Movie - Yarukku Yaar Kaaval,
Singers - SP Balasubramaniam, P Susheela.சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே
மறைத்தாளே தேவி
மடியல்லவோ பொன்னூஞ்சல்
உன் மகனாய் நான் வரவோ
சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே
மறைத்தாளே தேவி
உன்னோடு தான் நான் சொல்ல
நாணம் பிறந்ததைய்யா
சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் உன்னிடமே
மறைப்பாளோ தேவி
மன்மதன் கதை எழுத
மடல் என நானிருக்க
உண்டாகும் காவியங்கள்
ஹா
ஒன்றல்ல ஆயிரங்கள்
ரகசிய நாடகத்தில்
ரதி மதன் நடிக்கையிலே
திரை விட நேரமில்லை
ஹா
தொடர்ந்தது காதற் கலை
அம்மாடி நீ அணைக்கையிலே
உன் கைகளிலே
சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே
மறைத்தாளே தேவி
லலலலா
லலலலா
ஹா ஹா
லலலலா
சுகங்களின் ஸ்வரங்களிலே
சுருதி லயம் சேர்ந்திருக்க
சங்கம தாகங்களோ
ஹா
சந்தித்த மோகங்களோ
நீ ஒரு பல்லவியோ
இவள் மனம் உன் சரணம்
என்னென்ன தாளங்களோ
ஹா
எல்லாமே பாவங்களோ
சங்கீதமே விளங்குதம்மா
உன் வடிவினிலே
சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் உன்னிடமே
மறைப்பாளோ தேவி
மடியல்லவோ பொன்னூஞ்ஜல்
உன் மகனாய் நான் வரவோ
ம் ம் ம் ம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
No comments:
Post a Comment