Thursday, August 9, 2018

விக்ரமாதித்யன்


விக்ரமாதித்யன்












விக்ரமாதித்யன்

(பிறப்பு: செப்டம்பர் 251947) ஒரு தமிழ்நாட்டுக் கவிஞர். இவரது இயற்பெயர் நம்பிராஜன். திருநெல்வேலி நகரப் பகுதியில் கல்லத்தி முடுக்கு தெருவில் வளர்ந்தவர். பின்னர் குற்றாலம்தென்காசிசென்னை மேற்கு மாம்பலம்கலைஞர் கருணாநிதி நகர்அசோக் நகர் ஆகிய இடங்களிலும் வாழ்ந்துள்ளார். தன் வாழ்நாளில் பல்வேறு தொழில்களைப் பார்த்துள்ள இவர், சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன்இதயம் பேசுகிறது, தாய்தராசுநக்கீரன் ஆகிய பத்திரிகைகளிலும் பணிபுரிந்துள்ளார்.ஆகாசம் நீல நிறம்”, “ஊரும் காலம்”, “உள்வாங்கும் உலகம்` உடபட 16 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் 7 கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைகாரர் வேடத்தில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டின் விளக்கு இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர்.
இவரது மூன்று படைப்புக்களை (எனக்கும் என் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு, அவன் அவள், தன்மை முன்னிலை படர்க்கை) சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது

இவர் எழுதிய புகழ் பெற்ற வரிகள்,
விரும்பியது நதிக்கரை நாகரீகம்
விதிச்சது நகர நாகரீகம்
சத்தியத்தையே
எழுதுகிறேன்
அலுத்துப் 
போய்விட்டது எல்லாமும்
சலிப்படையச்
செய்கிறார்கள் எல்லோரும்
எனினும்
வாழ்ந்து கொண்டும்
எழுதிக் கொண்டும்தான்
இருக்கிறேன் இன்னமும்.




நம்பமுடியாத அளவுக்கு வாழ்க்கை
நம்ப முடியாத அளவுக்கு
சலிப்பூட்டுகிறது
சொல்ல முடியாத படிக்கு
சாரமற்றிருக்கிறது
விழுங்கிவிட முடியாத அளவுக்கு
கசப்படிக்கிறது
துப்பிவிட முடியாத படிக்கு
சிக்கிக் கொண்டு விட்டிருக்கிறது
கனவுகாண முடியாத அளவுக்கு
வறண்டு போயிருக்கிறது
கற்பனை செய்ய முடியாதபடிக்கு
எரிச்சல் படுத்துகிறது
தீர்த்து வைக்க முடியாத அளவுக்கு
பிரச்சனை கொண்டிருக்கிறது
அணைக்கவே முடியாதபடிக்கு
கனன்று பற்றி எறிந்து கொண்டிருக்கிறது
காற்று போல நீர்போல இல்லாத
இந்த மிருகத்தை என்னதான் செய்வது




கூண்டுப் புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக்கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்து இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்குத் தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச்சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவிக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்

இந்தக் கூண்டுப்புலிகள்.



கைபட
தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்
*
எஜமானனைவிட
ஊழியனுக்கு நல்லது
எஜமான விசுவாசம்
*
அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை
*
சாக்லெட்டே சாக்லெட்டே
குழந்தைகளுக்குப் பிரியமான சாக்லெட்டே
சிகரெட்டே சிகரெட்டே
நேரம்கெட்டநேரத்தில் தீர்ந்து போகும் சிகரெட்டே
*
கண்ணாடிப் பாத்திரங்களைக்
கையாள்கிற கஷ்டம்
*

கவிதை / கவிஞர்கள் பற்றித் திரும்பத் திரும்ப எழுதுகிறார். அதிலிருந்து சில :

கட்டில் செய்யலாம்
கப்பல் செய்யலாம்
கணக்கு செய்யலாம்
கவிதை செய்ய முடியுமா
*
நடுவழியே நல்லது
கலைஞர்கள் துருவசஞ்சாரிகள்
*
கலைஞர்களாவதற்கு
இல்லை குமாஸ்தாக்கள்
*
விலைகூவி விற்கலாம்
இருக்கிறது சரக்கு எல்லோருக்குமாக
ஒருசிறு பிரச்சனை
வியாபாரி அல்ல நான்
வீணாக அழிந்தாலும் கலைஞன் தான்


No comments:

Post a Comment