பெ: ம்ம்..ம்ம்.. நனனன நானா..
நனன நனன நனன நனநா ..நனன நனன நனநா ..
திரைப்படம்: பாரு பாரு பட்டணம் பாரு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SPB & உமா ரமணன்
பெ: யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்...
கோலமிடும் மேகங்களே ஆஹா
ஆ: யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹா ஹா ஹா…
பெ: கடல் அலைகளின் தாளம்
பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம்
நிதம் பலவித பாவம்
ஆ: ஆடும் கடல் காற்றும்
அங்கு வரும் பாட்டும்
ஓராயிரம் பாவம் ஏற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே..
மனதினிலே கனவுகளே வருகிறதே தினம் தினம்
பெ: யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்..
ஆ: சிறு மலர்களின் வாசம்
பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம்
பல நினைவினில் வாழும்
பெ: அலையென ஓடும் ஆசை வந்து கூடும்
உன் வானமோ பூவைச்சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே
இளமனதில் புது உறவு தெரிகிறதே தினம் தினம்
ஆ: யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்..ம் ..
கோலமிடும் மேகங்களே ஹா..ஹா
பெ: யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
No comments:
Post a Comment