Sunday, October 30, 2022
Rumi documentary - English
இந்தியா பற்றிய அரிய ஆவணப்படத்தின் தொகுப்பு.
புகழ்பெற்ற இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கிய இந்தியா பற்றிய அரிய ஆவணப்படத்தின் தொகுப்பு. மதுரைவீரன் நாடகம், ஜல்லிக்கட்டு, பழைய சினிமா ஸ்டுடியோக்கள். கிராமிய வாழ்க்கை எனத் தமிழகத்தின் அரிய பண்பாட்டுக் கூறுகளை காணும் போது வியப்பளிக்கிறது.
Tuesday, October 25, 2022
“வெள்ளைநிற மல்லிகையோ” - விபுலாநந்த அடிகளாரின்
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர்எதுவோ?வெள்ளைநிறப் பூவும் அல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலம்அடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழ்ந்த மாமலரோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலர்எதுவோ?
காப்பவிழ்ந்த மலரும் அல்ல கழுநீர்த்தொடையும்அல்ல
கூப்பியகைக் காந்தள்அடி கோமகனார் வேண்டுவது
பாட்டளிசேர் கொன்றையோ பாரில்இல்லாக் கற்பகமோ
வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலர்எதுவோ?
பாட்டளிசேர் கொன்றைஅல்ல பாரில்இல்லாப் பூவும்அல்ல
நாட்டவிழி நெய்தல்அடி நாயகனார் வேண்டுவது.
Tuesday, August 30, 2022
அருள் வடிவே பரம்பொருள் வடிவே / Arul vadive paramporul vadive
Song: arul vadive paramporul vadive
Movie: vaazhthungalMusic: L.Vaidyanathan
Singer: KJ Yesudas
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
அவனன்றி வேறோர் அணு அசையாதே.......
அவனன்றி வேறோர் அணு அசையாதே
அருந்தவ மேலோர் நூல் பிழையாதே
வருவதை நீதான் அறிந்திடுவாயே
வழித்துணை நீயே காத்திடுவாயே
நினைவில் நிறைந்திட நிதம் உனை தொழுவேன்
நீதி நீ ஜோதி நீ நெறிமுறை அருள்வாய்
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
துணையென்று சேர்ந்தால் கணை தொடுத்தாரே...
துணையென்று சேர்ந்தால் கணை தொடுத்தாரே
அலை துரும்பானேன் ஆதரித்தாயே
உனையின்றி வேறோர் துணை இங்கு வேண்டாம்
கருணை இல்லாதார் தோழமை வேண்டேன்
மனை இருள் மறைந்திட தினம் உனை பணிந்தேன்
மாசிலா மாமணி மனங்கனிந்தருள்வாய்
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
ஆனந்தமே...அருளே பொருளே புகழே
Saturday, August 6, 2022
Anandha Dhaagam - ஆனந்த தாகம்
Composer : Shyam
ஆனந்த தாகம்...
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே... நாணம் தோற்குமே... அடிக்கடி... மலர்க்கொடி நேரம் பார்க்குமே... ஆனந்த தாகம்... என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ... நாணம் தோற்குமோ... அடிக்கடி... மலர்க்கொடி நேரம் பார்க்குமோ... உண்மையில் என் மயில் ஆடும் முன்... ஆடும் முன்... பொன் மழைக் காலம் போய் விடும்... போகட்டும்... ஆசை ஆறி விட நேர்ந்திடும்.... நேருமோ... ராத்திரி அலைகள் ஓயட்டும்... ஓயுமோ... மூத்தவர் தலைகள் சாயட்டும்... சாயுமோ... தீபத்தின் விழிகள் மூடட்டும்... மூடுமோ... ஆடை கொடு... ஆளை விடு... தேகம் கொடு... போதும் விடு... தாகம் ஊறுதே... வளைக்கரம்... ஒலிக்கையில்... மானம் போகுதே... ஆனந்த தாகம்... கன்னியின் மேனி வேர்க்குதே... ஏனம்மா... ஜன்னலின் கம்பி பார்க்குதே... அட ராமா... பேசும் ஓசை ஒன்று கேட்குதே... கேட்குமோ... திரிகளை விரல்கள் தூண்டுதே... தூண்டாதே... அணைகளை வெள்ளம் தாண்டுதே... தாண்டாதே... ஆசை நாகம் வந்து தீண்டுதே... தீண்டாதே... நாணம் வந்து... ஊர்கின்றது... தீயில் விஷம்... சேர்கின்றது... கண்கள் மூடுதே... அணைக்கையில்... கவிக்குயில்... ஊமையானதே... ஆனந்த தாகம்... லா ல ல லாலா... உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே... லா ல ல லா ல லா ல லா.. நாணம் தோற்குமே... லா ல லா ல லா.. அடிக்கடி... மலர்க்கொடி... நேரம் பார்க்குமே... லா ல லாலலா... நேரம் பார்க்குமே... ஆ ஹா ஹா ஹ ஹா... நேரம் பார்க்குமே... லா ல லாலலா... நேரம் பார்க்குமே... லா ல லாலலா...Tuesday, July 26, 2022
வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது /Vaadai Vaattuthu
- Song : Vaadai Vaattuthu
- Movie/Album Name : Chakkalathi 1980
- Star Cast : Sudhakar, Shoba, Ambika, Vijayan and Y. Vijaya
- Singer : Ilayaraja
- Music Composed by : Ilayaraja
- Lyrics written by : Pulamai Pithan
வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குதுஇது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி
வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம்
என்ன வாட்டும் இல்ல தூக்கம்
ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம்
என்ன வாட்டும் இல்ல தூக்கம்
ஒரே ஆச ஒரே வேளை
தொட்டாப் போதும் கெட்டா போகும்
உன்ன நெனச்சே தவிச்சேன்.
வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
பன்னீர் பூவே உண்ணாத் தேனே
தொட்டேன் நானே மச்சாந்தானே
பன்னீர் பூவே உண்ணாத் தேனே
கண்ண சாய்ச்சு மெல்ல பார்த்து
ஒண்ணே ஒண்ணு தந்தா என்ன
அத நான் நெனச்சே எளச்சேன்..
வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
அதோ வானம் நிலாக்காலம்
அங்கே மேகம் இங்கே தாகம்
அதோ வானம் நிலாக்காலம்
அங்கே மேகம் இங்கே தாகம்
எல்லா வீடும் இதே நேரம்
சொல்லும் பாட்டு நல்லா கேட்டு
கொஞ்சம் கதவ தெற நீ..
வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி
வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது
தென்றலே நீ பேசு Thendrale Nee Pesu
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம் ம்உன் மௌனம் என்னை வாட்டுதே
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
வாய்மொழி ஏதும் இன்றி வெண்ணிலா பேசாதோ
வெண்ணிலா பேசும் மொழி என்னவோ பூவும் அறியும்
வார்த்தைகள் தேவை இல்லை அன்பை நாம் பாராட்ட
கற்பனை ஊறும் நேரமே உனக்காக நானும் ஏங்க
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம் ம்
உன் மௌனம் என்னை வாட்டுதேதென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
பூங்கரம் நீட்டுதின்று பஞ்சணை வாராயோ
பஞ்சணை பாடல் வகை
கொஞ்சமோ தொடங்கும் தொடரும்
நீயும் என் கூட வந்து நித்தமும் கேளாயோ
நெஞ்சமே காமதேவனால் நெருப்பாக மாறும் நேரம்
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம் ம்
உன் மௌனம் என்னை வாட்டுதே
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
- Song : Thendrale Nee Pesu
- Movie/Album Name : Kadavul Amaitha Medai 1979
- Star Cast : Sumithra and Sivakumar
- Singer : P. B. Sreenivas
- Music Composed by : Ilayaraja
- Lyrics written by : Vaali
Monday, July 25, 2022
நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... Ninaithal Unnaithan Ninaipen
Starring: Nethaji,Devi Lalitha Directed by Arun Veerapppan Released in 1986
நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்...
நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... நிழல்போல்... தொடர்வேன்... நினைவாய்... படர்வேன்... அடடா... அடடா... இளமை.. இளமை.. இளமை... நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... ம ம க ரி ஸ... ஸ ரி ஸ... ஸ ரி ஸ... ஸ ரி ஸா... க ரி ஸ ரி... க ம க ம... ரி ப ம ரி ஸ... ஸ ரி ஸ... ஸ ரி ஸ.... ஸ ரி ஸா... நி... ப... ம நி ப ம... ரி ம ப... வா... தினம் தினம் தா... தரிசனம் தான்... நிலவே... நான் தான் வானம்... உறவாடும் நெஞ்சம் ரெண்டுமே ஒரு பாதையில்... பிரிவென்ற வார்த்தை இல்லையே அகராதியில்... பனிக்கால போர்வையாக நீ தை மாசியில்... இதமான தென்றல் காற்று நீ வைகாசியில்.... இரவும்... பகலும்... தொடரும் உறவு இதுவோ.... நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... நான்... தழுவிட நீ... நழுவிட ஏன்... அழகே... இனிமேல் நாணம்... தொடும் போது தேகம் எங்கிலும் ரோமாஞ்சனம்... இதுதானோ காம தேவனின் பிரேமாயணம்... சுவையான காதல் கீதமே படித்தாலென்ன... சுகமான ஆசை ராகமே இசைத்தாலென்ன... இசையும்... லயமும்... இணைய இணைய... இனிமை... நினைத்தால்... உனைத்தான்... நினைப்பேன்... நெஞ்சில்... தமிழாய்... இனிப்பேன்... நிழல்போல்... தொடர்வேன்... நினைவாய்... படர்வேன்... அடடா... அடடா... இளமை.. இளமை.. இளமை...Vaan Mazhai Pol Then Tamil Pol - வான் மழை போல் தேன் தமிழ் போல்
Movie : Endraavathu Oru Naal Music : Shankar-Ganesh Lyrics : Kavignar Muthulingam Singers : SPB Starring : Naresh Kumar and Madhuri
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்.. ( வான் )
ஏட்டில் காதலை போற்றுவார்
வீட்டில் காதலை தூற்றுவார்
எந்நாளில் உள்ளங்கள் மாறும்
இளநெஞ்சங்கள் எப்போது சேரும்
இரு மனம் இணைந்த பின் ஜாதகம் எதற்கு
ஜாதிகள் பார்ப்பதை உலகினில் நிறுத்து
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ ( வான் )
சோழன் திருமகள் மீதிலே
கம்பன் மகன் கொண்ட காதலே
வாளாலே துண்டாகலாச்சு அந்த
ராஜாங்கம் என்னய்யா ஆச்சு
காதலில் மறைந்தவர் சரித்திரம் கோடி
இதை இங்கு தடுத்திட ஏனில்லை நீதி
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ..
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்….
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்…..
வான மழைப்போலே புது பாடல்கள் -Vaana Mazhai Pole audio song Idhu Namma Bhoomi
வான மழைப்போலே புது பாடல்கள்
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்
***
இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெறும்
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும்
இரும்பு பாறையிலும் இசையால் நீர் கசியும்
பழிவாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும்
வான மழைப்போலே புது பாடல்கள்
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்
***
மா கா ம தா நி த... க ம ப த நி... தா நி த சா
ச நி நி த ப க ரி.... சா நி ப கா சா
குரலில் தேன் குழைத்து குயிலைப் படைத்தவர் யார்
மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார்
அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவை இல்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்
வான மழைப்போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்
-
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ . விருத்தாசலம் ( ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த த...
-
எஸ் . வைதீஸ்வரன் 80 | கவிதையின் உயிர்த் தொடர்ச்சி செப்டம்பர் 22 - எஸ் . வைதீஸ்வரன் பிறந்த தினம் சி . சு . செல்லப்பா தொடங்கி ...