கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே,
சுந்தரேசர் மகிழும்... மயிலே
கதம்ப...வனக்குயிலே
மாதவர் போற்றும் எழிலே
பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்
அந்த அழகிய மாநகர் மதுரையிலே......
மதுரையிலே மதுரையிலே......
மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்
வானவர் பூமாரி பொழிந்திடவே
சிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள் மீனாட்சி வந்தாள்
(அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)
தேனமர் சோலையாம் கதம்பவனம்
அங்கு வானளாவும் தங்க கோபுரம் எங்கும் காணும்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்
(அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)
*
https://www.youtube.com/watch?v=w2S1qF52uOw
*
No comments:
Post a Comment