Thursday, December 16, 2021

ராகம் தேடும் பல்லவி

ராகம் தேடும் பல்லவி கிராமத்தில் சினிமா கனவுகளுடன் சாதிக்க துடிக்கும் இளைஞன் அவனுக்கு ஒரு காதலி சம்பாதியம் இல்லாததால் அவனை அவன் வீட்டாரே ஏளனமாக பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் அவன் காதலி வீட்டார்? இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்க ஒரு கட்டத்தில் ஊர் முழுவதும் இவர்கள் காதல் தெரியவருகிறது மற்றவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ அவன் மனதில் எழும் கேள்வி இந்த நிமிடம் நம்மை நம்பி வந்தால் எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணம் அவனை அந்த ஊரில் இருந்து சென்னைக்கு போக வைக்கிறது அப்போதும் தன் காதலி நகையை கழட்டி உதவுகிறாள். 

 முதல் பாதி மிக கவிதையாக இருக்கும் இந்த படத்தில் தன் காதலியிடம் தான் எழுதிய கதையை கூறுவார் அது ஒரு குறும்படம் போல இருக்கும் காட்சியாகவே படத்தில் வரும் அட்டகாசமாக T.ரஜேந்தர் இயக்கி இருப்பார். படத்தில் வரும் மூங்கிலிலே பாட்டிசைக்கும் பாடல் அற்புதமான வரிகளை கொண்டது எனக்கு மிகவும் பிடித்த வரிகள். 

 ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ. செங்கரும்புச்சாரும் செவ்விதழில் தானே இனிப்பெனும் சுவையை கற்றுக்கொண்டது. அற்புதமான வரிகள் பல வெளிபடங்களுக்கு இசையமைத்து இருந்தால் பல அற்புதமான பாடல்கள் கிடைத்து இருக்கும். சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வரும் நாயகன் சினிமாவிலும், காதலிலும் ஜெய்தாரா என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

 https://www.youtube.com/watch?v=EKwOSd7vCYc

Tuesday, December 7, 2021

திங்கள் மாலை வெண் குடையான் -ILANGO ADIGAL K J YESUDOSS SALIL CHOUDHRY

திங்கள் மாலை வெண் குடையான்

 சென்னி செங்கோல் அது ஓச்சி 
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் 
புலவாய் வாழி காவேரி 
 கங்கை தன்னைப் புணர்ந்தாலும் 
புலவாதொழிதல் கயற்கண்ணாய் 
மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி 
 மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி கன்னி தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கன்னி தன்னை புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய் மன்னும் மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி உழவர் ஓதை மத கோதை உடை நீர் ஓதை தண்பதம் கொள் விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்ததெல்லாம் வாய்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி

Ezhisai Geethame - HQ Digital Audio - ஏழிசை கீதமே - Rasigan Oru Rasigai

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே 

வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான் 
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன் கானம்... 
கானம் ஜீவ கானம் பிறக்காதோ 
இங்கே ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே... 
 ஏதோ ராகம் எனது குரலின் வழி தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர கேட்கும் யாரும் உருகி உருகி விழ காதில் பாயும் புதிய கவிதை இது அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ... ஏனோ... 
நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம் உயிரே உயிரே... 
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே...
 கையில் ஏந்தும் மதுவின் மயக்கமுண்டு கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு உறவு எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை தனிமை கொடுமையில்லை இனிமை இனிமை இதுதான் நான் தான்...
 பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத மனிதன் மனிதன் ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான்... 
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன் கானம்... 
கானம் ஜீவ கானம் பிறக்காதோ 
இங்கே ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே 


Poovannam Pola Nenjam - பூ வண்ணம் போல -சலீல் சௌத்திரி

Azhiyaatha Kolangal - Salil Chowdhury - ஆண் : பூ வண்ணம்…… போல நெஞ்சம்……. பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம் பெண் : பூ வண்ணம்……. போல நெஞ்சம்…… பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம் இருவர் : பூ வண்ணம்….. போல நெஞ்சே……..ஹே… ஏஹே… ஆண் : ஆ ஹாஹா… பெண் : ஆ ஹாஹா… பெண் : இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ ஆண் : பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ பெண் : இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ ஆண் : பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ பெண் : இணைந்த வாழ்வில் பிரிவுமில்லை தனிமையும் இல்லை ஆண் : பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும் பெண் : பூ வண்ணம்……. போல நெஞ்சம்…… ஆண் : பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் பெண் : எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம் இருவர் : பூ வண்ணம்……. போல நெஞ்சே…….ஹே… ஏஹே… ஆண் : படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள் துடிக்கும் தேகமோ என் வெள்ளங்கள் பெண் : பனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் மூட்டங்கள் என் இன்பங்கள் ஆண் : படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள் துடிக்கும் தேகமோ என் வெள்ளங்கள் பெண் : பனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் மூட்டங்கள் என் இன்பங்கள் ஆண் : பிணையும் போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம் பெண் : இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும் ஆண் : பூ வண்ணம்…… போல நெஞ்சம்……. பெண் : பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் ஆண் : எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம் இருவர் : பூ வண்ணம்……. போல நெஞ்சே…….ஹே… ஏஹே… ஹே… ஏஹே… ஹே… ஏஹே… https://www.youtube.com/watch?v=WYowSWt_hj4

Kannan Varugindra Neram By Kum. Sivasri Skandaprasad கண்ணன் வருகின்ற நேரம்

கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad கண்ணன் வருகின்ற நேரம் கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்! (கண்ணன்) சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசைபாடும்! (கண்ணன்) கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்! (கண்ணன்) தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன செளக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின் முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே மெத்த மெத்தப் பேசி நேர்வோம்! (கண்ணன்)" https://www.youtube.com/watch?v=5jSRcf1cBD4

Tuesday, June 1, 2021

இசைஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

காலையில் குடிக்கும் முதல் காபியே அவரது இசை போல் இனிக்க வேண்டும்

 கூடவே “புத்தம் புது காலை பொன் நிற வேளை ” 

 எந்த ஊர் போனாலும் “ சொர்க்கமே என்றாலும்” 

 “அடி ஆத்தாடி”யுடன் முதல் காதல்

 “கண்மணி அன்போடு காதலன் ” கேட்காமல் கவிதையா ! 

 ”இளமை இதோ இதோ “ “ஆசை நூறு வகை” யுடன் புத்தாண்டு

 தொலைதூர பயணத்தின் போது கேட்கத் 

 “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” வேண்டும் 

 உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் 

 “வளையோசை கலகலகலவென” 

 தீபாவளி என்றால் “பட்டாச சுட்டு சுட்டு போடட்டுமா “ 

 பொங்கல் என்றால் “அந்தி மழை மேகம் தங்க மழைதூஉம்” 

வேண்டும்

 இன்னும் பதினைந்து நாட்களில் மார்கழி எனவே

 “மாருகோ மாருகோ” தான் 

 இயற்கை அண்ணை நம்மை எதற்கோ தயார் செய்துகொண்டிருக்கிறார்

 அடடே “ஆகாய வெண்ணிலவே” கூடவே “சின்ன சின்ன வண்ணக்குயில்”

 நாளை உலக அழிவு ! இன்றே கடைசி ! 

நாடி நரம்புகளிஎல்லாம் வீரம் பிறக்க 

 தளபதியில் “ராக்கம்மா கைய தட்டு” 

மீண்டும் ஒருமுறை காலம் சென்ற நண்பர்களே 

“உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா” 

 நம் லட்சியமே நமக்கு தடையாகி விட கூடாது 

 மீண்டும் கேள் “உன்னால் முடியும் தம்பி தம்பி” 

 அக்னி நட்சத்திரத்திலும் “அந்தி மழை பொழிகிறது” 

 எல்லா நறுமணங்களும் “வெட்டி வேறு வாசத்திற்கு” அடிமைதான் 

 எல்லா மதுபான கடையிலும் கேட்கலாம் 

 “ஏ தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான்”

 “தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு”

 “ஒரு மூணு முடுச்சால முட்டாளா ஆனேன்”

 “ஊர தெரிஞ்சுக்கிட்டேன்” 

 ஊர் திருவிழா சிறந்தது காலை “மாரியம்மா மாரியம்மா ” 

 பஞ்சாயத்து தலைவர் வரும்பொழுது 

 “அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவனே” 

 மாலை “மாங்குயிலே பூங்குயிலே” 

 “அந்த நிலாவத்தான் நா கையில புடுச்சேன்”

 “ நிலா காயுது” 

 “ நேத்து ராத்திரி ” 

 கல்லூரி இன்ப சுற்றுலாவில் 

“என் இனிய பொன் நிலாவே” 

 மேடைகளில் “ஒ வசந்த ராஜா ” 

 காதலியை வர்ணிக்க நான் தேர்ந்தெடுத்தது 

“மயில் போல பொண்ணு ஒன்னு” 

 முதல் முறை “மண்ணில் இந்த காதலன்றி ”

 மேடையில் நீ பாடினால் நல்ல பாடகன் 

 “மன்றம் வந்த தென்றலுக்கு” - “நலம் வாழ எந்நாளும்“ 

 இல்லாமல் காதல் தோல்வி கதைகள் இல்லை 

 ஆயிரம் மலர்களிருந்தலும் “நான் தேடும் செவ்வந்திபூவிது” 

 என்னக்கு மேடை தாகத்தை தந்த “ஒரு நாயகன் உதயமாகிறான்”

 கோட்டையில் அடைபடிருந்தலும் “பூங்கதவே தாள் திறவாய்”

 நானொரு சிந்து காவடி சிந்து.

 ராஜ போதை இல்லை எனக்கு இது ராஜாவின் போதை.

 கண்ணன் வந்து கேட்டாலும் கொடுத்து விடாதே புல்லாங்குழலை.

 ஆயக்கலைகளில் பயணக்கலை சேர்க்கப்படாததை போலவே , 

 அன்றாடம் வாழ அத்யாவசிய பொருட்கள் பட்டியலில் 

உங்கள் இசை சேர்க்கப்படாததும் சேரும் , 
உண்ண உணவு , 
உடுத்த உடை . 
இருக்க இடம் . 
கேட்க உன் பாடல் . 
 சராசரி இளையராஜா ரசிகன் . 

 # இசைஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

Thursday, May 6, 2021

கோபோ அபேயின் “மணற் குன்றுகளில் பெண்”: ஜப்பானிய நாவல் மற்றும் திரைப்படம்

கோபோ அபேயின் “மணற் குன்றுகளில் பெண்”: ஜப்பானிய நாவல் மற்றும் திரைப்படம் ஜப்பானிய எழுத்தாளரான கோபோ அபேயின் (Kobo Abe) “மணற்குன்றுகளில் பெண்” (The woman in the dunes) எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்களுள் ஒன்று. 

1962 இல் வெளிவந்த இந்த நாவல் 1964 இல் ஹிரோஷி டெஷிகாராவினால் இயக்கப்பட்டு திரைப்படமாக வெளிவந்து மிகவும் புகழ்பெற்றது. 1964 இல் கான் திரைப்படவிழாவில் ஸ்பெஷல் ஜூரி விருது பெற்றது. ‘மணற் குன்றுகளில் பெண்’ திரைப்டத்தை பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். 




 இணைப்பில் தரவிறக்கிக்கொள்ளலாம். திரைப்படத்தை பார்த்த உத்வேகத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். கோபோ அபே (1927-1993) ஜப்பானிய இலக்கியத்தில் காஃப்கா, பெக்கெட், ஐயனஸ்கோ ஆகிய எழுத்தாளர்களோடு ஒப்பிடப்பட்டு விவாதிக்கப்படுபவர். வினோதமான கதைக்களன்களின் வழி மனித இருப்பைப் பற்றிய நுட்பமான பார்வைகளை முன் வைக்கக்கூடிய கோபோ அபேயின் ‘மணற்குன்றுகளில் பெண்’ காலத்தால் பிந்தியவரான மிஷெல் ஃபூக்கோவின் சிந்தனைகளுக்கு ஏற்றபடி அமைந்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. மேலும் இந்திய சூழலுக்கு இந்தப் படம் எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறது என்றும் தோன்றியது. 

 முதலில் நாவல் மற்றும் திரைப்படத்தின் கதை. பள்ளிக்கூட ஆசிரியரும் பூச்சியியலாளருமான நிக்கி ஜம்பெய் கடற்கரையோர மணல் குன்றுகளால் பாலைவனம் போல் நிரம்பிய கிராமம் ஒன்றிற்கு பூச்சிகள் சேகரிப்பதற்காக வருகிறான். டோக்கியோவுக்கு திரும்பிச் செல்லும் கடைசி பஸ்ஸைத் தவறவிடும் நிக்கிக்கு கிராமவாசிகள் அங்கேயிருக்கும் ஒரு இளம் விதவையின் வீட்டில் அவனைத் தங்கிச் செல்லுமாறு சொல்லுகின்றனர். அந்த இளம் விதவையின் வீடு மனல் குன்றுகளிடையே ஆழமான பள்ளத்தில் இருக்கிறது. அந்த பள்ளத்தில் நிக்கியை கயிற்று ஏணி மூலம் கிராமவாசிகள் கீழே இறக்கிவிடுகிறார்கள். அந்தப் பெண் நிக்கியை ஆர்வமாக வரவேற்கிறாள் அவனுக்கு இரவு உணவு வழங்குகிறாள். 

மணல் பள்ளத்தில் புதைந்திருக்கும் அந்த வீட்டில் மரக்கூரையின் இடுக்குகள் வழியாகாவும் காற்று மூலமாகவும் மணல் சதா விழுந்துகொண்டே யிருக்கிறது. சாப்பிடுவதற்கு அவன் தொடங்கும்போது அவள் அவனுக்கு வீட்டிற்குள் விழும் மணலிலிருந்து குடையை விரித்து வைக்கிறாள். நிக்கி சாப்பிட்டுவிட்டு குடையை லேசாக சரிக்கும்போது பொலபொலவென்று மணல் விழுகிறது. எங்கும் மணல் எப்போதும் மணல். தமிழ்நாட்டின் வெயில் போல மணல் தன்னிருப்பை மனித உடல்களில் அறிவித்துக்கொண்டேயிருக்கிறது. 

அந்தப் பெண் தன் கணவனும் அவள் மகளும் மணற்புயல் ஒன்றில் சிக்கி புதையுண்டு வீட்டினருகிலேயே மடிந்துவிட்டதை சொல்கிறாள். நிக்கி அந்த வீட்டிலேயே காலங்காலமாய் இருக்கப்போவது போல அவள் பேச்சு இருக்க அவன் தான் மறுநாளே புறப்பட்டு போகப்போவதை அவளுக்கு சொல்லியவண்ணம் இருக்கிறான். அவள் இரவு முழுவதும் ஈரப்பதம் நிறைந்த மணலை பெரிய மண்வாரி கரண்டியினால் அள்ளி அள்ளி பெட்டிகளில் நிறைக்கிறாள். நிக்கி அவளுக்கு உதவ முன் வருகையில் அவள் முதல் நாளே உதவவேண்டாமே என்று தடுக்கிறாள். அவள் மண்வாரிக் கரண்டியினால் சேகரிக்கும் மணலை மேலிருந்து சகடத்தின் வழி பெட்டி இறக்கி மேலே சேர்ந்து கொள்கிறார்கள். அவள் செய்வது இரவு முழுவதுக்குமான கூலி வேலை. மறு நாள் மணல் பள்ள வீட்டிலிருந்து நிக்கி கிளம்ப யத்தனிக்கையில் அவளிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று போகும்போது அவள் முழு நிர்வாணமாய் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து துணுக்குறுகிறான். அவள் உடலை மெல்லிய படலமாக மணல் மூடியிருக்கிறது. 

அவளை தொந்திரவு செய்யாமல் அவன் வெளியே வந்து பார்க்கும்போது அந்த கயிற்று ஏணி காணாமல் போயிருக்கிறது. ஏணியில்லாமல் நிக்கி வெளியேற முயற்சி செய்து பலமுறை நெகிழும் மணல் சரிவில் ஏற முயன்று தோல்வியுறுகிறான். அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் பெண்ணும் கிராமவாசிகளுமாய் சேர்ந்து அவனை இளம் விதவைக்கு துணையாகவும் மண் அள்ளும் கூலியாளாகவும் சிறைபிடித்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. முதலில் நிக்கி ஆங்காரமடைகிறான், கருவுகிறான், தன்னை நகரத்தில் காணாமல் அரசாங்கம் ஆளனுப்பித் தேடி தன்னை விடுவிக்கும் என்று நம்புகிறான். அந்தப் பென்ணின் கை கால்களைக் கட்டி வாயில் துணி பொதிந்து அவளை அவன் துன்புறுத்தாமல் இருக்கவேண்டும் என்றால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று மேல் நோக்கி பள்ளத்திலிருந்து அறைகூவல் விடுக்கிறான். கிராமவாசிகள் எதற்கும் மசிவதாயில்லை. 

அந்தப் பெண்ணோ நிக்கியின் கொடுமைகளை பரிதாபமான அப்பாவித்தனத்துடன் தாங்கிக்கொள்கிறாள். உணவும், தண்ணீரும்,சிகரெட்டும், மதுவும், செய்தித்தாளும் அவனுக்கு மேலிருந்து அளவு உணவுப்பங்கீட்டு முறையின்படியே வந்து சேரவேண்டும். அவன் மணல் வாரும் கூலியாக வேலை செய்யவிட்டாலோ முரண்டுபிடித்தாலோ தண்ணீரும் உணவும் இல்லாமல் அவன் சாகவேண்டியதுதான் என்று அவனுக்கு சீக்கிரமே தெரிந்து விடுகிறது. அவன் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலைக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்ய ஆரம்பிக்கிறான். இதற்கிடையில் நிக்கிக்கும் அந்த இளம் விதவைக்குமிடையில் உடலுறவு ஏற்படுகிறது. உடையணிந்து தூங்கினால் உடலில் மணலினால் தோல் அரிப்பு ஏற்படும் என்பதினால் அவர்கள் நிர்வாணமாய் உறங்குகிறார்கள். 

அவள் நிக்கியின் உடலில் படியும் மணலை அங்குலம் அங்குலமாக சுத்தம் செய்ய அவர்களுக்குள் உடலுறவு தீவிரப்படுகிறது. அவள் மூலம் அவர்கள் அள்ளும் மண் சட்டவிரோதமாக நகர கட்டுமானங்களுக்கு விற்கப்படுகிறது என நிக்கி அறிகிறான். அதே சமயம் அவர்கள் மண்ணை அள்ளாமல் விட்டால் மணல்சரிவு ஏற்பட்டு மொத்தகிராமமும் அழிந்துவிடும் என்றும் அறிகிறான். தான் செய்யும் வேலையை ஒரு குரங்கு கூட செய்யும் என்றெல்லாம் சதா மனம் புழுங்கும் நிக்கி தன்னை ஏமாற்றி சிக்க வைத்துவிட்டதற்காகவும் மனம் வெம்புகிறான். தன் தப்பிப்பு முயற்சிகளில் தளராது ஈடுபடும் நிக்கி கத்திரிக்கோலினால் கொழுகொம்பு அமைத்து கயிற்றில் கட்டி மேல்நோக்கி எறிந்து -அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதொன்றில்- மணல் பள்ளத்திலிருந்து மேலேறிவிடுகிறான். கிராமவாசிகளிடம் கண்களில் படாமல், நாய்கள் துரத்த தப்பி ஓடும் நிக்கி சீக்கிரமே புதைமணலில் மாட்டிக்கொள்கிறான்.

 கிராமவாசிகள் நாய்களின் குரைப்பை வைத்து அவன் மாட்டிக்கொண்ட இடத்துக்கு வந்து அவனைக் காப்பாற்றி மீண்டும் அவனை இளம் விதவை வீட்டில் சேர்த்துவிடுகிறார்கள். நிக்கி தன்னிடமிருந்து தப்பி ஓடுவதிலேயே குறியாக இருக்கிறான் என்பதை நம்ப முடியாதவளாய் பார்க்கிறாள் அந்தப் பெண். அவள் நீண்ட நாளாய் வேண்டி விரும்பும் ரேடியோ ஒன்றை அவளுக்கு வாங்கி அனுப்புவதாய் தான் உத்தேசித்திருந்ததாய் அவன் அவளை சமாதானப்படுத்துகிறான். பொறியில் அகப்பட்டுக்கொண்ட நிக்கி காகங்களை பிடிப்பதற்காக பொறி அமைப்பது அடுத்த கட்ட முரண் நகை. பிடிபடும் காகத்தின் காலில் தான் மாட்டிக்கொண்ட விபரத்தை செய்தியாக எழுதி அனுப்பினால் யாராவது பார்த்து நகரத்திலிருந்து தனக்கு உதவி அனுப்புவார்கள் என்று அவன் நம்புகிறான். காகத்திற்காக அவன் ஏற்படுத்தும் பொறி ஒரு மரப்பீப்பாயை மணலுக்குள் புதைத்து வைப்பதாக இருக்கிறது. தற்செயலாக அந்த மரப்பீப்பாயில் மணல் குன்றுகளிலிருக்கும் நீர் அழுத்தத்தினால் தூய்மையான நீராக சேகரமாவதைக் கண்டு பிடிக்கிறான். இந்தக் கண்டுபிடிப்பு அவனை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துகிறது, தண்ணீருக்காக தான் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பது மட்டுமல்ல அந்த தொழில்நுட்பத்தை கிராமவாசிகளிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறான். 

ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அமைவதற்குள் அவன் துணையாக ஆகிவிட்ட அந்தப்பெண் கடுமையாக நோய்வாய்ப்படுகிறாள். கிராமத்து வைத்தியர் அவள் கர்ப்பமாக இருப்பதாகவும் ஆனால் அந்த கர்ப்பத்தில் சிக்கல்கள் இருப்பதினால் அவளை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்கிறார்கள். படுக்கை அமைத்து அதில் அவளைக் கட்டி மணல் பள்ளத்திலிருந்து மேலே தூக்கி ஏற்றுகிறார்கள். கிராமவாசிகளின் தலைவன் அந்த சமயத்தில் அவள் நீண்ட நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த ரேடியோவைத் தருகிறான். நிக்கி தான் கண்டுபிடித்த தண்ணீர் சேகரிக்கும் முறையை கிராமவாசிகளிடம் தெரிவிக்க முயன்று பின்னொரு சமயத்தில் சொல்லலாம் என்று முடிவு செய்கிறான். கிராமவாசிகள் கயிற்று ஏணியை அப்படியே விட்டுவிட்டுச் செல்கிறார்கள். நிக்கி அதில் ஏறி மேலே வந்து கடலையும் வெளியுலகையும் பல மாதங்களுக்குப் பின் பார்க்கிறான். 

நகரத்து நீதிமன்ற அறிவிப்பு ஒன்றில் அவன் பெயரும் ஏழு வருடங்களாகக் காணாமல் போனவர்கள் பட்டியலில் வருவதை காண்பிப்பதோடு படம் முடிகிறது. போருக்குப் பிந்திய ஜப்பானிய சமூகத்தின் உருவகமாக ஒரு penal colonyஐ கோபோ அபே இந்த நாவலில் கற்பனை செய்திருப்பது ஆச்சரியமில்லைதான். காஃகா முதல் சோல்சனிட்சன் வரை பல கலைஞர்கள் போரினால் சீரழிந்த சமூகத்தினையும் யதேச்சதிகார அரசு கோலோச்சும் சமூகங்களையும் தண்டனை குற்றவாளிகள் வாழும் சமூகமாகவே தங்கள் படைப்புகளில் உருவகத்திருக்கிறார்கள். கோபோ அபேயின் தனித்துவம் என்னவென்றால் தண்டனைக் குற்றவாளிகள் வாழும் காலனி அல்லது கிராமம் நம் கால நவீன சமூகத்தின் குற்றங்களையும் அவற்றின் இயங்கு தளங்களையும் துல்லியமாக சுட்டுவதில் அடங்கியிருக்கிறது.

 ‘மணல் குன்றுகளில் பெண்’ படைப்பில் மாறிக்கொண்டேயிருக்கும் மணல் ‘சிறையின்’ சுவர்களாக, உருவகங்களாக, தான் ஒடுக்கப்படுவதன் மூலம் தான் யார் என்பதினையும் நிக்கி கண்டறிகிறான். “சிறைச்சாலையின் பிறப்பு” புத்தகத்தில் கோபோ அபேயின் நாவலும் திரைப்படமும் வெளிவந்து பல ஆண்டுகளுக்கு பின்பு ஃபூக்கோ எழுதுவார் அரசர் கால பௌதீக சிறைச்சாலைகளிலிருந்து நவீன கால சிறைச்சாலைகள் மாறுபட்டு கண்காணிப்பில் வைக்கின்ற சமூக ஒழுங்கமைப்பாக நிமிட நேர ஆசுவாசத்தை வழங்காத அமைப்புகளாக மனதையும் எண்ணங்களையும் ஆத்மாவையும் கண்காணிப்பில் வைக்கின்ற சிறைச்சாலைகளாக ஓட்டு மொத்த நவீன சமூகங்களும் மாறியிருக்கின்றன என்று. ஃபூக்கோவின் சிந்தனைகளுக்கான முன்னோடி படைப்பாகவே பல விதங்களிலும் திகழ்கிறது கோபோ அபேயின் ‘மணற் குன்றுகளில் பெண்’. முதலாளித்துவ ஜப்பானில் அறுபதுகளுக்கு பிறகு மரபார்ந்த கிராமங்களுக்கு நேர்ந்த கதியாக ‘மணற் குன்றுகளில் பெண்’ முன்வைக்கும் சித்திரம் இன்றைய இந்திய கிராமங்களின் நிலையைச் சொல்வதாகவும் நான் வாசித்தேன். 

கோபோ அபேயின் நாவலில் வரும் கிராமத்தின் பிரச்சினைகள் ஜப்பானிய கடற்கரை நகரமாகிய சகாடாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்றளவும் உண்மையிலேயே நிலவுகின்ற பிரச்சினைகளே. கோபோ அபே தன் கற்பனையினால் அந்தப் பிரச்சினைகளை நுட்பப்படுத்தியிருக்கிறார். கண்காணிப்பின் அதிகாரம், ஃபூக்கோ எழுதுவார், சூழலின் தனிப்பட்ட தேவைகளிலிருந்தும், அடிமட்டத்திலிருந்துமே உருவாகின்றன என்று. கோபோ அபேயின் நாவலின் முதல் பாகத்தில் நிக்கி சிக்கிக்கொள்ளும் கடற்கரையோர கிராமத்தில், மணல் தன் அழிவுசக்தின் மூலம் தன்னை சூழலின் அதிகாரமாக நிலை நிறுத்திக்கொள்கிறது கோபோ அபே எழுதுகிறார் “ 1/8 மில்லிமீட்டர் அளவுகூட இல்லாதது மணல் தனக்கென்று ஒரு வடிவம் கூட இல்லாதது மணல், இருப்பினும் அதன் வடிவமற்ற அழிவு சக்தியை எதிர்த்து ஒன்றுமே நிற்க இயலாது”. வீட்டுக்கூரைகளில் மணல் கொட்டுவதால் அந்த கிராமத்தில் வீடுகள் சிதைந்து விடுகின்றன. கிராமவாசிகள் நகர்சார் அரசாங்கம் தங்களை கைவிட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் கிராம வாழ்க்கையின் அக்கறைகளை மீறிய எதன் மீதும் ஈடுபாடு இல்லாமல் போகிறது. அப்பாவித்தனமாக தன்னை கிராமவாசிகளோடும் மணலின் அழிவுசக்தியோடும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இளம் விதவைக்கு தன் அடையாளம் மீறி எதன் மீதும் அக்கறை இல்லை; அதனால்தான் நிக்கி இப்படி கடற்கரை மணலை நகர் சார் கட்டுமானங்களுக்கு சட்டவிரோதமாக விற்கிறீர்களே அணைக்கட்டுகளும் பெரிய பெரிய கட்டிடங்களும் உடைந்து விழுந்துவிடுமே என்று வினவும்போது அடுத்தவர்களைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை என்று நிசாரமாக பதில் சொல்ல முடிகிறது. மேலும் நகரங்களை நோக்கி இளைஞர்கள் அனைவரும் சென்று விடுவதால் மணல்வார ஆளில்லாமல் போகிறது; 

அவர்களுடைய மரபான வாழ்க்கை முறையே அபாயத்திற்குள்ளாகிறது. மரபான வாழ்க்கை முறையில் நீடித்திருப்பது என்பதே ஒரு வகையில் குற்ற வாழ்க்கையாக மாறிவிடுகிறது. அடிமட்ட சூழல்களையும் தேவைகளையும் கருதி மொத்தமாக கிராமத்தையும் கிராமவாசிகளையும் காப்பதற்காக உருவாக்கப்படும் ஒழுங்குமுறை அமைப்பு, நகைமுரணாக, முடியாட்சி அதிகாரமே போல யதேச்சதிகாரமாகவும், மையமுடையதாகவும், ஒவ்வொருவரும் அவ்வதிகாரத்தை அகவயப்படுத்தியவர்களாகவும் மாற்றிவிடுகிறது. நாவலில் வரும் நான்கு மீனவர்களும் அவர்களுடையே தலைவன் போல இருக்கும் வயசாளியும் கண்காணிப்பிலிருக்கும் சிறை சமூகத்தின் முகவர்களாகிவிடுகின்றனர். கோபோ அபே எழுதுகிறார் “இந்த இரக்கத்தைக் கோரும் புவி அமைப்பை காப்பதற்காக கடற்கறையோரம் இருக்கும் பத்து வீடுகளுக்கு மேல் அடிமை வாழ்க்கையினை வாழ வேண்டியிருக்கிறது.

” சில அடிமை வீடுகளில் கயிற்று ஏணிகள் அகற்றப்படுவதில்லை சில வீடுகளில் அகற்றப்படுகின்றன என்பதினை கவனிக்கும்போதுதான் அந்த சிறு சமூகத்திலும் கூட இரண்டு வகையான அதிகாரங்கள் செயல்படுகின்றன என்று தெரிய வருகிறது. வெளியினை ஒழுங்குபடுத்துவதும், கயிற்று ஏணிகளை அகற்றாமல் விட்டு வைப்பதும் அடிமைகள் தாங்களாக மணல்வாரும் விதியினை ஏற்று வாழ்கிறார்களா அல்லது அதை மறுத்து தப்பிக்க யத்தனிக்கிறார்களா என்பதினைச் சாந்திருக்கிறது. ஒரு வகையான வலைபின்னல் ஒழுங்கும் சீரமைப்பும் அந்த கிராமத்தில் இயங்குவது நமக்கு தெரியவருகிறது. பத்து நாட்கள் மண் வாரி விற்கவில்லையென்றால் கிராமம் பௌதீகமாகவும் அழிந்துவிடும் அதன் பொருளாதாரமும் அழிந்துவிடும். அதனால் ஃபூக்கோ விவரிப்பது போன்ற அலுப்பூட்டுகின்ற கடுமையான உடலுழைப்பினை கோருகின்ற எந்திரத்தனமான வாழ்க்கை அவர்கள் மேல் சுமத்தப்படுகிறது; அந்த வாழ்க்கையினை இளம் விதவை போன்ற அந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் அந்த வாழ்க்கையே ‘இயற்கையானது’ என்று நம்பத் தலைப்படுகின்றனர். நகர வாழ்க்கையிலிருந்து தப்பி சில நாட்கள் கிராமத்தின் ‘அமைதியையும்’, ‘இயற்கையினையும்’ அனுபவிக்கலாம் என்று மணல் கிராமத்திற்கு வந்து சேர்கின்ற நிக்கிக்கு கிராமம் என்பது கடுமையான ஒடுக்குமுறை அமைப்பு இயற்கை என்பது மிருகத்தனமானது என்று அவன் அந்த அமைப்பினால் சிறைப்பிடிக்கப்படும் வரை தெரிவதில்லை. 

சாதீய ஒடுக்குமுறைக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஆட்பட்ட இந்திய கிராமங்களின் உருவகமாகவே இன்னொரு வகையில் கோபோ அபேயின் கிராமம் இருக்கிறது. இந்த ஒழுங்கின் அமைப்புக்குள்ளாகவே நிக்கியின் தன்னிலையின் எல்லைகள் அவனுடைய உடலின் எல்லைகளாக மட்டுமே குறுக்கப்படுகின்றன. மணல் நரகத்தில் தள்ளப்பட்டுவிட்ட நிக்கியை மூக்கு, காது, கழுத்து, உடலின் இண்டு இடுக்குகள் என்று மணல் ஆக்கிரமிக்கிறது. நிக்கியின் துணையோ இந்த ஒழுங்கமைப்பின் விதிகளை நன்றாகக் கற்றுக்கொண்டவளாகவும் அவற்றை அகவயப்படுத்திக்கொண்டவளாகவும் இருக்கிறாள். ‘சிறைச்சாலையின் பிறப்பு’ நூலில் ஃபூக்கோ எழுதுவார், ஒழுங்குபடுத்தப்பட்ட உடல் என்பது பொருளாதார உற்பத்திக்காக சீரமைக்கப்பட்ட உடல்; 

அந்தந்த பொருளாதார பாங்கிற்கு ஏற்ப உடல்கள் ஒழுங்கமைக்கப்படும். “ஒழுங்கு இவ்வாறாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, தன்னிலை ஒடுக்கப்பட்ட மந்தமான (docile) உடல்களை உருவாக்குகிறது. ஒழுங்கு உடலின் பொருளாதார பயன்பாடு சார்ந்த சில சக்திகளை வளர்த்தெடுக்கிறது; கீழ்ப்படியாமை போன்ற வேறு சில உடல் சார் அரசியல் சக்திகளை குறைத்துவிடுகிறது. வேலை சார்ந்த உற்பத்தி சார்ந்த மனப்பாங்கினையும், பலத்தையும் அதிகரிக்கின்ற அதே வேளையில் அவற்றுக்கு எதிரான உடல் சக்திகளை கணிசமாகக் குறைத்துவிடுகிறது.” (Foucault in ‘Discipline and Punish’) நிக்கி தன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு தண்ணிரில்லாமல் சாவோமோ போன்ற தான் சிக்கிவிட்ட சிறை அமைப்பு உண்டாக்கும் பயங்களிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். அவன் சிக்கிக்கொண்ட கிராமவாசிகளுக்கு அவனின் இறந்த காலத்தைப் பற்றியோ, அவன் ஒரு பள்ளி ஆசிரியன் என்பது பற்றியோ அவன் அறிவியல் ஆராய்ச்சியாளன் என்பதோ முக்கியமாகப்படவில்லை. சரி, சிறைப்பட்டவனாக என்னுடைய ‘உரிமைகளைக்’ கோருகிறேன் என்று நிக்கி தன்னை அரை மணி நேரமாவது தினசரி கடலைப் பார்ப்பதற்கும், கடற்கரையில் உலா போவதற்கும் தன்னை அனுமதிக்குமாறு கிராமவாசிகளிடம் இறைஞ்சும்போது அவர்கள் அதற்கு பதிலாக அவனும் அவன் துணையும் உடலுறவு கொள்வதை அவர்கள் பார்க்கவேண்டும் என்று கேட்கிறார்கள். 

அதாவது ஒரு ஒழுங்கமைப்புக்கு உட்பட்டுவிட்டவர்களுக்கு ‘உரிமைகள்’ என்று ஏதும் இல்லை; எல்லாமே கொடுக்கல் வாங்கல்களுக்கு உட்பட்டவை. தன் மானத்தை முழுமையாக இழக்கும் நிக்கி தன் துணையாக மாறிட்ட இளம் விதவையை எல்லோரும் பார்க்க உடலுறவு கொள்ள வரும்படி இழுக்கிறான். அவளோ அவனுக்கு உடன்பட மறுத்து வீட்டுக்குள் ஓட நிக்கி அவளை மீண்டும் மீண்டும் இழுத்து வர நிக்கியின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. சமூக அதிகாரம் தன்னுடைய எல்லைகளை எப்பொழுதுமே எல்லையற்றதாக மாற்ற விழைகிறது. நிக்கி பகிரங்கமாக தன் துணையோடு உடலுறவு கொள்ள விழையும் காட்சிகளில் கிராமவாசிகள் ஏதோ ஆதி சடங்கினை நிகழத்துபவர்கள் போல இசைக்கருவிகளை முழக்குகிறார்கள்; கோரமான முகமூடிகளை அணிந்திருக்கிறார்கள். கோபோ அபே எழுதுகிறார்: “ அவனால் (நிக்கியால்) மேலே நுனியில் நின்று பள்ளத்தினுள் எட்டிப்பார்க்கும் அந்த கிராமவாசிகளின் சுவாசத்தினை உணர முடிந்தது. அவனால் அந்த பார்வையாளர்களுள் ஒருவனாக இருந்திருக்க முடியும். அவர்கள் அவனுடைய அங்கம், அவர்களின் வாயிலிருந்து ஒழுகிக்கொண்டிருந்த எச்சில் அவனுடைய ஆசையின் ஒழுகலே.அவனுடைய மனதில் அவன்

 கொடுமைப்படுத்துகிறவர்களின் பிரதிநிதி பலிகடா அல்ல.” அடிமைப்படுத்தப்பட்டு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட வாழ்க்கை அந்தப் பெண்ணினுடையது என்றும் நிக்கி அவளுக்குச் சொல்கிறான். அப்பாவித்தனமும் ஒழுங்கமைப்பின் மிருக விதிகளை இயல்பானதாக ஏற்றுக்கொள்ளும் தன்மையும் மணலோடு தன்னை அடையாளப்படுத்தியும் வாழும் அந்தப் பெண் சுதந்திரத்திற்கான விழைவும் தன்னுணர்வும் அற்றவளாக இருக்கிறாள். மணலின் கோடூர துன்புறுத்துதல்களை எதிர்கொண்டு அதற்கேற்ப தன் வாழ்க்கையயும் உழைப்பையும் அமைத்துக்கோல்வது போலவே நிக்கியின் வன்முறைகளையும் எதிர்கொண்டு தாண்டிச் செல்கிறாள். அவள் பதிலுக்கு எந்த வன்முறைச் செயலையும் செய்வதில்லை. நிக்கிக்கும் அந்தப்பெண்ணுக்குமான உறவு சூழலின் நிர்ப்பந்தம் சார்ந்தது; அதில் காதல் இல்லை. அந்த ஊறவு வெறும்

 காமத்தினால் ஆனது. பல வருடங்களைக் கொடூர தனிமையில் கழித்த பெண்ணின் காமமும் தாபமும் ஒப்புக்கொடுத்தலும் கலந்ததால் உருவாகும் உறவு. தான் சிக்குண்டதிலிருந்து நாற்பத்தி ஆறாவது நாள் மணல் பள்ளத்திலிருந்து தப்பிக்கும் நிக்கி புதைமணலில் விழுந்து மீண்டும் மாட்டிக்கொள்கிறான். அவன் திறந்த வெளியில் ஓடும்போதும் கண்காணிக்கப்படுகிறான். கண்காணிப்பு எங்கும் விரவியிருக்கிறது. காட்டிக்கொடுப்பதற்கும் பிடித்துக்கொடுப்பதற்கும் மனிதர்களும் நாய்களும் தயாராகவே இருக்கிறார்கள். நிக்கி தன் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளாத போதே சிலவகை மரங்களை நட்டு மணல் சரிவை தடுப்பது போன்ற எண்ணங்களும் , மரப்பீப்பாயை மணலில் புதைத்து தண்ணீர் சேகரிக்கும் கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன என்று கண்டுகொள்கிறான். தன் தப்பித்தல் மட்டுமின்றி ஒட்டு மொத்த கிராம சமூகத்திற்குமான

 விடுதலைக்கான வழிகளே அவனை சக்தியுள்ளவனாகவும் காதலுக்கும் மென்மைக்கும் மனதில் இடம் கொடுக்கும் வல்லமை உள்ள மனிதனாக மாற்றுகின்றன என்றும் அவன் உணர்கிறான். தன் அடிமைத்தனத்தினை அவன் உணர்ந்திருப்பதாலேயே அதிலிருந்து விடுபடும் வழியையும் சக்தியையும் அடைந்த மனிதனாகவும் அவன் பரிணாம வளர்ச்சி பெறுகிறான். “மணற் குன்றுகளில் பெண்” பல அபூர்வமான

 காட்சிப்படிமங்கள் நிறைந்த திரைப்படம். மணல் வெளிகளும், மணலின் நெகிழ்வும், சரிவும், உதிர்தலும் வித விதமான படிமங்களாகின்றன. கூடவே சிறு பூச்சிகளின் குளோசப் காட்சிகளும். அபூர்வமும் அதிசயமும் நிறைந்த பின்னணி இசைக்காகவும் இந்தப் படம் விமர்சகர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வபோது ‘மணற் குன்றுகளில் பெண்’ போன்ற திரைப்படம்/நாவலைப் படிப்பது, விமர்சிப்பது, விவாதிப்பது கலை இலக்கியம் என்றால் என்ன என்ற பார்வையை நம்மிடம் கூர்மையாக்கக்கூடும்.

Friday, April 23, 2021

டி. என். ராஜரத்தினம் பிள்ளை

திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்ட டி. என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956) ஒரு நாதசுரக் கலைஞர் ஆவார்.

 நாதசுரச் சக்கரவர்த்தி எனப் பலரும் குறிப்பிடும் அளவுக்கு மிகுந்த புகழுடன் விளங்கினார். சில தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ராஜரத்தினம் பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருமருகல் என்னும் ஊரில் 1898 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். 

திருமருகல் நடேசபிள்ளை நாதசுவரக்காரருக்கு வளர்ப்புப் பிள்ளையாகி திருமருகல் நடேசபிள்ளை மகன், ‘டி.என்.ராஜரத்தினம்’ ஆனார் பதினேழாவது திருவாவடுதுறை ஆதீனம் திருமருகல் வந்தபோது, நடேசபிள்ளை வாசிப்பைக் கேட்டு, அவரைத் திருவாவடுதுறை வரச்செய்து ‘ஆதீன வித்வான்’ ஆக்கினார்.

 ராஜரத்தினத்திற்கு ஐந்து வயதாகும்போது நடேசபிள்ளை காலமானார். வயலின் மேதை திருக்கோடிக்காவல் ‘பிடில்’ கிருஷ்ணய்யரிடம் ராஜரத்தினம் சங்கீதம் பயின்றார். பின்னர், எட்டு வயதில் கோனேரிராஜபுரம் ஸ்ரீ வைத்தியநாதையரிடம் பயின்றார். 

ஒன்பதாவது வயதில், நன்னிலத்தில் இவரது பாட்டுக் கச்சேரி அரங்கேறியது. பாடும்போது, தொண்டை புண்ணானதால், சன்னிதானம் இவரை நாதஸ்வரம் கற்கச் சொன்னார். முதலில் மடத்து நாதஸ்வரக்காரர் மார்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளையிடமும் கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார்.

 ‘டி.என்.ஆர்’க்குத் கீர்த்தனைகளை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர், மு.கருணாநிதியின் தந்தை முத்துவேலர். சன்னிதானம் தொடக்கத்தில் மடத்து காலை பூஜையில் வாசிக்க இவருக்கு அனுமதி அளித்தார். திருமாளிகைத் தேவர் சன்னதியில் பெருங்கூட்டத்திற்கு இடையில், பெரிய வித்வான்களின் லாகவத்தோடும், தனி முத்திரையோடும், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் இவர் பூபாள ராகத்தை வாசிக்கலானார்.

 இவருக்கு ஐந்து மனைவியர். ஆனால் குழந்தைகள் இல்லை. வளர்ப்பு மகன் பெயர் சிவாஜி. 1956 டிசம்பர் 12ஆம் தேதி, ராஜரத்தினம் பிள்ளை மாரடைப்பால் காலமானபோது, என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். ராதா முதலானோர் உடனிருந்தனர். கவிஞர் கண்ணதாசன் இரங்கற்பா எழுதினார். • ஏ. வி. எம் செட்டியார் பிள்ளை பல மணி நேரம் வாசிக்கும் புகழ்பெற்ற 'தோடி' ராகத்தைப் பதிவு செய்து ஆறரை நிமிடத்தில் இசைக்கும் ரிக்கார்டு பிளேட்டை வெளியிட்டார். 

அது உலகெங்கும் விற்றுச் சாதனை படைத்தது. •

 1955 ஜனவரி 21-இல் ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சோஷலிசப் பிரகடன மாநாட்டின்போது, முதல் நாளன்று காங்கிரஸ் தலைவரை வரவேற்க நடந்த ஊர்வலத்தின் முன்னே, நடந்தவாறு நாதஸ்வரம் வாசித்துச் சென்றவர்களுள் ஒருவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை •

1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியா ஏகாதிபத்திய பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற போது வானொலியில் ராஜரத்தினம் பிள்ளையின் மங்கல இசையே ஒலிபரப்பானது.

 • நாதஸ்வரக் கலைஞர்களுள் முதன்முதலில் ‘கிராப்’ வைத்துக் கொண்டவர் இவரே. கோட், ஷர்வாணி, சுர்வால் முதலிய உடைகளை அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொண்டு தான் வாசிப்பார். • நாதஸ்வரத்துக்குத் ‘தம்புரா’வைச் சுருதியாகக் கொண்டு, மிருதங்கம், வீணை, கஞ்சிரா இவற்றுடன் புதுமையாகக் கச்சேரிகள் செய்தார். 

 l சித்தப்பா கதிரேசன் பிள்ளையிடமும், திருக்கோடிக்காவல் கிருஷ்ண அய்யர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர், கண்ணுச்சாமி பிள்ளை ஆகியோரிடமும் நாகஸ்வரம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். நாகஸ்வர இசையில் நிபுணத்துவம் பெற்றார். ஆரம்ப நாட்களில் திருவாடுதுறை கோயிலில் வாசித்து வந்தார். 

l பின்னர் திருவாடுதுறை ஆதீன வித்வானாக நியமிக்கப்பட்டார். இவரது முதல் நாகஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. ரசிகர்கள் மெய்மறந்து கேட்டனர். முதல் கச்சேரியே அபாரமான வெற்றி. அதன் பின் பல இடங்களில் கச்சேரிகள் நடைபெற்றன. 

l வழக்கமான நாகஸ்வர இசைக் கலைஞர்கள் போல் உடை அணியா மல், கோட், ஷெர்வாணி அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொள்வார். கழுத்தில் தங்கச் சங்கிலி, கைவிரல்களில் மோதிரங்கள், மணிக்கட்டில் ஒரு பெரிய தங்க கடா போன்ற சங்கிலி இவற்றோடு அலங்காரமாக பவனி வந்தார். l ‘நாகஸ்வர சக்ரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட இவர், பெயரில் மட்டு மல்லாமல் நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். கப்பல் போன்ற காரில்தான் பயணம் செய்வார். சுயமரியாதை கொண்டவர்.

 l சட்டை போட்டுக்கொண்டு, பொன்னாடை போர்த்தியபடி நாகஸ்வரம் வாசித்த ஒரே ஒருவர் இவர்தான். இலங்கை, மலேசியா நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். ‘மிஸ் கமலா,’ ‘கவி காளமேகம்’ ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

l ‘சங்கீத அகாடமி விருது’ ‘அகில உலக நாகஸ்வர சக்ரவர்த்தி’ உள்ளிட்ட ஏராளமான பட்டங்களும் விருதுகளும் பெற்றுள்ளார். இந்தியா சுதந்தரம் அடைந்த நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவரது மங்கல இசை ஒலித்தது. அந்த விழாவுக்கு இவர் ஒரு சமஸ்தான அதிபர் போல ஆடை அணிந்து சென்றிருந்தார்.

 l அவரைப் பார்த்த நேருவே ஆச்சரியமடைந்து, அவரிடம் ‘இங்கே வந்திருக்கும் சமஸ்தான அதிபர்களில் ஒருவர் என நினைத்துக் கொண்டேன்’ என்று கூறினாராம். காஞ்சி பரமாச்சாரியரிடம் பக்தி கொண்டவர். ஒருமுறை மாயவரம் சென்று கொண்டிருந்தபோது தொலைவில் சுவாமிகள் பட்டனப் பிரவேசம் வருவதை அறிந்தார். உடனே காரிலிருந்து இறங்கி தெருவோரத்தில் நின்றுகொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கினார்.

 l இசை ஒலித்ததைக் கேட்டவுடனேயே பரமாச்சாரியார் ‘ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே’ என்று கூறி அங்கே போகுமாறு பல்லக்குத் தூக்கிகளிடம் உத்தரவிட்டார். ஒன்றரை மணி நேரம் இவர் வாசிக்க, மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது. பரமாச்சார்யார் மெய்மறந்து கேட்டு ரசித்துவிட்டு, அவருக்கு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். அதை பக்தியுடன் பெற்றுக்கொண்டு ‘இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது’ என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினாராம்.

 l ஏவி.எம். செட்டியார், பல மணி நேரம் இவர் இசைத்த ‘தோடி’ ராகத் தைப் பதிவு செய்து ஆறரை மணி நேர இசைத்தட்டை வெளியிட்டார். இது உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்தது. ஈடுஇணையற்ற நாகஸ்வரக் கலைஞர் என்று போற்றப்பட்ட டி.என். ராஜரத்தினம் பிள்ளை 1956-ல் 58-ம் வயதில் மறைந்தார். நாதசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை திருவாவடுதுறையில் உள்ள திருமருகல் என்னும் ஊரில் 1898-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் பாலசுப்ரமணியம். நாதசுவர வித்துவான் திருமருகல் நடேசபிள்ளையின் வளர்ப்பு மகன் அவர். நடேசபிள்ளைதான் இவரின் பெயரை ராஜரத்தினம் என்று மாற்றி வைத்தார் திருமருகல் நடேசன் ராஜரத்தினம் எனபதை சுருக்கி டி.என்.ராஜரத்தினம் என்று அழைக்கப்படுகிறார். இளம்வயது இவரது ஒன்பதாவது வயதில் பாடகராக நன்னிலத்தில் இவரது பாட்டுக் கச்சேரி அரங்கேறியது. பாடும்போது தொண்டை புண்ணானதால், ஆதினம் இவரை நாதசுரம் கற்கச் சொன்னார். முதலில் மடத்து நாதசுரக்காரர் மார்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளையிடமும், கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார். தனி பாணியில் வாசித்த பூபாள ராகம் தொடக்கத்தில் திருவாடுதுறை மடத்தின் காலை பூஜையில் வாசிக்க ஆதினம் இவருக்கு அனுமதி அளித்தார்.

 திருமாளிகை தேவர் சன்னதியில் பெருங்கூட்டத்திற்கு இடையில், பெரிய வித்வான்களின் லாகவத்தோடும், தனி முத்திரையோடும், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் இவர் பூபாள ராகத்தை வாசிக்கலானார். கர்நாடக இசை கொடிகட்டி பறந்த ஒரு காலக்கட்டத்தில், தமிழிசைகளுக்கு இடம் இல்லாவிட்டால் அந்த மேடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னவர். பொன்னாடை போர்த்தியபடி நாதசுரம் வாசித்த முதல் கலைஞர் பின்னர் திருவாடுதுறை ஆதீன வித்வானாக நியமிக்கப்பட்டார். 

இவரது முதல் நாகஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சட்டை போட்டுக்கொண்டு, பொன்னாடை போர்த்தியபடி நாகஸ்வரம் வாசித்த ஒரே ஒருவர் இவர்தான். காரைக்குடியில் நாதசுரம் வாசிக்க செல்கையில், தோளில் துண்டை போட்டுக்கொண்டு நாதசுரம் வாசிக்கையில் தங்களுக்கு மரியாதை குறைவு என்று எண்ணி, துண்டை எடுக்கச்சொன்னார்கள். எடுக்க மாட்டேன் என்று மறுத்தவர் ராஜரத்தினம் பிள்ளை. அவர் எடுக்காதது மட்டுமல்ல, எந்த நாதசுரக் கலைஞரையும் தவில் வித்வான்களையும் தோளில் போட்ட துண்டை இடுப்பில் கட்டக்கூடாது என்றும், அது சுயமரியாதைக்கு இழிவு என்றும், அதை தோளில் இருந்து இறக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், எவனோ சொல்கிறான் என்பதற்காக எடுக்கக்கூடாது என்று முதலில் சொன்னவர் ராஜரத்தினம் பிள்ளை. நாதசுரக் கலைஞர்களுள் முதன்முதலில் ‘கிராப்’ வைத்துக் கொண்டவர் இவரே. கோட், ஷர்வாணி, சுர்வால் முதலிய உடைகளை அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொண்டு தான் வாசிப்பார். 

 தந்தை பெரியார் மீதும் அவரின் சுயமரியாதைக் கொள்கைகள் மீதும் பெரும் மரியாதை கொண்டிருந்தார். காஞ்சிபுரத்தில் அண்ணா முன்னின்று நடத்திய திராவிட இசை விழாவிலும் இவரது நாதசுரம் பாடியது. இந்தியா விடுதலை பெற்ற போது டெல்லியில் ஒலித்த நாதசுரம் 1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியா ஏகாதிபத்திய பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றபோது, டெல்லியில் நேரு முன்னிலையில் இவர் நாதசுரம் வாசித்தார். அதேநேரம் வானொலியிலும் ராஜரத்தினம் பிள்ளையின் மங்கல இசையே ஒலிபரப்பானது
 குறிப்பிடத்தக்கது. 

நாதசுரக் கருவி உருவாக்கத்தில் ராஜரத்தினம் பிள்ளை நிகழ்த்திய மாற்றங்கள் நாதசுரம் மிகப் பழங்காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை 18.25 அங்குல நீளம் உடையதாகவும் நாலரைக் கட்டைச் சுருதியுடனும் இருந்து வந்தது. இது முகவீணைக்கு அடுத்த நிலை. இதில் ஏழு விரல் துவாரங்களும் ஒரு பிரம்ம சுரமும் தவிர கூடுதலாக இரண்டு இணை ஜீவசுரங்களும் அமைக்கப்பட்டு இருக்கும். 1909-ம் ஆண்டு மன்னார்குடி சின்னப்ப பக்கிரி நாகசுரக்காரர் 21.50 அங்குல நீளமும் நான்கு கட்டைச் சுருதியும் கொண்ட நாகசுரத்தைப் பழக்கத்தில் கொண்டு வந்தார். 1920-ம் ஆண்டு திருப்பாம்பரம் சாமிநாத பிள்ளை 23.75 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட நாகசுரத்தைக் கொண்டு வந்தார். பின்னர் 1932-ம் ஆண்டு கீரனூர் சின்னத்தம்பி என்பவர் 18 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட நாதசுரத்தை அறிமுகம் செய்தார். இத்தகைய நாலரை, நான்கு, மூன்றரை, மூன்று ஆகிய கட்டையுள்ள சுரங்களுக்கு ‘திமிரி நாதசுரம்’ என்று பெயர். 1932-ம் ஆண்டு திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை 31.25 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட இடைபாரி நாகசுரத்தைக் கொண்டுவந்தார். பின்னர் அவரே முயற்சிகள் பல மேற்கொண்டு 1914-ம் ஆண்டு 34.5 அங்குல நீளமும் இரண்டு கட்டைச் சுருதியும் கொண்ட நாதசுரத்தை உருவாக்கினார். 

அவரே மேலும் முயன்று மத்திமத்தை ஆதாரமாக வைத்து மற்ற சுரங்களை அதற்கேற்ப அமைத்துக் கொண்டு 1946-ம் ஆண்டு மத்திம சுருதி நாகசுரத்தை உருவாக்கினார். இவற்றிற்கு ‘பாரி நாகசுரங்கள்’ என்று பெயர். இவ்வாறு வரலாற்று நோக்கில் நாகசுரம் பற்றிய சில வளர்ச்சிப் படிநிலைகளை மரபிசைச் சுரங்கம் என்ற கட்டுரையில் இசை ஆய்வாளர் பேரா.பக்கிரிசாமி பாரதி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ராஜரத்தினம் பிள்ளை நாதசுரக் கருவி உருவாக்கத்தில் எத்தனை ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் தெரிய வருகிறது. கலை மீது பெருமரியாதை கொண்டவர் நாதசுர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை’ என்று விலாசமிட்டு வந்தால்தான் கடிதங்களையோ, அழைப்பிதழ்களையோ பிரித்துப் பார்ப்பார். ‘நாதசுரச் சக்கரவர்த்தி’ என்று தனது பெயருக்கு முன் போடாத, மொட்டையாக டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று மட்டும் வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்காமலேயே குப்பையில் வீசிவிடுவார். தன் கலை மீது அவ்வளவு மரியாதை கொண்டவர். டி.என்.ஆர். 1956-ம் ஆண்டில் டிசம்பர் 12-ம் நாள் மாரடைப்பால் காலமானார். 

என்.சி.வசந்தகோகிலம் / N.C. Vasanthakokilam

1) நீ தயராதா 

2) மாயே 

3) ஸாரஸ தள நயனா

4) தந்தை தாய் இருந்தால் 

5) நித்திரையில் வந்து நெஞ்சம் குடி கொண்ட

 6) அந்தரங்கம் எல்லாம் 

7) வருவானோ வனக்குயிலே 

8) அந்த நாள் இனி வருமோ -சொல்லடி 

9) யாரோ வந்தென்னை ஆசை காட்டி 

10) குழலோசை கேட்குதம்மா

 11) கலைவாணி அருள் புரிவாய் 

12) ஏன் பள்ளி கொண்டீர் ஐயா ( மோகனம்)

 13) ஆனந்த நடனம் ஆடினாள் !சக்தி !( காம்போதி) 

(gem) 14) பிள்ளைப்பிராயத்திலே சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் ஒரு இனிய குரலுக்குச் சொந்தக்கார பாடகி ஒருவர் இருந்தார். அவர்தான் என்.சி.வசந்தகோகிலம் என்ற புகழ்பெற்ற பாடகி. நாகப்பட்டினம் சந்திரசேகர வசந்தகோகிலம் என்பது இவரது முழுப்பெயர். இன்னிசை பாடி புகழ் பெற்ற காரணத்தால் அவருக்கு இந்தப் பெயரை இட்டார்களோ என்னவோ தெரியவில்லை பிறந்தபோது இவருக்கு இட்ட பெயர் காமாக்ஷி. பிறந்த ஊர் இப்போதைய கேரள மாநிலத்தில் கொச்சி சமஸ்தானத்துக்குட்பட்ட இரிஞ்சாலக்குடா எனும் ஊர். 

அவர் இந்த பூமியில் வாழ்ந்த ஆண்டுகள் மிகக் குறைவு. இளம் வயதில், தனது 32ஆம் வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்துவிட்ட இந்தப் பாடகி முழு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் புகழின் உச்சிக்கே சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. இவர் பிறந்தது 1919ஆம் ஆண்டில். காலமானது 1951 நவம்பர் 8ஆம் தேதி. கர்நாடக சங்கீதத்தில் பெரும் புகழ் பெற்றது மட்டுமல்ல,

 திரைப்படங்களிலும் அந்த நாளில் பாடி நடித்தும் புகழ் பெற்றார். கர்நாடக சங்கீதத்தில் பாடல்களைப் பாடி மக்களின் மனங்களைக் கவர்ந்தவர். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய சுத்தானந்த பாரதியாரின் பாடல்களையும் இவர் பாடி பிரபலப் படுத்தியிருக்கிறார். கேரளத்தில் பிறந்த இவர் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலிருந்த நாகைப்பட்டினத்துக்குக் குடிபெயர்ந்தார். இவர்கள் குடும்பம் நாகை வந்த பிறகு காமாக்ஷியை சங்கீதம் கற்றுக்கொள்ள கோபால ஐயர் என்பவரிடம் அனுப்பி வைத்தனர். இந்த கோபால ஐயர் ஹரிகதை

 வித்வான்களுக்குப் பக்க வாத்தியம் வாசித்து வந்தவர். 1936இல், இவரது 17ஆவது வயதில் இவர் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. அதற்குள் இவர் கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததால், சென்னை சென்றவுடன் பல இடங்களில் கச்சேரி செய்ய அழைக்கப்பட்டார். இவருடைய இனிய குரலும், அழகிய தோற்றமும், இவர் பாடும் கச்சேரிகளுக்கு மக்கள் வெள்ளம் போல் வரத் தொடங்கினர். இவர் கச்சேரி எங்கு நடந்தாலும் சென்னையில் பல இசை ரசிகர்கள் அங்கு கூடத் தொடங்கினர்.

 சென்னையிலிருந்த பிரபலமான சபாக்களிலெல்லாம் இவரது இசைக் கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1938இல் சென்னை மியூசிக் அகாதமியின் ஆண்டு விழாவில் இவர் வாய்ப்பாட்டுக்காக முதல் பரிசினைப் பெற்றார். அந்த விழாவுக்குத் தலைமை தாங்கியவர் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார். வசந்தகோகிலத்துக்குத் தேனினும் இனிய குரல். நல்ல சுருதியோடு கூடிய பாடும் திறமை. பாட்டிலுள்ள நவரசங்களும் குரலில் வரும்படி பாடும் திறன். சரியான உச்சரிப்பு. எந்த ஸ்தாயியிலும் சிரமமின்றி பாடும் அசாதாரண குரல் வளம், இவை அனைத்தும் வசந்தகோகிலத்தை புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லத் தொடங்கியது. பொதுவாக தெலுங்கு மொழியிலும், சம்ஸ்கிருத மொழியிலும் அமைந்த பாடல்களையே பிரபலமான வித்வான்கள் பாடிவந்த நிலையில் வசந்தகோகிலம் தமிழில் அமைந்த பல அருமையான

 கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப் படுத்தத் தொடங்கினார். இவருடைய கச்சேரி என்றால் அதிக அளவிலான தமிழ்ப் பாடல்களைக் கேட்க முடியும் என்றே பல ரசிகர்கள் வந்து கூடுவார்கள். சென்னை தமிழிசைச் சங்கம் நடத்தும் இசை விழாவில் இவருக்குத் தவறாமல் வாய்ப்பு கொடுத்து வந்தார்கள். தமிழிசை இயக்கம் உச்ச கட்டத்தில் இருந்த அந்த நாட்களில் தமிழில் சாகித்தியங்களை அதிகம் பாடும் இவருக்கு அதிக வரவேற்பு இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுத்து கலைஞர்களை அழைக்கும் பல சபாக்களில் இவர் சென்று பாடியிருக்கிறார். திருவையாற்றிலும் வேறு

 இடங்களிலும் நடைபெற்ற சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா இசை நிகழ்ச்சிகளிலும் இவர் தொடர்ந்து பல ஆண்டுகள் கலந்து கொண்டிருக்கிறார். திருவையாற்றுக்கு விடாமல் தொடர்ந்து 1942 முதல் 1951 வரை வந்து பங்கு பெற்றிருக்கிறார். அவருடைய காலத்தில் சங்கீத உலகில் கொடிகட்டிப் பறந்த ஒரு சில வித்வான்களில் வசந்தகோகிலமும் ஒருவர். இவருடைய இனிய குரலால் ஈர்க்கப்பட்டு இசைத்தட்டு கம்பெனிகள் இவரது பாடல்களைக் கொண்ட இசைத்தட்டுகளை அதிக அளவில் விற்பனை செய்தார்கள். கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல், தனிப்பாடல்கள் கொண்ட இசைத்தட்டுக்களும் வெளியாகின. இவருடைய இன்னிசைக்காக இவருக்கு

 "மதுரகீதவாணி" எனும் விருதினை வழங்கி கெளரவித்தார்கள். இந்த விருதை இவருக்கு வழங்கியவர் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத வித்வான் டைகர் வரதாச்சாரியார் ஆவார். இவர் பாடி வெளியான பாடல்கள் அனேகம். இன்றும்கூட அந்தப் பாடல் பெயரைச் சொன்னால் கேட்கத் துடிக்கும் இசைப் பிரியர்கள் ஏராளம். அவர் பாடி புகழ் பெற்ற சில பாடல்கள்:-- "ஏன் பள்ளி கொண்டீரையா?", "தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா?", "நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி?", "மகாலக்ஷ்மி ஜகன்மாதா", "ஆனந்த நடனம் ஆடினார்", "ஆசை கொண்டேன் வண்டே", "தித்திக்கும் செந்தமிழால்", "அந்த நாள் இனி வருமோ?", "வருவானோ வனக்குயிலே?", "ஆடு ராட்டே", "சரஸதள நயனா", "இந்த வரம் தருவாய்", "நீ தயராதா", இப்படிப் பல பாடல்கள் பிரபலமானவை. சினிமா

 பாடல்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. சினிமாவில் இவர் பாடி வெளியானவை அத்தனையும் புகழ்பெற்று விட்டன. அந்தப் பாடல்களை அந்தக் காலத்தில் முணுமுணுக்காதவர்களே இருக்கமுடியாது. தமிழ்நாட்டு சினிமாத் துறையில் இவரும் இவரது பாடல்களும் புகழ் பெற்று விளங்கியது. இவரது புகழ் பெற்ற சினிமா பாடல்கள் சில:- "எப்போ வருவாரோ, எந்தன் கலி தீர", "இன்பம் இன்பம் ஜகமெங்கும்", மகாகவி பாரதியின் "பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்", "குழலோசை கேட்குதம்மா", "கலைவாணி அருள்

 புரிவாய்", "ஆனந்தம் அளவில்லா மிக ஆனந்தம்", "இதுவென்ன வேதனை?", "கதிரவன் உதயம் கண்டு கமலங்கள் முகம் மலரும்", "கண்ணா வா மணிவண்ணா வா", "எனது மனம் துள்ளி விளையாடுதே", "எனது உயிர் நாதன் இருதயம் நொந்து என்னைப் பிரிந்தான்", "சுந்தரானந்த வைகுந்த முகுந்தா", "புவி மேது தவ ஞானியே உயர் புகழ் மேவும் பெரியோர் தன்பால்", "பொய்தவழும் மாயப்புவி வாழ்வு", "பொறுமைக் கடலாகிய பூமாதேவி" இப்படி பல பாடல்களைச் சொல்லலாம். இசை உலகம் மட்டுமல்லாமல்

 திரைப்படங்களிலும் இவர் நடித்தார் என்பதைக் கண்டோமல்லவா. 1940இல் "சந்திரகுப்த சாணக்கியா" எனும் படத்தில் இவர் இளவரசி சாயா தேவியாக நடித்தார். தொடர்ந்து அதே ஆண்டில் "வேணுகானம்", 1942இல் "கங்காவதார்", 1944இல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "ஹரிதாஸ்", 1946இல்

 ஹொன்னப்ப பாகவதர் நடித்த "வால்மீகி", "குண்டலகேசி" ஆகிய படங்களில் நடித்தார். 1950இல் இவருடைய கடைசி படமான "கிருஷ்ண விஜயம்" வெளியாகியது. இவர் காலமாகி இப்போது அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டபடியால் இவருடைய பாடல்கள் அதிகம் கிடைப்பதில்லை. எங்கோ ஒரு சில பாடல்கள் கிடைத்தாலும் அவற்றைப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவருடைய சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருக்கவில்லை. இவரை மணந்து கொண்டவர் இவரது இசை

 வாழ்க்கையை அவ்வளவாக வரவேற்கவில்லை. இந்த இணை பிரிந்தது. பிறகு இவர் திரைப்படத் துறையைச் சேர்ந்த C.K.சதாசிவம் என்பவரை மணந்து கொண்டு வாழ்ந்தார். இவரது இளம் வயதில், தமிழ்நாட்டு இசை உலகின் துரதிர்ஷ்டம் இவருக்குக் காசநோய் பற்றிக் கொண்டது. 1951இல் இவரது முப்பத்திரெண்டாவது வயதில் சென்னை கோபாலபுரத்தில் இருந்த இவரது இல்லத்தில் இவர் காலமானார். இந்த இளம் குயிலின் தேன் குரல் இசையுலகத்தில் என்றும் நிறைந்திருக்கும். வாழ்க வசந்த கோகிலம் புகழ்! 

Sunday, March 28, 2021

யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி

‘மனித இனத்துக்குச் சொல்வதற்கு என்னிடம் ஏதுமில்லை. 

 யாரையும் எதிலிருந்தும் காப்பாற்ற நான் வரவில்லை!’ 

 என நிர்தாட்சண்யமாகக் கூறும் ஒரு மனிதரை, 

எப்படி ஒரு சிந்தனையாளராக, தத்துவ ஞானியாகக் கருதுவது? 

 அல்லது ஒரு குருவாகக் கொள்வது? 

 அவரோடு பழக வாய்த்தவர்களின் ஆன்மீக, மத, கலாசார நம்பிக்கைகளை நொறுக்கித் தள்ளியவர். 

 ஆனால் அதனிடத்தில் நிரப்ப, எதையும் தந்ததில்லை! தன்னை எதுவுமாக, யாருமாக அவர் வெளிப்படுத்திக்கொண்டதில்லை. 

‘நான் சாதாரணமானவனே’ என்பார்.

 ’என்னை ஒரு பீடத்தில் உட்காரவைத்து, விதம் விதமாக லேபிள் ஒட்டிப் பார்க்கிறீர்கள்..’ என விமரிசிக்கிறார், 

 தன்னை ‘ஜீவமுக்தர்’ என்றும், ‘பிரும்மஞானி’ என்றும் வர்ணிக்க முயன்ற ஒரு மதநம்பிக்கையாளரை. 

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல பயணங்கள் மேற்கொண்டவர் எனினும், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள், பிரசங்கங்களைத் தவிர்த்தவர். தன் பெயரில் எந்த ‘அமைப்பு’ம், ’யாரும்’ செயல்பட அனுமதித்தது கிடையாது.

 அவருக்கென்று ஒரு நிரந்தர முகவரி இருந்ததில்லை. அவருடைய உடைமையாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. சின்ன சூட்கேஸில் சில துணிமணிகளுடன் சுற்றியவர். எந்த ஒரு வகைமையின் கீழும் வராத ஒரு மனிதர். அறிந்துகொள்ளும் ஆவலில், ’முக்திநிலை’ அல்லது ‘ஞானநிலை’

 அடைந்ததற்கு முந்தைய அவரது வாழ்க்கை பற்றி யாராவது துருவினால், பதில் இப்படித்தான்: ”என் வாழ்க்கை அற்பமானது. அதைப் பற்றித் தெரிந்துகொண்டு உங்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை.” என்னதான் தன்னைச் சந்திக்க வந்தவர்களை அனுமதித்து, உரையாடினாலும் தொடர் கேள்விகளுக்கிடையே, முகத்தில் அடிப்பதுபோல பலருக்குச்

 சொல்லியிருக்கிறார்: ”என் மூலமாக உங்களுக்கு ஏதாவது கிடைக்கும் என நினைத்து இங்கு வந்திருந்தால், ஏமாற்றமே மிஞ்சும். போய்விடுங்கள்!” கிளம்பும்போது யாராவது ”சரி, நாளைக்குப் பார்க்கலாம்..” என்றால், ”திரும்பி வராதீர்கள்” என்றும் சில சமயங்களில் அவரிடமிருந்து பதில் வந்திருக்கிறது. கேள்வி கேட்பவரைப் பின்னுக்குத் தள்ளும் காரசாரமான, எதிர்மறை பதில்கள். மனிதரோடு உரையாடல் நிகழ்வதே சாத்தியத்திற்கு அப்பாற்பட்டதாகத் தெரியும் நேரங்கள். இந்த மனுஷனைப் பார்க்க ஏன் மெனக்கெட்டு வந்தோம் என சிலருக்கு அலுப்போ, எரிச்சலோ தோன்றியிருக்கும். அதே சமயம், ஏற்கெனவே தெரிந்தவர்களோடு, புதிதாக வந்தவர்களிடமும் ஒரு

 நண்பனைப்போல் சரளமாக அரட்டை அடித்துக் கழித்த பொழுதுகளும் உண்டு. விசித்திரமானவர், இருந்தாலும் ’ஒரு ஞானி’ என அறியப்பட்டிருந்த அவரைப் பற்றி மேலும் அறியும் துருதுருப்பில் சிலர் இருந்தார்கள். அறிவிக்கப்படாத, அவரது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த அவரது இந்திய வருகைகளை எப்படியோ முகர்ந்து, தேடி வந்து பார்த்திருக்கிறார்கள். அடிக்கடிச் சந்திக்க, அவர் முன் கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க என ஆசைப்பட்டவர்களும் உண்டு. பேச்சுவாக்கில் ஆன்மீகம், மெய்யியல் எனப் புரிகிறமாதிரி, இதமாக ஏதும் சொல்லமாட்டாரா என்கிற எதிர்பார்ப்பில்.

 அத்தகைய ‘உரையாடல்’களின்போதும் அவர் குறிப்பாக எதையும் சொல்லவந்தாரில்லை. தன் வார்த்தைகளின் மூலம் யாரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவோ, எவரையும் மாற்றவோ, நம்பவைக்கவோ முயன்றதில்லை. ”நாயின் மீது கல்லெறிவதுபோல என்மீது கேள்விகளை எறிகிறார்கள். நாய் குரைக்கிறது. நானும் குரைக்கிறேன்! அவர்களோ என் குரைப்பிலிருந்தும் ஏதேதோ அர்த்தம் காண்கிறார்கள்’ என்கிறார். போக்கில்லாத ஒரு போக்கு, இயல்பாக வியாபித்த ஒரு வெறுமை. இப்படியான சூழலிலும் ஏதோ புரிந்துகொண்டார்கள் சிலர். அல்லது புரிவதாக எண்ணினார்கள். ஒன்றும் நடக்காவிட்டாலும் அவர் எதிரே உட்கார்ந்திருந்ததில், கொஞ்சநேரம் அவர் பேசுவதைக் கேட்டுவிட்டு வந்ததில் ஏதோ ஓர் அமைதியையும், விசித்திரத் திருப்தியையும் அனுபவித்ததாகச் சொன்னார்கள். தொடர்ந்தார்கள். இப்படி ஒரு வட்டம் அவரைச் சுற்றி

 உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் பெரிதாகிவந்தது. ’யூ.ஜி.’ என்று நண்பர்களால், அபிமானிகளால் அழைக்கப்பட்ட யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி (Uppaluri Gopala Krishnamurti) எனும் மனிதர் உண்மையில் யார்? புகழ்பெற்ற சமகாலச் சிந்தனையாளரும், தத்துவஞானியுமான ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு உறவினர் அல்லர். இருவரும் பிரிட்டிஷ் இந்தியாவின் மதராஸ் மாகாணத்தில் (தற்போதைய ஆந்திரப் பிரதேசம்) பிறந்தவர்கள். ஒரு காலகட்டத்தில் மதராஸில் சந்தித்துச் சில வருடங்கள் பழகியிருக்கிறார்கள். இந்தியாவில் பலருடையதைப் போலவே, யூ.ஜி.யின் ஆரம்ப வாழ்க்கை மரபுவழி

 ஆன்மீகத்தின் பின்செல்வதாகவே தோன்றியது. இவருடைய தாய் தன் கர்ப்பத்தில் இவரைக் கொண்டிருந்த சமயம் வீட்டுக்கு வந்த ஒரு துறவி, ‘வயிற்றில் வளரும் பிள்ளை வருங்காலத்தில் பெரிய ஞானியெனப் போற்றப்படுவான்’ எனச் சொல்லிச் சென்றார். இவர் பிறந்த ஏழாவது நாள், தாயார் விஷஜுரத்தில் காலமானார். இறக்குமுன் அவர் தன் அப்பாவிடம் தன் பிள்ளைபற்றி அந்தச் சாமியார் சொன்னதைத் தெரிவித்து, மிகுந்த கவனத்துடன் குழந்தையை வளர்க்குமாறு வேண்டிவிட்டுச் சென்றார். தாத்தா ஒரு பிரபல வக்கீல். செல்வாக்குள்ளவர். ஆன்மீகவாதி. பூஜை

 புனஸ்காரங்களில் திளைத்த தாத்தாவினால் வளர்க்கப்பட்டார் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி. தாத்தாவைப் பார்க்கவென, பூஜைகள் நடத்தவென அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த சாமியார்கள், புனிதர்கள், அவர்களது கம்பீரம், கவர்ச்சி.. தாத்தாவே இவர்களைக் கண்டு பயப்படுகிறாரே! சின்னப் பையனான யூ.ஜி. சிந்திக்கலானான்: ’இதில் ஏதோ இருக்கிறது, நாமும் ஒருநாள் இப்படி ஆகவேண்டும்!’ ஒரு பிரமிப்புக் கலந்த ஆர்வம் அவனுள் முளைவிட்டிருந்தது. ஆனால் தாத்தாவின் முன்கோபம், கெடுபிடியான ஆன்மீக ஆசாரங்கள், சிறுவயது கிருஷ்ணமூர்த்திக்கு எரிச்சலையே அளித்தன.

 அவரோடு அவ்வப்போது முரண்பட்டான். வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சிடுசிடுக்க வைத்தான். ஒரு நாள் பூஜை, தியானம் என உள்ளே அமர்ந்திருந்தார் தாத்தா. வெளியே ஒரு இரண்டு-மூன்று வயதுக் குழந்தையின் விடாத அழுகை அவரது தியானத்தைக் கெடுத்தது. பூஜை முடிந்ததும், கோபத்துடன் வெளியேவந்த தாத்தா அந்தக் குழந்தையின் முதுகில் நாலு வைத்தார். பயத்தாலும், வலியாலும் மேலும் அது வீரிட்டுப் பதற,

 பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கிருஷ்ணமூர்த்தி வெகுண்டான். ‘ஒன்றும் தெரியாத குழந்தையைக் கண்மண் தெரியாமல் அடிக்கிறீர்கள்.. உங்களது தியானம் அவ்வளவு உயர்ந்ததென்றால், அது உங்களை சாந்தமாக்கி இருக்கவேண்டும்.. ஆனால் அப்படி இல்லையே.. மோசமான மனுஷனாக அல்லவா உங்களை ஆக்கியிருக்கிறது!’ எனக் கத்திவிட்டான். அரண்டுபோனார் தாத்தா. ஏதோ திருப்பிக் கத்திச் சமாளித்தார். பாட்டியோ, ”கொலைகார மனம் இதுக்கு, பிள்ளையா இது!” எனக் கரித்துவிட்டு உள்ளே போனார். தன் மகளுக்குக் கொடுத்த வாக்கின்படி, பேரனை ஹிந்து

 ஞானமரபின்படி முறையாக வளர்க்கப் பிரயத்தனம் எடுத்துக்கொண்டார் தாத்தா. பால்ய வயதில் சாஸ்திரங்கள், மந்திரங்கள், ஸ்லோகங்கள் என தினம் முறையாகக் கற்றுவிக்கப்படுகிறார் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி. பதினான்கு வயதுக்குள் பல மந்திரங்கள், ஸ்லோகங்கள் தனக்கு மனப்பாடம் என்கிறார் பின்னாளில். வடக்கே இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ரிஷிகேஷ் சென்று, சிவானந்தா ஆஸ்ரமத்தில் சேர்ந்தார். சுமார் எட்டு வருடகாலம் யோக முறைகளைக் கற்றுக்கொண்டார். ஸ்வாமி சிவானந்த சரஸ்வதியின் ஆசியுடன் முக்திக்கான வழிகாட்டல் கிடைக்குமோ என ஏக்கம். கழிந்தது காலம். திருப்தி இல்லை. இவரால் எனக்கு சமாதி நிலையைத் தரவோ, வழிகாட்டவோகூட முடியாது என ஒரு கட்டத்தில் தோன்ற, விலகி வந்தார் யூ.ஜி. இனி யாரிடம் போவது? எந்த குரு அல்லது ஸ்வாமி.. யார்தான் தருவார் ‘இதை’? மனமெலாம் முக்தி, மோக்ஷம் பற்றிய இடைவிடாத சிந்தனை பெருகினாலும், மதப் பிரசாரகர்கள், புனிதர்கள் பலரிடம் தென்பட்ட பொய்மையை அவ்வப்போது இனம் கண்டுகொள்ள நேர்ந்தது. மரபு சார்ந்த வழிமுறைகள், கட்டுப்பாடுகள் மீது அவநம்பிக்கை வளர்ந்தது. மதம், கலாசாரம் ஆகியவற்றின் பிடி நாளுக்குநாள் தளர ஆரம்பித்தது. மதராஸ்

 பல்கலைக்கழகத்தில் இந்திய, மேற்கத்திய தத்துவம், உளவியல் என முதுகலைப் படிப்பில் சேர்ந்தார். ஆனால் பாதியைத் தாண்டவில்லை. அங்கேயும் பிரச்னை. தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தன. ஒருநாள் தன் உளவியல் பேராசிரியரைத் தனியே சந்தித்தார் யூ.ஜி. ஏதோ பரீட்சை சம்பந்தமாகக் கேட்க வந்திருக்கிறான் பையன் என அவர் நினைக்க, யூ.ஜி.யிடமிருந்து வெளிவந்த கேள்வி: ”மனம், மனம் என்று எப்பொழுதும் சொல்லி வருகிறீர்களே, படித்து வருகிறோமே.. இந்த உடம்பில் எங்கே இருக்கிறது அது எனச் சொல்லமுடியுமா!” திடுக்கிட்ட பேராசிரியர் சமாளித்துக்கொண்டு, புத்தி சொன்னார். ”தர்மசங்கடமான, ஆபத்தான

 கேள்வியெல்லாம் வேண்டாம்! படிப்பில் கவனம் செலுத்து, பாஸ் பண்ணப் பார்!” ஆனால் முரண்டுபிடித்த அவர் மனதில் படிப்பின் சுவாரஸ்யம் போய்விட, அவரது மேற்படிப்பு முக்தி அடைந்தது. தாத்தா நெருக்கமான தொடர்பில் இருந்த மதராஸ் தியஸாஃபிகல் சொசைட்டியில் (The Theosophical Society, Adyar, Madras) வேலைக்குச் சேர்கிறார் யூ.ஜி. அவரிடமிருந்த சாஸ்திரங்கள், புராணங்களின் மீதான அறிவு, மொழித்திறன் ஆகியவை அவரை வெளிநாடுகளுக்கு ஹிந்து மதப் பேச்சாளராக அனுப்பி வைத்தன. அமெரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் மதப் பிரசங்கங்கள் தந்துவிட்டு இந்தியா திரும்புகிறார். மனம் மட்டும் எதிலும் அவரை லயிக்கவிடாமல் அடம்பிடித்தவாறு இருந்தது. ’ புத்தர், யேசு, ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர்களெல்லாம் ’இருந்த’தாகக் கூறப்படும் அந்த ‘நிலை’தான் என்ன? எங்கே அது? ஏன் எனக்கு நிகழவில்லை? ஆனால், இவர்களின் போதனைகளுக்கும், வாழ்வின் நிதர்சனங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஏதாவது சொன்னால்

 ‘கோபப்படாதே!’ என்கிறார்கள். கோபம்தான் எனக்குள் எப்போதும் இருக்கிறது. ஆசை கூடாது, அஹிம்சை முக்கியம் என்கிறார்கள். எப்படி? மனம் பூராவும் கோபமும், வன்மமுமாகத்தான் இருக்கிறது. உண்மையை மறைத்து, போலியாகக் காட்டிக்கொள்ளச் சொல்கிறார்கள். நிஜத்தை எப்படி மறைக்கமுடியும்? ஏன் நிராகரிக்கவேண்டும்? நான் பேராசைக்காரன், கோபக்காரன், வன்மமானவன், முரடன். இதுதான் நிஜம். இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, வேறொருவன்போல், ஒரு போலியாக நான் வாழ்வதா? முடியாது’ எனக் கலவரமானது அவர் மனம். ஆன்மீக மாயமான் வேட்டை தொடர்கிறது. ஆன்மீக மரபுவழி நம்பிக்கைகள் உதிர்ந்துவந்த நிலையில், நண்பர் ஒருவரின் உந்துதலினால், தன் 21-ஆவது வயதில் ஒருநாள் திருவண்ணாமலை வருகிறார் யூ.ஜி. ’அருணாச்சலத் துறவி’, ’பகவான்’ என்றெல்லாம் பலரால் போற்றப்பட்ட ரமண மகரிஷியைப் பார்ப்பதற்காக. அங்கே அவரைப் பார்க்க நேர்கையில், காமிக்ஸ் படித்துக்கொண்டோ,

 ஆசிரமத்துச் சமையலறையில் காய்கறி நறுக்கிக்கொண்டோ சாதாரண மனிதராகத் தெரிகிறார் மகரிஷி. எதிலும் சந்தேகமும், அவநம்பிக்கையுமாக இருந்த யூ.ஜி.யின் மனம், “ஹ்ம்… இவரா ஞானி?” என்றது. மகரிஷி பொதுவாக யார், யாரோ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்பவரில்லை. போதிப்பவருமில்லை. அபூர்வமாகவே வாயிலிருந்து வரும் வார்த்தைகள். அவரைத் தயக்கத்துடன் நெருங்கிய யூ.ஜி., தன்னைக்

 குடைந்துகொண்டிருக்கும் கேள்விகளை முன்வைக்கிறார். ” ‘முக்திநிலை’, ’சமாதிநிலை’ என்றெல்லாம் சொல்கிறார்களே.. அப்படி ஒன்று நிஜத்தில் இருக்கிறதா?” ”ஆம். உண்டு” என்றார் மகரிஷி. ”ஒரு சமயம் முக்திநிலையிலும், மறு சமயம் வேறுவிதமாகவும் இருக்கமுடியுமா?” ”முடியாது. ஒரே நிலைதான். ஒன்று அதில் நீ இருக்கிறாய். அல்லது இல்லை.” -மகரிஷி. கேட்கிறார் யூ.ஜி.: “உங்களிடம் இருக்கும் ’அதை’, எனக்குத் தரமுடியுமா?” சில கணங்கள் மௌனம். கேள்வியைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லையோ? சற்று குரலை உயர்த்தி மீண்டும் கேட்கிறார். மகரிஷி திரும்புகிறார். யூ.ஜி.யின் முகத்தைப் பார்த்துச் சொல்கிறார்: ”என்னால் தர முடியும். உன்னால் பெற்றுக்கொள்ள முடியுமா?” திடுக்கிட்டார் யூ.ஜி. இப்படி ஒரு பதிலா? ’என்ன ஒரு கர்வம்!’ என்று எரிச்சல்படுகிறார். மேற்கொண்டு ஏதும் கேட்கப் பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். ஆனால் மகரிஷியின்

 அந்தக் கேள்வி தொடர்ந்தது, மனதை அரித்தது. ‘என்னால் ஏன் முடியாது? எத்தனைக் கட்டுப்பாட்டுடன் வருஷக்கணக்கில் ’யோக’ங்கள், ‘சாதனா’க்கள் செய்திருக்கிறேன். என்னால் முடியாதென்றால், வேறு யாரால் முடியும்?’ என முசுடான மனம் எதிர்க்கேள்வியை தனக்குள் கேட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது. திரும்பத் திரும்ப மகரிஷியின் கேள்வி யூ.ஜி.யைப்போட்டுப் பிராண்டியது. ’அது என்ன அது.. என்னால் பெற்றுக்கொள்ள முடியாதது! என்னால் முடியும். நான் அந்த நிலைக்கு வருவேன்’ என சத்தம் போட்டது சீண்டப்பட்டுவிட்ட அவரது மனம். அதற்குப்பின் ரமண மகரிஷியை அவர் சந்திக்கவில்லை. பின்னாளில் இந்த நிகழ்வுபற்றிக் கேட்கப்பட்டபோது, மகரிஷியின் அந்த பதில் அப்போது

 கோபத்தை விளைவித்தாலும், சரியான பாதையில் தன்னைத் திருப்பிவிட்டதாகச் சொல்லுகிறார் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி. ’இனி யாருடைய உதவியும் வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன்’ என்பதாக மனம் இறுக, இலக்கை நோக்கிய ஆபத்தான பாதையில் தனியே பயணிக்கலானார். இன்னொரு பிரச்னை வேறு. பதின்ம வயதிலிருந்தே செக்ஸ் சம்பந்தமான உணர்வுகள் அவரைத் தொந்தரவு செய்துவந்தன. இதைக் கட்டுப்படுத்த முடியாது போலிருக்கிறதே. ஆனால், இது உடம்பின் தேவை, இயற்கையானதே எனவும் தோன்றியது. தப்புத்தண்டா செய்ய வேண்டியதில்லை, சமூகம்தான் இதற்கு ஒரு வழி செய்துவைத்திருக்கிறதே எனத் தீர்மானித்தார். அவருடைய 25-ஆவது வயதில் ஒரு தெலுங்கு பிராமணப் பெண்ணுடன் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்திக்குக் கல்யாணம். அடுத்த நாளே, தான் தவறு

 செய்துவிட்டதாக நினைக்கிறார்! இத்தனைக்கும் அந்தப் பெண் குஸுமா அவருக்கு மென்மையான, அன்பான மனைவியாகவே இருந்தார். யூ.ஜி.க்குக் குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஓர் இடத்தில் கொஞ்சநாள் உட்காரவிடாதே அவரது மனம்! மண வாழ்விலும் மனம் படிய மறுத்தது. ஆன்மீக உச்சம் நோக்கிய அந்த ஒரே தேடல், அவரைத் தொடர்ந்து எத்திக்கொண்டே இருந்தது. தியஸாஃபிகல் சொசைட்டியில் மீண்டும் வந்து சேர்ந்தபோது, அங்கே ஜே. கிருஷ்ணமூர்த்தி இருந்தார். அவரது மாலை நேரத்துப் பிரசங்கங்களைக் கேட்க நேரிடுகிறது. ஜே.கே.யுடன் நேரடி உரையாடல்களும் பின்னாளில்

 நிகழ்கின்றன. அவர் மனதைப் படாதபாடு படுத்திக்கொண்டிருந்த முக்திநிலை பற்றிய (realisation, enlightenment) சந்தேகங்களை ஜே.கே.யிடமும் போட்டுப் பார்க்கிறார் யூ.ஜி. நேரடியாக, சரியாக எந்த பதிலும் கிட்டாததால் கோபமாகிறார். ”இருட்டு அறையில் கருப்புப் பூனையைத் தேடும் குருடன் நான்.. ஆனால் பூனையோ அங்கில்லை!” எரிச்சலில் சொன்னார் யூ.ஜி. ஒருநாள் ஜே.கே.யிடம். ”பூனை அங்கேதான் இருக்கிறது!” என்றார் ஜே.கே. கோபமும், பதற்றமுமாக இருந்த யூ.ஜி.யைக் கவனமும் கண்ணியமுமாக, மென்மையாக நடத்துகிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ”உங்களால் இதைப்பற்றி எனக்கு ஏதும் சொல்ல முடியாதென்றால், நானும் உங்களிடமிருந்து எதையும் பெற முடியாதென்றால், எதற்காக நான் உங்கள் பேச்சைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கவேண்டும்?” எனப்

 படபடத்துவிட்டு வெளியேறிவிடுகிறார் யூ.ஜி. தன் மூத்த மகனின் போலியோ நோய்க்குச் சிறந்த மருத்துவம் தரவென, மனைவி குழந்தைகளுடன் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்கா வருகிறார். வெளிநாட்டு உயர் மருத்துவத்தில் கையிலிருந்த பெரும் பணமும் வேகமாகக் கரைந்ததே ஒழிய, பையன் குணமாகவில்லை. விட்டுவிட்டு அமைந்த மதச் சொற்பொழிவுகளில் ஏதோ சம்பாதித்தார். மனைவியும் கொஞ்ச நாள் அங்கு வேலை பார்க்கிறார். ஆனால் அமெரிக்காவில் காலத்தை அமைதியாக ஓட்டமுடியவில்லை. மணவாழ்வும் முறிந்துவிடும் விரக்தியான சூழலில், மனைவியையும், குழந்தைகளையும் இந்தியா திருப்பி அனுப்பிவிடுகிறார், தான் பின்னர் திரும்புவதாகச் சொல்லிவிட்டு லண்டன் வருகிறார். கையில் ஒன்றுமின்றி லண்டனின் தெருக்களில் போக்கற்று அலையுமாறு ஆனது. கொஞ்ச

 காசுக்காக, சில இடங்களில் இந்திய உணவு வகைத் தயாரிப்பைச் சொல்லிக் கொடுத்த சம்பவங்களும் உண்டு. ஆனால் இந்தியா திரும்ப விரும்பவில்லை. குடும்ப வாழ்க்கை மீதான பிடிப்பு போய்விட்டிருந்தது. காலமோ கவலையற்று நகர்ந்து கொண்டிருந்தது. திக்கற்றுத் திரிந்த மனிதரின் மனதில் வாழ்க்கையின் ஈர்ப்புகள், தாக்கங்கள் வலுவிழந்திருந்தன. லண்டனில் சுமார் மூன்று வருட காலம் சரியான ஊண் உறக்கமின்றிப் பெரும்பாடுபட நேர்ந்தது. இதைத்தான் ‘ஆன்மாவின் கருத்த இரவு’ (the dark night of the soul) என்கிறார்களோ என சில மதநம்பிக்கையாளர்கள் பிற்காலத்தில் கேட்டதற்கு, ’வாழ்க்கையின் ஈர்ப்புகள், ஆசாபாசங்களோடு ஆன்மாவின் பெரும்போராட்டம் என இதைச் சொல்லமாட்டேன். ஆனால், ஆசைகள், நம்பிக்கைகள் போன்ற

 பிடிப்புகளெல்லாம் மரத்திலிருந்து விலகும் காய்ந்த இலைகளாக வெளியேறின’ என்கிறார் யூ.ஜி. கடும் சோதனைக் காலகட்டத்தில், லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று: யாருடைய ஆதரவும் கிடைக்கவில்லை. தங்க இடமுமில்லை. அங்குமிங்குமாக அலைந்துகொண்டிருந்த யூ.ஜி. இரவில் ஒரு பார்க் பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறார். பார்த்துவிட்ட ஒரு போலீஸ்காரர் வந்து வெளியே போகச்சொல்கிறார். தன்னால் பிரச்னை இராது எனவும், தான் வீடில்லாதவன் என்பதால், தூங்கத்தான் வந்ததாகவும் இவர் சொல்ல, போலீஸ்காரர் மசியவில்லை. ’பார்க்கில் தங்க, தூங்க அனுமதியில்லை,

 கிளம்பு’ என விரட்டிவிட்டார். வந்தார் வெளியே. எங்கே போவது? லண்டனின் ஒரு பகுதியில் இருந்த ராமகிருஷ்ண ஆசிரமம் நினைவில் மின்னலடிக்க, இருக்கிற சில்லரைக்கு கொஞ்சம் ரயிலிலும், மிச்ச தூரத்தை நடையுமாகக் கடந்து, இரவு பதினோரு மணிவாக்கில் ஆசிரம வாசலை அடைகிறார். கதவு சாத்தப்பட்டுவிட்டது. வெளிக்கதவை நெருங்கிய ஊழியர் ஒருவர் இந்த நேரத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை என விரட்டப் பார்க்கையில், உள்ளே இருந்து வெளிவந்த ஸ்வாமிஜி பார்த்துவிடுகிறார். அருகில் வந்து என்ன விஷயம் என விசாரிக்க, யூ.ஜி. தன் பையில் வைத்திருந்த சில காகிதங்களை எடுத்துக் காண்பிக்கிறார். அமெரிக்காவில் அவர் அளித்த ஆன்மீகப் பேச்சுகள் தொடர்பாக அவருடைய படத்துடன் நியூயார்க் டைம்ஸில் வந்த கட்டுரை,

 சான்றிதழ்கள் சில இருந்தன. தன்னைப்பற்றி அறிமுகம் செய்துகொள்கிறார். ’இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்’ எனக் கேட்கிறார் ஸ்வாமிஜி. ஆசிரமத்தில் இருக்கும் தியான மண்டபத்தில் இரவைக் கழிக்கவேண்டும் என்கிறார் யூ.ஜி. இந்த நேரத்தில் தான் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாத நிலை எனக்கூறிய ஸ்வாமிஜி மனமிறங்கி, ”பக்கத்தில் ஒரு ஹோட்டலில் ரூம் வாடகைக்கு எடுத்துத் தருகிறேன். இரவைக் கழித்துவிட்டு நாளைக்கு வாருங்கள்” என்கிறார். அவ்வாறே ஹோட்டலில் தங்கிவிட்டு யூ.ஜி. மறுநாள் மதியம் ஆசிரமத்தில் நுழைகிறார். ஸ்வாமிஜி இவரை உள்ளே போய்ச் சாப்பிடச்சொல்கிறார். யூ.ஜி. யைப் பின்னர் சந்தித்த ஸ்வாமிஜி, அவர் அங்கேயே தங்கலாம் என்றார். ஆசிரமத்துப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் பொறுப்பு காலியாக இருப்பதைக் கூறி, அவரைப் போன்ற ஹிந்து சாஸ்திர

 ஞானம் உடையவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் எனவும் சொல்லி அழைக்கிறார். ‘தான் ஒரு காலத்தில் இந்த மாதிரி வேலைகள் செய்ததுண்டு என்றும், இப்போது அத்தகைய மனநிலையில் இல்லை எனக் கூறி யூ.ஜி. மறுக்கிறார். ”தங்குவதற்கு ஒரு ரூம் தாருங்கள். சாப்பிட்ட தட்டுகளைக் கழுவுகிற வேலையைச் செய்கிறேன். அல்லது அந்த மாதிரி வேலை ஏதாவது செய்கிறேன்” என்கிறார் யூ.ஜி. ஸ்வாமிஜி “இல்லை, இல்லை, அப்படியெல்லாம் இல்லை. நாம் இருவரும் சேர்ந்து இந்த இதழைக்

 கொண்டுவருவோம். முதலில் நீங்கள் ஓய்வு எடுங்கள். பிற்பாடு பேசலாம்” என்கிறார். வேறுவழியின்றி தங்குகிறார். ஒத்துழைத்து அடுத்த சில இதழ்கள் பிரசுரமாக உதவிசெய்கிறார் யூ.ஜி. ஒரு மதியம் ஆசிரமத்திலுள்ள தியான மண்டபத்துக்கு மாலையில் வருகையில், அங்கு பலர், குறிப்பாக இளைஞர்கள் பத்மாசனத்தில் உட்கார்ந்து தியானம் செய்துகொண்டிருப்பதைப் பார்க்கிறார் யூ.ஜி. மனம் கலங்குகிறது. ’அடடா.. இதைத்தானே நான் இத்தனைக் காலம் செய்திருந்தேன். இதுதான் இந்த நிலைக்கு என்னைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. முக்தி, மோக்ஷம் என்றெல்லாம் ஒரு மண்ணுமில்லை. எல்லாம் பித்தலாட்டம் என இவர்களுக்குச் சொல்லிவிடலாம். ஆனால்

 நம்பமாட்டார்களே.. தானாகத் தெரிவதற்குள் வாழ்க்கையை முழுதுமாகப் பாழாக்கிக்கொள்ளப் போகிறார்கள், பாவம்..’ என்பதாக யூ.ஜி.யின் அடிபட்டிருந்த மனம் அவர்களது பரிதாபநிலை கருதி அழுதது. ஓர் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு, கையறுநிலையில் அவர்களைக் கனிவோடும், இரக்கத்தோடும் பார்க்கலானார். திடீரென, அது நிகழ ஆரம்பித்தது. அவரது உடம்பு எதையோ குறிப்பாக உணரந்தது. முதுகின் கீழ்ப்பகுதியில் .. என்ன மாதிரியான அதிர்வு அது? உள்ளே ஏதோ நகர்கிறதா. முன்பெல்லாம் தனது ‘சாதனா’க்களின் விளைவாக, விதவிதமான ‘ஆன்மீக அனுபவங்கள்’ நிகழும்போதெல்லாம், அதை அவர் பொருட்படுத்தியதில்லை.

 சந்தேகம்கொண்டே அவைகளை அவதானித்தார். நம்மைத் திசை திருப்ப ’மனது நடத்தும் பித்தலாட்டம், ஏமாற்று வேலை’ என அலட்சியம் செய்திருந்தார். இப்போதும் மனம் ஏதாவது விஷமம் செய்கிறதா? ’சீன்’ போட்டுக் காண்பிக்கிறதா? இல்லையே. நிஜமாகவே அசைகிறதே ஏதோ, முதுகில் தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியில். உள்ளே ஏதோ திடீரெனக் கலைந்து எழுவதுபோல, உயர்வதுபோல.. நிகழ்கிறதே. உன்னிப்பாகக் கவனிக்கிறார். முதுகெலும்பின் கீழ்நுனியிலிருந்து அலை, அலையாக, வளையம் வளையமாகக் கடிகாரத்திசை இயக்கமாகவும், எதிர்த்திசையிலுமாக மாறி, மாறி ஏதோ மெல்ல மேலெழுவதை உணரமுடிகிறது. இது நிச்சயம் உடல் சார்ந்தது. மனம் சார்ந்ததல்ல. மறுப்பதற்கில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சக்தி அலைகள் மேலே, மேலே எழுவதை அனுபவிக்கிறார் யூ.ஜி. கொஞ்ச நேரம் நிகழ்ந்த அது அடங்கியதுபோல் தெரிய, ஆச்சரிய உணர்வுடன் அங்கிருந்து வெளியே வருகிறார். மூன்று மாதம் எப்படியோ அங்கே தாக்குப்பிடிக்கிறார்.

 ’நான் முடிந்துபோனவன். இப்போதுபோய் எனக்குள் ஏதோ நடக்கிறதா? இதை நம்புவது பைத்தியக்காரத்தனம் என்ற சிந்தனை. மறுபக்கம் ‘யாரோ எனக்கு உதவிசெய்கிறார் என்று ஏதேதோ வேலை செய்துகொண்டு இப்படியே தொடர்வது சரியில்லை’ எனவும் தோன்றுகிறது. மேற்கொண்டு ஆசிரமத்தில் தங்குகிற மனநிலை இல்லை. ஸ்வாமிஜியிடம் சொல்லிவிட்டு வெளியேறுகிறார். விவரிக்க இயலாத வெறுமை நிலையில் அலைகிறார் யூ.ஜி. அப்போது அவருக்குத் தன் பையில் இருக்கும் இந்தியாவுக்கான டிக்கெட் நினைவுக்கு வருகிறது. இந்தியாதான் போக விருப்பமில்லை. பாரீஸுக்குப் போகலாமே! டிக்கெட்டை மாற்றிக் கொள்கையில் கொஞ்சம் மிச்ச பணமும் அதிலிருந்து கிடைக்கிறது. பாரீஸில் சில நாள்கள் தங்கிவிட்டு, பின்னர் என்ன தோன்றியதோ, ரயில் பிடித்து ஜெனீவா போகிறார். மிச்சமிருந்த ஸ்விஸ் ஃப்ராங்குகளைக்கொண்டு ஜெனீவா ஹோட்டல் ஒன்றில் சில நாள்கள்

 தங்குகிறார். காசு தீர்ந்துபோக, விரக்தி வீரியம் காட்டுகிறது. இந்தியா போகக்கூடாது என்கிற வைராக்யம் உடைய, இந்திய கான்ஸுலேட்டுக்கு சென்று நாடு திரும்ப உதவி கேட்கவேண்டியதுதான் என விரக்தியான முடிவு. இந்திய தூதரக அலுவலகத்திற்கு வந்து வைஸ்-கான்ஸலைச் (Vice Consul) சந்திக்கிறார். வேலை வெட்டியில்லாமல், கையில் காசோ, தங்கும் இடமோ ஏதுமின்றி அலையும் ஓர் இந்தியரா ஜெனீவாவில்? விஜாரித்த அதிகாரிக்குத் தன் பேப்பர்கள் சிலவற்றைக் காட்டுகிறார். “One of the most brilliant speakers that India has ever produced” என்பதாக நார்மன் கஸின்ஸ் (Norman Cousins), ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் புகழ் வார்த்தைகள் அவற்றில். அந்த அதிகாரி ஆச்சரியத்துடன் யூ.ஜி.யை ஏறெடுத்துப் பார்க்கிறார். இத்தகைய ஒரு மனிதரை ’வாழ வழியில்லாத ஆள்’ என முத்திரை குத்தி, சர்க்கார் செலவில் இந்தியாவுக்குத் திருப்புவதா? நோ! “வேறு விதமாக உதவி செய்யலாம்,

 அதுவரை நீங்கள் என்னுடன் தங்குங்கள்” என அவர் யூ.ஜி.யைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறார். சில நாள்கள் கழித்து மீண்டும் அவர் இந்தியத் தூதரகத்துக்கு யூ.ஜி.யை அழைத்துவந்து, மேற்கொண்டு இவருக்கு எப்படி உதவுவது என சகாக்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அங்கே ’ரிஸப்ஷ’னில் உட்கார்ந்திருந்த ஒரு ஸ்விஸ் பெண்ணோடு உரையாடிய யூ.ஜி. தன் கதையை அவரிடம் சொல்ல நேர்ந்தது. அந்தப் பெண் அறுபதை நெருங்கிக்

 கொண்டிருந்த வாலண்டைன் டி கெர்வன் (Valentine de Kerven). இந்தியத் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளர். ரிஸப்ஷனிஸ்ட் அன்று விடுப்பிலிருந்ததால் அந்த இடத்தில் வாலண்டைன் உட்கார நேர்ந்தது. வாழ்வின் அதிர்ச்சிகள், முரட்டுத் திருப்பங்களையெல்லாம் அனுபவித்து, மனதளவில் ஓரமாக ஒதுங்கியிருந்தவருக்கு, யூ.ஜி. யின் கதை ஆச்சரியமாக இருந்தது. ”இந்தியா திரும்ப தனக்கு விருப்பமில்லை” என்றார் யூ.ஜி. ”ஸ்விட்ஸர்லாந்தில் தங்க விரும்பினால் நான் ஏற்பாடு செய்கிறேன். இந்தியா போக

 விருப்பமில்லையென்றால் போக வேண்டாம்.” என்றார் சாதாரணமாக வாலண்டைன். யூ.ஜி. ஆச்சரியத்துடன் சம்மதித்தார். ஒரு மாதம் வரை யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தியை இந்தியத் தூதரகம் கவனித்துக்கொண்டது. அதற்குள் வாலண்டைன் தங்க ஏற்பாடு செய்திருந்தார். தன் பொறுப்பில் யூ.ஜி. இருப்பார் என அலுவலகத்தில் சொல்லிவிட்டு, அவரை அழைத்துச் சென்றார். சில மாதங்களில் வேலையையும் ராஜினாமா செய்தார் வாலண்டைன். அவரது பென்ஷன் பணமும், சேமிப்புகளும், சிறிய வீடும் இருவர் வாழ்விற்கும்

 போதுமானதாக இருந்தன. யூ.ஜி.யோடு பழகப் பழக, என்ன ஓர் அபூர்வமான மனிதர் என ஆச்சரியப்படலானார் வாலண்டைன். இருவருக்குமிடையே நட்பு உருவாகி, வளர்ந்தது. யூ.ஜி.க்காக ஒரு வங்கிக் கணக்கு திறந்து அதில் அவர் செலவுக்கென 10000 டாலர்களை உடனே போட்டவர் வாலண்டைன். இவர்தான் யூ.ஜி.யோடு ஒரு தோழியாக கிட்டத்தட்ட 30 வருடங்கள்கூட இருந்து, யூ.ஜி.யின் இந்திய மற்றும் ஏனைய நாட்டுப் பயணங்களிலும் அவரோடு பயணித்தவர். வாலண்டைனிடம் மத நம்பிக்கைகள், ஆன்மீகத் தேடல் என்பதெல்லாம் என்றும் இருந்ததில்லை. தன் இயல்புப்படி, வாய்த்தபடி வாழ்ந்தவர். இறை நம்பிக்கை இல்லாத, ஆனால் மென்மையான மனமுடைய அப்பாவிப் பெண். லண்டனில் குண்டலினி அனுபவத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக தன் உடம்பில் ஏதேதோ நிகழ்ந்துகொண்டிருந்ததாக உணர்கிறார் யூ.ஜி. ’வெளியே

 ஒன்றையும் காண்பிக்காமல், உள்ளிருந்து கனன்று எரியும் உமிக் குவியல் போன்றிருந்தது என் உடம்பு’ என்கிறார். இதுவரை அவரில் இருந்துவந்த ’தேடல்’ இப்போது காணப்படவில்லை. எதைப் பற்றிய அக்கறையும் மனதில் இல்லை. குறிப்பாக, அவருடைய 49-ஆவது வயதிற்கு முந்தைய சில வருடங்களில் தனக்குள் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்ததாகக் கூறுகிறார். தலையின் மூளை இருக்கும் பகுதியில் விட்டுவிட்டு வலி. சகிக்கமுடியாத வலி. அதன் தாத்பர்யம் புரியாததால், தான் அடிக்கடி ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டதாகவும், ஒரு நாளைக்கு 15-20 கப் காப்பி குடித்துக்

 கொண்டிருந்ததாகவும் சொல்கிறார் யூ.ஜி. ஆனால் ’அந்த வலி’ இதனாலெல்லாம் குறையவில்லை. தானாகத் திடீரென வந்து உக்கிரம் பெறுவதும், சில மணிநேரத்துக்குப்பின் சட்டெனப் போய்விடுவதுமாயிருந்தது. தனக்குள் சில அமானுஷ்ய சக்திகள் (ESP -Extra Sensory Perception போன்றவை) இயங்கியதை அவரால் உணரமுடிந்திருக்கிறது. குறிப்பாக, அவரைப் பார்க்க வருபவர் அறைக்குள் நுழையும்போதே, அவரின் கடந்த காலமும், எதிர்காலம் பற்றியும் தெளிவாகத் தெரிந்தது. ஒருவரின் கைரேகையைப் பார்த்து அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் துல்லியமாகச் சொல்லிவிட முடிந்தது. தன்னை அறியாமல் தான் சொன்னது நடந்துவிடுகிறது. ஏன் அப்படிச் சொல்ல நேர்ந்தது எனத் தெரியவில்லை. சில சமயங்களில், அப்படிச் சொல்லப்பட்ட வார்த்தைகளால் சிலருக்கு இடைஞ்சல்களும் ஏற்பட்டதால்,

 சங்கடத்துக்குள்ளாகியதாகச் சொல்கிறார். ஆனால் தன் ‘தேடல்’ பற்றியோ, ’இறுதி உண்மை’பற்றியோ, தனக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் வினோத சக்தி பற்றியோ, தன்னோடு வசித்த வாலண்டைனிடம் வாய் திறந்ததில்லை. ஏன், யாரிடமும் எதையும் சொன்னதில்லை என்கிறார் யூ.ஜி. தனது 49-ஆவது வயதில் ஒருநாள் வீட்டில் ஒரு சோஃபாவில் உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தபோது திடீரென தாங்கமுடியாத அதிர்வைத் தன் உடம்பு எதிர்கொண்டதாகக் கூறுகிறார். உடம்போடு சோஃபாவும், தான் இருந்த இடமும் ஏன், இந்த பிரபஞ்சமுமே குலுங்குவதாக உணர்ந்த ஒரு பயங்கர அனுபவம் என்கிறார். வேறொரு நாளில், ஒரு சமயம் தன் உடம்பை அவரால் ‘பார்க்கவே முடியவில்லை’. திடுக்கிடுகிறார். வாலண்டைன் சமையலறையிலிருந்து வந்தவுடன் ’என் உடம்பைக் காணவில்லை, உனக்குத் தெரிகிறதா’ என அதிர்ச்சியுடன் கேட்கிறார். அந்தப் பெண்ணிற்கு இவருடைய நடவடிக்கைகள் பொதுவாகவே ஒரு மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது! ’என்ன கேள்வி இது யூ.ஜி., இதோதான் இருக்கிறதே உன் உடம்பு!’ என அவர் தொட்டுக் காண்பித்த பின்பும், தொட்ட இடத்தின் லேசான தொடு-உணர்வைத் தவிர, முழு உடம்பு அவருக்குத் ‘தெரியவில்லை’. இன்னொரு நாள் ..

 வாலண்டைன் வெளியே சென்றபின், ஓய்வுக்காகப் படுக்கையில் படுக்கிறார். உடனே அதே பிரம்மாண்ட அதிர்வு, குலுக்கல். ஒரு நிலையில் உடம்பினால் தாங்கமுடியாத அளவுக்குப்போய், நினைவை இழந்துவிடுகிறார். நினைவு மீள்கையில் 48 நிமிடம் ’அது’ நீடித்திருந்ததாக அறிகிறார். அதை நிகழ்ந்த ’மரணம்’ (clinical death) எனவே சொல்கிறார் யூ.ஜி. அதன்பின் இத்தகைய ‘மரணம்’ அவருக்கு அடிக்கடி நிகழ்வதும், மீண்டு வருவதும்

 தொடர்ந்திருக்கிறது. முதல் நிகழ்வுக்குப்பின், ஒவ்வொரு நாளும் அவரது உடம்பில் ஒரு மாற்றம் தெரிய வந்திருக்கிறது. கழுத்தின் முன்புறம், நெற்றி, மார்பு, தொப்புளுக்கருகில் என விசித்திர வடிவங்களில் ஒரு ’புடைப்பு’ அல்லது வீக்கம் தெரிந்தது. கண்கள் தன்னிச்சையாக சிமிட்டுவதை நிறுத்திவிட்டன. அவை ‘பார்க்கும்’ விதத்திலும் மாற்றம். உடம்பில் தோலில் ஒரு மினுமினுப்பு வந்திருந்தது. எந்த சத்தத்தைக் கேட்டாலும், அது வெளியிலிருந்தன்று, தனக்குள்ளிருந்தே வருவதாக உணர்கிறார். இதுவரை செயலற்றிருந்த, உடம்பின் நாளமில்லாச் சுரப்பிகள் (குண்டலினி யோகாவில் வரும் நாடிச்சக்கரங்கள்) உயிர்ப்பிக்கப்பட்டு முழுச் சக்தியுடன் இயங்க

 ஆரம்பித்திருப்பதை அவரால் உணர முடிந்திருக்கிறது. உடம்பின் உள்ளே நிகழ்ந்திருப்பது ஒவ்வொரு உயிரணுவிலும் (cell) ஒரே கணத்தில் நிகழ்ந்த ஒரு ’பிரம்மாண்ட வெடிப்பு’ என்கிறார். தன் உடம்பினால் பொறுத்துக்கொள்ள முடியாத கடும் அதிர்வுகளும், வலியும் அப்போது ஏற்பட்டன. அந்த ‘நிலை’யைத் தோற்றுவித்தன எனக் கூறுகிறார் யூ.ஜி. முக்தி, மோக்ஷம், சமாதி (realisation, enlightenment) – என்றெல்லாம் காலங்காலமாக மனிதனால் பேசப்பட்டு, உத்வேகமாகத் தேடப்படும், ஆனால் தீவிர ’தேடல்’ உடையவர்களாலும் அடையமுடியாத, மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதென பிரமிக்கப்படும் ஒரு ’நிலை’. ‘எத்தனையோ பேர் எப்படி எப்படியோ என்னிடம் பக்தி

 செலுத்தினாலும், கோடியில் ஓரிருவரே எனை அடையக்கூடும்’ எனக் கீதையில் கிருஷ்ணன் சூட்சுமமாகக் கோடிகாட்டும் ஆன்மீக உச்ச ஸ்தானம். ’அப்படி ஒன்று உங்களுக்கு நிகழ்ந்ததா?’ என்று பிற்பாடு கேட்கப்படுகையில் ”ஆம். என் 49-ஆவது வயதில்” என்கிறார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி. ’Enlightenment’ அல்லது ‘உள்ளொளிபெற்ற நிலை’ என்கிற வார்த்தையை அவர் உபயோகிக்க விரும்பவில்லை. ஆனால் இதனைப் பற்றிச் சொல்வதற்கு வேறொரு வார்த்தை கிடைக்காததால், தான் அடைந்திருக்கும் ‘நிலை’பற்றி கேட்போரிடம் இப்படியான வார்த்தையைச் சந்தித்துப் பதில் சொல்வதாய்க் கூறும் யூ.ஜி., இது தன்னாலேயே, ‘காரணமற்று விளைவது’ (acausal) என்கிறார். மேலும். இத்தகு ’சமாதி’ அல்லது ’முக்தி’நிலை, நரம்பியல்-உடலியல் (neuro-biological state) சார்ந்த நிலைதான். மதம், ஆன்மீகம், உளவியல் சார்ந்ததாக, மர்மமான ஒன்றாக இதனைப் பார்க்க வேண்டியதில்லை என அடிக்கடிக் கூறுகிறார். அவருடைய வார்த்தைகளில் இது ஓர் ”இயற்கைநிலை’ (Natural State). அவ்வளவுதான்.

 ”இதுதான் உங்களின் நிலையும்” எனவும் சொல்லி பேசிக் கொண்டிருப்பவரை ஆச்சரியப்படுத்துகிறார். ’என்னால் உணர முடியவில்லை, ஆனால் உங்களால் முடிகிறதே!’ – நம்புவதற்குக் கஷ்டப்படுகிறார் உரையாடிக் கொண்டிருந்தவர். யூஜி: ”அப்படியில்லை. உணர்வது, தெரிந்துகொள்வது என்பதன்று இது. ‘தெரிந்துகொள்ள’ முடியாதது. நீங்களாக இதைத் தெரிந்துகொள்ளவே முடியாது. இது தானாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. பிரக்ஞை என்பது இல்லாத நிலை… மேலும் எப்படி இதைச் சொல்வது எனத்

 தெரியவில்லை. என் பிரக்ஞையில் நான் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவன் என்கிற சிந்தனை வந்ததே இல்லை”. அவரைச் சந்திப்பவர்களில் பலருக்கு அவருக்கு ‘என்ன நடந்தது, ‘எப்படியானார் ’இப்படி’ எனத் தெரிந்துகொள்ளவே ஆர்வம். தனக்கு ’நிகழ்ந்த’தைப்பற்றி மேலும் விளக்க நேர்கையில், இது ஒரு ’பேரழிவு’ (calamity) என்கிறார். (இப்படியான வார்த்தைப் பிரயோகம்

 கேட்பவர்கள் அதன் முழுத் தாக்கத்தை, பரிமாணத்தைக் கொஞ்சமாவது புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக. பொதுவாக ஆன்மீக உலகில் கருதப்படுவதுப்போல் இது ஓர் ‘ஆனந்த அனுபவம்’ இல்லை எனத் தெளிவுபடுத்துவதற்காக.) இந்த ’பேரழிவின்’போது, இதுவரை அந்த ஜீவனால் என்னவெல்லாம் காலங்காலமாக அனுபவிக்கப்பட்டிருந்ததோ, நினவுத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ‘அனுபவ, கலாசாரக் கூறுகளாலான அறிவு’ என்பதெல்லாம் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டு தூக்கிவீசப்பட்டது, அந்த ’நிலை’யில் ‘நான்’ என்பதாக, ‘சுயம்’ என்பதாக, ’மனம்’ என்பதாக எதுவும் இல்லை. அதனால்தான், இதைப் பேரழிவு என்று குறிப்பிட்டதாகச் சொல்கிறார். ’பேரழிவு’ என்பது எனக்கில்லை. ’அது ஒரு பேரானந்த அனுபவம்’ எனக்

 கற்பனை செய்து வைத்திருக்கும் உங்களுக்குத்தான்!’ எனச் சிரிக்கிறார் யூ.ஜி. ”மனிதன் ஏன் ‘தான்’ என்றும், ’மற்றவன், மற்றது’ என்றும் பிரித்துப் பார்க்கிறான்? அதுதான் பிரச்னை எனில், இந்த ’இருமை’ (duality) எப்படி

 அவனில் வந்தது?” – கேட்கப்பட்டபோது யூ.ஜி. சொல்கிறார்: ”அப்படித்தான் நீங்கள் இயங்கமுடியும். இல்லாவிட்டால், ‘நீங்கள்’ என்பதான உங்களது ‘கதை’ முடிவுக்கு வந்துவிடும்! (அதை நீங்கள் விரும்பமாட்டீர்கள்.) ‘நான்’, ‘என்னுடைய’ என்பதாக நீங்கள் உங்களை உணர்வது, அனுபவிப்பது – அதுதான் உங்களின் அடையாளம். இப்படித் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் ’மனம்’ தன் ‘இருப்பை’ நிலைப்படுத்திக்கொள்கிறது. மனம் ’இல்லாத’ நிலை ஒருவேளை ’நிகழ நேர்ந்தால்’, அதாவது ‘நீங்கள்’ என்பது இல்லாத நிலையில் – என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. அந்த ’நிலை’க்கு உங்களை வரவிடாமல், மனம் ’தன் இருப்பை’ எப்போதும் தக்க வைத்துக்கொள்வதிலேயே குறியாக இருக்கிறது. கோடிக்கணக்கான வருடங்களாக இந்த ’மனம்’ தன்னைக்

 காப்பாற்றிக்கொண்டு வந்திருக்கிறது. தன் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள, எல்லா தந்திரங்களும் அதற்குத் தெரியும்!” தான் ஒரு குருவோ, ஆன்மீக போதகரோ அல்லர், யாருக்கும், எதையும் போதிக்க ’தன்னிடம் ஏதுமில்லை’ என்பதில் தெளிவாக இருந்த யூ.ஜி., குரு என்று ஒருவர் இருந்தால், அவர் எப்படி இருக்கவேண்டும் என ஒரு இடத்தில் சொல்கிறார். ’கைத்தாங்கல்கள் (crutches) வேண்டாம், தூக்கி எறிந்துவிடுங்கள்’ என உங்களிடம் சொல்பவராக இருக்கவேண்டும். ’எழுந்து நடங்கள்; விழுந்தால் நீங்களாகவே எழுவீர்கள், நடப்பீர்கள்’ என்று ஊக்குவிப்பவராக இருக்கவேண்டும், என்கிறார்.

 ’இப்படிப்பட்ட ஒருவரைத்தான் உண்மையான குருவாக, நமது தொன்மையான கலாசாரமும் சொல்லியிருக்கிறது’ எனவும் அவர் ஓர் இடத்தில் சொன்னது ஆச்சரியம்! பொதுவாகப் புத்தர், யேசு, ஆதிசங்கரர் என ஆதிகாலத்து ஆன்மீகத் தலைவர்களையும், தற்கால குருக்கள், புனிதர்களையும் கடுமையாக விமரிசிப்பவர் யூ.ஜி. ஆன்மீகம் என்கிற பெயரில் இப்போது நடப்பது சர்க்கஸ் என்கிறார். ”மதம், ஆன்மீகம் என்பதன் பெயராலோ, சித்தாந்தம், அரசியல் கொள்கை என்றெல்லாம்

 சொல்லிக்கொண்டோ அலையும் மனித இனக் ’காப்பாளர்களிடமிருந்து’ (saviours of mankind) இந்த உலகம் முதலில் விடுவிக்கப்பட வேண்டும். தீராக் குழப்பங்கள், துன்பங்களிலிருந்து மனித இனத்திற்கு விமோசனம் கிடைக்க இது ஒன்றே வழி” எனும் கருத்துடையவர் யூ.ஜி. மனித இனத்தின் கடவுள் மோகம் பற்றி இப்படிச் சொல்கிறார்: “கடவுள் என்பது உங்களுக்கு மிக உயர்ந்ததான ஓர் இன்பம். தங்குதடையற்ற ஆனந்தம். ஆனால் அப்படி ஒன்று இல்லை. எது இல்லையோ அதை விரும்புகிறீர்கள், நாடுகிறீர்கள் என்பதுதான் உங்கள் பிரச்னையின் வேர். முக்தி, மோக்ஷம், விடுதலை என்பவை, ’நிரந்தர ஆனந்தம்’ என்கிற ஒரே ’நோக்க’த்தின் வெவ்வேறு தோற்றங்கள்:” கடவுளைப் பற்றிப் பேச்சு தொடர்கிறது. கேள்வி கேட்பவர்களில் ஒரு பெங்களூர் விஞ்ஞானி: ”சார்! தொடர்பான கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்”. யூ.ஜி.: நானே தொடர்பறுந்தவன், இணைப்பில்லாதவன்.. கேள்வி: நாம் அறிவை (Knowledge) வளர்த்துக்கொள்வதில் குறியாக இருக்கிறோமே, ஏன்?

 அறிவிற்காகவே அறிவா, இல்லை மனித வர்க்கத்தின் வளர்ச்சிக்காகவா, அல்லது வேறேதாவது காரணமா? யூஜி.: அதிகாரத்துக்காக! ’எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது!’ -என்பதில் தெரிவது அதிகாரம். அறிவிற்காக அறிவுவளர்ச்சி (Knowledge for the sake of knowledge), கலைக்காக கலை (art for art’s sake) என்பதெல்லாம் பேத்தல். நிச்சயமாக, மனித இனத்தின் நலத்திற்காக அறிவை நாம் வளர்த்துக்கொள்ளவில்லை.. ’மனிதன் வாழும் லட்சணத்தைக் கவனியுங்கள்’ என்கிறார் யூ.ஜி. வேறொரு உரையாடலின்போது. ”ஒரு உயிரைப் பற்றிய உண்மையிலிருந்து மாறுபட்ட, எதிர்மறையான யோசனையில் (idea) அதைக் கொல்கிறான் மனிதன். தன் இனத்தின் இன்னொரு குழுவை தயவு தாட்சண்யமின்றித் தீர்த்துக் கட்டுகிறான்.

 மிருகங்கள் மற்ற உயிரினங்கள் இப்படி திட்டமிட்டுக் கொல்வதில்லை. நமது கலாசாரம், நாகரீகம் என்பதெல்லாம் ’கொல் அல்லது கொல்லப்படு’ என்பதைச் சுற்றித்தான் நிறுவப்பட்டிருக்கிறது. கடவுளின் பெயரிலோ, மத நம்பிக்கைகளினாலோ, அரசியல் கோட்பாடுகளுக்காகவோ இடையறாது கொல்கிறான் மனிதன்.” மூளையின் பங்கு, நினைவாற்றல் என்பது பற்றிப் பேசுகையில் யூ.ஜி: ”நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். உடலியல், நரம்பியல் நிபுணர்கள் நம்ப மறுக்கலாம். வருங்காலத்தில் நான் சொன்னது சரி என்கிற நிலைக்கு அவர்கள் வருவார்கள். உயிர் வாழ்வதில் மூளை என்பதன் பங்கு குறைவானது. மூளை ஒரு படைப்பு சக்தி அன்று. எதிர்வினையாற்றும்

 ஒன்றுதான் அது. நினைவாற்றல் (memory) என்பதென்ன? யாருக்கும் தெரியாது. நினைவு என்பதென்ன, நியூரான்களின் பணி என்ன என்பதற்கு நிபுணர்கள் சரியாகப் பதில் சொல்லவேண்டி இருக்கும். நான் சொல்வது என்னவென்றால், நினைவாற்றல் என்பது உடம்பின் ஏதோ ஓர் இடத்தில் இருப்பதன்று. உடம்பின் ஒவ்வொரு ‘உயிரணு’வுக்கும் (cell) இதில் பங்குண்டு. மூளை, நினைவாற்றல் ஆகியவற்றை நாம் அதிகமாக, தவறாகப் பயன்படுத்துகிறோம். அதனால்தான் உலகில் மனிதர்களின் நினைவு சக்தி குறைந்து வருகிறது, ‘அல்ஸாய்மர்’ (Alzheimer’s disease) போன்ற நோய்கள் அதிகரித்து வருகின்றன” என்கிறார் யூ.ஜி. ’இயற்கை நிலை’யை அவர் அடைந்தபின் உடம்பின் இயக்கம் அபூர்வமாக இருந்தது. நாடிச்சக்கரங்கள் இருந்த இடத்தில் புடைப்புகள் காணப்பட்டதோடு உடம்பில் சாம்பல் பூத்திருந்ததையும், கழுத்து சில நாள்கள் நீல நிறத்தில் காணப்பட்டதையும் நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். இதனால்தான் ஹிந்து புராணங்களில் சிவன் நீலகண்டன் என வர்ணிக்கப்பட்டிருக்கிறது போலும் என மேலும் சொல்லியிருக்கிறார் யூ.ஜி.. அவரது மார்பின் ஒருபுறம் சில நாள்களாகப் பெண்ணின் மார்பகம்போல் உருவெடுத்திருந்தது. அர்த்தநாரீஸ்வரக் கோலம்தான் இது என ஹிந்துமத நம்பிக்கையுள்

ள நண்பர்கள் தெரிந்து ஆச்சரியப்பட்டுள்ளனர். விந்தைகள் பல காட்டிய அந்த உடம்பு வயோதிகத்திலும் டாக்டரிடம் அவரை அனுப்பியதில்லை. யூ.ஜி. மிகக் குறைவாகச் சாப்பிடுபவராக இருந்தார். தென்னிந்திய உணவு வகைகள் சிலவற்றோடு, மேற்கத்திய உணவு வகைகள் சிலவற்றையும் சமைக்கத் தெரிந்தவர். தன் வேலைகளைத் தானே செய்வார். தன் துணிகளைத் தானேதான் துவைப்பார். சின்ன வயதுப் பழக்கம் இது என்பார். தூக்கமும் பூனைத் தூக்கம்தான். பகலில்கூட அவ்வப்போது கொஞ்சம் படுத்துக் கிடந்துவிட்டு எழுந்துவருவார். 88-ஆவது வயதில் அவருக்கு வயோதிகத்தினால் உடல் தடுமாற்றங்கள் ஏற்பட்டன. வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்ந்தவர், வலிகள், அசௌகரியங்கள் உடம்பில் இருந்தும் டாக்டரிடம் செல்ல மறுத்தார். ’ஆயுளை நீட்டிப்பதில் அர்த்தமில்லை. தன் முடிவைத் தானாகவே உடம்பு அடைய வேண்டும்’ என்றிருக்கிறார். இறப்பதற்கு இரண்டு வாரம் முன்பு நெருங்கிய நண்பர்களை அழைத்துக் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, எல்லோருக்கும் கைகூப்பி நன்றி சொல்லியிருக்கிறார். ஒரு சிலர் போகாமல் அங்கேயே

 சுற்றிக்கொண்டிருக்கையில் ‘அவரவர் தங்கள் ஊருக்குத் திரும்பி ஆகவேண்டிய வேலைகளைக் கவனியுங்கள்’ என்று வலியுறுத்தி அனுப்பிவிட்டாராம். அவர் இறந்தபின் அவரது உடலை என்ன செய்வது என மறைவிற்குச் சில நாள்கள் முன்பு கேட்டதற்கு, ’என்னைக் கேட்டால் இந்த உடம்பைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விடுங்கள் என்பேன்’ என்றவர் யூ.ஜி. கடைசி நாள்களின்போது சூஸன் என்கிற டாக்டர் நண்பரும், ஹிந்தி திரைப்பட இயக்குனரும் நீண்ட நாள் நண்பருமான மகேஷ் பட் (Mahesh Bhatt) மற்றும் இன்னொரு மேலைநாட்டு நண்பரும் மட்டுமே கூட இருந்தனர். மார்ச் 22, 2007 அன்று மதியம், இத்தாலியின் வாலக்ரோஸியா (Vallecrosia) நகரில், தான் தங்குவதற்காக நண்பர் ஒருவர் அளித்திருந்த வீட்டில் யூ.ஜி.

 கிருஷ்ணமூர்த்தி காலமானார். சடங்கேதும் செய்யப்படாவிட்டாலும், அவரது பூத உடல் நண்பர்களால் தகனம் செய்யப்பட்டது. அஸ்தியை அவர்கள் ஒரு படகில் எடுத்துக்கொண்டுபோய் மத்தியதரைக் கடலில் கரைத்தார்கள்.
U.G. Krishnamurti - Frustration! https://www.youtube.com/watch?v=HGY37Am7dQ4

Wednesday, March 17, 2021

ஈரவிழி காவியங்கள் (1982)

ஈரவிழி காவியங்கள் (1982) இயக்குனர்: பி.ஆர்.ரவிசங்கர் இசை: இளையராஜா ஈரவிழி காவியங்கள் பாடல்கள் 1 என் கணம் எங்கு அரங்கேறும் பாடகர்கள்: ஜென்சி , இளையராஜா பாடல் நேரம்: 4:30 நிமிடங்கள் 2 காதல் பண்பாடு பாடகர்கள்: K.J.யேசுதாஸ் பாடல் நேரம்: 4:22 நிமிடங்கள் 3 கனவில் மிதக்கும் பாடகர்கள்: K.J.யேசுதாஸ் பாடல் நேரம்: 4:19 நிமிடங்கள் 4 பழைய சோகங்கள் பாடகர்கள்: இளையராஜா பாடல் நேரம்: 2:17 நிமிடங்கள் 5 தென்றல் இடை பாடகர்கள்: இளையராஜா பாடல் நேரம்: 1:48 நிமிடங்கள்

Monday, February 22, 2021

சமயவேல்

கவிஞர் சமயவேல் சமயவேல் (பிறப்பு பிப்ருவரி 04, 1957) சமகாலத் தமிழ்க் கவிதையின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். எண்பதுகளில் இறுதிப்பகுதியில் ஒரு முக்கியமான கவிஞராக உருவாகிய இவர் தமிழில் Plain Poetryயை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆகிறார். வாழ்வியல் நெருக்கடிகளை, இந்திய கிராமிய சிதைவுகளின் வழியாக தமிழ் அழகியலோடு கவிதைகளாக மாற்றினார் சமயவேல். 1. வாழ்க்கைக் குறிப்புகள் ________________________________________ கவிஞர் சமயவேல் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகில் நால்வழிச் சாலையின் இடப்புறம் உள்ள வெம்பூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். அவரது அம்மா திருமதி க.முனியம்மாள், விளாத்திகுளம் அருகில் உள்ள வேலிடுபட்டி கிராமத்தில் உமையன் என்னும் புகழ் பெற்ற சேவற்கட்டு வீரரின் மகளாவார். அப்பா திரு ச.கருப்பசாமி. அந்தப் பகுதியின் மிக நுட்பமான மரச் செதுக்கோவியக் கலைஞராக இருந்திருக்கிறார். 04.02.1957ல் பிறந்த இவர் வெம்பூரில் உள்ள பஞ்சாயத்து உயர்தொடக்கப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பிறகு வெம்பூருக்கு அருகில் உள்ள புதூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பத்தாம் வகுப்பில் இருக்கும் போது "ஆலமரம் தன்வரலாறு கூறுதல்" என்னும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை தமிழாசிரியர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதால் இலக்கியம் பால் இவரது கவனம் திரும்பியது. புதூரில் உள்ள நூலகத்திலும் பந்தல்குடி நூலகத்திலும் உள்ள நூல்களை வாசிக்க ஆரம்பித்தார். ஆரம்பப் பள்ளி தையலாசிரியர் திரு தேவசகாயம் என்பவரது வழி காட்டுதலின் படி தத்துவம் அரசியல் துறைகளின் ஆரம்பநிலை நூல்களைப் பயின்றார். 1972ல் S.S.L.C. தேர்வில் புதூர் பள்ளியின் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். தனது கல்லூரிப் படிப்பை மதுரை நாகமலை ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தொடர்ந்தார். இளங்கலை கணிதம் பயின்றபோது அங்கு தமிழ் பேராசிரியர் திரு இ.சு.பாலசுந்தரம் அவர்கள் மூலம் நவீனத் தமிழ் இலக்கியம் பரிச்சயமானது. ஜெயகாந்தனிடம் தொடங்கி மௌனி வரையிலான வாசிப்பு பெருந்தாக்கத்தை உருவாக்கியது. "இளமதி" என்னும் கையெழுத்து இதழை நடத்தினார். சிற்றிதழ்களை வாசித்துவிட்டு இவரும் இவரது நண்பர் மற்றும் கல்லூரித் தோழர் ந.முருகேசபாண்டியுடன் சேர்ந்து கவிஞர் கலாப்ரியா, கி.ராஜநாராயணன், வண்ணதாசன் போன்ற படைப்பாளிகளை நேரில் சந்தித்து உரையாடி நவீனத் தமிழ் இலக்கிய நுட்பங்களைப் பயின்றார். பட்டப் படிப்பை முடித்த பிறகு சென்னைக்கு சென்ற இவர் சுதந்திர இதழாளராக பல இதழ்களுக்குப் பணியாற்றினார். பிறகு மத்திய அரசின் தபால் தந்தித் துறையில் தந்தி எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். துறைத் தேர்வுகள் மூலம் தொலை தொடர்புத்துறை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். உப கோட்டப் பொறியாளராக ஒய்வு பெற்று தற்சமயம் தனது துணைவியார் திருமதி பேச்சியம்மாளுடன் மதுரையில் வசிக்கிறார். ஒரு மகளும் இரண்டு மகன்களும் நல்ல பணிகளில் வெளியூர்களில் இருக்கிறார்கள். கவிதைத் தொகுப்புகள் ________________________________________ 1. காற்றின் பாடல் (1987) 2. அகாலம் (1994) 3. தெற்கிலிருந்து சில கவிதைகள் (தொகை நூல்) 4. அரைக்கணத்தின் புத்தகம் (2007) 5. மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் (2010) 6. இனி நான் டைகர் இல்லை (2011) (சிறுகதைகள்) 7. பறவைகள் நிரம்பிய முன்னிரவு (2014) 8. >ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் – சமயவேல் இந்த இரவு நான் அருந்திக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்த ரம் இல்லை வெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது நாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள் நம்மைக் கடந்தன எவ்வளவோ நாம் பார்த்துவிட்டோம் நாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை நடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்த நம் மெளனங்களின் இடைவெளிகளில் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது பக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில் பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறோம் ஆப்பிள் ரஸத்தின் இரத்தம் போன்றதோர் நிறம் கோமியம் போன்றதோர் அதன் வாசம் எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில் எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம் நமது சிகரட்கள் நம்மை சுவாசிக்கும் நறுமணத்தில் இந்த இரவு நிறைந்து தளும்பிக் கொண்டே இருக்கிறது. (நண்பர் இராஜமார்த்தாண்டனுக்கு) ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம் ஓங்கிய அரிவாளின் கீழே தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட மரணம் பற்றிய பிரக்ஞையற்று குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை; உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள் பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள் எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள் விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள் என்று வதைபடும் மனிதர்களை விட எத்தகு மேன்மையான வாழ்வுடன் நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள் எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள் கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று ஒருவரை யொருவர் கொல்வது பற்றி உங்களால் மே என்று கூட கத்த முடியாது எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட உங்களால் வரைய முடியாது. 2 இருமைகள் என்பது எதார்த்தம் எனில் அதில் ஒரு கை அள்ளி என் கண்களைக் கழுவுவேன் இரவு பகலோ, இறப்போ பிறப்போ இருமைகள் றெக்கைகளாக ஒரு பறவைக் கூட்டமாய் பழுப்பு வானில் பறந்து திரிவேன் மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன் இதுவும் அதுவும் கவ்வி முயங்கும் இடமோ பொழுதோ வெளியோ சிந்தும் இன்மையின் இனிமையை பருகி மகிழ்வேன் ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான் எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது அதன் வெண்மணற் பரப்பில் கோபுரங்களும் மலைகளும் கடல்களும் நகரங்களும் ஆகாயமும் கூட சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும் புதைந்து கிடக்கின்றன என் புல் வெளியில் மரணம் ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில் நான் ஒரு நாகலிங்க மரமாவேன் என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள் பூக்களாய் தொங்கும் எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான். இப்பொழுதெல்லாம் அலுவலகத்தை விட மருத்துவ்மனை பிடித்திருக்கிறது வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன். இசை அரங்குகளை விட சப்தங்கள் உயிர்ப்புடன் எழும் பேருந்து நிலையங்களில் வெகு நேரம் பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன் சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும் குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன் கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன் பூங்காக்களை விட பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள் அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன் வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட மாய விண்வெளியே நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம். ************ யதார்த்தம் என்பது சகிக்க முடியாத பொதுமனச் சிதைவு கவிஞர் சமயவேலுடன் ஒரு உரையாடல் உரையாடுபவர்: எஸ்.செந்தில்குமார். --------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வி 1 70, 80களில் சத்யஜித்ரே, ஷியாம்பெனகல், ரித்விக் கடக் ஆகியோரின் படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவான சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். இப்போது எழுதுகிறவர்களில் பெரும்பாலும் தென் கொரியப்படத்தின் இயக்குநர் கிம்கிடுக்கின் படங்களைப் பார்ப்பதும் அதன் பாதிப்பில் தங்களது படைப்புகளை உருவாக்குவதிலும் முனைந்திருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து மாற்று மொழி சினிமாவின் பார்வையாளராக இருக்கிறீர்கள். சமகாலப் படைப்பாளிகளை தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள இது தலைமுறை இடைவெளி என்ற போதிலும் கிம்கிடுக்கின் பாதிப்பின் காரணம் என்னவாக இருக்கமுடியும்? பதில்: 70, 80களின் படைப்பாளிகளில் சிலர்மட்டுமேசத்யஜித்ரே, ஷியாம்பெனகல், ரித்விக்கடக், மற்றும் இன்னும் பல உலகஇயக்குனர்களின் படங்களைப் பார்த்தார்கள். சென்னை, திருச்சி, மதுரை என பலநகரங்களிலும் திரைபடக் கழகங்கள் அமைத்து உலகத் திரைப்படங்களைப்பார்த்தார்கள். தங்களது வாசிப்பு அனுபவங்களோடு அதையும் இணைத்துக்கொண்டார்கள். அவ்வளவுதான். படங்களின் தாக்கத்தில் யாரும் எழுதவில்லை. இப்பொழுது உலகப்படங்கள், குறுவட்டுக்களாகவும் எண்வட்டுக்களாகவும் டோர்ரன்ட், யூ ட்யூப் என எளிதாகக் கிடைத்தாலும் யாரும் அவைகளின் தாக்கத்தில்கதையோ கவிதையோ எழுதுவதாக சட்டென்று கூறிவிட முடியாது. தென்கொரிய இயக்குனர் கிம்கிடுக் எனக்கும் மிகப்பிடித்த இயக்குனர். சமகால இளையவர்களின் சமூக-உளவியல் மற்றும் பாலியல் சிக்கல்கள், வித்தியாசமான இசைவுடன் கூடியஅழகியல் காட்சிக் கோர்வைகளாக பார்வையாளர்களை அலைக்கழிக்கின்றன.சம்மர்,வின்டர்… படம் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தா நாவலைப் போலஆன்மீகத் தேடலை, பாலியல் ரீதியாக அணுகும் அற்புதமான படம். 3-ஐர்ன்,டைம், தி போ, ப்ரீத், ட்ரீம் என பல படங்கள் எனக்குப் பிடித்தவை. உலகத்திரைப்பட விழாக்களில் முக்கியமான இயக்குனராக அங்கீகரிக்கப்பட்டாலும்கொரியாவில் சர்ச்சைக்குரியவராகவும், பெண்ணிய இயக்கங்களின் கண்டனத்துக்குஉரியவராகவும் கிம்கிடுக் இருந்திருக்கிறார். கிம்மின் 2013 படமான 'மொய்பியஸ்'படத்தில் ஆணுறுப்பைக் கடித்துத் துப்புகிற காட்சிகளைப் பார்த்து பலரும் அதிர்ச்சிஅடைந்தார்கள். எனது நண்பர் லஷ்மிசரவணக்குமார் ஒரு முழு நாவலையும்அந்தப்படம் மாதிரியே எழுத முயன்றிருக்கிறார். அந்த நாவல் களமான சென்னைமாநகரின் அடியுலகம், கிம்கிடுக் படத்தின் அடிஉலகத்தோடு ஒத்துப்போகிறது.மற்றபடி வேறுயாரும், இப்படி எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கேள்வி 2 தொடர்ந்து இன்றைய நவீன கவிஞர்களுடன் நேரடியான உரையாடலும் அவர்களது தொகுப்புக்களை உடனுக்குடன் வாசிக்கவுமாக இருக்கிறீர்கள்.தற்போதைய நவீன தமிழ் கவிதையின் இருப்பிடம் என்னவாக உள்ளது? பதில்: 70, 80களின் இளம்படைப்பாளிகள் பலரும் தங்களது மூத்தபடைப்பாளிகளோடு நேரடியான உரையாடலில் இருந்தார்கள். கவிதை, நாவல்,சிறுகதைகள், அரசியல் சித்தாந்தங்கள், தத்துவம், வரலாறு, உளவியல் என்றுஎல்லாவற்றையும் வாசித்தார்கள். உலகத் திரைப்படங்களைப் பார்த்தார்கள். பலநாடகக் குழுக்களும், உலக அளவிலான நாடகவியல் பற்றிய உரையாடலும்இருந்தன. சென்னைக் கலைக்கல்லூரி ஓவியர்களோடு சேர்ந்து, ஓவியக்கண்காட்சிகளை எழுத்தாளர்கள் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஆனால் இன்றுநிலைமை முற்றிலும் மாறிவிட்டது. கவிதை எழுதுபவர்கள் நாவல் வாசிப்பதில்லை.கதைக்காரர்கள் கவிஞர்களை இளக்காரமாகப் பேசுகிறார்கள். உலக அரசியல்மற்றும் தத்துவம்பற்றிய ஆழமான புரிதல்கள் இல்லை. தீவிரமான தளங்களுக்கு நகரமுடியவில்லை. புத்தாயிரத்தில் சுகிர்தராணி, இசை, இளங்கோ கிருஷ்ணன், கண்டராதித்தன்,ராணிதிலக், ஸ்ரீநேசன், லீனா மணிமேகலை என ஒரு பெரிய பட்டாளமே தமிழ்கவிதையுலகைக் கலக்கியது. ஆனால் அவர்களது தொடக்கத் தளத்திலிருந்து அடுத்ததளத்திற்கு நகர முடியாத ஒரு தேக்கம் வந்துவிட்டது. இவர்களுக்குப் பிறகு வந்தஇளம் கவிகளின் பட்டியல் இன்னும் பெரியது. பெரிதும் சமூக வலைத்தளங்கள்சார்ந்து இயங்கும் இந்தக் கவிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எனத்தெரியவில்லை. சிறந்த கவிதைகளை அடையாளம் காண்பது, கவிதைகளைவகைமைப் படுத்துவது, கோட்பாடுகளின் வழியாக கவிதைகளை அணுகுவதுபோன்ற விமர்சனப் பாங்குகள் தமிழில் மிகக் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்எனலாம். பின் நவீனத்துவம், அமைப்பியல், பின்-அமைப்பியல் சார்ந்தகோட்பாட்டாளர்கள் எழுதுவதை படித்துப் புரிந்து கொள்பவர்களின் எண்ணிக்கைஒற்றைப்படையில் இருப்பது ஏன்? கார்களையும் கணினிகளையும் இறக்குமதிசெய்வது போல, ஏன் கோட்பாடுகளை எளிதாக இறக்குமதி செய்து பயன்படுத்தமுடிவதில்லை?. மொழி சார்ந்த செயல்பாடுகள் அனைத்துமே அந்த மொழிபேசும்இனக்குழுவின் தொன்மத்திலிருந்து இன்று வரையிலான ஆழ்ந்த வாழ்வியல்சார்ந்தவை. வாழ்வியல் உறிஞ்சிக் கொள்ள முடிவதை மட்டுமே நாம் அதற்குவழங்க இயலும். விமர்சகர்கள் இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் பயின்று நமதுவாழ்வியலின் அடிப்படை அலகுகளுடன் பொருந்தக்கூடியவைகளை எழுதவேண்டும். அமைப்பியல் என்ற கோட்பாட்டை ஐரோப்பியர்கள் வாழ்வின் எல்லாத்துறைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். தமிழில், இலக்கிய உலகில் மட்டுமேஇயங்கும் கோட்பாடுகள், ஒரு சமூக ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முடியாததின்காரணம் பிறதுறைகள் ஏதொன்றிலும் இல்லாத சிந்தனா வறட்சியும், முற்றானஒருங்கிணைவு இன்மையுமே. மொழி மற்றும் இலக்கிய உலகக் கோட்பாட்டுஅறிவுஜீவிகள் தமிழ் வாழ்வின் அடிப்படைகளுக்குள் ஊடுருவ முடியாத ஒரு துயரகாலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். கேள்வி 3 தமிழ் கவிதையைத் தவிர நீங்கள் பிற மொழி கவிதைகள் அதிகமாக வாசிக்கிறீர்கள்.அதனதன் உலகம் என்னவாகவுள்ளது?. குறிப்பாக இந்தியாவில் நாம் அதிகமும்அறியாத அஸ்ஸாம் மற்றும் வட கிழக்கு பகுதிகளின் கவிஞரின் உலகம்? பதில்: தமிழும் ஆங்கிலமும் மட்டுமே எனக்கு வாசிக்கத் தெரிந்த மொழிகள். எனவே எனக்குதமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கும் படைப்புகளையே வாசிக்கிறேன்.அஸ்ஸாமிய இளம் கவிஞர் பிஜோய் சங்கர் பர்மனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில்சந்தித்தேன். தன்னுடைய ‘அசோகாஷ்டமி’ தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருதுபெற்றிருக்கிறார். குறுந்தொகையை அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவரது கவிதைகளில் நமது சங்கப் பாடல்களின் கூறுகள்இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. சாகித்ய அகடமியின் ‘இந்தியன்லிடெரச்சர்’ வாசிப்பதுண்டு. ஆனால் இந்திய அளவில் இன்று தமிழ் கவிதைகள்,முன்னனியில் இருப்பதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். பிஜோய் சங்கர் பர்மன் கவிதை: பட்டம் ஒரு நுண்ணிய இழையினால் என்னைக் கட்டிப் போட்டிருக்கிறாய் நீ ஆலய மணியுடன் தனித்த குன்றில் மற்றும் நீ பறந்து கொண்டிருக்கிறாய் மேலே மணி அசைகிறது மேற்கிலிருந்து வீசும் காற்றில் கோடையின் முதல் மழை போல நான் விழுந்துவிட்டேன் புல்லின் இதயத்தின் மேல் எங்கிருக்கிறாய் நீ நிர்வாண மரங்களுக்குப் பின்னால் குன்றின் உச்சியில் சூரியன் கீழே போகிறது அவனது இதயம் பெண்-ஓக்கு மரங்களின் மேல் மேய்கிறது இரவு காத்துக் கொண்டிருக்கிறது நீயும் உன் வழியைத் தொலைத்துவிட்டாய் வெகுதூரம் பறந்தபடி அல்லது வீழ்ந்து மூங்கில் புதர்களின் மேல் கவனிக்கப்படாமல். அஸ்ஸாமியக் கவிதை ஆங்கிலம் வழியாக தமிழில்: சமயவேல். கேள்வி 4 தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்த நீங்கள் தீடீரென சிறுகதை எழுதத்தொடங்கிஒரு தொகுப்பு கொண்டுவந்தீர்கள். பிறகு சிறுகதை எழுதவில்லை. தொடர்ச்சியாகநீங்கள் சிறுகதையில் கவனம் செலுத்தாதற்கு உங்களது சிறுகதைகளை சரியாகவாசகர்கள் வாசிக்கவில்லையென்ற ஆதங்கம்தானா? பதில்: நான் கவிதைகள் எழுதத் தொடங்குவதற்கு முன்பு சிறுகதைகள் தான் எழுதிக் கொண்டிருந்தேன்.கு.அழகிரிசாமி, கு.ப.ரா., கி.ராஜநாராயணன், வண்ணநிலவன், சா.கந்தசாமி, வண்ணதாசன் கதைகளின் தீவிர வாசகனாய் இருந்தேன். வாழ்வின் அலைக்கழிப்புகளால் எழுதிய கதைகள் பல தொலைந்து போயின. சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு வந்த பிறகு திருமணம் குடும்பம் என முற்றிலுமாக பிறிதொரு வாழ்வைத் தேர்ந்து கொண்டேன். முக்கியமாக எனது அரசியல் சார்புகளிலிருந்து மொத்தமாக என்னைத் துண்டித்துக் கொண்டேன். அந்த சமயத்தில் நண்பன் கோணங்கி, சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருந்தார். நான் எழுதாமல் போன பல கதைகளையும் அவர் சிறப்பாக எழுதிக் கொண்டிருந்ததால் நான் எழுதுவதையே நிறுத்திக் கொண்டேன். எனது மகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, எனது டைரியில் அவ்வப்பொழுது எழுதிய குறிப்புகளையே கவிதைகளாக்கி, உருவானதே எனது முதல் தொகுப்பு ‘காற்றின் பாடல்’. அந்த சமயத்தில் தேவதச்சனோடு ஒரு தீவிரமான உரையாடலில் இருந்தேன். கவிதையில் தத்துவத்தின் பங்கு குறித்த எங்கள் உரையாடலில் உறைந்த மௌனங்களே, எனது கவிதைகளை எழுதின. தத்துவம் vs கவிதை உரையாடல், பல கிளைகளாகப் பிரிந்து எங்கள் கவிதைகளை அவரவர் பாணியில் புதியதாக்கியது. எனது நண்பர்களிலேயே, ஏன் தமிழகத்திலேயே, மிக அற்புதமான உரையாடுபவராக தேவதச்சன் இன்றும் இருந்து வருகிறார். அவரது தோழமையின் பாதிப்பால் தான், நான் முழுக்க கவிதை சார்ந்து இயங்கத் தொடங்கினேன். தனிமனிதன் அல்லது சமூகத்தின் உள்ளார்ந்த தவிப்புகளின் ஆன்மீகத்தை பலநூற்றாண்டுகளாக தொடர்ந்து கவிதைகள் சுமந்துகொண்டு அலைவதைப் புரிந்து கொண்டதால், கவிதை சார்ந்தே இயங்கிவருகிறேன். ஆனால் கதைகள் வழங்கியிருந்த மயக்கமும் கதகதப்பும் தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டே இருப்பதால் எப்பொழுதும் போல கதைகளையும் தேடித் தேடி வாசிக்கிறேன். அவ்வப்பொழுது ஓரிரு கதைகளையும் பரிசோதனை முறையில் எழுதிப் பார்க்கிறேன். வாசிக்கிறார்களா இல்லையா என்பதையெல்லாம் பொருட்படுத்தினால் தமிழில் ஒரு படைப்பாளியும் இருக்க மாட்டார்கள். கவிதை தோழி என்றால், கதை காதலியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுவேன். இப்பொழுது ஒரு மெகா நாவலையும், ஒரு சிறுவர் நாவலையும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கேள்வி 5 சமகால நவீன இலக்கிய சூழலில் கவிதை எழுதத்தொடங்கி சிறுகதை நாவல் எனபயணிக்கும் இலக்கியவாதிகளை நாம் பார்க்கிறோம். இச்சூழலில் உங்களதுமாயஏதார்த்த பாணியிலான மற்றும் பின் நவீனத்துவ பாணியிலான கதைகதையற்ற கதைக்கான எதிர்வினைகளும் வரவேற்பும் சரியாக அமைந்ததா? பதில்: கவிதை அனைத்து வகையான படைப்பு வடிவங்களிலும் மையச் சரடாக இருக்கிறது. சிற்பம், இசை, ஓவியம், மட்பாண்டங்கள், ஓலை விசிறிகள், பரதம், கதகளி, சிறுகதை, நாவல் எல்லாவற்றிலும் கவிதையின் தடங்களைப் பார்க்க முடியும். எனவே ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கான பயணம் அவரவர் வாழ்வின் ஒழுங்கோடு மிக இயற்கையாகவே நடக்கிறது. என்னுடைய கதைகளுக்கான எதிர்வினைகள் அல்லது வரவேற்பு பற்றி நான் ஒருபோதும் யோசிக்கவில்லை. ஆகச் சிறந்த படைப்பாளிகள் எவரும் வாசகர்கள் விருப்பங்கள் பற்றி தனியாகக் கவலைப்படுவதில்லை. அவர்களைக் கலங்கடிக்கும் மொத்த சமூகத்தின் ஒரு பகுதியாகத்தானே வாசகர்களும் இருக்கிறார்கள். மொத்த வாழ்வும் குறித்த எழுத்தாளனின் கவனம் எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொள்கிறது. அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் தமிழில் ஒரு மிகச் சிறிய குழுவாக இயங்குகிறார்கள். கோட்பாட்டாளர்களே படைப்பாளிகளாகவும் இருப்பதால், அவர்களது சொந்தப் படைப்புகளை முன்னிறுத்தும் பணிகளே இன்னும் நிறைவேறாத சூழலில் இருக்கிறோம். தலித்தியக் கோட்பாட்டாளர்கள் நடப்பது அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சமநிலையில் ஒரு சிறிய துண்டு கூட இன்னும் கிடைத்தபாடில்லை. அண்மையில் வலதுசாரி சிந்தனையாளர்கள் பலரும் புத்துயிர்ப்பு பெற்று ஊடகங்களில் புகுந்து விளையாடுகிறார்கள். கார்ப்பரேட்டியம் சகல சிந்தனைப் பிரிவுகளையும் சிதறடித்திருக்கிறது. கிரிமானலிட்டி, ஊடகங்களில், அரசியலில், சமூகங்களில், குடும்பங்களிலும் கூட புற்றாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் நிலம், நீர், காற்று என சகலமும் மாசடைந்து அழிந்து வருகின்றன. எனவே இலக்கிய விமர்சனம் நோஞ்சான் பிள்ளையாகத் தானே இருக்கும். ஒரு திசையற்ற சுழற்காற்றுக்குள் தமிழ் இலக்கிய மையம் சிக்கிக் கொண்டதால், இளம் படைப்பாளிகள் விளிம்புகளில் எழும்பி வருகிறார்கள். விளிம்புகளே புதிய மையங்களாக மாறும் மாயமும் நடக்கும். பரிசோதனைப் படைப்புகளைப் பற்றிப் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் கூடிவராத சூழலில்தான் நாம் பலகாலமாக வாழ்கிறோம். பிரேம்-ரமேஷ் கவிதைகளும் கதைகளும் உச்சபட்ச பரிசோதனைப் படைப்புகள். ஜி.முருகனின் ‘மின்மினிகளின் கனவுக்காலம்’ நாவல் 1993ல் எழுதப்பட்டது. முற்றிலும் புதிய வகைமையினால் ஆன இந்த நாவலை கோட்பாட்டாளர்கள் பலரும் கண்டுகொள்ளவே இல்லை. ஏனெனில் ஜி.முருகன் எந்தக் குழுவிலும் இல்லாமல் இருந்தார். அதே போல் கௌதம சித்தார்த்தனின் மாய யதார்த்த சிறுகதைகள் குறித்து எவரும் பேசவில்லை. ஆர்.சிவகுமார், கால சுப்ரமண்யம் போன்றவர்களது மொழிபெயர்ப்புகள் பரவலாக வாசிக்கப்படவில்லை. கோணங்கி ஒருவர்தான் தனது கல்குதிரை மூலம் எல்லாவகையான தீவிரப் படைப்பாளிகளையும் ஒருக்கூட்டுகிற பெரும் சக்தியாக இயங்கிவருகிறார். கேள்வி 6 உங்களது கவிதை அழகியலும் நுட்பமான அரசியலும் கொண்டது. காண் உலகின்காட்சிகளையும் எதார்த்தமான நிகழ்ச்சிகளையும் எளிமையான அதேநேரத்தில்பொயட்டிக்கான வரிகளில் சிக்கனமாக கவிதை எழுதுவதில் பெயர்பெற்றவர்கள்நீங்கள். இதற்கு நேர் மாறாக ஃபேண்டஸி உலகின் தோற்றத்தை உங்களதுகதைக்குள் கொண்டுவர காரணமாக அமைந்தது என்ன? ஏற்கனவே தமிழில்நிறைய ஃபேண்டஸி மேஜிக்ரியலிச எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதைநீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவர்களுடன் இணைந்து கொள்ளும் முயற்சிதானா? பதில்: கவிதையே ஒரு ஃபேண்டஸி தான். யதார்த்தம் என்பது சகிக்க முடியாத வகையில் பொதுமனச் சிதைவை, சமூக சித்தப்பிரமைகளை உருவாக்கியதால்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மெக்சிகோவிலும் மாய யதார்த்த எழுத்துகள் தோன்றின. இங்கும் அப்படியான ஒரு சூழல் இன்று உருவாகிவிட்டது. ஜனத்திரளில் எத்தகைய சூழலிலும் புதிய தளங்களை அமைத்துக் கொள்ள முடிபவர்களாக கலைஞர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு இதயத் தாக்கிலிருந்து மீண்டு ஓய்வில் இருந்த ஒரு அதிகாலையில் கண்ட கனவை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே எழுதினேன். அதுதான் என்னுடைய “மன்னார் வளைகுடாவில் ஒரு நன்னீரோட்டம்” சிறுகதை. அந்த ஆண்டு நான் எழுதிய சில கதைகளுக்கு கனவுகளே தூண்டலாக இருந்தன. தினசரி வாழ்வின் சலிப்பிலிருந்தே ஃபேண்டஸி உருவாகிறது. ஃபேண்டஸி வகை வாசிப்பு சிறுவயதிலிருந்தே இருக்கிறது. கதையற்ற கதைகள் என்பதெல்லாம் எனது வாசிப்பிலிருந்து கிடைத்தவைதாம். ஒரு கதை எழுதுவதில் உள்ள பலவகையான திறப்புகள், சுதந்திரங்கள், மாய நகர்வுகள் எல்லாம் என்னைப் பெரிதும் கிளர்ச்சியூட்டுகின்றன. ஒரு பத்தியை நாம் எழுதுவதும், அடுத்த பத்தியை கதையே எழுதுவதும் செம த்ரில்லிங். உங்களுக்கும் அந்த அனுபவங்கள் இருக்குமல்லவா? கதைப்பிரிவில் மிகக் குறைவாக எழுதியிருக்கும் என்னை அந்த மேஜிக்ரியலிச எழுத்தாளர்கள் இணைத்துக் கொள்வார்களா என்பது தெரியவில்லை. சா.தேவதாஸ் ஒருவர் தான் எனது கதைகளைப் பற்றிய ஒரு மதிப்புரையை தமிழ் இந்தியா டுடேயில் எழுதியிருந்தார். கால்வினோ போன்ற எழுத்தாளர்களை மொழிபெயர்த்திருக்கும் அவரது மதிப்புரையும், நான் பெரிதும் மதிக்கிற எழுத்தாளர் மா.அரங்கநாதன் தொகுப்பைப் படித்துவிட்டு தொலைபேசியில் பேசியதும் எனக்குப் போதுமானதாக இருக்கிறது. சில நண்பர்கள் என்னய்யா எழுதியிருக்க என ஏசியதையும் மதிக்கிறேன். கேள்வி 7 சமகால சிறுகதைகளையும் நாவல்களையும் உடனுக்குடன் வாசித்துவிடுவிதைநான் அறிவேன். தற்போது இவ்வடிவத்தில் இயங்கும் எழுத்தாளர்களைப் பற்றியும்அதன் உலகத்தையும் நீங்கள் என்னமாதிரியான அபிப்ராயத்தை வைத்துள்ளீர்கள்என்பதை தெரிந்து கொள்ளலாமா? பதில்: இளம் எழுத்தாளர்கள் திசைகளற்ற விளிம்புகளில் இயங்குவது பற்றியும், புதிய மையங்களை அவர்கள் உருவாக்க இருப்பதையும் ஏற்கனவே கூறினேன். சந்திரா, எஸ்.செந்தில்குமார், திருச்செந்தாழை, கால பைரவன் ஆகிய சிறுகதையாளர்கள் இப்பொழுது ஒரு தேக்க நிலையில் இருப்பதாகக் கருதுகிறேன். கார்ல் மார்க்ஸ் ஜி என்பவரது சில கதைகளை விரும்பிப் படித்தேன். ஆனால் அவரது ஆசானின் கதையுலகம் அவரைப் பாதிக்காமல் இருக்க ஆசைப்படுகிறேன். சமீபத்தில் கவிஞர் நரன் எழுதிவரும் சிறுகதைகள் கவனிக்க வைக்கின்றன. அண்மையில் நிறைய நாவல்கள் வந்துவிட்டன. குறிப்பிட்டுச் சொல்வது மாதிரி ஒரு நாவலும் இல்லை. ஜோஸ் சரமாஹோ, மிலன் குந்த்ரே, ஓரன் பாமுக், கால்வினோ, ருல்ஃபோ(ஒரே நாவல்), மிஷிமா, கவாபட்டா, முரகாமி, மியா கூட்டோ, அடிச்சி போன்றவர்களது நாவல்களை வாசித்தபிறகு ஒரு வாசகர், தமிழில் இன்றைய நாவல்களை எப்படி எதிர்கொள்வார் எனத் தெரியவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கவிதையில் ஒரு பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளதைப் போல கதைப் பரப்பிலும் நடக்கும். கேள்வி 8 கோணங்கி. பா.வெங்கடேசன் இருவரின் நாவல்களுக்கான இடம் அதாவதுபொதுநீரோடையில் இல்லை. அதற்கான வாசகர்கள் கவிஞர்கள் மட்டுமே என்பதும்சாமன்யாமான வாசகர்கள் அப்பிரதியை எளிதில் அணுகமுடியாது என்பதுகுற்றச்சாட்டாக உள்ளது. கோணங்கியும் பா.வெங்கடேசனும் உங்களது நெருங்கியநண்பர்கள். அவர்களது எழுத்துக்களை விவாதித்து வருகிறிர்கள். அதுகுறித்துகட்டுரை எழுதியும் இருக்கிறிர்கள். அவர்களது மொழிகுறித்தும் அவர்களது உலகம்குறித்தும் சாமன்யவாசகனும் புரிந்து கொள்ளவேண்டுமெனில் என்னசெய்யவேண்டுமென நீங்கள் குறிப்பிடுவீர்கள்? பதில்: கொஞ்சம் வாசிக்க வாசிக்கப் பழகிவிடும். கோணங்கியை வாசித்துக் கொண்டே இருக்கலாம். எல்லாம் புரிய வேண்டும் என்பதெல்லாம் பெரிய ஆசை. வாசிப்பதே பெரிய அனுபவம் அவ்வளவுதான் என நண்பர்கள் கூறுகிறார்கள். உலக இலக்கிய இதிகாசங்களை ஊடிழைப் பிரதிகளாக அவர் கொட்டுவதைப் பலரும் வியக்கிறார்கள். எனக்கு அவரது அண்மை எழுத்துக்களில் ‘வெள்ளரிப் பெண்’ தவிர வேறு எதுவும் பிடிக்கவில்லை. அவரது ஊருக்கருகில் உள்ள நென்மேனி (இருக்கண்குடி அருகில்) என்ற ஊரில் உள்ள வெள்ளரித் தோட்டத்திலிருந்து அவரது தாத்தா ஊரான நாகலாபுரம் வரை உள்ள நிலப்பகுதியும், அதன் மரம் செடி கொடி என சகல உயிர்களும் மனிதர்களும் மூச்சுவிடும் அந்த மகத்தான கதையை பல முறை வாசித்தேன். அவரது ‘கல்குதிரை’ ஒரு அசாதரணமான முக்கிய பணி என்றும், அது எதிர்காலத் தமிழ் இலக்கியத்தை வெகுவாக மாற்றும் என்றும் நம்புகிறேன். அவர் ஏற்கனவே ஏராளமான அற்புதச் சிறுகதைகளை எழுதிவிட்டார். ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ என்னும் அவரது மொத்த சிறுகதைகளின் தொகுப்பு, தமிழின் சிகரம் தொட்ட தொகுப்பு. பா.வெங்கடேசனையும் ‘ராஜா மகள்’ வெங்கடேசனாக மட்டுமே பார்க்கிறேன். அவரது இரு மெகா நாவல்களிலும் சில பகுதிகள் மட்டுமே எனக்குப் பிடித்திருந்தன. ‘தாண்டவராயன் கதை’ நாவலில் முதல் பகுதிகள் கவித்துவமாக வந்துள்ளது. ஆனால் வரலாற்றுக்குள் நாவல் புகுந்ததும் மூடி வைத்துவிட்டேன். எனக்கு தனிப்பட்ட முறையில் வரலாற்று நாவல்கள் என்னும் வகைமையின் மீதே ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. நேரடியாக வரலாற்றை வாசித்து விடுகிறேன். தொன்மங்களும் இதிகாசங்களும் அதே போல புராண இதிகாசங்களை நாவல்களாக எழுதுவதிலும் எனக்கு உவப்பில்லை. ஜேம்ஸ் ஜாய்சின் “யுலிசஸ்" போன்ற இதிகாச ரேகைகளைக் கொண்ட சமகால நாவல்களையே நான் பெரிதும் விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட விருப்பம். இதன் மீதான விவாதங்களில் எனக்கு விருப்பமில்லை. கேள்வி 9 ரஷ்ய இலக்கியம், வங்கமொழி இலக்கியம், லத்தீன்அமெரிக்க இலக்கியம் என்றுஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தேசத்தின் எழுத்துக்கள் நம்தமிழகத்தைகவர்ந்துள்ளது. அதன் பாதிப்பில் எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சிலர்அதன் தொடர்ச்சியாக எழுதியும் இருக்கிறார்கள். நீங்கள் சமீபத்தில்நைஜீரியாவை சேர்ந்த சீமண்டாஅடிச்சியின் எழுத்து குறித்து கட்டுரைஎழுதியிருந்தீர்கள். பிறகு ஐப்பானிய நாட்டு எழுத்தாளர் முராகாமியின் எழுத்தைகுறிப்பிட்டீர்கள். இவர்களது எழுத்துலகத்தை ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறிர்கள்.உங்களது அனுபவத்தை சொல்லுங்கள். பதில்: வாசிப்பது என்பதே வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டதால் நிறைய வாசிக்கிறேன். சிமமந்தா அடிச்சி இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கும் தொடக்க நிலை எழுத்தாளர். அவரது ‘ஊதா நிற செம்பருத்தி’ நாவல் அதன் இறுதிப்பகுதியில் விபத்துக்குள்ளானது போல் மோதி நொறுங்கிவிடுகிறது. அதைவிட பன்மடங்கு சிறந்த நாவல்கள் தமிழில் இருக்கின்றன. பூமணியின் வெக்கை, பிறகு, பா.சிவகாமியின் ஆனந்தாயி, இமயத்தின் கோவேறு கழுதைகள் என நம்மிடம் பல சிறந்த நாவல்கள் இருக்கின்றன. ஆனால் பின்காலனியம் பற்றிய சரியான அரசியல் பார்வை கொண்ட நாவல்கள் நம்மிடம் இல்லை. எனவே தான் சிமமந்தா அடிச்சியை நாம் வாசிக்க வேண்டியதாக இருக்கிறது. அண்மையில் பிரேம் இந்த நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். நைஜீரியா உட்பட்ட ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் பலரும் காலனிய, பின்காலனிய வாழ்க்கை பற்றி நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்கள். முக்கியமாக பூர்வீக கலாச்சார அழித்தொழிப்பு பற்றிய அக்கறை இவர்களது பொதுப்பண்பாக இருக்கிறது. மொசாம்பிக் எழுத்தாளர் மியா கூட்டோ (Mia Couto) என்பவரது ‘தூக்கத்தில் நடக்கும் நாடு’ ‘பெண் சிங்கத்தின் ஒப்புதல் வாக்குமூலம்’ ‘அரளிமரத்தடியில்’ ஆகிய நாவல்களை சென்ற ஆண்டு நான் விரும்பி வாசித்தேன். சரமாஹோ, மிலன் குந்த்ரே, பாமுக், முரகாமி வகை நாவல்கள் நம்மிடம் இல்லை. எஸ்.வி.ராஜதுரை ஜோஸ் சரமாஹோவின் நாவல்கள் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். முரகாமி, பாமுக் ஆகியோரது நாவல்கள் தமிழில் வந்துவிட்டன. எனவே ஒரு புதுவகையான நாவல் எழுத்துக்கு தமிழ் நிலம் தயாராகி வருகிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கேள்வி 10 நாவல் எழுதிக் கொண்டிருந்தீர்கள் என்ன ஆனது? பதில்: நிறைய எழுதிக் கொண்டே இருக்கிறேன். இன்னும் நாவலின் வடிவம் புலப்படவில்லை. அண்மையில் எனக்கு மூளையில் கொஞ்சம் செல்கள் அழிந்துவிட்டன. ஞாபகத்திலிருந்து எழுதுவதைவிட மறதியிலிருந்து எழுதுவது எளிதாக இருக்கிறது. நாவல் கட்டுப்பாடில்லாமல் போகிறது. என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஆட்டோ ரைட்டிங் போன்ற உத்திகளைப் பயன்படுத்திப் பார்க்கிறேன். மெட்டா வகை நாவலாக இருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியும் வரும் மதுரை புத்தகக் காட்சிக்குள் நாவலைக் கொண்டு வந்துவிடுவேன். ஒரு சிறுவர் நாவலையும் ஓரத்தில் எழுதுவதால் ஒரு சமநிலை கிடைக்கிறது. ooo இந்த நேர்காணல், "பேசும் புதிய சக்தி" ஏப்ரல் 2017 இதழில் வெளியாகியுள்ளது. நண்பர் எஸ்.செந்தில்குமாருக்கும், பேசும் புதிய சக்தி இதழுக்கும் எனது நன்றிகள். சமயவேல் கவிதைகள் இப்பொழுதெல்லாம் அலுவலகத்தை விட மருத்துவ்மனை பிடித்திருக்கிறது வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன். இசை அரங்குகளை விட சப்தங்கள் உயிர்ப்புடன் எழும் பேருந்து நிலையங்களில் வெகு நேரம் பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன் சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும் குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன் கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன் பூங்காக்களை விட பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள் அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன் வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட மாய விண்வெளியே நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம். விடுமுறை வேண்டும் உடல் எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு தன்னைப் பற்றியே பெரும் கவலை கொள்கிற உடல் முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு நச்சரிக்கிறது பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும் முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை என எப்படியும் இருப்பேன் என்கிறது விடுமுறை விடுமுறை எனும் யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது எதுவும் செய்யாமல் அக்கடா என்று சும்மா கிடக்கும் ஆனந்தம் பற்றிய அனேக நிறமிகளை மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது மிகுதியும் கனவு காணும் விருப்ப்த்துடன் வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம் கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன். அழகென்னும் அபாயம் ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில் ஊர்தி எந்திரம் நிறுத்தி சாலையோரம் கொஞ்சம் நடந்து ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன் நுணா மரப் புதரொன்றில் ஒரு சிறு பறவை இறகுகள் அடர் சிவப்பு கழுத்து மயில் நீலம் உருண்டை வயிறு சாம்பல் நிறம் கொண்டை மஞ்சள் நிறம் கண்கள் என்ன நிறம்? கால்கள் பசுமஞ்சள் நிறம் விரல்கள் அரக்கு நிறம் நிற்கிற மரமோ மர நிறம் அந்த இத்தினியூண்டு பறவை கொண்டையை ஆட்டி ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது என் பெரு நகர ஆத்மாவின் தலை வெட்டுண்டு உருண்டது மரணத்தின் விளிம்பை ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல் கூவல் முடித்து பறவை விருட்டென்று பறந்தோடியதும் உயிர் மீட்டு ஓர் குழந்தையாக நின்றேன். எண்பதுகளில் எழுதத் தொடங்கிய சமயவேல் தனது முதல் கவிதைத் தொகுப்பான "காற்றின் பாடல்" மூலம் முக்கியமான தமிழ் கவிஞராக அறியப்பட்டார்.இவரது இரண்டாவது தொகுப்பான "அகாலம்" பலரது கவனத்தையும் பெற்று தமிழின் முக்கிய கவிதைத் தொகுப்பாக அமைந்தது. உயிர்ம்மை பதிப்பகம் இவரது "அரைக் கணத்தின் புத்தகம்" தொகுப்பை வெளியிட்டது.அண்மையில் இவரது புதிய தொகுப்பான "மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்" ஆழி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. மலைகள் பதிப்பகம் 2014ல் 'பறவைகள் நிரம்பிய முன்னிரவு' தொகுப்பை வெளியிட்டது. 'நான் டைகர் இல்லை' என்னும் சிறுகதைத் தொகுப்பை உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்டது.'தெற்கிலிருந்து சில கவிதைகள்' என்னும் தொகைநூலின் ஆசிரியரும் இவரே. உலகின் இமை நடு நெற்றியை மறைத்து விரிந்த கரும் பரப்பில் ஒரு சிறிய மஞ்சள் புள்ளி அருகில் ஒரு நீலத்திட்டு இமைகள் மேலும் இறுக நீலத்திட்டு ஒரு வளையமாகி மஞ்சள் புள்ளியை வளைக்கிறது மஞ்சள் புள்ளி சுழல்கிறது நீல வளையம் எதிர்த் திசையில் சுழல்கிறது. இமைகள் மேலும் இறுக மஞ்சள் புள்ளி பிய்த்துக்கொண்டு பேராழத்துள் ஓடுகிறது நீலவளையம் விரிந்து விரிந்து அடர் கருப்பு இருளாய்ப் போகிறது இமை மேலும் மேலும் இறுகுகிறது தெருவோர சோடியம் கனியில் இருள் பூக்கத் தொடங்குகிறது எனது இமை கொஞ்சம் கொஞ்சமாக உலகின் இமையாக மாறுகிறது எனினும் அது மூடியே இருக்கிறது பார்த்தலின் பரவசத்தை ஒத்தி வைத்தபடி அது மூடியே இருக்கிறது. 2. இரவு மழை இந்த இசை வானத்திலிருந்து அல்லது பெருவெளியிலிருந்து இந்தத் துளி, துளிகள், சிறுதுளிகள், கோர்க்கப்பட்ட துளிகள் கனத்த துளிகள் உக்கிரத் துளிகள் துளிகளின் மழை இரவு மழை முழு இரவும் மழை முழு இரவும் குளிர் முழு இரவும் மின்னல் முழு இரவும் குமுறும் இடிகள் முழு இரவும் கறுப்பிருட்டு முழு இரவும் கோர்க்கப்படாத இசை முழு இரவும் வெதுவெதுப்பு முழு இரவும் கோதுமை நிறக் காதல் 3. பயணம் உட்கார்ந்த நிலையில் பயணிக்கும் உடலில் குமிழியிடும் சித்தம் ஜன்னலோரம் ஓடும் காட்சிகளில் கைப்பு கூடியிருக்கிறது விழுங்க விழுங்கத் தீராத சாலைக் கருப்பு மயில்களும் தட்டுப்படாமல் இல்லை காணாக் காட்சிகளின் வெற்றில் வழுக்கி விழும் சித்தம் ஆழ்கிணற்றில் ஓயா நீச்சல் நீரில்லாக் கண்மாயின் கலுங்கல் கற்கள் எதையோ பேசத் துடிக்கின்றன பெரிய கண்மாய் கிழக்கு ஓடையில் நானும் அப்புச்சியும் தூரி போட்டிருக்கிறோம் ஒரு விசில் சப்தத்தோடு புழுதியெழுப்பி நிற்கிறது பேருந்து ஓலைக் கொட்டானில் வெள்ளைக் கெண்டைகளின் மரண சுவாசம் அப்புச்சியின் முகத்தில் நிலைகொள்ளாமல் உருளும் எப்பாவமும் அற்ற உயிர்விழிகள் ஒரு இலுப்பை மரம் எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு பச்சை அழகாய் அம்மணமாய் நிற்கிறது உயர வளர்ந்த ரயில் கள்ளியின் உயர்ந்த சிறகுகளில் சிவப்பு மலர்கள் இறங்கியாச்சா இல்லையா ரைட் ரைட் துலாபார பூஞ்சிட்டுக் கன்னங்களின் சிவப்பு உன்னதம் என்னவெல்லாமோ ஆகிப்போனது மூத்த ஆசானின் உடல் முரண்களின் அலைகளில் மிதக்கிறது எழுதி வைத்த கடிதம் அவர் முற்றிலும் வெறுத்த ஊடகத் திரைகளில் படபடக்கிறது மயில்களும் தட்டுப்படாமல் இல்லை நாற்கரச் சாலையில் ஏறிப் பறக்கத் தொடங்கும் பேருந்து ஒரு திசையிலும் நான் ஒரு திசையிலும். 4. எதற்கும் எதற்கும் கட்டண வசூலிப்பகம் தாண்டி ஒரு ஓரமாய் வெள்ளை ஆமையாய் நிற்கிறது ஒரு அம்பாஸிடர் கொஞ்சம் தள்ளி பெரும் பாரங்களோடு வரிசையாய் 4 டிரக்குகள்; வாகை மரங்களைத் தாண்டி வாறுகாலில் ஒரு சுமோ தலைகுப்புற நொறுங்கிக் கிடக்கிறது கிழக்கே ஒரு சிற்பமாய் அரிவாளோடு நிற்கிறான் வலையங்குளம் கருப்பசாமி திரும்பி செம்மண் கரை ஏறியதும் தலைக்கு மேலே ஒரு வெள்ளை விமானம் தாழப் பறந்து மேலேறுகிறது எதற்கும் எதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை போய்க்கொண்டே இருக்கிறது என் மகிழ் வுந்து. ••• வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு மனநிலைகளில் எழுதப்பட்ட இந்தத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளையும் இன்று ஒரு சேர வாசித்தபின் அடர்ந்த வனாந்திரத்தில் பெருமரம் ஒன்றின் கீழ் நிற்பது போல உணர்ந்தேன். இந்த வாக்கியத்தைப் வாசித்த கணத்தில் இதை எழுதிய கவிஞர் சமயவேல் ஒரு பெருமரமாகவும் நான் அதன் உச்சியடைய முயலும் ஒரு சிற்றெறும்பாகவும் உணர்ந்தேன். ‘அரைகணத்தின் புத்தகம்’ சமயவேல் கவிதைகளின் முழுத்தொகுப்பு. காற்றின் பாடல், அகாலம் உள்ளிட்ட இரண்டே தொகுப்புகளைச் சேர்த்து 2007ல் வெளியான நூல். மனுஷன் 1989ல் இருந்தே எழுதுகிறார். முழுதொகுப்பில் மொத்தமே 81 கவிதைகள் தான் இருக்கு. தேடலின் சிறகுகள் கழன்று மலைகளுக்கப்பால் விழுந்தன .. முடிவற்ற அன்பில் உடம்பு வீங்கிய உருண்டை நிலா .. பூமியின் கோடிக் கணக்கான ஜீவன்களில் நானும் ஒன்று என் துக்கம் தாகம் சந்தோஷமென நானொரு பெரும் சமுத்திரம் .. ஆ, காற்றில் களிநடம் புரிகிற புற்களில் ஒன்றானேன் நான் .. பார்வையை மடக்கி உண்ணும் பிரம்மாண்ட நீலம் ஓயாத அலைச் சப்தம் நான் கடல் முன் நிற்கினேன் .. இப்படி அருமையான பல வரிகள். … சமயவேலின் இரண்டு கவிதைகள்: 1. சொந்த ஆத்திசூடி அரசியல் விலக்கு தத்துவம் தவிர் கனவு காண் காதலித்துக் கொண்டே இரு பிரயாணம் செய் கட்டுரை படிக்காதே புரிந்து கொள் இசையை உண் கட்சிகளைக் கண்டு ஓடு ஓடு வரலாற்றை ஒழி குழந்தைகள் பெறு கடிகாரத்தை தூக்கி எறி பறவைகள் பார் செய்தித்தாள்களில் காமிக்ஸ் மட்டும் படி தாமதித்துப் போ ஒரு நாளாவது நடனம் ஆடிப்பார் நடந்து செல் நகரங்கள் வெறு சிறு பெண்களிடம் அரட்டை அடி வாக்குறுதிகளை மீறு உத்யோகம் தவிர் நீச்சல் படி கூட்டங்களுக்குப் போகாதே விவசாயம் செய் பட்டினிகிட கடிதங்களுக்குப் பதில்எழுதாதே அடிக்கடி அண்ணாந்து ஆகாயம் பார் வியாபாரம் வெறு ஒரு செடி முளைத்து வளர்வதை உற்றுக் கவனி கடைவீதிகளில் அலைய வேண்டாம் சும்மா படுத்துக்கிட தேசிய அசிங்கம் (டிவி) நடுவீட்டில் எதற்கு? நுங்கு தின் சிற்பங்களை ரசி அடிவானத்தோடு உரையாடு எதையும் கும்பிடாதே முதுமையைக் கொண்டாடு டீயும் சிகரெட்டும் துணை விஞ்ஞானம் விலக்கு பெண்களோடு இரு ஆயிலும் அரசியலும் மனிதகுல எதிரிகள். 2. என்றும் கூரை முகட்டுப் பட்சிகளின் கரைதல்களுடன் இமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும் இளங்காலை ஒரு உடம்பு முறுக்கலில் மெல்லவே பிரியும் நேற்றின் அயர்வுகள் வாசலைத் தாண்டி உப்புக்காரனின் குரலோடு ஒரு மாபெரும் இயக்கம் தொடங்கி விட்டது குளிக்க சாப்பிட வேலைக்கென கலகத்துக்கு அழைக்கும் வாழ்க்கையை இன்றும் ரசிப்பேன். … நீங்க படிச்சே ஆவணும். சமயவேல் கவிதைகள் இப்பொழுதெல்லாம் அலுவலகத்தை விட மருத்துவ்மனை பிடித்திருக்கிறது வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன். இசை அரங்குகளை விட சப்தங்கள் உயிர்ப்புடன் எழும் பேருந்து நிலையங்களில் வெகு நேரம் பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன் சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும் குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன் கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன் பூங்காக்களை விட பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள் அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன் வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட மாய விண்வெளியே நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம். விடுமுறை வேண்டும் உடல் எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு தன்னைப் பற்றியே பெரும் கவலை கொள்கிற உடல் முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு நச்சரிக்கிறது பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும் முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை என எப்படியும் இருப்பேன் என்கிறது விடுமுறை விடுமுறை எனும் யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது எதுவும் செய்யாமல் அக்கடா என்று சும்மா கிடக்கும் ஆனந்தம் பற்றிய அனேக நிறமிகளை மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது மிகுதியும் கனவு காணும் விருப்ப்த்துடன் வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம் கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன். அழகென்னும் அபாயம் ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில் ஊர்தி எந்திரம் நிறுத்தி சாலையோரம் கொஞ்சம் நடந்து ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன் நுணா மரப் புதரொன்றில் ஒரு சிறு பறவை இறகுகள் அடர் சிவப்பு கழுத்து மயில் நீலம் உருண்டை வயிறு சாம்பல் நிறம் கொண்டை மஞ்சள் நிறம் கண்கள் என்ன நிறம்? கால்கள் பசுமஞ்சள் நிறம் விரல்கள் அரக்கு நிறம் நிற்கிற மரமோ மர நிறம் அந்த இத்தினியூண்டு பறவை கொண்டையை ஆட்டி ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது என் பெரு நகர ஆத்மாவின் தலை வெட்டுண்டு உருண்டது மரணத்தின் விளிம்பை ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல் கூவல் முடித்து பறவை விருட்டென்று பறந்தோடியதும் உயிர் மீட்டு ஓர் குழந்தையாக நின்றேன். இடுகையிட்டது சமயவேல் நேரம் 19:20 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest லேபிள்கள்: கவிதைகள் Thursday, July 30, 2009 என்னைப் பற்றி சமயவேல் எட்டையபுரம் அருகில் உள்ள வெம்பூர் என்ற கிராமத்துக்காரன் . முதல் கவிதைத் தொகுப்பு : காற்றின் பாடல் அடுத்து கொஞ்சம் இடைவெளிக்குப்பிறகு : அகாலம் பிறகு நண்பர் எஸ். இராமகிருஷ்ணனின் அட்சரம் இதழில் வந்த கவிதைகள் என மொத்த கவிதைகளும் அரைக்கணத்தின் புத்தகம் உயிர்மை பதிப்பகம் கொண்டு வந்தது. தெற்கிலிருந்து சில கவிதைகள் என்ற தொகை நூலும் வந்திருக்கிறது. இடுகையிட்டது சமயவேல் நேரம் 18:54 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest சமயவேல் கவிதைகள் இந்த இரவு நான் அருந்திக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்த ரம் இல்லை வெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது நாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள் நம்மைக் கடந்தன எவ்வளவோ நாம் பார்த்துவிட்டோம் நாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை நடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்த நம் மெளனங்களின் இடைவெளிகளில் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது பக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில் பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறோம் ஆப்பிள் ரஸத்தின் இரத்தம் போன்றதோர் நிறம் கோமியம் போன்றதோர் அதன் வாசம் எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில் எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம் நமது சிகரட்கள் நம்மை சுவாசிக்கும் நறுமணத்தில் இந்த இரவு நிறைந்து தளும்பிக் கொண்டே இருக்கிறது. (நண்பர் இராஜமார்த்தாண்டனுக்கு) ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம் ஓங்கிய அரிவாளின் கீழே தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட மரணம் பற்றிய பிரக்ஞையற்று குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை; உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள் பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள் எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள் விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள் என்று வதைபடும் மனிதர்களை விட எத்தகு மேன்மையான வாழ்வுடன் நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள் எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள் கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று ஒருவரை யொருவர் கொல்வது பற்றி உங்களால் மே என்று கூட கத்த முடியாது எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட உங்களால் வரைய முடியாது. 2 இருமைகள் என்பது எதார்த்தம் எனில் அதில் ஒரு கை அள்ளி என் கண்களைக் கழுவுவேன் இரவு பகலோ, இறப்போ பிறப்போ இருமைகள் றெக்கைகளாக ஒரு பறவைக் கூட்டமாய் பழுப்பு வானில் பறந்து திரிவேன் மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன் இதுவும் அதுவும் கவ்வி முயங்கும் இடமோ பொழுதோ வெளியோ சிந்தும் இன்மையின் இனிமையை பருகி மகிழ்வேன் ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான் எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது அதன் வெண்மணற் பரப்பில் கோபுரங்களும் மலைகளும் கடல்களும் நகரங்களும் ஆகாயமும் கூட சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும் புதைந்து கிடக்கின்றன என் புல் வெளியில் மரணம் ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில் நான் ஒரு நாகலிங்க மரமாவேன் என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள் பூக்களாய் தொங்கும் எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான். OOOOOOOO புராதனத் தோழிக்கு ஓவியப் பெண்ணின் இமைகளின் அடியில் பழந் தூரிகையின் மந்திர வரைவில் சிக்குண்டு தள்ளாடும் நாரையின் கால்களில் தொங்குகிறது என் சிற்றிதயம் இரகசியமாக அடிக்கடி திறந்து திறந்து மூடுகிறது ஓவியம் பிறிதொரு நாள் திடீரெனக் கண்டுபிடிக்கிறேன் புதைந்திருப்பது தோழியே உனது கண்களென புராதனத்திலும் நீ யென் தோழியா தெரியாது என மூடுகிறது ஓவியம் கொடிய தூக்க மாத்திரைகளும் அழிக்க முடியாத ஒரு கனவில் நாம் புணர்ந்து கிடந்ததை ஒப்புக் கொள்ள முடியாமல் அறைக்குள் இரவு கருகத் தொடங்கியது உன் உடல்மொழிகளின் மேல் ஒருபோதும் மோகம் கொள்ளாத என் பண்பாடு அக ஆழங்களில் நீந்தும் ஊதா மீன்களைக் கொல்ல முடியாமல் புராதன ஓவியனின் தூரிகையில் உன் அடர்ந்த இமைகளுக்கடியில் பழுப்பு வர்ணமாய் வழிகிறது.