Thursday, August 16, 2018

புதுமைப்பித்தன்









புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.[2]கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.
புதுமைப்பித்தன்
பிறப்பு             சொ. விருத்தாசலம்
ஏப்ரல் 25, 1906
திருப்பாதிரிப்புலியூர்
இறப்பு             சூன் 30, 1948 (அகவை 42)[1]
திருவனந்தபுரம்
நாட்டுரிமை               இந்தியா
கல்வி                கலைத்துறை இளமாணிப் பட்டம்
கல்வி நிலையம்     நெல்லை இந்துக் கல்லூரி
எழுதிய காலம்         1933-1948
இலக்கிய வகை      சிறுகதை
இயக்கம்        மணிக்கொடி இயக்கம், நவீன தமிழ் இலக்கியம்
துணைவர்(கள்)       கமலா
பிள்ளைகள் தினகரி

பொருளடக்கம்
 
             1வாழ்க்கைக் குறிப்பு
             2படைப்புகளும் சிந்தனைகளும்
o             2.1சிறுகதைகள்
o             2.2மொழிபெயர்ப்புகள்
o             2.3கவிதைகள்
o             2.4அரசியல் புத்தகங்கள்
             3எழுத்துநடை
o             3.1பிரபலமான எடுத்துக்காட்டுகள்
             4புனைப்பெயர்கள்
             5சர்ச்சைகள்
o             5.1தழுவல் கதைகள்
o             5.2பிற விமர்சனங்கள்
             6படைப்புகளின் பட்டியல்
o             6.1கவிதைகள்
o             6.2அரசியல் நூல்கள்
o             6.3சிறுகதைகள்
o             6.4மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
             7மேற்கோள்கள்
வாழ்க்கைக் குறிப்பு[
மணிக்கொடி இதழ்
புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ) பட்டம்பெற்றார். 1932 ஜூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார்.[7][8][9]
இவரது முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். இந்தக் காலகட்டத்தில் அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார்.[8]
இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ஜெமினி நிறுவனத்தின் அவ்வை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார். எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி மே 5, 1948-இல் காலமானார்.[8][10]
படைப்புகளும் சிந்தனைகளும்[தொகு]
புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார்.[9][11]தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்:
           இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா?
மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் - இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை[12]
தனது சமகால எழுத்தாளர்களின் எதிர்விமர்சனங்களைப் புறந்தள்ளி பின்வருமாறு கூறுகிறார்:
           வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.[13]

புதுமைப்பித்தன் கதைகள் பல்வேறு பதிப்புகளில் வெளிவந்துள்ளன
சிறுகதைகள்[தொகு]
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். கு. . ராஜகோபாலன், பி. எஸ்.ராமையா, . ராமசாமி ஆகியோர் மணிக்கொடி இயக்கத்தின் மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர்.[14][15]
மொழிபெயர்ப்புகள்[தொகு]
புதுமைப்பித்தன் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிபெயர்த்த எழுத்தாளர்களில் சிலர்: மொலியர், கே பாயில், மேக்சிம் கார்க்கி, சின்கிளெயயர் லூயிஸ், எர்னஸ்ட் டோலர், வில்லியம் ஷேக்ஸ்பியர், . எம். டேலாஃப்ல்டு, வில்லியம் சரோயன், . வி. லூகாஸ், மோஷே ஸ்மிலான்ஸ்கி, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ஸன், பிரட் கார்ட், ஜான் கால்ஸ்வொர்த்தி, அலெக்ஸாண்டர் குப்ரின், ஆன்டன் செக்கோவ், பிராண்ஸ் காஃப்கா, இல்யா எக்ரன்பர்க், கை டி மாப்பாசான், வலெரி பிர்யுசொவ், அனாடோல் பிரான்ஸ், லியோனிட் ஆண்டிரியேவ், ஹென்ரிக் இப்சன், நாத்தேனியல் ஹாத்தோர்ன், எட்கர் ஆலன் போ, ராபர்ட் முரே கில்கிரிஸ்ட், பிரான்ஸிஸ் பெல்லர்பி, லியோனார்ட் ஸ்ட்ராங், ஜேக் லண்டன், பீட்டர் எக்கி, மிக்கெயில் அலெக்ஸாண்ட்ரோவிச் ஷோலோகோவ், தாமஸ் வுல்ஃப் மற்றும் ஜேம்ஸ் ஹேன்லி ஆவர்.[16] அவருக்கு மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் குறித்து தெளிவான கருத்து இருந்தது. தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்றும் பிறமொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர மொழிபெயர்ப்பே சிறந்த வழியெனவும் கருதினார். 1937ல் மொழிபெயர்ப்பா, தழுவலா என்ற பிரச்சனையில் அவருக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே காட்டமான இலக்கியச் சண்டையொன்று நிகழ்ந்தது.[11][17][18]
கவிதைகள்[தொகு]
புதுமைப்பித்தன் 15 கவிதைகள் எழுதியுள்ளார். அவரது முதல் கவிதையான திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம், 1934ல் வெளிவந்தது. அவரது கவிதைகள் பெரும்பாலும் அவரது நண்பர் தொ. மு. சிதம்பர ரகுநாதனுக்கு வெண்பா வடிவில் எழுதப்பட்ட கடிதங்களாக அமைந்திருந்தன. அவரது 15 கவிதைகளும் அவர் இறந்த பின்பு தான் பிரசுரமாயின. அவரது சிறுகதைகளைப்போலவே அவரது கவிதைகளும் நையாண்டியும், நக்கலுமாக இருந்ததன. மூனாவருணாசலமே மூடா, அவரது கவிதைகளுள் புகழ் பெற்றது. அது மணிக்கொடி இயக்கத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்ட ஒரு தமிழ் புத்தகத்தினைச் (மு. அருணாசலத்தின் இன்றைய தமிழ் வசன நடை) சாடும் விமரிசனமாக எழுதப்பட்டிருந்தது.[9]
அரசியல் புத்தகங்கள்[தொகு]
புதுமைப்பித்தன் அடிப்படையில் சோஷியலிச கருத்துகளைக் கொண்டவர். அவரது அரசியல் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை நான்கு. அவை ஃபாசிஸ்ட் ஜடாமுனி, (முசோலினியின் வாழ்க்கை வரலாறு) கப்சிப் தர்பார், (ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு) ஸ்டாலினுக்குத் தெரியும் மற்றும் அதிகாரம் யாருக்கு (இரண்டும் கம்னியூசத்தையும் ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை). நான்கு புத்தகங்களுமே ஃபாசிசத்தை எதிர்த்தும் ஸ்டாலினிய கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எழுதப்பட்டன.[8][9]
எழுத்துநடை[தொகு]
சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். பெரும்பாலும் இவரது கதாபாத்திரங்கள் நெல்லைத் தமிழில் பேசினர். அவரது கதைகள் அவர் வாழ்ந்த இடங்களான சென்னை மற்றும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டிருந்தன. அவரது நடையில் பேச்சுத்தமிழ் மற்றும் செந்தமிழ் இரண்டும் கலந்திருந்தன. சிக்கலான விஷயங்களைக் கையாளும்போது கூட அவரது எழுத்துக்களில் நையாண்டி இழைந்தோடுவது அவரது சிறப்பு. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற இலக்கிய எதிராளிகளுடன் விவாதம் செய்தபோது கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நூல் விமரிசனங்களில் வசைபாடல்களையும் எழுதியுள்ளார்.[7][8][9]
பிரபலமான எடுத்துக்காட்டுகள்[தொகு]
புதுமைப்பித்தனின் தனித்துவ நடைக்கு அவரது கதைகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகள்:
                பொன்னகரம்

பட்டி
0:00
பொன்னகரம் - சிறுகதை
________________________________________
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா?ஊடக உதவியைப் பார்க்கவும்.
சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போக வஸ்து.
நம்பிக்கை
இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்!
பொன்னகரம்
அந்த சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணிநேரம் சரி தானே?
ஒப்பந்தம்
                பால்வண்ணம் பிள்ளை

பட்டி
0:00
பால்வண்ணம் பிள்ளை - சிறுகதை
________________________________________
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா?ஊடக உதவியைப் பார்க்கவும்.
என் புள்ளேகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்
பால்வண்ணம் பிள்ளை
புனைப்பெயர்கள்[தொகு]
புதுமைப்பித்தனின் பிற புனைப்பெயர்கள்: சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு. புதுமைப்பித்தன் என்ற பெயரே அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. அவரது கதைகளின் கவர்ச்சிக்கு அப்பெயர் தான் ஓரளவு காரணம் என்று அவர் கருதினார். தனது கவிதைகளை வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற புனைப்பெயரில் எழுதினார். அவரது படைப்புகளில் தழுவல்கள் உள்ளன என எழுந்த குற்றச்சாட்டால் அவரது புனைப்பெயர்கள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தொ. மு. சிதம்பர ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறான புதுமைப்பித்தன் கதைகள்: சில விமரிசனங்களும் சில விஷமங்களும் என்ற புத்தகத்தில் நந்தன் என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டவை யாவும் தழுவல் படைப்புகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[14][15]
சர்ச்சைகள்[தொகு]
தழுவல் கதைகள்[தொகு]
மாப்பாசான் என்ற பிரெஞ்சு கதாசிரியரின் படைப்புகளின் தழுவல்களாகப் புதுமைப்பித்தனின் சில கதைகள் அமைந்துள்ளன என்று அவரது சம காலத்து எழுத்தாளர்களான பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) மற்றும் சோ. சிவபாதசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கிய ஆய்வாளர் காரை கிருஷ்ணமூர்த்தியும் பின்னர் இதே கருத்தினைக் கூறினார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தொ. மு. சிதம்பர ரகுநாதன் சமாதி, நொண்டி, பயம், கொலைகாரன் கதை, நல்ல வேலைக்காரன், அந்த முட்டாள் வேணு ஆகிய கதைகள் மாப்பாசான் கதைகளின் தழுவல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். பித்துக்குள்ளி என்ற கதை ராபர்ட் பிரௌனிங் கவிதையொன்றின் தழுவல் எனவும் கூறியுள்ளார். டாக்டர் சம்பத், நானே கொன்றேன், யார் குற்றவாளி, தேக்கங்கன்றுகள் போன்ற கதைகளும் தழுவல்களாக இருக்கலாம் எனக் கருத்துகள் உள்ளன. தமிழ் படித்த பொண்டாட்டி என்ற கதையைப் புதுமைப்பித்தன் தானே வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் அது மாப்பாசான் கதையின் தழுவல் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தழுவல்கள் எனக் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிற கதைகள் அவர் இறந்தபின் பிறரால் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆதரவாளர்கள், அவர் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாகத் தழுவல் என்பதைக் குறிப்பிட்டிருப்பார் எனக் கூறுகின்றனர். மேலும் அவர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் மாப்பாசானின் கதைகள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருக்கோ பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே அக்கதைகள் எவ்வாறு தழுவல்களாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். அவரது தழுவல் கதைகள் அனைத்தும் 1937க்கு முன்னதாக எழுதப்பட்டவை. அவ்வாண்டுதான் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் பிறமொழி படைப்புகளிலிருந்து தழுவி எழுதுவது குறித்து கடுமையான இலக்கியச் சண்டை நடத்தினார். தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.[7][8][11][15][17][19][20]
பிற விமர்சனங்கள்[தொகு]
புதுமைப்பித்தன் சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார், ஆனால் அவற்றுக்கான தீர்வைப் பற்றிக் கூற முயற்சிக்கவே இல்லை என விமர்சிக்கப் படுகிறார். அவரது படைப்புகளில் பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன; தீர்வுகளை வாசகர்களின் வசம் விட்டுவிடுகிறார்.[7] சில சமயங்களில் அவர் கதை நடைபெறும் களத்தையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் விவரிக்கும் அளவு மையக்கருத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார். சமீபத்தில் தமிழ் விமர்சகர் . மார்க்ஸ் தலித்துகள், மறவர்கள், கிருத்துவர்கள் மற்றும் புலால் உண்பவர்களை புதுமைப்பித்தன் இழிவு படுத்தியுள்ளார் என விமரிசனம் செய்துள்ளார்.[13][21] 2014ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, பொன்னகரம் ஆகிய இரு சிறுகதைகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக ஆட்சிக்குழு இக்கதைகள் தலித்துகளை இழிவுபடுத்துகின்றன என்று கருதியதால் அவற்றை நீக்கியது.[22][23]
படைப்புகளின் பட்டியல்[தொகு]
                விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:
ஆசிரியர்:புதுமைப்பித்தன்
(முழுமையானதல்ல)
கவிதைகள்[தொகு]
             திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம்
             மூனாவருணாசலமே மூடா
             இணையற்ற இந்தியா
             செல்லும் வழி இருட்டு
அரசியல் நூல்கள்[தொகு]
             ஃபாசிஸ்ட் ஜடாமுனி
             கப்சிப் தர்பார்
             ஸ்டாலினுக்குத் தெரியும்
             அதிகாரம் யாருக்கு
சிறுகதைகள்[தொகு]
1.            அகல்யை


1.            செல்லம்மாள்
2.            கோபாலய்யங்காரின் மனைவி
3.            இது மிஷின் யுகம்
4.            கடவுளின் பிரதிநிதி
5.            கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
6.            படபடப்பு
7.            ஒரு நாள் கழிந்தது
8.            தெரு விளக்கு
9.            காலனும் கிழவியும்
10.          பொன்னகரம்
11.          இரண்டு உலகங்கள்
12.          மனித யந்திரம்
13.          ஆண்மை
14.          ஆற்றங்கரைப் பிள்ளையார்
15.          அபிநவ ஸ்நாப்
16.          அன்று இரவு
17.          அந்த முட்டாள் வேணு
18.          அவதாரம்
19.          பிரம்ம ராக்ஷஸ்
20.          பயம்
21.          டாக்டர் சம்பத்
22.          எப்போதும் முடிவிலே இன்பம்
23.          ஞானக் குகை
24.          கோபாலபுரம்
25.          இலக்கிய மம்ம நாயனார் புராணம்
26.          'இந்தப் பாவி'
27.          காளி கோவில்
28.          கபாடபுரம்
29.          கடிதம்
30.          கலியாணி
31.          கனவுப் பெண்
32.          காஞ்சனை
33.          கண்ணன் குழல்
34.          கருச்சிதைவு
35.          கட்டிலை விட்டிறங்காக் கதை
36.          கட்டில் பேசுகிறது
37.          கவந்தனும் காமனும்
38.          கயிற்றரவு
39.          கேள்விக்குறி
40.          கொடுக்காப்புளி மரம்
41.          கொலைகாரன் கை
42.          கொன்ற சிரிப்பு
43.          குப்பனின் கனவு
44.          குற்றவாளி யார்?
45.          மாயவலை
46.          மகாமசானம்
47.          மனக்குகை ஓவியங்கள்
48.          மன நிழல்
49.          மோட்சம்
50.          'நானே கொன்றேன்!'
51.          நல்ல வேலைக்காரன்
52.          நம்பிக்கை
53.          நன்மை பயக்குமெனின்
54.          நாசகாரக் கும்பல்
55.          நிகும்பலை
56.          நினைவுப் பாதை
57.          நிர்விகற்ப சமாதி
58.          நிசமும் நினைப்பும்
59.          நியாயம்
60.          நியாயந்தான்
61.          நொண்டி
62.          ஒப்பந்தம்
63.          ஒரு கொலை அனுபவம்
64.          பால்வண்ணம் பிள்ளை
65.          பறிமுதல்
66.          பாட்டியின் தீபாவளி
67.          பித்துக்குளி
68.          பொய்க் குதிரை
69.          'பூசனிக்காய்' அம்பி
70.          புரட்சி மனப்பான்மை
71.          புதிய கூண்டு
72.          புதிய கந்த புராணம்
73.          புதிய நந்தன்
74.          புதிய ஒளி
75.          ராமனாதனின் கடிதம்
76.          சாப விமோசனம்
77.          சாளரம்
78.          சாமாவின் தவறு
79.          சாயங்கால மயக்கம்
80.          சமாதி
81.          சாமியாரும் குழந்தையும் சீடையும்
82.          சணப்பன் கோழி
83.          சங்குத் தேவனின் தர்மம்
84.          செல்வம்
85.          செவ்வாய் தோஷம்
86.          சிற்பியின் நரகம்
87.          சித்தம் போக்கு
88.          சித்தி
89.          சிவசிதம்பர சேவுகம்
90.          சொன்ன சொல்
91.          சுப்பையா பிள்ளையின் காதல்கள்
92.          தனி ஒருவனுக்கு
93.          தேக்கங் கன்றுகள்
94.          திறந்த ஜன்னல்
95.          திருக்குறள் குமரேச பிள்ளை
96.          திருக்குறள் செய்த திருக்கூத்து
97.          தியாகமூர்த்தி
98.          துன்பக் கேணி
99.          உணர்ச்சியின் அடிமைகள்
100.        உபதேசம்
101.        வாடாமல்லிகை
102.        வாழ்க்கை
103.        வழி
104.        வெளிப்பூச்சு
105.        வேதாளம் சொன்ன கதை
106.        விபரீத ஆசை
107.        விநாயக சதுர்த்தி
மொழிபெயர்ப்பு சிறுகதைகள்[தொகு]
1.            ஆஷாட பூதி
2.            ஆட்டுக் குட்டிதான்
3.            அம்மா
4.            அந்தப் பையன்
5.            அஷ்டமாசித்தி
6.            ஆசிரியர் ஆராய்ச்சி
7.            அதிகாலை
8.            பலி
9.            சித்திரவதை
10.          டைமன் கண்ட உண்மை
11.          இனி
12.          இந்தப் பல் விவகாரம்
13.          இஷ்ட சித்தி
14.          காதல் கதை
15.          கலப்பு மணம்
16.          கனவு
17.          காரையில் கண்ட முகம்
18.          கிழவி
19.          லதீபா
20.          மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்
21.          மணிமந்திரத் தீவு
22.          மணியோசை
23.          மார்க்ஹீம்
24.          மிளிஸ்
25.          முதலும் முடிவும்
26.          நாடகக்காரி
27.          நட்சத்திர இளவரசி
28.          ஓம் சாந்தி! சாந்தி!
29.          ஒரு கட்டுக்கதை
30.          ஒருவனும் ஒருத்தியும்
31.          பைத்தியக்காரி
32.          பளிங்குச் சிலை
33.          பால்தஸார்
34.          பொய்
35.          பூச்சாண்டியின் மகள்
36.          ராஜ்ய உபாதை
37.          ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு
38.          சாராயப் பீப்பாய்
39.          சகோதரர்கள்
40.          சமத்துவம்
41.          ஷெஹர்ஜாதி - கதை சொல்லி
42.          சிரித்த முகக்காரன்
43.          சூனியக்காரி
44.          சுவரில் வழி
45.          தாயில்லாக் குழந்தைகள்
46.          தையல் மிஷின்
47.          தந்தை மகற்காற்றும் உதவி
48.          தெய்வம் கொடுத்த வரம்
49.          தேசிய கீதம்
50.          துன்பத்திற்கு மாற்று
51.          துறவி
52.          உயிர் ஆசை
53.          வீடு திரும்பல்
54.          படகுக்காரா!
55.          யாத்திரை
56.          எமனை ஏமாற்ற
57.          யுத்த தேவதையின் திருமுக மண்டலம்
58.          நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எனப் போற்றப்படும் புதுமைப்பித்தன் (Pudhumaipithan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
59.          l கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலி யூரில் (1906) பிறந்தார். இயற் பெயர் சொ.விருத்தாசலம். தந்தை தாசில்தார். அவர் ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடும்பம் குடியேறியது.
60.          l தொடக்கக் கல்வியை செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டிவனத்தில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பி.. பட்டம் பெற்றார். உலக இலக்கியங்களை தேடித் தேடி வாசித்தார். இவரது முதல் படைப்பானகுலாப்ஜான் காதல்’ 1933-ல் வெளிவந்தது.
61.          l இவரை பத்திரிகை உலகுக்கு அழைத்து வந்தவர் .ராமசாமி. சென்னையில் 1934-ல் குடியேறினார். ‘ஊழியன்பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘மணிக்கொடிஇதழில் இவரது படைப்புகள் பிரசுரமாகின. அதில் வெளியான இவரது முதல் சிறுகதைஆத்தங்கரைப் பிள்ளையார்.’
62.          l ‘மணிக்கொடி’, ‘கலைமகள்’, ‘ஜோதி, ‘சுதந்திரச் சங்கு’, ‘ஊழியன்’, ‘தமிழ்மணிஉள்ளிட்ட பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. ‘புதுமைப்பித்தனின் கதைகள்என்ற தொகுப்பு 1940-ல் வெளியானது. ‘கிராம ஊழியன்’, ‘சிவாஜிபோன்ற சிற்றிதழ்களில் பணம் பெற்றுக்கொள்ளாமல் எழுதினார். ‘தினமணி’, ‘தினசரிபத்திரிகைகளிலும் பணிபுரிந்தார்.
63.          l எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஈடுபட்டார். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் எழுதினார்.
64.          l சென்னை, தஞ்சாவூர் அல்லாத பிற வட்டார வழக்கு தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் இவர். இவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நெல்லைத் தமிழ் பேசின. மாக்சிம் கார்க்கி, எர்னஸ்ட் டோலர், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார்.
65.          l இவர் சிறந்த இலக்கிய விமர்சகரும்கூட. சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் எழுதினார். இலக்கியத்தின் பல துறைகளிலும் எழுதினாலும், சிறுகதைகள்தான் இவருக்கு தனியிடம் பெற்றுத் தந்தன. ‘காஞ்சனை’, ‘நாசகாரக் கும்பல்’, ‘மனித யந்திரம்’, ‘பொன்ன கரம்’, ‘இது மிஷின் யுகம்’, ‘சாபவிமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘ஒருநாள் கழிந்தது’, ‘சிற்பியின் நரகம்’, ‘செல்லம் மாள்முதலான அற்புதமான படைப்புகள் சாகாவரம் பெற்றவை.
66.          l திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ‘அவ்வை’, ‘காமவல்லிஆகிய படங்களில் பணிபுரிந்தார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, திரைப்படம் தயாரிக்க முயன்றார். அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
67.          l கூர்மையான சமூக விமர்சனம், அபாரமான அங்கதம், கதை வடிவங்களில் பரிசோதனை, வேகமான நடை, ஆழம், துல்லியமான சித்தரிப்புகள், வலுவான பாத்திரப் படைப்புகள் ஆகியவை இவரது தனி முத்திரைகள்.
68.          l ‘ராஜமுக்திபடத்துக்கு திரைக்கதை, வசனம் எழுத 1947-ல் புனே சென்றிருந்தபோது, காசநோயால் பாதிக்கப்பட்டார். ஊர் திரும்பிய பிறகும் உடல்நிலை தேறவில்லை. மிகக் குறுகிய காலமே படைப்புலகில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 42-வது வயதில் (1948) மறைந்தார். இவரது படைப்புகள் 2002-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
மனித வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டுள்ள மரபறிவை நுட்பமாகப் பதிவு செய்தவர்

வாழ்ந்த மண்ணையும் மக்களின் மனநிலைகளையும் கூர்மையாக உள்வாங்கி, தன் படைப்புகளில் காட்சிப்படுத்தியவர் புதுமைப்பித்தன். எழுத்தையே வாழ்வாகக் கொண்ட அவர், நீண்ட நாட்களாக ஊரையும் குடும்பத்தையும் பிரிந்தே இருந்தார். எனவே, அவர் தன் எழுத்துகளின் வழி ஊருக்குப் பயணப்பட்டுவிடுவார். ‘அப்படியே நான் எங்க ஊருக்குச் சென்றுவிட்டேன். அந்தத் தாமிரபரணி ஆற்றின் கரை, தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை, சமீபத்தில் சுலோசன முதலியார் பாலம், சுப்பிரமணியசாமி கோயில், சாலைத் தெரு, பேராய்ச்சி கோயில், மாந்தோப்பு, பனைவிடலிகள், எங்க வீடு எல்லாம் அப்படி அப்படியே கண்முன் தோன்றின. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்கள், திருநெல்வேலியின் வசீகர சக்தியின் ஒரு பகுதி அதுஎன அவர் எண்ணச் சிறகுகளை விடுத்து ஊருக்குப் பறந்து வந்துவிடுவார்.

புதுமைப்பித்தனின் கதைகள் பெரும்பாலும் ஊர்ப் பெயர், மக்கள் பெயர் இவற்றோடுதான் தொடங்கும். ஊர்ப் பெயர்களை வெறும் ஊர்ப் பெயர் என்ற அளவோடு விட்டுவிடாமல், வரலாறு, சுற்றுச்சூழல், மரபறிவு இவற்றோடு அவற்றை உயிர்ப்பித்து நடமாட விடுவார். தான் பிறந்த ஊருக்கு வண்ணார்பேட்டை என்று பெயர் வந்த காரணத்தை, ‘கும்பினிக்காரன் வந்த புதுசு. அந்தக் காலத்துல சுலோசன முதலியார் பாலம் கட்டல. நம் சாலைத் தெருதான் செப்பரை வரைக்கும் செல்லும். அங்கேதான் ஆற்றைக் கடக்க வேண்டும்.கொக்கிரகுளத்தில் இப்போது கச்சேரி இருக்கே, அங்கேதான் கும்பினியார் சரக்குகளைப் பிடித்துப் போடுமிடம். அந்த வட்டாரத்திலே நெசவும் பாய் முடைகிறதும் ரொம்பப் பிரபலம். அப்போது இருநூறு முந்நூறு சலவைத் தொழிலாளிகளை குடியேற்றிவைத்தான் கும்பினிக்காரன். குஷ்டந்தீர்ந்த துறை என்ற பேர் வண்ணாரப்பேட்டை என்று ஆயிற்றுஎன்று ஊரின் பெயர் மாற்ற வரலாற்றைவிநாயகர் சதுர்த்திஎன்ற கதையில் விவரிக்கிறார் புதுமைப்பித்தன்.

குஷ்டந்தீர்ந்த துறை

நெல்லைப் பகுதியில் தாமிரபரணி ஆற்றோரம் நீராடும் துறைகளின் அடிப்படையில் கறுப்பன்துறை, குறுக்குத் துறை, சிந்துபூந்துறை எனப் பல ஊர்கள் அமைந்துள்ளன. புதுமைப்பித்தன் குறிப்பிடும்குஷ்டம் தீர்ந்த துறைவண்ணார்பேட்டை ஆற்றங்கரையிலுள்ள சுப்பிரமணிய சாமி கோயிலின் பின்பக்கம் அமைந்துள்ளது. அந்தக் கோயிலில்குட்டத்துறை சுப்பிரமணியசாமி திருக்கோயில்என்று எழுதப்பெற்றுள்ளதை இன்றும் காணலாம். இது புதுமைப்பித்தன் குறிப்பிடும்குஷ்டம் தீர்ந்ததுறைஎன்பதன் திரிபாகும். இந்தப் பெயர்க் காரணம் தாமிரபரணி ஆற்றோடு தொடர்புடையது. இதனை விளங்கிக்கொள்ள புதுமைப்பித்தன்தான் கைகொடுக்கிறார்.

உயிர்ச்சத்தாகும் மூலிகை நீர்

தாமிரபரணி ஆறு தோன்றும் பொதிகைமலை மூலிகை நிறைந்த மலைப்பகுதி என்பது அனைவரும் அறிந்ததே. கி.பி. 1835-ல் இம்மலைப் பகுதிகளில் மூலிகை ஆராய்ச்சி செய்த டாக்டர் ஒயிட், 20 சதுர மைல் பரப்பில் 2,000 வகை மூலிகைகள் கிடைக்கின்றன எனக் கணக்கிட்டார். மனிதனுக்கு மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களின் வளர்ச்சிக்கும் இந்நீர் உயிர்ச் சத்தாக விளங்கியது. இம்மலையிலுள்ளநறுவளிமலரில் நீர் தோய்ந்துவருவதால் ஆற்றில் பலவகை மீன்கள் பெருகி வளர்கின்றன என்பார்கள்.

தண்ணீரில் இறங்கிய உடனே சள்ளை மீன்கள் நம் கால்களையும் உடற்பகுதிகளையும் மொசுமொசுவென்று கரம்ப ஆரம்பித்துவிடும். இதனால்தான் நமக்குத் தொல்லை தரும் மனிதர்களை நாம்சள்ளை பிடித்தவன்என்று சொல்கிறோம். இதன் வாய் மிகவும் சிறியதாக இருப்பதால் கடித்துக் குதறாமல் புண்களிலுள்ள கெட்டுப்போன அழுக்குப் பகுதிகளை மட்டுமே கரம்பிச் சாப்பிடும். இத்தகைய மீன்கள் தென்னகத்திலும் இலங்கையின் வடபகுதியிலும் மட்டுமே காணப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பழனி அரசு மருத்துவமனையில் தோல் நோய்க்கு மீன் மருத்துவம் செயல்படுத்தப்பெற்றது. பெங்களூரு போன்று பல இடங்களில் இந்த இயற்கை மருத்துவம் நடைமுறையில் உள்ளது.

தாமிரபரணி ஆற்று நீரில் நீராடினால் தோல் நோய் நீங்கும் என்று மக்களிடையே நிலவும் நம்பிக்கையைதுன்பக் கேணிஎன்ற நெடுங்கதையில் புதுமைப்பித்தன் பதிவுசெய்கிறார். தேயிலைத் தோட்டத்தில் பரங்கி நோய்க்கு ஆளான மருதி திருநெல்வேலிக்குத் திரும்புகிறாள். ஊருக்கு வந்த சிறிது காலத்தில் அவளுடைய தோல்நோய் தணிந்துவிடுகின்றது. இதனைப் புதுமைப்பித்தன்தாமிரபரணித் தண்ணீர் விசேஷத்தினாலோ என்னவோ நோயின் கொடுமைகள், அதாவது வெளித் தோன்றிய புண்கள் உள்ளடங்கினஎன்று தாமிரபரணியில் நீராடியதால் மருதிக்கு ஏற்பட்ட பலனைக் குறிப்பிடுகிறார். காலங்காலமாகத் தாமிரபரணி ஆற்று நீர் பற்றி மக்கள் கைமாற்றி வந்த மரபறிவைப் புதுமைப்பித்தன் எழுத்தில் பதிவு செய்துள்ளார்.

ஸ்படிக நீர்

மேலும், அவர் காலத்தில் ஆற்று நீரின் தூய்மைத் தன்மை எவ்வாறு இருந்தது என்பதைநீர் ஸ்படிகம் போலக் களங்கமற்று, மனிதரைக் குனிந்து அள்ளிக் குடிக்கும்படி வசீகரித்ததுஎன்று எழுதியுள்ளார். தாமிரபரணி ஆறுகுறித்த அவருடைய கடந்தகாலப் பதிவுகள் நம்மை ஆற்றின் நிகழ்கால அவலங்களோடு ஒப்பிட்டுச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

புதுமைப்பித்தன் தன்னுடைய கதைகளில் உயிருள்ள, உயிரற்ற அஃறிணைப் பொருட்களோடு மனித உயிர், மனித வாழ்க்கை பிணைக்கப்பெற்றுள்ள மரபறிவை நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார். மதத்தைக் காப்பாற்றுவதில் இருக்கும் துடிப்பில் சிறிதளவாவது, மண்ணையும் நீரையும் மலைகளையும் காடுகளையும் காக்கும் உணர்வு நமக்கு வேண்டும். இயற்கை வளத்தைப் பெருக்கி அளவோடு துய்க்கும் அறிவார்ந்த சமுதாயமாக விளங்குவதே நமக்கு நன்மை பயக்கும். மடுவறுத்துப் பால் குடிக்கும் பேராசை, மானிடத்துக்குப் பேரழிவையே விளைவிக்கும். இவற்றையே புதுமைப்பித்தனின் காலப் பதிவுகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

புதுமைப்பித்தனின் சொற்சித்திரம்

பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு ஒன்றுமில்லை. பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக் கொண்டு, நியாயம் என்று சமாதானப்பட வேண்டிய விதிதான். ஒரு சிலமகாராஜர்களுக்காக' இம்மையின் பயனைத் தேடிக்கொடுக்கக் கடமைப்பட்டு வசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு உண்மையில் ஒரு பொன் நகரந்தான் அது.

ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அதுதான் அங்குமெயின்' ராஸ்தா. கைகோத்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால், இதற்குக் கிளையாக உள் வளைவுகள் உண்டு. முயல் வளைகள்போல்.

இந்தத் திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க வேண்டுமானால், சிறு தூறலாக மழை சிணுசிணுத்துக்கொண்டிருக்கும் பொழுது சென்றால்தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாகமுனிசிபல் கங்கை' - அல்ல, யமுனைதானே கறுப்பாக இருக்கும்? - அதுதான். பிறகு ஓர் இரும்பு வேலி, அதற்குச் சற்று உயரத் தள்ளி அந்த ரயில்வே தண்டவாளம்.

மறுபக்கம், வரிசையாக மனிதக் கூடுகள் - ஆமாம், வசிப்பதற்குத்தான்!

தண்ணீர்க் குழாய்கள்? இருக்கின்றன. மின்சார விளக்கு? ஞாபகமில்லை - சாதாரண எண்ணெய் விளக்கு, அதாவது சந்திரன் இல்லாத காலங்களில் (கிருஷ்ண பட்சத்தில்) ஏற்றி வைத்தால் போதாதா?

பொன்னகரத்துக் குழந்தைகளுக்குமீன் பிடித்து' விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில், மீன் ஏது? அங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம் அழுகிய பழம், ஊசிய வடை, இத்யாதி உருண்டு வரும். அது அந்த ஊர்க் குழந்தைகளின் ரகசியம்.
புதுமைப்பித்தன் பிறந்த நாள் ஏப்.25: காலத்தில் மழுங்காத மேதமை


சந்தின் பக்கத்தில் ஒருவன் அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாககண்வைத்திருந்தான். இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம், புருஷனுக்கு பால் கஞ்சி வார்க்கத்தான். என்னவோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் ஐயா பொன்னகரம்என்னும் வரிகள், அந்தக் கதை எழுதப்பட்ட காலம் கடந்தும் ஒருவிதமான அதிர்வை உண்டாக்கவே செய்தது; செய்கிறது. ‘பொன்னகரம்கதை இரண்டரைப் பக்கங்களில் முடிந்துவிடுகிறது. அம்மாளுவை அவர் இரண்டாவது பக்கத்தின் இறுதியில் அறிமுகப்படுத்துகிறார். அடுத்த பத்தியில் கதை முடிந்துவிடுகிறது. கதாபாத்திரங்களுக்கிடையில் எவ்வித உரையாடலுமில்லை. பெரிய விவரணைகளும் கிடையாது. ஆனால் நான்கே வரிகளில் நெஞ்சில் தைக்கிற மாதிரி ஒரு உண்மையை உணர்த்த அவரால் இயன்றிருக்கிறது.
பொன்னகரம் மட்டுமல்ல; கவந்தனும் காமனும், இது மிஷின் யுகம், தெருவிளக்கு உள்ளிட்ட சில கதைகளை புதுமைப்பித்தன் சொற்பமான இரண்டு மூன்று பக்கங்களில் எழுதி முடித்திருக்கிறார். சில கதைகளில் பிரதானக் கதாபாத்திரத்துக்குப் பெயரில்லை. ஒன்றரைப் பக்கக் கதையானஇது மிஷின் யுகம்என்னும் கதை, சில உதிரியான உரையாடல்களுடன் நிறைவடைகிறது. அளவில் சிறியதான இந்தக் கதைகளில் புதுமைப்பித்தன் நகர வாழ்வின் இருளான பக்கங்களை மிகச் சாதுரியமாக வாசகனுக்குக் கடத்திவிடுகிறார். இது தேர்ந்த கவிஞனுக்கேயான சாதுரியம்.
பாரதி, மாதவய்யா, வேதநாயகம் பிள்ளை, .வே.சு. அய்யர் போன்றோரை முன்னோடிகளாகக் கொண்ட புதுமைப்பித்தன், மரபின் தாக்கம் விலகியிராத ஒரு காலகட்டத்தில் எழுதத் தொடங்கியவர். தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் வீட்டை விட்டு விலகிச் சென்னைக்கு வந்து எழுத்து வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தனது எழுத்துக்கான சூழலை அமைத்துக்கொள்ளக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.
குறைந்த அவகாசத்தில் எழுதிய கதைகள்
சிறுகதைகளின் திருமூலர்என்று மௌனியை வர்ணித்த பித்தன், மௌனியைப் போல் முற்றிலும் கனவுலகத்தில் சஞ்சரித்தவரில்லை. கண்முன் கண்ட நடப்புகளை அவரே கூறிக்கொள்ளும்தவளைப் பாய்ச்சல்நடையில் கதைகளாக்கினார். அதில் கோபாவேசமும், கிண்டலும் இழையோடியிருந்தன. கதை கூறல்முறையில் அவர் ஒற்றையடிப் பாதையில் பிரயாணித்தவரல்ல. அடுத்த கதையை அவர் இன்ன வடிவத்தில் தருவாரென எவராலும் கணிக்க முடிந்ததில்லை. பத்திரிகை அலுவலகத்தில் காத்திருக்கும் பதினைந்து நிமிஷ இடைவெளியில் வெற்றிலைக் காம்பைக் கிள்ளிப் போட்டுக்கொண்டு ஒரு தரமான கதையை எழுதிவிடக் கூடிய திராணி அவருக்கிருந்தது.
1930-40களில் தேசமெங்கும் சுதந்திர வேட்கை எனும் அனல்காற்று வலுவாக வீசிக்கொண்டிருந்தது. அது இலக்கிய உலகிலும் எதிரொலித்தது. ஆயிரக்கணக்கான பக்கங்களில் லட்சியவாதமும், சாகசமும், காதலும் அட்சரங்களாக உருண்டோடிக்கொண்டிருந்தன. புதுமைப்பித்தனின் கதைகளில் இந்த அம்சம் தென்படாததை சிலர் விமர்சனமாகவே வைக்கின்றனர். கலையில் பிரசங்கம் கூடாதென்பதில் அவர் உறுதியாக இருந்ததையே இது காட்டுகிறது. அதேபோன்று காசநோயால் கடைசிவரை அவதிப்பட்ட அவர், கழிவிரக்க மிகுதியால் அப்படியான பாத்திரங்களைத் தன் கதைகளில் உருவாக்கியதே இல்லை. இதை ஜெயமோகன் ஓரிடத்தில் சுட்டிக்காட்டுகிறார்.
வடிவ சாத்தியங்களை முயற்சித்த முன்னோடி
வடிவ ரீதியாகப் பரீட்சார்த்தமான முயற்சிகளைக் கையாண்டு பார்த்த முதல் தமிழ்ச் சிறுகதைப் படைப்பாளியாகப் புதுமைப்பித்தனை விமர்சகர்கள் அடையாளப்படுத்துகின்றனர். அதில் மிகையில்லை என்றே தோன்றுகிறது. பின்நவீனத்துவமோ, பேன்டஸியோ, மேஜிகல் ரியலிஸமோ, மறுவாசிப்பு உத்திகளோ - அவை இன்னவென்று அறிந்திராத காலத்தில் புதுமைப்பித்தன் தன்னுடைய கதைகளில் அவற்றைப் பிரயோகித்துப் பார்த்திருக்கிறார். இதையே அவரில் குறையாகக் காணும் விமர்சனமும் வந்துள்ளது. ஆனால் மேற்படி உத்திகள் செல்வாக்குப் பெற்றுள்ள இக்காலகட்டத்தில், எளிய வாசகனிடத்தில் அவர் இன்னும் ஒரு பிரமிப்பை உருவாக்கிவிடுகிறார். எனினும் புதுமைப்பித்தன் கதைகளின் சிறப்பம்சம் எதுவென விவாதிக்கையில், இந்த வடிவ உத்திகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரதானமாக நிற்பவை உள்ளடக்கமும் சமூக விமர்சனமும்தான்.
மனிதப் போலிகளையும், ஜாதி, மதக் கூடாரங்களையும், நிறுவனமயமாக்கலையும், நகர வாழ்வின் அவலங்களையும் அவர்போல் எள்ளிநகையாடியவர் எவருமில்லை என்பது போலவே, அவரளவு விமர்சனத்துக்குள்ளான படைப்பாளியுமில்லை. தான் அறிந்த வாழ்க்கைப் பின்னணியிலிருந்து கதைகள் எழுதியதற்காக சைவ வெள்ளாள சாதி அபிமானமுள்ளவராக விமர்சிக்கப்பட்டார். அவருடைய சுயசாதி விமர்சனத்துக்கு அவர் உருவாக்கிய டாக்டர் விசுவநாத பிள்ளை (நாசகாரக் கும்பல்) பாத்திரமே மிகப் பெரிய சான்று. “பிள்ளைமாருன்னா என்ன கொம்பு மொளச்சிருக்கா? பிரிட்டிஸ் ராச்சியமா என்ன?” என்று மருதப்பர் பாத்திரத்தைக் கேட்க வைத்தவர் அவர். சாதி அடக்குமுறையிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறும் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் முடிவைத் தன்னுடைய கதையின் முடிப்பாகவும் அமைத்துக் காட்டியவர் புதுமைப்பித்தன்.
நிறைவேறாத ஆசை
ஒருநாள் கழிந்ததுபுதுமைப்பித்தனின் சுயவிமர்சனத் தன்மையிலான கதை. அதில் வரும் முருகதாசர் என்னும் எழுத்தாளனுக்குள் எழுத்தையே நம்பி வாழும் எண்ணற்ற எழுத்தாளர்களை அடையாளம் காணலாம். முருகதாசர் அந்தக் கதையில் தனதுநாவல் எழுதும்ஆவலை அடிக்கடி வெளிப்படுத்துவார். பித்தனின் நிறைவுறாத நாவல் ஆசையைத் தெரிவிக்கும் உத்தியாகவும் இதைக் கருத வாய்ப்பிருக்கிறது. மேலும் 32 பக்கங்கள் மட்டுமே எழுதி அவர் விட்டுவைத்தஅன்னை இட்ட தீநாவலும், அவருடைய குறுநாவல் தன்மையிலான பல கதைகளும், முயன்றிருந்தால் சிறந்த நாவலாசிரியராகவும் அவரால் விளங்கியிருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. 1942-ம் ஆண்டில் நடந்த ஆகஸ்ட் புரட்சி வரைக்குமான நாடு தழுவிய அரசியலின் பின்னணியில், நான்கு பாகங்கள் கொண்ட ஒரு நாவலை எழுத அவர் திட்டமிட்டிருந்ததாகவும் அறிகிறோம்.
தாம்பத்ய வாழ்வின் அச்சாணி
பலரும் அபிப்ராயப்படுவது போலசெல்லம்மாள்கதைதான் புதுமைப்பித்தனின்மாஸ்டர் பீஸ்என்று நானும் கருதுகிறேன். செல்லம்மாளை வாசிக்க நேர்ந்த தருணங்களில் கண்களைக் கண்ணீர் நனைக்காமல் இருந்ததில்லை. அதைக் காதல் கதை என்று சிலர் மதிப்பிடுகின்றனர். ஆனால் இன்றைக்குப் பிடி தளர்ந்துகொண்டிருக்கும் தாம்பத்ய வாழ்வின் அச்சாணியாக பிரம்மநாயகம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரை என்னால் காண முடிகிறது. மொழிநடையும், தங்கு தடையற்ற சித்தரிப்பு முறையும்செல்லம்மாள்கதையை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நவீன அடையாளத்துடனேயே வைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
புதுமைப்பித்தனின் விமர்சன முகம்
புதுமைப்பித்தன் கலை இலக்கியத்தின் சகல துறைகளிலும் கால் பதித்தவர். கவிதைகள் எழுதியபோது வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளையாக அவதாரமெடுக்கிறார். விமர்சகர் விருத்தாசலமாக மாறும்போதுஇந்தச் சௌந்தர்ய உணர்ச்சியற்ற பாழ்வெளி எப்பொழுதும் இம்மாதிரி ஒன்றுமற்றதாகவே போய்விடாதுஎன்று நம்பிக்கை தெரிவிக்கிறார். ‘பக்த குசேலா’, ‘சார் நிச்சயமா நாளைக்குபோன்ற நாடக ஆக்கங்களைத் தன்னுடைய சிறுகதைகளின் சாயலில் உருவாக்கினார். ‘தி ஹிஸ்டாரிக்கல் ரோல் ஆஃப் இஸ்லாம்என்னும் எம்.என்.ராய் புத்தகத்திற்கு மதிப்புரை எழுதும்போது, ‘ஹிந்து நாகரிகப் பண்புகளை உணர்ந்து அனுபவிக்க அதன் தற்போதைய பிரதிநிதிகளை மறந்தால்தான் இயலும்; அதைப் போல முஸ்லிம் நாகரிகத்தை ரசிக்க வேண்டுமெனில் அதன் தீவிரக் குரல்களை மறந்தால்தான் சாத்தியம்என தீர்க்கதரிசனமாகக் குறிப்பிடுகிறார்.
42 ஆண்டுகளே வாழ்ந்த ஒரு உன்னதமான எழுத்துக் கலைஞன் புதுமைப்பித்தன். கலைஞன் தான் வாழ்ந்த காலத்தைப் படைப்புகளில் பிரதிபலிப்பவன் என்பதற்கு மிகச் சரியான உதாரணங்கள் அவருடைய கதைகள். ஆனால் காலத்தையே விஞ்சி நிற்க புதுமைப்பித்தன் போன்ற ஒருசில மேதைகளால் மட்டுமே இயலும்.
கட்டுரையாளர், எழுத்தாளர், ‘துருக்கித் தொப்பிநாவலின் ஆசிரியர்.
நெருக்கடியான அவகாசத்தில் எழுதப்பட்டாலும் புதுமைப்பித்தனைப் பற்றிய முழு சித்திரத்தைத் தரும் நூல் ரகுநாதனுடையது
புதுமைப்பித்தனின்கலியாணிகதையில் வரும் சுப்புவையரின் வீடு ஜன்னல்களுக்குப் பெயர்போனதல்ல என்பதுபோல் தமிழ் இலக்கியமும் வாழ்க்கை வரலாறுகளுக்கு, அதிலும் எழுத்தாளர்களுடைய வாழ்க்கை வரலாறுகளுக்குப் பெயர்போனதல்ல. இந்த வறண்ட சூழலில் பூத்த அத்தி ரகுநாதனின்புதுமைப்பித்தன் வரலாறு’.
புதுமைப்பித்தனைத் தமிழ் வாசக மனங்களில் ஆழமாகப் பதித்தது மட்டுமல்ல, ஒரு கலைஞன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உருவாக்கியதும்கூட இந்நூலே என்று சொல்ல முடியும். கட்டுக்கடங்காத படைப்பாற்றல், நிலவுகின்ற சமூக அமைப்பின்மீது அதிருப்தி,கலையின் எல்லையை விரிவுபடுத்தும் மேதைமை, சமூகத்தின் சீரழிவுகளைக் கண்டு பொங்கும் மனம், ஈவிரக்கமற்ற விமர்சனப் பார்வை, சராசரிகளையும் தரமற்றவர்களையும் கருணையின்றி வெட்டிச் சாய்த்தல், வறுமையிலும் சமரசமற்று எழுதுதல், வாழுங் காலத்தில் உதாசீனத்திற்கு ஆளாகி இறந்த பின்னர் போற்றுதலுக்கு உள்ளாதல் என்பன தமிழ்ச் சூழலில் ஒரு கலைஞனுக்கு இலக்கணமாகக் கொள்ளப்படுகின்றதென்றால், இதை வரையறுத்து அதற்கு முன்மாதிரியான ஓர் ஆளுமையாகப் புதுமைப்பித்தனை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டவர் ரகுநாதன்.
வரலாறு பிறந்த வரலாறு
புதுமைப்பித்தன் வரலாறுநூல் உருவான கதை சுவையானது. புதுமைப்பித்தனுக்கு எதிரான ஆளுமையாக இருவருடைய வாழ்நாளில் மட்டுமல்லாமல் மறைவுக்குப் பின்னும் கட்டமைக்கப்பட்ட கல்கியின் வரலாறு எழுதப்பட்ட கதையோடு இதை ஒப்பிடுவது சுவையானது. ‘பொன்னியின் புதல்வர்என்ற கல்கி வாழ்க்கை வரலாறு, இரண்டாண்டுகள்கல்கிவார இதழில் தொடராக வெளிவந்து, 1976 டிசம்பரில் நூலாக்கம் பெற்றது. ஏறத்தாழ 900 பக்க அளவிலான பெரிய நூல் அது. எழுதியவர் தொடக்ககாலமணிக்கொடிஎழுத்தாளரும், பின்பு கல்கி குழுவில் இடம்பெற்றவருமான மே.ரா.மீ. சுந்தரம் என்ற சுந்தா. கல்கி நிறுவனத்தின் முழு ஆதரவுடனும் புரத்தலுடனும், தி. சதாசிவம், கல்கியின் மகன் கி. ராஜேந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினரின் ஒத்துழைப்புடனும் எழுதப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு அது.
கல்கி பணியாற்றியநவசக்தி’, ‘விமோசனம்’, ’ஆனந்த விகடன்’, ‘கல்கிஆகிய இதழ்களை முழுமையாகவும் முறையாகவும் பயன்கொண்டு, பொருத்தமும் சுவையும் பொருந்திய ஏராளமான மேற்கோள்களைச் சுந்தா எடுத்தாண்டிருப்பார். வாழ்க்கை வரலாறு எழுதுவது எப்படி என்பதற்கு ஒரு பாடப்புத்தக முன்மாதிரி என்றும் இதனைச் சொல்லலாம்.
சத்தான உணவும், குங்குமப்பூ போட்ட பாலும் பருகி வளர்ந்த தாய்க்குப் பிறந்த சுந்தாவின்பொன்னியின் புதல்வரோடு ஒப்பிடுகையில் ரகுநாதனின்புதுமைப்பித்தன் வரலாறுபோஷாக்கு இல்லாமல் பிறந்த குழந்தை. ஆனால் நிறைமாதக் குழந்தையின் வனப்புடன்பிறந்தவுடன் நஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு கோஷமிட்டுக்கொண்டுஓடிய அவதாரப் பிறப்பு.
1948 ஜூன் 30-ல் திருவனந்தபுரத்தில் தம் மனைவியின் பிறந்த அகத்தில் புதுமைப்பித்தன் மறைந்தார். 1950 இறுதியில் அவருடைய மனைவி கமலாவும் மகள் தினகரியும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்கள். அப்பொழுது அவர்கள் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் புதுமைப்பித்தன் குடும்பத்திற்கு நிதி திரட்டி அளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1950 டிசம்பர் இறுதியில் கல்கி, .நா.சுப்ரமண்யம், ரகுநாதன் முதலான எழுத்தாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கம் தோன்றியது. இதன் சார்பில் புதுமைப்பித்தன் நினைவு நாள் 1951 ஜூலை 23-ல் கொண்டாடப்பட்டது. புதுமைப்பித்தன் குடும்பத்திற்கு நிதி திரட்டித் தர வேண்டும் என்ற தீர்மானம் அவ்விழாவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இயங்குவிசையாக இருந்தவர் ரகுநாதன். புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு நிதி திரட்டிய இந்தக் காலப் பகுதியில்தான் (ஜூலை செப்டம்பர் 1951), இந்த முயற்சிக்குத் துணை செய்யும் கருவியாகவே புதுமைப்பித்தன் வரலாற்றை எழுத முற்பட்டார் ரகுநாதன்.
நெருக்கடியில் பிறந்த குழந்தை
நூலை எழுதிய காலத்தில் ரகுநாதன்சக்திமாத இதழின் ஆசிரியக் குழுவில் இருந்தார். மாதச் சம்பளமான நூறு ரூபாயினையும்கூட ஐந்தும் பத்துமாகத்தான் பெற வேண்டிய நிலை. எனவே, பகலில் பத்திரிகைப் பணி, இரவில் கூடுதல் வருமானத்துக்காக மாக்சிம் கார்க்கியின்தாய்நாவலைத் தமிழாக்கும் வேலை என நெருக்கடியான சூழலில் இருந்தபோதுதான் ரகுநாதன் புதுமைப்பித்தன் வரலாற்றை ஒரு காலக்கெடுவுக்குள் எழுதி முடிக்க முற்பட்டார். ரகுநாதன் அவருக்கே உரிய முறையில் இடைக்கால இலக்கிய மரபொன்றைச் சுட்டியதுபோல் தலைக்கு மேல் கத்தியும் உடலுக்குக் கீழே நெருப்புமாக அரிகண்டம், யமகண்டம் பாடிய புலவர்களையொத்த நினையில் பத்தே நாளில் எழுதி முடித்த நூல் இது.
இவ்வாறு மிகமிக விரைவில் எழுதப்பட்டதாயினும் திடீரென எழுதப்பட்ட நூலல்ல இது. ‘புதுமைப்பித்தன் இறந்தவுடனேயே அவரைப் பற்றிய வரலாறு ஒன்றை எழுத வேண்டும் என்ற விருப்பத்தோடுஇருந்தவர்தான் ரகுநாதன். புதுமைப்பித்தன் வாழ்நாளின்பொழுதே அவரோடு நெருங்கித் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் அவர். புதுமைப்பித்தன் உயிரோடிருந்தபொழுதே அவரை முக்கியக் கதைமாந்தராகக் கொண்டுஞானமணிப் பதிப்பகம்என்ற கதையினை ரகுநாதன் எழுதியிருக்கிறார்; தமதுஇலக்கிய விமர்சனம்என்ற தற்கால இலக்கியம் பற்றிய தீர்மானமான இலக்கியக் கருத்துகளைக் கொண்ட தமிழில் முன்னோடியான திறனாய்வு நூலில் புதுமைப்பித்தன் உயிருடனிருந்த காலத்திலேயே அவரை உச்சிமேல் புகழ்ந்தவர் அவர். எனவே, புதுமைப்பித்தன் வரலாற்றை எழுதுவதற்கான தகுதி, திறமை, ஆற்றல், விருப்பம், மனச்சமைவு அனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்தவராகவே ரகுநாதன் இருந்திருக்கிறார்.
இரு ஆளுமைகளின் ரசவாதம்
சுந்தாவைப் போல் ஒரு பெரும் பத்திரிகை நிறுவனத்தின் ஆதரவோடு, சமூகத்தின் மதிப்புமிக்க பிரமுகர்களின் ஒத்துழைப்போடு ரகுநாதன் தம் நூலை எழுதவில்லை. ‘கள ஆய்வுகளையெல்லாம் நடத்திய பின் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூலல்ல. சுளைசுளையாக ஆயிரக்கணக்கில் சம்பளத்தை வாங்கிக்கொண்டும், யூஜிசி மானியம் போன்ற நிதி உதவிகளையும் பெற்றுக்கொண்டும், சோற்றுக்குக் கவலையில்லாமல், சொகுசு வாழ்க்கைக்குப் பஞ்சமில்லாமல் வாழ்ந்துகொண்டும், ஊர்ஊராகச் சென்று களஆய்வுகள் செய்து தகவல்களைத் திரட்டும் வாய்ப்பும் வசதியும்கொண்டு எழுதப்பட்டதல்ல என்று புதுமைப்பித்தன் வரலாறு வெளியாகி நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, விவாதச் சூட்டில் சினம் கொப்புளிக்க ரகுநாதன் எழுதியதுபோல் எந்த நிதி வசதியும் இல்லாமல் எழுதிய நூல் இது.
ஆனால்புதுமைப்பித்தனின் ஆவி ரகுநாதனிடம் குடிகொண்டு விட்டதுஎன்று வாசகர்கள் நம்பும் அளவுக்கு இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் ஆழப் பதிந்துவிட்டது. புதுமைப்பித்தனின் ஆளுமையும் ரகுநாதனின் எழுத்தாற்றலும் இணையும் ஒரு ரசவாதம் `புதுமைப்பித்தன் வரலாறை ஒரு செவ்வியல் படைப்பாக்குகிறது.
புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்; உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கைஎன்ற பீடிகையுடன் தொடங்கி, ‘இலக்கிய திருடனின் பேய்க்கனவு; புத்தகாசிரியர்களுள் ஒட்டக்கூத்தன்; வலுவற்றுக் கிடந்த தமிழ் வசனத்துக்கு வாலிபம் தந்த சஞ்சீவி; உலக இலக்கிய சத்சங்கத்திலே தாமாகவே இடம்பிடித்துக் கொண்ட மேதை; சிறுகதை இலக்கியத்தின் ஆசிய ஜோதி; இளம் எழுத்தாளர்களின் லட்சியம்; யதார்த்தவாதிகளின் முன்னோடி; தமிழ் நாட்டில் எழுதிப் பிழைப்பது என்பது எத்தனை அபாயகரமானது என்பதைத் தமது உயிரையே பணயம் வைத்துக் காட்டிச் சென்ற உதாரணம் - இவர்தான் புதுமைப்பித்தன்என்று முடியும்புதுமைப்பித்தன் வரலாறுஒரு நவீன கிளாசிக் என்பதில் விவாதத்திற்கு இடமிருக்க முடியாது.
கடந்த கால் நுற்றாண்டாகப் புதுமைப்பித்தன் பற்றிப் புதிய கவனம் திரும்பியுள்ளது புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றிப் பல விவாதங்கள் புறப்பட்டுள்ளன. அவருடைய படைப்புகள் தொகுக்கப்பட்டுச் செம்பதிப்புகளாக வெளிவந்துள்ளன. தொகுக்கப்படாத படைப்புகள் தேடித் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளன. நூற்றுக்கணக்கான கடிதங்கள் அச்சேறியுள்ளன. இவற்றைக் கொண்டு விரிவான ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதும் தேவை உள்ளது. ஆனால் அவ்வாறு எழுதப்படும் வரலாறு இருபத்தெட்டு வயது இளைஞராக ரகுநாதன் எழுதிய இந்நூலை விஞ்சும் என்று கருதக் காரணங்கள் இல்லை!
- காலச்சுவடு பதிப்பகம் வெளியிடவுள்ள ரகுநாதனின்புதுமைப்பித்தன் வரலாறுஎழுதிய செம்பதிப்புக்கான முன்னுரையிலிருந்து சில பகுதிகள்.
.இரா. வேங்கடாசலபதி, ‘புதுமைப்பித்தன் படைப்புகள்பதிப்பாசிரியர்.


No comments:

Post a Comment