Monday, February 22, 2021

தி. க. சிவசங்கரன்

தி. க. சிவசங்கரன் தி. க. சிவசங்கரன் (Thi. Ka. Sivasankaran, 30 மார்ச் 1925 - 25 மார்ச் 2014),[1][2][3] மார்க்சிய திறனாய்வாளர். திருநெல்வேலி நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது இளமைப் பருவ நண்பரான வல்லிக்கண்ணனுடன் இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். இந்திய பொதுவுடமைக் கட்சிஇலக்கிய இதழான தாமரையில் 1960 முதல் 1964 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1964ல் சோவியத்து கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். தி.க.சிவசங்கரனின் மகன் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் எழுத்தாளரும், தமிழில் முக்கியமான சிறுகதையாசிரியரும் ஆவார். பொருளடக்கம் [மறை] • 1திறனாய்வாளர் • 2இளம் எழுத்தாளர் அறிமுகம் • 3சாகித்ய அகாதமி விருது • 4ஆவணப்படம் • 5மறைவு • 6மேற்கோள்கள் • 7வெளி இணைப்புகள் திறனாய்வாளர்[தொகு] நா. வானமாமலை, தொ. மு. சி. ரகுநாதன் ஆகியோரிடம் தொடர்பு கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் உறுதியான கட்சிப் பிடிப்புக் கொண்டவர். கட்சி எடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ஒட்டித் திறனாய்வுகள் செய்வார். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து விவாதிப்பவர். புதுமைப்பித்தனை ஒரு இலக்கிய முன்னுதாரணமாக க. நா. சுப்ரமண்யம் முன்வைத்தபோது புதுமைப்பித்தன் ஒரு பிற்போக்குத்தனமான கலாச்சார நசிவு சக்தி என்று அடையாளம் காட்டி "அதில் புதுமையும் உண்டு, பித்தமும் உண்டு" என்று அவர் எழுதிய சாடல் கட்டுரை பெரிய விவாதத்தை உருவாக்கியது. அதன் பிறகு அக்கருத்துக்களை மாற்றிக் கொண்டார். இளம் எழுத்தாளர் அறிமுகம்[தொகு] தாமரை இதழில் பணியாற்றிய போது பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கார்டுகளில் கடிதங்கள் எழுதுவது, இதழ்களில் வாசகர் கடிதங்கள் எழுதுவது அவரது முக்கியமான இலக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. இதனால் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் தோன்ற காரணமாக இருந்தார். சாகித்ய அகாதமி விருது[தொகு] இவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் முதிய வயதில்தான் திகசி கட்டுரைகள் என இரு பகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இத்தொகுதிகளுக்கு 2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. ஆவணப்படம்[தொகு] தி.க.சி.யின் வாழ்க்கை குறித்தும்-எழுத்துலகம் குறித்தும் 2007-ஆம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தமிழ்க்கூடம் என்ற கலை-இலக்கிய அமைப்பு ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியது. ”21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன்” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தை எழுத்தாளரும் இயக்குநருமான எஸ். ராஜகுமாரன் எழுதி-இயக்கியுள்ளார். திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் 2008-க்கான சிறந்த ஆவணப்பட விருது மற்றும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008 ஆகிய விருதுகள் இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்தன. மறைவு[தொகு] சிவசங்கரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 2014 மார்ச் 25 இரவு 11.30 மணியளவில் காலமானார்.[4] மறைந்த தி.க.சிவசங்கரனுக்கு 3 மகள்கள் மற்றும் எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட 3 மகன்கள் உள்ளனர்.[5] இலக்கியத் திறனாய்வாளர், படைப்பாளி வண்ணநிலவன் | இதழ் 102 | 31-03-2014| அச்சிடு முற்போக்கு இலக்கியத் திறனாய்வாளரும் சிறந்த படைப்பாளியுமான தி.க.சிவசங்கரன் (Thi.Ka.Sivasankaran) பிறந்த தினம் இன்று (மார்ச் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * திருநெல்வேலியில் பிறந்தவர் (1925). 6 வயதில் தந்தையையும் 7 வயதில் தாயையும் இழந்தார். தாத்தாவிடம் வளர்ந்தார். சிறுவயது முதலே வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். காந்திய நூல்கள் இவரை மிகவும் கவர்ந்தன. * 15 வயதில் தன் வயதுடைய சிறுவர் களுடன் இணைந்து ‘நெல்லை வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் சார்பாக ‘இளந்தமிழன்’ என்ற கையெழுத்துப் பிரதி தொடங்கப் பட்டது. தங்கள் இதழுக்கு எழுதிக்கொடுக்கும்படி வல்லிக்கண்ண னிடம் இந்த இளைஞர்கள் கேட்டுக்கொண்டனர். அவரும் இதில் எழுதிவந்தார். * அப்போது ஒரு கதையை எழுதி வல்லிக்கண்ணனிடம் இவர் கொடுக்க, அது ‘பிரசண்ட விகட’னில் பிரசுரமாக அவர் ஏற்பாடு செய்தார். அதன்பிறகு கதை, கவிதை என நிறைய எழுத ஆரம்பித்தார். 1945-ல் வங்கி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். * பல்வேறு இலக்கிய அமைப்புகள், இலக்கிய ஆர்வலர்களோடு இணைந்து இலக்கியப் பணிகளை ஆற்றிவந்தார். பாரதியாரைத் தனது ஆதர்ச குருவாக வரித்துக்கொண்டு இலக்கிய வாழ்வைத் தொடங்கினார். * சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர், பிரபல இலக்கியவாதி ஜார்ஜி குலியா எழுதிய நீண்ட நாவலை, ‘வசந்தகாலத்தில்’ என்று தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பின்னர் இதழ்களில் விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார். தலித்தியம், பெண்ணியம், தமிழியம், சூழலி யல், மார்க்சியம் உள்ளிட்ட முற்போக்குக் கொள்கைகள் சார்ந்தே இவரது இலக்கிய மதிப்பீடுகளும் செயல்பாடுகளும் இருந்தன. * 1965-ல் தன் வங்கிப் பணியை விட்டுவிட்டு, சோவியத் கலாச்சார மையத்தில் செய்தித் துறையின் ஆசிரியர் குழுவில் இணைந்தார். சோவியத் செய்திக் கட்டுரைகளை வேகமாகவும் சரளமாகவும் மொழிபெயர்ப்பார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ‘தாமரை’ இலக்கிய இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். * எழுத்தாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரபலங் கள், பலதரப்பட்ட வாசகர்கள் எனப் பரந்த நட்பு வட்டாரத்தைக் கொண்டிருந்தார். அவர்களால் ‘தி.க.சி.’ என அழைக்கப்பட்டார். தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் இலக்கியம், இலக்கியவாதிகள், இலக்கிய அமைப்புகள் குறித்து உணர்வுபூர்வமாகவும் உற்சாக மாகவும் பேசுவார். * தமிழில் வெளியாகும் பெரும்பாலான இலக்கியப் படைப்புகளை வாசித்து, அவற்றை எழுதிய ஆசிரியர்களைத் தொடர்புகொண்டு பாராட்டும் வழக்கம் கொண்டிருந்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களுக்கு அஞ்சலட்டையில் கடிதம் எழுதுவார். பல புதிய எழுத்தாளர்கள் தோன்றக் காரணமாக இருந்தார். * மாதாந்தர, வாராந்தர பத்திரிகைகள், செய்தித்தாள்கள் உட்பட ஏராளமான நூல்களையும் வாசித்தார். கதை, கவிதை, நாடகம், இலக்கிய விமர்சனம், திறனாய்வு என இலக்கியத்தின் பல்வேறு களங்களில் முத்திரை பதித்தார். மதிப்புரைகள், கட்டுரைகள் ஆகியவை ‘தி.க.சி. கட்டுரைகள்’ என இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. இவற்றுக்கு 2000-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.  இவரது வாழ்க்கை, எழுத்துப் பணிகள் குறித்து சென்னையில் இயங்கிவரும் தமிழ்க்கூடம் என்ற கலை - இலக்கிய அமைப்பு 2007-ம் ஆண்டு ஒரு ஆவணப்படம் தயாரித்தது. படைப்பாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய, திரைப்பட விமர்சகர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் 2014-ம் ஆண்டு 89-வது வயதில் மறைந்தார். . மிகவும் மெலிந்திருந்தார்கள் என்றாலும் முகத்தில் அயர்ச்சியோ சோர்வோ இல்லை. என் கையில் கையினால் எழுதப்பட்ட ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள். “படியுங்க” என்றார்கள். அந்த பேப்பரில் “இதயம் பலவீனமாக இருக்கிறது. அதனால் சத்தமாகப் பேசவேண்டாம். கடலைமாவு பலகாரங்கள் கொடுக்கவேண்டாம். அதிக நேரம் பேசவைக்காதீர்கள்” என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது. படித்துவிட்டு நிமிர்ந்த என்னைப் பார்த்து சிரித்தார்கள். “டாக்டரோட யோசனைகள்” என்றார்கள். என் மனைவி கையில் வைத்திருந்த ப்லாஸ்டிக் பையைப் பார்த்து “எதுக்கு இதெல்லாம். ஒண்ணும் சாப்பிடத்தான் கூடாதே” என்று கூறிவிட்டு வீட்டில் எல்லோரையும் நலம் விசாரித்தார்கள். சுவரோரத்தில் மெஸ்ஸிலிருந்து வந்த மதிய சாப்பாடு இருந்தது. மேஜை மீதும் தரையிலும் பத்திரிகைகள், புத்தகங்கள். காது மந்தமாகி வெகுகாலமாகி விட்டது. நாம் பேசுவதை வாயசவை வைத்துதான் புரிந்து கொள்வார்கள். நான் அவர்கள் பேசுவதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன். நான் குறுக்கிட்டு ஏதாவது பேசினால், அவர்களுக்குக் கேட்பது சிரமமாக இருக்கும் என்பதால் பொதுவாக நான் அவர்களிடம் தேவையிருந்தால் தவிர பேசுவதில்லை. அன்றும் அப்படித்தான் நடந்தது. இடையே என் மனைவி நாங்கள் வாங்கி வந்திருந்த ஆப்பிள்கள், காரவகைகளை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டு “வாழைப்பழமாவது வாங்கி வருகிறேன். நீங்கள் பேசிக்கொண்டு இருங்கள்” என்று சென்றுவிட்டாள். அவள் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டு வந்ததைப் பார்த்து, “எதுக்கும்மா இது? …இதற்காகவா போனே?” என்றார்கள். நாங்கள் அவர்களுக்கு அதிகம் தொந்திரவு கொடுக்கக் கூடாது என்று சொல்லிக்கொண்டு விடைபெற எழுந்தோம். அப்போதுதான் அதைச் சொன்னார்கள் தி.க.சி. “ராமசந்திரன்…மார்ச் முப்பதிலே எனக்கு 90 வயசாகுது. கல்லறையிலே ஒரு காலை எடுத்து வச்சுட்டேன். பிழைத்துக் கிடந்தால் அன்னைக்குப் பார்ப்போம்…” என்றார்கள். “ஏன் அப்படிச் சொல்றீங்க…அதெல்லாம் இருப்பீங்க…” என்றேன். ஆனால் நான் சொன்னது பலிக்கவில்லை. அவர்களே அவர்களது மரணத்தை உணர்ந்து சொன்னதுதான் கடைசியில் பலித்தது. அந்த மார்ச் முப்பதை நெருங்கிக் கொண்டிருக்கும்போதே காலமாகி விட்டார்கள். திருநெல்வேலி டவுனில் நான் ஆறாவது படிக்கிற காலத்திலேயே தி.க.சி. வீடு இருக்கிற அந்த வளைவு(காம்பவுண்ட்)க்குச் சென்றிருக்கிறேன். தி.க.சி. வீட்டுக்கு எதிர்வீடுதான் தி.க.சி.யுடைய சிற்றப்பா வீடு. தி.க.சியின் சிற்றப்பா மகன் சிவசங்கரன் என்னுடன் அதே ஆறாம் வகுப்பில்தான் படித்தான். அவனைப் பார்ப்பதற்காக 1958-59ல் அவன் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது எதிர்வீட்டில்தான் தி.க.சி. இருக்கிறார்கள், தி.க.சி. தமிழின் முக்கியமான விமர்சகர் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அதே 23, சுடலைமாடன் கோவில் தெரு வீட்டுடன், தி.க.சி. வீட்டுடன், பூரவ்ஜென்ம பந்தம் போல இன்றளவும் எனது உறவு தொடர்கிறது. நான் படித்த அதே தெற்குப் புதுத்தெருப் பள்ளியில்தான் தி.க.சி.யின் இரண்டாவது புதல்வரான கல்யாணசுந்தரம் என்கிற வண்ணதாசனும், எனக்கு மேலே இரண்டு வகுப்புகள் தாண்டிப் படித்தார். அப்போதெல்லாம் வண்ணதாசனுடன் பழக்கம் ஏற்படவில்லை. 1970-ல் “தீபம்” பத்திரிகையில் எழுதுகிற வண்ணதாசன்தான், என் பால்யகால நண்பன் சிவசங்கரன் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர் என்பது தெரிய வந்தது. ஒரு வாசகனாகத்தான் வண்ணதாசனை 1970 ஜூனில் சந்தித்தேன். அப்போதுதான் தாமரையின் பொறுப்பாசிரியரும், சென்னை சோவியத்லாண்ட் பத்திரிகையில் பணியாற்றுபவருமான தி.க.சி.தான் வண்ணதாசனின் தந்தை என்பதும் தெரியவந்தது. நான் முதல்முதலாக தி.க.சி.யை நேரில் சந்தித்தது வண்ணதாசனின் தங்கை ஜெயாவின் திருமணத்தின்போதுதான். அதற்கு முன்பே தி.க.சி தாமரையில் எனது ‘யுகதர்மம்’ என்ற சிறுகதையை வெளியிட்டு, கதையைப் பற்றிக் கடிதமும் எழுதியிருந்தார்கள். தன் மகள் திருமண வீட்டில் என்னை, திருமணத்திற்கு வந்திருந்த கி.ராஜநாராயணன், ராஜபாளையம் எழுத்தாளர்கள் எல்லோரிடமும் சந்தோஷத்துடன் அறிமுகம் செய்து வைத்தார்கள். தி.க.சி. “தாமரை”யின் பொறுப்பாசிரியராக சுமார் ஐந்தாண்டுகாலம் செயல்பட்டார்கள். தி.க.சி.யை விமர்சகராகத்தான் உலகம் அறியும். ஆனால் தி.க.சி ஒரு அபாரமான கலாரசிகர். நல்ல ரசிகன்தான் நல்ல விமர்சகனாகவும் செயல்படமுடியும் என்பது தி.க.சி விஷயத்தில் முழு உண்மை. தி.க.சி. நல்ல கர்நாடக சங்கீத ரசிகர். 73-ல் முதல்முதலாக சென்னைக்கு நான் வந்தபோது, சித்ரா விஸ்வேஸ்வரனின் நடன் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்றது தி.க.சி.தான். அதே 73-ல்தான் சென்னை சோவியத் கலாசாரநிலையத்தில் அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘சுயம்வரம்’ படத்தின் ப்ரிவ்யூ நடந்தது. அதற்கும் தி.க.சி. என்னை அழைத்துச் சென்றார்கள். அந்தப் ப்ரிவ்யூவுக்கு அன்று அடூரும் வந்திருந்தார். முக்கியத் திரைப்படங்களை எல்லாம் தி.க.சி பார்த்துவிடுவார்கள். அது பற்றிய விமர்சனங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். அவர்கள் “தாமரை’ யின் பொறுப்பாசிரியராக இருந்த காலத்தை தாமரையின் பொற்காலம் என்றே சொல்லவேண்டும். தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இருந்த பல இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கேட்டுவாங்கி தி.க.சி. தாமரையில் பிரசுரித்தார்கள். தி.க.சி. ஒரு மார்க்ஸிஸ்ட். அவரது இலக்கிய விமர்சன அணுகுமுறை மார்க்ஸிய கோட்பாடு சார்ந்தது. இலக்கியத்தை முற்போக்கு, பிற்போக்கு என்று அணுகியவர்கள் தி.க.சி. கோட்பாடு, தத்துவம் என்றாலே வறட்சியானதுதான். இந்த வறட்டுத்தன்மை மார்க்ஸியத்திலும் உண்டு. தாமரை சி.பி.ஐ.யின் இலக்கியப் பத்திரிகை. அதில் வெளிவரும் சிறுகதை, கவிதைகளில் தி.க.சி. பொறுப்பேற்பதற்கு முன்பு ஒருவிதமான வறட்டுத்தனமும், கட்டுப்பெட்டித்தனமும் இருந்தது. ஆனால் தி.க.சி. பொறுப்பேற்ற பிறகு கலாபூர்வமான படைப்புகள் தாமரையில் இடம்பெறலாயின. எனது யுகதர்மம், மயானகாண்டம், கிரிமினல், பூமணியின் ‘வயிறுகள்’, கி.ராஜநாராயணனின் ‘வேட்டி’, பா.ஜெயப்பிரகாசத்தின் ‘அம்பலக்காரர் வீடு’ போன்ற கலாபூர்வமான பல சிறுகதைகள் தி.க.சி. பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் தாமரையில் வெளியாகின. அக்காலத்தில் இலங்கை எழுத்தாளர்களான டொமினிக் ஜீவா, கதிர் காமநாதன், செ.யோகநாதன்,டேனியல், திக்குவல்லைகமால் போன்ற பல இளம் படைப்பாளிகளின் படைப்புகளை தி.க.சி. கேட்டுவாங்கி தாமரையில் பிரசுரித்தார்கள். வண்ணதாசனும் ‘சிவ.கல்யாணசுந்தரம்’ என்ற தனது இயற்பெயரிலேயே பல கவிதைகளை தாமரையில் எழுதியிருக்கிறார். கவிஞர் ஞானக்கூத்தன் எந்த முற்போக்கு முகாமிலும் சேராதவர். அவர் மார்க்ஸிஸ்டும் அல்ல. அவர் கவிதையின் அழகியல் சார்ந்து இயங்கிய கவிஞர். ஆனால், தி.க.சி. ஞானக்கூத்தனின் கவிதை பற்றிய கட்டுரை ஒன்றை தாமரையில் பிரசுரித்தார்கள். அந்தளவுக்குத் திறந்த மனதுடனும், கலை, அழகியல் உணர்வுடனும் தி.க.சி. இயங்கியதால்தான் அந்தத் தாமரை இதழ்கள் மிகத் தரமாக இருந்தன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அதன் ஆரம்பக் காலத்தில் நிறுவி, வளர்த்த பெருமையும் தி.க.சி.க்கு உண்டு. 70-களில் சென்னை எல்.எல்.ஏ பில்டிங்கில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டங்கள் மாதந்தோறும் நடைபெற்றன. இக்கூட்டங்கள் பெரும்பாலும் தி.க.சி.யால் ஏற்பாடு செய்யப்பட்டன. தி.க.சி. நல்ல மொழிபெயர்ப்பாளரும்கூட. ஜார்ஜி குலியாவின் ‘வசந்தகாலத்தில்’ என்ற நீண்ட நாவலை தி.க.சி. மொழிபெயர்த்திருக்கிறர்கள். சோவியத் செய்திக்கட்டுரைகளை அவர்கள் மொழிபெயர்ப்பதை பலமுறை நேரிலிருந்து பார்த்திருக்கிறேன். வேகமாகவும், அதே சமயம் சரளமாகவும் தி.க.சி. மொழிபெயர்ப்பார்கள். பெண்ணியம், தலித்தியம், போன்ற தற்கால இலக்கியப் போக்குகள் மீது தி.க.சி.க்குப் பிடிப்பு இருந்தது. இவை பற்றிய கருத்துக்களை தனது நேர்ப்பேச்சிலும், பத்திரிகைகளிலும் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். நான் எப்போது திருநெல்வேலிக்குச் சென்றாலும் தி.க.சி.யைப் பார்க்காமலிருக்க மாட்டேன். நல்லகண்ணு, வைகோ முதலான அரசியல்வாதிகள் முதல், தன்னைத் தேடிவரும் வாசகர்கள் வரை தி.க.சி.க்கு விரிந்து பரந்த நட்பு வட்டம் இருந்தது. தி.க.சி.யின் மறைவு இலக்கிய உலகுக்கும், பல நண்பர்களுக்கும் பேரிழப்பு. ஈடு செய்ய முடியாத இழப்பு.

No comments:

Post a Comment