கு. அழகிரிசாமி
கு.
அழகிரிசாமி (செப்டம்பர் 23, 1923 - சூலை 5, 1970) குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை
புரிந்துள்ளார்.
இவர்
எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இளமைக் கால நண்பர்.[1] தமிழ் நேசன் (மலேசியா), சக்தி, சோவியத் நாடு, பிரசண்ட விகடன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார்.[2][3] இலக்கிய உலகில் இவரது சிறுகதைகள் புகழ்பெற்றவை.[4] 1970 இல், இவரது அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது..[5]
பொருளடக்கம்
• 1வாழ்க்கைச் சுருக்கம்
• 2இதழாசிரியராக
• 3மலேசியாவில் பணி
• 4மீண்டும் தமிழகத்தில்
• 5படைப்புகள்
o 5.1புதினங்கள்
o 5.2சிறுவர் இலக்கியம்
o 5.3மொழிபெயர்ப்புகள்
o 5.4நாடகங்கள்
o 5.5சிறுகதைத் தொகுப்புகள்
o 5.6கட்டுரைத் தொகுப்பு
• 6மேற்கோள்கள்
• 7வெளி இணைப்புகள்
வாழ்க்கைச்
சுருக்கம்[தொகு]
அழகிரிசாமி
திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் இடைசெவல் என்னும் சிற்றூரில், குருசாமி-தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார். பரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்தார். ஆனால், வெளியே பேசும்போது தமிழில்தான் பேசுவார் அழகிரிசாமி.
வசதியின்மை
காரணமாக அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற "பெருமை' அவருக்கு உண்டு. பள்ளிப் படிப்பைவிட அவர் அனுபவத்தில் பெற்ற அறிவே அதிகம்.
’உறக்கம்
கொள்ளுமா?’ என்ற இவரது முதல் சிறுகதை 1943-ஆம் ஆண்டு "ஆனந்த போதினி' மாத இதழில் பிரசுரமானது.
ரஷ்ய
எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான். தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார்.
இதழாசிரியராக[தொகு]
அரசுப்
பணியில் சேரத் தேர்வு பெற்றதால், சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில் எழுத்தர் உத்தியோகம் கிடைத்தது. ஆனால், நாள்தோறும் பத்திரங்களைப் பதிவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த எழுத்தர் உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படவில்லை. அதனால் சென்னைக்கு வந்து, முதல் கதையை வெளியிட்ட "ஆனந்த போதினி' பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.
"ஆனந்த
போதினி', "பிரசண்ட விகடன்' ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்டு, அவருக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார்.
"பிரசண்ட
விகடனி'ல் வெளிவந்த அவரது
கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும், புதுமைப்பித்தனும், தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள். பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு "தமிழ்மணி' என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்.
"தமிழ்மணி'
வார இதழில் அவர் சில காலம்தான் பணியாற்றினார். அதன் பிறகு வை.கோவிந்தன் வெளியிட்ட
"சக்தி' மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் ஆசிரியராக இருந்தவர் தி. ஜ. ரங்கநாதன். கு.அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு
சக்தி இதழிலும் பதிப்பகத்திலும் இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார்.
அழகிரிசாமியின்
முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய பதிப்புகள் அவருடைய ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தின.
"ராஜா
வந்திருக்கிறார்' என்ற அவரது கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை.
மலேசியாவில்
பணி[தொகு]
"சக்தி'
இதழில் பணியாற்றிய பிறகு ஐந்தாண்டுகள் மலேசியா (1952-1957) சென்றார். அந்தக் காலம் அவர் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனை எனலாம். 1955-ஆம் ஆண்டு கு.அழகிரிசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் மலேசியாவில் திருமணம்
நடைபெற்றது. மலேசிய வானொலியில் முக்கூடல் பள்ளு இசை நாடகத்துக்குப் பாடியவர்களில் ஒருவர் சீதாலட்சுமி.
மலேசியாவில்
இருந்து மீண்டும் தமிழகம் வந்ததற்கு ”மலேசிய நாட்டில் தன்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்கள் இல்லை என்பதாலும், தமிழ் நாட்டு அன்பர்களை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாததாலும் நான் மலேசியா நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினேன்” என்று அழகிரிசாமி காரணம் கூறினார். மேலும், "தமிழ்நேசன்' நாளிதழ் அலுவலகத்திலும் வெளியே அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழையாமையும் அவருக்கு ஆசிரியர் பணியில் சோர்வை ஏற்படுத்தின[6].
மீண்டும்
தமிழகத்தில்[தொகு]
1957-ஆம்
ஆண்டு சென்னை திரும்பிய அவர், 1960-ஆம் ஆண்டு வரை காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பிறகு "நவசக்தி' நாளிதழில் 1965 வரை பணியில் இருந்தார். "நவசக்தி' இதழில் இருந்த காலத்தில்தான் அவர் "கவிச்சக்ரவர்த்தி' என்ற வரலாற்று நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.
"நவசக்தி'
நாளிதழ் பணியிலிருந்து விலகி, ஐந்தாண்டுகள் சுதந்திர எழுத்தாளராக இருந்தார். கடிதம் எழுதுவதை அவர் கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதிய கடிதங்களை கி.ராஜநாராயணன் தொகுத்து,
"கு.அழகிரிசாமி கடிதங்கள்' என்ற நூல் வெளிவந்துள்ளது. கு.அழகிரிசாமியின் சிறுகதைகள்
ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.
இறுதியாக
"சோவியத் நாடு' ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் முழுமையாக அந்தப் பணியில் தொடர முடியவில்லை.
படைப்புகள்[தொகு]
புதினங்கள்[தொகு]
• டாக்டர் அனுராதா
• தீராத விளையாட்டு
• புது வீடு புது உலகம்
• வாழ்க்கைப் பாதை
சிறுவர்
இலக்கியம்[தொகு]
• மூன்று பிள்ளைகள்
• காளிவரம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
• மாக்சிம் கார்க்கியின் நூல்கள்
• லெனினுடன் சில நாட்கள்
• அமெரிக்காவிலே
• யுத்தம் வேண்டும்
• விரோதி
• பணியவிட்டால்
நாடகங்கள்[தொகு]
• வஞ்ச மகள்
• கவிச்சக்கரவர்த்தி
சிறுகதைத்
தொகுப்புகள்[தொகு]
• அன்பளிப்பு
• சிரிக்கவில்லை
• தவப்பயன்
• வரப்பிரசாதம்
• கவியும் காதலும்
• செவிசாய்க்க ஒருவன்
• புதிய ரோஜா
• துறவு
கட்டுரைத்
தொகுப்பு[தொகு]
• இலக்கியத்தேன்
• தமிழ் தந்த கவியின்பம்
• தமிழ் தந்த கவிச்செல்வம்
• நான் கண்ட எழுத்தாளர்கள்
• தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர்
• சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரும் இலக்கியத்தின் அனைத்துக்களங்களிலும் முத்திரை பதித்தவருமான கு.அழகிரிசாமி (Ku.Alagirisami) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
• *தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் பிறந்தார் (1923). கோவில்பட்டியில் ஏ.வி. பள்ளியிலும்
வ.உ.சி. உயர்நிலைப்
பள்ளியிலும் பயின்றார்.
• *சிறுவயதில் இடது கையில் ஏற்பட்ட சிறு ஊனம் காரணமாகக் குடும்பத் தொழிலான நகைத் தொழிலிலோ அல்லது விவசாயத்திலோ இவரால் ஈடுபட முடியவில்லை. கல்வி, ஓவியம், இசை ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டார்.
• *பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகச் சேர்ந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் இளமைக்கால
நண்பர். வல்லிக்கண்ணன், தொ.மு.சி.ரகுநாதன், புதுமைப்பித்தன் ஆகியோர் இவரது சமகால எழுத்தாளர்கள். முதன் முதலாக இவர் எழுதிய ‘உறக்கம் கொள்ளுமா’ என்ற கதை ‘ஆனந்த போதினி’ பத்திரிகையில் வெளிவந்தது. இதற்கிடையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது.
• *எழுத்து மீது கொண்ட ஆர்வத்தால் அரசாங்க வேலையை உதறிவிட்டுச் சென்னைக்கு வந்தார். ‘ஆனந்த போதினி’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். 1944 முதல் 1952 வரை சென்னையில் ‘பிரசண்ட விகடன்’, ‘தமிழ்மணி’, ‘சக்தி’ ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 1952-ல் வெளிவந்தது.
• *உலகப் புகழ்பெற்ற நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். மக்சிம் கார்க்கியின் நூலை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் இவர்தான். ‘ராஜா வந்தார்’ என்ற இவரது கதை பல இந்திய மொழிகளிலும்
ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
1952-ல் ‘தமிழ்நேசன்’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்று மலேசியா சென்றார். அங்கிருந்த ஐந்தாண்டுகளில் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளை அறிமுகப்படுத்தினார்.
• *இவர் எழுதிய ‘கவிச்சக்ரவர்த்தி’, ‘வஞ்ச மகள்’ ஆகிய நாடகங்கள் மலேசியாவில் உயர்நிலைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகத்திலும் பாடப் புத்தகங்களாக இடம்பெற்றுள்ளன. 1957-ல் சென்னை திரும்பிய
இவர், மூன்றாண்டுகள் காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்தார். 1963-ல் ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார்.
• *ராஜா வந்தார், டாக்டர் அனுராதா, தீராத விளையாட்டு, வாழ்க்கைப் பாதை, காளிவரம், மக்சிம் கார்க்கியின் நூல்கள், லெனினுடன் சில நாட்கள், விரோதி, தவப்பயன், வரப்பிரசாதம், துறவு, நான் கண்ட எழுத்தாளர்கள் உள்ளிட்ட படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
• *கடிதங்கள் எழுதுவதை ஒரு கடமையாகவே செய்துவந்தார். இவர் எழுதிய கடிதங்களை ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’
என்ற தலைப்பில் கி.ராஜநாராயணன் ஒரு
நூலாக வெளியிட்டார். 1970-ல் ‘சோவியத் நாடு’ இதழில் பணிபுரிந்தார். சுந்தர ராமசாமிக்கு இவர் எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
• *இவரது மறைவுக்குப் பின் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவரது சிறுகதைகளைத் தொகுத்து சாகித்ய அகாடமி வெளியிட்டது. பழ.அதியமானை பதிப்பாசிரியராகக்
கொண்டு இவரது அனைத்துச் சிறுகதைகளையும் காலச்சுவடு பதிப்பகம் செம்பதிப்பாக 2011-ல் வெளியிட்டது.
• *ஆசிரியர், பத்திரிகையாளர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர், மொழி பெயர்ப்பாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட கு.அழகிரிசாமி 1970-ம் ஆண்டு
தனது 47-வது வயதில் மறைந்தார்.
புனைவு
என்னும் புதிர்: எளிய மொழியிலான கதைகள்
கேளிக்கை
எழுத்தாளரின் இலக்கு எண்ணற்ற வாசகர்களை எட்டுதல். இலக்கிய எழுத்தாளரின் இலட்சியம் எழுத்தாளர்கள் போற்றும் எழுத்தாளராதல்.
இதற்குப்
பொருள் இரு தரப்புக்கும் மாற்றுத் தரப்பின் ஆசை அறவே இல்லை என்பதன்று. யாருக்கு எது முதன்மை என்பதுதான். கேளிக்கையாளருக்குத் தன் ஓரிரு படைப்புகளுக்காகவேனும் தானும் ஓர் இலக்கியவாதியாகப் பார்க்கப்படக் கூடாதா என்கிற ஏக்கமும் இலக்கியவாதிக்கு, வாசகக் கடலில் தன் காலும் கொஞ்சம் நனைந்தால் என்ன என்கிற புலம்பலும் உள்ளுக்குள் கிடந்து அலைக்கழிப்பவை.
சிந்தனையாழம்
என்றால் படிப்பதற்கு இரும்புக் கடலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தி ஜானகிராமன் சொன்னதற்கு
எழுத்துருவம் கொடுத்தால் அது இவராகத்தான் இருக்கும் என்கிற அளவுக்கு ஆரம்ப வாசகருக்குக்கூட எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தாத கதைகளை எழுதியவர் கு. அழகிரிசாமி.
கதைக்
கலை
கதை
என்றால் கதையின் கருவுக்குத்தான் முதலிடம். மற்றபடி சொல்முறை, செய்நேர்த்தி, கச்சிதம் என்றெல்லாம் கவலைப்படாது, மெனக்கெடாது சொல்லவந்த விஷயத்தின் உள்ளார்ந்த வலிமையை மட்டுமே பிரதானமாகக் கொண்டு நிற்கும் கலை இவருடையது.
1944-ல்
எழுதிய ‘முருங்கை மர மோகினி’ என்கிற
தம் கதை பற்றி கு. அழகிரிசாமி காலகண்டி முன்னுரையில் இவ்வாறு சொல்கிறார்: “இதை எழுதிய பிறகுதான் எனக்குச் சிறந்த முறை யில் சிறுகதைகள் எழுத வந்துவிட்டதாக நண்பர்கள் சிலர் சரியாகவோ தவறாகவோ அபிப்ராயப் பட்டார்கள்”
தாஸ்தாவெஸ்கியின்
‘குற்றமும் தண்டணையும்’ கதையின் சிறப்பே குற்றவுணர்வு என்கிற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு 400-450 பக்கங்கள் எழுதியது என்று சொல்வார்கள்.
சிரம
தசையில் சிக்கனமாய் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில், இரண்டணா விலையுள்ள ஆறு முருங்கைக் காய்களுக்கு ஆசைப்பட்டுத் திருடிவிட்டு ஒரு மனிதன் படும் அவஸ்தைதான் கு. அழகிரிசாமியின் இந்தக் கதை. இலக்கியம் என்பதே திக்குத் திசை தெரியாது கடலில் தத்தளிக்கும் கலங்களை, இதோ இருக்கிறது கரை, இங்கே வா என்று அழைக்கும்
விளக்கு அல்லவா?
வெறும்
முருங்கைக்காயைத் திருடும் ஆசை மட்டுமா கதையில் சொல்லப்படுகிறது. உடம்புக்கு முடியாமல் படுத்ததில், சாப்பாட்டுக் கடை நடத்தி, யார் கையையும் எதிர்பார்க்காது நன்றாக வாழ்ந்த அவரது வாழ்க்கையில் கைச்சேமிப்பும் கரைந்து, பொருளாதார ரீதியில் இறங்கு முகத்துக்குச் செல்லத் தொடங்கிவிட்டதை அவர் கடை இட்லி, வடைகளின் அளவில் பிரதிபலிக்க வைக்கிறார் அழகிரிசாமி. இந்தக் காலத்தில் இரண்டணாவை யார் கொடுக்கிறார்கள் என்று முருங்கைக்காய்களைத் திருடச் சொல்லி மோகினியாக அவரைப் பிடித்து ஆட்டுகிறது வாழ்க்கைச் சூழல். தம் மீது தாம் கொண்டிருக்கும் மதிப்பு காரணமாகத் தயங்குகிறார். போதாக்குறைக்கு மரத்தில் கட்டப்பட்டிருக்கும் செருப்பு வேறு பயமுறுத்துகிறது. கூடவே, சில முருங்கைக்காய்களைப் பறித்துக்கொள்வது அப்படி என்ன பெரிய குற்றமா, இதனால் என்ன தோட்டக்காரரின் சொத்தா பறிபோய்விடப் போகிறது எனத் தாம் செய்யத் துணியும் காரியத்துக்கு, தம்மைத் தாமே சமாதானப்படுத்திக்கொள்ளும் மனம் ஒரு புறம் என்று முன்னும் பின்னுமான அலைக்கழிப்பு. ஆனாலும் அவர் சாதாரண மனிதர் என்பதால் இறுதியில் அந்தத் திருட்டுப் பொருளை அனுபவிக்க அவருக்கு மனம் வராமல் போகிறது.
நேரடி
மொழி
வறுமையில்
வாடும் கரிசல் பிரதேச மனங்களின் உணர்ச்சிகளை அப்பட்டமாகச் சொன்னாலும் அவற்றை அதீதமாக, நாடகீயமாக்காமல் சொல்வதன் காரணமாகவே இவை இலக்கியமாகின்றன. எல்லா வித மனிதர்களும் தத்தமது நிறை குறைகளுடன் வருகிறார்கள். ஒரு பாத்திரத்தை அனுதாபத்துடன் அணுகுவதால் பிறிதொன்றின் மீது வெறுப்பை உமிழாது மிதமாகக் கதை சொல்லிப்போவதும் பாதகம் செய்கிற பாத்திரத்தைக்கூட அதற்கான நியாயங் களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கருணையுடன் நடத்து வதும் கனிந்த மனத்துக்கே சாத்தியம். இது மனித வாழ்வை தீர்க்கமாய்ப் புரிந்துகொண்டமையால் விளைந்த கனிவு.
அலங்காரங்களற்ற
நேரடி மொழியில், சுவாரசியமான திருப்பங்கள் ஏதுமற்ற அன்றாடம் காணக்கூடிய சம்பவங்களில் வாசகரைக் கட்டிப்போட்டு, பத்துப் பக்கங்கள் படிக்கவைப்பது எழுத்தாளர்களுக்கு ஆகப் பெரிய சவால். ஆனால் அழகிரிசாமி எந்தச் சிரமும் இல்லாமல் ரஷ்ய எழுத்தாளர்களைப் போல் தம் பாட்டுக்குக் கதை சொல்லிச் செல்கிறார்.
கம்மலை
வைத்துக்கொண்டு ஒரு பெண்ணின் வாழ்வையே பாலம்மாள் (1951) கதையில் சொல்லிவிடுகிறார்.
குழந்தைகளை
வைத்துக்கொண்டு பிரமிக்கவைக்கும்படி எழுதிச் சென்ற கதை அன்பளிப்பு (1951). இதைப் பற்றி, “மிக அற்புதமான சிறுகதை தந்த எழுத்தாளர். அப்படி ஒரு எழுத்தாளர் மொழிக்குக் கிடைப்பது பெரிய அதிர்ஷ்டம் என்று இந்துவில் மதிப்புரை எழுதியிருந்தார் க.நா.சு.”
என்கிறார் சுந்தர ராமசாமி கு. அழகிரிசாமி பற்றிய நினைவோடையில்.
இதற்கு
கு.அழகிரிசாமியின் எதிர்வினை என்ன தெரியுமா? “அந்த மதிப்புரையைப் படித்தவுடன்தான் நான் ஒரு எழுத்தாளனானேன். நான் எழுதின சமயத்திலெல்லாம் ஒரு எழுத்தாளன் என்ற எண்ணமே எனக்கில்லை. என் மனசுக்குள்ளே வெட்கம் போய் ஒரு நிமிர்வு ஏற்பட்டதென்றால் அது இதுதான்.”
தம்
கதைகளைப் போலவே கு. அழகிரிசாமி எளிமையான, வெளிப்படையான மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் போலும்.
No comments:
Post a Comment