படம் : யாரோ அழைக்கிறார்கள் (1985)
பாடியவர் : P. ஜெயச்சந்திரன்இசை : சங்கர் கணேஷ்
ஆ: ம் ம்ஹும்ம் ம்ஹும்ம்
ம் ம்ஹும் ம்ஹும்ம்
ஆ ஹாஹ ஹா
ஓ ஓ ஓ ஓஹோ..
இசை
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
இசை
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவைத் தேடும் ஒரு தேனீ
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து நீ வாடி
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தே...டல்
ஆ: கண்ணே என்று உன்னை அழைக்க. அ அ...
கண்ணே என்று உன்னை அழைக்க
ஒரு காலம் வருமோடி அணைக்க
பெண்ணே பூவை உனை நினைத்து
படும் பாட்டை எங்கு நான் உரைக்க
படும் பாட்டை எங்கு நான் உரைக்க
இந்த இரவில் நான் பா..டும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவைத் தேடும் ஒரு தேனீ
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து நீ வாடி
ஆ: தொட்டால் சுடுவதிந்த நெருப்பு
நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு
தொட்டால் அடங்குமென் கொதிப்பு
நீ .. தொட்டால் அடங்கும் என் கொதிப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு
அடி தோழி இன்னும் ஏன் மிதப்பு
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு
நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு
காயம் அழிவதற்குள் கண்ணே உன் அழகை
கண்கள் பார்த்து வந்த காயம் போக்கிவிடு
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவைத் தேடும் ஒரு தேனீ
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து நீ வாடி
ஆ ஹஹா ..ஹா.
ஓ ஓ ஒஹோ ஹோ
ம்ஹும்ம்.... ம்ஹும்ம்
ம்ஹும்ம்.... ம்ஹும்ம் ம்ம்.
No comments:
Post a Comment