பத்துப் பறவைகளோடு பழகி நீங்கள்
ஒரு பறவையாகிட முடியாது :
பத்து நதிகளோடு பழகி நீங்கள்
ஒரு நதியாக முடியாது :
பத்துப் புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
நீங்கள் பதினோராவது புத்தகமாகிப்
படிக்கப்படுவீர்கள் .
- ஈரோடு தமிழன்பன்.
------------------------------------------
சில புத்தகங்களை வாசிப்பதற்கு வயதும் அனுபவமும் போதாமல் இருக்க கூடும். அந்தப் புத்தகம் இன்னொரு வயதில் இன்னொரு மனநிலையில் புரிவதோடு நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக கலாச்சார, சரித்திர, விஞ்ஞான அறிவும், சங்கேதங்கள், குறியீடுகள், கவித்துவ எழுச்சிகளை புரிந்து கொள்ளும் நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை. அவை ஒரு நாளில் உருவாகிவிடுவதில்லை. தொடர்ந்த வாசிப்பும், புரிதலுமே அதை சாத்தியமாக்குகின்றன. ~எஸ்.ராமகிருஷ்ணன்
--------------------------------------------
புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தை தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள், உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக்கொண்டே
இருக்கட்டும் - நா.முத்துகுமார்
-------------------------------------------
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.
---------------------------
No comments:
Post a Comment