Movie : Endraavathu Oru Naal Music : Shankar-Ganesh Lyrics : Kavignar Muthulingam Singers : SPB Starring : Naresh Kumar and Madhuri
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்.. ( வான் )
ஏட்டில் காதலை போற்றுவார்
வீட்டில் காதலை தூற்றுவார்
எந்நாளில் உள்ளங்கள் மாறும்
இளநெஞ்சங்கள் எப்போது சேரும்
இரு மனம் இணைந்த பின் ஜாதகம் எதற்கு
ஜாதிகள் பார்ப்பதை உலகினில் நிறுத்து
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ ( வான் )
சோழன் திருமகள் மீதிலே
கம்பன் மகன் கொண்ட காதலே
வாளாலே துண்டாகலாச்சு அந்த
ராஜாங்கம் என்னய்யா ஆச்சு
காதலில் மறைந்தவர் சரித்திரம் கோடி
இதை இங்கு தடுத்திட ஏனில்லை நீதி
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ..
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்….
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்…..
No comments:
Post a Comment