Tuesday, April 23, 2024

Tamizhisai Mazhai

 Movie. Harikrishanans (1998)

Lyrics. Vairamuthu Music. Oueseppachan Singers. KJ. Yesudas. Chithra. P. Unnikrishnan



மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே

 "மௌனத்தில் விளையாடும்

மனசாட்சியே மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி காரியம் தவறானால் கண்களில் நீராகி மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனசாட்சியே ரகசியச் சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ ரகசியச் சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ சோதனைக் களம் அல்லவா நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா ஒரு கணம் தவறாகி பல யுகம் துடிப்பாயே ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி காரியம் தவறானால் கணகளில் நீராகி மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனசாட்சியே உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பல சாட்சி உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பல சாட்சி யாருக்கும் நீயல்லவா நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி காரியம் தவறானால் கண்களில் நீராகி மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனசாட்சியே" ~~~~~~~~¤¤~~~~~~~~ நூல்வேலி1979
Dr. பாலமுரளி கிருஷ்ணா M.S. விஸ்வநாதன்கண்ணதாசன்



உலக புத்தக தினம் 2024

 பத்துப் பறவைகளோடு பழகி நீங்கள்

ஒரு பறவையாகிட முடியாது :

பத்து நதிகளோடு பழகி நீங்கள்
ஒரு நதியாக முடியாது :

பத்துப் புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
நீங்கள் பதினோராவது புத்தகமாகிப்
படிக்கப்படுவீர்கள் .

- ஈரோடு தமிழன்பன்.

                           ------------------------------------------

சில புத்தகங்களை வாசிப்பதற்கு வயதும் அனுபவமும் போதாமல் இருக்க கூடும். அந்தப் புத்தகம் இன்னொரு வயதில் இன்னொரு மனநிலையில் புரிவதோடு நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக கலாச்சார, சரித்திர, விஞ்ஞான அறிவும், சங்கேதங்கள், குறியீடுகள், கவித்துவ எழுச்சிகளை புரிந்து கொள்ளும் நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை. அவை ஒரு நாளில் உருவாகிவிடுவதில்லை. தொடர்ந்த வாசிப்பும்,  புரிதலுமே அதை சாத்தியமாக்குகின்றன. ~எஸ்.ராமகிருஷ்ணன்
                  --------------------------------------------
புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தை தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள், உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக்கொண்டே 
இருக்கட்டும் - நா.முத்துகுமார்
                        -------------------------------------------

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் 
மண்மாண் புனைபாவை அற்று.

---------------------------


Friday, December 29, 2023

திரு கேப்டன் / என் சொக்கத்தங்கமே

 திரு கேப்டன் / என் சொக்கத்தங்கமே   ,


உங்களை என் சிறு வயதில் ஒரு பொதுக்கூட்டத்தில் என் மாமாவுடன் ஈரோட்டில் சந்தித்தபோது "என்னுள் முதன் முதலில்  ஒரு நல்ல ஆன்மாவை  சந்தித்த உணர்வு , சிலிப்ர்பு ,பூரிப்பு , ஆனந்தம் "  .


அப்போது அதன் அர்த்தத்தை தேடி  தேடி  அலைந்திருக்கிறேன் / வாசித்திருந்திக்கிறேன் .

அதற்கு அர்த்தம் நீங்கள் ஒரு " சுயநலமில்லாத மனிதன் " / சக மனிதனை சக மனிதனாக நேசித்த உள்ளம் , அதற்காக எதையும்  எதிர்க்கும் துணிச்சல் !


மக்களுக்கு வாரி வாரி கொடுத்த வள்ளல் ! 


அரசியல் வானில் இறுதிவரை ஊழல் கறை படியாமல் இருந்து மறைந்ததலைவர் !


நீங்கள் இல்லாத இடம் என்றுமே  வெற்றிடம்  


நீங்கள் சுவாசிக்காத இந்த காற்றை இப்போது நாங்கள் வெறும் காற்றாகவே பார்க்கிறோம் ! 


உங்களுக்கு ஒரு நிமிடம் கடவுள் பேச வாய்ப்பு தந்தால்   , வந்த அனைவரையும் சாப்பிட்டு போங்கள் என்று மட்டுமே சொல்வீர்கள் !


கக்கன் காமராஜர் வழியில் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் !


வாய்ப்பு இருந்தால் வந்து விடுங்கள் கேப்டன் சார் !


Love you , Miss you Lot. 


29/12/2023.3.25PM 

Sunday, December 17, 2023

Unnaipol Oruvan -உன்னைப்போல் ஒருவன் -ஜெயகாந்தன்

 Unnaipol Oruvan is a 1965 Indian Tamil-language drama film written, co-produced and directed by Jayakanthan. Based on his novel of the same name, the film was his directorial debut. The film won the Third Best Feature Film at the 12th National Film Awards in 1965. The film had no songs with the background score composed by Chitti Babu.

உன்னைப்போல் ஒருவன் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபாகரன், காந்திமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு 1965-ஆம் ஆண்டு 12-வது தேசிய விருது கிடைத்தது. இத்திரைப்படத்தில் பாடல்கள் எதுவுமில்லை, பின்னணி இசையை சிட்டிபாபு அமைத்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=-8hkM1Bn9as&t=321s







வெள்ளி நிலாவினிலே * Velli Nilavinile thamizh veenai vanthathu - sonnathu nee thana

 வெள்ளி நிலாவினிலே

தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே... விழியோ கார்த்திகை தீபம் ஒளி நான் வா வா என்றது உனக்கா என்னிடம் கோபம் அதுதான் ஏன் ஏன் வந்தது அடிக்கும் போது மிருகமடா அணைக்கும் போது மனிதனடா தெய்வம் நீயடா மனத்தேரில் ஏறி வா ராஜா வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே... உனக்கேன் வாய்மொழி ஒன்று அதுதான் நான்தான் அல்லவோ மடிமேல் தூங்கடா வந்து மனத்தால் தாய் நான் அல்லவோ விரலில் என்ன அபிநயமோ விழியில் என்ன கவி நயமோ அன்பின் தீபமே இன்னும் ஆண்டு நூறு நீ வாழ்க வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே..." ~~~~~~~¤💎¤~~~~~~~ 💎சொன்னது நீதானா 💎1978 💎ஜெயச்சந்திரன் 💎இளையராஜா 💎புலமைப்பித்தன்