Friday, May 9, 2025

யுத்தம்

ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க
இரண்டுபேர் போதும்
எதிரியாக மாறிய நண்பனும்
நண்பனாக மாறிய எதிரியும்.

ஒரு யுத்தத்தின் முடிவில்
ஐந்து பேர் எஞ்சுவார்கள்
இறந்தவன் ஒருவன்
சுமப்பவர் நால்வர்

ஒரு யுத்தம் 
புதிய சாதிகளை உருவாக்குகிறது
அங்கவீனர்கள்
அநாதைகள்
கைம்பெண்கள்
தரித்திரர்கள்

கூடவே
மூடர்களை
கல்நெஞ்சர்களை.

- கவிஞர் சுகுமாரன்

No comments:

Post a Comment

Sojugada soodum malliye