ஜி.நாகராஜன்
ஜி.நாகராஜன்
தலைசிறந்த
இலக்கியவாதியும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை இலக்கியத்தில் இடம்பெறச் செய்தவருமான ஜி.நாகராஜன் பிறந்த
தினம் இன்று (செப்டம்பர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*மதுரையில்
பிறந்தவர் (1929). தந்தை வழக்கறிஞர். 4-வது வயதில் தாய் இறந்ததால் மதுரை, திருமங்கலத்தில் தனது தாய்வழிப் பாட்டி வீட்டில் வளர்ந்தார். அங்கேயே 9-ம் வகுப்பும், பழநியில்
10, 11-ம் வகுப்புகளையும் முடித்தார்
*தந்தையிடமிருந்து
இவருக்கு வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. பள்ளிப் பருவத்திலேயே தமிழ், ஆங்கிலம் மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கணிதம் இவருக்கு மிகவும் பிடித்த பாடம். மதுரைக் கல்லூரியில் இன்டர்மீடியட்டில் முதல் மாணவராகத் தேறினார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கி சர். சி.வி.ராமனிடமிருந்து
தங்கப்பதக்கம் பெற்றார்.
*அங்கேயே
இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். கற்பித்தலில் உள்ள ஆர்வத்தால் காரைக்குடியிலும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். தலைசிறந்த ஆசிரியராகத் திகழ்ந்த இவரை ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்கா அனுப்ப, கல்வி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், அப்போது கம்யூனிச சிந்தனையாளர்கள் பலருடன் ஏற்பட்ட தொடர்பால் அரசியலில் ஈடுபாடு கொண்டார்.
*வேலையை
விட்டுவிட்டு முழுநேர கட்சி ஊழியராக மாறினார். தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியவாறே கட்சி வேலைகளையும் பார்த்துக் கொண்டார். 1952-ல் திருநெல்வேலி யில்
பணியாற்றியபோது ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி ஆகிய எழுத்தாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
*அரசியல்
கருத்து வேறுபாடுகளால் 1956-ல் கட்சிப் பொறுப்புகளிலிருந்து
விலகிக் கொண்டார். அந்த சந்தர்ப்பத்தில் அரவிந்தர் மீது அலாதியான ஈடுபாடு கொண்டார். பின்னர் காந்தியடிகள் மீது பற்று கொண்டார். 1950 முதலே சிறுகதைகள் எழுதி வந்தார். 1957-ல் ஜனசக்தி மாத
இதழில் வெளிவந்த இவரது ‘அணுயுகம்’ சிறுகதை மூலம் இலக்கிய உலகில் புகழ் பெற்றார்.
*சரஸ்வதி,
சாந்தி, ஜனசக்தி, இரும்புத்திரை, ஞானரதம், கண்ணதாசன், கணையாழி, சதங்கை, இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா உள்ளிட்ட இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. ‘குறத்தி முடுக்கு’, ‘நாளை மற்றுமொரு நாளே’, ‘கண்டதும் கேட்டதும்’, ‘எங்கள் ஊர்’, ‘தீராக் குறை’, ‘சம்பாத்தியம்’, ‘பூர்வாசிரமம்’, ‘கிழவனின் வருகை’, ‘லட்சியம்’, ‘மாணவர்களுக்காக காந்தியின் வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
*ஆங்கிலத்திலும்
சில சிறுகதைகள், நாவல்களைப் படைத்துள்ளார். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றவர். சிறுகதைகள், நாவல்கள் தவிர, ‘புற்றுக்குடிப் புலவர்’ என்ற புனைப்பெயரில் ஞானரதம் இதழில் மூன்று கவிதைகளையும் எழுதியுள்ளார்.
*இவர்
எழுதிய ‘ஓடிய கால்கள்’ என்ற கதை இவரது மறைவுக்குப் பின், ‘விழிகள்’ என்ற இதழில் வெளியானது. இவரது படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ‘ஜி.நாகராஜன் படைப்புகள்’
என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.
*இவரது
கதை உலகம் தனித்துவம் வாய்ந்தது. சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத, விளிம்புநிலை மக்களான பாலியல் தொழிலாளர்கள், அவர்களது தரகர்கள் பற்றி துணிச்சலுடன் எழுதினார். தமிழ்க் கதைகள், நாவல்களில் அதுவரை இடம்பெறாத ஓர் உலகை தன் கதைகளின் வாயிலாக வெளிக்கொண்டு வந்தார்.
*தமிழ்
இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி, தமிழ் இலக்கிய எல்லைகளைப் புதிய திசையில் விரிவடையச் செய்த படைப்பாளி ஜி.நாகராஜன், 1981-ம்
ஆண்டு பிப்ரவரி மாதம் 52-வது வயதில் மறைந்தார்
ஜி.
நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 - பிப்ரவரி 19, 1981 ) மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.
பொருளடக்கம்
[மறை]
• 1வாழ்க்கை
• 2அரசியல் ஈடுபாடு
• 3படைப்புகள்
o 3.1நாவல்கள்
o 3.2சிறுகதைகள்
• 4இறுதி
வாழ்க்கை[தொகு]
ஜி.நாகராஜன் மதுரையில் செப்டெம்பர் 1, 1929 ஆம் தேதியில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலை செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் உண்டு. இவர் மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு வரை திருமங்கலம் பி.கே.என்.
பள்ளியில் படித்தார். பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளை முடித்தார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியில் படித்து பல்கலைகழக முதல் மாணவராக வெற்றி பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அதற்கான தங்கப்பதக்கத்தை அறிவியல் மேதை சி.வி.ராமிடமிருந்து
வாங்கினார். மதுரைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் முதுகலைப் படிப்பையும் அங்கு படித்துத் தேர்ச்சி பெற்றார்.காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.1959 ஆம் ஆண்டு இவரும் ஆனந்தா என்பவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனந்தா தீ விபத்து ஒன்றில்
இறந்து போனார். பின்னர் 1962ல் நாகலட்சுமி என்பவரை
இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
அரசியல்
ஈடுபாடு[தொகு]
இவர்
சென்னையில் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. இடதுசாரிக் கொள்கைகளில் கவரப்பட்ட இவர் மதுரையில் கல்லூரியில் பணியாற்றிய போது இடதுசாரி கட்சிக்கான அரசியலில் முழுநேர ஈடுபாடு ஏற்பட்டது. கம்யூனிச சிந்தனையாளர்கள் பலருடனும் தொடர்பு வைத்துக் கொண்டார். கல்லூரியில் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கிய இவரை ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்ப கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அவர் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து வேலையை துறந்து முழுநேர கட்சி ஊழியராக ஆனார். தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபடி அவர் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
1952 முதல்
இவர் திருநெல்வேலிக்கு சென்று பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக்
கல்லூரியில் வேலை செய்யத் தொடங்கினார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டார். 1956ல் கட்சியுடன் ஏற்பட்ட
கருத்து முரண்பாட்டால் கட்சிப் பொறுப்பை விலக்கிக் கொண்டார்.
அதன்
பிறகு மதுரைக்கு திரும்பி தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். கடைசிக் காலத்தில் மார்க்ஸிய கோட்பாட்டில் முற்றிலும் நம்பிக்கை இழந்த இவர், மார்க்ஸிய எதிர்ப்பாளராக மாறினார். மார்க்ஸியம் மானுட எதிர்ப்புத்தன்மை கொண்டது என்று எண்ண ஆரம்பித்தார்.
படைப்புகள்[தொகு]
இவர்
முறையாக எழுதியவர் அல்ல. ஆங்காங்கே எழுதி எவரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. 1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 1957ல் ஜனசக்தி மாத
இதழில் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார்.பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாக “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்” என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் “With fate conspires”
என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்காக காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார்
நாவல்கள்[தொகு]
• நாளை மற்றும் ஒரு நாளே,
• குறத்தி முடுக்கு.
சிறுகதைகள்[தொகு]
• எங்கள் ஊர்
• டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
• யாரோ முட்டாள் சொன்ன கதை
• தீராக் குறை
• சம்பாத்தியம்
• பூர்வாசிரமம்
• அக்கினிப் பிரவேசம்
• நான் புரிந்த நற்செயல்கள்
• கிழவனின் வருகை
• பூவும் சந்தனமும்
• ஜீரம்
• போலியும் அசலும்
• துக்க விசாரனை
• மனிதன்
• இலட்சியம்
• ஓடிய கால்கள்
• நிமிஷக் கதைகள்
இறுதி[தொகு]
கம்யூனிசக்
கொள்கைகளில் ஏமாற்றம் அடைந்த காலகட்டத்தில் இவருக்குப் போதைப் பழக்கம் ஏற்பட்டது. கடைசியில் நோயுற்று பிப்ரவரி 19, 1981 ஆம் தேதியில் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.
ஜி.நாகராஜன்-விளிம்புகளை வரைந்த வாத்தியார்
இன்று
எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவர்களின்
பிறந்தநாள். வரலாற்றின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களை அவர்களின் மறைவுக்கு நெடுங்காலத்தின் பின்னே கொண்டாடுவது தமிழ் மரபாகிவிட்டது. அந்த மரபின் படி மறைந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் மறுவாசிப்பு செய்யப்பட்டு அவரின் எழுத்துக்கள் மீது வாசக வெளிச்சம் பட்டது.
இதே
நாள், செப் 1 (1929) அன்று பழநியில் வழக்கறிஞர் கணேசனின் மகனாக பிறந்த நாகராஜன் அவருக்கு ஏழாவது பிள்ளை. மதுரையில் உள்ள தாய்மாமன் வீட்டில் தங்கி முதுகலை வரை படித்த நாகராஜன் காரைக்குடி கல்லூரியில் பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் பல்வேறு வேலைகள் செய்த அவர் இறுதியில் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். நாகராஜன் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தால் அப்படியே மனதுக்குள் பதிந்துவிடும் என்ற பெயருண்டு. அந்தக்கால மதுரை மாணவர்களின் ஹீரோவாக இருந்தார்.
ஜி.நாகராஜன் எழுத்திலும் இயல்பிலும் சண்டமாருதனாகத்தான் இருந்தார்.காற்றைக் கட்டிப்போட முடியாது என்கிற அறிவியல் உண்மை தெரிந்தே கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர பணியாளராக அவரை நியமித்தார்கள். எழுத்தாளர்கள், எழுத்திலும் கூட தொடத்தயங்கிய பாத்திரங்களை யதார்த்தத்துடன் படைத்தளித்தவர் நாகராஜன். விலைமாது, பிட்பாக்கெட்கள்,திருடர்கள் என
அவரின் படைப்புலகம் உலக வாழ்வின் இருண்ட முகங்களை அவைகளின் அறங்களுடன் காட்சிப்படுத்தியது.
அவர்
'குறத்தி முடுக்கு' மற்றும் 'நாளை மற்றும் ஒரு நாளே' ஆகிய குறு நாவல்களும் 17 சிறுகதைகளுமே எழுதியுள்ளார். அதே போல ஆங்கிலத்தில் கட்டுரைகளும், ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.
அவரின்
பிறந்தநாளான இன்று அவரின் படைப்புகளில் ரசிக்கப்பெற்ற சில வாசகங்கள்.
"உண்மை
நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்."
"மனிதனைப்
பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்."
"தனது
கலைப் படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்."
"‘மனிதாபிமான’
உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனிதத் துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தைப் படைக்க வல்லது. இல்லையெனில் ‘மேக்பெத்’ என்ற நாடகமோ ‘கலிவரின் யாத்திரை’ என்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது."
"மனிதர்களிடம்
நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்று குறையும்."
" தனிமனிதர்களை
மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்."
"மனித
குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன."
"எந்தச்
சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறு கூட்டம் இருந்தே தீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்."
1963-ல்
தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் குறத்தி முடுக்கு நாவலை வெளியிட்ட நாகராஜன் அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"நாட்டில்
நடப்பைதை சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால் "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது" என்று வேண்டுமானால் கேளுங்கள்; "இவையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?" என்று கேட்டு தப்பித்து கொள்ளப்பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவு சொல்ல முடியவில்லையே என்றுதான் வருத்தம்."
இதுதான்
ஜி.நாகராஜன்!
‘சிதையில்
படுத்தால்தான் குளிர் அடங்கும்’ – ஜி. நாகராஜன்
நண்பர்
கநாசு. தாஜ் அனுப்பிய கட்டுரை. நாளையிலிருந்து அவர் ஜிநா.தாஜ் என்று அழைக்கப்படுவார். இன்றைய கணக்கு முடிஞ்சு போச்…!
***
அன்புடன்….
வாசகர்களுக்கு…..
“நவீன
தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித்தவர் ஜி. நாகராஜன். அதுவரையான, தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம்! வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல
நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழும் உலகமது” – சி. மோகன்
‘நாளை
மற்றுமொரு நாளே’-ஐ முன் வைத்து
ஜி. நாகராஜனின் படைப்பைப் பற்றிய தனது மதிப்பீடாக சி. மோகன் தன் பேச்சில் குறிப்பிட்டு இருக்கும் மேற்கண்ட கணிப்பு 100க்கு 100- சரி! ஜி. நாகராஜனின் அறிவார்ந்த தளங்கள் குறித்து பலரும் எழுதியதைப் படித்து இருக்கிறேன். தவிர, அவரது கட்டுரைகள்/ கதைகள்/ நாவல்கள் வழியாகவும் நிரம்ப அறிந்திருக்கிறேன். நிஜமாலுமே அறிவார்ந்த கலைமனம் கொண்ட படைப்பாளிதான் அவர்.
‘நாளை
மற்றுமொரு நாளே’ நாவலை, தொண்ணூறுகளில் நான் வாசித்திருக்கிறேன். அதை வாசித்திருக்கிறேன் என்று இப்போது சொல்லிக்கொள்வது சந்தோஷமாக இருக்கிறது. வேசிகளைப் பற்றி, பொறுக்கிகளைப் பற்றி சில படைப்பாளிகள் எழுதி நான் படித்திருக்கிறேன். அந்தவகையில் சி. மோகன் குறிப்பிட்டிருப்பது போல், ஜி.நாகராஜனின் எழுத்து
ஒன்றுதான் நினைவில் இன்னும் நிற்கிறது. மோகன் கூறியிக்கிற மாதிரி, அதிர்ச்சிக்காகவோ, கிளர்ச்சிக்காகவோ, பரபரப்புக்காகவோ,
எழுத்தில் காட்ட நேரும் துணிச்சலுக்காகவோ…. என்றில்லாமல் எழுதப்பட்ட ஒன்றாகவும் அது இருந்தது.
அந்நாவல்
மையமிடும் உலகில், அவர் கண்ட, கொண்ட மக்களின் தினப்படியான சம்பவங்களை பெரிய மாற்றமேதுமில்லாமல் அவர் தன் படைப்பில் இறக்கி வைத்திருந்தார். நிஜத்தில் நிறைவு தந்த யதார்த்தப் பதிவு அது. அந்நாவலை வாசித்த நாளில், அதனாலானத் தாக்கம் என்னில் தணிய பல நாட்கள் ஆனது!
இங்கே, அந்தத் தாக்கத்தை அடிக்கோடிடுகிறேன்.
வாய்ப்பு
கிடைத்தால், இந்நாவலை நண்பர்கள் ஒரு முறையாவது வாசிக்கவேண்டும். நம்மைச்சுற்றி, நாம் காணும் மக்களிடையே நமக்கு சிக்காத இப்படியான வாழ்வுகொண்ட மக்களும் வாழ்வதை நீங்கள் உணரவரும்போது எனக்கு ஏற்பட்ட அதே பேரதிர்வும், தாக்கமும் உங்களுக்கும் நிகழலாம். அப்படி நிகழும்பட்சம் அதுவோர் அபூர்வ நிகழ்வாகவே நீங்களும் சிலாகிக்கக்கூடும்.
இங்கே,
சில முன் குறிப்புகளை இடுகிறேன்.
இந்த
முன் குறிப்புகள்
உங்களது
தடங்களில்லா வாசிப்புக்கு…
உதவக்கூடும்.
*
1. எஸ்.
சம்பத்:
அமரராகிப்போன
சில தேர்ந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர். இத்தனைக்கும் இவர் ‘இடைவெளி’ என்கிற ஒரே ஒருநாவலைத்தான் எழுதியிருக்கிறார்! என்றாலும் அவரை பிற படைப்பாளிகள் மெச்சுகிறார்கள். ‘இடைவெளி வெளிவந்து சுமார் இருபத்தி ஐந்து வருடத்திற்கு மேலாகியும் இன்னும் அவர் அதற்காகவே நினைவுக்கூறப்படுகிறார்! ‘விருட்சம்’ சிற்றிதழின் ஆசிரியரும் என் நண்பருமான அழகிய சிங்கர், இன்றைக்கும் தனது இதழ்களில் சம்பத் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். பல படைப்பாளிகள் இந்நாவலை
அன்றைக்குப் போற்றி புகழ்ந்ததை அறிவேன். வாசித்தும் இருக்கிறேன்.
வாழ்வுக்கும்
சாவுக்குமான இடைவெளியைப் பற்றி தீரப்பேசும் நாவல் அது. இந்நாவலுக்காக சம்பத் அவர்கள் பெரிய அளவில் மனோரீதியான ஆய்வை நிகழ்தினார் என்றும், அந்நாவல் எழுதவென்று அதிகக் காலம் எடுத்தார் என்றும் எங்கள் நண்பரான திலீப்குமார், சிரித்தபடி சொன்னது மறக்க முடியாது. தூக்குக் கயிற்றுக்குள் தலையைவிட்ட நிலையில்… முடிச்சுக்கும் -கழுத்துக்குமான இடைவெளிதான் உயிர் ஜனிப்பின் யதார்த்த நிலை என்பதாக, நாவலில் அவர் பேசியிருப்பது மறக்கமுடியாது.
ஆர்வம்
கொண்ட தனது நாவல் புத்தகமாக வெளிவந்து பார்ப்பதற்கு முன்பாகவே சம்பத் இறந்துபோனார் என்பது இங்கே கூடுதல் தகவல். இன்னொரு கூடுதல் தகவல் , மத்திய அரசு சார்ந்த பெரிய பதவி ஒன்றை பம்பாயில் அவர் வகித்தார் என்பது.
என்னைப்
பொருத்தவரை, சம்பத்தின் ‘இடைவெளி’… தமிழில் இன்னொரு நாவல் மட்டுமே. பெரும்பாலும் சாவைப்பற்றிய ஆய்வுகளை என் மனம் ஏற்பதில்லை. ‘சாவு, மரணத்தால் மனிதன் எழுதும் அழகிய கவிதை!’ அப்படியோர் கவிதை எழுதவே ஒருவன் வாழ்நாளெல்லாம் வாழ்கிறான். கிளையிலிருந்து இலை விழும் நேர்த்தி கொண்ட கவிதையது!
2. ப.
சிங்காரம்:
திருநெல்வேலி
பக்கத்து கிராமத்திலிருந்து, தனது சிறுவயதில் மலேசியா போய், பின்னர் இந்தோனேசியா சென்று, தரையிலும் கடலிலும்(கப்பலில்) பணி செய்து தனது மூப்பு பருவத்தில் நாடு திரும்பியவர். திறமான இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். நாவலின் மையம் அவர் பணிபுரிந்த கிழக்காசிய கடல் பரப்பும், அதன் கரையில் வாழும் மக்களும்தான். நான் மேலே குறிப்பிட்ட ‘திறனான’ என்றது… நம் படைப்பாளி பெருமக்களின் ஏகோபித்த கணிப்பு! சம்பத் பற்றி நாலு நல்ல வார்த்தைகள் பேசிய நம்ம ஆபிதீன், ப.சிங்காரத்தின் நாவல்
குறித்தும் பேசியதும் என் நினனவிருக்கிறது. எனக்கும் ஆபிதீனை வழிமொழிய ஆசை. என்னசெய்ய… நான் இன்னும் அதை படிக்கலையே!
இங்கேயுள்ள
நவீன இலக்கிய வட்டத்த்தின் எந்த ஒரு படைப்பாளியோடும் சிங்காரத்திற்கு தொடர்பும் கிடையாது. தமிழில் எந்த ஒரு படைப்பாளியின் படைப்புகளையும்கூட அவர் வாசித்தவரில்லை!
சிறுவயதில் பிழைக்கப் போன இடத்தில் ஆங்கிலம் பயின்று, ஆங்கில நவீனங்களைப் படித்து, இலக்கிய காதலாகி, கசிந்துருகி , தமிழில் அதுபோல் எழுதிப் பார்க்கவேண்டும் என்கிற கரிசனையில்/ சூழ்கொண்ட முயற்சியில் அவர் எழுதியதுதான் ‘புயலிலே ஒரு தோணி’! தற்சமயம், ‘மாலை முரசு’ திருநெல்வேலி பதிவில் பணிபுரிகிறார்.
3. ஜி.
நாகராஜன்:
மதுரை மாவட்டத்துக்கார். உயர் ஜாதி பிறப்பு. காலத்திற்கும் அதை அவர் எதிரொலித்ததில்லை. மாஸ்டர் டிகிரி. அனேகமாக கணக்கு. வேதமும் பயின்றவர். இவைகளும் அவர் எழுத்தில் மினுக்கியதுகூட இல்லை. அவரது ஆங்கிலப் புலமை அசாத்தியமானது என்பார்கள். உலக இலக்கியம் பல கற்றவர். திருமணம்
குழந்தை உண்டு. குடும்பமும் பெரிய குடும்பம்! ஆனாலும், குடும்பத்துக்கு ஆகாதவர். அவர் வீட்டில் அவரது எழுத்துக்கள் குறித்து படுமட்டமான மட்டமான அபிப்ராயம்.
அவர்
ஈடுபாடுகொண்ட இடது சாரி சிந்தனைகளும் கீழ்த்தட்டு மக்களோடு அவர் கொண்ட நெருக்கமும் தோழமையும்தான் பிற்காலத்தில் அவரது வாழ்வை நிர்ணயித்தது. அது அவரை ‘ஒன்றுமில்லாதவராக’ அலையவிட்டும்… அந்த அலைச்சல்கள் குறித்து வருந்தி ஒரு நாளும் எழுதியவர் இல்லை. மாறாய், ‘நாளை மற்றுமொறு நாளை’த்தான் தந்தார்!
ஒரு
சில நண்பர்கள் மட்டுமான சூழலில், கிட்டத்தட்ட அனாதையாக அவர் இறந்து போனார் என்கிற செய்தி, வாசிப்பவனுக்கு கஷ்டம் தருவது. பாரதியின் இறப்பு செய்தியினை பிற்காலத்தில் படிக்க நேர்ந்தபோது உறுத்திய அதே மனக்கஷ்டம்! உங்களுக்குத் தெரியுமா, மகாகவியை சுடுகாட்டுக்கு சுமந்துசென்று தீயிடப்போனபோது கூடியிருந்தவர்கள் வெறும் பதினாறு பேர்கள்!!.
ஜி.
நாகராஜன், தனது இறப்பதற்கு முந்தைய நாளில், மனித இனம் போரில் மாண்டு கொண்டிருப்பது பற்றிப் பெரும் துக்கத்துடன் பேசியதாக சி.மோகன் எழுதியிருப்பதை
வாசித்த நாழியில் சற்றுநேரம் சகலமும் உறைந்துவிட்டது. சிவனேயென அமர்ந்துவிட்டேன்.
4. க்ரியா
ராமகிருஷ்ணன்:
‘க்ரியா‘
என்கிற பதிப்பக உரிமையாளர். மேதமை கொண்டவர். தமிழில், நவீன இலக்கியப் படைப்புகளை வாசிக்க பரவலான வாசகர்கள் இல்லாத காலத்தில் (சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்) மிக உன்னதமான படைப்புகளை/ உன்னதமான படைப்பாளிகளைக் கொண்டு புத்தகங்களைப் பதிப்பித்தவர். இதே அளவிலான அல்லது இன்னும் தீவிர
சிரத்தையோடு பதிப்பகங்களை நடத்தியவர்களும் அன்றைக்கு இருந்தனர். அவர்களில் ஒருவர் ‘வாசகர் வட்டம்’ என்கிறப் பதிப்பகத்தை நடத்திய லெட்சிமி கிருஷ்ணமூர்த்தி. இவர் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் அரசியல் குருவான ‘தியாகி’ சத்திய மூர்த்தியின் மகள்.
‘க்ரியா’,
தமிழின் நவீன இலக்கியப் படைப்புகளை மட்டுமல்லாது, ஆங்கிலம்/ ஜெர்மன்/ பிரான்ஸ் ஆகிய பொழிகளில் வந்த சிறந்த படைப்புகளை தமிழில் மொழிமாற்றம் செய்து வாசகர்களின் தேடலை எளிதாக்கிய பதிப்பகம். பிரான்ஸ் எழுத்தாளர் ஒருவரின் ‘குட்டி இளவரசன்’ மற்றும் காஃப்காவின் ‘விசாரனை’ போன்றவை க்ரியாவின் முயற்சியால் தமிழில் வெளிவந்ததை சிறப்பித்தே சொல்லவேண்டும். ‘மௌனி கதைகள்’, சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே:சில
குறிப்புகள் / அவரது கவிதைத் தொகுப்பான ‘நடுநிசி நாய்கள்’, சார்வாகனின் ‘எதுக்குச் சொல்றேன்னா…’ சிறுகதைத் தொகுப்பு, தலித் எழுத்தாளரான இமயத்தின் நாவல்கள், க்ரியாவின்
‘தற்காலத் தமிழ் அகராதி’ முதலியனவும் ‘க்ரியா’ பதிப்பகத்தின் கொடைகள்.
5. டேவிட்
கல்மன்:
வெளிநாட்டுப்
பதிப்பகமான ‘பெங்குவின் பதிப்பகத்தின்’ இந்திய மேலாளர்.
6. அபிசிப்
ராமன்:
இவரைப்பற்றி
பெரிதாக எதுவும் தெரியாது. எனக்குத் தெரிந்தவரை… இலக்கியத்தின் மீது ‘மௌன ஆர்வம்’ கொண்டவர். இவரையொத்த, மௌன ஆர்வம் கொண்ட பலர் நவீன இலக்கிய வட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை சந்தித்தும் இருக்கிறேன். அபிசிப் ராமன், தமிழின் சில பல ஆக்கங்களை ஆங்கிலத்தில்
கொண்டு சேர்க்க விரும்புபவராக செயல்படுபவர் என அறிகிறேன். பத்து
வருடங்களுக்கு முன்னால், தமிழில் சில நல்ல கவிதைகளை தேர்ந்தெடுத்து இவர் அதனை ஆங்கில மொழிப்பெயர்ப்பாக கொண்டுவர முயன்றபோது, அவரின் தேர்வுக்கு உள்ளான கவிதைகளில் ஒன்றாக என்னுடைய ‘மேடை’ என்கிற கவிதையும் இருக்க, எனக்கு கடிதம் எழுதி தெரிவித்த பின்னரே மொழிமாற்றம் செய்தார். பின் அந்த ஆங்கிலத் தொகுப்பு வந்தபோது அதில் என் கவிதையும் இருந்தது. மேடை… நம் அரசியல் அவலங்களைச் சாடும் கவிதை. ரொம்பவும் சாதாரண, சராசரியான கவிதை!
7. சி.மோகன்:
இடதுசாரி
சிந்தனையுடையவர். இவர் எழுதி, குமுதத்தில் வந்த தொடர்கதை ஒன்று, பிரபலமானது. சிறைச்சாலை/ கெடுபிடி/ தண்டனையின் வலி/ தூக்குமேடை/ போன்ற விஷயதானங்களை உள்ளடக்கிய தொடர் அது. தலைப்பு மறந்துவிட்டது. ஜி. நாகராஜனுடன் இவருக்கு நட்புரீதியான இப்படியொரு
தொடர்பு என்பது என்னளவில் புதிய செய்தி.
*
அவ்வளவுதான்.
அடுத்து
சி.மோகனின் பேச்சை வாசிக்கலாம்.
– கநாசு.தாஜ்
***
ஜி.
நாகராஜன் – கடைசி தினம்!
-சி.மோகன்
அனைவருக்கும்
வணக்கம்.
என்
நெடுநாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறியிருக்கும் நாள் இது.
எஸ்
சம்பத்தின் ‘இடைவெளி”, ப.சிங்காரத்தின் ‘புயலிலே
ஒரு தோணி’, ஜி. நாகராஜனின் ”நாளை மற்றுமொரு நாளே’ ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்குமென்ற என் நம்பிக்கையை எழுத்திலும் உரையாடல்களிலும் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.
இன்று
ஜி.நாகராஜனின் பிரதான படைப்பான ‘நாளை மற்றுமொரு நாளே’, அபிசிப்ராமனின் மொழிபெயர்ப்பில் பெங்குவின் வெளியீடாக வந்திருப்பது ஒரு விசேஷமான நிகழ்வு. மொழி மற்றும் கலை இலக்கிய கலாச்சர தளங்களில் தீவிரப் பற்றுதலோடு ஆழ்ந்த அறிவோடும் தீரா தாகத்தோடும் செயலாற்றிவரும் கல்மனும் க்ரியா ராமகிருஷ்ணனும் இணைந்து இம்மொழிபெயர்ப்பை
‘எடிட்’ செய்து இந்நூல் வெளிவந்திருப்பது நம்முடைய பெருமிதங்களில் ஒன்றாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.
க்ரியா
ராமகிருஷ்ணனின் கைமந்திரம் இதில் சேர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாகிறது. ஒருசெயல் அதன் நிகழ்த்தும் மாயம் ஓர் அபூர்வவிந்தை. நவீனதமிழ் இலக்கிய முகத்தில் பொலிவு கூடியிருக்கும் இந்நாளில் அதை சாத்தியமாக்கிய அபிக்கும், டேவிட்கல்மனுக்கும், ‘க்ரியா’ ராமகிருஷ்ணனுக்கும், பெங்குவின் நிறுவனத்தாருக்கும் நம் அனைவர் சார்பாகவும் என் நன்றியையும்
வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜி.
நாகராஜனைப் பற்றிப் பேசுவதும் அவருடைய எழுத்தைப் பற்றிப் பேசுவதும் வேறு வேறானவை அல்ல. நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித் தவர் ஜி. நாகராஜன். அதுவரையான தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள்
வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல
நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழும் உலகமது.
தனிமனித
இயல்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளில் வாழ்வின் அழகு பூரணமாக விரிவடைவதைக் கொண்டாடும் முதல்
தீர்க்கமான குரல் ஜி. நாகராஜனுடையது. சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிராதய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து யந்திரரீதியான இயக்கத்தைக் கட்டமைத்திருக்கின்றன. இந்நிலையில், வாழ்வின் மீதான சகல பூச்சுகளையும் வழித்துக் துடைத்து, வாழ்வை
நிர்வாணமாக நிறுத்தி அதன்
இயல்பான அழகுகளிலிருந்து தனதான தார்மீக அறங்களைப் படைத்திருக்கும் கலை மனம் ஜி. நாகராஜனுடையது.
பூக்களில்
சவ விகாரங்களையும் நிர்வாணத்தில் உயிர்ப்பின் அழகையும் கண்ட படைப்பு மனம் இவருடையது. விளிம்புநிலை மனிதர்களிடம் சுபாவமாக இயல்புணர்வுகள் மொக்கவிழ்வதைக் கண்டதும் அவ்வுலகை அற்புதமாகப் படைப்பித்ததும்தான் ஜி. நாகராஜனின் தனித்துவம். இதன் அம்சமாகவே விலைப்பெண்கள், அத்தான்கள்,
உதிரிகள் இவருடைய படைப்புலகை வடிவமைத்தனர்.
நவீன
தமிழ் இலக்கியப் பரப்பில் ஜி. நாகராஜனின் வருகை துணிச்சலான எழுத்து என்பதிலேயே மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துணிச்சல் மனிதன் குறித்தும் சமூகம் குறித்தும் காலம் குறித்துமான அவருடைய அவதானங்களிலிருந்தும் பார்வையிலிருந்தும் வெளிப்பட்டிருக்கிறது. அதிர்ச்சிக்காகவோ கிளர்ச்சிக்காகவோ பரபரப்புக்காகவோ எழுத்தில்காட்டிய துணிச்சல் இல்லை இது. வாழ்வையும் எழுத்தையும் வெகு சுபாவமாக, மனத்தடைகளோ, இறுக்கங்களோ, ஒழுக்க நியதிகள் சார்ந்த பதற்றங்களோ இன்றி அணுகியிருப்பதில்
விளைந்திருக்கும் கலைத் துணிச்சல்.
ஒவ்வொரு
காலமும் வாழும் நெறிகளை விதிகளாக வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. அதேசமயம் மீறல்களும் முரண்டுகளும் போராட்டங்களும் அவ்விதிகளுக்கெதிராக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த மோதல்களின் தொடர்ச்சியாகத்தான் பழையதை மேவிப் புதிய காலமும் புதிய விதிகளும் உருக்கொள்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தி திரைக்காவியமான ‘மொஹல் ஏ ஆஸம்’ படத்திலிருந்து
ஒரு காட்சி:
அனார்கலி
மீது கொண்ட எல்லையற்ற காதலுக்காக அவளை மீட்கும் பொருட்டும் அடையும் பொருட்டும் அரச பதவியை உதறிவிட்டு, தன் தந்தை அக்பருக்கு எதிராக யுத்தம் மேற்கொள்கிறான் சலீம். அக்பரின் தூதுவராக சலீமிடம் வருகிறார் ஓர் அமைச்சர். அவர் சலீமிடம் ‘அரச பதவியைத் துறந்துவிட்டு எனக்கும் நாட்டுக்கும் எதிராக யுத்தம் தொடங்குமளவுக்கு சலீமை ஆட்டுவிக்கும் அனார்கலி அப்படியொன்றும் அழகாகவும் இல்லையே’ என்று அக்பர் வருத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார். அதற்கு சலீம் சொல்கிறான்; ‘சலீமின் கண்களால் பார்க்கச் சொல்.’
ஜி.நாகராஜனின் அருமையை உணர சமூக மதிப்பீடுகளின் கண்கள் கொஞ்சமும் உதவாது. அவை சமூக நெறிகளைக் காக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அதிகாரத்தின் கண்கள். அதாவது, அக்பரின் கண்கள். இயல்புணர்ச்சிகளை நேசிக்கும் கண்களுக்கு மட்டுமே ஜி. நாகராஜனுடைய வாழ்வும் எழுத்தும், வசீகரமும் அழகும் கொண்டதாக வெளிப்படும்.
என்
17ஆவது வயதில் ஜி. நாகராஜனை ஓர் லட்சிய ஆண்மகன் தோற்றத்தில் நான் அறிந்திருக்கிறேன். உடற்கட்டும் வனப்பும் மிடுக்கும் கூடிய பேரழகன். அப்போது நான் மாணவன். அவர் கணித ஆசிரியர். தூய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நடுவிரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட், சில வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அவருடைய கடைசி சில ஆண்டுகளில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. உடல் நலிந்து, கசங்கிய அழுக்கு வேட்டி ஜிப்பாவோடும், கடைசி நாட்களில் கைகளில் சொறியோடும் அவர் அலைந்து திரிந்த காலம் பொழுதை கஞ்சா போதையில் கடத்திய காலம். இக்காலத்தில் அவரை ஓர் எழுத்தாளராக அறிந்து அவர்மீது மதிப்பு கொண்டிருந்தத நானும் எழுதத் தொடங்கியிருந்தேன். அவருடைய வாழ்வின் கடைசி நாள் பற்றி மட்டும் சில விஷயங்களைக் குறிப்பிட்டு இப்பேச்சை முடிக்கிறேன்.
ஒருமுறை
‘சாவும், அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போதே வரும்’ என்றார் ஜி. நாகராஜன். சாவை எதிர்கொள்ள அவர், தன்னைத் தயார்படுத்திக் கொண்ட தருணமும் வந்தது. எவ்வளவோ முறை மருத்துவமனையில் சேரும்படி வற்புறுத்திய போதெல்லாம் மறுத்த அவர், மரணத்திற்கு இரண்டு நாள் முன்பு, அவராகவே முன்வந்து தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
1981 பிப்ரவரி-18ம் தேதி காலை
அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எல்லா பரிசோதனைகளும் முடித்து வார்டில் சேர்த்துவிட்டு மதியம் 2 மணிபோல் பிரிந்தபோது, ‘கஞ்சா ஏதும் உபயோகிக்க வேண்டாம். வெளியில் கறுப்புப்படியும்படி ஆகிவிடக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டேன். தன்னிடம் சிறு பொட்டலம் இருப்பதாகவும் டாய்லெட்டில் வைத்து ரகசியமாக உபயோகித்துக் கொள்வதாகவும் கூறினார். ‘சாயந்தரம் வரும்போது போட்டுக்கொண்டு வந்து தருகிறேன் இரவு டாய்லெட்டில் உபயோகித்துக் கொள்ளுங்கள்’ என்றதும் என்னிடம் அதைக் கொடுத்துவிட்டார்.
மீண்டும்
சாயந்தரம் 5 மணி போல் நண்பர் சிவராமகிருஷ்ணனும் நாணும் அவரைப் போய்ப் பார்த்தோம். நான் சிகரெட்டில் கஞ்சாவைப் போட்டுக்கொண்டு போயிருக்கவில்லை. ‘போடத் தெரியவில்லை’ என்று சிகரெட் பாக்கெட்டையும் கஞ்சா பொட்டலத்தையும் அவரிடம் கொடுத்தேன். பேசிக் கொண்டேயிருந்தார். மனித இனம் போரில் மாண்டுகொண்டிருப்பது பற்றிப் பெரும் துக்கத்துடன் பேசினார். இடையில் டாய்லெட் போக வேண்டுமென்றார். எழுந்து நடக்க வெகுவாக சிரமப்பட்டார். டாய்லெட்டில் அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாளமுடியாத அவஸ்தை. கழிவிரக்க வசப்பட்டவராக, ‘கடவுளே, என்னை சீக்கிரம் அழைத்துக்கொள்’ என்று வாய் விட்டுக் கதறி அழுதார். திரும்ப வந்து படுக்கையில் படுத்துக் கொண்டதும் குளிர் அவரை மிகவும் உலுக்கியது. “குளிருது, ரொம்பக் குளிருது” என்றவர் “சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்தக் குளிர் அடங்கும்” என்றார்.
மறுநாள்
காலை , பிளாஸ்கில் காப்பியோடு போனபோது அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். ஆனால் அவர் இறந்து விட்டிருந்தார். அவர் ஜிப்பா பாக்கெட்டில் சிகரெட் பாக்கெட்டும் சிறு பொட்டலமும் உபயோகிக்கப்படாமல் அப்படியே இருந்தன. என் குற்றவுணர்வுகளில் ஒன்றாக அந்தப் பொட்டலம் இன்னமும் நினைவில் இருந்துகொண்டிருக்கிறது.
* ஜி.
நாகராஜனின்
‘நாளை
மற்றொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான
‘Tomorrow One more Day’ நூல்
வெளியீட்டில், சி.மோகன் பேசியது.
பென்குயின்
பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
***
நன்றி:
குமுதம் தீராநதி/ அக்டோபர்-2010
தட்டச்சும்-வடிவமும்: கநாசு.தாஜ்
சிறுகதைகள்
மனித வாழ்வின் தருணத்தை மின்னலாக வெளிச்சமிடுபவை. சிறுகதைகளின் தொடக்கம் ஜாதகக்கதைகள், விவிலியம் ஈசாப் கதைகளிலிருந்து தோன்றினாலும் அமரிக்கா, இரஸ்சியாவில் 19ஆம் நூற்றாண்டிலே இலக்கியமாக வரையறை செய்யப்படுகிறது. சிறுகதைகளை மதிப்பிடுவதில் உள்ளடக்கம், மொழி, அமைப்பு, என்பவற்றுடன் நம்பகத்தன்மை, சர்வதேசியத்தன்மை, வாசிப்போரது உள்ளத்தில் உருவாக்கும் தாக்கம் எனப்பல கூறுகள் அடங்கியது
ஜி
நாகராஜனின் சிறுகதைகள் அவரது நாவல்கள் போல் உள்மன உணர்வுகளையும், கனவுகளையும் வெளியே கொணர்ந்து மனிதர்களின் மனதை கூறுபோட்டு மேசையில் காட்சிப்படுத்தும். அவருடைய சிறுகதைகளைக் கூர்ந்து கவனித்தால் சில விடயங்கள் புலப்படும். சமூகத்தின் கலாச்சாரம், பண்பாடுகள் என்பனவற்றை அந்த சமூகத்திலிருக்கும் மனிதர்களை தனிமைப்படுத்தி பார்க்கும்போது நெல்லிக்காய் மூட்டை சிதறுவதுபோல் சிதறிவிடும். கலாச்சார மூடுபனிகள் எவ்வளவு போலியானவை என்பதை வெளிக்காட்டும்.
காப்காவின்
(Kafka) சிறந்த கதை கன்றி டாக்டர்(Country Doctor). கடமையுணர்வுள்ள அந்த டாக்டர் ஒரு நோயாளியை இரவில் பார்க்கப் புறப்படும்போது அவரது குதிரைகள் இறந்துவிட்டன. ஆனால் தொழுவத்தில் இரண்டு சிறந்த குதிரைகள் ஆச்சரியப்படும் விதத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த குதிரைகளைப் பராமரிப்பவன் டாக்டரோடு வரமறுத்ததும் அல்லாமல் டாக்டரின் விட்டின் உதவியாளரான ரோசா என்ற இளம் பெண்ணின் கன்னத்தில் பலவந்தமாக கடித்தும் வடுகிறான். ரோசா அவனுக்குப் பயந்து டாக்டர் வீட்டுக்குள் ஓடிச்சென்று கதவை தாளிடுகிறாள்.
டாக்டர்
நோயாளியை பார்க்கப் போனபோது குதிரையை பராமரிப்பவன் ரோசாவை பாலியல் வன்தாக்குதல் செய்வது மனதில் நிற்கிறது. இடுப்பில் பெரிய காயத்துடன் படுத்திருக்கும் சிறுவனைப்பார்க்கும்போது அவர் ரோசாவை நினைப்பதால் சிறுவனின் காயம் ஆரம்பத்தில் கண்ணுக்குத் தெரியவில்லை. பின்பு அந்தக் காயம் அவனது இடுப்பில் கையளவு பெரிதாக பெரிய ரோசா வண்ணத்தில் புழுக்கள் நெளியும் புண்ணாகத் தெரிகிறது. வைத்தியரால் எதுவும் செய்யமுடியவில்லை. காரணம் அவரால் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை
‘ மருந்து
எழுதுவது சுலபம். ஆனால் நோயாளியை புரிந்து கொள்வது கடினம்’
‘ நான்
இங்கிருக்கும்போது எனது உதவியாளரான ரோசா அழிக்கப்படுகிறாள்’
மேற்கூறியவை
டாக்டரின் மன எண்ணங்கள்.
நோயாளியிடம்
‘என்னால், உன்னைக் காப்பாற்ற முடியாது.’ என்கிறார்
அக்கால
வழக்கப்படி நோயாளியை காப்பாற்றத் தவறிய டாக்டர் தண்டனைக்குள்ளாகிறார். டாக்டரின் உடைகளைக் களைந்து நோயாளியின் கட்டிலில் அருகே படுக்கவைக்கிறார்கள்.
நோயாளி
டாக்டரிடம், ‘உன்னால் எனக்கு உதவ முடியவில்லை போதாக்குறைக்கு நான் இறக்கும்போது நிம்மதியாக இறக்க முடியாதபடி எனது படுக்கையில் படுத்து அந்த இடத்தையும் நீ நெருக்குகிறாய்.’ எனச்சொல்கிறான்.
இறுதியில்
அங்கிருந்து நிர்வாணமாக பனிபடர்ந்த இடங்கள் ஊடாக டாக்டர் தப்பியோடுகிறார்
இந்தக்
கதையில் உண்மை எது நினைவு எது என்பதைப்பார்த்தல் கடினம். யதார்த்தம் என்பது வார்த்தைகள் காற்றில் மிதந்து அந்தந்த இடங்களின் வடிவத்தை பெறுகிறது.
இதே
மாதிரியான ஒரு சிறுகதை ஜி நாகராஜன் எழுதிய
டெர்லின் ஷேர்ட்டும் வேட்டியும் அணிந்த மனிதர்.
விபசார
விடுதியில் மற்றப் பெண்கள் விடுமுறையில் ஊருக்கும்போன நிலையில் விடுதியில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் தேவயானியின் பற்றி விபரமாக சித்திரிக்கப்படுகிறது. கயிற்றில் தொங்கி தற்கொலை செய்வதற்காக அவள் முயற்சிக்கும்வேளையில், வெளிக்கதவு தட்டப்படுகிறது. கதவைத் திறந்தபோது அவளது அத்தான்(மாமா)வருகிறார். அவர் விடுதிக்குள் பாகவதர் தலைமயிர் தோற்றத்துடன் டெர்லின் ஷேர்ட்டும் எட்டுமுழவேட்டியும் அணிந்த ஒருவரை அழைத்து வருகிறார்
வந்தவர்
சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவளது முந்தானையை விலக்கச் சொல்லி மார்பைப் பார்க்கிறார். தேவயானி அவளைத் தொட முயன்றாலும் அவர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அவளைத் தொடாது இருந்துவிட்டு ஐந்து ரூபா கொடுத்துவிட்டு அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்று விட்டார்.
மீண்டும்
அத்தான் வந்தபோது அவரைப் பற்றி கேட்கிறாள். அத்தான் தான் அப்படி ஒருவரையும் கூட்டி வரவில்லை எனச்சொல்கிறார். இன்று பொலிஸ்ரெயிட் இருப்பதாக தகவல் வந்தது என்கிறார்.
அவளோ
அந்த மனிதர் தந்த ஐந்து ரூபாய் நோட்டைத் தேடுகிறாள். அதுவும் கிடைக்கவில்லை
இந்தக்
கதையில் மிகப் பெரிய உண்மை. தேவயானி; தற்கொலைக்கு தயாராகிய நேரத்திலும் வாழத் துடிக்கிறாள் என்பதாகப் புலப்படுகிறது. தனக்கு ஏதாவது ஒரு சிறு ஒளிக்கீற்று கிடைக்காதா என ஏங்குகிறாள். வேறு
வேலைக்காக இல்லை, குடும்பப் பெண்ணாக வாழ்வதற்கும் அவள் ஏங்கவில்லை. அதற்கும் மேல் சென்று யாராவது தன்னை தொடாத ஆண்வருவானா என தேடுகிறாள்.
தனது
உள்ளத்து உணர்வுகளை ரசிப்பவன் கூடத்தேவையில்லை. தனது அழகை இரசிக்கும் கண்ணியமானவனைத் தேடுகிறாள்.
அவள்
நினைவில் தேடியவனின் உடைகள் விசித்திரமானவை. ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் ஒரு ஆணின் வடிவம்; உருவகிக்கப்படுகிறது.
தமிழில்
சிறுகதைகள் கவிதை வரிகளாக இருக்கவேண்டுமென நினைப்பவர்களுக்கு இந்தக் கதைகளில் எழுதாக இடைவெளிகள்தான் இலக்கியம் என்பதை புரியவைக்கிறது. எழுத்தாளன் தனது வாழ்க்கைச் சம்பவங்களையோ அல்லது அனுபவத்தையோ எழுதுபவன் அல்ல. மற்றவர்களின் மனஎண்ணங்களில் மூழ்கி முத்தெடுப்பவனே சிறந்த இலக்கியங்களை படைக்கமுடியும் என்பதற்கான சாட்சி இந்தச் சிறுகதை
அணுயுகம்
என்ற கதை ஒரு யப்பானிய சிந்தனைவாதியான டாக்டரைப் பற்றியது.
இந்தக்
கதை நாகசாகியில் குண்டுவிழுந்த பின்பு எப்படி மனிதர்களின் மனங்களைப் பாதித்தது என்பதை சித்திரிக்கிறது.
அணுகுண்டு
போட்டபின்பு கதிரியக்கத்தால் குழந்தைகள் விகாரமான பிண்டங்களாக பிறப்பதால் காதலித்து மணந்த தம்பதிகளின் உளப்போக்கை காண்பிக்கிறது.
காதலித்த
மனைவி மற்றும் டாக்டர் இருவரும் தமக்கு குழந்தை தேவையில்லை எனத்தீர்மானித்த பின்னர், டாக்டர் வேலைக்கு சென்றதும் மனைவி மற்றைய வாலிபர்களுடன் சந்தோசமாக விருந்துகள் கேளிக்கைகள் என காலம் கழிக்கிறாள்.
இதைச்சகிக்க முடியாத அந்த டாக்டர், அவளைக் கர்ப்பிணியாக்கியதும், அவள் கேளிக்கைகளை மறந்து தாய்மைக்குத் தயாராகிறாள். ஆனால் குழந்தை பிண்டமாகப் பிறக்கிறது.
இதுவரையில்
தனது வேலைத்தலத்தில் தாதியுடன் கண்ணியமாக நடந்த டாக்டர் அந்தத்தாதியை உடலுறவுக்கு அழைக்கிறார்.
“இது
அணுயுகம் ஆண்களைக் குஷிப்படுத்துவதுதானே பெண்களது வேலை. இனிப் பத்துமாதம் சுமக்க வேண்டாம்.’
‘குழந்தையே
இல்லாதபோது புருசன் யார்? தகப்பன் யார்?’
இந்தக்
கதையில் அறம், மனச்சாட்சி என்பன சூழ்நிலையைப் பொறுத்து அமைகின்றன. மனிதன் ஆழ்மனத்தில் விலங்கு. அந்த நிலைக்கு அவன் தள்ளப்படும்போது மீண்டும் அவனது இயல்பு தலை தூக்குகிறது. அணுகுண்டு நாகசாகியில் மக்களை கொல்லுவதோடு நிற்கவில்லை, சமூகம் காலம் காலமாக உருவாக்கிப் பாதுகாத்த விழுமியங்களையும் மாற்றுகிறது. இந்தக்கதை மனித மனங்களை குடைந்து பார்ப்பதோடு, எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்பதையும் சூசகமாக உணர்த்துகிறது. இந்தக் கதை எழுதப்பட்டகாலத்தை நினைக்கும்போது கதையின் முக்கியத்துவம் மேலும் உயருகிறது.
மிஸ்
பாக்கியம் என்ற கதை முதிர்கன்னியாக தனிமையில் வாடிய பெண்ணின் கதை.
இருபால்
உறவை எடுத்துக் கூறியதுடன் அவள் ஒரு மாணவியை கொலை செய்வதும் பின்பு தான் தற்கொலை செய்வதுமான கதை.
மாணவியான
ஒருத்தி தனது பருவகாலத்தில் பக்கத்து வீட்டு வயதானவருடன் உறவு கொள்ளுவதிலிருந்து அவளது பாலியல் பருவம் ஆரம்பமாகிறது. இங்கே பெண்ணின் விருப்பத்துடனே உறவு நடைபெறுகிறது. வழக்கமான தமிழ்ச்சமூக சூறையாடல் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் யதார்த்தமான உறவு.
உண்மையில்
சொல்கிறேன். உன் கழுத்தில் முத்தணும் போல் எனக்கு எத்தனை தரம் தோன்றி இருக்கிறது தெரியுமா? – இது நண்பி சாரதா.
பிறகு
தூக்கம் வராது ஏதாவது சேஸ்டைகள் செய்து தன்னைத்தானே ஆயாசப்படுத்திக்கொண்டு உறங்குவாள் . இப்பொழுதும் அவளுக்கு அந்த உணர்ச்சி ஏற்பட்டது
இங்குதான்
எஸ். பொ. வின் (சடங்கு) வார்த்தைகளால் காமத்தை சொல்லாமல் வாசிப்பவர்களிடம் உணர்த்தி விட்டுவிடும் நாகராஜனது இலக்கிய மேன்மை தெரிகிறது.
இந்தக்கதைப்
பொருள் தமிழ் சமூகத்தில் இப்பொழுதும் விலக்கப்பட்டதுதான். ஆனால், சமூகத்தில் நடக்காத விடயம் அல்ல. ஆனாலும் நாகராஜன் காமத்தை தென்னம் பொத்திக்குள் உள்ள கதிராக வைத்து அலங்கரிக்கிறார்.
யாரோ
முட்டாள் சொல்லிய கதை
பொருத்தமில்லாத
கல்யாணத்தில் அகப்பட்ட மனைவி பாக்கியத்திற்கு கணவன் மணியைப் பிடிக்கவில்லை. அவன் லூசு மணி என்ற பட்டப் பெயருள்ளவன். அவனை மனைவி மட்டுமல்ல ஊராரும் கேலிக்குரியவனாக்குகிறார்கள்.
அவள் பணத்திற்காக சண்டியன் பரமன் ஊடாக பல உறவுகளில் ஈடுபடுகிறாள்.
பலமுறை சொல்லியும் பாக்கியம் கேட்காததால் மணி பரமனைக் கொலை செய்கிறான். குழந்தை அழகர் மேல் மணிக்கு அளவு கடந்த பாசம் அதேபோல் அழகருக்கும்; மணி மீது தாயைவிடப் பாசம்.
பரமனது
கொலை ஒரு துப்பறியும் கதை வடிவில் செல்கிறது. பொலிஸ் மணியைப் பிடித்தபோது ‘என்மவன்’ ‘என்மவன்’ என அழகரை நோக்கி
கதறுகிறான். அப்பொழுது பாக்கியம் ” கிறுக்கு அழகர் உன் மவனில்லை, உனக்கு கழுத்தை நீட்டினேனே அன்னைக்கு என் வவுத்திலே ஒரு மாசம். லட்சுமணதேவருக்கு கருத்தரித்தேனாக்கும் இனி எந்த …. மவனுக்கும் கருத்தரிக்கமாட்டேன்” என்கிறாள்.
வழக்கமாக
சிறுகதையாசிரியர்கள் இந்த முரண்நகையுடன்தான் கதையை முடித்திருப்பார்கள். ஆனால், மணி ஊராரிடமும் பொலிசிடமும் தப்பி ஓடமுயன்று இளமைக்காலத்தில் தான் கண்ட சோளக்காட்டை மனதில் தேடி விழுகிறான். விழுந்து கிடந்தபடி பத்துவயதில் தான் ஏறிய தென்னை மரத்தை நினைக்கிறான்.
மணி
கொலைகாரனாக வாசகர் மனதில் வரவில்லை. அப்பாவிச் சிறுவனாகிறான்.
நினைவுகள்
நேர்கோட்டில் வருவதில்லை. பொலிஸ் பிடித்தாலும் அவனது நினைவுகளை சிறைப் பிடிக்க முடியாது. அப்பாவியான மணியின் கதை தொடரும் கதை என்ற என்ற அழகிய யதார்த்தம் தெரிகிறது.
இது
சிறுகதையாக இருந்தாலும். பரமன் – மணி மற்றும் பாக்கியம் ஆகிய மூவரும் பூரணமான பாத்திரங்களாக அறிமுகமாகின்றனர். மணியின் வாழ்க்கை பத்துவயதில் இருந்து விவரிக்கப்படுவதாலும் பல சம்பவங்கள் உள்ளடக்கப்படுவதாலும்
நாவல்போல் விரிந்து இருக்கிறது இச்சிறுகதை.
மேற்கூறிய
நாலு கதைகளில் பாத்திரங்களின் பெயர்களை மாற்றினால் உலகத்தின் எந்தக் கண்டத்து மக்களுக்கும் பொருத்தமானது. அவை சர்வ தேசியத்தன்மை கொண்டவை. எழுத்தாளர் ஜி . நாகராஜன் தமிழ்நாட்டு அல்லது இந்திய தன்மைகளுக்கு அப்பால் நின்று எழுதியவர். அவரது எழுத்துகள் மிகவும் தனித்தன்மையானவை.
அவரது
கதைகள் அனைத்தும் இன மத சாதி
எல்லைகளைக் கடந்தவை. நாகரிகம் பண்பாடு என்பவற்றைக் கடந்து உள்ளத்து உணர்வுகளை பண்பட்ட புதை பொருளாய்வாளர் எடுப்பதுபோல் எடுத்துள்ளார். இன்னொருவிடயம் – இங்கே தமிழ்நாட்டு எழுத்துகளில் ஆழமாக பெண்மையின் உணர்வுகளை வெளிக்கொணர்ந்த எழுத்தாளர்கள் மிகக்குறைவு. சமூகத்தில் ஐம்பது வீதமானவர்களின் உணர்வுகளை ஊடுருவாமல் இலக்கியம் முழுமை பெறாது. அப்படியாக எழுதிய ஒருசிலரில் முதன்மையானவராக எனக்கு ஜீ . நாகராஜன் தெரிகிறார்.
இந்தச்
சிறுகதைகளில் முக்கிய பாத்திரங்களாகிய தேவயானி டாக்டர் மிஸ் பாக்கியம் லூஸ் மணி என்பவர்கள் பூரணமான பாத்திரங்கள். கவனமாக வாசித்த பின்பு அவர்கள் நம்மனதில் பலகாலம் நிற்பார்கள்.
புறச்சூழலுக்கும்
உடல் அமைப்பு வர்ணனைகளுக்கும் இடம் கொடுக்காமல் அக உணர்வுகளையும் அவர்களது
செயற்பாடுகளையும் மட்டுமே எடுத்து பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறது. சிறுகதைகள்; சுரியல் ஓவியம் போன்று நகருகிறது. இது வாசகர்கள் தங்களுக்கான பாத்திரத்தை கற்பனை செய்வதற்கு வழிவகுக்கிறது.
மேற்கூறிய
நான்கு கதைகளைவிட நறுக்கான நகைச்சுவையான பல கதைகள் இந்தத்
தொகுப்பில் உள்ளன. தமிழ் இலக்கியத்தில் மறுவாசிப்பு செய்யப்படவேண்டிய எழுத்தாளர் ஜீ.நாகராஜன்.
நாளை
மற்றுமொரு நாளே -ஜி. நாகராஜன்
வலையேற்றியது:
RAMPRASATH HARIHARAN | நேரம்:
4:54 AM | வகை: அறிமுகம், கதைகள், ஜி. நாகராஜன்
ஜி.
நாகராஜன்
நாளை
மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி..
கோவிலில்
நின்றுகொண்டிருந்தான்
அவன். அவன் பார்த்துக் கொண்டிருந்த சிலையின் முகத்தில் அம்மாவின் களை தட்டிற்று. முகம் அவனைப் பார்த்து ஒரு விதமாகச் சிரித்தது; கண்களில் துளிர்த்த நீரைப் பார்த்தால் அழுவது போலவும் இருந்தது. சிலையின் மார்பிலிருந்து ஏதோ ஒன்று உருண்டு வழிந்து தரையில் பொத்தென்று விழுந்தது. ஆனால் மறுகணம் அதே ஒலி ஒரு ‘கேப்’ துப்பாக்கிபோல் அவன் காதுகளில் வெடித்தது. மூடிய கண்களுக்குள் ஒரு பிரகாசம். கந்தன் புரண்டு படுத்தான். மீனாவை அணைக்க வலது கையை இடதுபுறம் திருப்பினான். மீனா இல்லை. நினைவு வந்துவிட்டது. இலேசாகக் கண்களைத் திறந்து படுத்தபடியே நகர்ந்து திறந்திருந்த கதவைக் காலால் உதைத்தான். குடிசையினுள் இருந்த வெளிச்சம் குறைந்தது. பேச்சி வீட்டுக்குத்தான் மீனா போயிருக்கும். இந்தப் பேச்சி என்ன பொம்பளே ? மாரிப்பய போயி மூணு வருஷத்துக்கும் மேலே ஆவுது. இட்டிலி சுட்டு வித்திட்டிருக்கு. அதிலே என்ன கெடைக்கும் ? ஆமாம், பேச்சி இட்டிலி சுட்டு விற்றாள்; மீனா அவனோடு இருந்தாள்.
மீண்டும்
தூக்கம் வருவதாக இல்லை. படுத்தபடியே பிரயாசைப் பட்டு அரையளவுக்கு மூடி இருந்த கதவைக் காலாலே திறந்தான் கந்தன். குடிசையை ஒட்டி ஓடிய சாக்கடை ஓரம் முனிசிபல் தோட்டி தெருவைக் கூட்டிக்கொண்டிருந்தான். மணி ஏளுதான் இருக்கும். இன்னும் ரெண்டு மணி போகணும். ஒரு கையைத் தரையில் ஊன்றிக் கால்களை நீட்டியவாறே எழுந்து உட்கார முயன்றான் கந்தன். முதுகை வளைக்க முடியவில்லை; அப்படி வலி. “அம்மா” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே, முதுகை ஒரு மாதிரி நெளித்து எழுந்து உட்கார்ந்தான். கால்கள் நீட்டிக் கிடந்தன; இரண்டு கைகளும் பின்புறமாகத் தரையில் ஊன்றியிருந் தன. நேத்து அந்த வெறும் பயலுக்கு ஊத்தின முன்னூறு மில்லியை யாவது வச்சிட்டிருந்திருக்கலாம்; முளிச்ச நேரத்துலே போட்டா கொஞ்சம் தெம்பா இருக்கும். ஆமா, இது குடிக்கிறதுனாலே வர்ற வியாதியில்லே; குடியாததனாலே வர்ற வியாதி. வெறகுக் கடைக்குப் போகலாம்; ஜிஞ்சராவது கெடைக்கும். கஷ்டப்பட்டு ஒரு கையால் தலையணையைத் தூக்கிப் பார்த்தான். கை சொன்னபடி கேட்க
வில்லை; தலையணையை இலேசாகத் தள்ளிவிட்டுத் தந்தி அடிக்க ஆரம்பித்தது. மீண்டும் கையைத் தரையில் ஊன்றிக்கொண்டான். தேவைப்படாத ஒரு ஏப்பம். அதைத் தொடர்ந்து குமட்டல். குமட்ட லோடு இருமல். விலா எலும்புகள் முறிவதுபோல் இருந்தது. வாயி லிருந்து ஐம்பது மில்லி கோழை வழிந்து பனியனை நனைத்த பிறகு சிறிது நிம்மதி. சிறிது தெம்புங்கூட. வீராப்போடு ஒரு கையால் தலையணையைப் புரட்டினான். அதன் கீழ் ஒரு அழுக்கு இரண்டு ரூபாய்த்தாள் கிடந்தது. இன்னும் கா ரூபா வேணுமே!
எங்காச்சும் வச்சிருக்கும். மீண்டும் அதே வீராப்போடு எழுந்து நின்றான். வேட்டி நழுவவும், அதைச் சரிப்படுத்த முயலுகையில் தடுமாறி, இடது கைக்குப் பட்ட சுவரின் மீது தாங்கிக்கொள்ள முயன்றான். பிடி நிலைக்காது கீழே சரிந்தான். “அடத். . .” என்று வைதுகொண்டே, மீண்டும் சக்தி வரும் என்ற நம்பிக்கையோடு கண்களை மூடினான்.
“சாருக்கு
எங்கே தங்கல் ?”
“ஸ்ரீ
வள்ளி லாட்ஜ்.”
“ரூம்
நம்பர் ?”
“பனிரெண்டு.”
எங்கிட்டோ
பறந்துட்டு, எங்கிட்டோ நின்ன மாதிரி இருக்கு. கேப் துப்பாக்கி கணக்கா காதுலே வெடிக்குது. கண் கூசுது. கந்தன் கண்களைத் திறந்து பார்த்தான். காற்றில் நெளி நெளியாக உருவங்கள் அசைகின்றன. அலையலையாகச் சுழிக்கின்றன. இப்போதெல்லாம் அவற்றைக் கண்டு அவன் பயப்பட்டுக் கண்களை மூடாமல் மட்டும் இருந்தால் அவை தாமாகக் கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடும்.
உதறிக்கொண்டு
சுவரோரமாக எழுந்து உட்கார்ந்தான். மீண்டும் ஒரு கணத்துக்குக் கம்பி கம்பியாகச் சுழலும் அதே வடிவங்கள். எழுந்து நின்று, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுத் தன்னிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டான். இனி கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று அவனுக்குப் பட்டது. கால்கள்தான் கொஞ்சம் நடுங்கின, கடுத்தன. மெதுவாக நடந்து, மீனா சில்லரைக் காசுகள் வைக்கும் பிறையைத் துளாவினான். ஓரிரு எலிப் புழுக்கைகள் கைக்குப் பட்டன. எரிச்சலோடு கீழே உட்கார்ந்து, மீனாவின் துருப்பிடித்த துணி வைக்கும் பெட்டியைத் திறந்தான். அழுக்குத் துணிகளையும், தோய்த்து உலர்த்திய துணிகளையும் உதறி உதறி வெளியே எறிந்தான். அவ்வாறு எறியும்போது பெட்டியின் அடியிலிருந்து கரமுரவென்று ஒலி வெளிப்பட்டது. ஆவலோடு துணிகளைக் காலி செய்தான். பெட்டியின் அடியில் பெரிசும் சிறிசுமாக ஐந்தாறு காலிக் கண் ணாடிப் புட்டிகள் கிடந்தன. திடாரென்று அறை இருண்டது. பதறிப் போய் வாசற்பக்கம் திரும்பினான் கந்தன். பெட்டியின் மூடி ‘கிரீச்’சென்று கத்திக்கொண்டே அவன் கைகள் மீது விழுந்தது. “என்ன மச்சான், இப்படி பயந்துட்டாங்க ?” என்றாள் குடிசை வாயில் நிலையை இரண்டு கைகளாலும் பற்றி நின்றுகொண்டிருந்த மூக்கனின் மனைவி.
“இல்லே,
மீனா பெட்டியே கள்ளத்தனமாத் துளாவிட்டிருக்கேன். அதுதான் வந்திரிச்சோன்னு பயம்.” கந்தன் சாவதானமாக உட்கார்ந்து கொண்டான். அவன் முகத்தில் இப்போது கொஞ்சம் மலர்ச்சி. “ஏன் அங்கேயே நிக்கறே ?” என்று மூக்கனின் மனைவியை உபசரித்தான்.
தலையில்
பூவோடு, சற்றுப் புதிது என்று சொல்லக்கூடிய சேலை ரவிக்கையோடு, காலில் மெட்டி ஒலிக்க, மூக்கனின் மனைவி தனது முப்பத்தெட்டு ஆண்டுகளையும் பதினெட்டாக மாற்றிக்கொண்டு உள்ளே நடந்து வந்தாள். சட்டென்று குனிந்து, பாயிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்துக் கைக்குள் மறைத்து, இரண்டு கைகளையும் லாவண்யமாக இடுப்பில் அழுத்தி வலது காலை நொண்டுவதுபோல் வைத்து நின்றபடியே கொல்லென்று கந்தனைப் பார்த்துச் சிரித்தாள் அவள். கந்தன் அவளை ஆவலோடு பார்த்தபடியே “ரொம்ப அளகாச் சிரிக்கறயே ?” என்றான். “என் அளகுச் சிரிப்புக்குத்தானே இந்த அம்பளிப்பு இல்லையா ?” என்று கூறிக்கொண்டே, கையில் இருந்த ஒரு அழுக்கு இரண்டு ரூபாய்த் தாளை அவள் காட்டினாள்.
“அய்யோ,
எம்பணம். இன்னைக்கு காலைக்கு அதுதான்” என்று கதறிக்கொண்டு கந்தன் அவளிடமிருந்த பணத்தைப் பிடுங்க எழுந் தான். அவள் சிரித்துக்கொண்டே அவன் மீது பணத்தை வீசியெறிய வும், அது சரியாக அவன் கைகளில் விழுந்தது.
“சரி
உக்காரு, பேசுவோம்” என்றான் கந்தன்.
“ஏம்
மச்சான், இப்படிக் கால் நடுங்குது ?” என்று கேட்டுக் கொண்டே அவள் உட்கார்ந்தாள்.
“அது
அப்படித்தான் செல சமயம். மூக்கன் என்ன சவாரிக்குப் போயிருக்கா ?”
“ஆமாம்,
பொழுது சாஞ்சுதான் வரும்.”
“இல்லே,
ஒன்னு தோணிச்சு. நேத்து ஒரு கிராக்கி, கொஞ்சம் வயசு கூடவானாலும் பரவாயில்லே, உம்னு இல்லாம சிரிச்சுப் பிடிச்சி விளையாடற பிள்ளையா இருந்தா வேணூம்னான். எனக்கு ஒன் நெனைப்புத்தான் வந்திச்சு.”
“போங்க
மச்சான், என்னமோ காரியமா பேசுறீங்க, எனக்குத் தெரியாதா ?” என்று கூறிவிட்டு, பிறகு ஏதோ நினைவுக்கு வந்துவிட் டது போல் சிரிக்கத் தொடங்கினாள். “மச்சானோடே எப்பவும் ஒரே கூத்துத்தான்” என்பதையும் சேர்த்துக்கொண்டு, சிரித்தவண் ணமே, ஒரு கையால் தலைப்பூவைச் சரி செய்துகொள்ளப் பார்த்தாள். அவள் சிரித்த சிரிப்பில் பூவும் கலைந்து அவளது காதின் பின்னே ஏதோ வால் மாதிரி தொங்கிக்கொண்டிருந்தது.
“நீயும்
அளகாத்தான் இருக்கே. இல்லாட்டி மூக்கன் கட்டியிருப் பானா ?” என்றான் கந்தன்.
“அதான்
அண்ணைக்கு, நீ கொரங்கு மாதிரி
இருக்கே, ஒங்கிட்ட எவன் வருவான்னு சொன்னேயாக்கும் ?”
“வெறிச்சிலே
சொல்லியிருப்பேன்.”
“இப்ப
?”
“குடிக்கலேயே.”
“குடிச்சா
ஆம்புளேங்களுக்கு கெளவிகூடக் கொமரி மாதிரி தெரியூம்னு சொல்வாங்க.”
“ஆமா.”
“அப்ப
என்னெ மட்டும் குடிலே நீ ஏன் கொரங்குமாதிரி
இருக்கேன்னே ?”
“அதுவா
? உண்மை என்ன தெரியுமா ? மூக்கனுக்கும் எனக்கும் பத்து வருசப் பளக்கம். நான் அவனுக்குத் துரோகம் பண்ணலாமா ?”
“மீனா
மட்டும் என்னவாம் ? அதுக்கும் கண்ணாலமாயித்தானே இருக்கு ?”
“ஆமாம்.
ஆனா நா சம்மதிக்கிறேன், அது போகுது.
மூக்கன் சம்மதிப்பானா ?’
கந்தனை
ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே இலேசான புன்னகை யோடு, “தெரியாமத்தானே செய்யப்போறோம்” என்றாள் அவள். இதற்கும் உடனேயே கந்தன் ஏதாவது சமாளிப்புச் சொல்லி விடுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் கொஞ்சம் யோசனையில் இருந்துவிட்டு கந்தன், “உம், நீ சொல்றதும் சரிதான்.
ஒனக்கும் ஆசை இருக்காதா ?” என்றான்.
“ஏதோ
சிரிச்சுப் பேசி விளையாடற பிள்ளையா வேணூம்னுட்டு ஒரு கிராக்கி சொல்லிச்சீன்னியே” என்று தனது வெற்றிக்கு முத் தாய்ப்புத் தேட முனைந்தாள் மூக்கனின் மனைவி.
“அந்தக்
கிராக்கி எங்கேயும் ஓடிடாது. காலேலே எட்டு, ஒம்பது மணிக்கு அந்த அய்யர் சந்தக் கடைக்கிக் கறிகாய் வாங்க வருவாரு. அவரே நாளைக்கே பார்த்திடலாம். . . சரி மோகனா, நான் இப்ப வெளியே போகணும். ஒரு மூணு அவுன்ஸ் ஜிஞ்சர் அடிச்சாத்தான் எதுவும் செய்ய முடியும். கைலே ரெண்டு ரூபாதான் இருக்கு. ஒரு அரை ரூபா தா, பெறகு அட்ஜஸ்டு பண்ணிக்கலாம்.”
“அது
யாரு மோகனா, மச்சான் ?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் மூக்கனின் மனைவி.
“நீதான்
மோகனா. மூக்கனுக்கு மட்டுந்தான் நீ இனிமே ராக்காயி;
மத்தவங்களுக்கெல்லாம்
நீ மோகனாதான்” என்றான் கந்தன்.
“மோகனா”
என்று இழுத்துக் கூறிவிட்டு, இரண்டு கைகளாலும் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, ஏதோ மறந்தது நினைவுக்கு வந்து விட்டதுபோல் சிரிக்க ஆரம்பித்தாள் மோகனா என்ற ராக்காயி.
“ஆமா,
நான் கேட்டது என்ன ?” என்றான் கந்தன். சரியாக உட்கார்ந்து கொண்டு இடுப்பு முடிச்சை அவிழ்த்து, அதிலிருந்து எதையோ எடுத்து அதைக் கந்தன் கைக்குள் பெருமையோடு திணித்துவிட்டு, “என் கையிருப்பே இவ்வளவுதான்” என்றாள் ராக்காயி. கையில் திணிக்கப்பட்டது கேவலம் ஐந்து காசே என்றதைக் கண்டதும் கந்தனுக்கு அவளை அப்படியே கழுத்தை நெறித்துக் கொன்றுவிடலாமா என்றிருந்தது. அடுத்த நிமிடம் சட்டென்று திரும்பி மீனாவின் பெட்டியிலிருந்த காலிபாட்டில்களை எடுத்து மோகனா வின் முன் வைத்தான்.
“இந்தா
மோகனா, இதெயெல்லாம் இந்த முக்கு ராவுத்தர் கடேலே போட்டுட்டு வா” என்றான்.
“நல்ல
ஐடியாதான். மச்சானுக்கும் மூளே வேலை செய்யத்தான் செய்யுது” என்று சொல்லிக்கொண்டு, தனது கையால் கந்தனின் கன்னத்தில் செல்லமாகக் குத்திவிட்டு, சப்தம் செய்யாமல் சிரித்துக் கொண்டே, குனிந்து பாட்டில்களை முந்தானையில் சுற்றிக்கொண்டு, “இப்ப வந்திடறேன்” என்று சொல்லிக்கொண்டே நடந்தாள் ராக்காயி.
குடிசையையும்
ரோட்டையும் பிரிக்கும் சாக்கடையைக் கடக்க வைக்கப்பட்டிருந்த பலகையின் மீது அவள் நடந்து செல்வதைப் பார்த்ததும் கந்தனது தொடைகள் பலமாக உதறத் தொடங்கின.
“ராக்காயி,
ராக்காயி” என்று உரக்கக் கூவினான் கந்தன். அவளும் சட்டென்று ஓடிவந்து, அவனை அடிப்பவள் போலக் கையை ஓங்கி, “மோகனான்னு கூப்பிடு” என்றாள்.
“ஒண்ணு
சொல்ல மறந்திட்டேன். அந்த சின்ன பாட்டிலே போட வேண்டாம். இந்த ரெண்டு ரூபாவை வச்சிக்க. மத்த பாட் டில்களே கடேலே போட்டிட்டு, அந்த பாட்டில்லே மூணு அவுன்சு ஜிஞ்சர் வாங்கிட்டு வந்திரு.”
“அடியாத்தா!
ஜிஞ்சர் கடைக்கெல்லாம் நான் போவமாட்டேன்.”
“நீ
ஜிஞ்சர் கடைக்கெல்லாம் ஒண்ணும் போவ வேண்டாம். இந்த மொகணேலே ஒரு வெறகுக் கடை இருக்கில்லே ? அங்கே போய்க் கேளு, தருவாங்க.”
“யாரெக்
கேக்க ?”
“மணீன்னு
ஒரு பொடியன் இருப்பான், அவனக் கேளு.”
“அவன்
இல்லாட்டி ?”
“எல்லாம்
இருப்பான். சீக்கிரம் போ” என்றான் கந்தன். ராக்காயி நகர்ந்தாள்.
ராக்காயி
திரும்பி வரப் பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று. இதற்கிடை யில் கந்தன் படுப்பதும் எழுந்து உட்காருவதுமாக இருந்தான். தாகமாக இருப்பதுபோல் இருந்தது. ஒரு குவளை தண்ணீர் எடுத்துக் குடிக்குமுன் தலையும் கைகளும் நடுங்கி அவனைப் படாதபாடு படுத்திவிட்டன. இடது கைப்புறத்தில் இருந்த குடிசையில் ஆளரவம் கேட்கத் தொடங்கியது. வலது கைப்புறத்தில் இருந்த குடிசையிலிருந்து இன்னும் சில நாட்களுக்கு ஆளரவமே வராது என்று கந்தனுக்குத் தெரியும். . . பத்து நாட்களுக்கு முன்பு அங்கு குடியிருந்தது நாவித இளைஞன் பரமேஸ்வரனும் அவனது விதவைத் தாயார் லட்சுமியும். பரமேஸ்வரன் அக்கிரகாரம் ஒன்றின் முனையில் இருந்த ஒரு சலூனில் வேலை பார்த்து வந்தான். அந்த அக்கிரகாரத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. நகரிலே இருந்த மிகப் பெரிய இறைச்சிக் கடை அக்கிரகாரத்தில்தான் இருந்தது. கடை முதலாளி பசுபதி சிறுவனாக இருந்தபோது - எல்லாம் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் -அக்கிரகாரத்தின் வழியே ஒரு கூடையில் மீனை வைத்துக் கொண்டு கூவிச் சென்றானாம். அதற்காக அக்கிரகார வாசிகள் அவனைக் கட்டிவைத்து உதைத்தார்கள். ‘இதே அக்கிரகாரத்தில் ஒரு இறைச்சிக் கடையே வைப்பேன்’ என்று பையன் சூளுரைத்து, தன் சூளுரையைப் பத்து வருடங்களுக்கு முன்பாக நிறைவேற்றியும் விட்டான். இப்போது அக்கிரகாரத்தில் உள்ள மிகப் பெரிய வீடு அவனுடையதுதான். பசுபதிக்கு இரண்டு தாரங்கள். முதல் தாரத்துக்கு குழந்தைகள் இல்லை; இரண்டாவது தாரத்துக்கு மூன்று குழந்தைகள். மூத்தது பெண். சற்று அழகானவள் என்று கேள்வி. அந்தப் பெண்ணுக்கு அக்கிரகாரத்தின் கோடியில் ராணி சலூனை நடத்தி வந்த முதலாளி தான் ரோம நாசினி வாங்கித் தருவானாம். அதன் மூலம் சலூனில் வேலை பார்த்த பரமேஸ்வரனுக்கும் அவளுக்கும் தொடர்பு ஏற்பட் டது. பரமேஸ்வரன் ஓரிரண்டு ஆண்டு காலம் விஷயத்தை ரகசியமாக வைத்திருந்தான். சில சமயம் கந்தனிடம் மட்டும் அதைப் பற்றிப் பேசுவான். ‘அம்பு மீக்க கதலா’ என்று தொடங்கும் அவள் எழுதிய காதல் கடிதங்களைக் கந்தனிடம் வாசித்துக் காட்டுவான். சினிமாக் கதைகளில் வருவது போலவே, பசுபதி, மகளின் காதல் விவகாரத்தை உணராது, அவளுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தார். அவளோ பரமேஸ்வரனோடு கள்ளத்தனமாக ஓடிவிடத் திட்டமிட் டாள். அவ்வளவு புத்திசாலிப் பெண் இல்லை. பிடிபட்டுக் கொண் டாள். பரமேஸ்வரனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று ஒருநாள் பூராவும் அடித்து நொறுக்கினார்கள். அந்த ‘அம்பட்டப் பயலை’க் கட்டிப்போடச் சொல்லிவிட்டு,
கசாப்புக் கடைக்காரர் பசுபதி தம் கையாலேயே ஒரு சுத்தியலைக் கொண்டு பரமேஸ்வர னின் இரண்டு பற்களை முழுமையாகவும், மற்றுமொன்றைப் பாதி யளவுக்கும் உடைத்தார். இரவில் பரமேஸ்வரனை அவனது குடிசை யில் கொண்டுவந்து போட்டார்கள். அவன் அம்மா பயந்து எங் கேயோ ஓடிவிட்டாள். மறுநாள் காலையில் பரமேஸ்வரன் குடிசை யின் குறுக்கே ஓடிய வலுவான மூங்கில் உத்திரத்தில் பிணைக்கப் பட்டிருந்த கயிற்றில் தொங்கினான். அவன் ஒன்றும் எழுதி வைத்திருக் காததால், பிரேத விசாரணையின்போது ‘வயிற்றுவலி தாங்காமல் தற்கொலை’ என்ற முடிவுக்கு வர கந்தன்தான் சாட்சியம்
தரவேண்டி இருந்தது.
ராக்காயி
வருவது கந்தனுக்குத் தெரிந்தது. சாக்கடையைக் கடக்க உதவிய ‘மரப்பாலத்’தின் மீது நடந்து வந்துகொண்டிருந்தாள். அடுத்த குடிசையிலிருந்து ஒரு குழந்தையின் முனகலும், வேலாயி வீட்டைத் துப்புரவாக்கும் ஒலியும் கேட்டது. ராக்காயி வந்துவிட்டாள். அவளைப் பார்த்ததும் கந்தனுக்கு ஒரு கணம் பகீரென்றது. அவள் கைகளில் ஒன்றுமில்லை - பாட்டில் ? அவள் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, அவன் முன்பு நின்று சிரிக்க முயன் றாள். ஆனால் அவனது முகம் அவளது சிரிப்பை அடக்கியது. “என்ன வெறுங்கையோடு வர்றே ?” என்று அவன் பதறினான். அவள் சிரித்துக் கொண்டே மடியில் மறைத்து வைத்திருந்த ஒரு காகித கார்க்குப் பூட்டிய பாட்டிலை எடுத்து அவன் முன்பு நீட்டினாள்.
“அதெக்
கீழே வச்சிட்டு, அந்தக் கிளாசிலே கொஞ்சம் தண்ணி யெடு” என்றான் கந்தன்.
அவள்
நகர்ந்து சுவரோரமாக இருந்த ஒரு கிளாசை எடுத்து, பானையைச் சுரண்டி, கொஞ்சம் தண்ணீர் எடுத்துவைத்தாள்.
“சரி
போ.”
“மச்சான்
குடிக்கறதே நா பாக்கணும்.”
அவள்
உட்காரப் போனாள்.
“உம்
உம், நீ இங்கே இருக்கக்கூடாது”
என்று அவன் கத்தினான்.
“ஏனாம்
?”
“கூடாதுன்னா
கூடாது” என்று கந்தன் பல்லை நெறித்தான். அவ னது உடல்
படபடத்து நடுங்கிற்று.
ராக்காயி
பயந்துவிட்டாள்.
“என்ன
இப்படி வெறி ? நான் பெறவுக்கு வர்றேன்” என்று கூறிக் கொண்டே குடிசையை விட்டகன்றாள்.
நடுங்கிய
கையோடு கந்தன் பாட்டிலை கிளாசில் காலி செய்தான். இலேசாக மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த திரவத்தைப் பார்க்கும் போது, அவனுக்கு ஒருபுறம் குமட்டல்; மறுபுறம் ஆசை, ஆவல். திரவத்தை எடுத்துக் குடிக்க கிளாசை வலது கையால் எடுக்க முயன் றான். கை உதறிற்று. இரண்டு
கைகளாலும் எடுத்தான். கிளாசை உயர்த்தியபோது, இரண்டு கைகளும் உதற ஆரம்பித்தன. நடுங்கும் கிளாசிலிருந்து திரவம் தளும்பிக் கொட்டிவிடுமோ என்ற பயம் வேறு. அதை ஒரு நிலையில் நிறுத்தி, தன் தலையைக் குனிந்து, கிளா சின் விளிம்பை வாயின் இரு ஓரங்களிலும் வைத்தழுத்தி, ஒரு வெறியோடு ஒரே மடக்காகத் திரவத்தைக் காலி செய்தான். திரவத்தை விழுங்கியதும், அவன் வாயிலிருந்தும் வயிற்றிலிருந்தும் ஒரு ஏப்பம் வெடித்தது. வாயை இறுக மூடி, வாயிலிருந்த உமிழ்நீரைக் கூட்டி விழுங்கிக்கொண்டான்.
தொடர்ந்து
இரண்டு சிகரெட்டுகள் புகைத்து முடித்தான் கந்தன். வேலாயி வீட்டுக் குழந்தை அழ ஆரம்பித்தது.
“அக்கா,
குழந்தை என்ன அழுகுது, வயித்து வலியா என்ன ?” என்று உரக்கக் கூவினான்.
“வயித்து
வலி ஒண்ணுமில்லே, எல்லாம் வாய் வலிதான்” என்றாள் அடுத்த குடிசை வேலாயி.
“மச்சான்
வேலைக்குப் போயிரிச்சா ?”
“இல்லே,
சங்கத்துக்குப் போயிருக்காரு.”
“ஆமா
அக்கா, முன்னெல்லாம் ராமு மச்சான் சங்கத்துக்குப் போனா சண்டை போடுவீங்களே, இப்பல்லாம் சண்டை போடற தில்லையா ?”
அடுத்த
குடிசையிலிருந்து பதில் இல்லை.
“என்ன
அக்கா, பதில் பேச மாட்டேங்கறீங்க ? சங்கம் கிங்கம் இருந்தாத்தான் சரீனு படுது.”
அடுத்த
குடிசையிலிருந்து மீண்டும் பதில் இல்லை. வேலாயி வீட்டு வேலையில் மும்முரமாக இருந்ததாகப் பட்டது கந்தனுக்கு. எழுந்து நின்று, கைகளை முறித்துவிட்டு இன்னும் இரண்டு அவுன்சு வேண் டும் என்று நினைத்துக்கொண்டான்.
கொஞ்சம்
தயக்கத்தோடே, “வேலாயி அக்கா” என்று கூவினான்.
“என்ன
தம்பீ” என்று பதில் வந்தது.
“ஜீவாவை
இங்கே கொஞ்சம் அனுப்பி வைங்க.”
“இந்தா
சீவா, சீவா எழுந்திரு. அடுத்த வீட்டுக் கந்தன் கூப்பிடுது. என்னன்னு கேட்டுட்டு வா.”
சிறிது
நேரத்தில் அரைகுறைத் தூக்கத்தோடு, பாவாடையும் சட்டையும் அணிந்த பத்து வயதுச் சிறுமி ஒருத்தி கந்தன் முன் வந்து நின்றாள்.
“இட்லிக்காரப்
பேச்சி வீட்டு வாசல்லே மீனா அக்கா இருக்கும். நான் சொன்னேன்னுட்டுக் கூட்டியா” என்றான் கந்தன். ஜீவா இலேசாகச் சிரித்துக்கொண்டே, ராக்காயி தரையில் வைத்துவிட்டுச் சென்றிருந்த பதினைந்து காசுச் சில்லரையைப் பார்த்துக்கொண்டு நின்றது. கந்தன் ஒரு ஐந்து காசை எடுத்து அவள் கையில் திணித்தான். ஒன்றும் சொல்லாது காசை வாங்கிக்கொண்டு அசமந்தமாகக் குடிசையை விட்டகன்றது குழந்தை.
ஜீவாவுக்கு
மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்து ஏற்பட்டது. தெருவிலே விறகுக் கடை அருகே ஒரு லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்தாள். லாரி இலேசாகப் பின்னே நகர்ந்து அவளை இடித்துத் தள்ளியது. ஜீவாவுக்கு வெளியே ஒரு காயமும் ஏற்பட வில்லை. ஆனால் மயக்கமுற்றுக் கிடந்தாள். வீட்டுக்குத் தூக்கி வந்தார்கள். ஹோமியோபதி சர்ட்டிபிகேட்டோடு அலோபதி வைத்தி யம் செய்யும் டாக்டர் வந்து ஊசி போட்டார். அரைமணி நேரம் வாயை இலேசாகப் பிளந்து பெருமூச்சு விட்டவாறே அசைவற்றுக் கிடந்தாள். பிறகு அசைய ஆரம்பித்தாள். கண்களைத் திறப்பதற்கு முன்னால், உதடுகளை வேகமாகத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள். அவள் ஏதோ பேசுவது போல் சிறிது நேரத்தில் ஒலியும் கேட்டது. என்ன சொல்லுகிறாள் என்று எல்லோரும் உற்றுக் கேட்டனர். அவள் வாயிலிருந்து உருப்படியான வார்த்தைகள் எதுவும் வரவில்லை. மாறாக, ‘கபே, கபே’ என்ற ஒலிகள் மட்டும் மாறிமாறி வந்துகொண்டி ருந்தன. வேலாயியும் ராமுவும் அவளை உலுப்பினர். அவள் கண் களைத் திறந்தாள். ஆனாலும் தொடர்ந்து ‘கபே, கபே’ என்று உளறிக்கொண்டிருந்தாள். அவளை எழுப்பி உட்கார வைத்தனர். அவளைச் சுற்றியிருந்தவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, ‘கபே, கபே’ என்று சொல்லிக்கொண்டே, கைகளை அசைத்து அவர்களிடம் பேசுவதாகப் பாவனை செய்தாள். ஒவ்வொருவரிடத்தும் இவ்வளவு நேரம்தான் பேசவேண்டும் என்ற நியதிக்குக் கட்டுப்பட்டவள்போல் சுற்றியிருந்த ஒவ்வொருவருக்கும் ‘கபே, கபே’யை அளந்து கொட்டி
னாள். இடையிடையே சிரித்துக்கொண்டாள்.
“அடி
மாரியாத்தா” என்று கத்திவிட்டு, தலையில் அடித்துக் கொண்டு வேலாயி அழுதாள். ராமு மகளை மடியில் வைத்துக் கொண்டு வலது கையால் அவளது வாயை மூடப்பார்த்தான். ‘கபே, கபே’ தொடர்ந்தது. ராமு சற்று பலத்தோடு அவளது வாயை மூட முயலவும், மூச்சு முட்டித் திணறுவதுபோல், தன் கையால் அவன் கையை வெறியோடு பிடுங்கி எறிந்துவிட்டு, அவனைத் திட்டுவது போல் கோபத்தோடு அவனிடத்தும் ‘கபே, கபே’யை அவள் உமிழ்ந்
தாள். வேலாயி, ராமு இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு எல்லாம் சிரிப்பு வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர். சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாதவர்கள், ‘முட்டிக் கொண்டு வரும்போது’ ஒதுக்குப்புறமான இடத்துக்கு ஓடுவதுபோல், பல்லைக் கடித்துக்கொண்டோ, கையால் வாயை மூடிக்கொண்டோ, குடிசையை விட்டுப் பாய்ந்து வெளியே ஓடினர்.
ஜீவாவுக்குப்
புத்தி ஸ்வாதீனம் இருக்கிறதா என்று பார்த்தார்கள். இருந்தது. எழுத்திருக்கச் சொன்னால் எழுந்திருந்தாள். ஒரு இடத் துக்குப் போகச் சொன்னால் போனாள். ஆனால் ‘கபே, கபே’ மட்டும் நிற்கவில்லை. எழுந்தாலும் நடந்தாலும் ஓடினாலும் குனிந்தா லும் நிமிர்ந்தாலும் ‘கபே, கபே’ தொடர்ந்தது. யாரைப் பார்த்தாலும் அவர் முன்பு நின்று ‘கபே, கபே’ கச்சேரியை நடத்தினாள். சமயத்தில் அவள் மிக வேகமாக ஏதோ பேசிக்கொண்டிருப்பது மாதிரிதான் தெரியும்; உற்றுக் கவனித்தால் தான் உளறுவது விளங்கும். குடிசையில் தனியாக அவளை அடைத்துப் போட்டுப் பார்த்தார்கள். சுவரின் முன்னால், ஜன்னலின் முன்னால், சட்டி பானைகள் முன்னால் எல்லாம் நின்றுகொண்டோ, உட்கார்ந்துகொண்டோ ‘கபே, கபே’ என்ற அவளது மந்திரத்தை ஓதினாள். அவள் சாப்பிடுவதைப் பார்ப்பதே வேடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு பிடிச் சோற்றையும், ஒன்று அல்லது இரண்டு ‘கபே, கபே’ சொல்லாது வாய்க்குள் அனுப்பி விட மாட்டாள். சோறு தொண்டைக்குள் இறங்கும் ஒரு கணப் போதில் மட்டும்தான் ‘கபே, கபே’ கேட்காது. ஏதாவது குடிக்கும் போதும் அப்படித்தான். இரவில் படுக்கையில் படுத்தாலும் ‘கபே, கபே’ தொடர்ந்து ஒலித்தது. தூக்கம் வர வர, ஒலி
குறைந்துகொண்டே சென்று, நன்றாகத் தூக்கம் வந்த பிறகு மட்டும் ஒலி நின்றுவிடும். ஆனால் உறக்கத்திலும் அவளது உதடுகள் அசைந்துகொண்டே இருந்தன. அவளைப் பார்த்தால், லட்சியவெறி பிடித்த ஒரு அரசியல் வாதி, வாழ்நாள் குறைவு என்பதை உணர்ந்து, விழித்திருக்கும் நேரமெல்லாம் மக்களிடத்துத் தனது லட்சியத்தைப் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும் என்று தூண்டப் பட்டு, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பது போல் இருந்தது.
கந்தன்தான்
ஜீவாவைத் தனது வாடிக்கைக்காரர்களில் ஒருவரான ஒரு கிழட்டு டாக்டரிடம் கூட்டிச் சென்றான். டாக்டர் குழந்தையைப் பார்த்துவிட்டு, அவளது வியாதியை மூளை ஆபரேஷன் மூலம்தான் குணப்படுத்த முடியும் என்றார். சென்னையில் அவருக்குத் தெரிந்த ஒரு பெரிய டாக்டருக்கு அறிமுகக் கடிதமும் கொடுத்தார். கடிதத் தோடு ராமு, வேலாயி, ஜீவா மூவரும் சென்னைக்குச் சென்றனர். ஆபரேஷன் முடிந்து பனிரெண்டு நாட்களில் வீடு திரும்பினர். இப்போதெல்லாம் ஜீவா, ‘கபே, கபே’ என்று உளறுவதில்லை. அது மட்டுமல்ல, நம்மைப் போலவோ, நமது வானொலிப் பெட்டி களைப் போலவோ எதையுமே உளறுவதில்லை.
*****
No comments:
Post a Comment