திரு கேப்டன் / என் சொக்கத்தங்கமே ,
உங்களை என் சிறு வயதில் ஒரு பொதுக்கூட்டத்தில் என் மாமாவுடன் ஈரோட்டில் சந்தித்தபோது "என்னுள் முதன் முதலில் ஒரு நல்ல ஆன்மாவை சந்தித்த உணர்வு , சிலிப்ர்பு ,பூரிப்பு , ஆனந்தம் " .
அப்போது அதன் அர்த்தத்தை தேடி தேடி அலைந்திருக்கிறேன் / வாசித்திருந்திக்கிறேன் .
அதற்கு அர்த்தம் நீங்கள் ஒரு " சுயநலமில்லாத மனிதன் " / சக மனிதனை சக மனிதனாக நேசித்த உள்ளம் , அதற்காக எதையும் எதிர்க்கும் துணிச்சல் !
மக்களுக்கு வாரி வாரி கொடுத்த வள்ளல் !
அரசியல் வானில் இறுதிவரை ஊழல் கறை படியாமல் இருந்து மறைந்ததலைவர் !
நீங்கள் இல்லாத இடம் என்றுமே வெற்றிடம்
நீங்கள் சுவாசிக்காத இந்த காற்றை இப்போது நாங்கள் வெறும் காற்றாகவே பார்க்கிறோம் !
உங்களுக்கு ஒரு நிமிடம் கடவுள் பேச வாய்ப்பு தந்தால் , வந்த அனைவரையும் சாப்பிட்டு போங்கள் என்று மட்டுமே சொல்வீர்கள் !
கக்கன் காமராஜர் வழியில் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் !
வாய்ப்பு இருந்தால் வந்து விடுங்கள் கேப்டன் சார் !
Love you , Miss you Lot.
29/12/2023.3.25PM
No comments:
Post a Comment