Wednesday, January 15, 2025

Kadal Alai Kaalgalai (கடல் அலை கால்களை)

 கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை


'பொம்பள மனசு' (1987) என்ற வெளிவராத படத்தின் அருமையானப் பாடல்.... இசை 'காஞ்சி ரத்தினம்' என்கிற 'ரத்தின சூரியன்', பாடல் வரிகள் கவிஞர். அமரர். தமிழ்மணி. P.ஜெயச்சந்திரனின் தேன்க்குரலில்...

*

கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை சத்தமில்லாத முத்தங்களை கற்று தந்தாள் இந்த கன்னி அலை சத்தமில்லாத முத்தங்களை கற்று தந்தாள் இந்த கன்னி அலை கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை காதலென்னும் ஒரு ஆல விதை கருகியே போவது நியாயமில்லை காதலென்னும் ஒரு ஆல விதை கருகியே போவது நியாயமில்லை ஏங்கியே கேட்கிறேன் கோடி முறை ஏங்கியே கேட்கிறேன் கோடி முறை ஏனடி நமக்குள்ளே வெட்க திரை


கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை உள்ளத்தில் நினைக்கையில் இனிப்பு தந்து உதட்டினில் மட்டும் ஏன் உப்பு தந்தாய் உள்ளத்தில் நினைக்கையில் இனிப்பு தந்து உதட்டினில் மட்டும் ஏன் உப்பு தந்தாய் தித்திக்கும் தேன் தமிழ் புதுக் கவிதை தித்திக்கும் தேன் தமிழ் புதுக் கவிதை நீயே சொல்லடி ஓர் பதிலை கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை கன்னத்தில் நான் இட்ட முத்தங்களை கை கொண்டு நீயோ துடைத்து விட்டாய் கன்னத்தில் நான் இட்ட முத்தங்களை கை கொண்டு நீயோ துடைத்து விட்டாய் உன் எண்ணத்தில் நான் இட்ட முத்தங்களை உன் எண்ணத்தில் நான் இட்ட முத்தங்களை எது கொண்டு நீயும் துடைத்திடுவாய் கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை சத்தமில்லாத முத்தங்களை கற்று தந்தாள் இந்த கன்னி அலை கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை.







No comments:

Post a Comment

The Symphony Day