Saturday, May 10, 2025

Melum keelum kodukal podu

ஊருக்கும் வெட்கமில்லை


இந்த உலகுக்கும் வெட்கமில்லை


யாருக்கும் வெட்கமில்லை..
இதிலே அவளுக்கு வெட்கமென்ன~~~
ஹ் ஏ சமுதாயமே


மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதா...ன் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதா...ன் தொல்லையடா


மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதா..ன் ஓவியம்
நீ சொன்னால் காவியம்

*****************
S2 : அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே..
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை...
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு
ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்


மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான்.. ஓவியம்
நீ சொன்னா..ல் காவியம்
*****************


S1:சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா...
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்...
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்


மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்

***************

S2: அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை..
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..
S1:இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை..
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும்.. வெட்கமில்லை...






No comments:

Post a Comment

Melum keelum kodukal podu

ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை.. இதிலே அவளுக்கு வெட்கமென்ன~~~ ஹ் ஏ சமுதாயமே மேலும் கீழும் கோடுகள் ...