அடக்கத்தைத் தேடினான். முதல் அத்தியாயத்தில் ஆரம் பித்தான், ஓவியங்களை ரசித்தான், கவிதை களைத் தொட்டான், வார்த்தைகள், இடை வெளிகள், இடைச்செருகல்கள்...
இதன்
பொருளை ஆங்கிலத்தில் தந்து விட முடியும். ஆனால் சுஜாதாவின் அந்தக் குறும்பு..?
இப்படி
அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த ‘நெளிவு சுளிவுகள்’ வராது என்பதற்காக ஆங்கிலத்தில் கொண்டுபோகாமல் இருந்துவிட முடியுமா? எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு, ஏதோ ஒன்று இருப்பது நல்லது இல்லையா?
அப்படியான
ஒரு முயற்சிதான் விடாஸ்டா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரீலிவிங் சுஜாதா’ எனும் புத்தகம். ‘நகரம்’, ‘பார்வை’ உள்ளிட்ட ஏழு சிறுகதைகளுடன், ‘குருபிரசாதின் கடைசி தினம்’ எனும் குறுநாவலும் விமலா பாலகிருஷ்ணன் என்பவரால் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு முயற்சியை வரவேற்க வேண்டும். புத்தகத்தின் முன் அட்டையில் ‘அவரின் சிறந்த கதைகள்’ என்று குறிப்பிட்டதற்குப் பதிலாக, ‘தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ என்று போட்டிருந்தால், பொருத்தமாக இருந் திருக்கும்.
சென்னை
திருவல்லிக்கேணியில்
(1935) பிறந்தார். இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் தாத்தா - பாட்டியிடம் வளர்ந்தார். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார்.
# குரோம்பேட்டை
எம்.ஐ.டி.யில்
பி.இ. (மின்னணுவியல்) பயின்றார். விமானப் போக்குவரத்துத் துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ரேடார் ஆய்வுப் பிரிவு உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அதன் பொது மேலாளராக உயர்ந்தார்.
# இவரது
முதல் கதை 1953-ல் சிவாஜி என்ற
பத்திரிகையில் வெளிவந்தது. 1962-ல் ‘இடது ஓரத்தில்’ என்ற சிறுகதை குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன்
பெயர் குழப்பத்தை தவிர்க்க, தன் மனைவி சுஜாதாவின் பெயரில் எழுதினார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் என்ற தொடரை ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் எழுதினார்.
# இலக்கியம்,
நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதைகள், அறிவியல் கதைகள், சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என பல துறைகளிலும்
முத்திரை பதித்தார். காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா உள்ளிட்ட இவரது பல நாவல்களைத் தழுவி
திரைப்படங்கள் வந்துள்ளன.
# அறிவியல்,
தொழில்நுட்பத் தமிழுக்கு இவரது பங்களிப்பு முக்கியமானது. ஜூனியர் விகடனில் ‘ஏன் எதற்கு எப்படி?’ என்ற பெயரில் வெளிவந்த இவரது கேள்வி-பதில் பகுதி மிகவும் பிரசித்தம். வாசகர்களின் சிக்கலான அறிவியல் கேள்விகளுக்கு நகைச்சுவையுடன் எளிமையாக பதில் கூறுவார். மூளையின் செயல்பாடு குறித்து இவர் எழுதிய ‘தலைமைச் செயலகம்’ மிகச் சிறந்த அறிவியல் நூல்.
# பாட்டியுடன்
ஸ்ரீரங்கத்தில் கழித்த இளமைக் கால நினைவுகளை ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ என்ற தலைப்பில் சுவாரஸ்யமாகப் பதிவுசெய்தார். ‘கற்றதும் பெற்றதும்’, ‘கடவுள் இருக்கிறாரா’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் பிரபலமானவை. பல கவிதைகள் எழுதியுள்ளார்.
# இவரது
அறிவியல் புனைகதைகளான ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றன. ரோஜா, இந்தியன், முதல்வன், ஆய்த எழுத்து உட்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
# அறிவியலை
ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களிடம் கொண்டுசென்றதற்காக தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் 1993-ல் இவருக்கு விருது
வழங்கி கவுரவித்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றினார். அதற்காக இவருக்கு ‘வாஸ்விக்’ விருது வழங்கப்பட்டது. எழுத்துப் பணிக்காக ‘கலைமாமணி’ விருது பெற்றார்.
# நூற்றுக்கும்
மேற்பட்ட நாவல்கள், 250 சிறுகதைகள், 10 அறிவியல் நூல்கள், 10 நாடகங்கள், கவிதை நூல் ஆகியவற்றைப் படைத்துள்ளார்.
# எழுத்துலக
ஜாம்பவான் என்று புகழப்பட்ட ‘சுஜாதா’ ரங்கராஜன் 73 வயதில் (2008) மறைந்தார்.
No comments:
Post a Comment