வல்லிக்கண்ணன்
கவிஞர்,
சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், நாடக ஆசிரியர், இலக்கிய வரலாற்றா சிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட
படைப்பாளி வல்லிக்கண்ணன்.
திருநெல்வேலி
மாவட்டம் நான்குநேரி வட்டாரம் திசையன்விளையில், ரா.மு.சுப்பிரமணியம்
பிள்ளை, மகமாயி அம்மாள் வாழ்விணையருக்கு 12.11.1920
ஆம் நாள் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கிருஷ்ணசுவாமி. இவரது தந்தையார் சுங்கத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றினார். தமது
பத்து வயதில் தந்தையை இழந்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.
கோவில்பட்டி,
பெருங்குளம் முதலிய ஊர்களில் தமது தொடக்கக் கல்வியையும், திருநெல்வேலி மந்திர மூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பின்னர், பாளையங்கோட்டை புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புடன் அவரது படிப்பு முடிவடைந்தது.
பரமக்குடியில்
வேளாண்மை விரிவாக்கப் பணியாளர் அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
அங்கு
பணிபுரிந்து கொண்டிருந்த போது வல்லிக்கண்ணனின் எழுத்துப் பணி குறித்து, வேளாண்மை விரிவு அலுவலர் அந்தோணிப் பிள்ளை என்பவர் உயர் அதிகாரிக்குப் புகார் செய்தார். இதனால், தமது அரசுப் பணியினை உதறித் தள்ளிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளி யேறினார். 1941 ஆம் ஆண்டு முதல் தமது வாழ்க்கையை எழுத்துப் பணிக்கு அர்ப்பணித்தார்.
உலக
அளவிலும், இந்திய அளவிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கையையும், செயல்பாடுகளையும் படித்தார். அவை அவரது சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
`மணிக்கொடி’
இதழ்களின் தொகுப்பைப் படித்து, அவ்விதழ்களில் புதுமைப்பித்தன் கதைகளைப் படித்து, அக்கதைகளினால் ஈர்க்கப்பட்டு, தாமும் அதுபோன்று எழுத வேண்டும் என ஆர்வம் கொண்டு,
தமது கதை களை இதழ்களுக்கு அனுப்பினார்.
தமது
சொந்த ஊர்ப் பெயரான இராசவல்லிபுரம் என்பதிலுள்ள வல்லி என்ற பெயரையும் இணைத்து வல்லிக்கண்ணன் என்ற பெயரை உருவாக்கினார். இப் பெயர் மூலம் இவரது பிறந்த மண் பற்றையும், தமிழ் மொழிப் பற்றையும் உணர்த்துகிறது.
வல்லிக்கண்ணன்
`கிராம ஊழியன்’ இதழின் பொறுப்பாசிரியராக 1944 முதல் 1947-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். `இளவல்’ என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதினார். அழகு, திங்கள், அந்திவானம், மழை போன்ற இயற்கைகளை பாடுபொருளாக்கி கவிதைகள் படைத்துள்ளார். இவரது கவிதைகள் அழகுணர்ச்சி மிகுந்தவையாகும். மகாகவி பாரதி யாருக்குப் பின் காட்சிக் கவிதைகள் படைத்து வெற்றி கண்டவர்களுள் வல்லிக்கண்ணன் குறிப்பிடத்தக்கவர்.
“சுதந்திரம்
வந்தது
சுகம்
தான் வந்ததோ?
உம்மைச்
சேர்ந்தோரே
உம்
பேர் சொல்லித்
தாம்
உயர வகை கண்டனர்!”
என்ற
கவிதையின் மூலம் இந்தியா சுதந்திரம் பெற்றாலும், அதனால் பலன் பெறுவதற்கு வழிகண்ட சுயநலவாதி களை அம்பலப்படுத்துகிறார்.
“நீவிர்
அன்று
போல் இன்றும்
ஏழையாய்
தரித்தரராய்
பட்டினிப்
படையினரால்
உண்ண
உணவும்
உடுக்க
உடையும்
உறையுள்
வசதியும்
பெற்றிட
இயலாப் பூச்சிகளாய்
உழைத்துச்
சலித்து,
வரிகளும்
உயர்விலைகளும்
கொடுத்துச்
சோர்ந்து
எவர்
ஆண்டால் நமக்கென்ன?”
ஏழை
மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் வாழும் அவல நிலைகண்டு குமுறுகிறார். வல்லிக் கண்ணனின் கவிதைகள் நாட்டின் ஒருமைப்பாட்டைக் காணும் வகையிலும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவதாகவும், தொழிலாளர்களின் நலம் நாடு பவைகளாகவும் அமைந்துள்ளது. மேலும் இன்றைய மானுட வாழ்க்கையின் அவல நிலையைக் கண்டு வெதும்பி உள்ளம் குமுறி தமது கவிதைகளைப் படைத் துள்ளார்.
அமர
வேதனை, புதுக்குரல்கள் முதலிய கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
கவிஞர்
வல்லிக்கண்ணன் காலத்தின் தாக்கத்திற்கு உட்படுபவராகவும் அதே காலத்தின் மீது தமது தாக்கத்தைச் செலுத்துபவராகவும் விளங்குகிறார்.
வல்லிக்கண்ணன்
1950-ஆம் ஆண்டு `விடியுமா?’ என்னும் நாடகத்தை எழுதினார். இந்த நாடகம் ஓட்டல் தொழிலாளர்களின் சிக்கல்களையும், சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் சித்திரிக்கிறது.
Òநட்ட
கல்லைக் குளிப்பாட்ட வெள்ளிக்குடங் களிலே பாலா? ஆகா நாட்டிலே பட்டினிப் பட்டாளம் பெருத்துக் கிடக்கு, பச்சைக் குழந்தைகள் பாலுக்கு பறவாப் பறக்குது. தினந்தோறும் குடம், குடமாகப் பால் சாக்கடையிலே போய்ச் சேருது, அபிசேகமாம், புண்ணியமாம், இது மாதிரி அநியாயம் வேறு எந்த நாட்டிலேயாவது நடக்கிறதா? இந்த நாடு விடியுமா?” இது அவரது Ôவிடியுமா?Õ என்னும் நாடகத்தில் இடம் பெற்றுள்ள வசனமாகும்.
செவ்வானம்,
வசந்தம் மலர்ந்தது, வீடும் வெளியும், ஒரு வீட்டின் கதை, அலைமோதும் கடல் ஓரத்தில், இருட்டு ராஜா, நினைவுச்சரம் முதலிய நாவல்களை எழுதி உள்ளார். வல்லிக்கண்ணன் தமது பதினாறு வயதிலேயே கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். அவரது முதல் கதை `சந்திர காந்தக்கல்’ பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்தது. கல்யாணி முதலிய சிறுகதைகள், மத்தாப்புச் சுந்தரி, ராதை சிரித்தாள். ஒய்யாரி, அத்தை மகள், முத்தம், ஆண் சிங்கம், அருமை யான துணை, மனிதர்கள் உள்ளிட்ட 19 சிறுகதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார். கடலில் நடந்தது
(மார்க்சிம் கார்க்கி), டால்ஸ்டாய் கதைகள், மாக்சிம் கார்க்கி கட்டுரைகள் முதலிய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இவரது
`பெரியமனுஷி’ என்னும் சிறுகதை உலகத்துச் சிறுகதைகள் ஆங்கில மொழித் தொகுப் பிற்காக இந்திய மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு, வெளியிடப்பட்டது. மேலும், ‘Stories from Asia
Today; என்னும்
ஆங்கிலத் தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது.
'இன்றைய
சமுதாயம் பிளவுண்ட சமுதாயம், ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி என வர்க்கப் பிரிவும்,
தொழிற் பிரிவும் மக்களை பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. இது போன்றே மக்கள் அரசியல் வாதிகள் என்ற பிளவும் மக்களிடம் காணப்படுகிறது. மக்கள் வாக்களிப்பவராகவும், அரசியல் வாதிகள் வாக்குகளைப் பெறுபவராகவும் உள்ளனர். மேலும், வாக்களிக்கும் மக்கள் அரசியல் வாதிகளிடமிருந்து எதிர்பார்ப்பவர்களாகவும், எதிர்பார்க்கின்ற மக்களை அரசியல்வாதிகள் வஞ்சிப்பவர்களாகவும் உள்ளனர்”, என்ற
இன்றைய நடப்பை `வள்ளல்தனம்’ என்னும் தமது சிறுகதையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமுதாயத்தில்
காணப்படும் சிக்கல்களும், அவற்றை நீக்குவதற்கான தீர்வுகளும், அறிவியல், சமுதாயவியல், உளவியல் அடிப்படையில் வல்லிக்கண்ணனின் சிறு கதைகள் உள்ளது என திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சமுதாய
மாற்றத்தை ஏற்படுத்திட, வாழ்க்கைத் துன்பங்களுக்கான உரிய காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண தமது கதைகளில் வலியுறுத்தியுள்ளார்.
பாரதிக்குப்பின்
தமிழ் உரை நடை, பாரதிதாசனின் உவமை நயம், எழுத்தாளர்களும் பத்திரிகைகளும், வாசகர்கள் - விமர்சகர்கள், சரஸ்வதி காலம், தமிழ்ப் பத்திரிகைகள் அன்றும் இன்றும், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் முதலிய அழியாக் கட்டுரை நூல்களை எழுதி அளித்துள்ளார்.
இவரது
'எழுத்தாளர்களும் பத்திரிக்கைகளும்' என்னும் நூலுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகம் பரிசளித்துப் பாராட்டியது.
'புதுக்கவிதையின்
தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் இவரது நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
கோவையில்
1944-ஆம் ஆண்டிலும், சென்னையில் 1946-ஆம் ஆண்டிலும் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் மாநாடுகளில் கலந்து கொண்டார். அம்மாநாடுகளில் மகாகவி பாரதியாரின் பாடல்கள் நாட்டுடைமை யாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தொடர்ந்து அதற்காகப் பாடுபட்டார்.
திருச்சியில்
1947-ஆம் ஆண்டு நடைபெற்ற சிறு பத்திரிகைகள் மாநாட்டிற்கு வல்லிக்கண்ணன் தலைமை தாங்கி நடத்தினார்.
“இலக்கியத்தின்
பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும், வளத்துக்கும் கனமாக சிந்தனைகள் பரவுவதற்கும், திறமையான எழுத்தாளர்கள் வளரவும் சிறு பத்திரிகைகள் உதவ முடியும்” என்பதை வலியுறுத்தினார்.
மக்கள்
கலாசாரத்தை மண்ணாக்கும் திரைப்படம், மேற்கத்திய கலாசார சீரழிவு, பெண்களை வணிகப் பொருளாகப் பாவிப்பது முதலியவற்றை எதிர்த்து படைப்பாளிகள் தங்களின் எழுதுகோலை உயர்த்திட வேண்டுகோள் விடுத்தார்.
எண்ணத்தையும்,
எழுத்தையும் உயர்வாக மதித்தவர். எழுதுவதையும் சொல்வதையும் ஒன்றாக வாழ்ந்து காட்டியவர். சாதி, மன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்.
இளம் எழுத்தாளர்களையும் படைப் பாளர்களையும் ஊக்கப்படுத்தி, ஆதரவளித்தவர். தமிழ் இலக்கிய உலகில், `இலக்கிய பீஷ்மர்’, `இலக்கிய ரிஷி’ எனப் போற்றப்பட்டவர்.
வல்லிக்கண்ணன்
சென்னையில் வாழும்போது நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 09.11.2006-அன்று தமது 86ஆவது வயதில் மறைந்தார்.
புகழ்பெற்ற
எழுத்தாளர், விமர்சகர்
புகழ்பெற்ற
எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான வல்லிக்கண்ணன்
(Vallikannan) பிறந்த
தினம் இன்று (நவம்பர் 12). அவரைப் பற்றிய
அரிய முத்துக்கள் பத்து:
# திருநெல்வேலி
மாவட்டம், ராஜவல்லி புரத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் (1920). இயற்பெயர் ரா.சு. கிருஷ்ணசாமி.
கோவில்பட்டியில் ஆரம்பக் கல்வி பயின்றார். தந்தை சுங்கத் துறையில் பணிபுரிந்து வந்தார். அவருடன் பிரபல நாவலாசிரியர் அ.மாதவையாவும் பணி
யாற்றி வந்தார். அந்தக் காலகட்டத்தில் மாதவையா நடத்தி வந்த பஞ்சாமிர்தம் இதழ்கள் பற்றி தந்தை அடிக்கடி வீட்டில் பேசுவார்.
# இதுவே
சிறுவனுக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது. இவரது 10-வது வயதில் தந்தை இறந்துவிட்டார். தனது 16-ம் வயதிலேயே கவிதைகள்
எழுதத் தொடங்கிவிட்டார். ‘சந்திரகாந்தக் கல்’ என்ற இவரது முதல் சிறுகதை பிரசண்ட விகடனில் வெளிவந்தது.
# 1937-ல்
பள்ளி இறுதிப் படிப்பை முடித்த இவருக்கு பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்கப் பணியாளர் வேலை கிடைத்தது. எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த வேலையை உதறிவிட்டு முழு நேர எழுத்தாளனாக மாறினார். ஆரம்பத்தில் சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன், ஹனுமான் ஆகிய சிறுபத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார்.
# ‘கோவில்களை
மூடுங்கள்’, ‘அடியுங்கள் சாவு மணி’, ‘எப்படி உருப் படும்?’, ‘கொடு கல்தா’ உள்ளிட்ட நூல்களை கோரநாதன் என்ற பெயரில் கோபக்கார இளைஞனாக எழுதத் தொடங்கிய இவரது இலக் கியப் பயணம், புனைவுகள், திறனாய்வு, சிறுபத்திரிகை, புதுக்கவிதை வரலாறு எனப் பன்முகப் பரிமாணங்களுடன் தொடர்ந்தது.
# நையாண்டி
பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் போன்ற பல புனைபெயர்களிலும் எழுதியுள்ள இவர்,
தனது ஊர் பெயரில் உள்ள வல்லி மற்றும் தனது செல்லப் பெயரான கண்ணன் ஆகியவற்றை இணைத்து வல்லிக்கண்ணன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். இதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.
# நாட்டியக்காரி,
குஞ்சாலாடு, மத்தாப்பு சுந்தரி, கேட்பாரில்லை, அத்தை மகள், சகுந்தலா, ஆண் சிங்கம், அமர வேதனை, ராகுல் சாங்கிருத்யாயன் உள்ளிட்ட மொத்தம் 75 நூல்களை எழுதியுள்ளார்.
# இரண்டு
வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். இவரது ‘பெரிய மனுஷி’ என்ற சிறுகதை பல இந்திய மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டது.
இவரது ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற இவரது நூலுக்காக 1978-ல் இவருக்கு சாகித்ய
அகாடமி விருது கிடைத்துள்ளது.
# ‘வல்லிக்கண்ணன்
சிறப்புச் சிறுகதைகள்’ என்ற நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ம் ஆண்டுக்கான சிறந்த
நூல்களின் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்றுள்ளது. புதிய எழுத்தாளர்களை அரவணைத்து ஊக்கப்படுத்தியவர் வல்லிக்கண்ணன்.
# பாரதிதாசனின்
உவமை நயம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதி காலம், பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை ஆகிய படைப்புகள் இவரது இலக்கிய அடையாளங்களாகக் கருதப்பட்டன. சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
# ஒல்லிக்கண்ணன்
என்று எழுத்தாள நண்பர்கள் குறிப்பிடும் அளவுக்கு ஒல்லியான தேகம் படைத்தவர். சுமார் 75 ஆண்டு காலம் இலக்கியத்துக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வல்லிக்கண்ணன் 2006-ம் ஆண்டு 86-ம்
வயதில் மறைந்தார்.
வல்லிக்கண்ணன்
வல்லிக்கண்ணன்
(ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய
பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட
நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]
பொருளடக்கம் [மறை]
1 சில நூல்கள்
2 சான்றாவணங்கள்
3 மேற்கோள்கள்
4 வெளி இணைப்புக்கள்
சில
நூல்கள்[தொகு]
அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த
“சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் இது.[2]
கல்யாணி
முதலிய சிறுகதைகள் - 1944
நாட்டியக்காரி
- 1944
உவமை
நயம் (கட்டுரை) - 1945
குஞ்சலாடு
(நையாண்டி பாரதி ) - 1946
கோயில்களை
மூடுங்கள்! (கோர நாதன்) கட்டுரை - 1946
பாரதிதாசனின்
உவமை நயம் - 1946
ஓடிப்
போனவள் கதை (சொக்கலிங்கம்) - கதை - 1948
அடியுங்கள்
சாவுமணி (மிவாஸ்கி) கட்டுரை - 1947
சினிமாவில்
கடவுள்கள் (கோரநாதன்) கட்டுரை -1948
மத்தாப்பு
சுந்தரி (கதை) - 1948
நாசகாரக்
கும்பல் (நையாண்டி பாரதி) நாடகம் - 1948
ராதை
சிரித்தாள் - 1948
கொடு
கல்தா (கோரநாதன்) கட்டுரை - 1948
எப்படி
உருப்படும்? (கோரநாதன்) கட்டுரை - 1948
விடியுமா?
நாடகம் - 1948
ஒய்யாரி
(குறுநாவல்) - 1949
அவள்
ஒரு எக்ஸ்ட்ரா (குறுநாவல்)- 1949
கேட்பாரில்லை
(கோரநாதன்) கட்டுரை - 1949
அறிவின்
கேள்வி (கோரநாதன்) - கட்டுரை - 1949
விவாகரத்து
தேவைதானா ( கட்டுரை) - 1950
நல்ல
மனைவியை அடைவது எப்படி? (கட்டுரை) - 1950
கல்யாணத்துக்குப்
பிறகு காதல் புரியலாமா ? (கட்டுரை) - 1950
கல்யாணம்
இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா? - 1950
அத்தை
மகள் (குறுநாவல்) - 1950
முத்தம்
(குறுநாவல்) - 1951
செவ்வானம்
(கோரநாதன்) நாவல் - 1951
கடலில்
நடந்தது ( கார்க்கி கதைகள் (மொழியாக்கம் )- 1951
இருளடைந்த
பங்களா (கதை) - 1952
வல்லிக்
கண்ணன் கதைகள் (கயிலைப் பதிப்பகம்)
நம்
நேரு (வரலாறு) - 1954
விஜயலட்சுமி
பண்டிட் (வரலாறு) - 1954
லால்ஸ்டாய்
கதைகள் (மொழியாக்கம்)- 1957
சகுந்தலா
(நாவல்) - 1957
கார்க்கி
கட்டுரைகள் (மொழியாக்கம்) - 1957
சின்னஞ்சிறு
பெண் (மொழியாக்கம்) - 1957
தாத்தாவும்
பேரனும் (மொழியாக்கம் ) - 1959
விடிவெள்ளி
(குறுநாவல்) - 1962
அன்னக்கிளி
(நூல்) - 1962
ஆண்
சிங்கம் (சிறுகதைகள்) - 1964
முத்துக்
குளிப்பு (கட்டுரைகள் ) - 1965
வசந்தம்
மலர்ந்தது (நாவல்) - 1966
வீடும்
வெளியும் (நாவல்) - 1967
அமர
வேதனை (கவிதை) - 1974
வாழ
விரும்பியவன் (சிறுகதை)- 1975
புதுக்
கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கட்டுரை) - 1977
ஒரு
வீட்டின் கதை (நாவல்) - 1979
காலத்தின்
குரல் (60 கேள்வி பதில்) - 1980
சரச்வதி
காலம் கட்டுரை) - 1980
நினைவுச்
சரம் (நாவல்)- 1980
அலைமோதும்
கடல் ஓரத்தில் (நாவல்) - 1980
பாரதிக்குப்பின்
தமிழ் உரைநடை (கட்டுரை) - 1981
இருட்டு
ராஜா (நாவல்) - 1985
எழுத்தாளர்கள்-பத்திரிககள்- அன்றும் இன்றும் (கட்டுரை) - 1986
ராகுல்
சாங்கிருத்யாயன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) -1986
சரஸ்வதி
காலம் - 1986
புதுமைப்பித்தன்
(சாகித்ய அகாடமி B.B.சிற்பி) - 1987
வாசகர்கள்
விமர்சகர்கள் (கட்டுரை) - 1987
மக்கள்
கலாசாரத்த மண்ணாக்கும் சக்திகள் - 1987
வல்லிக்
கண்ணனின் போராட்டங்கள் (கட்டுரை) - 1988
அருமையான
துணை (சிறுகதைகள்) - 1991
மன்னிக்கத்
தெரியாதவர் (குறுநாவல் தொகுப்பு) - 1991
தமிழில்
சிறு பத்திரிகைகள் (கட்டுரை) - 1991
வல்லிக்
கண்ணனின் கதைகள் (மணியன் பதிப்பகம்) - 1991
மனிதர்கள்
சிறுகதைகள் - 1991
ஆர்மீனியன்
சிறுகதைகள் (மொ.பெ) - 1991
சுதந்திரப்
பறவைகள் (சிறுகதைகள்)- 1994
சிறந்த
பதின்மூன்று சிறுகதைகள் (மொ. பெ.)-995
சமீபத்திய
தமிழ் சிறு கதைகள் ( N. B. T.தொகுப்பு )
பெரிய
மனுஷி (சிறு கதை N.B.T.(பால புத்தக வரிசை ).
வல்லிக்
கண்ணன் கடிதங்கள் (கடிதங்கள் ) - 1999
தீபம்
யுகம் (கட்டுரை) - 1999
வல்லிக்கண்ணன்
கதைகள் (சிறுகதைகள் - இராஜராஜன் பிரசுரம்)- 2000
அ.நா.பாலகிருஷ்ணன் தொகுப்பில்
இடம் பெறாத மேலும் சில நூல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழில்
சிறு பத்திரிகைகள் - 1991
No comments:
Post a Comment