Monday, February 22, 2021
அநுத்தமா / அனுத்தமா / ராஜேஸ்வரி பத்பநாபன்
அநுத்தமா அல்லது அனுத்தமா (ஏப்ரல் 16, 1922 - டிசம்பர் 3, 2010) ஒரு தமிழ்ப் பெண் எழுத்தாளர். ராஜேஸ்வரி பத்பநாபன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடங்களை எழுதியுள்ளார். 1950களில் 60களிலும் நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையினை சித்தரிக்கும் படைப்புகளை எழுதியவர். தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டென் என்று புகழப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க புதினங்கள் மணல்வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம் போன்றவை
மெட்ரிகுலேசன் வரை படித்த அநுத்தமா தன் சொந்த முயற்சியில் இந்தி, பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றார். தனது 25வது வயதில் எழுதத் தொடங்கினார். இவரது முதல் படைப்பான ”அங்கயற்கண்ணி” (1947) கல்கி இதழ் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது “மணல்வீடு” புதினம் முதல் பரிசு பெற்றது. இதற்குப்பின் பல்வேறு இதழ்களில் அநுத்தமா எழுதத்தொடங்கினார். 1956ல் இவருடைய பிரேமகீதம் என்ற புதினம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் விருதினைப் பெற்றது. ஒரே ஒரு வார்த்தை, வேப்ப மரத்து பங்களா போன்ற அநுத்தமாவின் புதினங்கள் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. வேறு சில சிறுகதைகள் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. புனைவுப் படைப்புகளைத் தவிர சில குழந்தைகளுக்கான புத்தகங்களையும் அநுத்தமா எழுதியுள்ளார். மோனிகா ஃபெல்டன் எழுதிய ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
எழுதிய நூல்கள்[தொகு]
லக்சுமி
கௌரி
நைந்த உள்ளம்
சுருதி பேதம்
முத்துச் சிப்பி
பூமா
ஆல மண்டபம்
ஒன்றுபட்டால்
தவம்
ஒரே ஒரு வார்த்தை
வேப்பமரத்து பங்களா
கேட்ட வரம்
மணல் வீடு
ஜயந்திபுரத் திருவிழா
துரத்தும் நிழல்கள்
சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு)
ருசியான கதைகள்
அற்புதமான கதைகள்
பிரமாதமான கதைகள்
படு பேஷான கதைகள்
அழகான கதைகள்
விருதுகள்[தொகு]
அங்கயற்கண்ணி – கல்கி சிறுகதைப் போட்டியில் 2 ஆவது பரிசு
மணல்வீடு, புதினம் , கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது – 1949.
மாற்றாந்தாய், ஜகன் மோகினி இதழின் சிறந்த சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு
தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு
தமிழ் வளர்ச்சிக் கழகப் பாராட்டுப் பத்திரம்
உசாத்துணைகள்[தொகு]
தமிழ் எழுத்தாளர்கள் தளத்தில் அநுத்தமா
சமூகப் புதினங்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
தமிழ் ஆன்லைன் தளத்தில்
காலச்சுவடு ஆர். சூடாமணி அஞ்சலி செய்தி
தி இந்து நாளிதழில் குறிப்பு 1
தி இந்து நாளிதழில் குறிப்பு 2
இந்திய இலக்கியக் கலைக்களஞ்சியம்; சாகித்திய அகாதெமி
எழுத்தாளர் அநுத்தமா காலமானார்
அநுத்தமா 16.4.1922 -ல் ஆந்திராவிலுள்ள நெல்லூரில் பிறந்தார் என்றாலும், பூர்வீகம் வட ஆற்காடு மாவட்டம்தான். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மனாபன். படிப்பில் மிக ஆர்வமாக இருந்த ராஜேஸ்வரிக்கு எழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது 14 வயதிலேயே திடீரென்று திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதனால் படிப்பு தடைப்பட்டது. திருமணமாகி ஒன்பது வருடங்கள் கழித்து, சென்னையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி, மாகாணத்திலேயே முதல் மாணவியாக வந்தார். அந்தக் காலத்திலேயே கதை எழுதணும் என்றெல்லாம் இல்லாமல், திடீரென ‘அங்கயர் கண்ணி’ என்ற கதையை எழுதினார். அது ‘கல்கி’ சிறுகதைப் போட்டியில் 2வது பரிசு கிடைத்தது. பரிசு கிடைத்த உற்சாகத்தில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். முதல் கதையைப் படித்த அவரது மாமனார்தான், ‘அநுத்தமா’ என்ற புனைப் பெயரைச் சூட்டினார்.
அநுத்தமா 22 நாவல்கள், சுமார் 300 சிறுகதைகள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், மற்றும் சிறுவர் நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் ‘ஒரே ஒரு வார்த்தை’ - மனோதத்துவ ரீதியில் தமிழில் வெளிவந்த முதல் நாவல். 1949-ல் இவர் எழுதிய ‘மணல் வீடு’ நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது கிடைத்தது.
இவரது ஒவ்வொரு நாவலும் மக்களின் கவனத்தைக் கவர்ந்ததோடு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளார்கள் சங்க விருது எனப் பல விருதுகள் கிடைத்தன. இவரது ‘கேட்ட வரம்’ நாவலை ஸ்ரீ காஞ்சி பெரியவர் புகழ்ந்து ஆசிர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாற்றாந்தாய்’ சிறுகதைக்கு ‘ஜகன் மோகினி’ இதழில் சிறுகதை போட்டிக்கான தங்கப் பரிசு கிடைத்தது. இவர் பறவையினங்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து, சிறுவர் இலக்கியமாக நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார்.
இவர் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளரும் கூட. பிரெஞ்ச், ருஷ்யன், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சம்ஸ்க்ருதம் என பல மொழிகள் தெரியும் என்றாலும், ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் உண்டு. பலரின் வாழ்க்கையில் இவரது நாவல்கள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. தனது துணிச்சலான எழுத்துக்கள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு மௌனமாகவே இரு பெரிய நன்மையை செய்திருக்கும் இவர் எழுத்துலகப் ‘பிரம்மா’ (less)
Subscribe to:
Post Comments (Atom)
Raagam Thaalam Pallavi - ராகம் தாளம் பல்லவி - Theerppugal Thiruththapadalaam
Raagam Thaalam Pallavi ராகம் தாளம் பல்லவி Theerppugal Thiruththapadalaam Movie - Theerppugal Thiruththapadalaam Music - Shankar Ganesh S...
-
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ . விருத்தாசலம் ( ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த த...
-
ஞானக்கூத்தன் ஞானக்கூத்தன் ( அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார் . இவரது இ...
No comments:
Post a Comment