பொல்லாப் புலியினும் பொல்லாக் கொடியன் என்னை
புவிதனில் ஏன் படைத்தாய் சம்போ அனுபல்லவி நல்லோரைக் கனாவினாலும் நணுக மாட்டேன் நல்லது சொன்னாலும் கேட்க மாட்டேன் சரணம் உன் நாமம் என் நாவாலும் சொல்ல மாட்டேன் உள்ளெழும் காமக்ரோத மதம் கொல்ல மாட்டேன் எந்நாளும் மூவாசையை வெல்ல மாட்டேன் என் ஐயன் உன் ஆலயத்துள் செல்ல மாட்டேன்.