Saturday, May 10, 2025

Melum keelum kodukal podu

ஊருக்கும் வெட்கமில்லை


இந்த உலகுக்கும் வெட்கமில்லை


யாருக்கும் வெட்கமில்லை..
இதிலே அவளுக்கு வெட்கமென்ன~~~
ஹ் ஏ சமுதாயமே


மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதா...ன் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதா...ன் தொல்லையடா


மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதா..ன் ஓவியம்
நீ சொன்னால் காவியம்

*****************
S2 : அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே..
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை...
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு
ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்


மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான்.. ஓவியம்
நீ சொன்னா..ல் காவியம்
*****************


S1:சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா...
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்...
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்


மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்

***************

S2: அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை..
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..
S1:இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை..
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும்.. வெட்கமில்லை...






Friday, May 9, 2025

பெயர்க் காரணம்

ஓஹோ அதுதான் பெயர்க் காரணமா?
------------------------------------------
சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை
தெரிந்துகொள்வோம் ...!

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்... சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது...

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே...

* 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...

* Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)...

* chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று...

* 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...

* மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது...

* தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது...

* சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...

* முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி...

* உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்...

* சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்...

* கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்...

* சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது...

* பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்...

* சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது...

* நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...

* புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது...

* அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...

* 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை...

* முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது...

* மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...

* பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது...

* சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...

* திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...

* பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என
பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது...

* தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே
இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...

* வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது.

-

யுத்தம்

ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க
இரண்டுபேர் போதும்
எதிரியாக மாறிய நண்பனும்
நண்பனாக மாறிய எதிரியும்.

ஒரு யுத்தத்தின் முடிவில்
ஐந்து பேர் எஞ்சுவார்கள்
இறந்தவன் ஒருவன்
சுமப்பவர் நால்வர்

ஒரு யுத்தம் 
புதிய சாதிகளை உருவாக்குகிறது
அங்கவீனர்கள்
அநாதைகள்
கைம்பெண்கள்
தரித்திரர்கள்

கூடவே
மூடர்களை
கல்நெஞ்சர்களை.

- கவிஞர் சுகுமாரன்

kamalam paatha kamalam .

கமலம்...பாத கமலம்...

படம் : மோகமுள்
பாடல் : வாலி்
இசை : இளையராஜா
பாடியது : K.J.யேசுதாஸ்

கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...

உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

ஆகாயம் வெளுக்கும்
அதிகாலை அழகில்
காகங்கள் விழித்து
கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி
நெடுஞ்சாலை கடக்கும்
வில்வண்டி இழுக்கும்
மாட்டின் மணியோசை
மயக்கும் இதமான இளங்காற்று
எனைத் தீண்டித் திரும்பும்
மெதுவாக இசைஞானம்
மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க
அருள் எனும் பேரமுதினைப் பொழிந்திடும்
கமலம் பாத கமலம்


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

நாவாறப் பெரியோர்
நிதமிங்கு இசைக்கும்
தேவாரப் பதிகம்
திசைதோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து
சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில்
தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த
தலம் இந்த தலம் தான்
இசைமாரி நிதம் பெய்த
இடமிந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால்
துதித்தால் நலமுறும்
இசைநயங்களை வழங்கிடும்
கமலம் பாத கமலம்...


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்


kadaluku naan seiyum

இளையராஜாவின் கீதாஞ்சலி

கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம் செங்கதிருக்கு நான் காட்டும் நீராஞ்சனம் அம்மா நான் செலுத்தும் கீதாஞ்சலி உன் அருள் என்னும் சாகரத்தில் தோன்றும் துளி சங்கரன் உதித்தானே காலடியில் அவன் சகலமும் அறிந்தது உன் காலடியில் புவனங்கள் தழைப்பது உன் பூவடியில் என் புத்தியும் லயிப்பது உன் சேவடியில் ஆதியும் அந்தமும் ஏதுமில்லாதொரு சோதி என்றாகிய சுந்தரியே பூத கணங்களும் தேவ கணங்களும் ஓதி உணர்ந்திடும் பண்டரியே ஆய கலைகளும் வேத முறைகளும் பாத மலர் தொழும் சங்கரியே வாய் உள்ள வரையினில் வாழ்த்தி வணங்கிடும் தாய் உனை எந்தன் சந்ததியே சந்ததம் உனை பாடும் இச்சையம்மா அந்த இச்சையும் நீ கொடுத்த பிச்சையம்மா சிந்தையில் நிலைத்திருக்கும் பக்தியம்மா எனக்கும் பக்தியல்லால் ஏது சக்தியம்ம்மா கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம் செங்கதிருக்கு நான் காட்டும் நீராஞ்சனம் அம்மா நான் செலுத்தும் கீதாஞ்சலி உன் அருள் என்னும் சாகரத்தில் தோன்றும் துளி


Malare ennenna kolam. Auto raja

malarehttps://youtu.be/DLZbu4Obn00?feature=shared

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா… மலரே நலமா…

—BGM—

ஆண் : வசந்தம் உன்னோடு சொந்தம்…
உனக்கேன் என்னோடு பந்தம்…
வசந்தம் உன்னோடு சொந்தம்…
உனக்கேன் என்னோடு பந்தம்…
ஏழ்மையின் இலையுதிர் காலத்தில்…
இங்கு பூவேது காயேது…

—BGM—

ஆண் : நினைத்தால் எட்டாத தூரம்…
எனக்கேன் உன் மீது மோகம்…
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே…
நீ எங்கே நான் எங்கே…

ஆண் : திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே…
நீ எங்கே நான் எங்கே…
நீ எங்கே நான் எங்கே…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா மலரே நலமா…

—BGM—

ஆண் : நிலவை வானத்தில் பார்த்து…
அருகே வாவென்று கேட்டு…
நிலவை வானத்தில் பார்த்து…
அருகே வாவென்று கேட்டு…
அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம்…
என்னோடு நான் கண்டேன்…

ஆண் : இருக்கும் வர்க்கங்கள் இரண்டு…
உலகில் இப்போதும் உண்டு…
சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்…
வழி ஏது முடியாது…

ஆண் : சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்…
வழி ஏது முடியாது…
வழி ஏது முடியாது…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா மலரே நலமா…


Melum keelum kodukal podu

ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை.. இதிலே அவளுக்கு வெட்கமென்ன~~~ ஹ் ஏ சமுதாயமே மேலும் கீழும் கோடுகள் ...