Friday, December 11, 2020

எம்பிரானின் கோயில் புக்கு

வணக்கம் ,

 எனது முதல் கவிதை தொகுப்பு "எம்பிரானின் கோயில் புக்கு" commonfolks இனணயதளத்தில் கிடைக்கிறது .

சிறப்பாக அச்சு பணி செய்த தமிழ் அலை பதிப்பகத்தாருக்கும் தோழர் இசாக் அவர்களுக்கும் நன்றி .

 

*

சத்தமாய் ஒரு

மௌனம்

மௌனமாய் ஒரு

சப்தம்.

 

*

பழத்தை விழுங்கிய பறவை

பறந்து கொண்டிருக்கிறது

ஒன்பது விருச்சங்களையும்

அதன் கிளைகளில்

அமர்ந்திருக்கும் பல

பறவைகளை சுமந்துக்கொண்டு .

*

யானை என்றபோது

பார்த்துக்கொண்டிருந்தது

பிரம்மாண்டம்.

அருகில் சென்று

கருணை என்றபோது

தும்பிக்கையால்

ஆசிசெய்து

சில்லரைப்பெற்று

பாகனிடம் தந்தபோது

அவன் வறுமை

யானையை தின்றிருந்தது.

*

உயரமான சுவர்களுக்குப்  பின்னால்

புழுதி படிந்த தென்னை மடல் மீது

குத்தி சரிந்தது

குவியலாய்

சூரிய கதிர்கள்.

தாகமாக இருக்கிறது

என்றேன்

ஓய்வு வேண்டுமா ?

என்றது சூரியன்

இன்னும் ஒரே ஒரு கோப்பை

தாகம் வேண்டும்

 


https://www.commonfolks.in/books/d/empiraanin-koyil-book

*

தோழமையுடன்

இரா.மணிவேல் .


No comments:

Post a Comment