Friday, June 3, 2022

சொந்தங்களை வாழ்த்தி. (படம் - நிலவே மலரே) - SPB - MSV

 

சொந்தங்களை வாழ்த்தி. (படம் - நிலவே மலரே)


பாடியவர்- S.P.பாலசுப்ரமணியம். பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். வருடம்- 1986. படம் வெளியான நாள்- 14-02-1986.

சொந்தங்களை வாழ்த்தி || Sondhangalilai Vazhthi ||Singers : S. P. Balasubrahmanyam || || Music : M. S. Viswanathan || Directed : S. A. Chandrasekhar || Movie : Nilave Malare (film) (1986)||Starring :Baby Shalini,Nadiya,Rahman,Rahman || Sad

சொந்தங்களை...வாழ்த்தி சிந்து பாடுவேன்...

கண்ணீரிலும்... நானோர் கீதம் பாடுவேன்...
எங்கே நான் சென்றாலும்
ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்
வாழ்பவன் நான் நண்பனே.... நண்பனே....
நண்பனே...... நண்பனே.....
சொந்தங்களை...வாழ்த்தி சிந்து பாடுவேன்...
கண்ணீரிலும்.... நானோர் கீதம் பாடுவேன்...




நான் தழுவ நடந்து வரும் தேனருவி...
நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி....
நான் தழுவ நடந்து வரும் தேனருவி...
நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி....
தாயுடன் சேர்ந்தது என் கடன் தீர்ந்தது
ஆடிய நாடகம் அமைதியாய் முடிந்தது
முடிந்தது ..... முடிந்தது.....





அம்மாடி என்னாளும் மாமன் ஞாபகம்

உன் நெஞ்சில் வாழுமோ சொல் கண்மணி பொன்மணி
கண்மணி ......பொன்மணி....
சொந்தங்களை...வாழ்த்தி சிந்து பாடுவேன்...
கண்ணீரிலும்....நானோர் கீதம் பாடுவேன்...





நாயகியே... நினைத்தபடி மாலை இடு....

நாயகனின்... மழலைக்கொரு வாழ்வு கொடு...
நாயகியே நான் நினைத்தபடி மாலை இடு....
நாயகனின்.... மழலைக்கொரு வாழ்வு கொடு....
ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி
மீண்டும் நான் சேர்க்கிறேன் நானொரு மாருதி
மாருதி .... மாருதி....
Music

நல்லோர்கள் எல்லோரும் வாழத்தானொரு

பல்லாண்டு பாடினேன் நான் வாழ்கவே வாழ்கவே
வாழ்கவே ...... வாழ்கவே......
சொந்தங்களை...வாழ்த்தி சிந்து பாடுவேன்...
கண்ணீரிலும்....நானோர் கீதம் பாடுவேன்...
எங்கே நான் சென்றாலும்
ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்
வாழ்பவன் நான் நண்பனே... நண்பனே
நண்பனே...... நண்பனே
சொந்தங்களை...வாழ்த்தி சிந்து பாடுவேன்...
கண்ணீரிலும்....நானோர் கீதம் பாடுவேன்....


No comments:

Post a Comment

Kuliradunnu Manathu - From "Olangal"

song Kuliradunnu Manathu - From "Olangal"