Friday, August 17, 2018

திருலோக சீதாராம்

திருலோக சீதாராம்








திருலோக சீதாராம் (1. ஏப்ரல். 1917- 23 ஆகத்து 1973 ) என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர், சிறு பத்திரிகையாளர், இலக்கியக் கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என்னும் பன்முக ஆளுமை கொண்டவர். பாரதியை அவர்காலத்திலேயே நன்கு அறிந்தவர்களில் ஒருவர்.
பொருளடக்கம்
             1வாழ்க்கை
             2பத்திரிக்கைப் பணிகள்
             3எழுதிய நூல்கள்
o             3.1மொழி பெயர்புகள்
             4மேற்கோள்கள்
வாழ்க்கை[தொகு]
இவர் பெரம்பலூருக்கு அருகிலுள்ள தொண்டைமான்துறை என்ற ஊரில் திருவையாறு லோகநாத ஐயருக்கும் மீனாட்சி சுந்தரம்மாள் என்ற தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பெற்றோருக்கு 1917 ஏப்ரல் முதல் தேதியன்று பிறந்தார். மூன்று வயதிருக்கும்போதே தந்தையை இழந்து, மாமன் வீட்டில் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். இவருக்கு லலிதா என்ற தங்கையும் பஞ்சாபகேசன் என்ற தம்பியும் இருந்தனர். இவருக்கு 1936 இல் இவரது 19 ஆம் வயதில் 10 வயதான ராஜாமணியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மதுரம், வஸந்தா, இந்திரா என்ற மூன்று பெண் குழந்தைகளும் பசுபதி, சுப்பிரமணியன், முரளிதரன், ராமகிருஷ்ணன் என்ற நான்கு ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.
பத்திரிக்கைப் பணிகள்[தொகு]
இவருக்கு இளம் வயதிலேயே கவிதை எழுதுவதிலும், பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. இதனால், அவரது 18 வது வயதிலேயேஇந்திய வாலிபன்என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். பிறகு, விழுப்புரத்துக்கு அருகில் பரிக்கல் என்ற சிற்றூரில் இராம சடகோபன் என்பவர் நடத்தி வந்ததியாகிஎன்ற பத்திரிகையின் துணை ஆசிரியராகச் சில மாதங்கள் பணிபுரிந்தார். மந்தஹாசன் என்ற புனைபெயரில் எழுதத் துவங்கிய திருலோகம், சில ஆண்டுகளுக்குப் பிறகு திருலோக சீதாராம் என்ற பெயரிலேயே தன் எழுத்தைத் தொடர்ந்தார்.[1]
எழுதிய நூல்கள்[தொகு]
மொழி பெயர்புகள்[தொகு]
             மனுதர்ம சாஸ்திரம்[2]
             சித்தார்த்தா (நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு)[3]


தமிழ்க் கவிதை உலகின் ஒரு அபூர்வ கவி ஆளுமை திருலோக சீதாராம். செளந்தர்ய ஒலி உலகில் வாழ்ந்து பாடித் திளைத்தவர். அந்த இசை தந்த நுண்ணுணர்வின் வழியாகவே அவர் இலக்கியத்தை, மனிதர்களைப் பார்த்தார். அந்தப் பார்வை தமிழுக்கும் சில புதிய வண்ணங்களைச் சேர்த்தது.
ஒரு கவிஞராக, சிறு பத்திரிகையாளராக, இலக்கியக் கட்டுரையாளராக, தேர்ந்த மொழிபெயர்ப்பாளராக, மேடைதோறும் பாடி உரை நிகழ்த்தும் பேச்சாளராக, பாரதி, பாரதிதாசன் கவிதைகளைப் பாடிப் பரப்பிய குயிலாகப் பறந்து திரிந்தவர் திருலோக சீதாராம்.
இந்திய தேசியக் கவியும் தமிழ்க் கவிதையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவரும் படைப்பிலக்கியத்தில் பல சோதனை முயற்சிகளைச் செய்தவருமான பாரதியை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் அவரை முழுமையாக அறிந்திருந்தவர்கள் வெகு சிலரே. அவர்களுள் முக்கியமானவர்கள் .ரா, பாரதிதாசன், ஜீவா, திருலோக சீதாராம். எழுத்தோடும் பேச்சோடும் மட்டும் நில்லாமல், தன் வளமான குரலால் பாரதி பாடல்களைப் பாடி மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர் திருலோகம்.
மனத்தடை இல்லா நட்பு
பாரதியார் குடும்பத்தாரோடு திருலோகம் எவ்வளவு நெகிழ்ந்த அன்பும் உற்ற உறவும் கொண்டிருந்தாரோ, அது போலவேயான அன்பையும் நட்பையும் பாரதியின் சீடரான பாரதிதாசனோடும் கொண்டிருந்தார். சுயமரியாதை இயக்கக் கவிஞராக இருந்துகொண்டு, ஒரு பிராமணரான பாரதிக்குத் தாசன் என்று அழைத்துக்கொள்வதைத் திராவிட இயக்கப் பிரமுகர்கள் சிலர் ஆட்சேபித்தபோது, பாரதியை யாரும் இனத்தின் பெயரால் இழிவுபடுத்துவதை நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன் என்று கோபத்துடன் எதிர்த்துள்ளார் பாரதிதாசன். பிராமண எதிர்ப்பில் தீவிரமாக இருந்த அவருக்கு திருலோகத்திடம் நட்பு கொள்வதிலும் எந்த மனத்தடையும் இருந்திருக்கவில்லை.
காங்கிரஸ் தலைவரும், அன்றைய தமிழக முதலமைச்சருமான காமராஜரோடு திருலோக சீதாராம் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். 1961 ஜூலை 29, சனிக்கிழமை திருச்சி டவுன் ஹாலில் நடைபெற்றசிவாஜிவாரப் பத்திரிகை இதழின் வெள்ளி விழா மலரை வெளியிட்டு உரையாற்றியிருக்கிறார் காமராஜர். திருலோகம் கவிதைகளின் மீதும் சிவாஜி இலக்கிய இதழ் மீதும் கொண்டிருந்த பெரும் மதிப்பால், அவரை அரசவைக் கவிஞராக நியமிக்க எண்ணி, அதைச் சிலரிடம் வெளிப்படுத்தியும் உள்ளார் காமராஜர். ஆனால், பிற்பாடு அது சில அரசியல் காரணங்களால் நடக்க இயலாமல் போனது.
அதிசயப் பிறவி
1940-களின் இறுதியில், பாவேந்தருக்குப் பொற்கிழி அளிப்பதாக ஒரு திட்டத்தை அப்போதைய திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான அண்ணா அறிவித்தார். அது தொடர்பான சர்வ கட்சிக் கூட்டம் ஒன்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்று பாரதிதாசனின் கவிதை நயங்களைப் பற்றிப் பேசிய திருலோகத்தைப் பார்த்து, ‘அக்ரஹாரத்து அதிசயப் பிறவிகளில் இவரும் ஒருவர்என்றார் அண்ணா. பாராட்டியதோடு மட்டுமல்லாமல்திராவிட நாடுபத்திரிகை வெளியிட்ட பாவேந்தர் சிறப்பு மலரில் பாவேந்தரைப் பற்றி ஒரு பாடல் எழுதுமாறு கேட்டு வாங்கிப் பிரசுரித்துள்ளார்.
அந்தக் காலகட்டம் மொழியின் மறுமலர்ச்சிக்கான காலகட்டம். சம்பிரதாயங்களைக் கடந்து மொழியை, கலாச்சாரத்தை வேறு தளங்களில் முன் நிறுத்திய ஒரு காலகட்டம். தான் தேசிய இயக்கத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திராவிட இயக்கத்தால் மொழிக்குக் கிடைத்த வளத்தை, பயன்பாட்டை மறுக்காமல் சந்தோஷமாக வரவேற்கிறார் திருலோகம்.
இளம் கவி திருலோகம்
பெரம்பலூருக்கு அருகிலுள்ள தொண்டைமான்துறை என்ற ஊரில் திருவையாறு லோகநாத ஐயருக்கும் மீனாட்சி சுந்தரம்மாளுக்கும் 1917 ஏப்ரல் முதல் தேதியன்று பிறந்தவர் திருலோக சீதாராம். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். மூன்று வயதிருக்கும்போதே தந்தையை இழந்து, மாமன் வீட்டில் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். இவருக்கு லலிதா என்ற தங்கையும் பஞ்சாபகேசன் என்ற தம்பியும் இருந்தனர். 1936-ல் தனது 19-ம் வயதில் 10 வயதான ராஜாமணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மதுரம், வஸந்தா, இந்திரா என்ற மூன்று பெண் குழந்தைகளும் பசுபதி, சுப்பிரமணியன், முரளிதரன், ராமகிருஷ்ணன் என்ற நான்கு ஆண் குழந்தைகளும் பிறந்தனர். திருலோக சீதாராம் மறைவுக்குப் பின், முப்பத்துநான்கு ஆண்டுகள் வாழ்ந்த திருலோகத்தின் மனைவி ராஜாமணி அம்மாள் 2007-ல் தன்னுடைய 81-வது வயதில் மறைந்தார்.
இளம் வயதிலேயே திருலோகத்துக்குக் கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டதோடு அல்லாமல், பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. அதனால், அவரது 18-வது வயதிலேயேஇந்திய வாலிபன்என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். பிறகு, விழுப்புரத்துக்கு அருகில் பரிக்கல் என்ற சிற்றூரில்ராம சடகோபன் என்பவர் நடத்தி வந்ததியாகிபத்திரிகையின் துணை ஆசிரியராகச் சில மாதங்கள் பணிபுரிந்தார். மந்தஹாசன் என்ற புனைபெயரில் எழுதத் துவங்கிய திருலோகம், சில ஆண்டுகளுக்குப் பிறகு திருலோக சீதாராம் என்ற பெயரிலேயே தன் எழுத்தைத் தொடர்ந்தார்.
தமிழால் ஆன வாழ்வு
கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவோடும் நெருங்கிய நட்புக்கொண்டிருந்தார் திருலோகம். ஜி.டி.நாயுடு அழைப்பின்பேரில் கோவைக்குச் சென்று பல தடவை பேசியுள்ளார். ஒரு கணக்குத் தணிக்கையாளன் சோதனை செய்தால்கூட தவறு கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு நேர்மையாய்க் கணக்கு எழுதுவதில் தேர்ந்தவராக இருந்த திருலோகத்தின் லெளகீகக் கணக்குகள் மட்டும் எப்போதும் சமனாகாமலேயே இருந்தன. தன்னை முன்னிறுத்துவதைவிடவும் தன் முன்னோர்களை, சக படைப்பாளிகளை, இளைஞர்களை முன்னிறுத்தும் தாய்மை மனம் கொண்ட திருலோகத்தின் வாழ்வு தமிழால் ஆனது.
தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலகட்டம் கு..ரா, .பிச்சமூர்த்தி, எம்.வி.வி, தி.ஜானகிராமன் போன்றவர்கள் வாழ்ந்த காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் அவர்களோடு தன்னையும் இணைத்துக்கொண்டு, சிறு பத்திரிகை மூலமாகவும் இசை வழியாகவும் தன் வழியில் இலக்கிய சலனங்களை ஏற்படுத்தியவர் திருலோக சீதாராம்.
சித்த புருஷர் சீதாராம்
தனது பதினெட்டாம் வயது துவங்கி தன் காலம் முடியும் வரையிலும் சிறு பத்திரிகை ஆசிரியராகவே வாழ்ந்த திருலோக சீதாராம், 1973 ஆகஸ்ட் 23 அன்று தனது ஐம்பத்தாறாம் வயதில் மறைந்தார். அவர் மறைவுக்குப் பின் ஜெயகாந்தன் பேசிய இந்த வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை.
திருலோக சீதாராம் என்பவர் சதா இங்கே திரிந்துகொண்டிருக்கும் சித்த புருஷர்களில் ஒருவர். அவர் நமக்குத் தோற்றம் காட்டியதும் நம்மிடம் துலங்கியதும் ஒரு அருள். அவர் எங்கேயும் போவதில்லை. தோன்றியது யாவும் மறையும் - சூரியன் தோன்றி மறைவதுபோல. ஆனால், தோன்றியது யாவும் மறையும் என்றால் என்ன பொருள்.. மறைந்தது யாவும் தோன்றும் என்பதுதான். எனவே, இந்தப் பொருள் சுழற்சியில் சிக்குண்ட மஹா பாக்யவான்கள் நாம். அவர்களைக் கண்டுகொண்டோம்; அவர்களுடைய சொற்களைக் கேட்டோம்; அவர்களைச் சுமந்தோம். அந்தச் சொற்களையும் கருத்துகளையும் இன்னும் சுமந்துகொண்டு சுவாசித்து வாழ்கிறோம்; வாழ்வோம். இதிலிருந்து நமது சந்ததிகள் சுடரோடு பொலிவர்”.
- ரவி சுப்பிரமணியன், எழுத்தாளர், கவிஞர், ஆவணப்பட இயக்குநர்
திருலோக சீதாராம் நூற்றாண்டு நாள் ஏப்ரல்-1 - திருலோக சீதாராம் (1.4.1917 23.8.1973)
திருலோக சீதாராம்- சில நினைவுகள்

        
'எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்என்றான் பாரதி. பாரதிக்கொரு ஞானவாரிசு வந்தார். அவரோ, 'எழுத்தும், எழுதுகோலும் மட்டுமன்றி எழுதுபவனும் தெய்வம்' என்று கவிதைக்காவலனாய் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். அவர்தான் கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள்.

 ஒரு ஆற்றல்மிக்க கவிஞராய் ,பத்திரிகை ஆசிரியராய், தேசிய இயக்க முன்னோடியாய், கேட்போர் மயங்கும் பேருரையாளராய், இலக்கியவாதியாய் பன்முகம் கொண்ட மேதையாய்த் திகழ்ந்தவர்  திருலோகசீதாராம்.

சீதாராம் அவர்களின் தந்தை பெயர் திருவையாறு லோகநாத சாஸ்திரி. ஊரின் பெயரான திருவையாற்றிலிருந்து "திரு'வையும், தகப்பனார் பெயரில் உள்ள "லோக'த்தையும் சேர்த்துக் கொண்டு புதுமையாய் திருலோக சீதாராம்என்று பெயர் கொண்டார்.



(திருலோக சீதாராம் அவர் மனைவியுடன்)
                
தான் ஞானத் தந்தையாக வரித்துக் கொண்ட மஹாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு வருடம் தவறாமல் நீர்க்கடன் செலுத்தி வந்தவர்.

பாரதியாருக்குப் பின்னர் அவர் குடும்பத்தை கண்இமைப்போல் காத்துவந்தவர். பாரதியின் மனைவி செல்லம்மாள்பாரதியின் இறுதிநாட்களில் நோயுற்றிருந்தபோது ஒருமகனாய் உடனிருந்து உதவியவர். தன் மடியிலேயே இறுதி மூச்சைவிட்ட செல்லம்மாள் பாரதிக்காக அந்திமக்கிரியை செய்து துக்கம் மேற்கொண்டவர்.  
                        

திருலோகசீதாராம் திருச்சியில் நடத்திவந்த சிவாஜி பத்திரிகையில் பல எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு ஊக்கமளித்தவர்.

எழுத்தாளர் சுஜாதாவை அடையாளம் கண்டு அவரின் முதல்படைப்பை சிவாஜியில் வெளியிட்டு அவருக்கு ஒரு ராஜபாட்டை அமைத்தவர்.       

அவர் காலத்திய அத்தனை பெரிய எழுத்தாளர்களையும் மிக நெருங்கிய நண்பர்களாய்ப் பெற்றவர். திருச்சி வரும் எழுத்தாளர்கள் அத்தனைபேரும் இவரை சந்திக்காமல் திரும்ப மாட்டார்கள். இவரின் விருந்தோம்பல் மிகப் பிரசித்தம்.

பாவேந்தர் பாரதிதாசனுடனும் ,புதுமைப்பித்தனுடனும்  நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
திரு G.D.நாயுடு, எழுத்தாளர்கள் கரிச்சான்குஞ்சு, தி.ஜானகிராமன், கு.பா.ரா மற்றும் பல ஜாம்பவான்கள் அவரின் பேச்சாற்றலையும் கவித்திறனையும் வியந்து அவரோடு நீண்ட நட்பு கொண்டிருந்தனர்.

மந்தஹாசன்என்றும்,’படிக்காசுப் புலவர்என்றும் இலக்கிய நண்பர்கள் இவரை அழைத்து வந்தனர்.

இவர் பயணங்களில் பெருவிருப்பு கொண்டவர். சுத்தானந்த பாரதியார் இவரைதிரிலோக சஞ்சாரி' என்று குறிப்பிடுவாராம்.

 வாலி பல சமயங்களில் எழுத்திலும் பேட்டிகளிலும் இவரைப் பற்றி நினைவு கூர்ந்தபடி இருந்தார்.

தேவசபை' எனும் குழுமத்தை ஏற்படுத்தி, இலக்கிய சர்ச்சைகளை காவிரியின் கரையில், தேர்ந்த ஆர்வலர்களுடன் நிகழ்த்தினார்.

 சீதாராம் அவர்கள் கவிதைகளை ஏற்ற இறக்கங்களுடன் கம்பீரமாக சொல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது. அபாரமான நினைவாற்றல் கொண்டவர். பல இலக்கியப் பாடல்களை அவர் குறிப்புகள் ஏதுமின்றி மடை திறந்த வெள்ளம்போல் பொழிவதை பலரும் நினைவுகூர்வார்கள்.

'ஆற்காடு தூதன்' எனும் இதழோடு இவர் இலக்கிய பயணம் தொடங்கியது.

நாற்பதுகளின் ஆரம்பத்தில்கிராம ஊழியன்எனும் அரசியல் பத்திரிகை இலக்கிய ஏடாக மீண்டும் உயிர்பெற்றது. திருச்சிக்கு அப்பால் உள்ள துறையூரில் மறுமலர்ச்சி இலக்கிய ஏடாக வளர்ந்து வந்தது. திருலோக சீதாராம் அவர்களை ஆசிரியராயும், கு..ரா. அவர்களை கௌரவ ஆசிரியராயும் கொண்டு வெளிவந்து, பல நல்ல ஆக்கங்களை வெளியிட்டது. 1944இல் கு..ரா. இறந்தபோது, வல்லிக்கண்ணன் கிராம ஊழியனுக்கு வந்தார். அந்த ஆண்டே திருலோகசீதாராம் 'சிவாஜி ' இதழைத் தொடங்க, வல்லிக்கண்ணன் கிராம ஊழியனின் ஆசிரியராய் பொறுப்பேற்றார்.

சற்றொப்ப 37 ஆண்டுகாலம் அவர் சிவாஜி இதழை வெளியிட்டுவந்தார்.. ‘கவிஞர் அச்சகம்எனும் பதிப்பகத்தையும் நடத்தினார். அதில் அவர் எழுதிய ஆக்கங்களில் சில நூல்களாயின. ‘இலக்கியப் படகுஎனும் நூல் அதிக கவனம் பெற்ற ஒன்று. விகடனில் அவர் எழுதிய கட்டுரைகள்புதுயுகக் கவிஞர்என்ற நூலாய் வெளியிடப்பட்டது. மேலும் சில நூல்களும் வெளியாயின.

ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய 'சித்தார்த்தா'எனும் நூலை இவர்  மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பில் நழுவிவிடும் மூலநூலின் உயிர்ப்பை போலன்றி, சீதாராம் அவர்களின் மொழிபெயர்ப்பு ஜீவனுடன் விளங்கியது. பல ஆங்கிலக் கவிதைகளையும் மொழியாக்கம் செய்தார்.

கவிஞரின் 'கந்தர்வகானம்' எனும் படைப்பிற்கு, சாஹித்திய அகாதமி விருது கிடைப்பதாக  இருந்தது என்றும்,ஏனோ கடைசி நிமிடத்தில் நழுவிவிட்டது என்றும் ஒரு பேச்சுண்டு. 'கந்தர்வ கானம்' ஏற்படுத்திய தாக்கத்தில் தொழிற்சங்கவாதியும்,படைப்பாளியுமான திரு நாகலிங்கம் தன் பெயரை 'கந்தர்வன்' என மாற்றிக் கொண்டார்.

காரைக்குடி கம்பன் கழகத்திலும், இலக்கிய  மாநாடுகளிலும் கவிஞரின் காந்தக்குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. கு..ரா, வல்லிக்கண்ணன்,கவிஞர் சுரதா என அவர் ஆதரவு பெற்றோரின் எண்ணிக்கை அதிகம். எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத எளிமை உடைவராகவே திகழ்ந்தார். மரபுக்கவிதையிலும் வேகமும் செறிவுமாய், புதுபாடுபொருள்களை கொண்டு நெஞ்சையள்ளும் கவிமாரி பொழிந்தார்.

கவிஞர் தேர்தலிலும் போட்டியிட்டார். வீதிவீதியாய் பாரதியின் பாடல்களை கணீரென பாடியவாறே வாக்கு சேகரித்தாராம்.

56 வயதுவரை மட்டுமே வாழ்ந்த கவிஞர் 1973 ஆம் வருடம் அவரின் ஞானத்தந்தை பாரதியினைத் தேடி இவ்வுலகை நீத்தார். நல்ல இலக்கிய படைப்புகளையும் ஒரு அன்புமயமான குடும்பத்தையும் விட்டுச் சென்றார்.

திருலோகசீதாராம்


திருலோக சீதாராம் அவர்களின் சீடரும் நெடுநாள் நண்பருமான பன்மொழி வித்தகர் TNR என்று அறியப்படும் சேக்கிழார் அடிப்பொடிதிரு டி.என்.ராமச்சந்திரன் அவர்கள் திருலோக சீதாராமின் பல சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அண்மைக்காலத்தில் வெளிவந்த மிகச்சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைநூல் ஆகும்.

இது .கவிஞரின் நயமிக்க படைப்புகளானகந்தர்வ கானம்’, ’உடையவர்’, ’புகழ்க்கவிகைகுருவிக்கூடு'' போன்ற நெடுங்கவிதைகள் உட்பட 55 ஆக்கங்களை  சுவைகுன்றாமல் மொழிபெயர்த்துள்ளார்.


சேக்கிழார் அடிப்பொடி
T.N.ராமச்சந்திரன் அவர்கள்
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தஞ்சையில் நடந்த விமரிசையான விழாவில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. ஹைதராபாதிலிருந்து இவ்விழாவுக்கென தஞ்சை சென்றிருந்தேன்.

இங்கு நான் நெஞ்சுநிமிர்த்தி சொல்லிக்கொள்ள ஒன்று உண்டு. திருலோக சீதாராம் அவர்கள் எனக்கு சொந்தக்காரர். என் தந்தைக்கு மாமன்முறை. கடலூர்,பாண்டிச்சேரி வரும் போதெல்லாம் எங்கள் இல்லத்துக்கு அவர் வருவதுண்டு. என் இளமைப்பிராய நினைவுகளில்,அவரின் சற்றே குள்ளமான உருவமும், கணீர்க்குரலும், என் பதின்மவயதின் கவிதை முயற்சிகளை அவர் ஊக்குவித்ததும் நிழலாடுகின்றன. அவர் வெற்றிலை செல்லத்தில்தான் அவர் கவித்துவம் இருப்பதாய் என் தந்தை கேலியாய் சொல்வதுண்டு.

 அவருடைய நான்கு புதல்வர்களும், மூன்று மகள்களும் குடும்பத்துடன்  இந்த விழாவுக்காய் தஞ்சை வந்திருந்தனர். குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவனாய் நின்று, ஒரு மாமேதையை இரண்டு நாட்கள் சிந்தித்திருந்தது, என் மனதிற்கு நிறைவாய் இருந்தது. நாளெல்லாம் கவிஞரின் வாழ்க்கைச் சம்பவங்களை அசைபோட்டபடி இருந்தோம்.

 திருலோக சீதாராம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சற்று விரிவாக எழுதும் முயற்சியில் இருக்கிறேன். புத்தகவெளியீட்டு விழா சமயத்தில் நண்பர் திரு ரவிசுப்ரமண்யம் கவிஞர் பற்றிய ஆவணப் படத்தையும் தொடங்கினார்.

அண்மையில் திரு ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இந்த விழா பற்றி குறிப்பிட்டிருந்தேன். தற்செயலாக முந்தையதினம் தன் நண்பர்களிடம் திருலோகசீதாராம் பற்றி பேசியதாகவும், அவர்  பாரதிக்கு நீர்க்கடன் செய்து வந்ததைப் பற்றி, மகாபாரதத்தில் விதவிதமான மகன்களைப் பற்றி வருவதன் தொடர்ச்சியாக......” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். மிக மனநெகிழ்வாய் இருந்தது. காலத்தை வென்று நிற்க ஒரு கவிஞனுக்கு, தன் உயர்ந்த படைப்புகள் மட்டுமின்றி , உன்னதமான வாழ்க்கைமுறை கூட தேவை என்று எண்ணிக்கொண்டேன்.


திருலோகசீதாராம் அவர்களின் சில வாழ்க்கைக் குறிப்புகளை இந்தப் பதிவில் தந்திருக்கிறேன். கவிஞரின் வைரவரிகளை இன்னொரு பதிவில் பேசுவோம். கவிஞரைப் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் யாத்த கவிதை ஒன்றின் சிலவரிகளை சிந்தித்து இந்தப் பதிவினை நிறைவு செய்வோம்.

இவனுயர்ந்தான்   அவன்   தாழ்ந்தான்
என்னும்  இன   வேற்றுமை   ஓர்  அணுவும்  இல்லான்
எவன்   பொதுவுக்கு   இடர்   சூழ்ந்தான்
அவன்   தாழ்ந்தான்   அஃதில்லான்
உயர்ந்தான்  என்று
நுவல்வதிலே   திருலோகன்  அஞ்சாநெஞ்சன்
தக்க  நூற்கள்   ஆய்ந்தோன்

No comments:

Post a Comment