ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) மூத்த தமிழக பெண் எழுத்தாளர்
ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின்
படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
பொருளடக்கம்
[மறை]
1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர்.
பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம்
செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15வது வயதிலேயே கிருஷ்ணனுக்குத்
திருமணம் செய்துவைக்கப்பட்டது.[1] திருமணத்திற்குப் பின்னர் சென்னை
கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார். [2] மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல
புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.
பொதுவாக தனது படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள
பகுதிகளுக்கு நேரில் சென்று,
அங்குவாழும் மக்களோடு நெருங்கிப் பழகி
உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான
முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர் .[1]1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள
மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை
எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர்.
அதன் விளைவாக 'முள்ளும் மலரும்'
என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக்
கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர். இவரின் 80-க்கும் மேற்பட்ட
படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க
காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.
இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன.
இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே
அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே. [2]
கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம்
வயதில், 2002 ஆம் ஆண்டில்,
அவர் இயற்கை எய்தினர். ராஜம் -
கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. முதுமையில் வறுமையால் வாடிய இவர் சென்னையில் உள்ள விஸ்ராந்தி
ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை
போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு
காலமானார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா
மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம்
தெரிவித்திருந்தார்.[3]
ராஜம் கிருஷ்ணன் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும்
பெற்றவர். அவற்றுள் சில:
·
1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
·
1975—சோவியத் லாண்ட் நேரு விருது
·
1991—திரு.வி.க. விருது
இவரின் படைப்புகளுள் சில:
9.
மாறி மாறி பின்னும்
10.
மலர்கள்
13.
வளைக்கரம்
14.
ஊசியும் உணர்வும்
15.
இடிபாடுகள்
16.
அலை வாய்க்கரையில்
17.
கூடுகள்
18.
அவள்
19.
முள்ளும் மலர்ந்தது
20.
குறிஞ்சித் தேன்
22.
அன்னையர்பூமி
2.
காலம்தோறும் பெண்மை
3.
யாதுமாகி நின்றாய்
1.
டாக்டர்
ரங்காச்சாரி
2.
பாஞ்சாலி சபதம்
பாடிய பாரதி
3.
சத்திய தரிசனம்
1.
காலம்; சேகர் பதிப்பகம், சென்னை 78; பதிப்பு 2014
·
·
ராஜம் கிருஷ்ணன் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமை. 1925இல் முசிறியில்
மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த இவரது பூர்வீகம் நெல்லை மாவட்டம். உயர் கல்வியும்,
வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு இவருக்கு அக்கால நியதிப்படி இளம்
வயதில் திருமணமாயிற்று. மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தின் அழுத்தத்தில் மூச்சுத்
திணறிக் கொண்டிருந்த காலத்தில் படைப்பாற்றல் மட்டுமே அவருக்குப் பற்றுக்கோலாக
இருந்தது. இரவு நேரத்தில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சமையலறையைக் கழுவித்
தள்ளிவிட்டு அதன் ஈரம் காயாத தரையில் உட்கார்ந்துகொண்டு எழுதுவார். எழுதுவதற்கு
காகிதம் வேண்டுமே? கடையில் பெரிய தாள்களில் வழங்கப்பட்ட
ரசீதுகளின் மறுபக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.
·
பெண் எழுத்தாளர்கள் என்றாலே குடும்பக்கதை எழுதுபவர்கள் என்ற
பிம்பத்தை உடைத்தெறிந்தார் ராஜம் கிருஷ்ணன். அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். நிறைய
புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். தென்னிந்திய மொழிகளையும், ஆங்கிலத்தையும் சுய முயற்சியில் கற்றார். ரஷ்ய மொழியையும் ஓரளவு அறிந்து
வைத்திருந்தார். ஒரு நாவல் எழுத வேண்டுமெனில் அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட
உள்ளடக்கத்துடன் தொடர்புடைய ஊர்களுக்குப் பயணம் செய்து, அந்த
மக்களுடன் வாழ்ந்து களப் பணியாற்றி எழுதிய முதல் பெண் எழுத்தாளர் அவர்தான்.
·
கணவருக்கு மின் வாரியத்தில் வேலை என்பதால் வெவ்வேறு ஊர்களில்
வசிக்க நேர்ந்தது. அந்த வாய்ப்பையும், சூழலையும் பயன்படுத்திக்கொண்டு நாவல்களை
எழுதினார். நீலகிரியில் வாழும் படுகர்களின் வாழ்வுச் சூழலை விவரித்து எழுதப்பட்ட
நாவல் ‘குறிஞ்சித்தேன்’. சம்பல்
கொள்ளையரின் போராட்ட வாழ்வையும், அந்த வாழ்வைத் தேர்வு செய்ய
நேர்ந்த அவர்களின் நிலவியல் அமைப்பு சார்ந்த சூழலையும் விவரிக்கும் நாவல் ‘முள்ளும் மலர்ந்தது’.
·
‘சேற்றில் மனிதர்கள்’ மற்றும் சாகித்ய அகாடமி விருது
பெற்ற ‘வேருக்கு நீர்’ இரண்டு
நாவல்களுமே அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை
மையப்படுத்திய நாவல்கள்.
·
ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள் அனைத்திலும் சமூக அக்கறையும், பெண்நிலை பார்வையும்
இழையோட்டமாக இருக்கும். முதல் நாவலான ‘பெண் குரல்’, கூட்டுக் குடும்ப வாழ்வில் ஒரு பெண் அனுபவிக்கும் மன அழுத்தத்தைப் பதிவு
செய்தது. ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’ நாவல்
பெண் சிசுக் கொலைக்கான காரணங்களை ஆராய்கிறது.
·
‘காலம்தோறும் பெண்’ என்ற கட்டுரைத் தொகுப்பில்
பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட பின்னணியின் தடங்களைத் தேடிப் பயணித்தார்
ராஜம் கிருஷ்ணன். இதன் தொடர்ச்சியாக எழுதப்பட்ட மற்றொரு தொகுப்பு ‘காலம்தோறும் பெண்மை’. ‘யாதுமாகி நின்றாய்’ தொகுப்பு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களைப் பட்டியலிடுகிறது.
இன்று பெண்ணுரிமை முழக்கமிடும் அத்தனை படைப்பாளிகளுக்கும் இவர்தான் முன்னோடி
என்றால் அது மிகையில்லை.
·
நாற்பது புதினங்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார். தவிர, சிறுகதை தொகுப்புகள்,
கட்டுரைத் தொகுப்புகள், குறுநாவல்கள், குழந்தை இலக்கியம், கவிதைகள் என்று அவரது படைப்பு
முயற்சி ஐம்பதாண்டுகளைக் கடந்து 2002 வரையிலும் நீடித்தது.
·
சமூக அக்கறை
·
வாழ்க்கை வரலாற்று நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார். டாக்டர்
ரங்காச்சாரி, பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி, பாதையில் பதித்த அடிகள்
ஆகிய மூன்றும் இந்த வகையைச் சேர்ந்தவை. பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியின்
சிறப்பம்சம் அதில் இழையோடும் பெண் நிலைப் பார்வை!
·
சாகித்ய அகாடமி விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, திரு.வி.க. விருது, சாஷ்வதி விருது போன்ற பல
விருதுகள் ராஜம் கிருஷ்ணனைத் தேடி வந்துள்ளன. காந்தியக் கொள்கைகளின்பால் மதிப்பும்
இடதுசாரிக் கொள்கைகளின்பால் ஈடுபாடும் கொண்டவர் இவர். இந்திய மாதர் தேசிய
சம்மேளனம் மற்றும் ஜனநாயக மாதர் சங்க மாநாடுகளில் பங்கெடுத்திருக்கிறார்.
·
சோவியத் யூனியனின் வீழ்ச்சி இவரைக் கடுமையாகப் பாதித்தது. இவர்
சமீபத்தில் எழுதிய நாவல் உத்தரகாண்டம் (2002), இடதுசாரி இயக்கங்களின் தோல்விக்கான
காரணங்களை ஆராய முற்படுகிறது. தேர்தல் அரசியலில் சிக்கிக்கொண்டதால் இலக்கை அடைய
முடியாமல் போனதாகச் சுட்டிக்காட்டும் இவர், அரசியல் சார்பற்ற
ஒரு இயக்கம் குறித்து எழுதியிருக்கிறார்.
·
கிழக்குத் தாம்பரத்தில் உள்ள வீட்டில் கணவருக்குக் கிடைத்த சொற்ப
ஓய்வூதியத்திலும், வர்த்தகம் தவிர்த்த தன் எழுத்துப் பணிக்குக் கிடைத்த தொகையிலும் எளிமையாக
வாழ்ந்துவந்தார்.
·
வாழ்க்கையின் பெரும்பகுதியை தொலைபேசி இல்லாமலே கடத்தியவர். எங்கு
போவதானாலும் பஸ்ஸிலும், ரயிலிலும்தான் பயணம். ஒரு முறை தூா்தா்ஷன் நேர்காணலுக்கு
ஒப்புக்கொண்டிருந்தார். “வரும்போது எழுதிய புத்தகங்கள்,
வாங்கிய விருதுகளைக் கொண்டு வாருங்கள்” என்று
சொல்லிவிட்டார்கள். அத்தனையும் சுமந்துகொண்டு பஸ்ஸில் வந்திருந்தார்.
·
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து ஒரு பெண் என்ற வகையில் குடும்ப
அமைப்பின் நெருக்கடிகளைச் சமாளித்து அதிலேயே தன் அடையாளத்தை இழந்து போகாமல் ஒரு
இலக்கியவாதியாக தன்னை விரிவுபடுத்திக்கொண்டவர் ராஜம் கிருஷ்ணன். மிடுக்கும், கம்பீரமும் கலந்த ஒரு
தோற்றம் அவருக்கு இயல்பாக அமைந்திருந்தது.
·
உதாரண மனுஷி
·
எழுத்துப் பணி ஆட்கொண்டதில் இயல்பு வாழ்க்கையின் பற்றுக்கோல்களை
அவர் உருவாக்கிக்கொள்ளவே இல்லை. சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது, கள ஆய்வு மேற்கொள்வது, எழுதுவது என்று தன்
வாழ்க்கையை வகுத்துக்கொண்ட இவர், பணத்தைக் கையாளத்
தெரிந்துகொள்ளவே இல்லை.
·
கணவர் இறந்த பிறகு வீட்டை விற்றார் ராஜம் கிருஷ்ணன். தூரத்து
உறவினர் ஒருவர் அவரிடம் இருந்த மொத்தப் பணத்தையும் அபகரித்துக்கொண்டார். கீழே
விழுந்து காலை முறித்துக்கொண்ட அவரைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டுக் காணாமல்
போய்விட்டார். நிராதரவான நிலையில் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். முதியோர்
இல்லத்தில் தன் இருப்பை அவரால் ஏற்க முடியவில்லை. ஜனநாயக மாதர் சங்கத் தோழர்கள்
சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அவரைக் கொண்டுபோய் சேர்த்தனர். தொடர்ந்து
அந்த மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார். சேவை உள்ளம் கொண்ட டாக்டர் மல்லிகேசன்
வீட்டிலிருந்து உணவு வருகிறது.
·
எண்பத்தொன்பது வயதாகும் ராஜம் கிருஷ்ணன் மிகவும் தளர்ந்து
போயிருக்கிறார். சில மணி நேரங்கள்தான் நாற்காலியில் உட்கார முடிகிறது. அந்த
நேரத்தையும் செய்தித்தாளில் கண்களை ஓட்டியபடி செலவிடுகிறார். இந்த அறிவார்ந்த
ஆர்வமும், நாட்டு நடப்பு குறித்த அக்கறையும் அவரது தனித்தன்மை. உழைப்பும், தேடலும், படைப்பாற்றலும் அவரை ஒரு உதாரண
மனுஷியாக்கியிருக்கின்றன.
·
அஞ்சலி | ராஜம் கிருஷ்ணன்
·
ராஜம் கிருஷ்ணனின் 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி' நூலை, நான் பணிபுரிந்த கல்லூரியில், எனது சக பேராசிரியை தமிழரசிதான் பரிந்துரைத்தார். தொடர்ந்து ராஜம்
கிருஷ்ணனின் நாவல்களைத் தேடிப் படித்தேன். எழுத்தாளரை நேரில் சந்திக்கும்
ஆர்வத்துடன் இருவரும் ஒரு நாள் கிழக்குத் தாம்பரம் போரூர் தெருவில் உள்ள அவரது
வீட்டுக்குச் சென்றோம். அதன் பிறகு அந்த முகவரி எங்கள் வாழ்வின் ஓர் அங்கம் போல்
ஆகிவிட்டது. சந்திப்புகள் தொடர்ந்தன. ஒவ்வொரு வருடமும் தீபாவளி நாளில் எங்கள்
வருகைக்காக அவரும் அவர் கணவர் கிருஷ்ணனும் காத்திருப்பார்கள். எங்கள் வருகைதான்
அவர்களுக்குத் தீபாவளி!
·
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
·
அவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் மிக முக்கியமானவை. டாக்டர்
ரங்காச்சாரி, பாரதியார் ஆகியோரைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டதால் பல அரிய
தகவல்கள் நிறைந்தவை. குறிப்பாக 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி'
என்ற நூல் பாரதியின் வாழ்க்கையை பெண்நிலை நோக்கில் ஆராய்ந்து
எழுதப்பட்டது.
·
பெண் விடுதலைக்கு முழக்கமிட்ட பாரதிக்கு இரண்டு மகள்கள். வயதுக்கு
வரும் முன்பே திருமணம் முடிப்பது அக்கால நியதி. இதைக் கடுமையாக எதிர்த்தவர் பாரதி.
தன் மகள்களின் திருமண விஷயத்தில் ஒரு தகப்பனாக அவர் எதிர்கொண்ட சமூக நிர்ப்பந்தத்தின்
வலியை அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். பாரதியின்
மரணத்துக்குப் பின் செல்லம்மா பாரதி விதவைக் கோலம் மேற்கொள்ள நேர்ந்தது ஏன் என்ற
கேள்விக்கும் விடை தேடியிருக்கிறார். கடைசி அத்தியாயத்தைப் படிக்கும் எவருக்கும்
கண்களை நீர் நிறைக்கும்.
·
கள ஆய்வு முன்னோடி
·
1990-ல் மணலூர் மணியம்மா குறித்த ஆய்வை அவர் மேற்கொண்டபோதுதான் எனக்கு அவருடன்
பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. தனது 'சேற்றில்
மனிதர்கள்' நாவலுக்காகத் தஞ்சை பகுதியில் கள ஆய்வு
செய்யும்போதே மணலூர் மணியம்மாளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார் ராஜம் கிருஷ்ணன்.
·
விவசாயத் தொழிலாளர் மத்தியில் உரிமை உணர்வு ஊட்டிய அந்த வீரப்
பெண்மணி 1950-களில் இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் பிரபலமாக இருந்தார். மணியம்மா,
ஆண்களைப் போல் வேட்டியும் மேல்சட்டையும் அணிந்திருப்பார், முடியை வெட்டி கிராப் வைத்திருப்பார், சைக்கிளில்
பயணிப்பார், சிலம்பம் பயின்றவர் போன்ற தகவல்கள்
பெண்நிலைவாதியான ராஜம் கிருஷ்ணனின் ஆர்வத்தைத் தூண்டின.
·
1953-ல் மணியம்மா இறந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான விவசாயிகள்
உணர்ச்சிப் பெருக்குடன் கலந்துகொண்டனர். அவரது இறப்பிலும் மர்மம் நீடித்தது. அவரது
சாவு தற்செயலாக நிகழ்ந்ததா, திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற
கேள்விகளுக்கு விடை காணும் ஆர்வம் ராஜம் கிருஷ்ணனைப் பற்றிக்கொண்டது.
·
மரணத்தின் மர்மத்தைத் தேடி
·
திருவாரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஹோட்டல் அறை ஒன்றில்
தங்கிக்கொண்டோம். தினமும் டவுன் பஸ் பிடித்து கிராமங்களுக்குப் போவோம். எங்களுக்கு
வழிகாட்டி உதவ அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர் கோபால்
உடன் வந்தார். கிராமத்துப் பாதைகளில் கால்நடைப் பயணம்தான். வெயில் உக்கிரமாக
இருந்த கோடைக்காலம் அது. ராஜம்கிருஷ்ணனுக்கு வெயிலோ, தனது 65 வயதோ ஒரு
பொருட்டாகவே இல்லை. மணலூர் அக்ரஹாரத்தில் மணியம்மாளின் உறவினர்களில் தொடங்கிப்
பலரைப் பேட்டி எடுத்தார் ராஜம் கிருஷ்ணன். துருவித் துருவி அவர் கேட்பதை, டேப்ரிக்கார்டரில் பதிவு செய்வது என் வேலை.
·
ஒரு வாரம் பல்வேறு தகவல்களைத் திரட்டிய பின்பு மணியம்மாளின் சாவு
நடந்த கிராமத்துக்குப் போனோம். பண்ணை வீட்டுக்குப் பேச்சுவார்த்தைக்கு வந்த
மணியம்மா பேருந்தைப் பிடிக்க நடந்து போனபோது மான் முட்டி, கீழே விழுந்தார்.
மான் கொம்பு விலாவுக்குக் கீழே குத்திக் குடல் சரிந்ததால் இறந்துபோனார் என்ற தகவலை
அங்கிருந்த கிராமவாசிகள் விதவிதமாகத் தங்கள் கற்பனைக்குத் தகுந்தபடி
சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
·
அது திட்டமிடட்ட சதியா என்பது துலங்கவில்லை. சுமார் நாற்பது
ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு நிகழ்வைத் தங்கள் நினைவு அடுக்குகளிலிருந்து
மீட்டுச் சொல்வது இவர்களுக்குச் சாத்தியமில்லை என்று எனக்குத் தோன்றியது.
·
ஆய்வில் ஏற்பட்ட சலிப்பு
·
"உருப்படியாக யாராவது பேசினால் மட்டும் பதிவு செய்ய வருகிறேன்" என்று
அவரிடம் சொல்லிவிட்டு மர நிழல் தேடி வேர் திரட்டின் மீது உட்கார்ந்தேன். முதியவர்
ஒருவர் என்னை நெருங்கி வந்து, "இதையெல்லாம்
விசாரிக்கிறீங்களே நீங்க என்ன போலீசா?" என்று கேட்டார்.
சிரிப்பை அடக்கிக்கொண்டு, "அவர் கதை எழுதுபவர், மணியம்மாவின் கதையை எழுதத் தகவல் திரட்டுகிறார்" என்றேன்.
"அந்தம்மாவை மான் முட்டிச்சே அப்ப நான் அங்கேதான் இருந்தேன். நேரில்
பார்த்தேன்" என்றார் அவர்.
·
நான் ராஜம் கிருஷ்ணனை அழைத்து அவரை அறிமுகம் செய்தேன். உற்சாகமாகப்
பேட்டியைத் தொடங்கினார். நான் டேப்ரிக்கார்டரை இயக்கினேன். "என் பேரு
நாகப்பன். ஊரு பிணைவாசல். சம்பவம் நடந்தபோது நான் வண்டியிலிருந்து நெல் மூட்டைகளை
இறக்கிக்கொண்டிருந்தேன். பண்ணை யாரு ஒரு கலைமான் வளர்த்துக்கிட்டிருந்தாரு. அது
இங்கே, அங்கே திரியும். அதைப் பராமரிக்க ஒரு பையன் இருந்தான். அவன் மானின்
மூக்கில் ஒரு குச்சியை நுழைத்து, அதுக்கு வெறி ஏத்தி அம்மா
நடந்துவந்த பக்கமா ஏவிவிட்டதை நான் கண்ணால பார்த்தேன். அம்மா வெள்ளைத் துணிதான்
எப்பவும் போட்டிருப் பாங்க. வெள்ளையக் கண்டா மானுக்கு ஆவாது. அது கொம்பால முட்டி
குடலை உருவிடுச்சு."
·
கண்ட உண்மை
·
நான் திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். நாகப்பனின் முக பாவமும், பேச்சின் தொனியும்
உண்மைதான் என்று நம்பும் வகையில் இருந்தது. அதுவே போதுமானதாக எனக்குத் தோன்றியது.
ராஜம் கிருஷ்ணனுக்கு அது போதவில்லை. திரும்பத் திரும்ப நாகப்பனை விசாரித்தார். தன்
வயதை உத்தேசமாகத்தான் நாகப்பனால் சொல்ல முடிந்தது. மணியம்மாள் இறந்த ஆண்டுடன்
அதனைக் கணக்கிட்டு எதிரிலிருக்கும் சாட்சியம் சத்தியமானதுதான் என்று தெளிந்தார்.
அநேகமாகத் தனது ஒவ்வொரு நாவலையுமே கள ஆய்வு செய்து தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான்
அவர் எழுதியிருந்தார்.
·
ராஜம் கிருஷ்ணனின் எழுத்து நடை அழகியல் சார்ந்ததல்ல. பெரும்பாலும்
உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை முன்னிறுத்திய படைப்புகள் அவருடையது.
அதனாலேயே கோடை மழைக்கு முன்பு உணரும் வெக்கையை ஒத்த ஒரு உணர்வை ஏற்படுத்தக்கூடியது.
தகவல் திரட்டி எழுதிய பாங்கில் அவர் சில பிரச்சினைகளின் வேர்களைத் தவற
விட்டிருக்கலாம். சில பரிமாணங்களை கவனிக்காமல் விட்டிருக்கலாம். அவரது அரசியல்
கண்ணோட்டத்தில் சார்புத் தன்மை இருந்திருக்கலாம். ஆனாலும் அவரது தேடலில் நேர்மை
இருந்தது. அவரது உழைப்பும், இடையறாத படைப்பாக்கமும் பிரமிக்கத்தக்கவை.
·
நண்பர்கள் மற்றும் ஆதரவு
·
கணவர் கிருஷ்ணனின் மறைவுக்குப் பிறகு உறவினர் ஒருவரை நம்பிக்
கையிருப்பைத் தொலைத் தார் ராஜம் கிருஷ்ணன். அவர் நிராதரவாக இருப்பதாகச் செய்திகள்
வெளியாயின. ஆனாலும் அவரது இறுதிக் கால அனுபவங்கள் ஒருபோதும் மோசமானதாக இல்லை. அவர்
விருப்பத்தின்படி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அவரைத் தொடர்ந்து பராமரித்தது.
சுமார் ஐந்தாண்டுகள் எந்த எதிர்பார்ப்புமின்றி மனித நேயத்துடன் அவருக்குச் சேவை
செய்த மருத்துவர்களையும், செவிலியர்களையும், மருத்துவப் பல்கலைக் கழகத்தின்
வேந்தர் வெங்கடாசலத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரது எழுத்துக்களை
நாட்டுடைமை செய்து ஒரு பெரும் தொகையை தானே நேரில் சென்று வழங்கினார் முன்னாள்
முதல்வர் கருணாநிதி. எழுத்தாளர்களும், இடதுசாரித்
தலைவர்களும் அவ்வப்போது சென்று பார்த்தனர்.
·
வாரம் தவறாமல் அவரை நலன் விசாரித்த நண்பர்கள் சிலர் அவருக்கு
வாய்த்திருந்தார்கள். சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு நன்றாகப் பேசும் நிலையில்
இருந்த அவர் 'பாதையில் பதிந்த அடிகள்' என்ற தனது நூல்
செம்பதிப்பாக வெளிவர வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார். கோபுலுவின்
சித்திரங்களுடன் காலச்சுவடு பதிப்பகம் அதனை வெளியிட்டது. புத்தகம் வெளிவந்தபோது
படிக்க முடியாவிட்டாலும் சித்திரங்களைப் பார்த்து உணர்ச்சிவயப்பட்டார் ராஜம்
கிருஷ்ணன். எத்தனையோ சோதனைகளுக்கு நடுவில் தனக்கான கவுரவத்தை இறுதிவரை தக்க
வைத்துக்கொண்ட ஒரு சாதனை மனுஷியாகத்தான் அவர் வாழ்ந்திருக்கிறார்.
No comments:
Post a Comment