Sunday, October 30, 2022
Rumi documentary - English
இந்தியா பற்றிய அரிய ஆவணப்படத்தின் தொகுப்பு.
புகழ்பெற்ற இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கிய இந்தியா பற்றிய அரிய ஆவணப்படத்தின் தொகுப்பு. மதுரைவீரன் நாடகம், ஜல்லிக்கட்டு, பழைய சினிமா ஸ்டுடியோக்கள். கிராமிய வாழ்க்கை எனத் தமிழகத்தின் அரிய பண்பாட்டுக் கூறுகளை காணும் போது வியப்பளிக்கிறது.
Tuesday, October 25, 2022
“வெள்ளைநிற மல்லிகையோ” - விபுலாநந்த அடிகளாரின்
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர்எதுவோ?வெள்ளைநிறப் பூவும் அல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலம்அடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழ்ந்த மாமலரோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலர்எதுவோ?
காப்பவிழ்ந்த மலரும் அல்ல கழுநீர்த்தொடையும்அல்ல
கூப்பியகைக் காந்தள்அடி கோமகனார் வேண்டுவது
பாட்டளிசேர் கொன்றையோ பாரில்இல்லாக் கற்பகமோ
வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலர்எதுவோ?
பாட்டளிசேர் கொன்றைஅல்ல பாரில்இல்லாப் பூவும்அல்ல
நாட்டவிழி நெய்தல்அடி நாயகனார் வேண்டுவது.
*
https://www.youtube.com/watch?v=ulXu-zg_gJo
*
Subscribe to:
Posts (Atom)
-
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ . விருத்தாசலம் ( ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த த...
-
எஸ் . வைதீஸ்வரன் 80 | கவிதையின் உயிர்த் தொடர்ச்சி செப்டம்பர் 22 - எஸ் . வைதீஸ்வரன் பிறந்த தினம் சி . சு . செல்லப்பா தொடங்கி ...