Monday, February 22, 2021

பிரம்மராஜன்

பிரம்மராஜன் பிரம்மராஜன் பற்றி மேலும் வாசிக்கபிரம்மராஜனின் சில கவிதைகளை வாசிக்கபிரம்மராஜனின் வலைத்தளம்பிரம்மராஜன் தமிழின் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். மீட்சி என்னும் இலக்கிய இதழை நடத்தியவர். பல கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 1953ஆம் ஆண்டு பிறந்த பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ.ராஜாராம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தர்மபுரி அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக இருந்தவர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். இதழாளர். கட்டுரையாளர் மற்றும் விமர்சகர். இதுவரை 5 கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி அறிந்த நிரந்தரம் (1980) பழைய மிருகத்துடன் ஒரு புதிய மனிதன் சில குறிப்புகள் சொல்லில் கிடைத்த சங்கிலியைக் கழுத்தில் கட்டி இழுத்துக்கொண்டலைந்தேன் அம்மிருகத்தை. கிளைகளுடன் உரையாடித் திரும்பிய மனநிலைகளில் விநோதப் பறவைகள் பற்றி வண்ண வண்ணமாய்க் கதைகள் சொல்லிற்று கேட்டவர் உறங்க. கண்களில் நெருப்பு ஜொலித்தாலும் பிடறியைத் தூண்டி நானை வளர்த்த பெண்களிடம் நன்றி என்றது குளிர் காற்றைப் பார்வையில் கொணர்ந்து. கோடுகளைத் தாண்டிக் காடுகளில் அலைந்து சிறகு போல் இலகுவாய் மாடிமேலிருந்து பறந்திறங்கிப் பஸ் பிடிக்கக் கூச்சலிட்டுப் பிறாண்டிய மனிதர்களைக் கேலிசெய்தது. அலைதலில் அளவற்றுத் தளர்வுற்றுத் தகர்ந்தபோது சோடா உடைத்து நுரை நீரில் முகம் கழுவி டாக்ஸி பிடித்து வீடு சேர்ப்பித்தேன். தொல்லை போதும் காட்சி சாலையில் விடு என்றவர்க்குச் சொன்னேன் காட்சியே மறையும் விரைந்து சாட்சியாய் ஒரு சொல் மட்டும் நானென்று நிற்கும். இறப்புக்கு முன் சில படிமங்கள் ஜன்னலில் அடைத்த வானம். குறுக்கிடும் பூச்செடிகளுடன் சுப்ரபாதம் இல்லையென்றாலும்கூட மங்களமான பனிப்புகையில் விடியல். நரைத்து உடைந்த இரவின் சிதறல்கள் நேரம் உண்டாகவே வந்துவிட்ட தோட்டியின் கால்கள் முன். மண் தின்று எஞ்சிய எலும்பின் கரைகளில் சிற்பத்தின் வாசனை காற்றைத் தவிர அவனுக்கு மட்டும். பியானேவென இசைத்து ஒலித்து உறங்காமல் திரிந்த மணிக்கூண்டு உணர்விழந்துவிட்டது உறையும் குளிரில். பறந்த பறவைகள் வானில் கீறிய ஓவியம் பார்த்ததில் பந்தயம் இழந்தது நேற்று. விரலிடுக்கில் வழிந்த காலத்தின் துளிகளை மற்றெரு கையில் ஏந்த கணங்களை முழுவதும் எரித்தாகி விட்டது. அவன் இறந்துவிட்டான். இன்றெதற்கு இரண்டாம் மாடியில் அழகான அறை ? அங்கு பூக்கள் நிஜமாய் மலராது. எதிர்கொள்ளல் அரங்கத்தில் அடிக்கடி இருள். எங்கோ ஒரு நாள் நரம்புகளின் லயத்துடன் இழைகிறது வானவில். காதுகள் அற்றவர் அசைவில் கழுதைகளை மனதில் நிறுத்திவிட்டு மறைகின்றனர். அன்னையின் கைகள் சிரசில் ஊர்வதை மீண்டும் எக்கிக் கேட்பதுபோல் வீணையின் விரலில் தரிசனம் தேடி வருகையில் காலில் சகதி. குவித்த விரல்களின் குவளையில் கங்கை நீர். தகரத்தின் பிய்ந்த குரல்கள் கழுவாத முகங்கள் போன்ற கட்டிடங்களின் வாயில் நாறும் . ஆயினும் மீட்டலொன்று போதும். குருதி கசியும் மனதின் சுவர்களில் தளிர்கள் உதயமாகும். இப்பொழுது கற்சிலையின் பாரம் உருகிக் கரைந்ததில் புதியதொரு ஜனனம். காற்றைப் போல் மென்மை அச்சிசுவின் காலெட்டில். நேற்று விழுந்த சருகுகள் நீருக்கு நிறம் தரும். சுவை மாற அலைகளும் உறங்காது. உடனே புதிய ஊற்றுகளின் கதவைத் தட்டு. சற்றுமுன் சிறு விரல்களில் தந்த மலர் இப்பொழுது வாடும். மாற்று புதியதொன்றை மணத்துடன். நாளைக்கென்று நீளாத தெருக்களில் நடக்கவிடு. பார்வை விரியப் பாதை வளரட்டும். முன்பே ஒன்றிருந்தால் உடைத்த கைகள், உளி கல் துகள், கண்ணீர், இடது முலையில் இதழ்கள், சக்கரம், நெரிசல், மரங்கள், கார்கள், கார்பன் மோனாக்சைட், விடியலில் பறவைகளின் குரல், எல்லாமே பளிச்சென்று ஜ்வலிக்க கண் முன் எப்பொழுதும் தா. கூப்பிட்ட குரல் மாலைக்கு மேல் வேளை கெட்டு வந்தால் விபரீதம் தோற்றுவிக்கும் பனங்காடுகள் தாண்டிப் பண்ணை பூத்த விதவை நிலங்களுக்கும் அப்பால் கீற்று நிலா வெற்றுத்தனமாய்க் காயும் மயிரற்ற ஆண் மார்புகளாய்க் கிடக்கும் குன்றுகள் தாண்டித் தனித்துப் போய்த் தனக்குத் தானே சலசலக்கும் ஒற்றை அரசமரத்திற்கும் அப்பால் முகமற்ற குரலொன்று அழைத்தது. பாதைத் திருப்பமொன்றின் பாதியிருளில் வீற்றிருந்தது மனிதக் கைகளே கிளைகளாய் வாவெனப் பரிவுடன் வீசிய கனவின் மரம் அப்பால் அங்கிருக்கும். பாதுகை தேய்ந்தறுந்தும் கட்டிய மணிப்பொறி விட்டெறிந்தும் கலையாமல் தொடர்கிறது பயணம் குரல் தேடி. ஒரு யுகம் வேண்டும் முகம் தேட. அறிந்த நிரந்தரம் ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு. இரவெனும் கருப்புச் சூரியன் வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது. நெட்டித் தள்ளியும் நகராத காலம் எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது. அரைத் தூக்கத்தில் விழித்த காகம் உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக் கேட்காமல் மறதியில் கரைகிறது. இதோ வந்தது முடிவென்ற சாமச் சேவலின் கூவல் ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக. இரண்டாம் தஞ்சம் பொய் முகம் உலர்ந்தன ஏரிகள். நாதியற்றுப்போன நாரைகள் கால்நடைகளின் காலசைப்பில் கண் வைத்துக் காத்திருக்கும். எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்? தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த மனிதன் ஒருவன் ஒட்டடை படிந்த தலையுடன் வாசல் திறந்து வருகிறான் கோதும் விரல்களிடம். காயும் நிலவிலும் கிராமக் குடிசை இருள் மூலைகள் வைத்திருக்கும் மறக்காமல் மின்மினிக்கு. வாழும் பிரமைகள் காலம் அழிந்து கிடந்த நிலையில் கடல் வந்து போயிருக்கிறது. கொடிக்கம்பியும் அலமாரியும் அம்மணமாய்ப் பார்த்து நிற்க வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல். நினைவின் சுவடாய் உதட்டில் படிந்த கரிப்பும் காற்றில் கரைந்துவிட வந்ததோ எனச் சந்தேகம் கவியும். பெண்ணுடல் பட்டுக் கசங்கிய ஆடைகள் மறந்த மனதின் இருண்ட மூலைகளினின்று வெளிப்பட்டு உடல் தேடி அலைவதால் எங்கும் துணியின் சரசரப்பு. அன்று பக்கவாட்டில் நடந்து வந்த மஞ்சள் நிலா தசைகளின் சுடரை நகல் எடுக்க முயன்று கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது. இறந்த நாள்களின் குளிர் நீளக் கைகள் நீண்டு வந்து மறதியைக் கொண்டு தூர்த்துவிட கற்பனைக்கும் சொந்தமில்லை கோலங்கள். இளம் இரவில் இறந்தவர்கள் இளம் இரவில் இறந்தவர்கள் பிண வாடை மிதி வண்டியில் தொற்றி வந்து அறைச் சுவர்களில் ஒட்டடையாய்த் தொங்கும். அடுத்த நாள் நாசித் துவாரங்களில் சாம்பல் நிறத்தில் காளான்கள் பூக்கும். அடிக்கடி கொடி மின்னல்கள் வலியெனப் படர்வதால் இதயச் சுவர்கள் காரை உதிர்க்கும். இரவறுத்தும் ஓயாத சிள் வண்டுகள் இலையுதிரும் காலைகளில் குயில்களின் பாட்டில் குரல் நீட்டிக் குறுக்கிடும். கானக மரங்கள் மூளைச் சாலைகளில் படை எடுக்கும். லாரி என்ஜின்களின் நடை துவள ஒரு ஸிம்பனியின் உச்சம் முற்றுப் பெறும். இறந்த இலைகள் நடைக்கு அடியில் கிசுகிசுக்கும். சாணைக்கல் நெருப்புக் கம்பிகள் தெறித்து விழக் காடு கருகி உடல் நாற்றம் வீசும். நூலறுந்த பட்டமொன்று யோனியில் நீந்தும் விந்தின் நினைவோடு பூத்து நிற்கும் முருங்கையில் வால் துடிக்கும். நாளைக்கும் காற்று வரும். நிலைப்பாடு பசிகொண்டு நிதம் செல்லும் பாதங்கள் தொலைவற்ற தூரம் கேட்கும். சாலை மரங்கள் சற்றே உரங்கிப்போவென்று சொல்லும் தாம் தந்த நிழலுக்காய். கால்களில் தீப்பொறி குதிரைகளின் கனைப்பை நினைவுக்குள் புகை மூட்டும். நிழல் தின்று ஆறாது பசியெனினும் ஒரு கிளை பிடித்து குடையெனப் பாவனைசெய்ய தொடரும் பயணம். நினைவுக்கென வெட்டிக் கொடுத்து பின் காயங்களில் சாசுவதம் கண்டு வரும் நாள்கள் கழியும். வேர்கொள்ளாக் கால்கள் பகற் கானலில் சாம்பலாகும் கட்டிடங்களுக்கு அப்பால் நீலத் தொடுவானம் தேடிச் செல்ல வழி மரங்கள் தாம் பெற்ற ராகங்களின் நிரந்தரமாறியாது உடல் சிலிர்த்துப் பாதையை நிறைக்கும் கந்தல் நிழல் கொண்டு. சுடர் அரங்கும்நத்தை ஓடுகளும் அடுத்த மழைக்குக் காத்திராமல் ஓடைக்கரையில் ஒதுங்கிய நத்தை ஓடுகளுக்குத் தெரியாது. விண்ணில் ஏகிய குதிரை வீரர்கள் விட்டுச் சென்ற பட்டாக் கத்திகள் குல்மொஹர் மரங்களில் தொங்கக் கோடை நெருப்பில் சிவப்புக் கலவரத்தில் திக்கெங்கும் முன்னங்கால்களில் தாவும் வேட்டை நாய்கள் தலை உதறிச் சிலிர்த்த பனித்துளிகள் துருவங்களில் விழுந்து பூமியைச் சிறைபிடிக்க நெஞ்சில் சுடருடன் நடனம் காட்டுகின்றன இவ்வறையின் தேய்த்த கண்ணாடிகள் மட்டும். இரவை உதறிய பறவையின் சிறு குரல் சூரியனின் சாய்ந்த ஒளிக்கற்றையில் சரிய சுவரில் சாய்ந்த மிருதங்கம் உருகி உறை கழலுகிறது. உறைந்த புல்லாங்குழலும் கூடடைந்த பறவைச் சிறகில் ஆர்கனும் முன் விழித்து சமன் செய்துகொள்வதால் எடுத்த அடியிலும் பிடித்த முத்திரையிலும் நடனம் தொடர்கிறது. இல்லாமல் இருந்தது ஒன்றுதான் இல்லாமல் இருந்தது ஒன்றுதான். மகிழ்ச்சியான கடல் அது. தவிர பறவைக் குரல்களாலும் உடைபடாமல் தடுப்பவர்களற்றுக் காலடியில் சுழன்று கொண்டிருந்தது ஓர் ஆரஞ்சுப் பழமென அச்சாம்ராஜ்யம். புலர் பொழுதுகளில் வெண்மையாய் விழித்தது மலர்ந்த குளங்களில். வெறுக்காமல் மறுத்துப் புறப்பட்டபோது சகுனம் பாராதிருந்தும் மழை மரங்களின் மாலைச் சிந்தனையாகப் பின்னிய கிளைகளில் சிக்கி நின்றது மௌனமாய் மஞ்சள் சூரியன். வந்த நிலத்தில் அன்று மழையில் நனைந்தது தொடக்கம். தேவையென்று கொண்டுவந்த நாள்களின் எச்சம் பாக்கெட்டில் நிறைந்த வார்த்தைகள் மேல் பூத்தது. மத்தாப்புக் கம்பிகளும் நனைந்திருந்தன. மின்கம்பிகளின் தொய்வில் இன்று உறக்கமின்மை ஊஞ்சல் பயில நரம்பின் முடிச்சுகளில் கண்கூசும் வெளிச்சம். மீட்சிக்கு முயற்சியற்றுப் போயினும் தாறுமாறாய்க் கிடக்கும் வார்த்தைகளை உலுக்கிஎழுப்ப வேண்டும். கூண்டுகள் புதிய இலக்குகளை மனதில் வைத்து எம்பிப் பறந்ததில் சிக்கிக்கொண்டது என் சிறகின் ஒரு மூலை முழுமையடையாத விடுதலையின் கம்பிகளில். அறுத்துக்கொண்டு அரைச் சொர்க்கத்திலிருந்து படபடக்க யத்தனிக்கையில் உன் நினைவு ஒற்றை இறகாய் பாரம் அறியாமல் இறங்கியது. உன் விடுதலைக்காய் நான் இறைத்த வார்த்தைகள் பாதை பாவாமல் சிதறி வழியடைத்தன. நாலெட்டில் உனது இலக்கு என நான் நினைத்தபோதிலும் இடைவெளியில் புகுந்து புறப்பட்டது உன் பயணம். கால்களின் அளப்புக்கு மிஞ்சிய என் பாதையில் நானே பதிக்கவில்லை ஒரு பாதமும். தனிமொழி-1 நேற்றுப் பாலையாய் விரிந்திருந்து இன்று குறுகிப்போன நாள்களில் நீ எண்ணியிருக்க முடியாது நான் உன் வழித்துணையாய் வருவேனென்று. உன் ஸ்நேகத்துக்கு முன் புற்றென வளர்ந்திருந்தது நடுமனதில் தனிமை. விழிகள் அழுந்த மூடிக் காதுகள் வைகறைக் காக்கைகளுக்காகக் காத்திருந்த இரவுகளில் தேய்ந்து மறையும் புகை வண்டியொலியில் கலந்தன உன் நினைவுகள். இருந்தும் விழிக்கும் இரவின் நீளத்தைக் குறைக்கும் புத்தகங்களைப் போல இதமிருந்தது அவற்றில். விழித்தெழுந்து அழுதது குழந்தை தான் மறந்த முலைகளுக்காய் வேண்டி. இன்றென் ஈரம் படர்ந்த விழிகளில் நீ கலைந்த வெளிச்சம். தனிமொழி-2 நீரில் மூழ்கிய கடிகாரங்களென சப்தமற்றுப் போயிருந்த காலம் நான் உன்னிலிருந்து பிரிந்தவுடன் கடல் காக்கைகளாய்ச் சிறகு விரித்துப் பறந்து ஒலிகளாய் வெடித்துச் சிதறித் தன் நீட்சியை நினைவுறுத்தும். காது மடலைத் தடவியபடி நான் இனிச் சிவப்பு நிற டீயின் கசப்பில் உன்னை மறக்க முயல்வேன். நீயும் காற்றை வெட்டிச் சாய்த்துச் சுழலும் மின் விசிறியில் கவனம் கொடுத்துப் பேனா பிடித்தெழுதி பஸ் ஏறி வீடு செல்வாய். எனினும் இருளுக்கு முன் நீ போய்ச் சேர வேண்டுமென்று என் மனம் வேண்டும். தனிமொழி-3 உன்னுடன் கழித்த சாதாரண நிமிடங்கள்கூட முட்கள் முளைத்த வண்ணக் கற்களென நினைவின் சதையைக் கிழிக்கின்றன. மெல்லிய ஸ்வாசங்கள் புயலின் நினைவுடன் இரைச்சலிடுகின்றன. உன் கையில் பூட்டிய என் விரல்களை அறுத்து விடுதலை பெற்றும் மனதில் சொட்டிய குருதித் துளிகள் வளர்க்கின்றன முள் மரங்களை. சரிவுகள் சார்பற்ற வெறுமையின் சாத்தியம் எனக்குச் சாதகம் ஆக வெறுப்பதற்கில்லை எனினும் உன்னை விலக்க என்னுள் யத்தனிப்பு. உணர்வுக்கயிறுகளை அசைக்கத் தெரியாது பட்டங்களை அறுத்துக் காட்சிகளை அழித்து நெற்றி நிலம் தொட மன்னிப்பை யாசித்தவன் குழந்தை போல் சாலையைத் தாண்டும் உன்னிடம் பேசுவது தத்துவம். அடைந்ததைக் கடப்பது கடந்த பின் அப்பால் என்னவென்பது எல்லாம் சப்தமாய்ப் புழுதியை இறைத்துக் கரை உடைக்கும் குளங்களை உன் கண்ணில் தோற்றுவிக்க என் நிழல் சிதைகிறது. உருவம் இழந்து அந்நியனாய் நான் நடக்கிறேன். 26 மே 1979 கந்தலில் முடிந்து தந்தாலும் கனவுகளை முடிவற்றதென்று உணராமல் மடியில் குழந்தையெனக் கிடக்கும் ஒரு பாட்டில் ஹார்லிக்ஸ் உடன் வாங்கி வைத்துக்கொண்டேன். பஸ்ஸின் தகர முதுகைப் பிய்த்தன பனிக்கற்கள் முதுகில் நனைந்தும் கண்களில் தூசி நிரம்பியும் நோய் நடப்பதற்கில்லாமல் செய்திருந்தும் தேவதைகள் என்னிடம் வந்ததால் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஊர் அடைந்ததும் பஸ்ஸை விட்டிறங்கும் உன் கால்களிடம் சொல்லும் மழையில் ஊறிய மண். பரிசு முடிவற்றது என்று வரும் அந்த இன்று என்ற நினைவு பதியுமுன் வைத்துக்கொள் என ஒட்டி ஏந்திய கைக்குழியில் வார்த்தாய் புது நாள்களை. அத்துடன் அறியாப் பரிசும் கண்திறவாக் குட்டிகளாய் வீட்டுக் கொட்டிலில் கிடந்தது. அரும்புகள் தொடுத்த உயிர்த்த விரல்கள் சற்றே விறைத்தன செவியில் படபடத்த சிறகொலியில். மாற்றுவதென்பதே முடியாமல் மலைக்க உயிர் கரைத்து உண்டு வாழ்கிறது கபாலத்தில் மின்னல் புழு. நிழல் விளையாட்டு கனவிலும் சாதுவாய் வருகிற கோழையைப் போல் வளர்ந்துவிட்ட இந்நிழல் விளையாட்டிலும் உனக்குக் கண்ணாமூச்சி. நான் நான் இல்லையென்று நீ மட்டும் நீதான் என்றும் கற்பனை அரண்கட்டி என்னைக் கை விரல்களுக்கப்பால் மறைத்து என்னில் ஒரு பூனைக்குட்டியைப் பிரித்தெடுத்து உனக்கு விளையாட்டு. பால் எனக்கு என்றும் போல். கால்களும் பஞ்சல்லவென்பதால் குவளைகள் உடைவதில்லை. உன் சிதறல்களில் விழும் ஆச்சர்யம் வளையல் துண்டுகளில் உருவிழக்கும். மனக்கூட்டில் வந்தடையும் சோகம். வளர்ந்த பின்னும் மழலையே பேச்சென்றால் நிறைய உண்டு மரப்பாச்சிகள் உனக்கு. இவ்விதமாகவும் மையத்தில் குறுக்கும் நெடுக்குமாய்க் கொடிபடரும் வலிகளுக்கு பதில் தர இன்றிரவு உறக்கத்துடன் உறவில்லை. மூக்கில் காற்றின் முடிச்சுகள் சிக்கலாகிக் கனவுக்குள் கனவும் நாற்றங்காலில் மலைத்தோட்ட மலர்விதைகளும் ஈரம் வறண்டு கரும்புகைக்குக் கருவாகலாம். நீளும் சாலைகளும் மாறும் முகங்களும் பனிப்புகையில் பார்வையிழந்து இடத்துக்கு இடம் தாவும் ஒற்றைக் காக்கையும் அவசரமாய்ப் பார்வை அழியலாம். வர்ணம் கரைந்த நிமிஷங்களில் செப்பியா நிற ஆல்பம் ஒன்றில் விரல் சுட்டி முகம் காட்டிப் புத்தகங்கள் விட்டுச் சென்றவன் தனக்கு என்றொரு பெண் சொல்லலாம். வழியில் நிகழ்ந்த இழப்பு கற்கள் வழிவிடுமா எனக் காத்திருந்து அடையாத ஊற்றுக்கண் தேடி அலைந்த வேளையில் விரித்த வறிய விரல்களாய் இலை களைந்து மரம் விண்ணை நோக்கி வேண்டிற்று. மௌன ஓட்டுக் குகையிலிருந்து தவழ்ந்ததும் வாரியணைக்கும் உன்னையும் வரும் வழியில் மறதியாய் விட்டுவந்த உறக்கத்துடன் சாம்பல் இரவொன்றில் இழந்துவிட்டேன் அழியாதே என்ற அன்புச் சொல் நிக்கொட்டின் மணக்கும் உதடுகளின் அருகாமையில் கேட்காது. வயலின்கள் பாடிய நாட்கள் போய் இனி கதவின் குரல்கள் எண்ணெய்க்கு அழும். இரவின் பரிமாணங்களை அளந்து காற்றிடம் பேசிக்கொண்டிருந்தாலும் கீர்த்தனைகள் சமர்ப்பிக்க மனித ஜீவன் இருக்காது. தெரு முனைகளும் தருணமும் அன்று நான் சோகமாய்த் திரும்பியதாய் மனிதர்கள் சொன்னார்கள் நினைவு நிலைகளில் குளிர் நீர்ப்பரப்பு நிறைந்ததை அறியாமல். தவசியை ஒத்த ஒளி நிமிடம் ஒரு துளி விழுந்து மனம் வர்ணங்களற்ற நீள்வெளியாகும். தருணமிதில் காற்றில் லேசான தக்கையாகும் உடலும். கனவில் சிறகின்றிப் பறக்கும் நிழல் “நான்”கள் ஒன்றில் ஒன்றிணைந்து சமதளத்தில் அலையாய்ப் பரவும் இசையில் சங்கமம். சிரிக்கும் முலைகள், சிற்பம், நீ, மழையில் மணக்கும் உன் அணைப்பு சூரியன் மறையும் தெரு முனைகள் தெருவிளக்குகளின் இடையிருளில் நட்ஷத்ரங்கள் தொண்டை நனைய ஒரு வாய் நீர் யாவும் சுவை அறும். சமம். கடவுளற்ற உலகம் எனக்கென்றால் உனக்கு உன் பிரார்த்தனைகள். வேண்டுமானால் என் நிறமற்ற நிமிடங்கள் வளர உன் கடவுளிடம் முறையிடு. அது ஒரு ராகம் இருட்டைச் செதுக்கி நின்று நீண்ட செவ்வகத்தில் நிறுத்தி ஒளியின் பிரமையை நிராகரித்த உனக்குப் பசி பறந்தது. அமிலத்தின் கோஷங்களை அடக்கிய உன் குரல் மழைக்கும் சோறிட்டது. வாகன இரைச்சல் போர்த்திய புழுதி கரைந்தது. ஆத்மா இப்போது புது ரோஜாப்பூ. துண்டித்த நரம்புகளுக்குச் சிகிச்சை வேண்டி உன்னிடம் யாசித்தது யதுகுல காம்போஜி. தாலாட்டிக் கரைத்தாய் என்னை நீலாம்பரியில். கனவின் எல்லைகள் கைக்குள்பட முலைக்காம்புகளின் முத்தம் மூடிய இமைகளின் மீது. என் ரதங்கள் புறப்பட்டுப் போய்விடும். சோறும் உறங்கிவிடும் உன் வயிற்றின் ஒடுங்கல் நிமிரும் நேரம். அதிகாலைக் கனவில் தேவிக்கு ஒரு பாடல் ஆயிரம் ஆல் இலைகளால் என் வானத்தைத் தைத்த பின்னும் பட்டாய் மின்னுகிறது நீலத்துணுக்குகளில் மயிர் சுழித்து உள் வாங்கும் உன் வயிறு. ரத்த தாளங்களில் வீணை உலவ நாட்டியங்களற்ற என் மேடையில் உன் முந்தானை. அருகிலான விண்வெளிப் புகைப்படம் நிலவின் அப்பக்கம் கனவுக் கோடுகள் விரிந்த என் நிலம். அகழ்வில் சிசுக் குரல் உன் கால் சதங்கைகளை ஒரு தரம் ஒலிக்கச் சொல்லி என் இன்னொரு நனவிடம் கேட்கும். மின்னலும் ஆர்கன் இசையும் ஒருங்கி மடிந்ததும் மனிதர் அற்றுப் பிறக்கும் ஒரு சமவெளி. பூட்டிக்கொண்ட பூமிக்குள் ஒரு மழலை மடிந்திருக்கும். கடவுளும் ஒரு கனவின் கருவும் நிலைகள் மூன்றினையும் மறந்து கடல் நிற மணிமாலைகளுடன் இருள் வேளைகளில் கரைகளில் திரும்பிக்கொண்டிருக்கிறேன். கழுகு இரை கொள்ளும் நேரம் களைத்து வருகிறேன் படிகளில் உருண்டு. பிரகாரத்தை அணைத்த இடைவெளிகளில் மனிதர்களின் மையத்தில் கைக் கமண்டலத்தில் முகம் அசைய நடப்பது அறியாமல் அமர்ந்திருக்க இட்டுவிடு என்று வருகிறான் குரு நீர்த்தட்டுடன். நானாவென நானே கேட்டுச் சிதறுமுன் கும்பல் கூவுகிறது ஆம் ஆமென்று. குருவின் நெற்றியில் என் பெருவிரல். காணவில்லை என் முகம். கல்லில் விழும் உளிகளும் கலைக்காத கனவில் தொலைவிலிருந்தும் மூலைக்கு மூலை தெறித்து விழுகிறது அலை நுரை. திரை நனைந்து எலுமிச்சை நிறத்தில் விடிகிறது கடற்கரை. கோயிலில் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தொடுவானில் அலையும் புலிகளின் தொண்டையில் சப்தக் கவளமாய்த் திரண்டு பாம்பின் அசைவுகளில் தவழ்ந்து பாசியில் படிகிறேன். மெஷின்களுக்குப் பின்னாலும் மனிதர்கள் நன்றாகத் தாழிட்டிருந்தும் கதவின் இடைவெளிகளில் பால் வண்ணத்தில் பிளிறுகிறது தெரியாத தெருவிளக்கு. தார்ச்சாலையின் மௌனம் கலைக்கத் தினசரிப் பேப்பரின் பையொன்று காற்றுடன் பேசிச் சரசரக்கிறது. அண்ணாந்து பார்த்து இரண்டு நட்சத்திரங்களின் தொலைவு வெளி பற்றி உனக்கு அக்கறை இல்லை என்று சொல்கிறேன். மாதா கோயிலின் மணிகள் இருள் மடியில் புரளும்போதும்கூட மிலான் நகரத்து ஓவியங்களுக்காக விழிக்கும் வியப்பற்றவளாய் இருக்கிறாய். மத்தாப்பு ஒளிகளாய்ச் செவியைக் கீறும் முன்பறியாத பூச்சி சொல்கிறது என்னிடம். நியூட்ரான் குண்டுகள் குதறிய பின்னும் மீண்டும் ஒரு முறை புழுவாய்த் தோன்றுவான் மனிதன் என்பது ஐயம். சிங்கத்தின் தாடி மார்க்ஸின் சோற்றுக் கணக்கு எல்லாம் இங்கு மண்ணில் இறைத்த விந்தாகிவிட்டது என்று உன் அறியாமை பற்றிப் பட்டியல்கள் அடுக்கப்படும். காலம் எவ்வாறு அளக்கப்படினும் மலையாய் உயரும் கான்க்ரீட் எலும்புகளுக்குப் பின்னாலும் நியான் விளக்குகளைத் தாண்டியும் எனது உனது பாஷைகள் ரத்தமும் சதையும்- மொழி வெறும் சங்கேதக் குறிகளாய் கம்ப்யூட்டர்களின் கைகளில் சிக்கிய பின்னும். மனநிழல் ஓரம் இடம் பெயரும் ஈசல் குருவிகளின் அலையாய் ஸ்ருதிக்குத் தவித்தது இவ்வறை. உன் கருப்பைக் குருதியின் வெளிச்சம் இரவு விளக்காக. பாதைகளின் புழுதிக்குச் செம்பு நீர் ஊற்றாமல் காலில் தலை கவிழ்த்து உறக்கம் வரும். நடு முதுகில் மயிலிறகு இமை பிளந்து அடியாற்றின் இருளுக்குள் இருள் தேடும். நிலைக்கண்ணாடியற்ற என் குருட்டுத்தனம் மலடாகும். விடை பெறும் நேரம் சொல்லாதே ஓய்வுக்கென அமர்ந்தேன் என. உன் சொல் ஏற்காது என் உயரம். எனக்கு எதிராய் என் நிலைக்கண்ணாடியில் உனக்கு ஒரு சித்திரம் சொல்வாய் அப்படி ஒரு மனிதன் இருந்தானென்று. இல்லை நினைத்துக்கொள்வாய் சிதறல்களில் செழிப்பைச் செதுக்கிய கடவுள் ஒருவன் என்று. இல்லை காட்சிகொள்ளும் உன் மனது செலவுக்கென்று சுதந்திரத்தின் கட்டுகளை முறிக்காத அதீத மனிதன் இருந்தானாவென்று. அலையலையாய் இனி உன் கரை மாந்தர் கோஷமிடுவர் கொஞ்ச நாளாய் வந்து வாழ்ந்த மௌனத்தைக் கொன்று. தோட்டமும் கரையும் பாதையும் அலையும் நுரையும். இமைக்காதிருந்து நிமிஷங்களை வலையில் பிடித்து சதையில் சதை திருடும் சரித்திரம் உயிர்த்ததில்லை என்றும். சொற்கள் விலகித் தெரிந்திருக்கலாம் தோட்டம். துளையிடப்பட்ட ஜீனியா மலர்கள் கட்டளையிடும். கம்பி வேலியின் நட்ஷத்திரங்களில் பச்சை நிற வெட்டுக்கிளிகள் கழுவேற்றப்படும். கோடுகள் மட்டும் வழிவதில்லை என் விரல்களில் சில சமயம் துரப்பணக்கருவிகளும் கூர்நுனிப் புற்களும். நட்டுப் பதினைந்து நாட்கள் நாற்று கண் விழிக்கவில்லை. கவலைகொள்ளும் ஊர் சென்ற மனது வாரத்தின் இறுதியில் அன்புடன் டேலியாக் கிழங்குகளின் கழுத்தில் விழும் நகக் குறி. கிழங்கிற்குள்ளும் ஒரு மிருகம் சதை தின்று வாழும் என நினைக்கிறாய். நானில்லை. ஆனால் அழுத்தமாய் மூச்சிழுத்து அரைவட்டம் போய்வந்து சாம்பல் பனி விலக்கித் தெரியவிட்டேன் சதையும் புகையுமாய் தினம் ஒரு பிணம் எரியும் என் வழியை. ஓய்வற்றுத் திரியும் பத்தாம் கபால நரம்பு அமில ஆறுகளை நினைத்துப் பிளந்த நாக்குகளைச் சுழற்றும். நுரையீரல் மரக்கிளையில் கூடு வளர்க்கும் சுதை நெருப்பு. வர்ணத்திட்டுகளை செதிலாய் வளர்த்தும் விருப்பத்தைச் சிலிர்த்து உடைத்துவிட்டுத் திசுக்கள் அழிந்து மிஞ்சிய மூளைச் சிற்பத்தை மொகஞ்சதாரோ எனக் கண்டெடுத்து புதிய தூண்கள் தேடிச் செல்கையில் நீ மீண்டும் சொல்வாய் இப்படியும் ஒரு மனிதன் இருந்தானென வெளியேற்றம் பனித்துணியில் ஒரு முகத்திரை. நகத்தைக் கிழித்த கல்லுக்கும் நடனம் கற்பனையாய் ஓர் இசைக்கு. கூடத் தொடரும் சப்தம் ருசிக்கும் கூட்டம். நிழல்கள் அறுபடாமல் அலையும். களைத்துவிட்டது. சிக்கி விடுவேன் என்றபோது என்னுடலை முழுக்காற்றுக்குத் தின்னக் கொடுத்து உடைகளை நிழற்கறையான்களுக்கும் எறிந்துவிட்டேன். காற்று மட்டும் தொடைகளைத் திறந்து போவெனச் சொன்னது என்னை. முடிவுரை தற்காலிகமாக இறுதி வரிகள் உன் மனதில் கேள்வியாகும் நேரம் என்னுருவம் எங்கோ தொலைவில் கல் மரம். காய்ந்து விழுந்தும் நெற்றியில் பொட்டின் தடம். காற்றில் கரைந்திருக்கும் என் அரூபச்சொற்களின் மிச்சம். ஆலின் விதையொன்று உண்டாகும் வைத்துக் கொள் என் பால்யத்தை. பின் கல்லலைகள் மோதும் உன் காதில். என் சிரிப்பும். வீடு சென்று தேடு பாக்கிச் சொத்துகள் எனது என்னவென்று. திண்ணைப்புறம் கிடக்கும் ஆற்றங்கரைக் கூழாங்கல். பச்சைப் புதரில் வெறும் விரலில் பிடுங்கிய மூங்கில் கிளை ஒன்று. பிரம்மராஜன் கவிதைகள்-நகுலன் அப்படித்தான் தோன்றுகிறது: பழகிப் பழகி நைந்துபோன விஷயங்கள் சிந்தையில் கவ்விப் பிடிப்பதில்லை. பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று யந்திர ரீதியில் இழுத்துப் பார்ப்பது போல் பழக்கங்களின் பிடியிலிருந்து மாறுகையில்தான் சிந்தனை தீவிரமாக இயங்குகிறது. பிரக்ஞை சிலிர்க்கிறது; ஒரு புதிய மரபின் தொடக்கம்; பிறகு மீண்டும் பழைய கதை; பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று இழுத்துப் பார்ப்பதுபோல். ஆனால் பழக்கத்தின் பிடிப்பை உதறி ஒரு புது உலகை – அப்படி முழுவதும் புதிதில்லை – படைப்பாளி சிருஷ்டிக்கையில், பழக்கத்தின் வேகத்தில் மரத்துப்போன பிரக்ஞை புதியதையும் , அது நைந்துபோன பாஷையில்லை என்ற அதே காரணத்தின் அதை அசட்டை செய்கிறது! ஞானக்கூத்தன் சொல்வது மாதிரி பிரம்மராஜன் கவிதை “ஒரு வித்தியாசமான குரல்” என்பது மாத்திரமில்லை; அது ஒரு சாசுவதமான குரல் என்பதிலும் ஐயமில்லை. அதன் தன்மைகளை பின்வருமாறு குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். அது படிம வியாபகமானது; இங்கு படிமம் நுண்மையாகக் கட்டுக் கோப்புடன் இணைகிறது; இறுக்கமான நடை; அவரே சொல்கிற மாதிரி அறிவுலகின் இணைப்பிருந்தாலும் அறிவு உணர்வாக மாறுகிறது. எனவே கவிதை பிறக்கிறது. அவர் Co-authorship என்பதையும் புறக்கணிப்பதற்கில்லை. ஏன் என்றால் ஒரு கவிஞன் உலகம் அவன் அனுபவ உலகம்; இந்த அனுபவ உலகம் வாசகனுடைய அனுபவ உலகுடன் இணைகையில்தான் உண்மையான ரஸனை சூடு பிடிக்கிறது. இது வாசகனுக்கு அவனுக்குரிய மதிப்பைத் தருகிறது. கவிதையில் வார்த்தைகள் ஒன்றிற்கு மேற்பட்ட “அர்த்தங்கள்” உடையவை. ஐம்புலன்களால் கிரகிக்கப்பட்டு, அனுபவச் சூழல்களால் வளர்ச்சியுற்று, சப்தமும் சித்திரமுமாக உள்வியாபகமுற்று அனுபவம் வார்த்தையின் மூலம் அதீத எல்லைகளை நோக்கி நகர்கிறது. சுருக்கமாகக் கவிதையில் வார்த்தையின் உள்வியாபகம் எல்லையற்ற பரிமாணம் உடையது. பிரம்மராஜன் வார்த்தையில் “அரூபமான வார்த்தைகள் செயல் இழந்து போகும் பொழுது அந்த இடத்தை நிறைவு செய்யப் படிமங்களால் மட்டுமே முடியும்.” மீண்டும், “படிமங்கள் இயக்கம் மிகுந்தவை” எங்கு ”படிமம் இயக்கமற்றதாக இருப்பின் அதைக் கொண்டிருக்கும் கவிதை செயல்வீச்சு அற்றதாகவே இருக்கும்”. ஆங்கிலத்தில் கவிதை எழுதும் ஒரு இந்தியக் கவிஞர் சொன்னதாகக் கேள்வி: சில இந்தியக் கவிஞர்களின் படைப்புகளை நோக்குகையில் அவர்கள் ஐம்புலன்கள் அற்றவர்கள் என்று சந்தேகம் தோன்றுகிறது” என்று. அது எப்படியாவது போகட்டும். “எதிர் கொள்ளல்” என்று ஒரு கவிதை. பாரதி கவிதையில் இருந்து ஒரு வரி. “வீணையடி நீயெனக்கு; மேவும் விரல் நானுக்கு”. இங்கு ரஸனை என்பது நேர்கோடாக இணைக் குறியீடாகச் செல்கிறது. ஆனால் பிரம்மராஜன் கவிதை இந்த அனுபவத்தை அதன் நானாவிதமான, ஏன், தாறுமாறான தன்மைகளுடன் காட்டுகிறது. ஆமாம், முதல்வரியே விதவிதமான விபரீதமான சப்த அலைகளை எழுப்புகிறது. “அரங்கத்தில் அடிக்கடி இருள்”. இந்தக் கவிதையில் கலைஞனுக்கும் கலைக்கும், கலைக்கும் அதை எதிர்கொள்பவர்களுக்கும் உள்ள உறவுகளைப் பற்றிப் பேசப்படுகிறது. இந்த அடிப்படையில்; இருள், வானவில், கழுதைகள், அன்னை மடியில் பால் சுரப்பது, வீணை, கங்கை நீர், தகரத்தின் பிய்ந்த குரல்கள், மனதின் சுவர்கள், தளிர், உதயம் என்ற படிம வரிசைகள் இணைகின்றன. மௌனமாகப் படிப்பவர்களுக்கு நிறையவே கிடைக்கும். தொடர்கிறேன். தொடரும் பொழுதே இப்படியெல்லாம் தெளிவு படுத்த வேணுமா என்று என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன். புதுக் குரலின் பரிணாமத்தில் ஈடுபாடுள்ளவன் என்பதனாலும், அந்தக் குரல் அதன் இயல்பில் வெளி உலகிலும் தொடர்ந்து ஒலிக்க ஒரு சூழலைச் சிருஷ்டி செய்ய வேண்டியிருப்பதும் ஒரு அவசியம் என்ற நோக்கத்திலும் என்னைத் திருப்திப் படுத்திக் கொள்கிறேன். “அறிந்த நிரந்தரம்” என்ற கவிதை, வாழ்க்கையை மீறியது ஒன்றுமில்லை என்ற ஒரு தத்துவச் சரடு (இந்தத் தத்துவத்தின் மீது உங்களுக்கும் எனக்கும் ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது இல்லையே இங்கு விஷயம்) இதில் வரும் படிம வரிசை :- கருப்புச் சூரியன் X ரேடியம் முட்கள் நகராத காலம் X ஊரும் நத்தை காகம் X குழந்தையின் ரோஜாப் பாதங்கள் சாமச்சேவலின் கூவல் = ஒரு ஸிம்பனி வாழ்க்கையில் எந்த பிரச்னைக்கும் ஒரு முடிவு உண்டு என்ற மையம். இந்தக் கவிதையில் ஒரு படிம ப்ரயோகத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். மூன்று வரிகள் :_ அரைத் தூக்கத்தில் விழித்த காகம் உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக் கேட்காமல் மறதியில் கரைகிறது. இங்குச் சில வாசகர்களேனும் “விழித்த காகம்… ரோஜாப் பாதங்களை கேட்காமல் மறதியில் கரைகிறது” என்ற அடிக்குறி இடப்பட்ட தொடரைக் கண்டு “புரியவில்லை” என்று சொல்லலாம். இதற்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் தரலாம்; ஆனால் மீண்டும் அது இல்லையே இங்கே விஷயம்! நவீன கதையில் ஒரு புலனால் உணர்வதை இன்னொரு புலனுக்கு இணைப்பது என்பது ஒரு உத்தியாகக் கையாளபடுகிறது. மாத்திரமில்லை, இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் ரௌத்ரம் என்ற அனுபவம் வரும்போது ரத்தச் சிவப்பை நினைவு கூர்கிறோமென்றால், ரோஜாவின் இளஞ் சிவப்பில் இனிமையான மெல்லிய இசையின் நாதத்தைக் கேட்கிறோமென்று சொல்லலாம். “இளம் இரவில் இறந்தவர்கள்” என்ற இன்னொரு கவிதை இந்த வார்த்தைச் சேர்க்கையே, பிரம்மராஜன் கூறுகிறது மாதிரி, ஒரு கலாபூர்வமான விளைவை உண்டு பண்ணுகிறது. முக்கியமாக “இளம்” என்ற வார்த்தை. நவீன இலக்கியத்தில் வாழ்க்கை சிக்கல் நிரம்பியதாக இருப்பதால் நமது கவிதை படிம மயமாகி விடுகிறது. இந்தக் கவிதையில் படிம ப்ரயோகத்தைப் பற்றிச் சற்று விரிவாகவே எழுதலாமென்று நினைக்கிறேன். பிணவாடை தொங்கும், பூக்கும்-காளான் பூக்கும் என்பதால் இதயச் சுவர்கள் பிறகு குயில்X சில் வண்டு . இதைத் தொடர்ந்து காகை மரங்கள் X மூளைச் சாலைகள் (தொகுதியை ஒரு முறை முழுவதும் படித்தவர்களுக்கு மிஷின்களுக்குப் பின்னாலும் மனிதர்கள் என்ற கவிதை ஞாபகம் வரும்) லாரி எஞ்ஜின்கள் ஸிம்பனி முற்றுப் பெறும். விஞ்ஞானம் வியாபார உலகை நோக்கி நகரும் புகைப்பலம். இதற்கு எதிராக இயற்கையின் உயிர்த்தெழல்- … இறந்த இவைகள் கிசுகிசுக்கும். இதை நவீன விமர்சன பாஷையில் குறிப்பிடுவதென்றால் எழுத்துக்கொண்டு ஜனனம் X மரணம் என்ற எதிர்மறைகளை இசைக்கும் வித்தை. மறுபடியும் காடு கருக, உடல் நாற்றம் வீச, ஒயற்கை உயிர்த்தெழுவது போல் படிமம் மூலம் நூலறுந்த பட்டம் மூங்கையில் படபடப்பது யோனியில் நீந்தும் விந்து என்பதால் அது போல்-இது என்ற ஒத்திசைப்பு- மீண்டும் வார்த்தை மூலம் ஒரு ஒத்திசைப்பு-முரண்பாடு இணைகிறது என்று கடைசியாக உச்சம் – நாளைக்கும் காற்று வரும். கவிதையில் அர்த்தம் எலியட் பாஷையில் சொல்வதென்றால் வாசகனுக்குப் போடும் இறைச்சித் துண்டு! அனுபவத்தின் ஐக்கியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இதைப் படிமங்கள் இயங்குவதால் வெவ்வேறு உலகங்களை மாறுபட்ட நிலைகளை ஒற்றுமை அடையச் செய்வது மாறாக நிற்கும் அனுபவ உலகங்களிலிருந்து படிமங்களை இணைப்பதால் பிரம்மராஜன் கூறியமாதிரி படிமம் தனியாகி நிற்காமல் ஒரு சுழற்சி மூலம் கட்டமைப்பில் பாய்கிறது. இன்னும் ஒரு கவிதையை விஸ்தரித்து விட்டு மேலே போகின்றேன். கடைசிக் கவிதை, இதைப் பற்றி நான் அதிகமாக எழுத விரும்பவில்லை. படிமங்களை ஊன்றிப் படிப்பவர்களுக்கு - பச்சைப் புதரில் வெறும் விரல் பிடுங்கிய மூங்கில் கிளை ஒன்று என்றதில் “வெறும் விரல்” என்பது எந்தத் தோல்வியும் அதன் இயல்பை மீறி சாசுவத்தை நோக்கி நகர்கிறது என்று. இந்தக் கவிதைகளைப் படிப்பவர்கள் படிமங்களைக் கவனமாகப் படிப்பவர்களுக்குப் “புரியாமல் இருக்கிறது” என்ற பிரமை நீங்கி விடும். மேலும் கவிதையில் வார்த்தை “கருத்துத் தொடர்பு” என்ற அடிப்படையில் வித-விதமான நிலைகளைப் பெறுகிறது. இன்னும் ஒன்று – கவிதையில் வரி- சப்த அடிப்படையில் நகர்கிறது என்ற பிரமையில் மயங்காமல் வரிக்குவரி “அர்த்தம்” தொடர்கிறது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வாசித்தால் “புரியவில்லை” என்ற பிரச்னை தலை காட்டாது! ஆனால் படிமம் மாத்திரமில்லை கவிதை, உயிரின் துடிப்பு உணர்ச்சி வேகத்தில் இங்கு கவிதையாக மிளிர்கிறது. அனுபவத்தின் பல குரல்களை இங்கு கேட்கலாம். அவற்றில் சில வருமாறு: மனிதன்தான் வாழ்க்கைக்கு, இயற்கைக்கு, ஏன் சாவுக்குக்கூட அர்த்தம் கொடுக்கிறான். (இறப்புக்கு முன் சில படிமங்கள்) கலைஞனுக்கு அனுபவத்தின் வெளிப்பாடு மாத்திரம் போதும். (எதிர் கொள்ளல்) இந்த நிற்கும் பொழுது கூட எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு ஜ்வலிக்கிறது. (இப்பொழுது) இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். முன்னர் கூறிய மாதிரி – இவற்றில் எல்லாம் மனித குலத்தின் மாறாத புராதனமான குரல் மிகப் புதுமையாக வருகிறது. ஒரு சமயம் கூறிய மாதிரி மிகப் புதியதின் பின் மிகப் பழையதின் சாயை காணப்படுகிறது. சில உதாரணங்கள் :- ஒரு யுகம் வேண்டும் முகம் தேட அய்யப்ப பணிக்கர் மீட்சிக்குப் பயனற்றுப் போயினும் தாறு மாறாய்க் கிடக்கும் வார்த்தைகளை எழுப்ப வேண்டும் உலுக்கி. ”புத்தகங்களை விட்டுச் சென்றவன் தனக்கு” என்று ஒரு பெண் சொல்லலாம். இந்த வரிகள் உன்மனதின் கேள்வியாகும் நேரம் என்னுருவம் எங்கோ தொலைவில் கல்மரம். *** நன்றி: ஆபிதீன் பக்கங்கள் அறிந்த நிரந்தரம் ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு. இரவெனும் கருப்புச் சூரியன் வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது. நெட்டித் தள்ளியும் நகராத காலம் எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது. அரைத் தூக்கத்தில் விழித்த காகம் உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக் கேட்காமல் மறதியில் கரைகிறது. இதோ வந்தது முடிவென்ற சாமச் சேவலின் கூவல் ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக. இரண்டாம் தஞ்சம் பொய் முகம் உலர்ந்தன ஏரிகள். நாதியற்றுப்போன நாரைகள் கால்நடைகளின் காலசைப்பில் கண் வைத்துக் காத்திருக்கும். எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்? தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த மனிதன் ஒருவன் ஒட்டடை படிந்த தலையுடன் வாசல் திறந்து வருகிறான் கோதும் விரல்களிடம். காயும் நிலவிலும் கிராமக் குடிசை இருள் மூலைகள் வைத்திருக்கும் மறக்காமல் மின்மினிக்கு. வாழும் பிரமைகள் காலம் அழிந்து கிடந்த நிலையில் கடல் வந்து போயிருக்கிறது. கொடிக்கம்பியும் அலமாரியும் அம்மணமாய்ப் பார்த்து நிற்க வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல். நினைவின் சுவடாய் உதட்டில் படிந்த கரிப்பும் காற்றில் கரைந்துவிட வந்ததோ எனச் சந்தேகம் கவியும். பெண்ணுடல் பட்டுக் கசங்கிய ஆடைகள் மறந்த மனதின் இருண்ட மூலைகளினின்று வெளிப்பட்டு உடல் தேடி அலைவதால் எங்கும் துணியின் சரசரப்பு. அன்று பக்கவாட்டில் நடந்து வந்த மஞ்சள் நிலா தசைகளின் சுடரை நகல் எடுக்க முயன்று கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது. இறந்த நாள்களின் குளிர் நீளக் கைகள் நீண்டு வந்து மறதியைக் கொண்டு தூர்த்துவிட கற்பனைக்கும் சொந்தமில்லை கோலங்கள். அறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி - பிற கவிதைகள் அறிந்த நிரந்தரம் ரேடியம் முட்களெனச் சுடர் விடுகிறது விழிப்பு இரவென்னும் கருப்புச் சூரியன் வழிக்குகையில் எங்கோசிக்கித் தவிக்கிறது நெட்டித் தள்ளியும் நகராத காலம் எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது அரைத் தூக்கத்தில் விழித்த காகம் உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக் கேட்காமல் மறதியில் கரைகிறது இதோ வந்தது முடிவென்ற சாமச் சேவலின் கூவல் ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக Balu mahendra film society 25 April at 15:39 • முத்தமும் எச்சமும் மிச்சம் =============================================== எனக்காகும் எச்சிலில் பிறர்க்கான முத்தம் உள்ளத்துக்கான வித்துகளில் உவர்களின் எண்ணெய்த் திரவியம் என் மழைக்கான உக்கிரம் உன் வெய்யிலின் தியானம் இந்தக் குதிரையின் தாகசாந்தியில் அம்மனிதரின் அபானம் பிறர்க்கான நஞ்சிலிருக்கும் கட்டுச் சோற்று மூட்டை எனது அவரின் ஊர்திகளில் என் பிராணன் மறிக்கும் கடுவெளி மறப்போர்க்கான நினைவுகளில் ஞாபகச் சிடுக்குகள் உலர்ந்த என் படுக்கையில் நத்தையூரிப் போகிறது அவளின் காலைப் போதுகளில் என் சந்தியாகாலக் கிருதிகள் ஈருடம்பும் ஒன்று போல விழிக்காது கொற்றவா தாமதித்து உறங்கி நிதானித்து இறக்கும் என்றாலும் என் கதிர்களை மறைக்கும் காலம் அவர்களின் தாளடியிலிருக்காது என் தேனீக்களின் யாகசாலையில் அவன் உலைக்கலம் உடலத்துக்கான என்னுடையில் மறவரின் சடலத்துப் போர்வைகள் கிழிபடலாகும் வாளின் முனைக் கருணையில் மின்னும் சாரைச் சேதில் இந்த நெல் சூல்கொள்ள பூக்கிறது என் மூங்கில் வனம் - பிரம்மராஜன் The Kiss (Lovers), oil and gold leaf on canvas, 1907–1908.[1] Österreichische Galerie Belvedere, Vienna, 180 cm × 180 cm பழம்நீயாகாத ஊர் - பிரம்மராஜன் யாத்ரீகனாயிருந்தும் ஆற்றுப்படுத்துவாரில்லை நாயகியின் உதட்டுச் சிவப்பினைச் சொன்னால் அதென்ன அடையாளமோ மயானக் கரையோரம் நகைப்பார்கள் எள்ளி வடக்கா வடமேற்கா வாழ்தொழிலே காதலென்றால் நம்புவார் யாரிங்கு உடல் வறண்டு செங்கல் நிறத்தில் சிறுநீர் கழித்து பருகுநீர் விற்கும் கடை தேடிச் சஷ்டி அனுஷ்டிக்கும் பேருந்துகளின் சந்தடியில் புழுதிப் பாங்கோடு விவரிக்கச் சொன்னார்கள் காசில்லாதவன் கடவுள் போன்றவன் கனியே ஒரு கணம் உன் முகம் மறுபுறம் உன் பின்புறம் மோஹநிவாரணி உனக்கென்ன பைத்தியமா சகலருக்கும்தான் எல்லாம் விவரி சொல்லி ஒழி ஒரு கோடையின் மாலையில் பசி மறந்தவள் என்னால் எல்லோரும்தான் உய்விடம் உணவற்றவர்கள் வேறு எட்டுத் திசையிலும் . . . தந்தையுமானவர் சொந்த ஊர்? இந்த ஊரின் பெயரையே அவளுக்கு வைத்திருக்கலாம் என்னை உந்திக்கொள்கிறேன் இந்த ஊரை விடுத்து தென்மேற்கில் கடலின் அனுமதி அனுஷ்டானம் அதற்கில்லை எச்சில் கீழ்மேல் உன்னதம் விலக்கு உருப்படி செருப்பின் தீட்டு வகுத்த கோடு மீறப்படினும் பற்றி எழாது தண்டனைத் தீ காலடிகளின் அழுத்தமே பிரதானம் ஏன்கால் யார் அணிகிறார் பாகுபடுத்தியதில்லை பாதங்கள் கழுவும் சாதியுமற்று சமயம் துறந்து தோணியும் எரிந்த தீக்குச்சியும் துரப்பணக் கப்பலின் அமானுஷ்யமும் மிதவைகள்தான் தராசு முள்ளின் மையத் துல்லியமாய் பூக்கொண்டும் போகலாம் திக்கெட்டிலும் திறந்தே வைக்கலாம் பூட்டலாம் திறவுகோல் மறந்த உலோபிக்குத் திறன்பிக்கவில்லை கடலின் கதவு உருண்டைப் பாறைமீது பாசி படிந்த கோட்டை அந்தரத்திலிருந்து கடலில் விழுந்த வண்ணமாய் நிறுத்துங்கள் ரெனே மகரித் உரைநடை எழுதத் தெரியாதவனும் பெயர்ந்த மொழி சரளிக்காதவனும் விதேசி பாஷையில் லகு கிடையாது இவனுக்கு இருப்பினும் இக்கடையோரும் தென்னாடு உடைய சிவனும் கால்வைக்க அனுமதியும் கரையில் நுரை விரித்து கடலின் காருண்யம் என்னை நானே தொலைத்துக்கொண்டு தேடவேண்டிய முகாந்திரம் இருந்தும் புரட்டிப் புரட்டிக் கொண்டுவந்து சேர்க்கிறது என்ன வேண்டும் 040என்பது எனக்கே தெரியாமல் அலைக்கழிய இந்த சமுத்திரத்தின் குவளை விளிம்பிலிருந்து புவி ஈர்ப்பு உதறிய தக்கையாய் மிதந்து வரும் சமயம் தற்கொலை செய்துகொள்ள வந்த அயற்கடல் திமிங்கிலத்தைப் புரட்டும் அலைகள் சரம் பட்டாசுகளை உயர்த்தி வீசி வெடித்து பறைக் கொட்டுகள் சுதேசிச் சாராய முருக்கத்துடன் என் மரிப்பினை நாடகித்து நிம்மதித்தவர் மரண பீதி பெற அவதரித்தலின் அத்தியாவசியம் திறக்கப்படும் ஏழு கதவுகள் எல்லைகளை ஏளனிக்கும் புயற்பருந்து அலை நீராடிய எருமைகள் திரும்பும் நேரம் நீ பெண்ணாகத்தான் என்றும் விரித்த படுக்கையில் என் அருகாமையில் மிக. கடலும் கடவுளும் பெண் பெயர்ப்பு மொழியில் உதிர்க்க முடியா உப்புத் தாவரத்தை எழுதுவதாகிறது அலை உடைந்த கடல் 040எழுதப்படாதிருப்பவை பூமியின் சிகரங்கள் தோற்கும் தன் வயிற்று மலைகள் உஷ்ண நீரோட்டப் பெருஞ்சாலைகள் தாவரமா ஜந்துவா சொல்வதற்கியலாது ஒடிந்தால் குருதி வெண்மை ஒழுகும் பவளப் பாறைகள் மின்சார ஈல்களின் பாம்புச் சவுக்குச் சொடுக்கு மனக் கணக்கின் சமன் கனவுகளைத் தவறாக்கும் தீவுகள் உறுத்தும் நிஜம் திருடிவந்து தெப்பம் கட்டி வளர்க்கும் மானுடரின் செயற்கை முத்துகள் தைத்தவுடன் விஷத்தின் சாவு நொடி நொடியாய் துடித்து உயரும் நங்கூரப் படிமத் திருக்கை மீனின் முள் நீ அறியாததையா எழுதிவிடமுடியுமா நேற்றின் நிழல்களை இன்றின் இசைவுகளை சர்வ நில்லாமை மிக்க அம்மையே பாலித்தருள் தெரிந்தும் தெரியாமலும் கதிரியக்கக் கப்பல்களின் மூன்று சமாதிகள் உன் கருவறைக்குள் செலுத்தி நாளாகிறது கருப்பை அழற்சி கடவுளுக்கு இல்லை ஒலியின்றி எழுத முடியும் கத்தலின்றி பாட முடியும் பரிசுகளைக் கைம்மாறு ஆக்காது தொடர்ந்து தத்தம் செய்யும் முத்தக் கடவுள் கடல் வீடு-ஓர் அறிக்கை கடல் ஒரு வீடாகுமெனக் கற்றதில்லை கனவிலும் 040குடியிருப்போ கல்கூடோ இன்றி எட்டடிக் குச்சுக்குள் இருந்ததாயிருக்கும் பழக்கம் காரணம். பெயர் தெரியாக் கொடிகள் வரியோடிப் போர்த்திய மணல் முற்றம் சோடியங்களில் இருந்து சொட்டும் செங்கல் நிறப் பனித்திரை உம் துவாலை பற்பசை மாற்று உள்ளாடை தலைவாரும் காற்று நிமிஷத்திற்கு இருமுறை கலைக்கும் திருத்தும் காலைக்கடன் மாலை உடன் எங்கெங்கிலும் விரும்பியவாறு. நிதமும் புத்திய அறைகள் நுரையீரல் பலூன் நிறைந்து விரியும் தூய பிராணன். கூரை தலைதான் அன்றேல் விரித்த குடை கூரையற்றது குட்டிச்சுவர் என்பவர் முகத்து மீசை வழிகிறது கூழாக. நிலவின் நித்திரைக் காலத்தும் உச்சத்து முத்திரையிலும் கால் கொண்ட அறைகள் நகர்ந்துவிடும் பின்னுக்கு. அலைகள் அன்பளித்த தெளிவு செங்கற்கள் கல்லாது. மீன்கள் உம் பசிக்கு மீதமும் உண்டு கடல்பாசி. காலி செய்ய அச்சுறுத்தல் இல்லை கார்மழைதான் எச்சுறுத்தும் அறிக்கை என்பதையும் அறியாது அலைகிறது கடல். அறிந்த மொழிகளை எண்ணிக் கணக்கு வைத்திருப்பதில்லை அது. வண்ணப் புகைப்படத்துக் கடல் இந்தப் புகைப்படத்தில் எழுதியிருப்பது 040எனது கடல் அல்லவென்று சொல்வதியலாது எனினும் சிவந்த நீர் அலைகள் இவை நீலம் மறந்தவை என்பது தவிர யாதான கடல்போல் தான் தோன்றுகிறது தரைக்குத் தூண்டிலிடும் அடர்த்தி மிகும் தென்னை ஓலைகள் அறுந்த சூரியன் நனைந்து கொலையுண்டாயிருக்கும் அலைகள் குற்றுத் தாவரங்கள் அழிபட்ட மொட்டைக் கரை இதுவல்ல எனது மாக்கடலின் வலது விலாவில் ஏதோ ஒன்றில் அது இருப்பது நின் சுயம்போல் நிச்சயம் இலையுதிர்கால கைச்சாலையின் சருகுகள் பெருக்கி தூய்மை என்று அறிவிப்பு தரும் துன்பத்தை உவக்காதபோது இது எப்படிக் கடல் வீடாகும் எருமைகள் கோடிட்டுச் சென்ற மூத்திரத் தடம் அலைகட்குத் தெரியாமல் அழித்து நிரவப்பட்டிருக்க அபரிமித நேரத்தில் இது மானுஷ்யம் கழன்ற தொட்டில் காகிதத்தை அசைபோடும் தார்த்தாரி மாடுகள் பவுண்டில் அடைக்கப்பட்ட பிறகு பதிப்புற்ற செயற்கைக் காட்சியில் படுத்த இடத்து மணல் மடிப்பும் நேராகி நிற்கிறது மனிதர் குரலைப் பாவனை செய்யும் பறவையோ பூச்சியோ இதில் சுற்றம் பெறவில்லை பச்சை ஒட்டுப் பாலித்தீன் போர்த்திய குப்பத்துக் குடிசையின் இம்மியும் பதிவாகாத கச்சிதத்தில் குவிமையக்காரனின் தொழில் நேர்த்தி இழிவாகிறது கட்டுமர ஒடிசல் கயிற்றுத் துண்டுகள் ஓட்டை நைலான் வலைகள் தோணி நிற்றலின் கோணம் எதுவும் அது போலல்ல சர்க்கரை ஒவ்வாத நாவில் டன் கற்கண்டு இது என் கடலும் கரையும் ஆகாது தகாத கீதமானாலும் என் கோணல் மணல் கடற்கரையைத் தந்து விடல் தகும். கடலின் விச்ராந்தி 040முற்றிலும் முழுமை இத்துணைக் காலம் மறதியுற்று சிக்காது அலைகள் செய்யும் எச்சரிப்பு கண்ணீரின் உப்பு உதடுகள் வாங்கி நாவின் சுவை மொட்டுகள் பெற இளகிழ்ந்துவிடும் சுயநல அரக்கனின் மனசும் இனிக்கும் கனிமை காதுமடல் கூற கள் ஒரு லஹரியாகக் குமிழும் உமிழ்நீரும் தெரிவிக்கவும் புதுச் சாரலுக்கு சிலிர்ப்பூத்த புற்களாய் தேகத்து மயிர்க்கால்கள் எங்கே இருந்து வரப்போகிறதாம் நீயின் இசைவிழைவும் நானின் ஈதலில் தடங்கலும் ஆன பெரும் பேறு அப்படி வானத்து அலைக்கு மேல் சிமெண்ட் நிற மேகம் அசுரன் வாய்ச் சிரிப்பு விரிசல் உறும் மின்னல் சிமிட்டல் இந்தத் தூறலில்கூட உனக்குள் விதையுற்று முளைத்துக் கிளைத்துவிடுமா சிறகு பறக்கும் மரம் நின் விச்ராந்தியே என் குரல் பெறும் ஓய்வு கடல் மலை விளிம்பிலிருந்து ஏகிப் பறக்கும் பெயரற்ற பறவையின் ஏகாந்தமாய் முடிவற்ற ஆழத்தில் முற்றற்று வந்து இறங்கும் மிதப்பாய் என் உயிர் தேம்பித் தேறும் விச்ராந்தியாய் தூரத்து இடியின் பின்னணியில் நீளும் சாலையாய் இனியும் ஓர் உச்சம் இருக்குமே இனிக்கும் கடலின் மனநிலை மாற்றங்கள் 040என்ன எழுத சொல்லி அழ விக்கித்து விம்ம? கடலின் தாட்சண்யமற்ற கோரஸ் குரல்களில் என் பாடல் கள்ளக் குரலாகி உப்புச் சிரிக்கிறது. ஸ்ருதிதானா எனதென்ற ஐயம் எழும். ஒருமுறை மடியில் மற்றெல்லா அசேதனங்களுடன் என்னையும் சிறை வைத்திருந்து உறக்க ஓய்வுச் சாகரத்தில் கால் நனைகையில் கரை மடித்து இடுப்பில் செருகச் சரிந்து புகை சீறிப் பதறவைக்கும் வாகன அடர் சாலையில் நான் கிடக்க எங்கே என நிதானங்கொள்ளுமுன் இல்லையில்லை இப்போதிருந்து ஆட்டம் புதிதென்று பிள்ளை விளையாட்டாய் அடம் கொண்டு தன் தடத்தில் ஈர்த்து விண்மீன்கள் பார்க்க மடிதர சுருதி சேர கானம் ஊர மடி உறுத்துவது பற்றி உணர்வற்றுப் போய் ஆகாயத் திறப்பின் ஊடே சஞ்சரித்த பிரக்ஞை திரும்புகையில் மட்டும் புரண்டு முதுகாற்றும் குழந்தையாய் எனை அமர்த்தி, கிடத்தி, நிறுத்தி, கலைதலையைச் சீராக்கி உறுத்தும் மணல் துகள்களை நாவால் துடைத்து பசியறிந்து அனுப்பிவைக்கும் பெப்சி உறிஞ்ச. மீண்டும் கண்ணிமைப் பொழுதில் அதன் பின்க் நிற மார்பில் பால் தேங்கி கனத்திருக்க இதழ் குவித்து திரும்பி வரக் கேட்கும். அம்மணம் நிர்வாணம் பற்றிய சொல் ஆய்வில் குன்றி மணி வித்தியாசம் பாராட்டும். எல்லா நானும் அளந்தும் அமிழத் தெரியாதபோழ்து நீந்துதல் கற்றல் பற்றாது கதவு மூடிக்கொள்ள கால் கொண்ட வழியில் என் கூடடைவேன் இல்லை கார் கொண்டு. கடல் என்றும்போல் தன் வழியில் நின்று விடும். கடல் பாய் விஷம் ஹிந்தோளம் அலை எழில் கடையைப் பெற்று உப்புங்கடல் கரையைத் தழுவுகையில் ஹிந்தோளமே 040விஷமாகிப் பரவ நுரைகளும் ஆலாபிக்கும். உயர் தாயின் மிகு தயாபரம் புரிந்த உயிராயினும் நீ பனைத்துனைப் பரிசுகளைத் திருப்பி விடுதவதை ஒப்பாதவை. உன் சாதுர்யங்கள் செயல் மழுங்கும். அவற்றின் அதீதமும் காலமும் தாளமும் கேட்டு மலர்கையில் அச் ஷணத்து நவமணிகளை இதழ் பிரித்தோ இரு கை குவித்தோ ஏந்தி இருப்பாய் மெய்யாய். உன் இலைநிறத் தொப்பியும் கால்களை மென் அணைப்பில் எடுத்துக் கொள்ளும் பூட்சுகளும் பிலாஸ்டிக் டம்ளர்களில் பிடிக்கப்பட்ட பெப்சி ஊற்றுகளும் வாபஸ் தர முடியாதவை. பிணக்குகளை எப்படிக் கணக்கிட்டுக் காட்டினும் தெளிந்துவிடுவாய் விஷம் கேட்டு. ராமனாதனோ மணி அய்யரோ போல் உன் இசை மிஷினை நிறுத்தம் செய்தவுடன் நெஞ்சுக் கூட்டினை மண்டையின் திருகுகளை வருடிக்கொண்டிருக்காதவை இவை. உடல் உடை இடை மூச்சு மூளை இவற்றில் ஆரஞ்சு நஞ்சு கரை நீங்கிய பின்னும் ஒளிரும் அறிவிப்புப் பலகையாகும். மறுத்த பின் மற்றொரு தரம் இம்மடியில் இளைப்பாறுதல் உனக்கு இனி? என்பதே சந்தேகம்தான். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் விஷத்தை விஷத்தால். தாஓக் கடல் 040துணை அணைப்பும் காலைக் குயிலின் திக்கல் குரலும் நொந்த கந்தலின் பட்டுப்போலும் சாம்பல். எத்துணை அணைப்புத் தனித்ததோ கடல் சிலிர்ப்பு கூடுதலாகும். செலவான இளமைத் தகிப்பு நுரைத்து முற்றி வரும் நரைப் படலம் கோரைக்கு ஒரு நாள் பாய் நினைவாக சகித்தலுக்கு இட்ட புள்ளி முற்றினால் தகும். அணிந்தும் அணிவித்தும் துன்பித்த முற்றைய நாள் மனச் சட்டகம் உதிரும். இகரமே தகித்து வரண்டு உன் ஞாபகம் வளர்கையில் தீப்புண் கொப்பளிக்கும். கால் வாங்கி எஞ்சிப் போன முள் துணுக்கு சீழ் மூட்டம் சுடுவிரல் தடவ நோவும் இனித்த காலை இனி உதிக்கத் தயக்கமுறும். எந்த மணல் கோட்டையைத் தற்காக்க அற்ப நுணுக்கத் திட்டம் அறுபடும் சிலந்தி எச்சில் என அன்பைக் கொண்டே வா மறதி கொண்டிருக்கும் தூரத்தைத் தூர்க்க கடவுளையும் கட்புலனையும் கட்டவிழ்க்கச் சொற்றொடரில் அலையவதாரம் சற்றே அக்கரத்தின் அகரமாகும் கடல் இறுதி புள்ளியற்றுத் தா. கடலின் மறதி அவ்வலைகள் அத்தினமே மறதியுள் புதைந்திருக்க முடியாது 040இணைத்துணை இதுவல்ல என்றவை வீரிட்டபொழுது காதலை வரிசையை கேளின் பூஜ்யத்திற்குக் குறைத்துவிட்டாய் பக்கவாட்டு நகர்வில் சலியாத நண்டுகள் புரிந்து கொண்டிருக்கும் எண்ணெய்ப் பீப்பாய்களைக் கொண்டு வந்த கப்பல் வெளிச்சமிட்ட விளையாட்டுப் பொம்மையாய் மிதந்த மங்கு மாலை உலோகப் பருந்தாகும் ஜெட் உறுமலிலும் கூட தன் சுருதி பிசகாது பீம்சேன் ஜோஷியுடன் பாடிக்கொண்டிருந்தன நெருக்குருகி தலைப்பிற்குள் புதைந்த முகத்தை அகற்ற மனமில்லை குருதித் தாளமும் ஜோஷியின் தேஷ÷ம் மீன்வாடையும் ஆற்றைத் தாண்டியும் கேட்டுக்கொண்டிருந்தன நுகர்வில் பதிந்துபோன நுரைமுகமும் உயிர் கசிந்த உன் பாடலும் கடலற்ற இற்றை நாளிலும் தோணியில் மிதக்கத் தோதாயின க்ளட்சுகளை மாற்றிக்கொண்டிருப்பினும் தோணியை நகர்த்தும் துடுப்பின் ஸ்பரிசமே இந்தத் தார்ச் சாலையை அலைக் குரலாய் மாற்றிக் கொண்டிருக் கிறது. கடலோரத் தொட்டில் முற்றுப்பெறா வாக்கியத் தொடர்களின் முற்றத்தில் சொட்டும் புள்ளிகளாக ஆகாமல் இருக்கலாம் 040ஆனால் தோல்வியை அகராதியில் பதிக்காத தொடர் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் அலைகளின் முரணற்ற பாஷையில் உனக்கான ஆறுதல் உண்டாகிறது எல்லா நீயும் கிளைநதிப் பெருக்காகி உருகி வழிதலைப் புரிகின்றன அவை நேற்றில் விதையிட்டு இன்றுவில் பழுத்துவிடும் பழங்களின் பாங்கினை அறிந்ததில்லை சூத்திரங்கள் எழுதிய சாது வேண்டுமானால் எழுதியிருப்பான் அவற்றுக்குப் புரிந்துவிடக்கூடாதென தொடுதலில் ஊற்றுப் பெரும் உன் முழுமை உன் செழுமை கைக் கற்றுப்பாட்டுக்கு உட்படினும் நாணிய மணற் போர்வைகள் வீசி உனை மறைத்துக் கொள்ள வரும் அலைகள் மணற் துகிலினை பிரித்து உணர மீண்டும் தந்துவிடுகிறாய் கடைசியாய்த் தாரை வார்த்து இன்று என் பாரம் ஊடுருவ மணல் வழி நீ என்பினும் செல் மறு செல்லாக சொல் அடர் சொல்லாக உன் உயிர்க் கிணற்றின் தெளீர்ப் பளிங்கினை உனதே எனதாக்க நாள் தேடும் லேஸர் ஊனமென நீ வருந்தும் மனதினை அழித்தெழுதும் அதுவரை அலைகள் அசைவிக்கும் இத்தொட்டிலில் விட்டுச் செல்கிறேன் உன்னை. கடலின் மரகதம் கனவில் வியர்த்து நினைவில் பரவும் உறக்கம் துறந்த மறதித் தாவரம் 040திரிந்த மாலைக்கும் அப்பால் தொங்கும் தொடுவானில் ஊதாவின் தென்னம்பாலை கிளிப்பிள்ளை நரிப் பேச்சு தணல் பிழைத்தெழுந்த தன்னுடலைச் சவம் எனக் கூறுபவன் இருப்பான் இல்லை என்பின் எண்ணித் திருகிய தலைகள் எக்கோடி எழுந்து உயிர்த்த ஒற்றை முலை சிலிர்த்த சூரியகாந்தி கோணிய நாணல் புல்லும் ஒருகால் மூங்கில் மற்றதில் சோறுடைத்து சொற்போரே மற்போர் தேள் கண்டது திகட்டும் பிழம்பு விண்ணை உடைத்து வெளிக்குள் கைநீட்டில் தொடுபடும் பால் சுரபி கள் மண்டலம் கட்டுடைத்தும் பிளவுறாச் சொற்படலம் நிற்கும் நில் என்றால் சரியும் வேல் ஒன்றால் எங்கிருந்தோ ஊடுபாயும் களர் நிலத்திலும் கத்தரிப்பூ காற்று மாற்றி மாற்றிச் சிரித்துக் கூறினாலும் கூறப்படாததே கூறப்பட்டது மலையடிவாரத் தொட்டிலில் எட்டிப் பாராது நின்ற கடல் ஏரி கழுத்தின் மரகதம். 040 கடல் சார்ந்த பாலம் இதழ்கள் உலர்ந்தும் வாழ்வு நகர்கிறது பூ வீழ்கையில் மின்னலின் ஷணம் கபாலம் பிளக்கக் கங்குகள் மங்க வாழ்வு குளம்பு ஒலித்துப் போகிறது நிறங்கள் நீர்க்கக் கான்க்ரீட் இறுக அல்லது அப்படித்தான் சொல்கின்றனர் அவர்கள் நம்மைச் சுற்றி உயர்ந்திருக்கும் வேறுபட்ட கோடைப் பருவங்களின் புற்கள் வெளிர் மஞ்சளாகும் காற்றில் அடர் செங்கல் இரவு சஞ்சரிக்கு முன் நரகரின் நரகல்கள் கால்வாய்களை அலங்கரிக்க கடந்து செல்கிறோம் மணல் ஒத்த மாதா கோயிலை. கோர்க்கப்படாத வலது கையில் உன் மார்மீது சிலுவை இடுகிறாய் நானோ பிக்ஷாடன மூர்த்தி யுகாந்திர மறதியில் இருந்து நம்மைத் தாங்கும் மணற் புடைப்பின் அடியாழத்தில் இளம் யுவதியின் எலும்புகள் சிலிர்க்கும் உன் உடல் வாசமோ என் மார்பின் வியர்வையோ கிளர்ச்சியின் தளிர்க்காரணங்களில் ஒன்றாகலாம் மலர்ந்த இடிபாடுகளுக்கு இடையில் நாம்தான் நடந்து மறுபக்கத்தை இணைக்கும் பாரமின்றி ஆள்காட்டி விரலெனத் துருப்பிடித்து இற்று நிற்கும் பாலத்தைக் கடக்க முயல்கிறோம் கழிமுகத்து நீர் ஆடியில் அலைகிறது உன் பயம் நாக்கும் இதழ்களும் பாலமாகும் அச்சமயம் கடல் இருவரையும் இணைக்க கல் மீன் நீந்தத் தொடங்கும் கடலின் சீர்திருத்தம் கடலைச் சீர்திருத்தச் செல்வோம் நிலவின் பின்புறம் வாரிய தலையைச் சிலுப்பிச் சிணுங்கும் மணல் வியர்த்தணைத்த மட்கிய சங்கும் 040கண் நிரப்பும் மனம் வழிய மழை முடிவுத் தோற்றுவாய் உப்பரித்த காற்றில் தலைநிமிரும் புராதனக் குடியிருப்பில் சவங்கள் உயிர்த்தாற்போல் தோட்டத்துக் கதவில் உறைந்துபடர் மனிதச் சட்டகம் தானா கேள் கதிகலக்கம் நிற்பட நிற்பவன் கல்தானே அலைகள் கூறிய பொய்யை செய்வதற்கில்லை நம்பிக்கையின்மை விசாரணை உன் கூந்தல் என் பூகோளப் பரப்பில் விழும் விழுதுகளாகும் மறுக்கத் தெரியாத மண் உன் அடர் வழி நினைத்துக் கலங்கும் தொலைவு தொலைந்துகொண்டிருக்கும் கடுகாய்ச் சிறுக்கும் மஹா விருஷம் அகண்ட வருஷம் ஒரு சாண் இடுப்பில் ஒடுங்கிவிடும். மஹா மௌனக் கடல் கடலின் சாளரக் கண்ணாடிகள் சர்வமும் நொறுங்கி நொதிக்கின்றன உனக்குப் புரியாதது அல்ல அதன் பிரயாசை 040ஆகர்ஷணம் வெப்பம் மௌனம் இப்படியாக தளும்பாது கை இரண்டில் சோதனைக் கூடத்து அதிகவனம் ஏந்துகையிலும் சுழற்சியில் பைத்தியம் பிடித்து தீராத பாடலைத் தீர்த்து விடத் தேடுகிறது அதன் ‘மஹ்ஹா’ மௌனம் குறித்து முதிர்ந்த கவிஞன் எழுதியது புரிந்ததா எவனுக்கும் என்றும் தெரிந்தபாடில்லை என்றுதான் குறுமுலைப் ஸ்பரிசமும் காம்புகளைச் சுழன்று முகிழ்க்கும் ஹார்மோன் துளிகளும் இன்னும் கரைகடந்து இனிக்கின்றன என்கிறாய் என்பினும் உன் பூம்பாரம் எழுதப்படாது கனக்கிறது பட்டுவிட்டால் பற்றிவிட்டால் கழுத்தில் தொங்கும் பாறை எனச் சொல்வாயோ அறியேன் தாகம் தகிக்கும் தீர்த்தலின் தவித்தலின்றி சிவனை நினைத்துக் கர்ஜிப்பதாகும் சிற்சில அலைவரிகள் சந்திப்புக் கோடுகள் மையப்பட்டு நோயறுக்கையில் இருபத்து கைகள் உடையோனே கலைஞனும் ஆக அவன் எதிரி புலைஞன் ஆவான் முத்தும் சங்கும் உடம்பு வெடித்த ரப்பர் செருப்பின் ஒற்றையும் மனிதக் கழிவும் நைலான் மீன்வலையும் நீயும் யாவும் நானும் ஒன்றும் இல்லை அதற்கு ஒன்றுமே கடலும் மகளும் (மகள் தன்யாவுக்கு) 040உன் நினைவகலப் பார்க்க மீண்டும் முகத்துடன் பொருத்திக்கொள்கிறேன். உன் வயதுச் சிறுமி யாரோ வலியில் விளித்த குரல் உனதாய்க் கேட்க பதைக்கும் மனம். உன் முகம் நோக்க முயன்றும் முயன்றும்- இப்பொழுது என்ன விளையாட்டு விளையாடிக்கொண்டிருப்பாய்? உன் மனதில் கீர்த்தனைகள் மிச்சப் பதியன்கள் மழலைத்து முணுமுணுப்பாயோ? புதிய உன் ஊஞ்சலில் பசியும் மறந்து பறப்பாயோ? உன்மத்தமும் கள்வெறியும் என் நெஞ்சில் நோகத் தொடங்கிவிட்டது பால் கட்டிய மார்பாக. சொல் பொறுக்காத செல்வம் நீ. உனக்கேயான ஷாந்திநிகேதனைச் சிருஷ்டித்து திருத்தி, மாற்றி, திருப்திப்படுகிறேன். பீர்க்கங்கொடி என வளர்கிறாய். பொறுப்பற்ற தகப்பன்- பட்டயம் மட்டும் எனக்கு நிலைக்கிறது. எனக்குப் புரிந்துபட்ட கடலினை உனக்கு அறிமுகப்படுத்தவில்லை. பதைப்பும் திசையற்ற கோபமும் பயணத்தின் பாதுகாப்பின்மையும் என்னைச் சீரழித்த காலத்தில் நான் காட்டிய தங்க மணல் கடலும் கடல் காக்கைகளும் உன் பிராயத்தினால் மறந்துவிட்டிருக்கும். இரு கைகளிளும் உன்னை அள்ளி எடுத்த நாள் நகர்ந்து இன்று என் மன இணையாக காலோரம் அலைகள் விளையாட முடிவே இல்லாத பீச்சில் முடியும் வரை உன் பிஞ்சுக் கை பற்றி அவ்வளவு அழகாயில்லாத இந்தக் கரையிலும் கடல் கற்போம். கடல் இடை மலைகள் கரையில் உவர் மணல் ஆடல் புரிந்து ஆடினார் ஒருவர் 040அரைகெழு கோவண ஆடையில் பாம்பு இரைக்க இலங்கை மன்னன் இருபது தோள் அறுபடும் கதிபட இளமை கைவிட பிறகு ரேயும் பாலசரஸ்வதியும் உடம்பைத் தொலைவித்து அரணிலா வெளியில் அண்டமே பூண்டாக அங்கமே ஓர் அணுவாக அதையும் மண்ணுக்கு ஆக்கி ஆடவும். அரும்பும் செவிட்டுச் சூரியன் குருதி கொதிக்கும் அலைகள் கடல் இடை மலைகள் அலை உளர் மென் புயல் உமை முலை அவர் பாகம் இருளாய கரையில் அருளாகும் நின் தேகம் எண்ணற்ற வண்ணத்து LED ஒளிரும் என் அகம். சித்ரூபிணி -1 - பிரம்மராஜன் நினைவின் மூன்றாம் ஜாமத்திலும் உடுக்காத உன் உடற்கூறுகளின் ஊடாக ஒளிமைப்படுத்தி ராட்சதச் சுவர்கள் தசையின் இன்மையிலும் பிம்பமாக்கும் விருப்பக் கடன் உன் குரல் கொஞ்சம் வர்ணத்தினை வசீகரித்து சப்தநாடிகளும் ஒரே மனத்திற்குள் அறிதல் அனைத்தும் ஆள்காட்டும் விரலாகி கிரேக்க மூக்கின் மேல் முத்திட்டு நிற்கும் பனித்துளியைத் துடைக்கும் எண்முகத்தை எட்டு திசைகளிலும் திருகி காண்பேன் உன்னை சிற்றிடை நாயகி வாடா முலையே நித்திய சரணம் சாத்தியம்தான் கடைசிக் கூளத்தையும் கொட்டிக்கொடுத்து முத்தங் கண்டு சொல்பித்த வார்த்தைகள் அல்லவே இவை என்பினும் நானுமோ ஒரு கல்லுளி மங்கன் துயிலின் காதலன் உன்னைச் சிறைபிடித்து சிற்பித்து பிரதிஷ்டை செய்யப் புறப்பட்டவன் பேதையிலும் பேதை உன் உதரக் கள் விரும்பாத விரதன் என் உதடுகளும் சர்வாங்க தகனமாகட்டும் இச்சை கொன்ற காமித அக்னியிதில் அப்பொழுதாவது அதன் சிவப்பு விதையும் ஆரஞ்சு சதையும் தெரியம்படி பிளக்கப்படும் ஜாதிப்பழமென என்னை மலர்த்து நீ பகிரும் பொருட்டாவது. Mindscape Maiden-II Rajaram Brammarajan Were you the one who passed orders for the slaughter of the pain filled sorrow stricken animals? Aren’t you the one after the yield of the last fruit the white ants having nibbled the rest who allowed the break of mid rib bringing the canopy down? Or else are you the one in the flowery seat of one your incorporeal reproductions entrapping me in the eddy of intoxication Or else are you the one who directed me to glorify the indivisible? Were you or some one else who was that who forbade viewing the pulsating stars beckoned me to worship your growing breast? As for me I am the one who becomes what I come into contact now turn into an incarnation of crocodile gra bbing your feet? It is you yourself who brought the cool rainsto extinguish the raging fire of the incense-mast of front temples When the time came you first smelt that it could be you who isand became what you are now There I became a destitute infant looking for your lap but you with your betel tinged red lipstightened your bodice decidedly so that you could dance But you blanched the rays of my dreams barren and turned them to your sculpted profile Were you the who changed the deceptive slumber that failed to sleep to ones of real sleep and gave the immaculate Or else were you the one who became solidified in the undersea floor of my ocean with those bacteria that never see the light for years Or else was it the shadow of your yoni or a sculpted Yaali of the tomb? You of course were the one who made the stuck up thorn-stub growalong with the cells made me aware of my pain? Yours was the voice which made mine shudder at once when you beckoned me You the one who becomes you alone could be the raga hindolam in the two temposas female in the male Not comprehending anything I stand with bewildered eyespopping outYou are now me ever your you could be Translated from Tamil by Latha Ramakrishnan சித்ரூபிணி -2 நீதானா வலி முற்றிய துயர் மிகுந்த விலங்குகளைக் கொல்ல கட்டளை கொடுத்தது நீதானே கடைசிக் கனி விட்டதும் கறையான்கள் அரித்து இடுப்பு இற்றுவிழ குடை சரியவிட்டதும் அன்றியுன் அரூபப் பிரதிகளில் ஒன்றின் மலர் மிசையில் என்னை மயக்கத்தின் சுழலில் வீழ்த்தியது அல்லது நீயோதான் பகாபதத்தினை மகிமைப் படுத்த திசைப்படுத்தியது விண்மீன்களையும் நோக்கவிடாது உன் வளர்முலையை வணங்கச் சொன்னது நீயோ யாரோ நானோ எதைப்பிடித்தாலும் அதுவாகும் வடிவ வஸ்துவாகி உன் பாதத்தினைப் பற்றும் முதலைப் பிறவியானவன் நீயேதான் உன் குளிர்மழையை எனது தூப ஸ்தம்பத்தின் கடுந்தழல் மீது அவியவைத்து நீயேதான் நீ என்று முதன் முதலில் நுகரும் பருவகாலம் வந்தபோது நீ நீயோ ஆனாய் அங்கில் நான் ஏதற்ற குழந்தையாய் உன் மடிநோக்க தாம்பூல அதரங்கள் சிவக்க கச்சைகளை இறுக்கி நடனமிடத் தேர்ந்தாய் நீயோ என் கனவுகளின் ஒளிக்கிரணங்களை மலடாக்கி உன் சிற்பமுகத்தினை நோக்கி நிமிர்த்தியது நீயோதானா உறங்காது போலிருந்த போலி உறக்கங்களை நித்திரையாய் மாற்றி நிர்மூலம் தந்தது அன்றி என் சமுத்திர இருட்தரையில் ஒரு வருடமும் சூரியன் பார்க்காத கிருமி நுண்ணிகளுடன் வீழ்படிவமாய்ச் சமைந்தது உன் நிழல் யோனியா நிஜத்தின் கல்லறை யாளியா நீதானே தைத்த முள்ளினை சதையுடன் நிணமாக வளர்த்து வலி தடவி நினைவு புகட்டியது என் குரல் நடுங்கக் கூப்பிட்டது உன் குரலேயல்லவா நீயாகும் நீதான் ஒரு ஹிந்தோள ராகத்தின் இரு பிரஸ்தாரங்களில் ஆணில் பெண்ணாய் லயம் மோகித்து யாதுமே விளங்காது விழிபிதுங்க வழிவேண்டி நிற்கும் உன் நீயோ நான் என்றுமே உன் நீயோதான் சித்ரூபிணி -3 அந்த நாள் வந்துவிட்டதாக இந்தக் குருவிகள் கூறுவது எவ்விதம் பூர்வகாலத்தில் இருந்ததுபோல படிகப் பச்சை வர்ணம் தலைக்கு மேலான மண்டலத்தில் அக்னிமயம் கழுத்துக்குக் கீழே நீல ரத்தினம்போலும் சாயல் வாழ்வின் நீர்ச்சுனை உலர்ந்து முகங்கவிழ்ந்து விழுந்தேன் கண்டேன் வெளிப்பிரகாரத்தின் தூணோரங்களில் கின்னரர்களின் கருவிகளிலிருந்து கிளம்பும் தாய் ராகத்திலேயே தொடுவான் கீற்றுப் போல் தீபகம் தெரிந்திருக்கிறது என் காதுகளுக்கு சந்நிதியின் பீடம் இதற்கு மேலெப்படி கண்ணாடிக் கூரையில் விழுவதுபோல் கெட்டித்த மழை விழுவதாயிற்று? அர்த்தத்தை விடுவிக்காத அந்த முகத்தின் கதவுகளைக் கிரீச்சிட்டுத் திறக்க ஏனோ ஒரு பயம் பிணித்த கலக்கம் பின்னும் காற்றோடையின் சலசலப்பும் கூடவே அந்தப் பட்சிகளின் பிராணனை வாட்டும் சலம்பலும் பசியின் துயரமா அன்றி உயிருடன் உயிர் ஒன்ற வேண்டிய அத்தியாவசியக் கூக்குரலா எனப் பிரித்துரைக்கவிடாது மீண்டும் உப்பில் உவர்க்கும் மழையால் யாதொருவருக்கு என்ன விளையும் தீயில் வாட்டியதாகும் உடல்களைக் குளிர்விக்க ஒரு மிடறாகுமோ அன்றி மரணத்திற்குச் சற்றே முன்னான தான்யத்தின் வாழ்வுக்குள் விழும் உயிர்த் தண்ணீ ருமாகுமோ அதுவாகவே நீ இன்று பெய்து நின்று நாளையும் பெய்து பிரளயம் வருமுன் நின்றுவிடும் என்று நீ அறுதியிட்டுத் தாரை வார்த்த உண்ணாத முலையின் தீர்த்தமாகிறாய். சித்ரூபிணி -4 எங்கோ ஒரு பிறந்த தினத்தில் நடப்பட்ட ஒரு விருட்ச வித்து உன் கருவறையில் பெருகி நிகில லோகத்தினையே தன் சிரசால் மூடிவிடும் போலிருந்த இருட்பொழுதில் தந்தத்தின் நிறமே மங்க வந்தாய் நீர்ச்சுழி போலவோ அக்னியின் அட்சரம் எனும்படியோ உனது உந்தியும் குரும்பை முலையும் வெண்ணிறப் பட்டில் கொடியோடும் நாளங்களின் பின்னல் வலைகளை புறங்களில் கண்ணுறலாம் என்றவாறும் உன்னைத் தளைப்படுத்தியாள்வதற்கான கற்பனையில் நான் யத்தனிக்க நீ காற்றுடன் இரண்டறக் கலந்த சிற்பமாகிவிட பனிப்பாளமாகக் கிடக்கிறதென் குறை மனம் மீட்டிக் குருதியிசைக்க நான் கேளாதிருந்தும் நீ ஈன்ற குழந்தைகளை என்ன செய்வது? கானகத்தில் அறாத நாணையும் முறியாத வில்லையும் தீராத அம்பராத் தூணியையும் கொண்டவர்கள் பயில்வதை வாளோரத்துக் குரூர தரிசனமாய்க் காண்பதும் நான் அம்மகவுகளைப் பிறப்பித்தும் பிணைக்கும் என் விருப்புகளை அறுத்தும் கன்னியும் சநாதநியும் ஒன்றாகி நீயாகி மேலும் வயிறு உட்குழியவும் மார்பகங்கள் வாடலை மறக்கவும் தளர்வுறாச் சருமத்துடனும் என் சயனத்தில் உடன் இருப்பதான சாட்சாத் உறுதியுடன் விழிகள் பிரிய உன் உடலார்ந்த பரிமளம் இழந்த வெற்றம்பலம் பற்றி அறிந்து விட்டதாக ஏதோ ஒரு கற்பகாலத்தில் ஒருவன் இங்கிருப்பதாக . சித்ரூபிணி - 5 மூலாதாரப் பயிர்கள் கோரைகளுக்கிடையிலிருந்து திடீரெனத் தலை நிமிர்த்திய நீல ஆம்பல் நீ கானங்களின் தலைவியும் என்றறியாதே நான் செவி கொண்டேன் விடியல் பண்ணின் மனையாட்டி என்பதையும் உன் சாயல்களை சொப்பனங்களில் மாறுதலுறும் நிலையற்ற முகம்போல் மாற்றுகிறாய் அதற்கிணையான மனநிலை மாற்றங்களைக் காண்பிக்கிறது என் கந்தக பூமி எரிதல் குறைக்கவோ வெறுப்பினால் நிறைந்து கசந்தவனாய் மனிதரைத் துறக்கவோ வலையைக் கைவிட்ட மீனவன் ஏர்சாலில் கிடந்த கலப்பையைக் கரையான் தின்ன விட்ட பயிர்த்தொழிலாளி இவர்களில் எவன் நான் எனக் குழம்பித் தீர உன்னுடன் பிறந்தவளின் லட்சணங்களை மோகித்திருந்த மாதங்களில் நீதான் பதுமினி என்பதை உற்றுணரும் கதியற்றிருந்தேன் ஆகிலும் எனக்குள் ஒருவன் உன்னை வனைந்து வடிவமைத்துக் கொண்டிருந்திருக்கிறான் நீரின் நுகத்தின் நிழலிலும் மந்திரங்களினால் பல்கிய தான்யக் கதிர்களிலும் உன் ரூபம் தெளிகிறது அண்டங் காக்கை கொத்திச் சென்ற வெண்ணிற எருப்புழுவிலும்கூட தாந்தேவின் காதலியும் நீதானாக உன்னைச் சுகிக்கத் தந்த என் உடலின் விமோசனியும் தாமதித்து அந்திமத்தில் முற்றிய காபிச்செடிமீது மொய்க்கும் மின்மினியும் ஆக. ஜென் மயில் புன்னை மயில் விரைந்தது ஜென் காரின் குறுக்காய்ப் பறந்து குருதியொத்த நிறம் சேதாரம் எதுமில்லை கேட்டுத் திரும்பின கால்கள் மைனாக்களின் உலோக ஸிம்பனியை மடையான்களின் மாலை சாதகத்தை ஸெல் கோபுரம் முற்றும் உச்சியில் இருவரின் ஸ்பானர்கள் இயங்கும் வெள்ளி வெளிச்சத்தில் கைகள் ஒயக்காத்திருந்து கடவுள் கயிறுகளை சற்றே மேலே இழுத்து விடுகிறார் கால்கள் கண்டன விளக்கற்ற அடுக்களையில் உறுகாய்ப் பாட்டிலின் மீதிருந்து கொசுக்களைப் பிடித்துண்ணும் மரத்தவளை புத்திப் புலன் புள்ளிக் குயிலொன்று நுணா மரத்தில் கண்கண்ட காட்சி புத்தி பாராது அருகாமைக் கூந்தப்பனையிலமர்ந்து கூவியது திக்கித் திக்கி புத்திக்குப் புலர் நேரம் அகன்றுயர் ஆண்பனையில் அமர்ந்தது நடுநெஞ்சிலிருந்து விருட்டென்று பறந்தகன்றது வல்லூறு இலக்கை இழக்க விரும்பாது செங்கோணச் சமதளம் சாபமும் மறதியும் சகதியாய்க் குழைந்து நதியாகத் தவறி கிழக்கு மேற்கில் குப்புறத் தூங்கும் சாக்கடை துருவங்களில் வரைவளைவுகாய் நீந்தும் நீர்ப்பாம்புகள் தகவமைப்பின் உச்ச இலக்கணம் பொரியளவேயாகும் மீன் குஞ்சுகள் வரைவளைவுகளை வெட்டிச் செல்லும் செங்கோணங்களும் பிறவும் நீர்மறந்த ஏரிகள் நிராகரித்த சிலந்தி இழைவழி இறங்குவது போல் எரிபொருள் வற்றிய ஹெலிகாப்டராய் சாம்பல் நிறக் கொக்கு துணுக்கு மீன்கள் நீந்தி ஒயும் ஒளியும் தென்வடலாய் இந்த வாயில் கைப்பிடிச்சுவரில் மந்திரக்கோலாகக் காய்ந்த குச்சி தார்வேலையில் மிஞ்சிய ஒரு பாறையெச்சம் இரண்டிலொன்றைத் தேர்ந்து குறிபார்க்க யாருக்கென்ன யோக்யதை பெற்றே தீர்தல் மீண்டு பிரயாணம் முடிந்து ஊர்வந்து தேர்நின்ற பின் பயணவழிவரைபடம் பார்த்து சென்றவழியெல்லாம் எறும்பாய்த் தேய்ந்து செல்கிறபோது பனையும் தென்னையும் மயங்கும் புலம் மணலில் மறைந்து கிடக்கிறது காரை நிறுத்தும் சோதனைச் சாவடிகள் ஆவணங்களை மேயும் ஆயுதபாணிகள் சரிசரியெல்லாம் போகலாம் போவென்றாலும் மேலதிகாரியின் ஜோபிக்காக இன்னும் கார் தயங்கித் தடங்க காகிதக் காசுகள் கைமாற இழப்பொன்றுமில்லை ஒர் சூர்யாஸ்தமனம் உருண்டைப் பாறையில் மாறிமாறிக் குந்திய கடல் காகங்கள் எறும்பு மீண்டும் பாதை தொற்றிச் செல்கிறது மேலதிகாரியையும் சீருடையாளரையும் வரைபடத்தில் போடுவதில்லை என்பதை அறியாது நவீனக் குறுஞ்செய்தி மணியன் என்பவன் சொன்னதென்ன என்று கேட்டேன் அந்த தபால் கார்டு புரியாமல் அடுத்த நாள் ஆயிரம் வரைந்தீர் அத்தனையிலும் அதே கொக்கிகளைக் கோர்த்துச் சாய்த்தது போல சொன்னதென்ன என்றேன் அடுத்து விடுத்தீர் அயிரத்தெண்ணூறு இன்லாண்டுகள் மாற்றமிலாது பிறகு தினத்திற்கு 22 தந்திவீதம் பெற்றவள் வாங்கி வைத்தாள் அதே மூன்று வரிகள் ஒன்றிலும் சாவியில்லை அவன் சொன்னதென்ன என்றேன் எட்டவில்லை உமக்கு உம்மிடம் யூடியூப் செல்ஃபோன் சாதாஃபோன் கேமராஃபோன் ஏதுமில்லை அவன் என்ன சொன்னான் நாம் நம்மைப் பற்றியா படித்தும் படிக்காமல் விட்ட புத்தகங்கள் பற்றியா வாங்க நினைத்து வாங்காது விட்டவை பற்றியா வாங்கியும் பிரிக்காது விட்ட நூல்களையா படித்துவிட்டது போல பாசாங்கு செய்தவை ‘பவர் ரீடிங்’ என்று சொல்லி நீர் 10 பக்கங்களைத் தள்ளிவிட்டு வாசித்ததையா முப்பது முறை தொடங்கி ஒருபோதும் முடிக்காது விட்டவை பிறகும் கடிதங்கள் எப்போதும் போல் இருவர் பிடித்திழுத்து ஸ்பிரிங்குகளை தளர்த்தியது போலிருந்த எழுத்துக்கள் உமது டைப்ரைட்டருக்கு வலிக்காதென்று எண்ணித் தட்டுகிறீர் நீர் மறைந்தும் உம் டைப்ரைட்டரிலிருந்து எப்படி எண் இ-மெயில் பெட்டிக்கு அந்த மூன்று வரிகள் வருகின்றதென்று தெரியவில்லை ‘ஸ்பாம்’ பாதுகாப்புக்கு மிஞ்சியும் அன்னம் உன் ஓவியம் தந்தையைத் தீட்டுவது கடினமில்லை பக்கவாட்டில் எழை வீடொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார் கண்மூடி தங்கையின் பின்புறம் கூட உறுத்தவில்லை திறந்த கண்ணாடி ஜன்னல் பாய்மரமேறிய ஒற்றைத் தோணியைக் கண்டாள் வெண்ணிற உடுப்பில் அடுத்த அடி எடுப்பது போலிருந்தன கால்கள் ஃபிராய்டை கரியநிறக் கம்பிக் கூட்டுக்குள் போட்டாயிற்று அம்மாவை வரையும் உக்கிரமில்லை காதலியின் கணவனைச் சித்திரிக்க சலிக்கவில்லை கார்க்கியின் சொட்டைத் தலைமேல் ஆறால்மீன் சிறுமி எப்போதும் மாதாகோயிலின் மணியாய் குழந்தைப்பெண் குழந்தைக் காதலிக்கு நகப் பூச்சு ஒரு ரோல்ராய்ஸ் கார் தலையில் குத்தீட்டி எறிய குதிரை மோனாலிஸாவும் நெப்போலியனும் அருகருகே பிக்காஸோவின் மூளை பிடறி வழியாக நாக்கை ஆராதிக்க ஒரு வாசிக்கப்படாத மேண்டலின் உன்னை வரையும்போதுதான் மூளை சுக்கல்சுக்கலாக முற்றாத சலவைக் கல்லை கைதவறிக் கீழேவிட்டீர்போல் தரையில் கால்பாவாது உன்னை எற்றி வைக்க வேண்டியிருக்கிறது பாய்ந்து கிழித்தெறியத் தயாராகி முடியாத வேங்கைகள் அவற்றைக் குறிபார்க்கும் துப்பாக்கிகள் எல்லாம் சமைந்து நிற்க ஈயாடாது எறும்பசையாது சிகரெட் புகை சுழலாது அசைவற்ற மோட்டார் பைக் சுற்றி நாலைந்து பேர் தேனீ ரீங்கரிக்காது சமுத்திரங்கள் எல்லாம் வெட்டப்பட்ட காலத்தில் போல மௌனிகளாய் ஸகரன் ஸகரன் எண்று நாமாவளியை மனதில் ஜபிக்க உன்னருகே முட்டையிலிருந்து மூன்று குஞ்சுகள் அன்னமே 0 அந்தரத்தில் மிதப்பதென்பதால் அதைக் கூடென்றோ கோளென்றோ சொல் தளராது வீடென்று கொள் விண்ணில் விதைத்த விதை மண்ணில் விழுந்து வீறிட்டாக வேண்டுமே மலரும் தோட்டக்காரனும் ஒருவரேயென்றாலும் துரிதம் குறைவுறு தெளிப்பான்கள் மறைக்காட்டுக்குச் சொல்வதுண்டாம் எடை ஈரம் வடிந்து ஈய வைக்கோல் காய்ந்து சுழன்றடிக்கும் தர்க்க நாணல் ஒரு நாள் ஒரே நாளில் 0 செய்நேர்த்தி கண்ட உமத்தை வித்துக்களை களவு செய்த குரங்குகள் உண்டிருக்க 120சதம் இல்லை வாய்ப்பூட்டு கசந்த சுவை விற்பன்னர்கள் காற்று திசை முகர்ந்து பருவத்தே பயிர் முடித்து கருஊதா மலர் விரியக் காத்து பிய்த்தெறிய வியலும் சிலந்தி விரல்களால் பொறுமையின் தெர்மாமீட்டர் அனுமதிக்க 0 அங்கே நிற்பாட்டியிருக்கும் வண்டியைக் கண்டு ஐயம் திரிபு அகற்று ஐம்பொன்னால் அனது பீரங்கி மல்லர்கள் புஜக பூஷணர்கள் அசைக்கவியலாதது ஒன்பதிலிருந்து பூஜ்யம்வரை எண்ணிக் கழிக்க ஆள்வரக் காத்து கள்ளிப் பெட்டியில் நிறைகொண்டிருக்கும் ஐந்தே கல்குண்டுகளும் ஒரு கோணிப் பை கரிமருந்தும் அதிக ஆசையில்லை பொடித்துத் தூளாக்க வேண்டி உதித்திருப்பது மேற்குவானில் ஒரு சுக்கிரன் மாத்திரமே நெய்தல் தேசம் - பிரம்மராஜன் நீயும் ஒரு கடல் காக்கையும் நினைவுகொள்ளும் நெய்தல் தேசம் எட்டு வைரப் படிமம் கடந்து தூய வலியால் திகழும் அலுமினியச் சிறகிரண்டு படபடக்கும் நெஞ்சின் மீதிப்பீதி கூசும் மின்னொளி இன்றின் உண்மையை நாளையின் பொய்யைச் சொற்கூடுடைக்கும் நெடுநல் வாழ்வின் ஓற்றைக் கவிதை புல்லரிசி உண்போரின் கண் உருளை சித்திரக் கோட்டில் புரண்டு படுக்கும் ஒற்றையடிப்பாதை துணித்த கிளைவெட்டோரப் பிசினில் வழியும் இலைப் புனல் ஓயும் வெட்டுக்கிளி நறுக்கிய மதிய கிராமத்தில் தீ எழுதும் உறக்க மலர் ஞாபகப் பிரதிகளும் நிலையாடிகளும் நனைந்த மீதிப் பயணக் குறிப்பும் நமது அதேயில் காணி நிலம் எதுவுமே கனவுடைந்த இடது பாகம் அவன் விளைந்த இடத்தில் அழிந்த பயிர் வில்லாளியோ விடுபட்ட அம்போ காற்றுத்திரட்டும் கற்பனை மிகவும் ஒன்றுபோல் ஸ்ருதி சேர்க்கிறாள் பெண்ணுடலை ஓர் யுவதி ... உபாசனை செய்ததுடன் கிரிராஜன் சேகரித்து வைத்திருந்த ஸங்கீத ரத்நாகரம், நாரதீயம் முதலிய நூல்களைப் பயின்று சுருதிகள், பிரக்ருதி விக்ருதி ஸ்வரங்கள், 21 மூர்ச்சனைகள், 72 மேளகர்த்தாக்கள் தசவிகித கமகங்கள், ஜன்ய ராகங்கள் இவற்றின் மர்மங்களைத் தம்முடைய முயற்சினாலேயே மூளை அகன்று விசும்பு விரியவேண்டும் இப்போது இல்லை சோற்றின் நிஜமாய்க் கவலை அவர்களின் மழை மதியம் நமதென்றால் இலைவழிப் பாட்டில் செவியின் ஓவியம் எந்நிறம் மண்ணும் சதையும் மதிலின் வரட்டியும் கதிர்ச் சுடரின் கட்டிடக்கலை மலைகளின் நாடித் துடிப்பை விரல் தொட்டுணர ஐம்புலன் தெரியும். கூழாங்கல்லின் சந்தோஷம்போல் காற்று வரத் தொடங்கிய செப்டம்பர் இன்னும் மிருகக் கூறுபாடு மறக்கப்பட்ட சரித்திரம் விற்பனைக்கான க்ளோஸப் சொற்களுக்காகப் புறவிருள் மரமாகும் பயப் பதியம் உன் விழைவுப் புழுதி நீயாக பாவம் அந்தப் பட்டாம்பூச்சி இதுவரை காகிதப் பதுமை காண்பொருளைத் திறந்து நனவேற்றி உலர்ந்த அறைகளை ரணமாக்கித் துகில் திரை விலக்கி வெப்பநிலையும் கவலையும் ஒரே வாயிலில் வந்திறங்க புரியாது தடுமாறும் மனப்பதம் உஷை உணராச் சாயுங் கால விரல் ரேகை பதியும் உன் முகத்திலொரு வயலின் மொழி எதுவும் உறங்கா இந்நகரின் இரவில் மாநரகரின் மௌனம் அலறும் குரல்வளை மாற்றிடம் வெற்றிடமாகாது மீன்பிடிப்பு ஆபத்தானது திறந்த தோணிகளில் ஆண்களின் 20 மணி வியர்வை உயிரிழப்பு அதிகம் வேலைப் பாதுகாப்பில்லை ஊழின் கரிப்பினை அறிந்திலர் அநேகர். இரவென்பது ஒரு பறவை இரவின் ஆதாரம் ஸ்ருதியே நள் என்று சொல்லும் கொன்ற செய்தி கொணர்கிறான் புகார்களைப் புன்னகையுடன் ஒப்பிட்டு மகா ஸ்ருதியாகும் காதுகளில் ஓயாத சுத்தியல் மீண்டும் ஆர்க்க வேண்டும் பாசி வயல் எவரும் நவிலா ஒன்றை மொழி மாற்றும் செயல் அது காற்றின் வடிவூற்று புயலும் மழையும் கலந்து வரைபெற்ற தெரு வானத்தின் நினைவோ கத்திரிப்பூ வேறெப்படி நூற்பது இப்பனுவலை இப்பொழுதில்லை மறுநாளில் முளைத்தெழுக கற்பக விருட்சமே எல்லாமே காத்திருக்கிறது மறதியின் இறுதிப் புள்ளிக்காய் இனியிலும் புல்மிளிரும் ஏரி நித்திய மதியத்தின் யூரியாப் பிசுபிசுப்பு மேகச் சிறகொழித்துத் திறந்திருக்கிறது மாலைக் காதலின் வெளிர் நீலத்தாள் நீ எழுதும் வேலை குடும்பம் எரிவாயு தடங்கிப்போன கடிதம் தினசரிகளின் கவிதை அராஜகவாதியின் சாம்ராஜ்யம் தெள்ளிய நீர் நைட்ரிக் அமிலம் உடைந்த ஸ்பிரிங் மாத்திரை பிரிந்த பிளாஸ்டிக் கொப்புளம் இரட்டைக் குவிமையக் கவிதை யாருடன் எங்கென்பதும் பொருட்டல்ல இத்தினம் ஆயினும் இதுவல்ல க்ஷணம் கேஸட்டில் ஒலிக்கும் ஆத்மாநாமின் குரல் காட்சிகளின் கோணம் தலைகீழாகப் புகைப்படச் சாம்பல் காற்றில் அலையும் காதலின்றிப் புணர்ந்து முப்பால் அறியாது பிறப்பிக்கும் பூனைச்சாதி நாமல்ல ஒரு கவலை பல துயரம் விலை மீறும் இலையரிக்கும் புழுவே வாழ்க்கையைத் தொங்கித் திருகிப் பாவங்களைப் புண்ணியமும் தண்டனையைக் குற்றமும் முயங்க துருவத் தகராறு புனிதர் ஏசுவும் அறிவார் துடிக்கும் சொற்களில் ஜடமுயிர்க்கும் நாம் நாமின் நம்மால் நமதின் சமன் மேற்கோள் முற்றும் சமீபிக்கும் அவர்கள் முதுமை இப்போது நொடிக்கும் அவர் இருக்கை அவர்கள் பீதியில் தம் நாய்களுக்கு நஞ்சிட விருப்பம் தெரிவிக்க வீட்டுச் சாமான்களைக் கால் விலைக்கு விற்று க்ஷாலைப் போக்குவரத்தின் தலை தெறிப்பை 0 ஆக்க நாற்பதாண்டுகள் பகிராததை இன்று க்ஷணத்தில் இரு நூற்றாண்டு வாழ்ந்ததை வெளியிலிருந்து பூட்டப்பட்ட கதவின் பின்னால் ஏதும் நடவாததுபோல் இருவரும் பூர்வகாலத்திலும் அந்நியராய் குரவர்களின் பறவை உறவு வலையளவு காதலின் கதகதப்பை எழுத்துப் பிழைகளுடன் எழுதி அயலார் ஒருவர் மௌனமே பொருளாய் மென்மையே வன்ம்மாய் விற்க முடியாதிருப்பது உன் இலக்கமிடா எலும்பு ஒரு கவிதை அறிவை நிர்த்தாட்சண்யமாய் நிராகரிக்கட்டும் மனதுடன் உனது லிங்கத்தை பிணைத்துக் காற்றில் ஊசலாடும் சங்கிலி பிரண்டு படுக்கும் ஒற்றையடிப் பாதை வாழ்ந்த வறுமை எலிவலை வெறுமை கேள்விகள் செய்து தேற்றம் முடித்து உன்னைப் பார்த்தால் 114 ஆண்டுகள் வாழ்ந்தவன்போல் அவதி தப்பிக்க வழிமுறை மரணத்தின் மொழி குறித்து பதில்கள் சில கடவுள் கேட்கிறாரா வார இறுதி ஓய்வு இன்னும் சொல்லற்ற கதை சொல் ஃபிரான்கோவின் சர்வாதிகாரத்தின்போது காட்டலோனியாவில் பெண்கள் எதிர்கொண்டது இருவகை அடக்குமுறை : காட்டலோனிய மொழியில் எழுதுவது தடைசெய்யப்பட்டது; பெண்களின் அறிவார்த்த செயல்பாடுகள் நிராகரிக்கப்பட்டன. 1976இல் ஃபிரான்கோவின் இறப்புக்குப் பிறகு காட்டலோனியாவில் மௌனமாக்கப்பட்ட 40 வருஷத்து இலக்கியம் இப்போது உறங்கும் வயல்கள் இருவர் நாம் மயங்கும் வரப்புகள் கொக்கோ ஏரிக்காட்டில் பூச்சிக்கனவில் புத்தாண்டு வாழத்தட்டையில் நரைக்கும் உன் ஆயுள் இக்கணத்தில் மெய் பற்ற கிளைகளில் சிக்கிய படிமம் தேடத் தோண்டியகப்பட்டது வெண்கல முகம் திறந்த வீட்டின் எளிய கனவு உம் நெற்றியில் எம் பெருவிரல் கண்ணிமைமேல் கனக்காத முத்தம்போல் உறங்கியது தெரியாத உறக்கம் நீரலை முகம் கோண அறும் ஆறு சலனம் தன் மெனோபாஸ் பருவத்தை யாரிடம் சொல்லும் காயும் சூரியன் துயிலெழுச்சிப் பாடலில் இணையாத இசை உள்ளங்கையில் அள்ளிய அரிசி என் நிலக்காட்சி • மொழி மீறிய காதல்(கள்) - பிரம்மராஜன் இந்தச் செய்தியுன் யோனிவரை சென்று சேருமா அன்றி அப்படி ஒன்றுனக்கு உளதா எனும் அறிதலின்றியே கூட பச்சை உடல்மீது வெண்மையில் மின்னிய தேமல்களின் சருமத்தில் எச்சில் அதரங்களை குவித்துத் தொட்டேன் உன் தாவரப் பெயர் என் சகதியின் ஆழ் இருள் நரகத்தில் புதைந்துகிடக்கிறது மொழி மீறியக் காதல்கள் எழுதும் பலகையில் விரல்கள் தட்டும்போது முதல் தொடுதலின் பதற்றக் காய்ச்சல் போல் விரல்கள் பழுத்துவிட்டன எலக்ட்ரிக் பழங்கள் மனிதச்சி ஒருத்தி சொன்னதை என் தீட்டுப்பட்ட சொற்களை மீறி எப்படியாவது வாழ்வின் பிராணன் ஊறிய என் தோல் செல்கள் உனக்குத் தெரிவித்தாக வேண்டும் உன் இதயம் உன் லிங்கத்தில் துடிக்கிறது ( முன்னவள் சொன்னாள் ) தாவரக் காதலி என் மனம் உன் பச்சையத்தின் தொடர் மூச்சுகளின் ரிதம்களை பின்வருடியும் செல்கிறது ப வில் தொடங்குவதன்றி வேறெந்த வர்ணமும் நமக்கிடையில் நுழையாது முடியாது சக கிழத்தியாகக்கூட இந்த மலர்கள் பெருந்திணை என்றுகூடச் சொன்னார்கள் இதை வக்கிரப்பெருவழுதி நான் எதை மறுப்பேன். அதுவாகும் நீ - பிரம்மராஜன் நீ அது ஆகிறாய் ஆம் அது நீயாவாய் ஆனாய் அதுவாய் நீ நீயே உனது மொழி நிகர் என்றும் மொழியே உன் பொருளாய்ப் பலவாய் மொழிந்து பொருளே சொல்லாய் ஒன்றினுள் என்றும் அதன் பொருள் யானே உனது நீ அது நான் ஆனேன் ஊனே உருகிய உள்ளத்துள் ஆனாய் அது வாய் இனிமை பொய்க்கலப்புடன் மெய்கலந்ததுவாய் கை கலந்தும் வாய் கலந்தும் சிரம் பற்றி சிந்தை பற்றாது நின்றவராய் சென்றதென் மெய்வாய் உன்றன் பொய்வாயுடன் குழல் கடந்தேகத் தடங்கிய குளத்துள் மெய் யாகவிருந்தோம் மெய் கலவாது சற்றும் • Balu mahendra film society 25 April at 15:39 • முத்தமும் எச்சமும் மிச்சம் =============================================== எனக்காகும் எச்சிலில் பிறர்க்கான முத்தம் உள்ளத்துக்கான வித்துகளில் உவர்களின் எண்ணெய்த் திரவியம் என் மழைக்கான உக்கிரம் உன் வெய்யிலின் தியானம் இந்தக் குதிரையின் தாகசாந்தியில் அம்மனிதரின் அபானம் பிறர்க்கான நஞ்சிலிருக்கும் கட்டுச் சோற்று மூட்டை எனது அவரின் ஊர்திகளில் என் பிராணன் மறிக்கும் கடுவெளி மறப்போர்க்கான நினைவுகளில் ஞாபகச் சிடுக்குகள் உலர்ந்த என் படுக்கையில் நத்தையூரிப் போகிறது அவளின் காலைப் போதுகளில் என் சந்தியாகாலக் கிருதிகள் ஈருடம்பும் ஒன்று போல விழிக்காது கொற்றவா தாமதித்து உறங்கி நிதானித்து இறக்கும் என்றாலும் என் கதிர்களை மறைக்கும் காலம் அவர்களின் தாளடியிலிருக்காது என் தேனீக்களின் யாகசாலையில் அவன் உலைக்கலம் உடலத்துக்கான என்னுடையில் மறவரின் சடலத்துப் போர்வைகள் கிழிபடலாகும் வாளின் முனைக் கருணையில் மின்னும் சாரைச் சேதில் இந்த நெல் சூல்கொள்ள பூக்கிறது என் மூங்கில் வனம் - பிரம்மராஜன் The Kiss (Lovers), oil and gold leaf on canvas, 1907–1908.[1] Österreichische Galerie Belvedere, Vienna, 180 cm × 180 cm பிரம்மராஜனின் கவிதைச் சிற்பம் http://mubeen-sadhika.blogspot.in/2016/08/blog-post.html ('சொல்லும் சொல் பிரம்மராஜனின்'-நூலில் இடம்பெற்ற எனது கட்டுரை) பிரம்மராஜன் தமிழின் மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் கவிஞர். அவருடைய மொழி ஆளுமை, ஞானத் தேடல், அறிவியல் முறைமைகள் கவிதைக்குள் தனி ஒரு வினையை நிகழ்த்துபவையாக உள்ளன. அவருடைய கவிதைகள் தமிழ் மொழியின் எல்லைகளை நீட்டித்தவை. கவிதையின் வாசிப்புக் கோட்பாட்டை மாற்றி அமைத்தவை. பன்முறை வாசிப்புக் கோருபவை. இவருடைய கவிதைகளிலிருந்து பின் நவீனத்துவக் கூறுகளை அடையாளப்படுத்த முடியும். தமிழில் கவிதையியிலின் பிரதிநிதித்துவங்களை முன்னெடுக்க பிரம்மராஜன் கவிதைகள் உதவுகின்றன. இந்தக் கட்டுரையில் அவருடைய ஒரு கவிதையின் வாசிப்பு இடம்பெறுகிறது. 'அறிந்த நிரந்தரம்' கவிதையில் இரு பகுதிகள் உள்ளன. I.அறிந்த நிரந்தரம் ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு. இரவெனும் கருப்புச் சூரியன் வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது. நெட்டித் தள்ளியும் நகராத காலம் எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது. அரைத் தூக்கத்தில் விழித்த காகம் உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக் கேட்காமல் மறதியில் கரைகிறது. இதோ வந்தது முடிவென்ற சாமச் சேவலின் கூவல் ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக. இரண்டாம் தஞ்சம் பொய் முகம் உலர்ந்தன ஏரிகள். நாதியற்றுப்போன நாரைகள் கால்நடைகளின் காலசைப்பில் கண் வைத்துக் காத்திருக்கும். எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்? தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த மனிதன் ஒருவன் ஒட்டடை படிந்த தலையுடன் வாசல் திறந்து வருகிறான் கோதும் விரல்களிடம். காயும் நிலவிலும் கிராமக் குடிசை இருள் மூலைகள் வைத்திருக்கும் மறக்காமல் மின்மினிக்கு. வாழும் பிரமைகள் காலம் அழிந்து கிடந்த நிலையில் கடல் வந்து போயிருக்கிறது. கடிகாரத்தின் முட்களில் உறக்கம் பதிந்துவிட்டதால் விழிப்பும் அங்கிருந்துதான் நிகழவேண்டியிருக்கிறது. பகலெனும் வெளிச்ச சூரியன் என்பதற்கு எதிரான இரவெனும் கருப்புச் சூரியன், பகலில் சிக்கித் தவிப்பதில்லை ஆனால் இரவில் வழிக் குகையில் சிக்கித் தவிக்கிறது. இதுவரையிலான வரிகளில் காலம் வேறு வேறு வடிவம் எடுத்தது. கடிகார முட்களாய், இரவு என்ற குகையாய். இங்கு நெட்டித்தள்ளி நகராத நிலையை அடைந்துவிட்டது. நத்தைபோல் கூரைகளில் வழிகிறது. நகரம் அல்லது கிராமத்தின் பிரதான பொருள் காலத்தின் பின்தொடர்தல்தான். அதுவே நிரந்தரமான வழமை. அந்த நிரந்தரத்தின் வன்முறை இப்படி முட்களாய், குகையில் சிக்கித் தவிப்பதாய், நத்தையாய் வழிவதாய் நகர்கிறது. நெட்டித் தள்ளி நகராத நிலையில் இருந்தாலும் இயந்திரத்தனத்தைத் தொடர்கிறது காலம். அந்த இரவின் முடிவில் முதலில் விழித்தது காகம். குழந்தையின் உறக்கம் அதன் ரோஜாப் பாதங்களில் இருப்பதை அது மறந்துவிட்டு கரைகிறது. காகம் மென்மை அறியாதது. குழந்தையின் மென்மை அதன் நினைவில் நிழலாடலாம். ஆனால் காலத்தின் சுமை அதை மறதியில் ஆழ்த்திவிடுகிறது. இரவின் முடிவு, சாமச் சேவலின் ஒலியில் உண்டாகிறது. அதுவும் ஓர் இசைக் கோர்வையாய். சேவலுக்குக் காலம் அழுத்தவில்லை. அதன் வழக்கம் ஒலிப்பது. ஒலித்தலை நயத்துடன் செய்வதைக் காலம் பொருட்படுத்தவில்லை. ஏரிகள் உலர்ந்து விட்ட இரவின் பொழுது. விடியலில் பொய் முகம் காட்டுகின்றன ஏரிகள். ஒளியின் இரண்டாம் தஞ்சம் நீரின் பரப்பில் என்பதால் அவை பொய் முகம் காட்டி உலர்ந்து போயிருக்கின்றன. ஏரிகள் உலர்ந்து போன பின் நாரைகள் நாதியற்றுப் போயிருக்கின்றன. இரவில் தூங்காத நாரைகள் விடியலில் கால்நடைகள் தூக்கம் கலையக் காத்திருக்கின்றன. வெட்டுக்கிளிகள் பறக்கும் போதுதான் பகல் வரும். அதற்காகக் காலம் காத்திருக்கிறது. மனிதனுக்கு விடியும் போது தலை ஒட்டடை படிந்திருக்கிறது. உடனடியாக அன்பு அல்லது நேசம் எனும் பாவனை அவனுக்குத் தேவைப்படுகிறது. அது அவனுயை விரல்களோ வேறு யாருடைய விரல்களோ. அதனிடம் தஞ்சம் அடையவேண்டியதுதான் அவனுக்கு விதித்திருப்பது. கிராமத்தில் விடியல் விரைவில் வந்து சேர்வதில்லை. அங்கு இருள் மூலைகள் எப்போதும் நிறைந்திருக்கின்றன. மின்மினிகளின் ஒளி அந்த மூலைகளில் தெறித்திருக்கும். காலம் எதை அழுத்திச் சொல்கிறது என்றால் வாழ்வதை. அதுவும் வாழ்வது போன்ற பிரமை தருவதை. அப்படிப்பட்ட நிலையில் காலம் அழிந்தால் கடல் அந்த இடத்தை நிரப்பிவிடும். அல்லது காலத்தை அழிக்க ஒரு பெரிய சக்தி தேவைப்படும். அது கடலிடம் இருக்கலாம். கவிதையின் நிரந்தர அறிதல் இந்த வரிகளில் சாத்தியப்படுகிறது. காலம் அழியாமல் எல்லாவற்றையும் அழிப்பதில் கவனம் செலுத்துகிறது என்பதுதான் நிரந்தரமாக ஆகிவிடுகிறது. அப்படி காலம் அழியும் என்பதற்குப் பொருளாக அல்லது காலத்தின் அழிவை நிகழ்த்த ஒன்று நடந்திருக்கிறது. அது கடலின் பேரெழுச்சி. அது அழிவின் ஓர் வடிவம் போல் இருக்கிறது.. காலம் போல் கடல் அழித்திருக்ககிறது. காலத்தின் இடத்தை எடுத்துக் கொண்டது போல் கடல் பாவனை செய்திருக்கிறது. II.கொடிக்கம்பியும் அலமாரியும் அம்மணமாய்ப் பார்த்து நிற்க வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல். நினைவின் சுவடாய் உதட்டில் படிந்த கரிப்பும் காற்றில் கரைந்துவிட வந்ததோ எனச் சந்தேகம் கவியும். பெண்ணுடல் பட்டுக் கசங்கிய ஆடைகள் மறந்த மனதின் இருண்ட மூலைகளினின்று வெளிப்பட்டு உடல் தேடி அலைவதால் எங்கும் துணியின் சரசரப்பு. அன்று பக்கவாட்டில் நடந்து வந்த மஞ்சள் நிலா தசைகளின் சுடரை நகல் எடுக்க முயன்று கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது. இறந்த நாள்களின் குளிர் நீளக் கைகள் நீண்டு வந்து மறதியைக் கொண்டு தூர்த்துவிட கற்பனைக்கும் சொந்தமில்லை கோலங்கள். கொடிக்கம்பி உடைகளின்றி இருக்கிறது. அலமாரியில் வைக்கவேண்டிய பொருள்களும் இல்லை. வீட்டுக்குள் வந்து விட்ட தடயம் வெளியில் இருக்கும் மணலை உதிர்த்ததில் மட்டுமே உணர்த்தப்படுகிறது. கடலின் கரையிலிருந்து எடுத்து வந்த மணலாக இருக்கலாம். அழித்து விட்ட கடலின் கரையிலிருந்து. கடலின் அழித்தல் போல், காலத்தின் அழித்தல் போல் ஏதோ ஓர் அழிவு நிகழ்ந்திருக்கிறது. அதைச் சொல்வதுதான் அந்த மணல் தடயம். கடலின் உப்புக் காற்று உதட்டில் கரித்தாலும் கடல் வந்து போனதோ என்ற சந்தேகம் நிலவுகிறது. கடல் வந்தால் அழிவும் வந்திருக்கும். காலம் அழித்திருக்கும். காற்று எந்த நினைவையும் கரைத்துவிடும் என்ற வழிமுறையால் இந்தச் சந்தேகம் மேலும் வலுக்ககிறது. பெண்ணுடன் உறவில் இருந்த பிறகு காலம் முடிந்து போகிறது. தன் உடலைக் காலம் தொலைத்துவிடுகிறது. உடல் தேடி அலையும் போது உடைகளின் சரசரப்புதான் உடலாகத் தெரிகிறது. காலம் இருள் மூலைகளில் சென்று சேராமல் மின்மினிகளை ஒளிர வைத்தது போல் மனதின் இருள் மூலைகளில் இன்னும் காலம் சென்று சேரவில்லை. உடல் என்னும் வெளிச்சம் எப்போது வேண்டுமானாலும் சாத்தியப்பட்டுவிடும். மஞ்சள் நிலா இன்னும் விடியா இரவின் இன்பத்தைக் கூட்டுகிறது. அது பெண்ணா நிலாவா என்று புரியாத நிலையில் அது தசையின் சுடரை நகல் எடுக்கிறது. மேலும் கோட்டுக் கோலங்களையும் செதுக்கியிருக்கிறது. இறந்த காலம் குளிர்ந்து போய்விட்டது. அதன் நீட்சி மறதியை தூர்த்துவிட்டது. இனி கற்பனைக்கும்கூட சொந்தமாக அந்தக் கோலங்கள் இருக்கப் போவதில்லை. இந்தக் கோலங்கள் அந்தப் பெண் வரைந்தவையாக இருக்கலாம். கவிதைக்குள் ஊடாடும் ஒரு பொருள், காலம் முதல் பகுதியில் காலத்தின் சுழற்சி காட்டப்படுகிறது. இரண்டாவது பகுதியில் காலத்தினால் நிகழ்ந்த கோலம் காட்டப்படுகிறது. இரவு-பகல் என்ற எதிர்மைகளின் நிறைவும் குறைவும் கலந்து முதல் பகுதியில் நிலவ ஆண்-பெண் என்ற உறவின் ஊடாட்டம் இரண்டாம் பகுதியில் பரவுகிறது. முதல் பகுதியில் காலத்தை எதிர்கொள்ளும் உயிர்களின் நிதர்சனம் அறிவிக்கப்படுகிறது. இரண்டாம் பகுதியில் காலத்தின் விளைவு நிதர்சனமாகிறது. காலம் முதல் பகுதியில் அழிக்கும் நினைவு, இரண்டாம் பகுதியில் ஓர்மையாகிறது. காலம் முதல் பகுதியில் நிரந்தரமான அறிதலைத் தர இரண்டாம் பகுதியில் நிரந்தரமின்மையின் அறிதலைத் தருகிறது. காலம் முதல் பகுதியில் விடியலில் தொடங்கி அழிவில் முடிகிறது. இரண்டாம் பகுதியில் உறவில் தொடங்கி பிரிவில் முடிகிறது. இரண்டு இணை கோடுகளாய்க் காலமும் காலம் சார்ந்த நிமித்தங்களும் கவிதைக்குள் சேர்கின்றன. முதல் பகுதியில் காலம் வழக்கத்தின் ஒரு முறைமையைக் கூற இரண்டாம் பகுதியில் வழக்கமின்மையின் அடையாளமாகிறது. சின்னமாகிறது. முதல் பகுதியில் இயற்கையின் ஒரு நிகழ்வென காலம் கடந்து செல்ல இரண்டாம் பகுதியில் நிகழ்வுகள் காலத்தை உறையவைக்கின்றன. முதல் பகுதியில் காலம், பெண்ணாக உருவகம் கொள்ள இரண்டாம் பகுதியில் பெண் காலத்தை உருவகித்திருப்பதாகக் கவிதையில் வாசிக்க முடிகிறது. காலம் எனும் புராணம் காலம் என்பது கிரேக்கப் புராணப்படி இந்த உலகத்தின் மீது ஆட்சி செலுத்தும் சக்தியாக கால தேவன் இருக்கிறான். இந்துப் புராணப்படி எல்லா ஆக்கத்திற்கும் அழிவுக்கும் காரணமானது காலம். இந்தக் கவிதையிலும் காலம் உயிர்களை உயிர்ப்பித்து இயங்க வைக்கிறது. காலம் இரவாகவும் பகலாகவும் மாறி மாறி ஒரு சக்கரத்தில் சுழல்வதன் சுமையை இங்கு கவிதையின் வர்ணிப்புச் சுட்டிச் செல்கிறது. மேலும் மறைமுகமாகக் காலத்தின் ஊடாகப் பயணிக்கும் மற்றொரு படிமம் கடல். கிரேக்கப் புராணத்தில் 'க்ரோனஸ்' எனப்படும் கடவுள் காலத்தைக் குறிப்பது போல் மற்றொரு பொருளில் உலகத்தை ஆளும் சக்தி படைத்தவனாக மாறுவதற்குத் தன் தந்தை யுரேனஸைக் கொன்று அவனது உறுப்பைக் கடலில் போட்டுவிடுவதைக் குறிக்கிறது. இந்த 'க்ரோனஸு'க்கும் அவனுடைய தங்கைக்கும் பிறக்கும் குழந்தைகளை 'க்ரோனஸ்' கொன்றுவிடுகிறான். இறுதியில் 'ஜீயஸ்' என்ற கடவுளால் கொல்லப்படுகிறான். இந்தப் புராணத்தில் வரும் கடல் என்ற பெரும்பேரெல்லை கவிதையில் மறைந்து மிகைக்கிறது. கடலில் போடப்பட்ட யுரேனஸின் உறுப்பிலிருந்து முளைக்கிறது 'அப்ரோடைட்' என்ற பெண் கடவுள். அதுவே காதலின், எழிலின் கடவுளாக விளங்குகிறது. ஆண்-பெண் உறவின் மயக்கமாய் கவிதைக்குள் பேசப்படுவதும் இந்த கிரேக்கப் புராணத்தின் விளைபொருளாக இருக்கலாம். இந்து புராணப்படி காலம் மறுஉற்பத்தியின் கண்ணியாக இருக்கிறது. தொடர்ந்து நிகழும் செயலுக்கான ஊக்க சக்தியாக இருப்பது காலம். மேலும் இந்து புராணப்படி காலத்தை நல்லது/அல்லது என்ற பிளவில் வைத்துப் பார்க்கும் பார்வையும் உள்ளது. இந்தக் கவிதையில் முள், நத்தை, காகம் என்ற குறியீடுகளின் வழியாகவும் தவிப்பு, கரைதல், நகர்தல் என்ற செயல்பாடுகளின் வழியாகவும் காலம் என்ற பரந்த குறித்தலாக்கம் நடைபெறுகிறது. காலத்தின் கரும பலனாக விளைவதை உறவின் சேர்க்கையாகவும் பிரிவாகவும் காட்டுகிறது இந்தக் கவிதை. இந்த வாழ்தலைத்தான் பிரமை என்கிறது. காலம் நிற்கும் போது பிரமையும் முடிந்துவிடுகிறது. காலம் அழிதல் என்பது இறந்த காலம் ஆகுதல் மட்டும் அல்ல. காலம் நின்றுபோதல் அல்லது காலம் முற்றாதல் என்பதும்தான். காலம் நினைவாக முற்றிவிடுகிறது. காலத்தின் இயக்கம் நினைவின் சேகரமாகப் பெருகிவிடுவதையும் காலத்தின் நிரந்தரமாக அறியச் செய்கிறது இந்தக் கவிதை. உதவிய நூல்கள் 1.Encylopedia Brittanica-Hinduism-Myths of Time and Eternity 2.The Postmodern Magus:Myth and Poetics-James Merrill, 2008 பிரேம் பிரேம் https://www.facebook.com/profile.php?id=100005110006875&fref=nf கவிதை: அறியப்படாத நிரந்தரமா? நிரந்தரம் அற்ற அறிதலா? 2000-2002 காலகட்டத்தில் பிரம்மராஜனுடன் பதிவு செய்யப்பட்ட எனது உரையாடல் பன்முகம் இதழிலும் பிறகு தொகுப்பிலும் வெளிவந்தது. உரையாடலின் அறிமுகமும் அதில் உள்ள இரு பத்திகளும். இறுதிப் பத்தி இன்றைக்கான மருந்து. ** "அறிந்த நிரந்தரம் கவிதைத் தொகுதி மூலம் தமிழ்க் கவிதைக்கு அறிமுகமான பிரம்மராஜனின் ஐந்தாவது தொகுதியாக மஹா வாக்கியம் வெளிவந்தது. ஒரு கவிஞராக இருப்பதுடன் பத்திரிகை ஆசிரியராக மொழிபெயர்ப்பாளராக, கட்டுரையாளராக, தொகுப்பாளராக செயல்படும் இவரின் இலக்கியம் பற்றிய பார்வைகள் விமர்சனங்களின் மூலம் பதிவாகிறது. 1983-91 காலகட்டத்தில் வெளியான மீட்சி 35 இதழ்கள் வரை வந்திருக்கிறது. சிறுபத்திரிகை என்ற தளத்தையும் மீறி இலக்கிய வாசிப்புக்கு தேர்ந்தெடுத்த பங்களிப்பை செய்திருக்கிறது இது. இலக்கிய இயக்கங்கள், கோட்பாடுகள், இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஒரு அறிமுகத் தளத்தை மீட்சி அமைத்துக் கொடுத்ததற்கு பிரம்மராஜனின் இலக்கியத் தோ்வுகளே காரணமாக அமைந்திருப்பதை தற்போதைய அவரது எழுத்துக்கள் மூலம் அறிய முடியும். கலைந்துபட்ட பிரக்ஞைகளின் படிமங்களும், இடைவெளியுடைய நினைவுகளின் குறியீடுகளும் பிணைந்த ஒரு மொழி இவரது கவிதையாக மாறுகிறது. மையப்படுத்தப்படாத மொழி மற்றும் நிகழ்நிலை இரண்டையும் கவனப்படுத்தும் பிரம்மராஜனின் கவிதைகள் இடையீட்டு பிரதிக்குறிப்புகளை வெளிப்படையாக பயன்படுத்துவதன் மூலம் ஒரு சா்வதேச மொழிவலை சார்ந்த கவித்துவ மனோநிலையை கவனப்படுத்துகின்றன. இவருடனான உரையாடல் இவரது எழுத்துக்களை பல்வேறு பின்புலங்களில் விளங்கிக் கொள்ளவும், எழுத்துருவாக்கம் பற்றிய சில கூறுகளை பதிவு செய்யவுமாக அமைந்திருக்கிறது." ** பிரேம் : வலி உணரும் மனிதா்கள், அறிந்த நிரந்தரம் இரு கவிதைத் தொகுதிகள் தொடங்கி வைத்த ஒரு வடிவ முயற்சி உங்களுடைய புராதன இதயம் தொகுப்பில் திடமாக வெளிப்பட்டது. புராதன இதயத்திற்கு பிறகு பிரம்மராஜன் கவிதைக்கான ஒரு நிலவரைபடம் அல்லது மொழி வரைபடம் கிடைக்கிறது என்று சொல்லலாம். இதில் ஒரு கவிதைத் தொழில்நுட்பம் பதிவாகி இருக்கிறது. உங்கள் கவிதைகளில் பொருள் என்பதை சூழலில் உள்ள பருண்மை என்பதை குறியீடுகளாக எடுத்து அவற்றை defamiliarize செய்வது அவற்றின் வரிசை முறையை, வைப்பு முறையை அல்லது தளத்தை மாற்றுவதன் மூலமாக நூதன நிலைக்கு ஒரு நிநோத நிலைக்குக் கொண்டு செல்வது என்பது ஒரு நிலை, நவீன ஓவியத்தில் பயன்படும் நிறங்கள், விளிம்புகள், கோடுகள், முரண் வண்ணங்கள், நிழல் வண்ணங்கள் போன்றவற்றிற்கு இணையாக மொழியைப் பயன்படுத்துவது, இந்த ஓவியக் கூறுகளை கவிதைக்குள் கொண்டுவருவது. இரண்டாவது நிலை, சில கவிதைகளில் தென்படுவது பெரிய பின்புலத்தில் கவிதையை உருவாக்கி அதன் பின்புலத்தை நீக்கிவிடுவதன் மூலம் உருவாகும் வெற்றிடமான முரண். இதில் கவிதைக்கான Theatricality கற்பனைப் பரப்பில் மறைத்து வைக்கப்படுகிறது. இதைக் கண்டுபிடித்த பின்புதான் கவிதை அசையத் தொடங்கும்; இதுவும் உங்கள் கவிதை வடிவத்தின் ஒரு முக்கியப் பகுதி. அடுத்தது இசையின் தன்மை – நவீன இசையின் தன்மை – பல முரண்பட்ட ஓசைகளை ஒரு ஒழுங்கிற்குள் பன்மைத்தன்மையும் வித்தியாசங்களும் குறையாமலேயெ பொருத்துவது harmony இல் அமைவது போல உங்கள் கவிதைகளை விளக்க பயன்படுத்தலாம். இயற்கை மற்றும் இயற்கைச் கூழல் சார்ந்த ஒரு வரைபடம் உங்கள் கவிதைகளில் இருப்பது போலவே உயா்தொழில் நுட்பத்தின் இடையுடுகளும் உள்ளன. இவற்றினூடான ஒரு சோகம் தொடர்ந்து இணைப்பை உருவாக்குகிறது. சில காட்சிப்படுத்தல்களில்கூட இது ஊடாடி வருகிறது. இந்த இணைப்பாக்கம், Composition என்பதை எந்த விளைவுகளை ஏற்படுத்த நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். இவற்றை பிரக்ஞை புர்வமாகவே தொடக்கத்திலிருந்து செய்து வருகிறீர்களா? * ஜென் மயில் புன்னை மயில் விரைந்தது ஜென் காரின் குறுக்காய்ப் பறந்து குருதியொத்த நிறம் சேதாரம் எதுமில்லை கேட்டுத் திரும்பின கால்கள் மைனாக்களின் உலோக ஸிம்பனியை மடையான்களின் மாலை சாதகத்தை ஸெல் கோபுரம் முற்றும் உச்சியில் இருவரின் ஸ்பானர்கள் இயங்கும் வெள்ளி வெளிச்சத்தில் கைகள் ஒயக்காத்திருந்து கடவுள் கயிறுகளை சற்றே மேலே இழுத்து விடுகிறார் கால்கள் கண்டன விளக்கற்ற அடுக்களையில் உறுகாய்ப் பாட்டிலின் மீதிருந்து கொசுக்களைப் பிடித்துண்ணும் மரத்தவளை புத்திப் புலன் புள்ளிக் குயிலொன்று நுணா மரத்தில் கண்கண்ட காட்சி புத்தி பாராது அருகாமைக் கூந்தப்பனையிலமர்ந்து கூவியது திக்கித் திக்கி புத்திக்குப் புலர் நேரம் அகன்றுயர் ஆண்பனையில் அமர்ந்தது நடுநெஞ்சிலிருந்து விருட்டென்று பறந்தகன்றது வல்லூறு இலக்கை இழக்க விரும்பாது செங்கோணச் சமதளம் சாபமும் மறதியும் சகதியாய்க் குழைந்து நதியாகத் தவறி கிழக்கு மேற்கில் குப்புறத் தூங்கும் சாக்கடை துருவங்களில் வரைவளைவுகாய் நீந்தும் நீர்ப்பாம்புகள் தகவமைப்பின் உச்ச இலக்கணம் பொரியளவேயாகும் மீன் குஞ்சுகள் வரைவளைவுகளை வெட்டிச் செல்லும் செங்கோணங்களும் பிறவும் நீர்மறந்த ஏரிகள் நிராகரித்த சிலந்தி இழைவழி இறங்குவது போல் எரிபொருள் வற்றிய ஹெலிகாப்டராய் சாம்பல் நிறக் கொக்கு துணுக்கு மீன்கள் நீந்தி ஒயும் ஒளியும் தென்வடலாய் இந்த வாயில் கைப்பிடிச்சுவரில் மந்திரக்கோலாகக் காய்ந்த குச்சி தார்வேலையில் மிஞ்சிய ஒரு பாறையெச்சம் இரண்டிலொன்றைத் தேர்ந்து குறிபார்க்க யாருக்கென்ன யோக்யதை பெற்றே தீர்தல் மீண்டு பிரயாணம் முடிந்து ஊர்வந்து தேர்நின்ற பின் பயணவழிவரைபடம் பார்த்து சென்றவழியெல்லாம் எறும்பாய்த் தேய்ந்து செல்கிறபோது பனையும் தென்னையும் மயங்கும் புலம் மணலில் மறைந்து கிடக்கிறது காரை நிறுத்தும் சோதனைச் சாவடிகள் ஆவணங்களை மேயும் ஆயுதபாணிகள் சரிசரியெல்லாம் போகலாம் போவென்றாலும் மேலதிகாரியின் ஜோபிக்காக இன்னும் கார் தயங்கித் தடங்க காகிதக் காசுகள் கைமாற இழப்பொன்றுமில்லை ஒர் சூர்யாஸ்தமனம் உருண்டைப் பாறையில் மாறிமாறிக் குந்திய கடல் காகங்கள் எறும்பு மீண்டும் பாதை தொற்றிச் செல்கிறது மேலதிகாரியையும் சீருடையாளரையும் வரைபடத்தில் போடுவதில்லை என்பதை அறியாது நவீனக் குறுஞ்செய்தி மணியன் என்பவன் சொன்னதென்ன என்று கேட்டேன் அந்த தபால் கார்டு புரியாமல் அடுத்த நாள் ஆயிரம் வரைந்தீர் அத்தனையிலும் அதே கொக்கிகளைக் கோர்த்துச் சாய்த்தது போல சொன்னதென்ன என்றேன் அடுத்து விடுத்தீர் அயிரத்தெண்ணூறு இன்லாண்டுகள் மாற்றமிலாது பிறகு தினத்திற்கு 22 தந்திவீதம் பெற்றவள் வாங்கி வைத்தாள் அதே மூன்று வரிகள் ஒன்றிலும் சாவியில்லை அவன் சொன்னதென்ன என்றேன் எட்டவில்லை உமக்கு உம்மிடம் யூடியூப் செல்ஃபோன் சாதாஃபோன் கேமராஃபோன் ஏதுமில்லை அவன் என்ன சொன்னான் நாம் நம்மைப் பற்றியா படித்தும் படிக்காமல் விட்ட புத்தகங்கள் பற்றியா வாங்க நினைத்து வாங்காது விட்டவை பற்றியா வாங்கியும் பிரிக்காது விட்ட நூல்களையா படித்துவிட்டது போல பாசாங்கு செய்தவை ‘பவர் ரீடிங்’ என்று சொல்லி நீர் 10 பக்கங்களைத் தள்ளிவிட்டு வாசித்ததையா முப்பது முறை தொடங்கி ஒருபோதும் முடிக்காது விட்டவை பிறகும் கடிதங்கள் எப்போதும் போல் இருவர் பிடித்திழுத்து ஸ்பிரிங்குகளை தளர்த்தியது போலிருந்த எழுத்துக்கள் உமது டைப்ரைட்டருக்கு வலிக்காதென்று எண்ணித் தட்டுகிறீர் நீர் மறைந்தும் உம் டைப்ரைட்டரிலிருந்து எப்படி எண் இ-மெயில் பெட்டிக்கு அந்த மூன்று வரிகள் வருகின்றதென்று தெரியவில்லை ‘ஸ்பாம்’ பாதுகாப்புக்கு மிஞ்சியும் அன்னம் உன் ஓவியம் தந்தையைத் தீட்டுவது கடினமில்லை பக்கவாட்டில் எழை வீடொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார் கண்மூடி தங்கையின் பின்புறம் கூட உறுத்தவில்லை திறந்த கண்ணாடி ஜன்னல் பாய்மரமேறிய ஒற்றைத் தோணியைக் கண்டாள் வெண்ணிற உடுப்பில் அடுத்த அடி எடுப்பது போலிருந்தன கால்கள் ஃபிராய்டை கரியநிறக் கம்பிக் கூட்டுக்குள் போட்டாயிற்று அம்மாவை வரையும் உக்கிரமில்லை காதலியின் கணவனைச் சித்திரிக்க சலிக்கவில்லை கார்க்கியின் சொட்டைத் தலைமேல் ஆறால்மீன் சிறுமி எப்போதும் மாதாகோயிலின் மணியாய் குழந்தைப்பெண் குழந்தைக் காதலிக்கு நகப் பூச்சு ஒரு ரோல்ராய்ஸ் கார் தலையில் குத்தீட்டி எறிய குதிரை மோனாலிஸாவும் நெப்போலியனும் அருகருகே பிக்காஸோவின் மூளை பிடறி வழியாக நாக்கை ஆராதிக்க ஒரு வாசிக்கப்படாத மேண்டலின் உன்னை வரையும்போதுதான் மூளை சுக்கல்சுக்கலாக முற்றாத சலவைக் கல்லை கைதவறிக் கீழேவிட்டீர்போல் தரையில் கால்பாவாது உன்னை எற்றி வைக்க வேண்டியிருக்கிறது பாய்ந்து கிழித்தெறியத் தயாராகி முடியாத வேங்கைகள் அவற்றைக் குறிபார்க்கும் துப்பாக்கிகள் எல்லாம் சமைந்து நிற்க ஈயாடாது எறும்பசையாது சிகரெட் புகை சுழலாது அசைவற்ற மோட்டார் பைக் சுற்றி நாலைந்து பேர் தேனீ ரீங்கரிக்காது சமுத்திரங்கள் எல்லாம் வெட்டப்பட்ட காலத்தில் போல மௌனிகளாய் ஸகரன் ஸகரன் எண்று நாமாவளியை மனதில் ஜபிக்க உன்னருகே முட்டையிலிருந்து மூன்று குஞ்சுகள் அன்னமே 0 அந்தரத்தில் மிதப்பதென்பதால் அதைக் கூடென்றோ கோளென்றோ சொல் தளராது வீடென்று கொள் விண்ணில் விதைத்த விதை மண்ணில் விழுந்து வீறிட்டாக வேண்டுமே மலரும் தோட்டக்காரனும் ஒருவரேயென்றாலும் துரிதம் குறைவுறு தெளிப்பான்கள் மறைக்காட்டுக்குச் சொல்வதுண்டாம் எடை ஈரம் வடிந்து ஈய வைக்கோல் காய்ந்து சுழன்றடிக்கும் தர்க்க நாணல் ஒரு நாள் ஒரே நாளில் 0 செய்நேர்த்தி கண்ட உமத்தை வித்துக்களை களவு செய்த குரங்குகள் உண்டிருக்க 120சதம் இல்லை வாய்ப்பூட்டு கசந்த சுவை விற்பன்னர்கள் காற்று திசை முகர்ந்து பருவத்தே பயிர் முடித்து கருஊதா மலர் விரியக் காத்து பிய்த்தெறிய வியலும் சிலந்தி விரல்களால் பொறுமையின் தெர்மாமீட்டர் அனுமதிக்க 0 அங்கே நிற்பாட்டியிருக்கும் வண்டியைக் கண்டு ஐயம் திரிபு அகற்று ஐம்பொன்னால் அனது பீரங்கி மல்லர்கள் புஜக பூஷணர்கள் அசைக்கவியலாதது ஒன்பதிலிருந்து பூஜ்யம்வரை எண்ணிக் கழிக்க ஆள்வரக் காத்து கள்ளிப் பெட்டியில் நிறைகொண்டிருக்கும் ஐந்தே கல்குண்டுகளும் ஒரு கோணிப் பை கரிமருந்தும் அதிக ஆசையில்லை பொடித்துத் தூளாக்க வேண்டி உதித்திருப்பது மேற்குவானில் ஒரு சுக்கிரன் மாத்திரமே பிரம்மராஜன் : சுற்றுச்கூழல், இயற்கை ஒழுங்கு என்பது எனக்குள் ஒரு உணா்வாகத்தான் முதலில் இருந்தது. என்னை அறியாமல் அதன் முக்கியத்துவத்தை நான் உணா்ந்துகொண்டே இருந்தேன். என் ஊரின் சூழல்தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. முன்பு அது தூய்மையான சுத்தமான அழகான கிராமமாக இருந்தது. அதன் தெருக்கள் அவை இணையும் இடத்தில் இருந்த கோயில். ஊரில் இருந்த குளம் அதைச் சுற்றி இருந்த எட்டி மரங்கள். இந்த இயற்கை அழகின் ஒரு பகுதியான அதன் மௌனம் நிசப்தம். இதிலிருந்து பிறக்கும் ஒரு இசை, இவை எனக்கு முக்கியமானவை. இசை எந்த ஒரு துயரமான நம்பிக்கையற்ற சூழலையும் வேறொரு அா்த்தத்திற்கு மாற்றிவிடுகிறது. எனக்கு என் கிராமத்தின் இன்றைய நிலையும் ஞாபகத்திற்கு வருகிறது. அவ்வளவு சீரழிவும் ஏற்பட்டுவிட்டது. சுற்றுச்சூழல் என்பதை ஒரு கோட்பாடாக இயக்கமாக நான் புரிந்துகொள்வதற்கு முன்பே எனக்குள் அது ஒரு உணா்வாக இருந்தது. அதே சமயம் அதனுடன் முரண்படக்கூடிய டெக்னாலஜி என்பதையும் ஒரு அழகியல் உணா்வோடு நான் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் தொடங்கினேன். அதைப்பற்றிய விமா்சனத்துடன் எனது கவிதைகளிலும் கொண்டு வந்திருக்கிறேன். தூண்மையான சுற்றுச்சூழல் அதன் மூலம் உருவாகும் மௌனம் அதிலிருந்து உருவாகும் இசை இவற்றை உருவாக்க மேலும் புரிந்து கொள்ள உதவும் உயர் விஞ்ஞானம் என்ற அளவில் harmony என்பதை structural ஆக எனது கவிதைகளில் நான் பயன்படுத்தி இருக்கிறேன். இசை பலவித முரண்பட்ட பகுதிகளை ஒருங்கிணைப்பது போல எனது கவிதைகளில் இவற்றின் முரண் தன்மைகளை ஒருங்கிணைக்கும் தன்மை உண்டு. *** (“கண்டவரும் எழுதிக்குவிக்கும் காலம் இது, இலக்கியம் நாசமாகிவிட்டது. இணையம், வலைதளம் வழி எழுத்துகள் நச்சாகிவிட்டன, எழுதப்படுகின்றவை எல்லாம் இலக்கியமாகிவிடாது” என்ற ஒரே புலம்பலை பல வடிவங்களில் கேட்டு வருகிறோம். இது பாசிசத் திமிரின் பாசாங்கு கொண்ட ஒரு அக்கறை. புனிதவாதத்தின் இடம் மறுக்கும் தந்திரம். அனைவருமே எழுதவும், பேசவும் எதிர்ப்பேசவுமான உலகத்தை உருவாக்கத்தான் நவீன அரசியல் புரட்சிகள் மட்டுமல்ல இலக்கியப் புரட்சிகளும் நிகழ்ந்தன. காலத்தை வெல்லும் காவியங்களின் காலம் முற்று பெற்றது, இனி காலம் தோறும் உருவாகும் இலக்கியமே அக்காலத்திற்கான எழுத்துகள். பெருகும் எழுத்துகள் புனிதவாதத்தை உடைத்துப் பாயகின்றவை. எழுத அறியாத மனங்கள், எழுத்தைப் புனிதப்படுத்தும் சமூகங்கள் இரண்டு மூன்று திருஉருவங்களைச் சுமந்து நசுங்கிப் போகும். குற்றாலம் பதிவுகள் இலக்கியச் சந்திப்புகளின் போது (1989 -1993 ?) நான் விடுத்த அழைப்பு இதுதான்: வடிவங்கள் பெருகட்டும், ஒற்றைக் கதைகளில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் கதை சொல்லத் தொடங்குங்கள்... கவிதைகளும் கூட...உமக்குப் பிடிக்காதவை என்றாலும் உமது காலத்தின் எழுத்துகள் இவை.)

No comments:

Post a Comment