Friday, November 15, 2024

Ulagam Ippo Engo poguthu * Azhagar Malai -Ilaiyaraaja

https://www.youtube.com/watch?v=cs3zLu6eccg

கனவே கலைகிறதே - Azhagai Irukkirai Bayamai Irukkirathu Yuvan

 கனவே கலைகிறதே

காற்றென வழிகள் நுழைகிறதே தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே…..ஏய் ஆண் : காதல் இது தானா உலகெல்லாம் வழிகள் பொதுதானா மனசுக்குள் அணில்பிள்ளை போல அழுவதும் அதுதானா…..ஆ ஆண் : வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில் தனிமையிலே தினம் கத்தி கத்தி உந்தன் பெயர் சொல்லி அழுதேனே….ஏன் காற்று வந்து காதல் சொன்னதா……ஆஅ….
ஆண் : இது தானா காதல் இதுதானா வேர் அரும்பே வீசும் புயல்தானா இது தானா காதல் இதுதானா அணு அணுவாய் சாகும் வழிதானா . ஆண் : கனவே கலைகிறதே காற்றென வழிகள் நுழைகிறதே தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே…..ஏய்
ஆண் : காதல் இது தானா உலகெல்லாம் வழிகள் பொதுதானா மனசுக்குள் அணில்பிள்ளை போல அழுவதும் அதுதானா…..ஆ பெண் : ஆஅ….ஆஅ..ஆஆ….. ஆஅ….ஆஅ..ஆஆ….. ஆண் : அழைப்பதை கானல் நீரா அறியாது பறவை கூட்டம் தொடுவானம் போலே காதல் அழகான மாய தோற்றம் ஆண் : உனக்கான வார்த்தை அடி ஆயுள் சிறையில் வாழ்கிறதே நமக்கான விண்மீன் நீ அறியும் முன்பே உதிர்கிறதே
ஆண் : தரையில் மோதி மழைத்துளி சாகும் விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும் வலிக்கின்ற போதும் சிரிக்கிற நானும் உனக்காக நாளும் தேய்கிறேன் ஆண் : சரிதானா காதல் பிழைதானா ஆயுள் வரை தொடரும் வலி தானா இது தானா காதல் இதுதானா ஐம்புலனில் ஐயோ தீ ஆனால் ஆண் : மழை நீர் சுடுகிறதே மனசுக்குள் அணில்பிள்ளை அழுகிறதே தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிகிறதே….



Idarinum Song with Lyrics | Thaarai Thappattai | Ilaiyaraaja | Bala -இடரினும் எனதுரு நோய் தொடரினும்

 இடரினும் எனதுரு நோய் தொடரினும்

நின்கழல் தொழுதெழுவேன் வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் நின்கழல் விடுவேன் அல்லேன். தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியரே என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம் அது இந்த கீதம் அல்லவா சொல்லவா உன்னை தொடும் உண்மை அல்லவா நீ வந்ததெங்கோ நானும் வந்ததெங்கோ நம்மை இங்கு ஒன்றாய் சேர்த்ததே இசையே எந்தன் முன்பு உன்னை வைத்ததே பிறந்தது சிற்றூரில் வாழ்வது ஓலை குடிலில் இருக்கும் இவை வந்து என்னை என்ன செய்யும் மேகமற்ற வான் போல தெளிந்த தண்ணீர் போல ஊற்றெடுக்கும் இசை அமுதம் எந்தன் மீது ஓடும் நீ விரும்பும் நேரம் உனக்கிது வேண்டும் உன் கவனம் யாவும் பொழுது போக தீரும் சிறிதே இசைத்தாலும் அருமருந்தாகும் வாழ்வென்ன இசை என்ன எனக்கு ஒன்றாகும் என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம் அது இந்த கீதம் அல்லவா சொல்லவா உன்னை தொடும் உண்மை அல்லவா ஊர்கள் கூடும் திருநாளை தொடங்கி வைக்கும் என் கூட்டம் முடிந்தால் ஊரோரம் ஒதுங்கி வாழ வேண்டும் இசை தெய்வம் கலைவாணி எனக்கருளும் போதும் ஊர் தெய்வம் பேசாது சாட்சி போல பார்க்கும் நிறைந்த எந்தன் நெஞ்சம் திறந்திருக்கும் வானம் குறைகள் தன்னை தள்ளி உண்மை கொண்டு வாழும் எனக்கென்று எது உண்டு இங்கு இந்த மண்ணில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை வேறு என்ன வேண்டும் என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம் அது இந்த கீதம் அல்லவா சொல்லவா உன்னை தொடும் உண்மை அல்லவா !












The Symphony Day