வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர்எதுவோ?வெள்ளைநிறப் பூவும் அல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலம்அடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழ்ந்த மாமலரோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலர்எதுவோ?
காப்பவிழ்ந்த மலரும் அல்ல கழுநீர்த்தொடையும்அல்ல
கூப்பியகைக் காந்தள்அடி கோமகனார் வேண்டுவது
பாட்டளிசேர் கொன்றையோ பாரில்இல்லாக் கற்பகமோ
வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலர்எதுவோ?
பாட்டளிசேர் கொன்றைஅல்ல பாரில்இல்லாப் பூவும்அல்ல
நாட்டவிழி நெய்தல்அடி நாயகனார் வேண்டுவது.
*
https://www.youtube.com/watch?v=ulXu-zg_gJo
*
No comments:
Post a Comment