Sunday, January 30, 2022

என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை -பட்டினத்தார்

 என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே


உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே
திருவிருப்பையூர்
மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா

அகவிழி (ஆவணப்படம்) - ஒரு பார்வை

அகவிழி (ஆவணப்படம்) - ஒரு பார்வை அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. மானிடராய் பிறந்தாலும் ஊனமின்றி பிறத்தல் அரிது. ஊனமாய் ஜனித்தாலும் ஊக்கமுடன் வாழ்தல் அரிது. ஊனமில்லாமல் பிறந்தவர்களில் பலர் வாழ்வின் மீதான நம்பிக்கை இழந்து வெறுப்புடனே, விரக்தியுடனே வாழ்வைக் கடத்துகின்றனர். ஊனமுற்றவர்களாய் பிறந்தவ்கள் இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் திறன் கொண்டு வாழந்து வருகின்றனர். வரலாறும் படைத்து வருகின்றனர். பிறயவிலேயே பார்வையற்ற ஒருவன் பனையேறி வாழக்கை நடத்தும் அற்புதத்தை ‘அகவிழி’ என்னும் பெயரில் ஓர் ஆவணப் படமாக்கித் தந்துள்ளார் பிஎன்எஸ் பாண்டியன். 


 தமிழகத்தின் கடைகோடியில் இருக்கும் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கிராமம் வெள்ளரி ஓடை. பனைமரங்களே நிறைந்த ஊர். பனையை நம்பியே பொதுமக்களின் பிழைப்பு. பார்வையற்றவராக பிறந்த முருகாண்டிக்கும் பனைமரமே பிழைப்புக்கு வழி. சிறு வயதிலேயே பெருமுயற்சியில் பனையேற கற்றுக் கொண்டு வாழ்வை நடத்துகிறார். இவர் வாழ்வையே ஆவணப்படுத்தபட்டுள்ளது. முருகாண்டி தன் வரலாறு கூறுவதாகவே படம் தொடங்குகிறது. தன் வாழ்வை சுருக்கமானவே கூறுகிறாரர். குடும்ப பிண்ணனியையும் விளக்குகிறார். வீட்டிலிருந்து தேனீர் கடைக்குச் செல்கிறார். சக மனிதர்களோடு தேனீர் அருந்துகிறார். உள்ள{ர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசுகிறார். பின் தோப்புக்குச் சென்று பனை மரம் எறுகிறார். ஓலைகளை வெட்டுகிறார். சீவுகிறார். இவையெல்லாம் வெகு இயல்பாகவே ஒரு பார்வையுள்ளவன் செய்வது போலவே செய்கிறார். பார்வையுள்ளவர்களை பிரமிக்கச் செய்கிறார். ஒரு குடும்பத் தலைவனாகவும் விளங்குகிறார். முருகாண்டியைத் தொடர்ந்தே கேமிரா செல்கிறது. 


கேமிராவை அழகாகக் கையாண்டிருப்பவர் புதுவை இளவேனில். ‘இடைசெவல்’ என்னும் ஆவணப் படத்தை இயக்கியவர். பிஎன்எஸ் பாண்டியனின் எண்ணத்தை, எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளார். படத்தைத் திறம்பட தொகுத்தளித்தவர் ச. மணிகண்ட பிரபு. சிற்பி ஜெயராமனின் குரலில் முருகாண்டியின் பின்புலத்தை அறிய முடிகிறது. இயக்குனர் பிஎன்எஸ் பாண்டியன் ஒரு பத்திரிக்கையாளர். புதுச்சேரியைச் சேர்ந்த இவரின் முதல் ஆவணப்படம் இது. முதல் படம் எனினும் ஒரு தேர்ந்த அனுபவத்தைப் படம் மூலம் காட்டியுள்ளார். ஒரு செய்தித்தாளின் வழியே வெளியான செய்தியே ‘முருகாண்டி’யை ஆவணப்படுத்தத் தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பனையேறியின் வாழ்வை மட்டுமே ஆவணப்படுத்தவில்லை. 


பார்வையற்ற ஒருவரின் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது. பார்வையற்றவர்ளுக்கும் பிறருக்கும் தன்னம்பிக்கையையும் ஏற்படச் செய்துளார். ‘அகவிழி’ என்னும இப்படம் ஆங்கிலம்,ஜெர்மன், பிரான்ச் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் உலக திரைப்பட விழாவிலும் ‘அகவிழி’ பங்கேற்க உள்ளது. ‘அகவிழி’ என்னும் ஆவணப்படம் மூலம் பார்வையற்றவரகளின் ‘அகவிழி’ யை திறந்து காட்டியுள்ளார். பார்வையுள்ளவர்களின் ‘அகவிழி’ யையும் திறக்க முயற்சித்துள்ளார். பிஎன்எஸ் பாண்டியனுக்கு பாராட்டுக்கள். பார்வையுள்ளவர், பார்வையற்றவர் என்னும் இரு பிரிவினருக்குமே தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது


 ‘அகவிழி’. 

 https://www.youtube.com/watch?v=7-jSoPSzLTg 

 https://www.youtube.com/watch?v=oXc9aUsF1UU 

 https://www.youtube.com/watch?v=kX1P2OGBAwc 

 https://www.youtube.com/watch?v=TDwsjtUGkgY 

 https://www.youtube.com/watch?v=uKziFvCBYbc

Thursday, December 16, 2021

ராகம் தேடும் பல்லவி

ராகம் தேடும் பல்லவி கிராமத்தில் சினிமா கனவுகளுடன் சாதிக்க துடிக்கும் இளைஞன் அவனுக்கு ஒரு காதலி சம்பாதியம் இல்லாததால் அவனை அவன் வீட்டாரே ஏளனமாக பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் அவன் காதலி வீட்டார்? இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்க ஒரு கட்டத்தில் ஊர் முழுவதும் இவர்கள் காதல் தெரியவருகிறது மற்றவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ அவன் மனதில் எழும் கேள்வி இந்த நிமிடம் நம்மை நம்பி வந்தால் எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணம் அவனை அந்த ஊரில் இருந்து சென்னைக்கு போக வைக்கிறது அப்போதும் தன் காதலி நகையை கழட்டி உதவுகிறாள். 

 முதல் பாதி மிக கவிதையாக இருக்கும் இந்த படத்தில் தன் காதலியிடம் தான் எழுதிய கதையை கூறுவார் அது ஒரு குறும்படம் போல இருக்கும் காட்சியாகவே படத்தில் வரும் அட்டகாசமாக T.ரஜேந்தர் இயக்கி இருப்பார். படத்தில் வரும் மூங்கிலிலே பாட்டிசைக்கும் பாடல் அற்புதமான வரிகளை கொண்டது எனக்கு மிகவும் பிடித்த வரிகள். 

 ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ. செங்கரும்புச்சாரும் செவ்விதழில் தானே இனிப்பெனும் சுவையை கற்றுக்கொண்டது. அற்புதமான வரிகள் பல வெளிபடங்களுக்கு இசையமைத்து இருந்தால் பல அற்புதமான பாடல்கள் கிடைத்து இருக்கும். சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வரும் நாயகன் சினிமாவிலும், காதலிலும் ஜெய்தாரா என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

 https://www.youtube.com/watch?v=EKwOSd7vCYc

Tuesday, December 7, 2021

திங்கள் மாலை வெண் குடையான் -ILANGO ADIGAL K J YESUDOSS SALIL CHOUDHRY

திங்கள் மாலை வெண் குடையான்

 சென்னி செங்கோல் அது ஓச்சி 
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் 
புலவாய் வாழி காவேரி 
 கங்கை தன்னைப் புணர்ந்தாலும் 
புலவாதொழிதல் கயற்கண்ணாய் 
மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி 
 மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி கன்னி தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கன்னி தன்னை புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய் மன்னும் மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி உழவர் ஓதை மத கோதை உடை நீர் ஓதை தண்பதம் கொள் விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்ததெல்லாம் வாய்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி

Ezhisai Geethame - HQ Digital Audio - ஏழிசை கீதமே - Rasigan Oru Rasigai

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே 

வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான் 
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன் கானம்... 
கானம் ஜீவ கானம் பிறக்காதோ 
இங்கே ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே... 
 ஏதோ ராகம் எனது குரலின் வழி தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர கேட்கும் யாரும் உருகி உருகி விழ காதில் பாயும் புதிய கவிதை இது அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ... ஏனோ... 
நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம் உயிரே உயிரே... 
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே...
 கையில் ஏந்தும் மதுவின் மயக்கமுண்டு கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு உறவு எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை தனிமை கொடுமையில்லை இனிமை இனிமை இதுதான் நான் தான்...
 பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத மனிதன் மனிதன் ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான்... 
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன் கானம்... 
கானம் ஜீவ கானம் பிறக்காதோ 
இங்கே ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே 


Poovannam Pola Nenjam - பூ வண்ணம் போல -சலீல் சௌத்திரி

Azhiyaatha Kolangal - Salil Chowdhury - ஆண் : பூ வண்ணம்…… போல நெஞ்சம்……. பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம் பெண் : பூ வண்ணம்……. போல நெஞ்சம்…… பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம் இருவர் : பூ வண்ணம்….. போல நெஞ்சே……..ஹே… ஏஹே… ஆண் : ஆ ஹாஹா… பெண் : ஆ ஹாஹா… பெண் : இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ ஆண் : பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ பெண் : இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ ஆண் : பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ பெண் : இணைந்த வாழ்வில் பிரிவுமில்லை தனிமையும் இல்லை ஆண் : பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும் பெண் : பூ வண்ணம்……. போல நெஞ்சம்…… ஆண் : பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் பெண் : எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம் இருவர் : பூ வண்ணம்……. போல நெஞ்சே…….ஹே… ஏஹே… ஆண் : படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள் துடிக்கும் தேகமோ என் வெள்ளங்கள் பெண் : பனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் மூட்டங்கள் என் இன்பங்கள் ஆண் : படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள் துடிக்கும் தேகமோ என் வெள்ளங்கள் பெண் : பனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் மூட்டங்கள் என் இன்பங்கள் ஆண் : பிணையும் போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம் பெண் : இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும் ஆண் : பூ வண்ணம்…… போல நெஞ்சம்……. பெண் : பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் ஆண் : எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளம் போடும் தாளம் இருவர் : பூ வண்ணம்……. போல நெஞ்சே…….ஹே… ஏஹே… ஹே… ஏஹே… ஹே… ஏஹே… https://www.youtube.com/watch?v=WYowSWt_hj4

Kannan Varugindra Neram By Kum. Sivasri Skandaprasad கண்ணன் வருகின்ற நேரம்

கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad கண்ணன் வருகின்ற நேரம் கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்! (கண்ணன்) சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசைபாடும்! (கண்ணன்) கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்! (கண்ணன்) தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன செளக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின் முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே மெத்த மெத்தப் பேசி நேர்வோம்! (கண்ணன்)" https://www.youtube.com/watch?v=5jSRcf1cBD4

புத்தகம் படிப்பது ....

புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது,எப்படி படிப்பது,ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன, சி...