அஃக் பரந்த்தாமன்
கொஞ்சமும் மனம் தளர்ந்து போகாமல் பிடிவாதமாக ‘அஃக்’ பத்திரிகையை அச்சிட்ட சரித்திரம், புதிய தலைமுறை வாசகர்களுக்கும் தெரியவேண்டும். பசி, பட்டினி, தீராத தாகம், பொருள் இழப்புகளோடு இரவு பகலாகத் தூக்கமின்றி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, என்னால் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் மட்டுமே அச்சிட முடிந்தது. ஆனால், அந்தப் பக்கத்தை அச்சிட அக்கறை காட்டிய வைராக்கியத்தைச் சொல்லத்தான் வேண்டும்.
சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே சங்கு, அணில், டமாரம் எனச்
சிற்றிதழ்கள் வரும். அதை ஓட்டைக்காலணா (அக்கால நாணயம்) கொடுத்து வாங்கிப்
படிப்பேன். எழுத்தாளன் ஆகணும்னா நிறையப் படிக்கணும்; சினிமா டைரக்டர்
ஆகணும்னா நிறைய சினிமா பார்க்கணும். அதனால் படிப்போடு, இந்த இரண்டையும்
தொடர்ந்து செய்தேன்.
தமிழ்ச் சிற்றிதழ் லட்சியவாதத்தின் ஒற்றைத் தியாகி
ஏன் பரந்த்தாமன் ( 1940 ) தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலின் ஒற்றைத் தியாகி? இலக்கிய லட்சியவாதத்துக்குத் தம்மைத் தின்னக்கொடுத்து, சூழல் தழைக்கச் சிற்றிதழ் ஆசிரியர்கள் பலரும் பலவிதத் தியாகங்களைச் செய்ததனால்தான் இன்றைய எழுத்தாளர்கள் ரோஜாப் பாதையில் நடக்கிறார்கள். கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த அந்த ஆசிரியர்கள், நண்பர்கள் சிலரின் ஆதரவால் ஒரு கட்டத்தில் ஓரளவு மீண்டு வந்தவர்கள். குடும்பத்தாரால், கசப்பையும் மீறி, முட்டுக் கொடுக்கப்பட்டவர்கள். ஆனால் பரந்த்தாமனின் வாழ்க்கையை லட்சியவாதம் சின்னாபின்னமாக்கிவிட்டது. வறுமையைத் தெரிந்தே வரவேற்று அதன் கசப்புகள் குறித்துப் புலம்பினாலும், இலக்குகளைப் பெரியனவாக நிறுவிக்கொண்டு அம்புகளை எய்தவர். முதுமையில் மனைவியை இழந்து, மகனாலும் பராமரிக்கப்படாமல், மகளின் ஆதரவோடு முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, மறதி நோய்த் தாக்குதலால் இறந்துபோயிருக்கிறார்
ஜெயகாந்தன்தான் நவீன தமிழ் இலக்கியத்தின் முகம் என்று நம்பிய 1970களின் தொடக்கத்தில் சேலம் மாவட்ட மைய நூலகத்தில் பார்த்த கசடதபற (1970-77) இதழ் பெரிய கண்திறப்பாக இருந்தது. அதன் ஆண்டுச் சந்தா மூன்று ரூபாய். அஃக் என்ற சிற்றிதழ் சேலத்திலிருந்து வெளிவரப்போவதன் விளம்பரம் கசடதபறவில் வந்தது. முகவரி ஜாகீர் அம்மாபாளையம். சேலத்தின் புறநகர்ப் பகுதி. பி.ஏ. வகுப்பில் பயின்ற என் சகமாணவரான ராஜாராம் (பிரம்மராஜன்) அந்த ஊர்க்காரர். அவர் வழியாக பரந்த்தாமனின் அறிமுகம் கிடைத்தது. முதல் இதழ் வெளியான ஜூன் 1972க்குச் சற்று முன்பாகத் தொடங்கிய பரிச்சயம் 1978வரை, என்னைப் பொறுத்த அளவில், நீடித்தது. கல்லூரி மாணவர்களுக்குச் சிற்றிதழ் தொடர்பான செயல்பாடுகளில் முதல்கை அறிமுகம் கிடைப்பது அபூர்வ வாய்ப்பு. சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த எங்களுக்குத் தீவிர இலக்கிய இயக்கத்தோடு சிறுவயதில் உண்டான ஈடுபாடு, பெரும் தன்னம்பிக்கையையும் வாசிப்பு ஒழுங்கையும் பெருமிதத்தையும் அளித்தது. அன்றைய முன்னணி எழுத்தாளர்கள் பலரும் அஃகில் எழுதினார்கள். அவர்களின் கையெழுத்துப் பிரதியை முதலில் படிப்பது, எழுத்தாளர்களின் கடிதங்களை வாசிப்பது, அச்சகத்துக்குப் போவது, மெய்ப்பு நோக்குவது போன்றவை இலக்கியச் சாகசங்களாக அந்த 18, 19வயதில் தெரிந்தன.
எளிய பொருளாதாரப் பின்னணியில் பரந்த்தாமன் பத்திரிகை தொடங்கினார். தனி ஒருவரின் எதிர்நீச்சல். சம்பளத்துக்காக அவர் எந்த வேலையையும் பார்த்தவரல்லர். கவிஞர், ஓவியர், சிற்றிதழாளர், திரைப்பட இயக்குநர் என்ற பாத்திரங்களை மட்டுமே வகிக்க விரும்பிய லட்சியவாதி. கடைசிப் பாத்திரம் இறுதிவரை கைகூடவில்லை. அவர் எட்டிப் பிடிக்கமுடியாத தூரத்துக்கு அப்போது தமிழ்சினிமா போய்விட்டது. ஆலைத்தொழிலாளியான விதவைத் தாயாரின் ஒரே மகன். அந்த அம்மையாருடைய சம்பாத்தியத்தின் கணிசமான பகுதி, பத்திரிகைச் செலவுக்கும் அஃக்கையும் நூல்களையும் அச்சடிக்க பிருந்தாவனம் பிரிண்டர்ஸ் என்ற அச்சகம் தொடங்குவதற்கும் செலவாயிற்று. சிற்றிதழுக்கே உரிய அனைத்து லட்சணங்களோடும் அஃக் வந்தது. ‘அஃக் - ஓர் எழுத்தாயுத மாத ஏடு’ என்ற தலைப்புடன் வெளியான அது 1972 ஜூன் தொடங்கி 1980 ஜூன் வரையிலான எட்டு ஆண்டுகளில் 22 இதழ்களை வெளியிட்டது. பதிவு செய்யப்பட்ட இதழ். முதலில் ஐந்து ரூபாயாக இருந்த ஆண்டுச் சந்தா பிறகு பன்னிரண்டு ரூபாயாக மாறியது. சந்தாவெல்லாம் பெரிதாக வரவில்லை. எழுத்தாளர்கள் சிலரின் (எனக்கு நன்றாகத் தெரிந்து வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி) நன்கொடையாலும் நண்பர்களின் உதவியாலும் அவ்வப்போது வந்தது. சி. மணியின் நடை (1968-70)
அஃக்குக்கு முன்பாக சேலத்திலிருந்து வந்த இன்னொரு முக்கியச் சிற்றிதழ்.
கண்ணதாசன், ஞானரதம் (ஜெயகாந்தன் ஆசிரியத்துவத்தில் வந்த முதல் கட்டம். 1970இல் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் இறந்தபோது ஜெயகாந்தன் எழுதிய இரங்கல் குறிப்பு நினைவில் எழுகிறது), தீபம் போன்ற இதழ்கள் மூலம் கவிஞராகத் தெரிய வந்தவர் பரந்த்தாமன். ஓரளவுக்கு இடதுசாரி மனோபாவம் கொண்டவர். திரைப்படத் துறையில் கதை வசனகர்த்தாவாக, இயக்குநராக ஆகும் தீவிர வேட்கையைக் கொண்டிருந்தவர். படப்பிடிப்புக்குப் போகும் அளவுக்கு ‘வந்தவர்கள் போகிறார்கள்’ என்ற ஒரு திரைக்கதையை எழுதி வைத்திருந்தார். எழுத்து நடை, உடை, பாவனை போன்ற அம்சங்களில் அவர்மீது ஜெயகாந்தனின் தாக்கம் அதிகம். ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ பிரத்யேகத் திரையிடல் ஒன்றைக் காலைக் காட்சியாக சேலம் சங்கம் திரையரங்கில் ஒழுங்கு செய்ய அவர் சுற்றி அலைந்ததைப் பார்த்திருக்கிறேன். கையெழுத்தே ஓவியமாக இருக்கும். அந்தக் காலத்திலேயே வீட்டிலிருக்கும்போது பெர்முடாஸ் அணிவார். வெளியே செல்லும் முன்பாக மெனக்கெட்டுத் தன்னை அலங்கரித்துக்கொள்வார். இருபத்துநான்கு மணிநேரக் கலைஞர். சிவாஜி ரசிகர். நெருங்கிய நண்பர்கள் சூழ இருக்கும்போது நகைச்சுவையாகப் பேசுவார்.
அஃகின் மூல இதழ்களை, அவை வெளிவரும்போதே பார்த்தவர்களுக்கு இப்போது வயது குறைந்தது அறுபது. யாரையும் முதலில் ஈர்க்கும் அம்சங்கள் அவற்றின் அழகான அச்சும் வடிவ நேர்த்தியும். வணிக இதழ்கள் அழகாக வரும்போது சிற்றிதழ்கள் ஏன் ஏனோதானோவென்று வர வேண்டும்? முயன்றால் அந்த நேர்த்தியை அடைய முடியாதா? இவை அவரை அலைக்கழித்த கேள்விகள். குறிப்பாக, குமுதம் பயன்படுத்திய 8 pt Tamil Antique எழுத்துரு மேல் அவருக்குப் பிரத்யேகக் காதல். அதை அஃக் இதழில் அவ்வப்போதும் வண்ணதாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ தொகுப்பில் முழுக்கவும் பயன்படுத்தினார். இதழின் அழகான வடிவமைப்புக்காகவும் அச்சுக்காகவும் இரண்டு, வண்ணதாசனின் நேர்த்தியான தொகுப்புக்காக ஒன்று என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றார். ஒரு கட்டம் வரைக்கும் சாதாரண வணிக அச்சகங்களிலேயே தன் விருப்பங்களைச் சிரமப்பட்டு நிறைவேற்றிக்கொண்டார். தனக்கென்று ஒரு அச்சகம் இருந்தால் நினைத்ததைச் சாதிக்கலாமே என்று அம்மாவின் பிராவிடெண்ட் நிதியிலிருந்தும் கடன் மூலமும் பணம் திரட்டிப் பிருந்தாவனம் பிரிண்ட்டர்ஸ் என்ற பெயரில் அச்சுக்கூடத்தை வீட்டிலேயே நிறுவினார். சிக்கன நடவடிக்கையாக அவரும் அவர் மனைவியுமே, எழுத்துக் கோப்பதிலிருந்து அச்சடிப்பது வரை, தொழிலாளிகள். ஆசிரியரே தன் கைப்பட உருவாக்கிய ஒரே தமிழ்ச் சிற்றிதழ் அஃக். அதன் பின் இதழ்களும் ‘கூட்டுப் புழுக்கள்’ (கங்கைகொண்டான்), ‘பால்வீதி’ (அப்துல் ரகுமான்), ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ ஆகிய மூன்று நூல்களும் காலால் மிதிக்கும் எந்திரத்தாலேயே அச்சிடப்பட்டன. ஒவ்வொரு பத்தியும் ஒரு சிற்பியின் கலைநுணுக்கத்துடன் செதுக்கப்பட்டது. (இந்த அச்சகத்தில் அதன் உரிமையாளரான தமிழாசிரியர் ஒருவரின் மகள், இன்றைய தி.க. பிரமுகர், வழக்கறிஞர் அருள்மொழி ஏழெட்டு வயது சிறுமியாக விளையாடிக்கொண்டிருப்பார்.) சில வருடங்களில் அச்சகம் கடனில் மூழ்கிக் கைவிட்டும் போய்விட்டது. அஃக் இதழ்களில் என் சேகரிப்பில் தப்பியிருப்பவை நான்கு மட்டுமே.
சிற்றிதழ்களின் கரிசனம் இலக்கியம் மட்டுமே என்றிருந்த 1970களின் முற்பகுதியில் பொருட்படுத்தத் தக்கவையாக கசடதபற, அஃக், ஞானரதம், வானம்பாடி ஆகிய நான்கும் வெளிவந்தன. இந்த நான்கையும் நாங்கள் படித்துவிடுவோம். பரந்த்தாமன் தொகுக்க அஃக் இதழ்களின் மொத்த உள்ளடக்கத்தையும் ‘சந்தியா பதிப்பகம்’ 2006இல் வெளியிட்டுள்ளது. அதைப் பார்க்கும்போது அஃக் இதழ்கள் அச்சான சூழல் மாய உருவாகக் கண்முன் விரிகிறது. அஃகின் முதல் இதழில் கி.ரா.வின் சிறுகதை ‘ஜீவன்’, வெ.சா.வின் ‘சில கேள்விகள், சில பதில்கள், சில தெரியாது’கள் என்ற கட்டுரை (இது முன்னதாக கண்ணதாசன் இதழில் ஆரம்பித்த தொடர்), அம்பையின் ‘பயங்கள்’ நாடகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. பெரும் நம்பிக்கையைப் பிற எழுத்தாளர்களிடமும் வாசகர்களிடமும் அவை ஏற்படுத்தின. எழுத்தாளர்கள் பலரும் ஆர்வமாகப் பங்களிக்க முன்வந்தார்கள். வண்ணதாசன், சுந்தர ராமசாமி, நகுலன், சார்வாகன் (‘யானையின் சாவு’ என்ற கதையின் கையெழுத்துப் பிரதியின் இறுதியில் வாலைச் சுழித்து நிற்கும் யானை ஒன்றின் பின்பாகத்தைத் தன் கையாலேயே சார்வாகன் வரைந்து அனுப்பியிருந்தார்), ராஜேந்திர சோழன், ஆர். ராஜகோபாலன் போன்றோரின் சிறுகதைகளும் பிரமிள், கலாப்ரியா, பசுவய்யா (எதுவும் எழுதாமலிருந்த 6-7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சு.ரா. எழுதிய ‘ஆந்தைகள்’, ‘சவால்’, ‘பின்திண்ணைக் காட்சி’ ஆகிய மூன்று கவிதைகள்), நீலமணி, வே. மாலி (சி. மணி), ஞானக்கூத்தன், தேவதேவன், விக்கிரமாதித்யன், எஸ். வைத்தீஸ்வரன், அபி, பதி, க.நா.சு., நா. காமராசன், நாரணோ ஜெயராமன், கங்கைகொண்டான், எஸ். வைத்திலிங்கம் (பிரபஞ்சன்), ஸிந்துஜா, எஸ். சாமிநாதன் போன்றோரின் கவிதைகளும் இந்திரா பார்த்தசாரதியின் ‘போர்வை போர்த்திய உடல்கள்’ நாடகமும் (1975) வெ.சா., ந. முத்துசாமி, தமிழவன் ஆகியோரின் கட்டுரைகளும் கவிதை மொழிபெயர்ப்புகளும் மதிப்புரைகளும் என காத்திரமான பல படைப்புகளை அஃக் வெளியிட்டுள்ளது. வானம்பாடி சார்ந்த கவிஞர்களில் சக்திக்கனலும் கங்கைகொண்டானும் மட்டுமே அஃகில் எழுதினார்கள். மற்றவர்கள் அஃக் மீது கொண்ட ஒவ்வாமையைப் புரிந்துகொள்ள முடியும். வானம்பாடியின் கவிதைக் கோட்பாட்டுக்கு எதிரான நிலையை பிரமிள் மூலம் அஃக் வெளிப்படுத்தியது. ஏ. ராஜாராம், பிரம்மராஜனாக மாறியது அஃகில்தான் (என்று நினைக்கிறேன் ஏனென்றால், அதே காலத்தில் அவர் ழவிலும் எழுதத் தொடங்கினார்). இரண்டு சிறுகதைகள், ஒரு கவிதை, சில ஓவியங்கள், ஒரு மொழிபெயர்ப்பு என்று அவர் பங்களித்தார். அண்ணாமலையில் படித்தபோது மௌனியைச் சந்தித்துப் பேசியவற்றை நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்து ஒரு சிறு கட்டுரையாக அஃகில் எழுதினோம். சு.ரா.வின் சிறுகதையான ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ வந்த பதினேழாவது இதழில் (1976) அகிலா என்ற பெயரில் நான் எழுதிய ‘இரண்டு பேர்’ என்ற சிறுகதையும் வெளியானது. சு.ரா. அக்கதையைப் பாராட்டி எழுதியிருந்தார். என் கால்கள் சில நாள்கள் தரையில் பாவவில்லை.
அஃகை மீண்டும் தொடங்கிக் கணினித் தொழில்நுட்பக் காலத்தில் உலகத் தரத்துக்குச் சவால்விடும் வகையில் நடத்திக்காட்ட முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் அவ்வப்போது எழுந்திருக்கிறது. இன்னொரு நாள் இன்னொரு அஃக் இன்னொரு பரந்த்தாமனால் தொடங்கப்படலாம். சிற்றிதழ் இயக்கத்தின் நியதியே தொலைதல் அல்ல, தொடர்ச்சிதானே.
அஃக் பரந்த்தாமன்: சலிக்காத
இலக்கியத் தேனீ
இலக்கியப் பத்திரிகைகளின் ஆரோக்கியமான
பருவம் என்று
1970-களைக் குறிப்பிடலாம்.
எனினும் அப்போதைய
இலக்கிய இதழ்கள்
வடிவமைப்பின் அழகியலில்
பெரிய ஆர்வம்
கொண்டிருக்கவில்லை. அக்குறையைப்
போக்கும் புதிய
முயற்சியாக ‘அஃக்’
ஒரு ‘எழுத்தாயுத
மாத ஏடு’
என்கிற பிரகடனத்தோடு
1972 ஜூனில் முதல்
இதழைக் கொண்டு
வந்தார் பரந்த்தாமன்.
இதழையும் புத்தகங்களையும்
அச்சிட, “அச்சைக்
கலையாக்குகிறார்கள்” - என்ற
ஆசை வாக்கிய
முழக்கோடு தனது
சேலம் ஜாகிர்
அம்மாப்பாளையம் வீட்டிலேயே
‘பிருந்தாவனம்’ அச்சகத்தையும்
தொடங்கினார். அதில்,
பஞ்சாலைத் தொழிலாளியான
அவரது அம்மாவின்
ரத்தமும், வியர்வையும்,
சேமிப்புத் தியாகமும்
கலந்திருந்தது, அச்சுக்
கோக்கும் மனைவி
சத்தியபாமாவின் உழைப்பும்,
இவரது கலையும்
இணைந்திருந்தது. முதல்
இதழின் அழகிய
வடிவத்தைப் பார்த்துப்
பிரமித்துப் போனது
சிற்றிதழ் உலகம்.
பல எழுத்தாளர்களுக்கும் நிறைய
பக்கங்கள் ஒதுக்கி
அவர்கள் மீது
அதிக வெளிச்சம்
விழக் காரணமாயிருந்தது
‘அஃக்’ இதழ்.
பிரமிளின் 38 கவிதைகளை,
‘கண்ணாடியுள்ளிருந்து’ என்று
தலைப்பிட்டு ஒரே
இதழில் கொண்டுவந்தார்.
பிரமிளின் முதல்
கவிதைத் தொகுப்பாகவே
அதைக் கொள்ளலாம்.
வெங்கட் சாமிநாதனின்,
‘சில கேள்விகள்,
சில பதில்கள்,
சில தெரியாதுகள்’
தொடர் கட்டுரை
உட்பட பல
கட்டுரைகள் வந்தன.
முதல் இதழில்
கி.ரா.
‘ஜீவன்’ என்கிற
தலைப்பில் சிறுகதை
எழுதியிருந்தார்.
1972 செப்டம்பர்,
ஐந்தாவது இதழில்
என்னுடைய 20 கவிதைகள்,
நீலமணியின் ஒன்பது
கவிதைகள் வெளிவந்தன.
அம்பையின் ‘பயங்கள்’,
இந்திரா பார்த்தசாரதியின்
‘போர்வை போர்த்திய
உடல்கள்’ ஆகிய
நாடகங்களையும் தன்
ஈடுபாடு மிக்க
பக்க அமைப்புடன்
‘அஃக்’கில் கொணர்ந்தார். ஞானக்கூத்தனின்
பட்டிப் பூ
கவிதையும், அவர்
மொழி பெயர்த்த
பசவண்ணாவின் கன்னடக்
கவிதைகளின் மொழிபெயர்ப்பும்
வந்தன. நீண்ட
காலத்துக்குப் பின்
பசுவய்யா ‘ஓய்ந்தேன்
என மகிழாதே/
உறக்கமல்ல தியானம்/
பின் வாங்கல்
அல்ல பதுங்கல்’
என்று அறைகூவலிடும்
தன் கவிதைகளுடன்
டிசம்பர் 1972 ஆறாவது
இதழில் மறுபடி
சிரசுதயமானார். சுந்தர
ராமசாமியின் சிறந்த
சிறுகதைகளில் ஒன்றான
‘ரத்னாபாயின் ஆங்கிலம்’
1976 ஜூலை-ஆகஸ்ட்,
17-வது இதழில்
வெளியானது.
பரந்த்தாமனே
அச்சுக் கோத்து,
தனது லினோ
கட், பன்வர்
கட் ஓவியங்களை
மிகப் பொருத்தமாக
இடையிட்டு, மெய்ப்புத்
திருத்தி, பக்கம்
சமைத்து அவரே
‘டிரெடி’லில் மிதித்து அச்சிடுவார்.
அவர் உபயோகித்த
அச்சுருக்கள் அவருக்கென்றே
பிரத்யேகமாகத் தயாரானவை
போல வேறெந்த
அச்சகத்திலும் இருக்காது.
அந்த ஈய
அச்சுக்களில்தான், கங்கைகொண்டானின்
‘கூட்டுப்புழுக்கள்’, அப்துல்
ரகுமானின் ‘பால்வீதி’,
வண்ணதாசனின் ‘கலைக்க
முடியாத ஒப்பனைகள்’
எல்லாவற்றையும் வார்த்தெடுத்தார்.
அதற்காகவே தேசிய
அளவில் பரிசுகளையும்
வென்றார். இதழை
அவரது ஓவியங்களுடன்
ஆதிமூலம், பிரமிள்,
ஏ.ராஜாராம்
(பிரம்மராஜன்), ஜெயராமன்,
சாரங்கன் என்று
பலரின் ஓவியங்களும்
அலங்கரிக்கும்.
வானம்பாடிக்
கவிதைகளின் வகைமையில்
எழுதிவந்த அவர்
தன் எழுத்துகளால்
தன் இதழை
ஒருபோதும் நிரப்பியதில்லை.
அக்காலத்து இளைஞர்களைப்
போலவே ஜெயகாந்தன்
மீது மிகப்பெரிய
காதல் உடையவர்.
அவரைப்போலவே உடையணிந்து,
சிகை அலங்கரித்துக்
கொண்டிருப்பார். உடல்
மொழிகளும் அவரைப்போலவே
இருக்கும். பல்வேறு
காலகட்டங்களில் தொடர்ந்தும்
அவ்வப்போதுமாக 1978 வரை
இருபது இதழ்கள்
வரை நடத்தினார்.
அப்புறம் அவர்
சேலத்தை விட்டு
சென்னைக்கு வந்து
சினிமா இயக்கும்
ஆசைக்கனவில் அலைந்து
திரிந்து தன்னை
வெகுவாகக் கரைத்துக்
கொண்டார். ‘வந்தவர்கள்
போகிறார்கள்’ என்ற
தலைப்பில் ஒரு
முழு ‘ஸ்க்ரிப்’டைக் கையிலும்
மனதிலும் சுமந்து
திரிந்தார். கடைசியில்
ஞாபகமறதி நோயால்
பெரிதும் கஷ்டப்பட்டு
ஒரு தனியார்
இல்லத்தில் இருந்தார்.
1978-ல்
கி.ரா
அவருக்கு எழுதிய
ஒரு கடிதத்தில்,
“பரந்த்தாமனுக்கு, தலை
வணங்குகிறேன். தேன்
கூட்டை எத்தனை
தரம் அழித்தாலும்
திரும்பவும் திரும்பவும்
அது கூடுகட்டித்
தேன் நிரப்பும்.
அயராத உங்கள்
செய்கை, என்னை
உணர்ச்சிவயப்படச் செய்கிறது”
என்று குறிப்பிட்டிருப்பார்.
அது போல
2006-ல் அவரைச்
சந்தித்தபோது, பரந்த்தாமன்
மீண்டும் ‘அஃக்’
இதழை, இன்றைய
வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப
உதவியோடு உலகே
வியக்கும் வகையில்
கொண்டு வர
வேண்டும் என்ற
அழுத்தமான கனவோடு
இருந்தார். அழுத்தத்துக்காகவோ
என்னவோ தன்
பெயரை ‘பரந்த்தாமன்’
என்றே குறிப்பிடுவார்.
நோய்மை வராதிருந்தால்
கண்டிப்பாக அந்த
இலக்கியக்கூட்டை மறுபடி
கட்டி, மறுபடி
தேன் நிரப்பி
இருப்பார்!
சில வருடங்களுக்கு முன்பு , நண்பர் ரவி ஸ்ரீனிவாஸ்தான் அந்த புத்தகத்தின் நேர்த்தியான அச்சையும் அதன் அழகையும் குறிப்பிட்டு பதிவெழுதியிருந்தார். சமீபத்தில் எழுத்தாளர் எஸ்.ராவும். என்னிடம் அந்த புத்தகம் உண்டு , கல்லூரிப் பருவத்தில் வாங்கியிருந்தேன் என்று அப்போதே சொல்லத் துடித்தேன். ஆன்மிகம் அடக்கியது; அதுவே இப்போது எழுதவும் சொல்கிறது!
வண்ணதாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ புத்தகம்தான் அது. 1972ல் வெளிவந்த ‘அஃக்’ சிற்றிதழ் மட்டுமல்ல, அச்சு நேர்த்திக்காக இந்த புத்தகமும் அரசின் பரிசு பெற்றது. அட்டை டிசைனை – லினோகட்-ல் (அல்லது பன்வர்கட்-ஆ?) பிரமாதப் படுத்தியிருப்பார் பரந்தாமன். உருண்டை உருண்டையான – மலையாள எழுத்து பாணியில் அமைந்த – ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ தலைப்பைக் காப்பியடித்துதான் நான் ‘மானுடம்’ சிற்றிதழுக்கு – நாகூர் ரூமியின் திருச்சி நண்பர் விஜயகுமார்தான் ஆசிரியர் – எழுத்து டிசைன் செய்தேன் Calligraphy-இல் அப்போது நான் ரொம்ப வீக். Letraset விஷயங்கள் அறியாத வயசு. வரையத் தெரியும் ; ஆனால் ‘Block’ நுணுக்கங்கள் தெரியாது (இதெல்லாம் தெரியாமலே ‘அபிதாஸ் அட்வர்டைஸிங்’ஐ சென்னையில் ஆரம்பித்து வாங்கிய அபார அடிகள் பிறகு வரும்!) . எனவே சொதப்பி விட்டது. அது இருக்கட்டும், ‘க.மு.ஒ’ தொகுப்பிலுள்ள (முதல்பதிப்பு, 1976) வண்ணதாசனின் கதைகளை விட , தொகுப்பை அச்சிட்ட அஃக் பரந்தாமனின் கடிதம் (பதில்) புகழ் பெற்றது. அந்த புத்தகத்திலேயே – புத்தக அச்சுக்காக – இருவரும் எழுதிக்கொண்ட கடிதங்கள் கடைசியில் உள்ளன.
நெஞ்சைப் பிளக்கும் பரந்தாமனின் கடிதத்தை இப்போது பதிவிடுகிறேன். தன் வேட்டியின் நுனி கூட எந்த முள்ளிலும் சிக்கியதில்லை என்பாராம் வண்ணதாசன். அவர் வாழ்க்கை அப்படி. கடவுளின் கருணை. ஆனால் அதே கருணைதான் முட்களை மட்டுமே வேட்டியாக பரந்தாமனுக்குக் கொடுத்தது. ஏன்? இதற்கெல்லாம் நமக்கு விடை தெரியாது. ஒன்று செய்யலாம். இங்கே கிடைக்கும் ‘முக்கண் மாத ஏட்டு’ இதழ்கள் நான்கையும் தரவிறக்கம் செய்யலாம். செய்யுங்கள். முக்கியமாக, எனக்குப் பிடித்த ‘உயிர்‘ எழுதிய கந்தர்வனையே அசரவைத்த ‘ஜீவன்’ சிறுகதை அதில் இருக்கிறது. ‘என் வாழ்நாளில் இதுபோல் ஒரு சிறுகதையை படித்ததில்லை’ என்கிறார் அவர். நம் கி. ராஜநாராயணன்ஐயா எழுதியதுதான். ‘கி.ரா’வை ஒரு நல்ல கதை எழுதவைத்த புண்ணியம் ‘அக்’கம்மாவுக்கு உண்டு என்று – நிமிர்ந்து, குனிந்து- சொல்லும் வண்ணதாசன் கதையும் இதில் உண்டு. அப்புறம்… ‘சோறு முளைக்கப் பயிரிடு போ’ என்று உத்தரவிடும் பெரும் தலைகள்… அனைத்தையும் பாருங்கள்.
பரந்தாமனின் கடிதத்திற்கு கீழே ,
தீராநதி இதழில் வெளிவந்த அவரது தொகுப்புரையை – மீள்பதிவாக ( ரவிஸ்ரீனிவாஸ் தளத்திலிருந்து எடுத்தது) பதிகிறேன்.
யாரிடமாவது கவிஞர் பரந்தாமனின் புகைப்படம் இருந்தால் அனுப்புங்களேன், அவரது கவிதைகளோடு.
*
பரந்தாமன் கடிதம் :
ப்ரிய வண்ணதாசன் – கடன் வறுமையையும் கூட்டிக்கொண்டு வந்தது. வறுமைக்கு நல்ல பசி. அது எங்களை வாங்கிக்கொண்டது. எங்களுக்குக் குச்சிக் கிழங்குகளை வாங்கினாள் சத்யா. இந்தத் தொகுப்பை நாங்கள் அச்சிட முயன்றபோதெல்லாம் சாப்பிட முடியாமல் போனது. சாப்பிட முயன்றபோதெல்லாம் அச்சிட முயலாமல் போனது. தவிர்க்கவே முடியாத தருணங்களில் தாங்கள் தொகுப்புக்காக அனுப்பி வைத்த பணத்தை யோசித்து யோசித்து வேறுவழியே இன்றி சில நூறுகளை நாங்கள் பண்டமாற்றுச் செய்தோம் – பருக்கைகளாக. திடீரென்று ஒருநாள் வந்த திருப்பத்தூர்காரர்கள் வீட்டாரிடம் விலைபேசி அச்சகத்தைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். அன்று மங்கலம் சந்திரசேகரனிடம் பேசிக்கொண்டிருந்த இலக்கியப் பேச்சும் குடித்துக்கொண்டிருந்த கொத்துமல்லிக் காப்பியும் ரொம்ப ருசியாக இருந்தன. இந்தத் தொகுப்பு மிக அழகாகவே வந்திருக்கிறது. என்றாலும் எனக்கான மன அமைதியற்ற நீட்சியின் சோகத்தில் அவசரமாக நேர்ந்துபோன குறைபாடுகளை இந்நூலின் இரண்டாம் பதிப்பில் நிவர்த்திசெய்து கொடுக்க எங்கிருந்தாலும் வருவேன், ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’தாம் கடைசி. ‘எனக்குப் பசித்துக்கொண்டே இருக்கிறது’ என்று ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன். நான் சொன்னது ‘எந்தப் பசியை?’ என்று நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பசியைப் புரிந்துகொள்வது என்பது எல்லாவற்றிலும் மேலான காரியம். கலைஞனை வீடுதான் முதலில் கொல்கிறது. ஓர் உண்மையான சோதனைக்காரனின் யுத்தம் வீட்டிலிருந்துதான் துவங்குகிறது. பார்வைதான் அந்நியமாதலுக்குக் காரணமாகிறது. அப்பாவையும், அம்மாவையும், நண்பர்களையும், ஏன் சமூகத்தையுமே ‘யாரோ’ என்றாக்கி விடுகிறது. மாட்டுத்தொழுவத்துக்குக் கொட்டகை போட என்று, மின்சார பாய்கிற வயரில் மோதுகிறது என்று, சாமி ஊர்வலம் போகும்போது இடிக்கிறது என்று – நான் சின்ன செடியாக வைத்து வளர்த்த என் ப்ரிய வேப்ப மரத்தின் மூன்று பெரிய கிளைகளை வெட்டி விட்டார்கள். பூவும் பிஞ்சுமாய் மீதம் இரண்டு கிளைகளே இருக்கிற இதன் நிழலில்தான் எங்கள் வீட்டு அடுப்பு இருக்கிறது – இன்னும். நன்றிகளுடன் – பரந்தாமன்.
***
தீராநதியில் பரந்தாமன் :
எனக்குத் தொழில் கவிதை. தாமரை, தீபம், கண்ணதாசன் கவிதை, வானம்பாடி, ஞானரதம் ஆகிய சிறுபத்திரிகைகளில் நான் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், அப்பத்திரிகைகளில் படைப்புகளை வெறும் எழுத்துக்களாக மட்டுமே அச்சிட்டு வந்தார்கள். வடிவமைப்பைக் கோட்டை விட்டுவிட்டார்கள். சாதாரண வியாபார பத்திரிகைகளிடமே வடிவமைப்பில் அவைகள் தோற்றுப்போனது. இது எனக்கு அவமானமாக இருந்தது. எனக்குத் தெரிந்த சில சிறு பத்திரிகையாளர்களிடம் சொல்லிப் பார்த்தேன். யாருமே பொருட்படுத்தவில்லை. தரத்தோடு, வடிவமைப்போடு, ‘நானே பத்திரிகை செய்து காட்டுகிறேன்’ என்றுதான் ‘அஃக்’ சிறுபத்திரிகையைத் தொடங்கினேன்.
‘அஃக்’, பதிப்புக்கும் அச்சுக்கும் தேசிய விருதுகள் பெற்றது. அதற்குப் பிறகு வெளிவந்த சிறுபத்திரிகைகளும், இன்றைய சிறுபத்திரிகைகளும் இதுவரைக்குமே விருதுகள் எதுவும் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ் நெடுங்கணக்கின் மூலக்கூறுகளான உயிரும் மெய்யும், உயிர்மெய்யாகி ஆய்த எழுத்தை மையமாக வைத்து உச்சரிக்கும்போது ‘அஃக்’ என்ற பெயர்ச்சொல் உருவாகிறது. தமிழே ‘அஃக்’ பத்திரிகையின் பெயராக ஆகியிருக்கிறது. ‘அஃக்’கை முதலில் வெளியார் அச்சகங்களில் அச்சிடப் போனேன். கல்யாணப் பத்திரிகைகளை இரவு பகலாக அச்சிட்டுக்கொண்டு, ‘அஃக்’ பத்திரிகையை அச்சிட்டுத் தர காலதாமதம் செய்தார்கள். சரியான தேதிக்கு ‘அஃக்’கைக் கொண்டுவர முடியவில்லை. எனவே, சரியான தேதிக்கு ‘அஃக்’ பத்திரிகையைக் கொண்டு வர ‘பிருந்தாவனம் பிரிண்டர்ஸ்’ என்ற பெயரில் என் வீட்டிலேயே ஓர் அச்சகத்தை ‘அஃக்’குக்காகவே நிறுவினேன். பஞ்சாலையில் இரும்பு ராட்டை இழுத்து வேலை செய்த என் அம்மா தான் வட்டிக்கு வாங்கிய பணத்தை, அச்சகம் வைக்கவும் ‘அஃக்’ பத்திரிகையை நடத்த ‘பிராவிடண்ட் ஃபண்டு’ பணத்தையும் தந்தார்கள். ‘அஃக்’குக்காகத்தான் ‘பிருந்தாவனம் பிரிண்டர்ஸ்’. கல்யாணப் பத்திரிகையும் பில் புக்கும் நோட்டீசும் அடித்து, வியாபாரம் செய்ய அல்ல. ஆள்வைத்துக் கூலி கொடுக்க முடியாததால் நானே அச்சுக் கோர்க்கக் கற்றுக்கொண்டேன். என் மனைவி சத்திய பாமாவுக்கும் கற்றுக் கொடுத்தேன். கையால் அச்சுக்கோர்த்து, காலால் ட்ரெடிலை மிதித்து ‘அஃக்’ பத்திரிகையையும், ‘கூட்டுப் புழுக்கள்’, ‘பால் வீதி’, ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ ஆகிய புத்தகங்களையும் அச்சிட்டேன். தொடர்ந்து நடத்த பணம் இல்லாததால் ‘அஃக்’ பத்திரிகையை நிறுத்திவிட்டேன். அச்சகத்தை விற்றுவிட்டேன்.
கொஞ்சமும் மனம் தளர்ந்து போகாமல் பிடிவாதமாக ‘அஃக்’ பத்திரிகையை அச்சிட்ட சரித்திரம், புதிய தலைமுறை வாசகர்களுக்கும் தெரியவேண்டும். பசி, பட்டினி, தீராத தாகம், பொருள் இழப்புகளோடு இரவு பகலாகத் தூக்கமின்றி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, என்னால் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் மட்டுமே அச்சிட முடிந்தது. ஆனால், அந்தப் பக்கத்தை அச்சிட அக்கறை காட்டிய வைராக்கியத்தைச் சொல்லத்தான் வேண்டும்.
‘அஃக்’ பதிவு செய்யப்பட்ட சிறுபத்திரிகையாக, மாத இதழாக மலர்ந்தது. தரமான எழுத்துக்களை வியாபாரப் பத்திரிகைகள் போட மறுத்த காலத்தில்தான், எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுத ‘அஃக்’ இடம் கொடுத்தது. வித்தியாசமான எழுத்துக்களுக்கு வாய்ப்பளித்து கௌரவித்தது. எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் வாசகர்களையும் கவர்ந்து இழுக்கிற காந்தசக்தி ஒரு பத்திரிகையின் எழுத்தின் தரத்திலும் வடிவமைப்பின் நேர்த்தியிலும்தான் இருக்கிறது. அட்டை ஓவியம், வடிவமைப்பு, எழுத்து என்று சிறுபத்திரிகையின் சகல அம்சங்களிலும் ஒரு தரமும் தகுதியும் தனித்தன்மையும் இருக்கவேண்டும். இந்த சிறப்புகள் அனைத்தும் ‘அஃக்’இல் இருந்ததால்தான் இன்றும் வாசகர்களால், எழுத்தாளர்களால், ஓவியர்களால் அது பேசப்படுகிறது. சுந்தர ராமசாமியை அவருடைய மௌனத்திற்குப் பின் மீண்டும் எழுத உற்சாகப்படுத்தியது ‘அஃக்’ பத்திரிகைதான். இதை ‘அஃக்’குக்கு எழுதிய கடிதத்தில் அவரே சொல்லியிருக்கிறார். அதைப்போலவே, ‘நான் ‘அஃக்’இல் எழுத விரும்புகிறேன்’ என்று கடிதம் எழுதி தெரிவித்துவிட்டுத்தான் அரூப் சீவராம், தன்னிச்சையாக ‘அஃக்’இல் எழுத வந்தார். அரூப் சீவராமின் ‘கண்ணாடியுள்ளிருந்து’ கவிதைகள் முப்பத்தெட்டை தனியரு சிறப்பிதழாகவே ‘அஃக்’ வெளியிட்டதன் மூலம், அரூப்சீவராம் இலக்கிய உலகுக்குப் பரவலாகத் தெரிய வந்தார். ‘அஃக்’கைப் பிடிக்காதவர்களும்கூட ‘அஃக்’இல் எழுத விரும்பினார்கள். அந்த அளவுக்கு கலை இலக்கியத் தரத்தோடும் வடிவமைப்போடும் எழுத்தாளர்களைக் காந்த சக்தியாய் கவர்ந்து இழுத்தது ‘அஃக்’. தாமாகவே முன்வந்து இயல்பாக எழுதுகிற உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரக்கூடியதாக, ‘அஃக்’, கலை இலக்கியத் தரமும் வடிவமைப்பும் வித்தியாசமான கலைப்பார்வையும் கொண்டு முதல் இடத்தைக் குறிவைத்து பயணித்தது. எனக்கு முன்பின் பழக்கமில்லாத நல்ல எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் நேரிலும் கடிதம் மூலமும் அறிமுகம் செய்து வைத்தார்கள் வெங்கட் சாமிநாதனும், ‘கூத்துப்பட்டறை’ ந. முத்துசாமியும். இவ்வாறுதான் இன்னும் சில குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களும் ‘அஃக்’இல் எழுதினார்கள்.
அலியான்ஸ் பிரான்சைஸில், முக்கியமான இலக்கியவாதிகளும், ஓவியர்களும், கலைஞர்களும் கூடியிருந்த கூட்டத்தில், ‘‘பரந்தாமன் மாதிரி கலாபூர்வமாக பத்திரிகை நடத்த மற்றவர்களால் முடியாது’’ என்று ஆத்மாநாம் பகிரங்கமாகச் சொன்னார். அப்போது ‘கசடதபற’ பொறுப்பாளர்களும் அங்கே இருந்தனர். கலை இலக்கிய வரலாற்றைப் புனர்ஜென்மம் எடுத்துவந்து புனருத்தாரணம் செய்யப்போகிற ‘அஃக்’ நிரந்தரத்தின் அமிர்தம். கூர்ந்த பார்வையும், மறுபரிசீலனையும் கலை இலக்கியத்தின் ஆரோக்கியத்துக்கான ஜீவ தாதுக்கள். புதுமையையும் படைப்பையும் இலட்சியமாக, அளவுகோலாக, தொலைநோக்காக, தூரத்துப் பார்வையாக வைத்துக் கொண்டு யுக சந்தியின் விளிம்பில் நிற்பவனுக்கு கால மாற்றங்கள், கலை இலக்கியப் போக்குகள் தடையாக இருக்க முடியாது. அவன் நேற்றிலிருந்து இன்றைக்கும் இன்றிலிருந்து நாளைக்கும் ஊடுருவிச் சென்றுவிடுவான். அப்படியே ‘அஃக்’ பத்திரிகை இதழ்களை ஃபோட்டோ காப்பி எடுத்து அச்சிட்டுத் தொகுத்துக் கொடுக்கவே நான் விரும்பினேன். ஆனால் என்னிடம் பணவசதி இல்லாததால் அப்படித் தொகுத்துத்தர முடியவில்லை. ஒரு புத்தக வடிவத்துக்குள் பத்திரிகையின் வடிவமைப்பைப் பறிகொடுக்க நேர்ந்துவிட்டது. புத்தகச் சந்தையின் வியாபார நடைமுறைகள் தடைப்படுத்திவிட்டன. அன்று தொடங்கிய அந்த யாகத்தின் தீ நாக்குகள் சடசடவென்ற சப்தத்தோடு இன்றும் எனக்குள் பொறி பறக்க, அதே கதியில் எரிந்து கொண்டிருக்கின்றன. எனக்குள் அணையாமல் எரிகின்ற அந்த நீறுபூக்காத நெருப்பின் ஜுவாலைகள் தகிப்பதை இந்தப் புத்தகத்தைப் புரட்டும்போது நீங்களும் உணர்வீர்கள்.
ஒரு சாதாரண ‘ட்ரெடில்’ மிஷின் மூலமே தேசிய விருதுகள் பெற முடிந்தது; என்றால், உலகத்தின் வேகத்துக்கும் தேவைக்கும் ஏற்றபடி எளிமைப்படுத்தப்பட்ட கணினியின் துணைகொண்டு, இந்த உலகையே விருதாகப் பெறமுடியும். இத்தனை வசதிகளும், வாய்ப்புகளும் இந்தக் கணினி யுகத்தில் இருந்தும்கூட, கலை இலக்கிய உலகம் தழுவிய ஒரு சிறுபத்திரிகையை, தமிழில் உலக சாதனையாக நாம் படைக்க முன்வராவிட்டால் வேறு எந்த யுகத்தில் முன்வரப் போகிறோம்?
(சந்தியா பதிப்பகம் வெளியீடாக வரவுள்ள, தேசிய விருதுபெற்ற கலை இலக்கிய சிற்றிதழான ‘அஃக்’ இதழ் தொகுப்புக்கு எழுதப்பட்ட தொகுப்புரை. சுருக்கப்பட்டது)
***
தீராநதி : இப்போது புத்தகம் வெளியிடுவது மிக எளிய செயலாகி-விட்டது. உங்கள் முதல் கதைத் தொகுப்பான `கலைக்க முடியாத ஒப்பனைகள்’ எப்படி வெளிவந்தது? கணினி இல்லாத அந்தக் காலத்தில் இந்திய அளவிலான சிறந்த நூல் தயாரிப்பிற்கான பரிசு அந்த நூலுக்குக் கிடைத்ததே?
வண்ணதாசன் : அப்போது முன்னூற்றுச் சொச்சம் ரூபாதான் சம்பளம். கையில் பெரிய சேமிப்பு எல்லாம் கிடையாது. ஆனாலும் தொகுப்புப் போட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அஃக் பரந்தாமனிடம் ஒப்படைத்தாயிற்று. அவருடைய கஷ்டம், என்னுடைய சிரமம் எல்லாவற்றையும் மீறி புத்தகம் அருமையாகத் தயாராயிற்று. என் சிநேகிதன் ஆர்.பாலுதான் கடைசித் தவணைக்குப் பணம் கொடுத்துக் காப்பாற்றினான். நானும் கோபாலும்தான் சேலம் போய் எடுத்துக்கிட்டு வந்தோம்.
ஒரு ட்ரெடில் அச்சகத்தை வைத்துக்கொண்டு பரந்தாமனால் மட்டும்தான் இவ்வளவு அழகாக அச்சடிக்க முடியும். புத்தகத்துக்கு இரண்டாம் தேசிய விருது கிடைத்ததுதான் எல்லோருக்கும் தெரியும். `கலைக்க முடியாத ஒப்பனைகள்’ நூலுக்காகப் பரந்தாமன் அச்சடித்திருந்த லெட்டர்பேட், தொடர்பு அஞ்சலட்டைகளைப் பார்த்தால் அதற்கு முதற்பரிசே கொடுக்கத் தோன்றும். பரந்தாமன்தான் டில்லி போனார். அவர்தான் விருது வாங்கி வந்தார். அவர்தானே வாங்கவும் வேண்டும்
வண்ணதாசன் : அப்போது முன்னூற்றுச் சொச்சம் ரூபாதான் சம்பளம். கையில் பெரிய சேமிப்பு எல்லாம் கிடையாது. ஆனாலும் தொகுப்புப் போட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அஃக் பரந்தாமனிடம் ஒப்படைத்தாயிற்று. அவருடைய கஷ்டம், என்னுடைய சிரமம் எல்லாவற்றையும் மீறி புத்தகம் அருமையாகத் தயாராயிற்று. என் சிநேகிதன் ஆர்.பாலுதான் கடைசித் தவணைக்குப் பணம் கொடுத்துக் காப்பாற்றினான். நானும் கோபாலும்தான் சேலம் போய் எடுத்துக்கிட்டு வந்தோம்.
ஒரு ட்ரெடில் அச்சகத்தை வைத்துக்கொண்டு பரந்தாமனால் மட்டும்தான் இவ்வளவு அழகாக அச்சடிக்க முடியும். புத்தகத்துக்கு இரண்டாம் தேசிய விருது கிடைத்ததுதான் எல்லோருக்கும் தெரியும். `கலைக்க முடியாத ஒப்பனைகள்’ நூலுக்காகப் பரந்தாமன் அச்சடித்திருந்த லெட்டர்பேட், தொடர்பு அஞ்சலட்டைகளைப் பார்த்தால் அதற்கு முதற்பரிசே கொடுக்கத் தோன்றும். பரந்தாமன்தான் டில்லி போனார். அவர்தான் விருது வாங்கி வந்தார். அவர்தானே வாங்கவும் வேண்டும்
திருவல்லிக்கேணியின் நெரிசலான ஒரு தெருவில்
அஃக் பரந்தாமன் குடும்பத்துடன் வசித்துவந்தார். குங்குமத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த
‘நான்’ தொடருக்காக ஆசிரியர் கே.என்.சிவராமன், அஃக் பரந்தாமன் பற்றி எழுதுங்கள் என சொல்லியிருந்தார்.
குங்குமம் ஆசிரியர் குழுவில் பரந்தாமன் குறித்து சொல்லி அனுமதி வாங்கினேன்.
அஃக் பரந்தாமன் சென்னையில் இருக்கிறார்;ஆனால்
அவர் முகவரி தெரியாது விசாரித்தவர்களிடமிருந்து பதில் வந்துகொண்டிருந்தது. அப்போது
சந்தியா பதிப்பகம், அஃக் தொகுப்புகளை நூலாக்கியிருந்தது. அவர்களிடம் கேட்டு அவருடைய
வீட்டின் முகவரியைப் பெற்றேன். ‘நான்’ தொடருக்காக இலக்கியத்தில் இயங்கிய பலரைத் தேடிச்
சென்றதை சிறப்பான அனுபவமாகக் கருதுகிறேன். அதில் மறக்க முடியாத அனுபவம் அஃக் பரந்தாமனுடனானது.
திருவல்லிக்கேணியின் நெரிசலான ஒரு தெருவில் அஃக் பரந்தாமன் குடும்பத்துடன் வசித்துவந்தார்.
அவர் வசித்த வீடு என் பால்ய காலத்தை நினைவுபடுத்தியது. எனக்குப் பிடித்திருந்தது.
என்னை வரவேற்றவர் பரந்தாமனின் மனைவி. அவர்
பெயர் சத்யா . ஒல்லியான அவருடைய உருவமும் சிநேகமான அணுகுமுறையும் நினைவில் இருக்கின்றன.
முதல் தளத்தில் இருந்த அவருடைய வீட்டின் நுழைவாயிலுக்கு அருகே இருந்த அறையில் பரந்தாமனின்
அறை இருந்தது. ஒரு மரப்பெட்டியின் அருகே ஜன்னலிலிருந்து வந்துகொண்டிருந்த வெளிச்சத்தை
பார்த்து அமர்ந்திருந்த பரந்தாமனின் அருகே போய் அமர்ந்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
பேட்டி எடுக்குமளவுக்கு என்ன இருக்கிறது…அதெல்லாம் வேண்டாம் என்றுதான் மறுத்தார். நான்
அவரை ஒப்புக்கொள்ள வைப்பதில் தீவிரமாக இருந்தேன். முதலில் என்னைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்
என சொன்னார்.
அவருக்கு அப்போது பார்வை மங்கியிருந்தது. தன்
அருகே இருந்த பெட்டியிலிருந்து சில கையெழுத்து பத்திரிகைகளை என்னிடம் காட்டினார்.
‘அஃக்’ இதழ் தொடங்கப்படும் முன்பு அவர் முயற்சித்த கையெழுத்து இதழ்கள் அவை. வசீகரமான
கையெழுத்தில் தாளின் விளிம்புகளில் விதவிதமான வடிவங்களுடன் இருந்த அவ்விதழ்கள். அஃக்
பரந்தாமன், இதழ் வடிவமைப்புக்காக தேசிய விருது பெற்றவர். தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்
இலக்கிய இதழ் அஃக் என்றும் பரந்தாமன் சொன்னார். நிறைய இலக்கிய விஷயங்களை, சர்ச்சைகளை,
மோதல்களை பேசினார். நடுவே அவருடைய மனைவி எங்களுக்கு தேநீர் அளித்தார். மூன்று மணி நேரத்துக்கும்
மேலாக அவர் பேசினார். சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர், தன்னுடைய சொத்துக்களை விற்று
அச்சுக்கூடத்தை வாங்கியது, அஃக் இதழ்களை பொருளாதார சிரமங்களைக் கடந்து கொண்டுவந்தது,
ஒரு கட்டத்தில் அதில் அனைத்தையும் இழந்து சென்னை வந்து சேர்ந்தது வரை அனைத்தையும் சொன்னார்.
இருட்டத் தொடங்கியது நான் கிளம்ப வேண்டும் என சொன்னேன்.
சொல்லிக் கிளம்புவதற்காக சமையலறைக்குச் சென்றேன்.
பரந்தாமனின் மனைவி சத்யாவிடமும் சொல்ல ஏராளமான கதைகள் இருந்தன. வறுமையின் கதைகள் அவை;
லட்சியக்காரனின் குடும்பத்தை பீடித்திருக்கும் தொடர் துன்பங்களின் கதைகள் அவை. தங்களுடைய
ஒரே மகள்தான் தங்கள் குடும்பத்தின் தற்போதைய ஆதாரம் என்றும் மகன் சினிமாவில் உதவி இயக்குநராக
இருக்கிறார் என்று சொன்னார். அவரை நான் நெருக்கமாக உணர்ந்தேன். அவரும் என்னை நெருக்கமாகவே
உணர்ந்திருப்பார் போலும். பத்து நிமிடங்களில் எல்லா கதைகளையும் சொல்லிவிட வேண்டும்
எத்தனிப்போடு பேசினார். அடுத்த தெருவில் உள்ள பூனைகளுக்கு தினமும் உணவிடுவது வரை சொன்னார்.
நான் அடுத்த வாரம் வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
அஃக் பரந்தாமன் கொடுத்த கையெழுத்து பிரதிகளை
பிரதியெடுத்துக்கொண்டு, அதை திருப்பித் தரவும் அவர் பேசியவற்றை இதழில் எழுத ஒப்புதல்
பெறும்பொருட்டும் அவர் வீட்டுக்கு மீண்டும் சென்றேன். இந்த முறை காலை நேரத்தில் சென்றேன்.
அப்போது என் ஊரிலிருந்து கொடுத்தனுப்பியிருந்த நிலக்கடலையையும் உடன் எடுத்துக்கொண்டு
போனேன். பரந்தாமனுடன் எனக்கிருந்தது தொழில் முறையிலான அணுகுமுறை. ஆனால், அவர் மனைவியுடன்
என் தாயைப் போன்றதொரு நெருக்கத்தை உணர்ந்தேன்.
அதன் பிறகு, அஃக் பரந்தாமனின் பேட்டி வெளியானது.
மீண்டும் ஒரு முறை அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவருடைய மகள் அங்கே
பார்த்த நினைவு. பேட்டி வெளியான சில மாதங்கள் கழித்து அதைப் படித்த ஒருவர் பரந்தாமனின்
கண்சிகிச்சைக்காக உதவுவதாகச் சொல்லி இதழுக்கு எழுதியிருந்தார். அத்தோடு பரந்தாமன்
– சத்யாவுடனான தொடர்ந்து முடிந்தது. சத்யா நினைவில் வந்துபோவார். ரெண்டு வருடங்களுக்கு
முன் சத்யா இறந்துவிட்டதாகவும் பரந்தாமன் ஒரு இல்லத்தில் இருப்பதாகவும் முகநூலில் படித்தேன்.
வாழ்ந்து கெட்டவர்களின் கதைகளை எழுதுபவர்களுக்கு
பொதுவாக இந்தச் சிக்கல் இருக்குமா என்று தெரியவில்லை… அவர்களுடைய துன்பங்களை, வறுமையை,
தோல்வியை நமக்குள்ளே தேக்கிக்கொள்கிற நிலை. சில சமயம் சிக்கலான மனப்பிரச்னைகளைக்கூட
இது ஏற்படுத்துவதுண்டு.
பரந்தாமன், தன்னை ஒரு கவிஞராக, ஓவியராக, பத்திரிகையாளராக,
சினிமாக்காரராக சொல்லிக்கொண்டார். தான் ஒரு உலக சினிமாவை இயக்க வேண்டும் என விரும்பினார்.
உலகத் தரத்தோடு ‘அஃக்’ இதழை கொண்டு வர வேண்டும் என சொன்னார். சத்யாவுக்கு தன்னுடைய
இறுதிகாலமாவது வறுமையில்லாமல் இருந்திருக்குமா? அவர்களுடைய மகள் என்ன ஆனார்? உதவி இயக்குநராக
இருந்த அவர்களுடைய மகனின் நிலை என்ன? கனவுகளை சுமந்தபடியே வாழ்ந்த பரந்தாமனின் இறுதி
கணத்தில் என்ன நினைத்திருப்பார்? என் மனம் கணத்துக்கிடக்கிறது…
‘சிறகிலிருந்து
பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது...’
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது...’
& பிரமிளின் புகழ்பெற்ற இந்தக் கவிதையை
வெளியிட்டது ‘அஃக்’ இதழ். எட்டு
ஆண்டுகள் தமிழ் இலக்கியத்துக்கு அஃக் இதழ் ஆற்றிய கடமை அளப்பரியது.
ஆண்டுகள் தமிழ் இலக்கியத்துக்கு அஃக் இதழ் ஆற்றிய கடமை அளப்பரியது.
அதை நடத்திய பரந்த்தாமன் அச்சுக்கும் பதிப்புக்குமாகச்
சேர்த்து மூன்று
முறை தேசிய விருது பெற்றவர். சொந்த வீட்டை விற்று இலக்-கியச் சேவை செய்த
பரந்த்தாமன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஒரு முட்டுச் சந்தில்
ஒடுங்கிப்போய்க் கிடக்கிறார்.
முறை தேசிய விருது பெற்றவர். சொந்த வீட்டை விற்று இலக்-கியச் சேவை செய்த
பரந்த்தாமன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஒரு முட்டுச் சந்தில்
ஒடுங்கிப்போய்க் கிடக்கிறார்.
‘‘இலக்கியம், சினிமா, ஃபுட்பால்... இதெல்லாம்-தான்
இந்தப் பரந்த்தாமன்.
இன்றைக்கும் டி.வி&யில் ஃபுட்பால் ஆட்டத்தைப் பார்த்தா என் கால்கள்
தன்னாலே பரபரக்குது. மனசும் உடம்பும் ஒத்து-ழைச்சா களத்தில் இறங்கி
ஆடலாம் போல அப்படி ஒரு வெறி! சேலம்,
இன்றைக்கும் டி.வி&யில் ஃபுட்பால் ஆட்டத்தைப் பார்த்தா என் கால்கள்
தன்னாலே பரபரக்குது. மனசும் உடம்பும் ஒத்து-ழைச்சா களத்தில் இறங்கி
ஆடலாம் போல அப்படி ஒரு வெறி! சேலம்,
சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே சங்கு, அணில், டமாரம் எனச்
சிற்றிதழ்கள் வரும். அதை ஓட்டைக்காலணா (அக்கால நாணயம்) கொடுத்து வாங்கிப்
படிப்பேன். எழுத்தாளன் ஆகணும்னா நிறையப் படிக்கணும்; சினிமா டைரக்டர்
ஆகணும்னா நிறைய சினிமா பார்க்கணும். அதனால் படிப்போடு, இந்த இரண்டையும்
தொடர்ந்து செய்தேன்.
அப்போ சேலத்தில் ‘இம்பீரியல்’னு ஒரு தியேட்டர்
இருந்தது. மரக்கடை
கொட்டாய்னு சொல்வோம். அங்கே ஒரு நாள் விட்டு ஒரு நாள் உலகத் தரத்திலான
ஆங்கில, இந்தி சினிமாக்கள் போடுவாங்க. என் பள்ளிப்பருவத்தில் ஒரு
சினிமாவைக்கூட நான் தவறவிட்டதில்லை. சத்யஜித்ரே, ஆன்டனி குயின்,
ஹிட்ச்காக் எல்லாம் எனக்கு அறிமுகமானது அங்குதான். அப்போ ஃபிலிம்ஃபேர்
பத்திரிகையில் ‘ரே’யின் அட்டைப் படத்தைப் போட்டு ஒரு இதழ் வெளியிட்டாங்க.
நண்பனிடமிருந்து அந்த இதழை வாங்கி ரேயின் படத்தைக் கிழித்துப்
பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். நான் படித்த, சுயமாக எழுதிய கவிதைகளை
அழகாக லே&அவுட் பண்ணி, அதற்கு உயிர் கொடுத்து, வீட்டுச் சுவர்களிலும்,
கதவுகளிலும் ஒட்டி வைப்பேன்’’ என்று அந்நாளைய நினைவு-களில் தோய்ந்து
பேசுகிறார் பரந்த்தாமன்.
கொட்டாய்னு சொல்வோம். அங்கே ஒரு நாள் விட்டு ஒரு நாள் உலகத் தரத்திலான
ஆங்கில, இந்தி சினிமாக்கள் போடுவாங்க. என் பள்ளிப்பருவத்தில் ஒரு
சினிமாவைக்கூட நான் தவறவிட்டதில்லை. சத்யஜித்ரே, ஆன்டனி குயின்,
ஹிட்ச்காக் எல்லாம் எனக்கு அறிமுகமானது அங்குதான். அப்போ ஃபிலிம்ஃபேர்
பத்திரிகையில் ‘ரே’யின் அட்டைப் படத்தைப் போட்டு ஒரு இதழ் வெளியிட்டாங்க.
நண்பனிடமிருந்து அந்த இதழை வாங்கி ரேயின் படத்தைக் கிழித்துப்
பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். நான் படித்த, சுயமாக எழுதிய கவிதைகளை
அழகாக லே&அவுட் பண்ணி, அதற்கு உயிர் கொடுத்து, வீட்டுச் சுவர்களிலும்,
கதவுகளிலும் ஒட்டி வைப்பேன்’’ என்று அந்நாளைய நினைவு-களில் தோய்ந்து
பேசுகிறார் பரந்த்தாமன்.
‘‘நான் பிறந்த ஆறு மாசத்திலேயே அப்பா இறந்துட்டார்.
அம்மாதான் என்னை
வளர்த்-தாங்க. நான் எது கேட்டாலும் மறுக்காம வாங்கித் தருவாங்க. பிள்ளை
இப்படி சினிமா, இலக்கி-யம்னு சுத்துறானே, இவன் உருப்படுவானாங்கிற கவலை
அம்மாவுக்கு இருந்தது. ஆனாலும், என் மீது கோபப்பட்டது இல்லை. அன்பே
உருவான அம்மாவையும் என்னோட செயல் ஒண்ணு கோபப்படுத்திடுச்சு. ஃபுட்பால்
ஆடப் போகும்-போது ருக்மணினு ஒரு பொண்ணைச் சந்திச்சேன். ரெண்டு பேரும்
பழகினோம்; காதலிச்-சோம். கோயில் திருவிழாக்களில் டான்ஸ் ஆடுற பொண்ணு அது.
ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா, அந்தக் காலத்தில் பேன்ட் போடுறவன் தப்பான-வன்;
கிராப்பு வெச்சுக்கிறவன் மோசமான-வன்; மீசை வெச்சுக்கிறவன் அயோக்கியன்.
அது மாதிரி, டான்ஸ் ஆடுறவங்களும் கெட்டவங்க என்கிற பார்வைதான் பரவலா
இருந்தது. அம்மா கோபத்தில் என்னைப் போட்டு அடிச்சது அந்த
விஷயத்துக்காகத்தான். என் காதல் முறிஞ்சு போச்சு! வேதனை பொறுக்க
முடியாமல் நான் சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். ருக்மணி விஷம்
குடிச்சுத் தற்கொலை பண்ணிக்கிட்டா. இன்னிக்கு யோசிச்சுப் பார்க்கிறப்போ,
பருவ வயசில் வரும் இயல்பான சில உணர்ச்சிகளை அன்னிக்கு எனக்குப் பக்குவமா
கையாளத் தெரியலைனு தோணுது. இலக்கணமே தெரியாமல் கதை, கவிதை எழுதத்
துவங்கியவன்தானே நான்! வாழ்க்கையின் சில கணக்குகள் தவறிப்போனால், காலம்
நம்மை ஃபுட்பால் மாதிரி பந்தாடிடும். அப்படிப் பந்தாடப்பட்டவன் நான்!’’
என்கிறார் பரந்த்தாமன்.
வளர்த்-தாங்க. நான் எது கேட்டாலும் மறுக்காம வாங்கித் தருவாங்க. பிள்ளை
இப்படி சினிமா, இலக்கி-யம்னு சுத்துறானே, இவன் உருப்படுவானாங்கிற கவலை
அம்மாவுக்கு இருந்தது. ஆனாலும், என் மீது கோபப்பட்டது இல்லை. அன்பே
உருவான அம்மாவையும் என்னோட செயல் ஒண்ணு கோபப்படுத்திடுச்சு. ஃபுட்பால்
ஆடப் போகும்-போது ருக்மணினு ஒரு பொண்ணைச் சந்திச்சேன். ரெண்டு பேரும்
பழகினோம்; காதலிச்-சோம். கோயில் திருவிழாக்களில் டான்ஸ் ஆடுற பொண்ணு அது.
ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா, அந்தக் காலத்தில் பேன்ட் போடுறவன் தப்பான-வன்;
கிராப்பு வெச்சுக்கிறவன் மோசமான-வன்; மீசை வெச்சுக்கிறவன் அயோக்கியன்.
அது மாதிரி, டான்ஸ் ஆடுறவங்களும் கெட்டவங்க என்கிற பார்வைதான் பரவலா
இருந்தது. அம்மா கோபத்தில் என்னைப் போட்டு அடிச்சது அந்த
விஷயத்துக்காகத்தான். என் காதல் முறிஞ்சு போச்சு! வேதனை பொறுக்க
முடியாமல் நான் சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். ருக்மணி விஷம்
குடிச்சுத் தற்கொலை பண்ணிக்கிட்டா. இன்னிக்கு யோசிச்சுப் பார்க்கிறப்போ,
பருவ வயசில் வரும் இயல்பான சில உணர்ச்சிகளை அன்னிக்கு எனக்குப் பக்குவமா
கையாளத் தெரியலைனு தோணுது. இலக்கணமே தெரியாமல் கதை, கவிதை எழுதத்
துவங்கியவன்தானே நான்! வாழ்க்கையின் சில கணக்குகள் தவறிப்போனால், காலம்
நம்மை ஃபுட்பால் மாதிரி பந்தாடிடும். அப்படிப் பந்தாடப்பட்டவன் நான்!’’
என்கிறார் பரந்த்தாமன்.
‘‘ஒரு நாள், சேலத்துக்கு கு.அழகிரிசாமி வந்தி-ருந்தார்.
அவரைப் பார்க்கப்
போயிருந்தேன். ‘என் கதைகள் எல்லாம் படிச்சிருக்கியா?’னு கேட்டார்.
‘ஒண்ணுகூடப் படிச்சதில்லை’னு சொன்னேன். சிரிச்சுட்டு, ‘நீ இப்படித்
தைரியமா உண்மையைச் சொன்னது பிடிச்சிருக்கு. எங்கூட சென்னைக்கு
வர்றியா?’னு கேட்டார். நான் சரின்-னேன். என் வீட்டுக்கு அவரை அழைச்-
சுட்டுப் போனேன். கதவு, சுவரெல்லாம் நான் ஒட்டி வெச்சிருந்த கதை, கவிதை,
சினிமா தொடர்பான விஷயங்கள் எல்லாவற்றையும் பார்த்-துட்டு, ‘என் கூட வா!
உன்னை டைரக்டர் மல்லியம் ராஜகோபாலிடம் சேர்த்துவிடுகிறேன்’ என்றார்.
பின்னர் நான் சென்னைக்கு வந்து, சினிமா-வோடு நெருங்கிய தொடர்பு வெச்சி-
ருந்தாலும், என்னோட ஆசை எல்லாம் நல்ல லே&அவுட்டில் நாம் விரும்புகிற
எழுத்துக்களைத் தாங்கி ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்பதுதான்.
போயிருந்தேன். ‘என் கதைகள் எல்லாம் படிச்சிருக்கியா?’னு கேட்டார்.
‘ஒண்ணுகூடப் படிச்சதில்லை’னு சொன்னேன். சிரிச்சுட்டு, ‘நீ இப்படித்
தைரியமா உண்மையைச் சொன்னது பிடிச்சிருக்கு. எங்கூட சென்னைக்கு
வர்றியா?’னு கேட்டார். நான் சரின்-னேன். என் வீட்டுக்கு அவரை அழைச்-
சுட்டுப் போனேன். கதவு, சுவரெல்லாம் நான் ஒட்டி வெச்சிருந்த கதை, கவிதை,
சினிமா தொடர்பான விஷயங்கள் எல்லாவற்றையும் பார்த்-துட்டு, ‘என் கூட வா!
உன்னை டைரக்டர் மல்லியம் ராஜகோபாலிடம் சேர்த்துவிடுகிறேன்’ என்றார்.
பின்னர் நான் சென்னைக்கு வந்து, சினிமா-வோடு நெருங்கிய தொடர்பு வெச்சி-
ருந்தாலும், என்னோட ஆசை எல்லாம் நல்ல லே&அவுட்டில் நாம் விரும்புகிற
எழுத்துக்களைத் தாங்கி ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்பதுதான்.
அம்மாவிடமும் நண்பர்களிடமும் பணம் வாங்கி
‘அஃக்’ பத்திரிகை துவங்கினேன்.
எதிர்பாராத இடங்-களில் இருந்தெல்லாம் அந்தப் பத்திரிகைக்குப் பாராட்டு
கிடைச்சுது. சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன், வண்ணதாசன், பிரமிள், நகுலன்
எனத் தொண்-ணூறுக்கும் மேற்பட்ட தரமான எழுத்-தாளர்களுக்கு அஃக் இதழ் அடிப்-
படையானதொரு தளமாக இருந்தது. பத்திரிகையில் லே&அவுட்டுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்து, அதில் அக்கறையும் கவனமும் செலுத்திய-வர்கள்
எஸ்.எஸ்.வாசனும், சாவியும்-தான். சிறு பத்திரிகைகளில் லே&அவுட்-டுக்கு
முக்கியத்துவம் கொடுக்க மாட்-டார்கள். படைப்பின் தரம் மட்டும்-தான்
முக்கியம். ஆனால், அஃக் இதழ், தரத்தோடு லே&அவுட் டிலும் சிறப்பான
முறையில் வெளி-யாயிற்று. ஆனால், இதழைக் கொண்டு வருவதில் ஏகப்பட்ட
பிரச்னைகள். அச்சகத்தில் கொண்டுபோய்க் கொடுத்தால். நேரத்துக்கு
அச்சடித்துக் கொடுக்க -மாட்டார்கள். இதை அடிக்கிற நேரத்தில் திருமண
அழைப்பிதழோ, வாழ்த்து அட்டையோ, நோட்டீஸோ அடித்துக் கொடுத்தால் உடனடி-
யாகக் காசு பார்க்கலாமே! அதனால், இதைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, வேறு
வேலை-யின்றிச் சும்மா இருக்கும் நேரத்தில் அடித்துத் தருவார்கள்.
எனக்குக் கோபம் கோபமாக வரும். சில சமயம் இதனால் அடி-தடிகூட
ஆகியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, நாமே சொந்தமாக ஒரு
பிரின்ட்டிங் பிரஸ் துவங்குவது-தான் எனத் தீர்மானித்தேன்.
எதிர்பாராத இடங்-களில் இருந்தெல்லாம் அந்தப் பத்திரிகைக்குப் பாராட்டு
கிடைச்சுது. சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன், வண்ணதாசன், பிரமிள், நகுலன்
எனத் தொண்-ணூறுக்கும் மேற்பட்ட தரமான எழுத்-தாளர்களுக்கு அஃக் இதழ் அடிப்-
படையானதொரு தளமாக இருந்தது. பத்திரிகையில் லே&அவுட்டுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்து, அதில் அக்கறையும் கவனமும் செலுத்திய-வர்கள்
எஸ்.எஸ்.வாசனும், சாவியும்-தான். சிறு பத்திரிகைகளில் லே&அவுட்-டுக்கு
முக்கியத்துவம் கொடுக்க மாட்-டார்கள். படைப்பின் தரம் மட்டும்-தான்
முக்கியம். ஆனால், அஃக் இதழ், தரத்தோடு லே&அவுட் டிலும் சிறப்பான
முறையில் வெளி-யாயிற்று. ஆனால், இதழைக் கொண்டு வருவதில் ஏகப்பட்ட
பிரச்னைகள். அச்சகத்தில் கொண்டுபோய்க் கொடுத்தால். நேரத்துக்கு
அச்சடித்துக் கொடுக்க -மாட்டார்கள். இதை அடிக்கிற நேரத்தில் திருமண
அழைப்பிதழோ, வாழ்த்து அட்டையோ, நோட்டீஸோ அடித்துக் கொடுத்தால் உடனடி-
யாகக் காசு பார்க்கலாமே! அதனால், இதைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, வேறு
வேலை-யின்றிச் சும்மா இருக்கும் நேரத்தில் அடித்துத் தருவார்கள்.
எனக்குக் கோபம் கோபமாக வரும். சில சமயம் இதனால் அடி-தடிகூட
ஆகியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, நாமே சொந்தமாக ஒரு
பிரின்ட்டிங் பிரஸ் துவங்குவது-தான் எனத் தீர்மானித்தேன்.
காசு? மறுபடியும் அம்மா-தான்! தன் ஒரே மகனுக்கென்று
அம்மா கஷ்டப்பட்டு
ஆசை ஆசையாகக் கட்டின வீட்டை விற்றேன். அதில் வந்த காசை வைத்து
‘பிருந்தாவனம்’ பிரின்ட்-டர்ஸ் என்கிற பப்ளிகேஷனைத் துவங்கினேன்.
அதிலிருந்துதான் அஃக் பத்திரிகை கிட்டத்தட்ட எட்டு வருடம் தொடர்ந்து
வெளி--வந்தது. பெயர்தான் பிருந்தாவனம் என இருந்ததே தவிர, நாளுக்கு நாள்
அது பாலைவனமாகி தன் வனப்பு-களை எல்லாம் இழந்து, ஒரு நாள்
மடிந்துவிட்டது.
ஆசை ஆசையாகக் கட்டின வீட்டை விற்றேன். அதில் வந்த காசை வைத்து
‘பிருந்தாவனம்’ பிரின்ட்-டர்ஸ் என்கிற பப்ளிகேஷனைத் துவங்கினேன்.
அதிலிருந்துதான் அஃக் பத்திரிகை கிட்டத்தட்ட எட்டு வருடம் தொடர்ந்து
வெளி--வந்தது. பெயர்தான் பிருந்தாவனம் என இருந்ததே தவிர, நாளுக்கு நாள்
அது பாலைவனமாகி தன் வனப்பு-களை எல்லாம் இழந்து, ஒரு நாள்
மடிந்துவிட்டது.
வண்ணதாசனின் ‘கலைக்க-முடியாத ஒப்பனைகள்’ என்கிற
முதல் சிறுகதைத்
தொகுப்பையும் பிருந்தாவனம்தான் வெளி-யிட்டது. அப்போதே அது அச்சி-லும்
பதிப்பிலும் நேர்த்தி-யாகவும் கவர்ச்சிகர-மாகவும் இருந்ததென அனைவரும்
என்னைப் பாராட்டி-னார்கள். லே&அவுட், அச்சு, பதிப்பகம் என இந்திய அளவில்
எனக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. ஆனால், அதை வைத்து என்ன செய்ய-
முடியும்? ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல் அஃக் நின்று போனது.
தொகுப்பையும் பிருந்தாவனம்தான் வெளி-யிட்டது. அப்போதே அது அச்சி-லும்
பதிப்பிலும் நேர்த்தி-யாகவும் கவர்ச்சிகர-மாகவும் இருந்ததென அனைவரும்
என்னைப் பாராட்டி-னார்கள். லே&அவுட், அச்சு, பதிப்பகம் என இந்திய அளவில்
எனக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. ஆனால், அதை வைத்து என்ன செய்ய-
முடியும்? ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல் அஃக் நின்று போனது.
அம்மா எனக்காக வைத்திருந்தது இரண்டே இரண்டு
சொத்துக்கள். ஒன்று, வீடு;
மற்றொன்று வாழைத் தோட்டம். வீட்டை இலக்கியத்-துக்காக விற்றேன்; வாழைத்
தோட்டத்தை சினிமாவுக்காக விற்றேன். இப்பவும் என்னோடு இருப்பது இவள்
மட்டும்-தான்’’ என மனைவி சத்யபாமாவைக் கைகாட்டுகிறார்.
மற்றொன்று வாழைத் தோட்டம். வீட்டை இலக்கியத்-துக்காக விற்றேன்; வாழைத்
தோட்டத்தை சினிமாவுக்காக விற்றேன். இப்பவும் என்னோடு இருப்பது இவள்
மட்டும்-தான்’’ என மனைவி சத்யபாமாவைக் கைகாட்டுகிறார்.
பரந்த்தாமனுக்கு இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கும்
சரியான வேலை இல்லை,
குடும்பத்துக்கும் எவ்வித வருமானமும் இல்லை எனக் கடந்த பத்து
ஆண்டுகளுக்கும் மேலாகப் பரந்த்தாமனின் வாழ்க்கை தள்ளா-டிக்கொண்டு
இருக்கிறது. இலக்கிய சேவை-களுக்காக பரந்த்தாமன் வாங்கிய விருதுகள்
பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன.
குடும்பத்துக்கும் எவ்வித வருமானமும் இல்லை எனக் கடந்த பத்து
ஆண்டுகளுக்கும் மேலாகப் பரந்த்தாமனின் வாழ்க்கை தள்ளா-டிக்கொண்டு
இருக்கிறது. இலக்கிய சேவை-களுக்காக பரந்த்தாமன் வாங்கிய விருதுகள்
பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன.
அன்று நண்பனிடமிருந்து பெற்ற ஃபிலிம்-ஃபேர்
பத்திரிகை அட்டைப் பட
சத்யஜித் ரே, தலைக்கு மேலே சுவரில், ஃப்ரேம் செய்த சட்டத்துக்குள்
இருந்தபடி, மௌனமாகப் பரந்த்தாமனைப் பார்த்துக்கொண்டு இருக்-கிறார்.
சத்யஜித் ரே, தலைக்கு மேலே சுவரில், ஃப்ரேம் செய்த சட்டத்துக்குள்
இருந்தபடி, மௌனமாகப் பரந்த்தாமனைப் பார்த்துக்கொண்டு இருக்-கிறார்.
அன்று "அஃக் இதழை நடத்தியவர்… இன்று…
?
சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து,
அஃக் இதழை தொடங்கி கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி, அம்பை, ஜெயகாந்தன்
என சுமார் 100 எழுத்தாளர்களின் படைப்புகளை வெளிக் கொண்டு வந்தவர் 75 வயதான பரந்த்தாமன்.
தற்போது உடல் நலம் பாதித்து, மனப் பிறழ்வு
ஏற்பட்ட நிலையில் சென்னை காப்பகத்தில் யாருடைய ஆதரவுமின்றி, மருத்துவச் சிகிச்சைக்குக்
கூட போதிய நிதியின்றி, தன்னை மறந்த நிலையில் உள்ளார்.
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் நல்லாக் கவுண்டர்,
லட்சுமி தம்பதிக்கு 1940- இல் மகனாகப் பிறந்தவர் பரந்த்தாமன். இவர் சேலம் சிறுமலர்
பள்ளியில் உயர்நிலை வகுப்பு வரை பயின்றார். 3- ஆம் வகுப்பு படிக்கும் முதலே வானம்,
குறிஞ்சி ஆகிய கையெழுத்துப் பத்திரிகைகளை நடத்தியுள்ளார். ஓவியம் வரைவதிலும், கால்
பந்தாட்டத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
இவர் 4- ஆம் வகுப்பு படிக்கும்போது கல்கண்டு
ஆசிரியர் தமிழ்வாணன் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம் மூலம் பத்திரிகை, புத்தகத் துறை
மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பெரிய சூரமங்கலம் கிளை
நூலகத்தில் கட்டணம் செலுத்திப் புத்தகங்களைப் பெற்று படிக்கத் தொடங்கினார்.
1972- ஆம் ஆண்டு மே 1- ஆம் தேதி அஃக் இலக்கிய
இதழைத் தொடங்கினார் பரந்த்தாமன். அஃக் இதழ் தொடங்கியதுமே தர்மூ அரூப் சிவராம் அஃக்
இதழில் எழுதத் தொடங்கினார். எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் மூலம் பெரிய எழுத்தாளர்களின்
அறிமுகம் கிடைத்து, பல படைப்புகளை அஃக் இதழில் அச்சிட்டு பிரசுரம் செய்தார்.
மேலும், தனது தாய் லட்சுமி வட்டிக்கு
வாங்கிக் கொடுத்த பணத்தில் பிருந்தாவனம் அச்சகத்தைத் தொடங்கி, அஃக் இதழை அச்சிட்டு
வெளியிட்டார். அஃக் இதழில் வங்காளம், கன்னடம், மலையாளத்தில் வெளியான கலைத்திறனுடைய
திரைப்படங்கள் விமர்சிக்கப்பட்டன. “அம்பையின் பயங்கள்’ என்ற முதல் நவீன நாடகம் முதலில்
அஃக் இதழிலேயே வெளியானது.
கி.ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், இந்திரா பார்த்தசாரதி,
சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், நீல பத்மநாபன், லா.ச.ரா, ஜெயகாந்தன், அம்பை, நகுலன்,
சார்வாகன், வண்ணதாசன், ராசேந்திர சோழன், கலாப்ரியா,
ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன், சிந்துஜா, தேவதேவன், ஆதிமூலம், சாரங்கன், தேவதத்தன்,
நந்தலாலா என எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள், இளம் கவிஞர்கள், ஓவியர்கள் என நூற்றுக்கும்
மேற்பட்டவர்கள் அஃக் இதழில் பங்கேற்றுள்ளனர்.
1976- இல் வண்ணதாசனின் “கலைக்க முடியாத ஒப்பனைகள்’
சிறுகதைத் தொகுப்புக்கு அச்சுக்காகவும், வெளியீட்டுக்காவும் இரண்டு தேசிய விருதுகளும்,
அஃக் சிறு பத்திரிகை அச்சுக்காகவும், வெளியீட்டுக்காகவும் என இரண்டு தேசிய விருதுகள்
என மொத்தம் 4 விருதுகள் கிடைத்தன. இதில் வெளியீடு, அச்சு, தொகுப்புக்கு என மூன்று தேசிய
விருதுகள் பரந்த்தாமனுக்குக் கிடைத்தது.
வியத்நாம் போரின்போது வீராங்கனை ஒருவரைப் பற்றி
“தாமரை’யில் எழுதிய கவிதை வியத்நாம் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் கத்தியால்
செதுக்கிய பன்வர்கட் ஓவியங்கள் சேலம் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது இவரது பெருமைகளுக்கு
உதாரணம்.
சுமார் 8 ஆண்டுகளில் 22 இதழ்களே வெளியான
அஃக் இதழ் பாதியிலேயே நின்றது. பிறகு சினிமா துறையில் இயக்குநர் ஆகும் ஆசையில் தமிழ்
திரையுலகில் நுழைந்த பரந்த்தாமனுக்கு போதிய அங்கீகாரமும், வாய்ப்பும் கிடைக்காமல் போனது.
பல முன்னணி நடிகர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தபோதும் அவரின் சினிமா இயக்குநர்
ஆக வேண்டும் என்ற ஆசை நிறைவு பெறவில்லை.
முதுமை மற்றும் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில்,
அவரால் மீண்டு வர முடியாத சூழலில் தவித்து வந்தார். கடந்த இரு ஆண்டுகளாக மற்றவர்களை
அடையாளம் காட்டிய பரந்த்தாமன், தன்னை மறந்து மனப்பிறழ்வு ஏற்பட்டு, சென்னை மதுரவாயலில்
உள்ள காப்பகத்தில் தங்கி காலம் கழித்து வருகிறார். இவருக்கு நந்தலாலா என்ற மகனும்,
சுருதி என்ற மகளும் உள்ளனர். இதில் நந்தலாலா திரைப்படத் துறையில் உள்ளார். இவர்
2009-இல் “நரகம்’ என்ற குறும்படத் தயாரிப்புக்கு சர்வதேச விருது பெற்றுள்ளார். பரந்த்தாமனின்
மனைவி சத்தியபாமா 4 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.
இதுதொடர்பாக, சென்னையில் பணிபுரிந்து
வரும் பரந்த்தாமனின் மகள் சுருதி கூறியது:
“”எனது தந்தை பரந்த்தாமனுக்கு முதுமை, மனப்
பிறழ்வு இருந்தாலும், அவருக்கு நல்ல காப்பகமும், தொடர் மருத்துவச் சிகிச்சைக்கு போதிய
நிதியும் இருந்தால் அவரை குணமடையச் செய்து விடலாம். அவரை நல்ல காப்பகத்தில் வைத்து
பராமரித்து, மருத்துவச் சிகிச்சைகள் அளித்து, உடல் நலம் தேறச் செய்ய போதிய பணம் இல்லை.
அவர் உடல் தேறி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
No comments:
Post a Comment