கனவே கலைகிறதே
காற்றென வழிகள் நுழைகிறதே தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே…..ஏய் ஆண் : காதல் இது தானா உலகெல்லாம் வழிகள் பொதுதானா மனசுக்குள் அணில்பிள்ளை போல அழுவதும் அதுதானா…..ஆ ஆண் : வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில் தனிமையிலே தினம் கத்தி கத்தி உந்தன் பெயர் சொல்லி அழுதேனே….ஏன் காற்று வந்து காதல் சொன்னதா……ஆஅ….ஆண் : இது தானா காதல் இதுதானா
வேர் அரும்பே வீசும் புயல்தானா
இது தானா காதல் இதுதானா
அணு அணுவாய் சாகும் வழிதானா .
ஆண் : கனவே கலைகிறதே
காற்றென வழிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய்
உயிரும் உதிர்கிறதே…..ஏய்
ஆண் : காதல் இது தானா
உலகெல்லாம் வழிகள் பொதுதானா
மனசுக்குள் அணில்பிள்ளை போல
அழுவதும் அதுதானா…..ஆ
பெண் : ஆஅ….ஆஅ..ஆஆ…..
ஆஅ….ஆஅ..ஆஆ…..
ஆண் : அழைப்பதை கானல் நீரா
அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல்
அழகான மாய தோற்றம்
ஆண் : உனக்கான வார்த்தை
அடி ஆயுள் சிறையில் வாழ்கிறதே
நமக்கான விண்மீன் நீ அறியும்
முன்பே உதிர்கிறதே
ஆண் : தரையில் மோதி மழைத்துளி சாகும்
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கின்ற போதும் சிரிக்கிற நானும்
உனக்காக நாளும் தேய்கிறேன்
ஆண் : சரிதானா காதல் பிழைதானா
ஆயுள் வரை தொடரும் வலி தானா
இது தானா காதல் இதுதானா
ஐம்புலனில் ஐயோ தீ ஆனால்
ஆண் : மழை நீர் சுடுகிறதே
மனசுக்குள் அணில்பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய்
உயிரும் உதிர்கிகிறதே….
No comments:
Post a Comment