Thursday, August 16, 2018

தொ. மு. சிதம்பர ரகுநாதன்

தொ. மு. சிதம்பர ரகுநாதன்









தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.
பிறப்பு            
அக்டோபர் 20, 1923
திருநெல்வேலி, தமிழ் நாடு
இறப்பு             டிசம்பர் 31, 2001
பாளையங்கோட்டை
தொழில்         எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்
நாடு   இந்தியர்
எழுதிய காலம்         1941–1999
இலக்கிய வகை      சமூக புதினங்கள், இலக்கிய விமர்சனம், கவிதைகள்
இயக்கம்        சோஷியலிச யதார்த்தவாதம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)            பஞ்சும் பசியும்
பாரதி: காலமும் கருத்தும்
இளங்கோ அடிகள் யார்?

தாக்கங்கள்[காட்டு]

பின்பற்றுவோர்[காட்டு

பொருளடக்கம்

             1வாழ்க்கைக் குறிப்பு
             2சிறப்பம்சங்கள்
             3விருதுகள்
             4எழுதிய நூல்கள்
o             4.1சிறுகதை
o             4.2கவிதை
o             4.3நாவல்
o             4.4நாடகம்
o             4.5விமரிசனம்
o             4.6வரலாறு
o             4.7ஆய்வு
o             4.8மொழிபெயர்ப்பு
             5மேற்கோள்கள்
             6வெளி இணைப்புகள்
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
ரகுநாதன் திருநெல்வேலியில் அக்டோபர் 21, 1923ல் பிறந்தார். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய இவரது அண்ணன் பாஸ்கர தொண்டைமான் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இவரது ஆசிரியர் . சீனிவாச ராகவன் இவருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார். இவரது முதல் சிறுகதை 1941ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார். 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிக்கையிலும் பணியாற்றினார். இவரது முதல் புதினமான புயல் 1945ல் வெளியானது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம். அதைத் தொடர்ந்து 1951ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50000 பிரதிகள் விற்பனையானது. அதே ஆண்டு தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 1954–56 வரை சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாதஇதழை நடத்தினார். அந்த இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைப்புசாரா எழுத்தாளராக பணிபுரிந்தார். 1960ல் சோவியத் நாடு பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய ரஷியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை: மாக்சிம் கார்க்கியின் தாய் மற்றும் விளாடிமிர் மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா விளாடிமிர் இலிச் லெனின். அவரது இலக்கிய விமர்சன நூலான பாரதி - காலமும் கருத்தும் 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1985ல் இளங்கோ அடிகள் யார் என்ற சமூக வரலாற்று ஆய்வினை வெளியிட்டார். 1988ல் சோவியத் நாடு இதழிலிருந்து ஓய்வு பெற்றார். 2001ல் பாளையங்கோட்டையில் காலமானார்.
தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் இவரது நண்பர். 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951ல் தன் நண்பரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். 1999ல் புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும் என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் 1951ல் வெளியான வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியாகவும் புதுமைப்பித்தனின் படைப்புகளில் பிறமொழித் தழுவல் மிகுந்துள்ளதாக அவரது சமகால எழுத்தாளர்கள் (பெ. கோ. சுந்தரராஜன் போன்றோர்) முன் வைத்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாகவும் அமைந்திருந்தது. 1942 முதல் 1962 வரை இவரது எழுத்துலக வாழ்க்கை முழுவேகத்தில் இருந்தது. இவர் ஒரு சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் படும்பாட்டைத் தனது பஞ்சும் பசியும் நூலில் தெளிவாகக் காட்டியுள்ளார். அவரது கொள்கைகளை அந்நூல் பிரதிபலிக்கிறது. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ரகுநாதன் மொத்தம் 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 புதினங்கள், 2 நாடகங்கள் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.[1][2][3][4][5]
சிறப்பம்சங்கள்[தொகு]
சோசலிச எதார்த்தவாத நாவல் இலக்கியப் போக்கைத் தன்பஞ்சும் பசியும்நாவல் மூலம் தொடங்கி வைத்தார் .தமிழ் இலக்கிய ஆய்வை இலக்கண ஆய்வு நிலையிலிருந்தும், ரசனை ஆய்வு நிலையிலிருந்தும் சமூகநிலை ஆய்வு என்னும் ஆழ மான தளத்துக்குக் கொண்டு சென்று, ஆய்வின் எல்லையை விசாலப்படுத்தினார் . “பாரதியும் ஷெல்லியும்”, “கங்கையும் காவிரியும்ஆகிய நூல்களின் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தைத் தமிழில் விரிவுபடுத்தியவர். “ இளங்கோவடிகள் யார்?” என்னும் நூலின் வழி, தமிழகத்தில் சமய உருவாக்கங்களைப் போல நடந்த புதுப்புதுச் சாதி உருவாக்கங் களைத் துலக்கி, சாதி இறுக்கங்களின் பொய்மையைப் பளிச்சென வெளிப்படுத்தியவர்.[6]
விருதுகள்[தொகு]
             சாகித்திய அகாதமி விருது – 1983
             சோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)
             தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு
             பாரதி விருது - 2001
எழுதிய நூல்கள்[தொகு]
சிறுகதை[தொகு]
             சேற்றில் மலர்ந்த செந்தாமரை
             க்ஷணப்பித்தம்
             சுதர்மம்
             ரகுநாதன் கதைகள்
கவிதை[தொகு]
             ரகுநாதன் கவிதைகள்
             கவியரங்கக் கவிதைகள்
             காவியப் பரிசு
நாவல்[தொகு]
             புயல்
             முதலிரவு (தமிழ்நாட்டரசால் தடைசெய்யப்பட்டது)
             கன்னிகா
             பஞ்சும் பசியும்' (நெசவாளியரின் துயர் சொல்லும் நாவல்)
நாடகம்[தொகு]
             சிலை பேசிற்று
             மருது பாண்டியன்
விமரிசனம்[தொகு]
             இலக்கிய விமரிசனம்
             சமுதாய விமரிசனம்
             கங்கையும் காவிரியும்
             பாரதியும் ஷெல்லியும்
             பாரதி காலமும் கருத்தும்
             புதுமைப்பித்தன் கதைகள் - சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் (1999)
வரலாறு[தொகு]
             புதுமைப்பித்தன் வரலாறு
ஆய்வு[தொகு]
             இளங்கோவடிகள் யார்? (1984)
மொழிபெயர்ப்பு[தொகு]
             தாய் (கார்க்கியின் - தி மதர்).
             லெனினின் கவிதாஞ்சலி (மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா - விளடிமிர் இலிச் லெனின்).
             ============================================================================
             தமிழ்ப் படைப்பாளி தொ.மு. சிதம்பர ரகுநாதனின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.
             • ‘தினமணியில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்தியசக்திஇதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடுஇதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார்.
             • ‘சாந்திஎன்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.
             தமிழின் முன்னோடி எழுத்தாளரான இவரது முதல் சிறுகதை 1941-ல்பிரசண்ட விகடன்இதழில் வெளிந்தது. முதல் புதினம்புயல்’ 1945-ல் வெளியானது. தமிழக கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வை உருக்கமாக விவரிக்கும்பஞ்சும் பசியும்இவரது முக்கியமான நாவல். இதுசெக்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராளமான பிரதிகள் விற்றன. பண்டைய இலக்கியம் குறித்த இவரது படைப்பில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்இளங்கோ அடிகள் யார்?’ என்பதாகும்.
             இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், சோவியத் நாடு பதிப்பகம் மூலம் ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். மாக்சிம் கார்க்கியின்தாய்’, லெனின் கவிதாஞ்சலி ஆகியன இவரது முக்கியமான மொழிபெயர்ப்புகள்.
             புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது படைப்புகளை சேகரித்து வெளியிட்டு மகத்தான சேவை புரிந்துள்ளார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இந்த படைப்பு அவரைப் பற்றிய முக்கியப் பதிவாகப் போற்றப்படுகிறது.
             பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம் ஆகிய இரண்டு தளங்களிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் புலமையுடனும் விளங்கியவர்.
             • ‘பாரதியும் ஷெல்லியும்’, ‘கங்கையும் காவிரியும்ஆகிய படைப்புகள் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தை தமிழில் விரிவுபடுத்தினார்.
             • ‘பாரதி காலமும் கருத்தும்என்ற இவரது இலக்கிய விமர்சன நூல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. சோவியத் லேண்ட் நேரு விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்தமிழ் அன்னைபரிசு, பாரதி விருது உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார்.
             • 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், 2 நாடகங்கள் உள்ளிட்ட படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த தொ.மு.சிதம்பர ரகுநாதன் 2001-ல் பாளையங்கோட்டையில் காலமானார்.
             =============================================================
             அக்.20 - ரகுநாதன் பிறந்த தினம்
             தமிழ் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியசாந்திஇதழின் ஆசிரியர், முற்போக்கு எழுத்தாளர், புதுமைப்பித்தனின் வரலாற்றை எழுதியவர் தொ.மு.சி. ரகுநாதன். தொ.மு.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதனுடைய இலக்கிய வாழ்க்கையானது பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது.
             இதற்குக் காரணமாக அவர் பிறந்த குடும்பச் சூழலைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ரகுநாதனுடைய தாத்தா ஒரு கவிஞர். திருப்புகழ் சாமி என்ற முருகதாச சுவாமிகளின் சிஷ்யர் அவர். நெல்லைப் பள்ளு என்ற பிரபந்தத்தைப் பாடியுள்ளார். அவரின் தந்தை தொண்டைமான் முத்தையா சில நூல்களையும் எழுதியுள்ளார்.
             தீர்க்கமான சிந்தனைகள்
             சிறுவயதிலேயே பாரதியின் பாடல் களும், புதுமைப்பித்தனிடம் ஏற்பட்ட கவர்ச்சியும், இடதுசாரி அரசியல் ஈடுபாட்டால் உருவான சமுதாயக் கருத்துகளும் இதற்கு முக்கியக் காரணங்களாகத் திகழ்ந்தன. அவரது படைப்புகள் 1940-களில் பத்திரிகைகளில் வரத் தொடங்கின. 1944-ல் சென்னைவாசியாகி, புதுமைப் பித்தனோடு நேர்முகப் பழக்கம் ஏற்பட்டபோது, ஒருநாள் அவரிடம் தன்னுடையபிரிவு உபசாரம்கதையை ரகுநாதன் வாசித்துக் காட்ட, அதைக் கேட்டுவிட்டு, ‘ரகுநாதா! நான் உன்னில் என்னையே காண்கிறேன்!’ என்று பாராட்டியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
             1954-ல் ரகுநாதனின் அண்ணன் பாஸ்கரத் தொண்டைமான் ஓய்வு பெற்ற சமயத்தில், இருவருக்கும் பாகப்பிரிவினை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. ரகுநாதனின் பங்காக அவருடைய சகோதரர் மூவாயிரம் ரூபாயைக் கொடுத்தார். அந்தப் பணத்தை மூலதனமாகக் கொண்டே, 1954-ம் ஆண்டு டிசம்பர் மாதம்சாந்திஎன்னும் கலை, இலக்கிய மாத இதழை அவர் தொடங்கினார். ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்என்ற பாரதியின் வரிகள்சாந்திஇதழின் மணிவாக்காக இடம்பெற்றிருந்தன.
             சாந்தியில் எழுதிய எழுத்தாளர்கள்
             முதல் இதழில், திருச்சிற்றம்பலக் கவிராயர் என்னும் புனைப்பெயரில் ரகுநாதன் எழுதிய கவிதையும், கவிஞர் தமிழ் ஒளி எழுதிய கவிதையும், சுந்தர ராமசாமி, அகிலன், சி.வி.எஸ்.ஆறுமுகம் ஆகியோரது கதைகளும் இடம் பெற்றிருந்தன. இரண்டாம் இதழின் அட்டைப் படமாக வண்ண ஓவியம். இதழின் உள்ளடக்கமாக, டிசம்பர் 5,
             1954-ல் கல்கி மறைந்ததையொட்டி அவர் குறித்தும், சென்னையிலே கூடவிருந்த உலக சமாதான மாநாட்டை வரவேற்றும், சென்னை அரசாங்கம் நாடகத்துக்கு விதித்திருந்த தடைச் சட்டத்தைக் கண்டித்தும் தலையங்கம் இடம்பெற்றிருந்தது.
             புதுமைப்பித்தன் மலர்
             சாந்தி’ 1955, ஜூலை இதழ் புதுமைப்பித்தன் மலராக உருவாக்கம் பெற்றிருந்தது. புதுமைப்பித்தன் குறித்து ரகுநாதன் எழுதிய நீண்ட தலையங்கமும், ‘வெட்டரிவாள் பாட்டுண்டுகட்டுரையும், வையாபுரிப் பிள்ளை எழுதியபுதுமைப்பித்தன்கட்டுரையும், ‘புதுமைப்பித்தனும் இளம் எழுத்தாளரும்என்ற கு.அழகிரிசாமியின் நினைவுக் குறிப்புகளும், எஸ்.சிதம்பரத்தின்கடைசி நாட்களில்கட்டுரையும், ‘பித்தன்என்ற தமிழ் ஒளியின் கவிதையும், புதுமைப்பித்தனின்அன்னை இட்ட தீநாவலின் முதல் அத்தியாயமும், திருச்சிற்றம்பலக் கவிராயரின்உன்னைத்தான் கேட்கிறேன்கவிதையும் இவ்விதழிலே இடம்பெற்றிருந்தன.
             ஆகஸ்ட், 1955 இதழிலிருந்துநெஞ்சிலே இட்ட நெருப்புஎன்ற தன்னுடைய தொடர்கதையை எழுத ஆரம்பித்திருந்தார் ரகுநாதன். 1955, செப்டம்பர் இதழ் பாரதி மலராக வெளிவந்தது. இவ்விதழில், சாமி சிதம்பரனார், .சீனிவாசன் ஆகியோரின் பாரதி குறித்த கட்டுரைகளும், ‘சூரியன் பேசுகிறதா?’ என்கிற நா.வானமாமலையின் விஞ்ஞானக் கட்டுரையும் இடம்பெற்றிருந்தன. டிசம்பர் 1955 இதழ்சாந்தியின் ஆண்டு மலராக வெளிவந்தது. சாமி சிதம்பரனார், எஸ்.சிதம்பரம், நா.வானமாமலை, .கைலாசபதி, .ஜீவானந்தம் ஆகியோர்களின் கட்டுரைகளும், குயிலன்,
             கே.சி.எஸ்.அருணாசலம், திருச்சிற்றம்பலக் கவிராயர் போன்றவர்களின் கவிதைகளும், தி..சி.யின் ஓரங்க நாடகமும், புத்தக விமர்சனமும், திரை விமர்சனமும் இவ்விதழிலே இடம்பெற்றிருந்தன.
             சாந்தி நிறுத்தப்பட்டது
             தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சுதேசமித்திரன், ஈழகேசரி, சுதந்திரன், தேசாபிமானி, பிரசண்ட விகடன் ஆகிய இதழ்களின் வரிசையில் இடம்பெற்றசாந்திகலை இலக்கிய இதழ், பொருளாதாரப் பின்னடைவு காரணமாக 1956 ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்டது. நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்றபோது தன்னைவிட ஒரு வருடம் மூத்தவராக, சீனியர் இண்டர்மீடியட் மாணவராகப் பயின்ற தொ.மு.சி.ரகுநாதன் குறித்து தன்னுடைய கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார் தி..சி.:
             ‘‘ரகுநாதன் உணர்ச்சியைவிட உணர்வுக்கே சிறப்பிடம் அளிப்பவர். பேச்சைவிடச் செயலையே பெரிதும் மதிப்பவர். பணத்தைவிடப் பண்பையே மிகுதியாகப் பாராட்டுபவர். ரகுநாதன் ஒரு கொள்கை வீரர். பட்டம், பதவி, பணம் ஆகியவற்றுக்காகத் தன் ஆன்மாவை விலை பேசாத அபூர்வ எழுத்தாளருள் ஒருவர். ரகுநாதனிடம் ஆணவமுண்டு.
             ஆனால் அது அரை வேக்காட்டு இலக்கிய அறிவிலோ, எழுத்துத் திறனிலோ பிறந்ததல்ல. அது பழுத்துக் கனிந்த தமிழ்ப் பண்பாட்டிலும், தன்மானத்திலும், நாட்டுப் பற்றிலும், மக்கட் பற்றிலும் பிறந்த ஆணவம். ஒவ்வொரு எழுத்தாளனிடமும் இருக்க வேண்டிய தூய முனைப்பு. ரகுநாதனின் இலக்கிய ஆண்மை என்றே கூற வேண்டும். இந்த ஆண்மையை அவருக்கு அளித்த மாபெரும் குற்றவாளிகள் - கம்பனும், பாரதியும் புதுமைப்பித்தனுமேயாவர்…’’
             ================================================================================
             இலக்கியப் பெருஞ்சிகரம் தொ.மு.சி.ரகுநாதன்
             அறுபதாண்டுகளுக்கும் அதிக மாக தமிழ் இலக்கியத்தையும், தமிழ்ச்சமூகத்தையும், தமிழ்ச் சிந்த னையையும் வளப்படுத்திய மாமனி தர்களில் ஒருவர் ரகுநாதன். மக்கள் சார்ந்து சிந்தித்தப் பெருமகன் அவர். பணத்துக்கோ, பதவிக்கோ, புக ழுக்கோ ஆசைப்படாமல், மக்கள் தொண்டு என்ற திசையில் வலுவாகச் செயல்பட்டவர். எதற்கும் அஞ்சாத வர். யாருக்கும் பணியாதவர். தன் மனதில் சரி என்று பட்டதைச் சொல்லு வதற்கு ஒருபோதும் தயங்காதவர். 20ம் நூற்றாண்டுத் தமிழ் இலக் கியத் தில் நிமிர்ந்து நிற்கும் ஒரு பெருஞ் சிகரம் அவர்.நவீனத்தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த வரையில், ரகுநாதன் ஒரு முன்னோடி.
             ஒரு கலகக்காரர் அவர். சோசலிச எதார்த்தவாத நாவல் இலக்கியப் போக்கைத் தன்பஞ்சும் பசியும்நாவல் மூலம் தொடங்கி வைத்தவர். தமிழ் இலக்கிய ஆய்வை இலக்கண ஆய்வு நிலையிலிருந்தும், ரசனை ஆய்வு நிலையிலிருந்தும் சமூகநிலை ஆய்வு என்னும் ஆழ மான தளத்துக்குக் கொண்டு சென்று, ஆய்வின் எல்லையை விசாலப்படுத் தியவர். “பாரதியும் ஷெல்லியும்”, “கங்கையும் காவிரியும்ஆகிய நூல்களின் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தைத் தமிழில் விரிவுபடுத்தி யவர். “ இளங்கோவடிகள் யார்?” என் னும் அரிய நூலின் வழி, தமிழகத்தில் சமய உருவாக்கங்களைப் போல நடந்த புதுப்புதுச் சாதி உருவாக்கங் களைத் துலக்கி, சாதி இறுக்கங்களின் பொய்மையைப் பளிச்சென வெளிப் படுத்தியவர்.புதுமைப்பித்தனால் கொண்டா டப்பட்ட அற்புதமான சிறுகதையா ளர் ரகுநாதன். புதுமைப் பித்தன் என்னும் மாபெரும் எதார்த்தவா தியைத் தமிழ் இலக்கிய உலகில் நிலை நிறுத்தி, அவன் ஒளியை எங்கும் பரவவிட்டவர்.
             பாரதி என்னும் பேராளுமையை வைதீகச் சிமிழுக் குள்ளே அடைக்க முயன்றவர்களை யும், தேசபக்தி என்னும் பொன்னாடை போர்த்தி அவரை ஒதுக்க முயன்றவர் களையும், அவன் சாதியைச் சொல்லி அமுக்க முயன்றவர்களையும் புறங் கையால் ஒதுக்கித் தள்ளி விட்டு, அவனுடைய புரட்சிகர ஆளுமை யைத் துலக்கி, வளர்த்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு என்றென்றும் வழிகாட்டும் வகையில் வடிவமைத் தவர்.முரண்பாடுகளின் தொடர் கண்ணி அவர். நவீனத்துவச் சாயல் கொண்ட புயல். முதலிரவு, கன்னிகா எனப்பாலியல் சிக்கல்களின் உள வியல் முடிச்சுகளுக்குள் விடைதே டிக் கொண்டிருந்தவர்.
             திடீரெனப்பஞ்சும் பசியும்நாவல் வழியே சோசலிச எதார்த்தத்துக்குள்ளே பாய்ந்து சென்றார். சோசலிச எதார்த் தப் படைப்பு முறையைத் தமிழகத் துக்கு அறிமுகப்படுத்திய அதே அழுத்தத்தோடு, பிற்காலத்தில் சோசலிச எதார்த்தவாதக் கோட்பாடு படைப்பாளியைக் கட்சிக்கும், கட்சித்தலைமைக்கும் அடிமைப்ப டுத்தி, அவர் ஆற்றலை முடமாக்கிவி டும், அது அரசியல் சார்பு கொண் டது என அக்கோட்பாட்டின் மீது போர் தொடுத்தார். இலக்கியத்துக்குக் கொள்கை நிலைபாடு என்னும் முதுகெலும்பு வேண்டும், ஆனால் அதுவே படைப்பாளிக்குச் சுமை யாகி, அவர் பார்வையை மறைத்து விடக்கூடாது என்று எச்சரித்தார். கவிதை நெகிழ வேண்டும், தன் ஆற்றலால் அது மக்கள் திரளைப் பற்றிப்பிடிக்க வேண்டும் என்றெல் லாம் பழைய வரம்புகளை மீறி வளர்ந்தவர், சமூக வாழ்வின் ஆழ்ந்த நுட்பங்களை, ஆபூர்வ உணர்ச்சி களாகவும், சித்திரங்களாகவும் வெளிப்படுத்தும் புதுக்கவிதையைப் பிடிவாதமாக மறுத்தார்.இளைஞர்களுக்காகவே தன் பங்குச் சொத்தாகக் கிடைத்த பணத் தில்சாந்தியைத் தொடங்கியவர், பின்னாளில் இளைஞர்கள் நெருங் கவே அஞ்சும் மனிதராக இறுகினார்.
             பிறரிடம் எளிதில் பழகாதவர், பழகியவர்களிடமிருந்து விலகவும் மறுத்தார். ருஷ்ய வகை மார்க்சியத் தைத் தொடக்கத்தில் ஏற்றுக் கொண்டிருந்த அவர், பிற்காலத்தில் கிராம்ஷியின் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, இந்தியா வின் சாதி ஆய்வுக்கும் அதை விரிவு படுத்திப்பார்த்தார்.என்ன தெரிகிறது? அவருடைய இடைவிடாத தேடல் தெரிகிறது. ஆம், தேடல் நிறைந்தவர் அவர். உண்மையைத் தேடுவதில் இடை விடாத நாட்டம் கொண்டிருந்தவர் அவர். புதுக்கவிதையினுள் அவர் தொடர்ந்து தேடியிருந்தால், அது பற்றிய தன் பார்வையைக் கூட அவர் மாற்றிக் கொண்டிருப்பார் எனத் தோன்றுகிறது. எங்கும் எதிலும் தேங்கிப் போகாத அருவி உள்ளம் அவர் உள்ளம். தீவிர புத்தகப் பிரியர் ரகுநாதன். தன் தந்தையாரின் நூலகத்தைத் திருட்டுச் சாவி போட்டுத் திறந்து, உள்ளே இருந்த அரிய நூல்களை யெல்லாம் விரும்பிச்சுவைத்தார். பழந்தமிழ் இலக்கியங்கள் நவீனத் தமிழ் இலக்கியங்கள், மலையாளம், கன்னடம், வங்கம், இந்தி என இந்திய மொழிகளில் வந்த சிறந்தனவற்றைப் பொறுக்கிப் பொறுக்கிப் படித்தார்.
             ஐரோப்பிய, ருஷ்ய இலக்கியங்களின் உச்சங்களில் திளைத்து மகிழ்ந்தார். வாசித்தவர் மட்டுமல்ல புத்தகங் களை நேசித்தவர் அவர். தந்தையா ரின் நூலகத்தைப் போல் தனக்கும் ஒரு நூலகத்தை உருவாக்கி கொண் டார். அந்த நூல்களிடையே காலம் முழுவதும் வாழ்ந்தார், உழைத்தார். சொந்த வீடற்ற அவர், வாழ வீடு தேடிய போதெல்லாம், தன் நூல்கள் வாழ இடமிருக்கிறதா என்பதை முதலில் தேடினார். இரவலுக்கோ, இலவசத்துக்கோ, எவருக்கும் அவர் புத்தகம் கொடுத்ததில்லை. தன் இறு திக் காலத்தில் இந்த நூல்கiளுக்குப் பல லட்சம் ரூபாய் தருவதாகப் பலர் கெஞ்சியும் மசியாமல், பாரதி மீதுள்ள பற்றால், எட்டையபுரம் பாரதி நூலகத்துக்கு அத்தனை நூல் களையும் ஆசையோடு வழங்கினார். முதுமையைப் பொருட்படுத்தாமல் எட்டையபுரம் போய் பலநாள் தங்கி, நூல்கள் அனைத்தையும் அடுக்கி ஒழுங்குப்படுத்தினார். தன் எச்சங்க ளாகத் தன் படைப்புகளுக்கு அடுத்த படி, இந்த நூலகத்தைத் தன் நினை விடமாக உருவாக்கிக் கொண்டார் ரகுநாதன்.ரகுநாதனின் உரையாடல்கள் சங்க இலக்கியங்களிலிருந்து புது மைப்பித்தன் இலக்கியம் வரை, ஆங்கில இலக்கியத்திலிருந்து லத்தீன் அமெரிக்க இலக்கியம் வரை பருந்து போல அலையும்.
             ஷேக்ஸ் பியர் பற்றி அவர் பேசத்துவங்கினால், அவரைப் பற்றி நேற்றுவரை வந்த விமர்சனங் கள் அவர் பேச்சில் மின்னும்.ரகுநாதனின் உரையாடல்கள் ஒவ் வொன்றுமே இலக்கியத்தை மறுவா சிப்புச் செய்யும் போக்கில் அமைந்தி ருக்கும். குடும்பச் செய்திகள், உறவினர் களைப் பற்றிய செய்திகள், அவர்க ளுடைய சிறப்புகள், சிறப்பின்மை கள் எல்லாவற்றையும் மனம் திறந்து பேசுவார். அவருடைய இந்த உரை யாடல்களுக்குள்ளே நுழைந்து பார்க்கும் போதுதான், பொய்யாமைச் சமூகத்தை அவர் வெறுப்பதற்கும், ஒதுக்குவதற்குமான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியும். அளவுக்கதி கமான நேர்மை, கறார்த்தன்மை, மதிப்பிடும் தன்மை இவைகளே அவரைத் தனிமனிதராக்கின. நகை செய்யப் பயன்படாத சுத்தத் தங்கம் அவர்.
             (“தொ.மு.சி.ரகுநாதன்நூல் முன்னுரையிலிருந்து)



No comments:

Post a Comment