Thursday, August 16, 2018

தேவதச்சன்


தேவதச்சன்













தேவதச்சன்



(பிறப்பு: 1952) என்ற புனைபெயரில் அறியப்படும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் எஸ்.ஆறுமுகம் ஆகும். இவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 1952இல் பிறந்தவர் ஆவார். இவர் தமிழில் மிகச் சிறந்த நவீன கவிஞர் ஆவார். தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில், 1970களில் வந்த கசடதபற, இதழ்களில் எழுதத் தொடங்கினார். அயல்நாட்டிலிருந்து தரப்படும் இலக்கியத்திற்கானவிளக்குவிருது பெற்றவர் [1]. தமிழ் நாட்டில் வழங்கப்படும்விஷ்ணுபுரம்விருது (2015) பெற்றவர்.
வெளி வந்துள்ள கவிதைத்தொகுதிகள்[தொகு]
             அவரவர் கைமணல் (1981)
             அத்துவானவேளை (2000)
             கடைசி டினோசார் (2004)
             யாருமற்ற நிழல் (2006)
             ஹேம்ஸ் என்னும் காற்று (2010)
             இரண்டு சூரியன் (2011)
             எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது (2013)
தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு

கவிதை, இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்களுள் பழமையானது; அலங்காரங்களுடன் ஆனது. மொழி வரிவடிவம் பெற்றதும், இலக்கியம் அலங்காரங்களைக் களைந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டது; நாவல், சிறுகதை வடிவங்கள் பிறந்தன. கவிதையின் தேவை கேள்விக்குள்ளானபோது அதுவும் தன் ஒப்பனைகளைக் களைந்து உரைநடையானது; புதுக்கவிதை தோன்றியது. ஆனால் இதற்குப் பிறகும், புதுக்கவிதை பிறந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன பிறகும், ‘கவிதையின் தேவை என்ன?’ என்ற கேள்வி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
1970-களில் எழுதத் தொடங்கி இன்றுவரை புதுமையைத் தக்கவைத்திருக்கும் தேவதச்சனின் கவிதைகளைத் வாசிக்கும்போது இந்தக் கேள்விக்கான பதிலை உணர்ந்துகொள்ள முடிகிறது.‘கொக்கின் வெண்ரோமசிலுசிலுப்பு போன்ற மென் உணர்வுகள் கவிதை வழியாக மட்டுமே வெளிப்படக்கூடியவை. உரைநடைக்கு அந்தத் திராணியில்லை என்றுதான் தோன்றுகிறது. தேவதச்சனின் கவிதைகள், ‘கவிதையின் தேவை’-க்குத் தற்காலச் சான்று.
இமைகளின் மொழி
தேவதச்சனின் கவிதைகள் அனுபவங்களில் தோய்ந்தவை. அவர் கவிதைகளை வாசிக்கும்போது அவை எல்லாமும் அவர்இமைகளின் மொழியிலானவை என உணர முடிகிறது. அவர் பார்த்த காட்சிகள்தாம் கவிதையாக்கம் பெறுகின்றன. அவை எல்லோருக்கும் பொதுவான காட்சிகள்; அவற்றுக்குத் தனித்தன்மை இல்லை. பிரம்மாண்டமான மலைகள், விநோதமான விலங்குகள் இல்லை (டைனோசர் வருகிறது. ஆனால் அது பழக்கப்பட்ட விலங்குதான்). இந்த நெருக்கமான காட்சி இடுக்குகளின் வழியாக நமக்குப் புலப்படாத ஒரு கணத்தை எழுப்பிவிடுவார். இதன் மூலம் கவிதை ஒரு தனித்தன்மையைப் பெற்றுவிடுகிறது. இது இலக்கிய சிருஷ்டிக்கு அவசியமானது. உதாரணமாக இந்தக் கவிதையின் காட்சி,
ஒரு இடையன்/பத்துப் பனிரெண்டு ஆடுகள்/ஒரு இடையன்/பத்துப் பனிரெண்டு ஆடுகள்/ஆனால்/எண்ணிலிறந்த தூக்குவாளிகள்/எண்ணிலிறந்த மழைகள்/எண்ணிலிறந்த தலைப்பாகைகள்/எண்ணிலிறந்த காற்றுகள்/எண்ணிலிறந்த தொரட்டிகள்/எண்ணிலிறந்த பகல்கள்/ஒரு இடையன்/பத்துப் பனிரெண்டு ஆடுகள்/ரயில்வே கேட் அருகில்/எப்படா திறக்குமென்று
ஏதாவது ரயில்வே கேட்டில் பார்த்திருக்கக்கூடிய ஒரு பழக்கப்பட்ட காட்சி. ஆட்டிடையன் ஒருவன்தான். ஆனால் தூக்குவாளியும் தொரட்டியும் தலைப்பாகையும் எண்ணிக்கையில் அடங்காதவையாக இருக்கின்றன. மழையும், காற்றும்கூடப் பன்மையாகின்றன. இதுதான் அசாதாரணம். யாளிகள் கொண்டும், புரண்டு கிடக்கும் மலைத் தொடர்கள் கொண்டும் உருவாக்க முடியாத கவிதைக்குரிய விநோதம். புதுக்கவிதைக்கு இந்த அசாதாரணம் அவசியம் என்கிறார் அதன் தந்தையாகப் போற்றப்படும் .நா.சுப்ரமண்யம். ‘எண்ணிலிறந்த பகல்கள்என்ற சொல்லில் இந்தக் கவிதையைத் திறக்கச் செய்கிறார். அதே ரயில்வே கேட். ஆனால் காட்சி, தினம் தினம் புதிதாக நிகழ்கிறது. ‘எப்படா திறக்குமென்றுஅலுப்புடன் தினமும் காத்திருக்கிறான் இடையன்.
எடையற்ற கவிதைகள்
தேவதச்சனின் கவிதைமொழியும் எளிமையானது; மிக நெருக்கமானது. ஒருவிதத்தில் பார்த்தால் இது கவிதைக்கு நேர் எதிரான தன்மை. மக்கள் மொழியில்தான் கவிதை எழுதுகிறார். ‘பேருந்து நிலையம்என்ற சொல்லுக்கு மாறாகபஸ் நிலையம்என்றே பயன்படுத்துகிறார். அவர் வாழும் கரிசல் நிலத்தின் சிலவழக்குச் சொற்களும் அப்படியே கவிதைகளில் வெளிப்படுவதும் உண்டு. மேற்சொன்ன கவிதையிலும்எப்படா திறக்குமென்றுசொல்கிறார். ஆனால் எளிய மொழி, நெருக்கமான காட்சி வழியாக ஒரு புதிர் அனுபவத்தை உருவாக்கிவிடுகிறார். அது வாசகனைப் பரவசத்தில் ஆழ்த்தும் அனுபவம்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் தேவதச்சனின் கவிதைகள் இப்போது மூன்றாம் தலைமுறையில் இருக்கின்றன. இந்த இடைவெளியில் பல முக்கியமான சமூக மாற்றங்கள் நடந்திருக்கின்றன. இவற்றை தேவதச்சனின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. ஆண்டாளும், சிபிச்சக்கரவர்த்தியும், பாரதியும் கவிதைகளுக்குள் புத்தாக்கம் பெறுவதுபோல நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் வாழ்க்கையும் பதிவாகிறது. பஸ், முரட்டு லாரி, ரயில், சைரன் ஒலி, ரவுண்டானா, சிக்னல், வாகனச் சோதனை எல்லாமும் வருகின்றன. கண்ணாடி பாட்டில் உடையும் க்ளிங் ஓசை, சைக்கிள் பெல்லின் க்ளிங் க்ளிங் சத்தம், காக்கா விட்டுச் சென்ற வீட்டின் குக்கர் இரைச்சல் எல்லாமும் இருக்கின்றன. அகற்றப்பட்ட கண்ணகி சிலை, தற்கொலை செய்துகொண்ட நகைச்சுவை நடிகை, அடிக்கடி நிகழும் மின்வெட்டு போன்ற சமகாலமும் கவிதைகளில் வெளிப்படுகிறது. ஆனால் இந்தச் சமகாலச் சுமையை தேவதச்சனின் கவிதைகள் இலகுவான வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றன.
சப்தமும் நிசப்தமும்
சிறகு அசையும் மென்மையும், நிசப்தம் உண்டாக்கும் சப்தமும் தேவதச்சன் கவிதை அம்சங்களில் முக்கியமானவை. இவை தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே வருபவை.‘துவைத்துக் கொண்டிருந்தேன்/ காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்/அடுத்த துணி எடுத்தேன்/காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்இதே சப்தம் மற்றொரு கவிதையில் காக்கா விட்டுச் சென்ற வீட்டின் குக்கர் சப்தமாக ஒலிக்கிறது. பூட்டப்பட்டிருக்கும் பானு வீடு உருவாக்கும் சப்தமாக கேட்கிறது. நிசப்தம் போடும் குருவிகளின் சப்தத்திற்கும் பானு வீட்டின் சப்தத்திற்கும் ஆன கால இடைவெளி சில ஆண்டுகள் இருக்கும் என ஊகிக்க முடிகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த அனுபவத்தை தேவதச்சன் புதிதாகத்தான் சந்திக்கிறார். இல்லாமை உருவாக்கும் இருப்பு அவரது கவிதைகளில் தொடர்ந்து வெளிப்பட்டுவரும் ஓர் அம்சம்.
எப்போவெல்லாம்/மைனாவைப் பார்க்கிறேனோ/அப்போவெல்லாம் தெரிகிறது/நான்/நீராலானவன் என்று/அதன் குறுஞ்சிறகசைவில்/என் மேலேயே தெறிக்கிறேன் நான்இந்தக் கவிதையில் இருக்கும் மைனா ஓர் அனுபவம். இந்த அனுபவத்தை அவர் மற்றொரு கவிதையில் வெண்ரோமச் சிலுசிலுப்பு என்கிறார். ஒரு மைனாவைப் பார்க்கிறோம். அதன் சிறகசைவு நம் நினைவில் இருக்கும் வேறோர் அனுபவத்தைத் தூண்டுகிறது. அந்த நினைவு உண்டாக்கும் சிலுசிலுப்பால் நம் மீது நாமே தெறித்துக்கொள்கிறோம். இது விளக்க முடியாத ஒரு பேருணர்வு, பல்லாயிரம் மழைத் துளிகளில் ஒரு துளி, பல்லாயிரம் காட்சிகளில் ஒரு காட்சி. இதுதான் தேவதச்சன் கவிதைகள் தரும் அனுபவம்.
கவிதை மீதொரு உரையாடல்: தேவதச்சன் - நாய்கள் இழுத்துச் செல்கிற சூரிய வெளி

வார்த்தைகள் மூடுகின்றன ஊற்றை
வார்த்தைகள் தடுக்கின்றன காற்றை
வார்த்தைகள் மறைக்கின்றன தழலை
வார்த்தைகள் பறிக்கின்றன காலடி மண்ணை
தேவதச்சனின் கவிதை ஒன்றிலிருக்கும் வரிகள்தான் இவை. இவற்றை வாசிக்கும்போது, சொற்களால் ஆனதோ உலகம் என்று தோன்றியது. சொற்களால் ஆன உலகிலிருந்து நம்மைச் சற்றே விடுவிக்கின்றன தேவதச்சனின் கவிதைகள்.
கவிஞர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற வார்த்தல் முறை ஒன்றைத் தேடுகிறார்கள். வாழ்தல்தான் தேவதச்சனின் வார்த்தல். உணர்ச்சியில் சிக்கிக்கொள்ளாத கவிதைகள். உணர்தலின் விளிம்பு தாண்டாத கவிதைகள். அறிவும் சிந்தனையும் எட்டிப் பார்க்காத கவிதைகள். வாழ்வின் ஓசைகளை மட்டுமே அதிரவிட்டு நிரந்தரக் குயிலோசையைக் காதில் ஒலிக்கவிடுகிற கவிதைகள்.
பாலபாடம்’, ‘வீடுபோன்ற பல கவிதைகள் தினசரி வாழ்விலிருந்து உதிக்கிற உதயங்கள். ஒவ்வொரு கவிதையும் வாழ்வதற்கான நகர்வுகள். வெறுமையை ஒருபோதும் பேசாதவர் தேவதச்சன். மாலையில் விளையாட வரும் சிறுவர்களுக்காகக் கரையில் காத்திருக்கிறார். கண்களையும் காதுகளையும், நாசியையும் மறையச் செய்துவிட்டுச் சிறுவர்களுக்காகக் காத்திருக்கிறார்.
என்னை உள்ளங்கையில் ஏந்தி / ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என / அப்போது அவர்களிடமிருந்து / விரல்களைப் பரிசுபெறுவேன்/ கண்களை வாங்கிக்கொள்வேன் / நாசியைப் பெற்றுக் கொள்வேன் / கூடவே கூடவே / நானும் விளையாடத் தொடங்குவேன் / ஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று
இதுதான் தேவதச்சன். இத்தகைய கவிதை ஆக்கங்கள் தேவதச்சனின் தனி அடையாளங்கள். வாழ்க்கையை நேரடியாகச் சந்திப்பவர் தேவதச்சன். ஒடிந்த செடிகளை, சாய்ந்த செடிகளை நிமிர்த்தி வைத்துச் செல்கிற வண்ணத்துப்பூச்சியைப் பின் தொடர்கிறவர். நீண்ட கவிதை வரலாற்றில் நாம் சற்றே நின்று பார்க்கிற கவிதைவெளி தேவதச்சன்.
இன்னும் தாதி கழுவாதஎன்ற தலைப்பிலிருக்கும் கவிதை தேவதச்சனின் கவிதை அடையாளம்.
இன்னும் / தாதி கழுவாத / இப்பொழுதுதான் பிறந்த குழந்தையின் / பழைய சட்டை என்று ஏதும் இல்லை / பழைய வீடு என்றும் ஏதும் இல்லை / மெல்லத் திறக்கும் கண்களால் / எந்த உலகை / புதுசாக்க வந்தாய், செல்லக்குட்டி அதை / எப்படி ஆக்குகிறாய், என் தங்கக்குட்டி
புதிய உலகம்
இதுதான் சொற்கள் தீண்டாத உலகம். இன்னும் தாதி கழுவாத இப்போதுதான் பிறந்த குழந்தை மட்டுமே பார்க்க முடிகிற உலகம். இப்படியான குழந்தைகளின் கண் திறப்பில் பார்க்கப்படுகிற உலகம் சொற்களின் உலகமல்ல. அனுபவங்களின் பதிவுகள் தீண்டாத மாசுபடாத உலகம். இன்னும் தாதி கழுவாத என்ற சொற்கள் உலராத பிறப்பின் ஈரத்தை உணர்வெளிக்குக் கடத்துகின்றன. குழந்தை மீதிருக்கும் ஈரம் அது பார்க்கும் பொருள்கள் யாவிலும் படிகிறது. அப்போது புதிதாக மலர்கிறது உலகம். சொற்கள் தீண்டாத அற்புத உலகம். இன்னும் தாதி கழுவாத குழந்தைமீது தேவதச்சன் கொள்கிற பார்வை மொத்த உலகையும் புதுப்பிக்கிறது.
நவீன வாழ்க்கையின் அனுபவ வெளிப்பாடு இவரது கவிதைகள். ‘இரண்டு சூரியன்என்ற தலைப்பிட்ட கவிதை...
உன்னை என்ன பண்ணிலால் நீ / சந்தோசம் அடைவாய் / உனக்கு பிடித்த நகைச் சுவைகள் சொல்லவா / நீ லயித்து உன்னை மறக்கும் இசைத் தட்டுகளை / சுழல விடவா
சமூக வாழ்வை, தனி மனித வாழ்வை இதுவரையிலும் யாரும் பார்க்காத இடத்திலிருந்து பேசுகிறது கவிதை. கவிதை தனக்குள் வைத்திருக்கும் அரசியல் பிடிபடுகிறது. சூரியன் இரண்டாக உதிப்பதுதான் இங்கே கவிதை. அதனால்தான் தலைப்புஇரண்டு சூரியன்’. மனித வாழ்வின் இரு வெளிகளை ஒரு உதயத்தில் காட்சிப்படுத்துகிறது கவிதை. உள்ளீடில்லாத சொற்களையும் வினைபடாத சொற்களையும் பகடி செய்கின்றன கவிதையின் ஆரம்ப வரிகள். புற அரசியலைப் பகடி செய்துவிட்டு வாழ்வை நேரடியாகச் சந்திக்கிறது கவிதை. அடுத்து வரும் வரிகள்...
இந்தியாவில் இரண்டு சூரியன்கள் உதிக்கின்றன / பினாமிகளுக்கு ஒன்றும் / சாதாரணர்களுக்கு ஒன்றும் / சாதாரண நம் சூரியனை இழுத்துச் செல்வது / ஏழு குதிரைகள் அல்ல / ஏழு நாய்கள் / தெருத்தெருவாய் வீதிவீதியாய் ஊர்ஊராய் / நாடுவிட்டு நாடாய்
அடையாளத் துறப்பு
நவீனக் கவிதைகள் இரண்டு நிகழ்வுகளால் ஆனவை. ஒன்று கவிஞனுக்குள் நிகழ்வது. மற்றது கவிதைக்குள் நிகழ்வது. கவிஞனுக்குள் நிகழ்வது கவிஞனின் அடையாளம். கவிதைக்குள் நிகழ்வது அடையாளம் துறப்பது. அன்றாட வாழ்க்கையில் எல்லா நேரமும் அடையாளங்களைச் சுமந்துகொண்டே இருக்க முடியாது. ஆண், பெண் என்கிற அடையாளமாக இருந்தாலும், சாதி, மத, தேச அடையாளங்களாக இருந்தாலும் சதா சுமந்து அலையும் சாத்தியமில்லை. அகதி மீதிருக்கும் அடையாளம்தான் வாழ்வதற்கான மண் தர மறுக்கிறது. நாய்கள் இழுத்துச் செல்கிற சூரிய வெளியைச் சேர்ந்த மனிதர்களிடம் என்ன செய்து சிரிக்க வைப்பேன் என்கிறார்.
நான் என்ன செய்து உன்னை சிரிக்க வைப்பேன் / ஒரு நதியைப் போல் ஊரெங்கும் / நிறைய வைப்பேன்
மாசிலா மனத்தின் வெளிப்பாடு. இந்த எண்ணம்தான் கவிதையை ஆக்கிய வரிகள். இந்த வரிகளில்தான் கவிதையின் மொத்தப் பயணமும் நிகழ்கிறது. கவிதையின் உயிர்வெளி என்றுகூடச் சொல்லலாம். இரண்டு சூரியனை அறிந்திருக்கும் மனதின் அவஸ்தையே கவிதை. நீள்கிறது கவிதை...
ஒரு கம்பளிப்பூச்சி வண்ணத்துப் பூச்சியாய் / சந்தோசம் அடைவதை / ஒரு தடவையாவது / பார்த்திருக்கிறாயா
கவிதையில் கவிஞனையும் மீறிக் கவிதையின் ஆற்றல் வெளிப்படுகிறது. கவிதைக்குள்ளாக நடக்கும் வினை கவிதையின் உள் நிகழ்வு. இந்த உள் நிகழ்வுதான் அனுபவத்தைக் கவிதையாக மாற்றுகிறது. கல் சிற்பமாவது போல. கவிதையைக் கவனமாக வாசித்து வரும்போது அதன் இறுதி வரிகள் கவிஞனின் வரிகளல்ல என்று உணர்கிறோம். முந்தைய வரிகளின் கூட்டு நிகழ்வு. வர்க்க பேதங்களைச் சுட்டுகிற அடையாளத்தோடு தொடங்குகிற கவிதை, பிறகு அதையும் துறந்து தன் அளவில் வாழ்க்கையைச் செப்பம் செய்துகொள்ளும் வழி ஒன்றைத் தேடுகிறது. அவனுக்கான வாழ்வை அவனே அறியும் இடம் நோக்கி நகர்த்துகிறது.
மரத்தைப் பார்க்கிறபோதே மனம் சட்டென்று வேர்களில் தோய்கிற உணர்வு. வேர்களில் ஊடாடுவதுதான் கவிதையின் உள்வினையோ என்று தோன்றுகிறது. கண்படாத இடத்தில் பார்வை கொள்ளவைக்கும் முயற்சியாக விரிகிறது. கவிதை சமூக வெளியில் பிரசங்கம் செய்யாது தனிமனிதனிடம் அக்கறையோடு நெருங்குகிறது. ஒரு புள்ளியோடு இன்னொரு புள்ளியை இணைக்கத் துடிக்கிறது. எல்லாப் புள்ளிகளையும் இணைப்பதற்கான ஒரு மன அதிர்வை உண்டாக்க முயல்கிறது. அறிவை, புலமையைத் தூர எறிந்துவிட்டுத் தன் உலைக்களத்திலேயே தனக்கான கருவியைக் கண்டடையத் தூண்டுகிறது.
கவிதையின் இறுதி வரிகள் தேவதச்சனின் தனித்த மொழி. வார்த்தைகள் உணர்வின் விளிம்பிலிருந்தே அதிர்கின்றன. உணர்ச்சியின் எல்லைக்குள் நுழைவதில்லை தேவதச்சனின் வார்த்தைகள். இந்தச் சொல்முறைதான் தேவதச்சனின் கவிதை மொழி. வாழ்தலின் பேரோசையை ஒரு இசைக் கருவிக்குள் புகுத்தி வாழ்வின் இசையைக் கண்டடைகிறார். கவிஞனின் அடையாளம் மறைந்து கவிதையின் அடையாளம் பிறக்கிறது.
தினசரி வாழ்வின் எளிய சப்தங்கள், சில தருணங்கள், பயன்பாட்டிலிருக்கும் பொருள்கள், சில வாழ்வெளிகள் ஆகியவை தேவதச்சனுக்குப் போதுமானவை. மரண வீட்டிலும் வாழ்தலின் ஒளியைப் பார்க்கிற எழுத்து இவரிடம்தான் உண்டு. இது தத்துவ விசாரத்தில் கரைந்துபோகாதது.

தேவதச்சன் கவிதைகள்
எஸ்.ராமகிருஷ்ணன் இணையதளத்தில் தேவதச்சனின் 15 கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அவற்றுள் என் பார்வையில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்தேன். அவற்றைப்பற்றிய எனது புரிதல் ஒவ்வொரு கவிதைக்கும் கீழே. ஆனால் என் புரிதலை மீறிச்செல்லும் கவிதைகள் இவை என்பதை அறிவேன். நவீனத்துவத்தின் முக்கியமான அடையாளம் ஒரு புனைவு தான் கொண்டிருக்கும் உருவத்தைத் தாண்டிச் செல்லும் நுட்பத்தை உள்ளடக்கி இருப்பது. இதனால் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒரு புரிதலும் ஒவ்வொரு பிரயோகத்துக்கும் சிறப்பான முக்கியத்துவத்துவமும் இருக்கும்)
தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்
நிற்கிறாள் சிறுமி
கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது
மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன
அவள்
கண்ணுக்கு அடங்காமல்
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன
வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்
இன்னொரு பகலில் போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்
சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்
சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை.
((போராடும் பலம் வறுமை இயல்பாகவே கொடுப்பது. எதிர்காலம் கல்வியில் தான் இருக்கிறது என்னும் புரிதல் வளர்ப்பில் வந்துள்ளது. வெளி உலகில் இருந்து அவள் சவால்களை எதிர்பார்க்கிறாள். உதவியை அல்ல. அதே சமயம் தனது பிரச்சனைகளில் எதை நகரும் வாகனத்துப் பெண் கவனித்தாள் என்பதே இவளது மனதுள் உள்ள கேள்வி. வாசகன் வாழ்க்கையின் புதிர்களில் தனது இருப்பிடமான புள்ளி தன்னுடன் பிறர் தம்மை இணைத்துக்கொள்ளும் புள்ளியே விடை தெரியாதது. முன்னுரிமை பெறும் விஷயங்களே கடந்து செல்லுதலில் துணையாகின்றன.இன்னொரு பகலில் என்பது வாழ்க்கையின் பின்னணி மலைக்கும் மடுவுக்குமாக இரு ஜீவிகளிடையே வேறுபடுவதை மிகக் கலையாகத் தொட்டுச் செல்வது. )
——————————————————————
இந்த நீலநிற பலூன் மலரினும்
மெலிதாக இருக்கிறது. எனினும்
யாராவது பூமியை விட கனமானது
எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.
நீங்களாவது கூறுங்களேன், இந்த
நாற்பது வயதில் ஒரு பலூனை
எப்படி கையில் வைத்திருப்பது என்று
பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது
காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது
பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.
எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்
பார்த்து விடுகிறார்கள்.
அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று
என்னை உரசியபடி வருகிறது. நான்
கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்.
(சிறுவர்களால் எது ரசனைக்குரியதோ அதை ரசிக்கும் மனப்பாங்குடன் அவற்றைக் காண முடியும். ஆனால் அவர்களுடன் ஒரே பார்வையில் நாம் இணைய நம் மனம் லேசாக வேண்டும். நாம் மனதுள் பதிந்து வைத்திருக்கும் உருவங்கள் மறைந்து முன் அனுமானம் இல்லாமல் காண முடிய வேண்டும். அந்த விடுதலையான லேசான மன நிலையையே நான் பலூனாகின்றேன் என்கிறார் தேவதச்சன்.)
••••
காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.
(வண்ணத்துப் பூச்சிகள் இயற்கையின் மிகப் பெரிய வரங்கள் அவைகளால் காடுகள் மரங்கள் உருவாகும் ஆதாரமான மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது. இயற்கையுடன் ஒன்றிய ஒருவனாக இருக்கும் இடையன் ஆடுகளை மட்டும் மேய்க்கும் காட்சியாக அவனைக் குறுக்க முடியாது. அவன் அந்தச் சூழலையே மேய்ப்பவனாகிறான்)
காத்திருத்தல்
நிறையப் பேர் உறங்கியபடி காத்திருக்கிறார்கள்
உறவுப்பெண்கள் தேநீர் குடித்தபடி
சித்ரகுப்த நயினார் கதையைப் பாடியபடி
நடுவீட்டில், முதுமகள், இறந்தபடி காத்திருக்கிறாள்
நடுச்சாமம் நகர்வதற்கு
பொழுது புலர்வதற்கு
ரத்த உறவுகள் காலையில்
கதறியபடி வருவதற்கு
சாவின் கண்ணாடி காத்திருக்கிறது.
பக்கத்து வீட்டு ஜன்னலை மூடி
தன் பருத்த காம்புகளை
கணவனுக்கு ஈந்து
இறுகப் புணரும் இளமகளின் நாசியில்
வந்துவந்து போகிறது பத்திவாசனை.
தெருவில்
கலைந்து கிடக்கும்
இரும்புச் சேர்களில்
காத்திருக்கிறது
நிலவொளி.
(முதிய அம்மாளின் மரணம் நிகழும் வீட்டுக்குப் பக்கத்துக்கு வீட்டில் ஒரு உயிர் உருவாதற்கான கலவி நடக்கிறது. உறங்கும் நேரத்தில் ஊர் உறவு விட்டுவிட்டுப் போய் விடுகிறார்கள். நிலவொளிக்கு இந்தக் கட்டாயங்கள் இல்லை. மரண வீடு கலவி நடக்கும் வீடு என்னும் பேதமில்லை.)
*****
குருட்டு
ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப்
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை
(என் இதயத்தில் சுற்றும் குருட்டு - அவ்வப்போது வந்து மறையும் பொறுப்பற்ற இரக்கமான நேயம். இது எந்தக் குழந்தைக்கு அல்லது மக்களுக்குப் பயனாகப் போகிறது. என்னால் பரிவு காட்டவும் மறுபக்கம் அதன் விதி முடிந்தது என்று அடுத்த விஷயத்துக்குப் போகவும் முடியுமே. )
பரிசு
என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன
ஆயிரம் சொட்டுகள்
(ஒரு பரிசுக்குள் ஆயிரம் எதிர்பார்ப்புகள் வாங்குபவன் கொடுப்பவன் இருபக்கமும். ஒரு சொட்டில் ஆயிரம் சொட்டுக்கள் என்பது கவித்துவம் ததும்பும் பதிவு)
••
இலைகள் மலர்கள்
ஒருசில மணிநேரங்களில் வித்தியாசமாகி விடுகின்றன
நீயும் நானும்
சில வருடங்களில்
அதற்குள்
ஒருவருக்கொருவர் அடையாளம் தெரியாமல்
போய்விடுகிறோம்
அடையாளம் தெரியாமல் போகும்
அடையாளத்தில் ஒருவருக்கொருவர்
முகமன் கூறிக்கொள்கிறோம்
நமது புன்னகைகளும் கைகுலுக்கல்களும்
குருடர்கள் இல்லைபோலும் , எப்படியோ
அவற்றிற்கு
எப்போதும்
அடையாளம் தெரிந்தேவிடுகிறது
எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள் நான்கு
ஒன்று
எதிர்விட்டு அம்மாளின்
துஷ்டிக்கு
சுடுகாடு சென்று
திரும்புகையில் பார்த்தது.
நள்ளிரவில்
பஸ் கிடைக்காமல்
லாரி டாப்பில்
பிரயாணம் செய்கையில்
பிரகாசித்தது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசலில்
அரசு அதிகாரி ஒருவரைக் காண
காத்திருக்கையில் கண்டது.
இண்டு இடுக்கு
மாடிக் குடித்தனத்தில்
மின்வெட்டு இருள்வேளையில்
ஜன்னல் வழியே
வந்து விழுந்தது.
((கைகுலுக்கலில் இருந்து ஏன் நான்கு பௌர்ணமிக்களுக்குத் தாவி விட்டார்? தேவைப்படும் தொடர்பு நினைவில் இருக்கிறது. தன்னால் தீர்க்க முடியாத தன்னைத் திணரச் செயத தருணங்கள். அந்தத் தருணங்களை உருவாக்கியவன் இன்னொரு சகமனிதன் தானே)



எனக்கு பிடித்த தேவதச்சன் கவிதைகள்
மழையைப் பற்றிய

மழையைப் பற்றிய எல்லாக் கவிதைகளையும் நீங்கள்
படித்திருக்க மாட்டீர்கள்.
மழைக்கவிதைகளைப் படிக்கையில் நீங்கள் எழுதியவனைப்
பற்றியும்
உங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதோடு மழையைப்
பற்றியும்
ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் போகிறீர்கள்.
தாள்களை நனைக்காமல் பெய்கிறது மழை.
எனினும் தாள்களில் தேங்கி நிற்கும் மழை நீரில்
உங்கள் கணுக்கால்வரை மறைந்திருக்கிறீர்கள்.
கவிதைக்கு வெளியேயும்,
மழையைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்
மழை எப்படியெல்லாம் பெய்யாமல் போகிறது என்று.
மழையை வழியனுப்பிய அந்தக்கால சடங்குகள் பற்றி
அதற்குரிய தெய்வங்கள் பற்றி
மழை மட்டுமா போச்சு என்று
சிறகி நாரை கொக்கு முக்குளிப்பான்
உள்ளான் நீர்க்கோழி பனங்காடை எல்லாம்
எங்கே போச்சு.
அவைகள் மீனைத் தின்கின்றன.
மீன்கள் இல்லை
காடுகளில்
மரபுத் தான்யங்கள் போய்
ஒட்டுத் தான்யங்கள் வந்து விட்டன
பறவைகள் எல்லாம் எங்கே போச்சு
வடக்கேயா மேற்கேயா
அவர்களுக்குத் தெரியவில்லை.
கவிதைக்கு வெளியே
மாடுகளை விற்க
ஓட்டிக்கொண்டு போகிறார்கள்
கவிதைக்கு உள்ளே,
காலித் தொழுவங்கள்.
இன்னும் கொஞ்ச நாளில்
அவர்களும் காணாமல் போய்விடுவார்கள்
வடக்கேயோ மேற்கேயோ சூன்யத்திலோ
பெய்யாத
மழைக்கவிதையின் நிர்வாணத்தில் நீங்கள்
கணுக்கால்வரை கூட மறையாமல்
தெரிகிறீர்கள்.
***

குருட்டு

ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப்
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை

**

பரிசு

என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன
ஆயிரம் சொட்டுகள்

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

உலகம் ஆரம்பிக்கும்
உலகம் ஆரம்பிக்கும் ஓசைகள் கேட்கின்றன
சிலபல
குரல்கள் மோதி
பாறை சிலையாகி
சிலபல
குரல்கள் மோதி
சிலை
பாறையாகி
தெருவில்
ரெண்டு பிள்ளைகளை
சிறகுகள் என கோர்த்தபடி
செல்லும் பெண்
பள்ளிக்கூடத்தில்
தெருவில்
நடுவீட்டில்
யாரைப் பார்த்தாலும், நல்ல செய்தி
எதுவும்
காதில் விழவில்லை

உபயோகமில்லாத பொருட்கள் எதையாவது எப்போதாவது
நீ கையால் தொடுகிறாயா
உபயோகமற்ற பொருட்கள் ஒரு விலங்கைப் போல்
மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின்றன.
அகிலம் எல்லாம் அசைந்து கொண்டிருக்கும்போது
அவைகள் அசைவற்று நிற்கின்றன.
நாளைக்காலை, இந்தக்
கனியின் தோல்
குப்பைக் கூடையில் கிடக்கும்
அப்போது அது
காணும் கனவுகளிலிருந்து அதுவும்
தப்பிக்க முடியாமல் போகும்,
மூலைக்கு மூலை தள்ளி விடப்பட்ட
முதியவர்கள் போல.
எனினும் நம் விரல்களுக்கு, ஏதோ
வினோத சக்தி இருக்கிறது
உபயோகமற்றபோதும், உடைவாளை சதா
பற்றிக் கொண்டிருக்கிறது
சென்று வாருங்கள், உபயோகமற்ற பொருட்களே
நீங்கள்
இன்னொரு ஆறைப்போல் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்
எப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள்
வந்து,
மீண்டும் மீண்டும்
அன்பின் தோல்வியைக் காணுங்கள்.

2.




அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து
விழுந்து கொண்டிருந்தனர்.
பாதித் தூரம் செல்கையில்
மீனாய் மாறினர்
மூச்சுத் திணறி துடித்தனர்
தொடர்ந்து விழுகையில்
பிறந்து இரண்டுநாள் ஆன
குருவிக் குஞ்சாய் ஆயினர்.
அவர்களது
பழுப்பு நிற உடல் நடுநடுங்கி
குப்புற விழுகையில்
தரையைத் தொட்டு
கூழாங்கல்லாய் தெறித்தனர்
பூமிக்குள் விழுந்து
பூமிக்குள்ளிருந்து வெளியேறுகையில்
ரோமங்கள்
முளைத்த ரத்தம் ஆனார்கள்
ரத்தம்
எனச் சொட்டி,சொட்டு சொட்டாய்
அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து
விழத் தொடங்கினர்
எல்லோரும் சுற்றியிருக்கும்போது,
அவனும் அவளும்
யாருமில்லாது
அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து
விழுந்துகொண்டிருக்கின்றனர்.

3.

தப்பித்து
ஓடிக்கொண்டிருக்கிறது, ஆறு
பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து.
அதன் கரையோர நாணலில்
அமர்ந்திருக்கிறது
வயதான வண்ணத்துப்பூச்சி ஒன்று.
அது இன்னும் இறந்து போகவில்லை
நமது நீண்ட திரைகளின் பின்னால்
அலைந்து திரிந்து களைத்திருக்கிறது
அதன் கண்கள் இன்னும் நம்மைப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
பசியோடும் பசியோடும்
யாருமற்ற வெறுமையோடும்.
அதைச்சுற்றி, கொண்டாடி கொண்டாடி
பிடிக்கவரும் குழந்தைகளும் இல்லை.
அதன் சிறகுகளில் ஒளிரும்
மஞ்சள் வெளிச்சம்
காற்றின் அலைக்கழிவை
அமைதியாய் கடக்கிறது
நீ
திரும்பிப் போனால், இப்போதும் அது
அங்கு
அமர்ந்திருப்பதைக்
காணலாம். உன்னால்
திரும்பிச் செல்ல முடிந்தால்

தேவதச்சன்
துணி துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்
*
நவீனத் தமிழ்க்கவிதை உலகில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த முக்கியக் கவிஞர் தேவதச்சன். தேவதச்சனும் ஆனந்த்தும் எழுதிய கவிதைகள் ஒருங்கே தொகுக்கப்பட்டு அவரவர் கைமணல் என்கிற தலைப்பில் வெளிவந்து நல்ல வாசக கவனத்தைப் பெற்றது. படிமத்தன்மையை இயல்பாக அடைகிற இவருடைய கவிதைகள் மிகச்சிறந்த வாசிப்பனுபவம் வழங்கக்கூடியவை.இவருடைய எல்லாக் கவிதைகளையும் அடங்கிய தொகுப்புகடைசி டினோசர்என்கிற தலைப்பில் உயிர்மை வெளியீடாக வந்தது. அதற்குப் பிறகு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பானயாருமற்ற நிழல்உயிர்மை சமீபத்தில் வெளிவந்த கவிதைத் தொகுதிகளில் மிகச்சிறந்த ஒன்று.


வானவில்கள்
அது
நிறங்கள் அடர்த்தியாகிக்
கொண்டுவரும் வானவில். என்
வீட்டின்மேல் அழகாய் வட்டமிடத்
தொடங்கியது
எவ்வளவு பெரிய வில். உள்ளே
வந்தால் வீடு 
உடந்துவிடும்தானேஎன்கிறார்கள்
உறவினர்கள்
வில்லும் உடைந்துதானே
போகும்என்கிறார்கள்
நண்பர்கள்
கண்ணில் வழிந்தோடு
குமிழிகளில்
தானே வளர்கிறது
சப்தத்தைக் கடந்த அன்பில் வில்
தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக
வளைந்திருக்கும்
வானவில்லுக்குள்ளே
இருக்கிறது என் ஊர்.
ஊருக்குள்ளே இருக்கிறது
என் வீடு,
எப்போதும்
கதவுகள் மூடியிருக்கும்
என் சின்னஞ்சிறிய வீடு
கல் எறிதல்
ஆளாளுக்கு கல் எடுத்து
எறிந்தனர். என் கையிலும்
ஒன்றைத் திணித்தனர்
உள்ளங்கையை விரித்து
மலைத்தொடர் வடிவத்தில்
இருந்த கல்லைப் பார்த்தேன்
உற்று நோக்கினேன்
உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று
மலைத்தொடர் மறைந்தது
வெறுங்கையை வேகமாக
வீசினேன்.
விடைபெறும் முகமாகவும்
என்னையும்
தூக்கிச் செல்லேன் என்று
இறைஞ்சும் விதமாகவும்.
காத்திருத்தல்
நிறையப் பேர் உறங்கியபடி காத்திருக்கிறார்கள்
உறவுப்பெண்கள் தேநீர் குடித்தபடி
சித்ரகுப்த நயினார் கதையைப் பாடியபடி
நடுவீட்டில், முதுமகள், இறந்தபடி காத்திருக்கிறாள்
நடுச்சாமம் நகர்வதற்கு
பொழுது புலர்வதற்கு
ரத்த உறவுகள் காலையில்
கதறியபடி வருவதற்கு
சாவின் கண்ணாடி காத்திருக்கிறது.
பக்கத்து வீட்டு ஜன்னலை மூடி
தன் பருத்த காம்புகளை
கணவனுக்கு ஈந்து
இறுகப் புணரும் இளமகளின் நாசியில்
வந்துவந்து போகிறது பத்திவாசனை.
தெருவில்
கலைந்து கிடக்கும்
இரும்புச் சேர்களில்
காத்திருக்கிறது
நிலவொளி.
*****
துணி துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்
******
தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்
நிற்கிறாள் சிறுமி
கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது
மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன
அவள்
கண்ணுக்கு அடங்காமல்
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன
வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்
இன்னொரு பகலில் போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்
சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்
சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை
****
ஆற்றைக் கடந்து செல்லும் காகம்
களைத்திருப்பது போல் தெரிகிறது
ஞாபகத்தின் அமிர்தத்தை
தட்டிவிட்ட
சப்தத்தில்
உடல் முழுக்க வெளிறியிருக்கிறது
ஓவியத்துக்கும் தாளுக்கும்
நடுவே உள்ள
இடைவெளியில்
அசைந்தபடி செல்கின்றன
சோர்வுற்ற அதன் இறக்கைகள்
*



No comments:

Post a Comment