Movie - Paimarakappal (1988),
Music - KV Mahadevan, Singer - KJ Yesudas.: வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் வாழ்க்கை எங்கே முடிகிறது கண்டு பிடிக்க செல்லுங்கள்
: பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்
: {நதியின் முடிவை நாமறிவோம் விதியின் முடிவை யாரறிவார் இரவின் முடிவை நாம் அறிவோம் உறவின் முடிவை யார் அறிவார்} ( 2 )
: நேற்றுகள் இனிமேல் வருவதில்லை நாளைகள் இன்னும் வரவில்லை நேற்றுகள் இனிமேல் வருவதில்லை நாளைகள் இன்னும் வரவில்லை
: பாதைகள் இங்கே தெரியவில்லை பயணங்கள் மட்டும் முடியவில்லை வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்
: {இமையே உனக்கு உறக்கமில்லை இரவே உனக்கு இரக்கமில்லை இதயம் பிரிவை பொறுக்கவில்லை எனக்கோ அழுது பழக்கமில்லை} ( 2 )
: தெய்வத்தை எங்கே தேடுவது திசைகள் எங்கே சேருவது தெய்வத்தை எங்கே தேடுவது திசைகள் எங்கே சேருவது நதி வழிப் போகும் பொம்மையை போல் விதி வழிப் போகும் பெண்மை இது
: வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் வாழ்க்கை எங்கே முடிகிறது கண்டு பிடிக்க செல்லுங்கள்
: பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே
No comments:
Post a Comment